
திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 3
- எம்.எம். அக்பர்
இறைவனிடம் ஒரு நாளின் அளவு பூமியிலே 1000 ஆண்டுகளுக்கு சமம் என்று குர்ஆனில் 22:47, 32:5 என்ற வசனங்கள் கூறியிருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று 70:4 வசனம் கூறுகிறது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?
முரண்பாடுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்ட குர்ஆன் வசனங்களை ஆய்வோம்.
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை...