அர்த்தமுள்ள இஸ்லாம் - பாகம் 1 செல்ல இங்கே அழுத்தவும்
.
.
2. மனிதனை மறந்து விட்டு கடவுளை நினைத்தல்
'மதங்கள் அர்த்தமற்றவை' என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் ''மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன'' என்பதாகும்.
அன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.
ஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக...