கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் தில்லியில் 23 வயது கல்லூரி மாணவி காமுகர்களால், கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியவின் பல்வேறு இடங்களில் இந்த சம்பவத்திற்கு எதிராக அனைத்துத்தரப்பினரும் கண்டனக்குரல் எழுப்புவதுடன், ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது போன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு 'மரணதன்டனை' தான் தீர்வாக அமையும் என்ற கேரிக்கையும் வழுத்து வருகின்றது. ஆள்வோர் முதல் பாமரன் வரையில் அனைவராலும் இதே கோரிக்கைதான் முன்வைக்கப்படுகின்றது.
கற்பழிப்புகளுக்கு மரணதண்டனை விதிப்பதால் இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற குற்றங்கள் குறைந்து விடுமா? இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைத்துவிடுமா? என்றால் முடியாது! காரணம், இது போன்ற குற்றங்களை வெறும் சட்டங்கள் போடுவதால் மட்டும் கட்டுப்படுத்தி விட முடியும் என நினைப்பது தவறான ஒரு வாதமாகும். அதுவும் இது போன்ற குரல்கள் பாமரனிடம் மட்டுமல்ல, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களிடத்திலிருந்தும், எழுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
இப்படி சொல்வதால், நாம் ஏதோ மரணதண்டனைகளுக்கு எதிரானவர்கள் எனக் கருதிவிடக்கூடாது. இஸ்லாம் இது போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனைத் தான் சரியான தீர்வாக அமையும் என்று அழுத்தம் திருத்தமாகச் பதிவுசெய்கின்றது. ஆனால், அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும்? அதற்கு முன்பாக நாம் என்னென்ன முன்னேற்பாடுகளை கையாளவேண்டும்? என்பதையும் தெளிவாக வழிகாட்டுகிறது. அது தான் இங்கே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம்.
நமது நாட்டைப் பொருத்தவரை, ஒரு பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் ஒரு தெளிவான தீர்வைத் தேடாமல், ஒரு சம்பவம் நடந்ததும் உணர்ச்சி வசப்பட்டு குரல் கொடுப்பதும், சில நேரம் ரோட்டிலே நின்று போராடுவதையுமே வழக்கமாகிக் கொண்டிருக்கின்றோம். பின்னர் அந்த பிரச்சினை நீர்த்து போனதும் அதை அப்படியே மறந்துவிடுகின்றோம். மீண்டும் அதே பிரச்சினை தலைத்தூக்கியதும் அதே பல்லவி. மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை! இது தொடர்கதையாவது ஏன்? இப்படிப்பட்ட தவறுகள் எங்கிருந்து ஏற்படுகின்றது? அதை அடிப்படையிலேயே கலைவதற்கு தெளிவான வழி என்ன? என்பதை எல்லாம் நாம் ஆராய்வதில்லை. எல்லா குற்றச்செயல்கள் விஷயங்களிலும் இதுபோன்ற தவறுகளை நாம் செய்வதால் தான் இப்படிப்பட்ட குற்றங்கள் நமது இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகின்றது.
தற்போது பெரும் பிரச்சினையாக பேசப்படுகின்ற கற்பழிப்புச் சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஏன் நடைபெறுகிறது? பெண்கள் விஷயத்தில் ஒரு முறையான கட்டுப்பாடு இல்லாததே இதற்கு காரணம். ஒரு பெண் பலவந்தமாக கற்பழிக்கப்படுகினறாள் என்றால், பெரும்பாலும், அதை செய்யக்கூடிய ஆண் அவ்வாறு தூண்டப்படுகின்றான் என்பதை நாம் கவனிப்பதில்லை.
பொது இடங்கள் முதல் கோயில்கள் வரை, சினிமா முதல் டிவி நிகழ்ச்சிகள்; வரை ஒரு பெண் அரைநிர்வாணத்துடனேயே காட்சியளிக்கின்றாள்;. சினிமாக்களில், எந்த அளவுக்கு உடைகளை குறைத்து காட்ட முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து ஆபாசத்தை வெளிப்படுத்துகின்றாள். இதை தடுக்க வேண்டிய அரசுகளே அவற்றைத் தடுக்காமல் அனுமதிப்பதுடன், ஒரு சில அதிகபட்ட ஆபாசங்களைக் காட்டக்கூடிய படங்களுக்கு 'அட்ல்ட்ஸ் ஒன்லி' என்ற 'A' சான்றிதழ் வழங்கி அதற்கும் அனுமதி கொடுக்கின்றது.
