அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Tuesday, March 11, 2008

உடை கழற்றும் ஆண் வக்கிரம்

உடை கழற்றும் ஆண் வக்கிரம்
......................................................................... - ஜி.என்

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை அவ்வப்போது பலர் அக்கறையோடு வெளிபடுத்தி வருகின்றனர்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர்கள் எழுதும் கட்டுரையை அவர்களே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக' பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும்இ ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

'பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்'?.
அவர் பதிலளித்தார். 'நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்'

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.'எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.'

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.


பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை'அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.
.

10 comments:

Anonymous said...

முண்டம்,

நீ பர்தா போட்டுக் கொண்டு போவது தானே?

Anonymous said...

முண்டம்,

நீ பர்தா போட்டுக் கொண்டு போவது தானே?

Anonymous said...

சகோதரா. கோபப்படுவதில் அர்த்தமில்லை. கருத்துக்கள் நியாயமா என்பதைத்தான் பார்க்கவேண்டும். இந்த ஆக்கத்தில் எந்த முஸ்லீம் பெண்ணின் சாட்சியத்தையும் கூறவில்லை. இஸ்லாம் அல்லாத மாற்றுமதப்பெண். அதுவும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள பெண்மனியின் கருத்துக்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்; எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்றக் கேள்விக்கு உங்கள் விடை என்ன? அதை முதலில் வரையரையுங்கள். அடுத்து 'முண்டம்' என்று எங்களைத் திட்டுங்கள்.

ஓர் ஆண் இடையை திறந்துகொண்டு போனால் அவனின் இடைய எந்தப் பெண்ணும் ரசிப்பதில்லை. எந்த ஒரு படத்திலும், எந்த ஒரு நடிகனுக்கும் எந்த ஒரு நடிகையும் தொப்புளில் பம்பரம் விடுவதில்லை, ஆம்லட் போடுவதில்லை. காரணம் ஆணின் அந்த இடங்கள் பெண்களால் ரசிககப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் தன் இடையையோ அல்லது தொப்புள்களையோ திரந்தால் நிலையில் இருந்தால் அத்தனை ஆணும் ரசிக்கிறான் என்பதை நான் மட்டும் சொல்லவில்லை. உங்கள் மனசாட்சயும்p சேர்ந்தே சொல்லுகிறது.

அப்படிஇருக்கையில் இன்றைக்கு ஒரு ஆண் தன் இடையை மறைத்தநிலையில் தான் தன் அனைத்து செயல்பாடுகளையும் அமைத்துள்ளான். தொப்புள்தெரிவது போல் எந்த ஆனும் தனது உடையை அமைத்துக்கொள்ளவில்லை. ஆனால் பெண்களின் நிலை என்ன? எந்த பெண்ணின் இடுப்பையும் தொடையையும் தொப்புளையும் பார்த்தால் காமம் வருமோ அந்தப் பெண் எப்படி உடை உடுத்து வேண்டும். ஆனால் இன்றைக்கு எப்படி உடை உடுத்துகின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும்.

பெண்ணின் உடையளவை பற்றி பேசக்கூடியவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களையும் - இன்றைய நடிகையர்போல் வெறும் ஜட்டியுடனும் பிராவினுடனும், அல்லது குட்டைப்பாவடையுடனோ வெளியில் நடமாடவிடுவார்களா? அல்லது பொது நிகழ்ச்சிகளிலும் திருமணவைபவங்களிலும் (கருனாநிதியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை ஸ்ரேயாவைப்போல்) கலந்துக்கொள்ள விடுவார்களா? காரணம் தன் வீட்டுப் பெண்மனிக்கு வேறு அளவுகோல் - அடுத்தவன் வீட்டுக் பெண்ணுக்கு வேறு அளவுகோல்.

ஓன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் எந்த அளவுக்கு ஓடியது? அதே சமயம் மற்ற ஆபாசக்காட்சிகள் அடங்கிய படங்கள் எந்த அளவுக்கு ஓடுகின்றன? இதற்கு என்னக் காரணம்? கவர்ச்சித்தானே...?

பெண்களின் உடைஅளவை முதலில் கூறுங்கள் அடுத்து உங்கள் கோபத்தை வெளிக்காட்டுங்கள்.

abdullah, chennai

Anonymous said...

//முண்டம்,

நீ பர்தா போட்டுக் கொண்டு போவது தானே?//

நாங்கள் ஃபர்தாத் தான் போட்டுள்ளோம். என் இடை எங்கே தெரிகிறது? என் தொப்புள் எங்கே தெரிகிறது? ஃபர்தா என்றால் என்ன? கருப்பு துனிப் போட்டு மறைப்பதல்ல. சுரிதர் கூட பர்தா தான். முதலில் அதை விளங்குங்கள்.

அழகன், சென்னை

Adirai Media said...

சகோதரா. கோபப்படுவதில் அர்த்தமில்லை......

சபாஷ்... சரியான பதில்...

Anonymous said...

