
திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 2
- எம்.எம். அக்பர்
ஈசா (அலை) அவர்களின் பிறப்பு குறித்து மர்யமிடத்தில் நன்மாராயங் கூறியது மலக்குகள் என்று பன்மையாக குர்ஆனின் 3:45 வசனம் கூறுகிறது. ஆனால், ஒரு மலக்கு மட்டுமே கூறியதாக குர்ஆனில் 19:17-21ம் வசனங்கள் கூறுகின்றது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?
இங்கே முரண்படுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ள வசனங்களை பார்ப்போம்.
அல்குர்ஆன் 3:45: மலக்குகள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து...