மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.
''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்
விளக்கவுரை:
உணவளிப்பதையும், ஸலாம் கூறுவதையும் இஸ்லாத்தின் மிகச்சிறந்த செயலாக இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது. இல்லாதோர், இயலாதோர் மற்றும் ஏழைகளுக்கு உணவளிப்பது அவர்களது மனதை மகிழ்விக்கச் செய்கிறது. மனித நலம் பேணுகிறது. உற்றார், உறவினரிலுள்ள...