முஸ்லீம்கள் பர்தாவை நியாயப்படுத்த
கூறும் முட்டாள்த்தனமான பதிவுகளில்
இதுவும் ஒன்று. ஆண்களை அப்படி படைத்த அல்லாவை என்ன செய்யலாம் :).
மூடர்களே, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெண்கள் குறைந்த உடை அணிந்து பொது இடங்களில்
உலவுகின்றனர். அவர்கள் விருப்பம்
அது. அங்கெல்லாம் பொது இடங்களில்
பெண்கள் இதனால் பிரச்சினைகளை
சந்திப்பதில்லை, தொந்தரவுக்குள்ளாவதில்லை. அது போல் மும்பையிலும் இரவில் பல
பகுதிகளில் பெண்கள் தைரியமாக
நடமாட முடியும், பர்தா போடாமல்.
ஆண்களின் கண்ணோட்டம் பெண்களை
வெறும் உடலாக நோக்குவதென்றால்
அதில்தான் மாற்றம் வர வேண்டும்.
அதற்காக பெண்களை பர்தாப் போடச்
சொல்வதும், பொது இடங்களில் ஆண்களுடன் பழகக்கூடாதென்பதும்
அறிவீனம். அதை குரானை முன்
வைத்து நீங்கள் செய்கிறீர்கள்.

Anonymous said...

தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..)


இது பொய்.ஜெயலலிதா புடவை
உடுத்துகிறார். முகத்தை, தலையை
மூடுவதில்லை.திரைப்பட நடிகையாக
இருந்த போது அவர் அணிந்த
உடைகள் வேறு.அப்போதும் அவர்
பர்தா போட்டுக்கொண்டு நடிக்கவில்லை.

Anonymous said...

//ஆண்களை அப்படி படைத்த அல்லாவை என்ன செய்யலாம்//

ஆண்களைப்படைத்த அந்த இறைவன் தான் 'ஆண்கள் இப்படித்தான் படைக்கப்பட்டுள்ளனர். எனவே நீங்கள் இந்த அளவுக்கு மறைத்து உங்கள் கற்பையும் - மணத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று பெண்களுக்கு கூறுகிறான்.

//மூடர்களே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெண்கள் குறைந்த உடை அணிந்து பொது இடங்களில்
உலவுகின்றனர். அவர்கள் விருப்பம்
அது. அங்கெல்லாம் பொது இடங்களில்
பெண்கள் இதனால் பிரச்சினைகளை
சந்திப்பதில்லை தொந்தரவுக்குள்ளாவதில்லை. அது போல் மும்பையிலும் இரவில் பல
பகுதிகளில் பெண்கள் தைரியமாக
நடமாட முடியும்இ பர்தா போடாமல்//

அமெரிக்காவிலும் ஐரோப்பாவையும் உதாரணம் காட்டுகிறீர்கள். அங்கே ரோட்டிலேயே நின்றுக்கொண்டு சில அசிங்கங்களைச் செய்வார்கள். யார் யார் மனைவி என்றுக்கூட பார்க்காமல் முத்தம் கொடுத்துக்கொள்வார்கள். இதையும் பின்பற்ற வேண்டியது தானே. கலாச்சார சீர்கேடே அங்கிருந்துத்தானே இறக்குமதியானது.

அங்கே பெண்கள் முத்தம் கேட்டவுடனேயே கொடுத்து விடுவார்கள். அதனால்தான் ரோட்டோரங்களில் கூட நடக்கின்றது. இங்கத்தான் அதை அங்கீகரிக்காமல் புகார் செய்கிறார்கள். புகார் செய்யாமல் இருந்தால் நீங்கள் சொல்வது போல் பிரச்சனை வராது. காரணம் மானம் நம் மக்களோடு ஒட்டிப்பிறந்தது. அங்கு அது கிடையாது.

சினிமாக்களில் ஓரு ஆண் ஜட்டியோடோ அல்லது டவுசரோடோ நடித்தால் அந்தக் காட்சிகள் நகைச்சுவைக்காக காட்டப்படுகிறது. அதே ஒரு நடிகை ஜட்டியோடோ அல்லது டவுசரோடோ நடித்தால் அதை கவர்ச்சியாகக் காட்டப்படுகிறதே ஏன்? உங்கள் பார்வை எங்கே போகிறது? ஆண் அப்படி நடித்தால் ஹ. ஹ.. ஹஹ.. என்பீர்கள். இதே ஒரு பெண்நடித்தால் ஆ.....! என்பீர்கள். இது தான் பார்வையின் வித்தியாசம்.

