இஸ்ரவேலர்களால் உருவாக்கப்பட்ட பித்தோம், ராமசேஸ் என்னும் இரண்டு பண்டகசாலைப் பட்டணங்களைக் குறித்து பைபிள் கூறுகின்றது. யாத்திராகமத்தில் காணப்படுவதாவது,
அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள். (யாத்திராகமம் 1:11)
இந்த இரு நகரங்களும் உருவாக்கப்பட்டது இரண்டாவது ராம்செஸின் காலத்திலாகும். (BC 1279-1212) ராமசெஸ் II என்ற பர்வோனின் நினைவாகவே இந்த பெயர் வழங்கப்பட்டதாம் (Dr. D Babupaul : வேத சப்த ரத்னாகரம்,...