இஸ்லாத்தை மாற்றுமதத்தவருக்கு எடுத்துச் சொல்லும்போது அதன் சாதகமான கொள்கைகளை சிறப்பித்து சொல்லுவதால் மாத்திரம் மாற்று மதத்தவர்களில் ஏரானமானபேர் உண்மையான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இஸ்லாத்தைப் பற்றி அவர்களது உள்ளத்தில் இருக்கும் சில கேள்விகள் நம்மால் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கின்றது. மாற்று மதத்தவர்கள் நம்முடைய வாதங்களை ஏற்றுக் கொள்ள முற்படும் அதே வேளையில் 'ஓ..! ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம்கள்தானே நீங்கள பெண்களை பர்தாவுக்குள் அடைத்து வைத்து - பெண்ணடிமைத் தனத்தை ஆதரிப்பவர்கள்தானே நீங்கள்'-...