அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label பெண்ணுரிமை. Show all posts
Showing posts with label பெண்ணுரிமை. Show all posts

Saturday, December 22, 2012

கற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும் போதுமா?கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் தில்லியில் 23 வயது கல்லூரி மாணவி காமுகர்களால், கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியவின் பல்வேறு இடங்களில் இந்த சம்பவத்திற்கு எதிராக அனைத்துத்தரப்பினரும் கண்டனக்குரல் எழுப்புவதுடன், ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது போன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு 'மரணதன்டனை' தான் தீர்வாக அமையும் என்ற கேரிக்கையும் வழுத்து வருகின்றது. ஆள்வோர் முதல் பாமரன் வரையில் அனைவராலும் இதே கோரிக்கைதான் முன்வைக்கப்படுகின்றது.

கற்பழிப்புகளுக்கு மரணதண்டனை விதிப்பதால் இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற குற்றங்கள் குறைந்து விடுமா? இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைத்துவிடுமா? என்றால் முடியாது! காரணம், இது போன்ற குற்றங்களை வெறும் சட்டங்கள் போடுவதால் மட்டும் கட்டுப்படுத்தி விட முடியும் என நினைப்பது தவறான ஒரு வாதமாகும். அதுவும் இது போன்ற குரல்கள் பாமரனிடம் மட்டுமல்ல, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களிடத்திலிருந்தும், எழுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி சொல்வதால், நாம் ஏதோ மரணதண்டனைகளுக்கு எதிரானவர்கள் எனக் கருதிவிடக்கூடாது. இஸ்லாம் இது போன்ற குற்றங்களுக்கு  மரணதண்டனைத் தான் சரியான தீர்வாக அமையும் என்று அழுத்தம் திருத்தமாகச் பதிவுசெய்கின்றது. ஆனால், அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்? அதற்கு முன்பாக நாம் என்னென்ன முன்னேற்பாடுகளை கையாளவேண்டும்? என்பதையும் தெளிவாக வழிகாட்டுகிறது. அது தான் இங்கே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம்.

நமது நாட்டைப் பொருத்தவரை, ஒரு பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் ஒரு தெளிவான தீர்வைத் தேடாமல், ஒரு சம்பவம் நடந்ததும் உணர்ச்சி வசப்பட்டு குரல் கொடுப்பதும், சில நேரம் ரோட்டிலே நின்று போராடுவதையுமே வழக்கமாகிக் கொண்டிருக்கின்றோம்.  பின்னர் அந்த பிரச்சினை நீர்த்து போனதும் அதை அப்படியே மறந்துவிடுகின்றோம். மீண்டும் அதே பிரச்சினை தலைத்தூக்கியதும் அதே பல்லவி. மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை! இது தொடர்கதையாவது ஏன்? இப்படிப்பட்ட தவறுகள் எங்கிருந்து ஏற்படுகின்றது? அதை அடிப்படையிலேயே கலைவதற்கு தெளிவான வழி என்ன? என்பதை எல்லாம் நாம் ஆராய்வதில்லை. எல்லா குற்றச்செயல்கள் விஷயங்களிலும் இதுபோன்ற தவறுகளை நாம் செய்வதால் தான்  இப்படிப்பட்ட குற்றங்கள் நமது இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகின்றது.

தற்போது பெரும் பிரச்சினையாக பேசப்படுகின்ற கற்பழிப்புச் சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஏன் நடைபெறுகிறது? பெண்கள் விஷயத்தில் ஒரு முறையான கட்டுப்பாடு இல்லாததே இதற்கு காரணம். ஒரு பெண் பலவந்தமாக கற்பழிக்கப்படுகினறாள் என்றால், பெரும்பாலும், அதை செய்யக்கூடிய ஆண் அவ்வாறு தூண்டப்படுகின்றான் என்பதை நாம் கவனிப்பதில்லை.

