நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், 'ஒருவர்' தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், 'கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்' (Triune God) என்று கூறுவார்கள்.
கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற 'திரித்துவம்' (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும்...