நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெயரால் ஹிந்துத்வாவினர் பரப்பிய பச்பைப் பொய்:
- சின்னக்குத்தூசி
'சேது சமுத்திரத் திட்டமும் இராமர் பாலமும்' எனும் ஆய்வு நூலில், திராவிட கழகத்தலைவவர் கி. வீரமணி,
இராமர் பாலம் என்பது எவ்வளவு பெரிய புரட்டு என்பதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறார். அவரது நூலின் முக்கியப் பகுதிகளில் இது ஒரு பகுதி: -
'இது இராமன் கட்டிய பாலம் என்றும், 17 இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராமன் கட்டினான்' என்றும் கதைக்கிறார்கள்.
17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தானா என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக...