எதார்த்தமான நிலைமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் மடத்தனமானதாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தைகளில் இருக்க முடியாது - இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடுகள் இருக்கலாகாது என்பதை பைபிளும் கூட ஒப்புக்கொள்கின்றது.
'ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம்' - உபாகமம் 18:22
பைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா?...