அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...
- அபு இப்ராஹீம், சென்னை.
அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...
சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் - தங்கள் மதத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் கிறிஸ்துவமதத்தைப் பரப்புவதை விடுத்து வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி மட்டும் தரக்குறைவாகவும் - வெறித்தனமாகவும் தாக்கி எழுதிவருவதை நாமெல்லாம் நன்கு அறிவோம். காரணம், இஸ்லாமியர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைவீட - கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் பால் தங்கள் கவனத்தைத்திருப்பிவிடாமல்...