பொது இடங்கள் முதல் கோயில்கள் வரை, சினிமா முதல் டிவி நிகழ்ச்சிகள்; வரை ஒரு பெண் அரைநிர்வாணத்துடனேயே காட்சியளிக்கின்றாள்;. சினிமாக்களில், எந்த அளவுக்கு உடைகளை குறைத்து காட்ட முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து ஆபாசத்தை வெளிப்படுத்துகின்றாள். இதை தடுக்க வேண்டிய அரசுகளே அவற்றைத் தடுக்காமல் அனுமதிப்பதுடன், ஒரு சில அதிகபட்ட ஆபாசங்களைக் காட்டக்கூடிய படங்களுக்கு 'அட்ல்ட்ஸ் ஒன்லி' என்ற 'A' சான்றிதழ் வழங்கி அதற்கும் அனுமதி கொடுக்கின்றது.

பொதுமக்கள் கூடும் இடங்களில், ஒரு ஆண்மகனுக்கு எந்த அளவுக்கு உணர்ச்சியை ஏற்படுத்த முடியுமோ அந்த அத்தனை வகையிலும், தன்னுடைய உடையாலும், கவர்ச்சியாலும், பேச்சாலும் உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் இன்றையப் நவநாகரீகப் பெண்கள். இன்று ஃபேஷன் ஷோவிலிருந்து, அத்தனை ஆபாசங்களும் இலவசமாகவே நமது வீட்டு வரேற்பறைக்கு வந்துவிட்டது. இதைப் பார்க்கக்கூடிய ஆண்மகன் என்ன நிலைக்கு ஆளாவான் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, அதனால் ஏற்படுகின்ற விபரீதத்திற்கு மட்டும் கடும் தண்டனை கொடுக்கவேண்டும் என்று கூறுவது எப்படி சரியான தீர்வாக அமையும்? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

ஒரு ஆண்மகனை விபச்சாரத்திற்கு தூண்டும் அத்தனை காரியங்களையும் செய்வது! அவனை மயக்குவதற்காக எந்த அளவுக்கு அடைகளை குறைக்க முடியுமே அந்த அளவுக்கு குறைத்துக் காட்டுவது, முடிந்தால் நீச்சல் உடைகள் போன்ற ஆபாச உடைகளை உடுத்தி அவனை உசுப்பேற்றுவது, பொது இடங்களில், திருமணமுடிக்காத தன் ஆண் நன்பனோடு மிருகங்களைக் காட்டிலும் மேலாக அசிங்கங்களில் ஈடுபடுவது, கூடுதலாக சினிமா டிவி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள மூலம் அவனை கற்பழிக்கத் தூண்டும் அத்தனை செயல்களையும் செய்வது, இப்படி எல்லா வகையிலும் ஒரு ஆண்மகளை கற்பழிக்கும் படி உசுப்பேற்றிவிட்டு விட்டு – அதனால் அவன் மணரீதியாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்துவிட்டால் அவனுக்கு மரணதன்டனைக் கொடுக்கவேண்டும் என்று கூக்குரல் இடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

டெங்கு காய்ச்சல் வந்தால், காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கும் அதேசமயம், அதற்கு காரணமான கொசுவையும் ஒழிக்கின்றோம். காரணம், நோயும் போகவேண்டும் நோய்க்கு காரணமான கொசுவும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. இதை முறையாக செய்யாத அரரை கையாலாக அரசு என்று குறைகூறுகின்றோம். ஆனால் அதே நிலைபாட்டை நாம் ஏன் மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் எடுப்பதில்லை?

இதையே ஒர் அரசு கற்பழிப்புக்கு மரணதன்டனையை சட்டமாக்குவதற்கு முன், அதற்கு அடிப்படையாக காரணமாக விளங்கும் பெண்கள் விஷயத்தில் சில கட்டுப்படுகளை விதித்தால் நமது நாட்டில் சும்மா விடுவோமா?; 'தாலிபானிசம்' என்று குறைகூறுவோம். அந்த அரரைச கலைக்கவேண்டும் என்று கூப்பாடு போடுவோம். ஆனால், அப்படி பெண்கள் விஷயத்தை கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரத்தைக்(?) கொடுத்து, அதன் காரணமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றால், கற்பழித்தவனுக்கு  மரணதன்டனை கொடுக்கவேண்டும் - சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டது என்று போராட்டம் மட்டும் நடத்துவோம். இது தான் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வா? என்பதை நாம் யோசிக்க வேண்டும். அதற்காக இந்த கற்பழிப்புச் செயல்களை நாம் நியாப்படுத்தவில்லை. ஆனால் அதற்கான காரணம் எங்கிருந்து உருவாகிறது? அதை ஏன் நாம் தடுக்க முயற்சிக்கவில்லை என்பது நமது கேள்வி.