பொதுமக்கள் கூடும் இடங்களில், ஒரு ஆண்மகனுக்கு எந்த அளவுக்கு உணர்ச்சியை ஏற்படுத்த முடியுமோ அந்த அத்தனை வகையிலும், தன்னுடைய உடையாலும், கவர்ச்சியாலும், பேச்சாலும் உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் இன்றையப் நவநாகரீகப் பெண்கள். இன்று ஃபேஷன் ஷோவிலிருந்து, அத்தனை ஆபாசங்களும் இலவசமாகவே நமது வீட்டு வரேற்பறைக்கு வந்துவிட்டது. இதைப் பார்க்கக்கூடிய ஆண்மகன் என்ன நிலைக்கு ஆளாவான் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, அதனால் ஏற்படுகின்ற விபரீதத்திற்கு மட்டும் கடும் தண்டனை கொடுக்கவேண்டும் என்று கூறுவது எப்படி சரியான தீர்வாக அமையும்? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
ஒரு ஆண்மகனை விபச்சாரத்திற்கு தூண்டும் அத்தனை காரியங்களையும் செய்வது! அவனை மயக்குவதற்காக எந்த அளவுக்கு அடைகளை குறைக்க முடியுமே அந்த அளவுக்கு குறைத்துக் காட்டுவது, முடிந்தால் நீச்சல் உடைகள் போன்ற ஆபாச உடைகளை உடுத்தி அவனை உசுப்பேற்றுவது, பொது இடங்களில், திருமணமுடிக்காத தன் ஆண் நன்பனோடு மிருகங்களைக் காட்டிலும் மேலாக அசிங்கங்களில் ஈடுபடுவது, கூடுதலாக சினிமா டிவி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள மூலம் அவனை கற்பழிக்கத் தூண்டும் அத்தனை செயல்களையும் செய்வது, இப்படி எல்லா வகையிலும் ஒரு ஆண்மகளை கற்பழிக்கும் படி உசுப்பேற்றிவிட்டு விட்டு – அதனால் அவன் மணரீதியாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்துவிட்டால் அவனுக்கு மரணதன்டனைக் கொடுக்கவேண்டும் என்று கூக்குரல் இடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
டெங்கு காய்ச்சல் வந்தால், காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கும் அதேசமயம், அதற்கு காரணமான கொசுவையும் ஒழிக்கின்றோம். காரணம், நோயும் போகவேண்டும் நோய்க்கு காரணமான கொசுவும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. இதை முறையாக செய்யாத அரரை கையாலாக அரசு என்று குறைகூறுகின்றோம். ஆனால் அதே நிலைபாட்டை நாம் ஏன் மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் எடுப்பதில்லை?
இதையே ஒர் அரசு கற்பழிப்புக்கு மரணதன்டனையை சட்டமாக்குவதற்கு முன், அதற்கு அடிப்படையாக காரணமாக விளங்கும் பெண்கள் விஷயத்தில் சில கட்டுப்படுகளை விதித்தால் நமது நாட்டில் சும்மா விடுவோமா?; 'தாலிபானிசம்' என்று குறைகூறுவோம். அந்த அரரைச கலைக்கவேண்டும் என்று கூப்பாடு போடுவோம். ஆனால், அப்படி பெண்கள் விஷயத்தை கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரத்தைக்(?) கொடுத்து, அதன் காரணமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றால், கற்பழித்தவனுக்கு மரணதன்டனை கொடுக்கவேண்டும் - சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டது என்று போராட்டம் மட்டும் நடத்துவோம். இது தான் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வா? என்பதை நாம் யோசிக்க வேண்டும். அதற்காக இந்த கற்பழிப்புச் செயல்களை நாம் நியாப்படுத்தவில்லை. ஆனால் அதற்கான காரணம் எங்கிருந்து உருவாகிறது? அதை ஏன் நாம் தடுக்க முயற்சிக்கவில்லை என்பது நமது கேள்வி.
