பலதாரமணம் புரிந்தவர் இறைதூதராக இருக்க முடியுமா? கிறிஸ்தவர்களுக்கு பதில்
.
உலகம் முழுவதும் இன்று பெருகிவரும் இஸ்லாமிய வளர்ச்சியைப் பொருத்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய எதிரிகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரிகள் அதன் வளர்ச்சியை எப்படியேனும் தடுத்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் ஏற்படுத்திவரும் விஷமப்பிரச்சாரங்களில் மிக முக்கியமான ஒன்று நம் உயிரினும் மேலான நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்படும் 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. குறிப்பாக கிறிஸ்தவர்களில் பலர் இயேசு காம இச்சையை அடக்கி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்றும் ஆனால் முஹம்மது...