இதனால் தான் இஸ்லாமிய ஆட்சிகளில் குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு முன், அந்த குற்றங்கள் உருவாவதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கப்படுகின்றது.

ஏதோ இஸ்லாம் குற்றங்களை குறைப்பதற்கு சட்டத்தை மட்டும் கடுமையாகினால் குற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று கூறவில்லை. மாறாக, அதற்கு அடிப்படையான அனைத்து விஷயங்களையும் களையெடுக்கின்றது. ஒருவன் திருடினால், அதற்காக கை வெட்டப்படும் என்றால், அவன் திருடாத வகையில் அத்தனை வழிகளையும் கையாண்டபிறகே, அந்த சட்டதையும் நடைமுறைப்படுத்துகின்றது. ஒரு பெண்னை கற்பழித்தால், அவனுக்கு மரணத்தன்டனை என்று சொல்லும் இஸ்லாம், அந்த பெண் கற்பழிக்கப்படாத வகையில் அதற்கான நிர்பந்தம் ஒரு ஆணுக்கு ஏற்படுவதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கின்றது. அதனால்தான் பெண்களுக்கு ஃபர்தாவை அவசியமாக்குகிறது. இப்படி எல்லா சட்டங்களுக்கு இஸ்லாம் ஒரு தெளிவான வழிகாட்டளை காட்டுகின்றது. அதனால் தான் இஸ்லாமிய ஆட்சிகளில் குற்றங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால், நபி(ஸல்) அவர்கள் தனது தோழரிடம் இஸ்லாமிய ஆட்சி அமைந்தவுடன் எத்தகைய ஒரு பாதுகாப்பான நிலை இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்: 'ஒரு காலம் வரும்- சன்ஆவிலிருந்து ஹழ்ற மௌத் வரை ஒரு பெண் தனிமையில் பயணம் செய்வாள். அவளது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சம் இருக்காது' என்றார்கள்;.

அதை அவர்களது ஆட்சிக்காலத்திலும் அவர்களுக்குப் பின்னால் வந்த கலீஃபாக்கள் ஆட்சிகாலங்களிலும் செய்து காட்டினார்கள். மக்களுக்கு ஒரு பாதுகாப்பான ஆட்சியை கொடுத்தார்கள். அப்படிப்பட்ட ஆட்சி இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் மூலமும் - அது கூறக்கூடிய வழிவகைகள் மூலமும் தெளிவாகவே இருக்கின்றது.

அதானால் தான், இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கக்கூடிய நாடுகளில், இன்று வரையில் குற்றச்செயல்கள் குறைந்து காணப்படுகின்றது.

நம் கண்முன்னே நமக்கு ஏற்படுகின்ற எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கின்றது. ஆனால், அவற்றை நாம் முறையாக கையாளாததே இது போன்ற குற்றச்செயல்கள் நமது இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சட்டம் போடுவதற்கு முன் அது சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு வழிகோலும் அடிப்படையான அனைத்து வழிகளையும் சேர்த்து அடைத்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும். அது தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.