இதனால் தான் இஸ்லாமிய ஆட்சிகளில் குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு முன், அந்த குற்றங்கள் உருவாவதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கப்படுகின்றது.
ஏதோ இஸ்லாம் குற்றங்களை குறைப்பதற்கு சட்டத்தை மட்டும் கடுமையாகினால் குற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று கூறவில்லை. மாறாக, அதற்கு அடிப்படையான அனைத்து விஷயங்களையும் களையெடுக்கின்றது. ஒருவன் திருடினால், அதற்காக கை வெட்டப்படும் என்றால், அவன் திருடாத வகையில் அத்தனை வழிகளையும் கையாண்டபிறகே, அந்த சட்டதையும் நடைமுறைப்படுத்துகின்றது. ஒரு பெண்னை கற்பழித்தால், அவனுக்கு மரணத்தன்டனை என்று சொல்லும் இஸ்லாம், அந்த பெண் கற்பழிக்கப்படாத வகையில் அதற்கான நிர்பந்தம் ஒரு ஆணுக்கு ஏற்படுவதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கின்றது. அதனால்தான் பெண்களுக்கு ஃபர்தாவை அவசியமாக்குகிறது. இப்படி எல்லா சட்டங்களுக்கு இஸ்லாம் ஒரு தெளிவான வழிகாட்டளை காட்டுகின்றது. அதனால் தான் இஸ்லாமிய ஆட்சிகளில் குற்றங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால், நபி(ஸல்) அவர்கள் தனது தோழரிடம் இஸ்லாமிய ஆட்சி அமைந்தவுடன் எத்தகைய ஒரு பாதுகாப்பான நிலை இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்: 'ஒரு காலம் வரும்- சன்ஆவிலிருந்து ஹழ்ற மௌத் வரை ஒரு பெண் தனிமையில் பயணம் செய்வாள். அவளது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சம் இருக்காது' என்றார்கள்;.
அதை அவர்களது ஆட்சிக்காலத்திலும் அவர்களுக்குப் பின்னால் வந்த கலீஃபாக்கள் ஆட்சிகாலங்களிலும் செய்து காட்டினார்கள். மக்களுக்கு ஒரு பாதுகாப்பான ஆட்சியை கொடுத்தார்கள். அப்படிப்பட்ட ஆட்சி இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் மூலமும் - அது கூறக்கூடிய வழிவகைகள் மூலமும் தெளிவாகவே இருக்கின்றது.
அதானால் தான், இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கக்கூடிய நாடுகளில், இன்று வரையில் குற்றச்செயல்கள் குறைந்து காணப்படுகின்றது.
நம் கண்முன்னே நமக்கு ஏற்படுகின்ற எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கின்றது. ஆனால், அவற்றை நாம் முறையாக கையாளாததே இது போன்ற குற்றச்செயல்கள் நமது இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சட்டம் போடுவதற்கு முன் அது சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு வழிகோலும் அடிப்படையான அனைத்து வழிகளையும் சேர்த்து அடைத்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும். அது தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.
இத்தனை காலங்களாக, இஸ்லாமிய சட்டங்களே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வா அமையும் என்று நாம் கூறினோம். ஆனால், அதற்கெல்லாம் செவிசாய்காமல், அதற்கு எதிரான அனைத்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்கள். ஆனால், தற்போது அதன் அவசியத்தை அவர்களுக்கு காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.
இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை காட்டுமிராண்டித்தனம் என்றவர்கள், தற்போது அதன் ஒரு பகுதியை, விரும்பியோ விரும்பாமலோ, இந்த நாட்டில் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றார்கள். பெண்களின் உடைக்கட்டுப்பாடு விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களை பிற்போக்குத்தனமானது – பெண் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கக்கூடியது என்றார்கள் - ஆனால், இன்று அது தான் சரி என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் தீட்டுகிறது.
எதிர்காலத்தில், அனைத்து தரப்பினரும் ஒரு சேர, இஸ்லாமிய நடைமுறைகளை சட்டமாக்கவேண்டும் என்று கோரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.