இத்தனை காலங்களாக, இஸ்லாமிய சட்டங்களே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வா அமையும் என்று நாம் கூறினோம். ஆனால், அதற்கெல்லாம் செவிசாய்காமல், அதற்கு எதிரான அனைத்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்கள். ஆனால், தற்போது அதன் அவசியத்தை அவர்களுக்கு காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை காட்டுமிராண்டித்தனம் என்றவர்கள், தற்போது அதன் ஒரு பகுதியை, விரும்பியோ விரும்பாமலோ, இந்த நாட்டில் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றார்கள். பெண்களின் உடைக்கட்டுப்பாடு விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களை பிற்போக்குத்தனமானது – பெண் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கக்கூடியது என்றார்கள் - ஆனால், இன்று அது தான் சரி என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் தீட்டுகிறது.

எதிர்காலத்தில், அனைத்து தரப்பினரும் ஒரு சேர, இஸ்லாமிய நடைமுறைகளை சட்டமாக்கவேண்டும் என்று கோரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

Thursday, December 20, 2012

அநாகரிகம்....! தினமணி தலையங்கம் - 20-12-2012

புதுதில்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஒரு மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், பாலியல் கொடுமை குற்றங்களுக்குத் தனியாக விரைவு நீதிமன்றம் தேவை என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்தியா முழுவதிலும் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நகரங்களில் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். புதுதில்லியில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வல்லுறவுக்கு இலக்காகிறார் என்று தில்லியின் ஒரு பத்திரிகை புள்ளிவிவரம் தருகிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய பாலியல் கொடுமைகளில் மிகச் சிலவே வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தச் சம்பவம் தில்லியில் நடக்காமல், பிகாரின் ஏதாவது ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு நடந்திருக்குமேயானால், இது நாடு முழுவதும் இத்தகைய எதிர்வினையைச் சந்தித்திருக்குமா? சந்தேகம்தான்.

இதே தில்லி நகரில், ஒரு ஜெர்மனிப் பெண் கடந்த மாதம் 4 பேரால் வல்லுறவுக்கு இலக்கானார். ஆனால், அது பெரிதாகப் பேசப்படவே இல்லை. இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கேரளத்தில் ஒரு மாணவி தன் தந்தையாலும் சகோதரராலும் தன் வீட்டுக்குள்ளேயே தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்கூட கடந்த வாரம் செய்தியாக வந்தது. இதுவும் மறுநாளே மறக்கப்பட்டது.

ஆனால், தில்லியில் நடந்த சம்பவம் அப்படியல்ல. பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.

துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?.

காதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்திருந்தால், இந்த ஜோடிகள் இந்த சொகுசு தனியார் பேருந்தைத் தவிர்த்திருப்பார்கள். இதை இந்த சந்தர்பத்தில் 'அசட்டு தைரியம்' என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் தேவை. இருப்பினும், இத்தகைய நேர்வுகள் பலவற்றைப் பெண்கள் தமது உள்ளுணர்வு மற்றும் விழிப்பினால் தவிர்த்துவிட முடியும்.

ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.

உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

'எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்' என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். 'நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா?' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

'புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்' என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா?

'முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான். துணியாய் இருந்து கிழிவதை விடவும் முள்ளாய் இருப்பேன் இனிநான்! கல் பட்டாலும் கல்லில் இட்டாலும் சிதைந்துபோவது கனிதான். கனியாய் இருந்து சிதைவதை விடவும் கல்லாய் இருப்பேன் இனிநான்!' (கவிஞர் வைரமுத்துவின் கவிதை) என்ற மனத்துணிவு கொண்ட பெண்கள் மிகச் சிலர்தான்.

சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

நன்றி: தினமணி - 20-12-2012

**************

இறைவன் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

"இன்னும் இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் இறைவனின் பக்கம் திரும்புங்கள்.  அல்குர்ஆன் -  24 : 31.

Tuesday, March 11, 2008

உடை கழற்றும் ஆண் வக்கிரம்

உடை கழற்றும் ஆண் வக்கிரம்
......................................................................... - ஜி.என்

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை அவ்வப்போது பலர் அக்கறையோடு வெளிபடுத்தி வருகின்றனர்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர்கள் எழுதும் கட்டுரையை அவர்களே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக' பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும்இ ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

'பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்'?.
அவர் பதிலளித்தார். 'நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்'

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.'எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.'

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை'அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.
.