நாம் என்னக் கேட்கிறோம்.. அடுத்தவன் வீட்டு பெண்மனிக்குத்தான் இந்த ஜட்டி டிராயர் சுதந்திரம் எல்லாம். உங்கள் வீட்டு பெண்மனிகளுக்கு இன்றைய நடிகைகள் போட்டுவருவதுபோல் குட்டைப்பாவாடையோடோ அல்லது ஜட்டியோடே வெளியில் உலாவ விடுவீர்களா? திருமனநிகழ்சியிலோ அல்லது பொது நிகழ்சிகளிலோ கலந்துக்கொள்ள விடுவீர்களா? உங்கள் வீட்டுப்பெண்மனியிடம் நீங்கள் சொல்வது போல் ஐரோப்பியக் கலாச்சாரப்படி ஒருவன் (சில்பா ஷெட்டியை ஹாலிவுட் நடிகர் பொது மேடையில் முத்தமிட்டது போல்) முத்தமிட்டால் சும்மா இருந்து விடுவீர்களா?

முதலில் ஒரு பெண் எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்ற உங்கள் அளவுகோல் என்ன அது சொல்லுங்கள். ஒரு பெண் நிர்வானமாக வரலாமா? அல்லது மறைக்க வேண்டுமா? முதலில் உங்கள் அளவுகோல் என்ன? அதைச் சொல்லுங்கள்.

Anonymous said...

//இது பொய்.ஜெயலலிதா புடவை
உடுத்துகிறார். முகத்தை, தலையை
மூடுவதில்லை.திரைப்பட நடிகையாக
இருந்த போது அவர் அணிந்த
உடைகள் வேறு.அப்போதும் அவர்
பர்தா போட்டுக்கொண்டு நடிக்கவில்லை.//

ஜெயலலிதா சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடியது போலலோ அல்லது அப்பொழுது அவர் உடுத்திய உடைபோலோ இப்பொழுது இல்லை. நாம் என்னக் கேட்கிறோம் ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு பெண்ணின் உடை தடையாக இருக்குமானால் தற்போது ஜெயலலிதா உடுத்த்தும் அந்த உடை அவருக்கு எந்தவிதத்தில் தடையாக இருக்கின்றது என்பது தான். இஸ்லாம் வலியுருத்துவதால் தானே இதை எதிர்க்கிறிர்கள்.

அவர் தலையை மறைக்க வில்லை என்கிறீர்கள். உன்மைத்தான். பொதுவாக பெண்ணின் கூந்தல் கவர்ச்சிப்பகுதியாக பார்க்கப்படுவதில்லையா இல்லையா? கூந்தலை அலங்காரப்படுத்தவேண்டும் என்பதற்காக எததனை எத்தனை ரசங்களில் அழகுபடுத்துகிறார்கள். எத்தனை புலவர்கள் பெண்களின் கூந்தலை கவற்சியாக பகுதியாக பாடியுள்ளனர். எத்தனை சினிமாக்களில் பெண்ணின் கூந்தல் பற்றி பாடப்பட்டுள்ளது. எவராவது எந்த ஆணின் முடியைப்பற்றி ஒரு கவர்ச்சியான பகுதியாhக பாடியிருக்கிறார்களா? அல்லது எந்தப் பெண்கவிஞராவது பாடியுள்ளாரா? காரணம் என்ன? ஆணைப்பொருத்தவரை பெண்னை ஒரு செக்ஸியாகத்தான் பார்க்கின்றான். இது தான் உன்மை. வாதிப்பது ஒன்றும் பெரிதல்ல. எதார்த்தம் அது தான்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்,

அருமையான பதிவு. இஸ்லாத்தின் எல்லா கொள்கைகளுக்கும் எதிரிகள் உண்டு. இது இஸ்லாத்தின் பிரச்சனையில்லை. அவர்களின் பிரச்சினை. காரணம், சத்தியம். சத்தியத்திற்கு செல்லுமிடத்திலெல்லாம் சோதனைதான். முடிவில் வெல்வதும் சத்தியம்தான். இன்று தன் பார்வைக்கு எல்லா மங்கையரும் அரை குறையாக உடையணிந்து நடமாட வேண்டும் என விரும்புகின்றவர்கள், நாளை தன் மனைவியையோ அல்லது தன் மகளையோ அவ்வாறு உடையணிந்து செல்ல அனுமதிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும்.

மேலை நாடுகளின் பலாத்கார செயல்களும், பெண்களுக்கெதிரான மாபாதக செயல்களின் விகிதமும் அதிகம். தினம் தினம் அவற்றைப் பற்றி எழுத பத்திரிக்கைகள் விரும்புவதில்லை. அது சர்வ சாதாரண விடையமாகிவிட்டது அங்கே. எனவே இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கு அதைப் பற்றி தெரிவதுமில்லை.

ஆணின் மன நிலை அறிந்துதான் இஸ்லாம் மனைவிமார்களை தன் கணவரிடம் பேசும் போது மற்ற பெண்களைப் பற்றி அதிகமாக பேச வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றது. ஒவ்வொரு ஆணாக தேடிப்போய் நாம் திருத்த முடியாது. நடக்கும் வழியில் கல் என்று நாடு முழுதும் மாட்டுத் தோலால் பாதை அமைக்க சொன்னது போலானதாகும். இஸ்லாம் எனவே தன்னை முதலில் பாதுகாத்துக் கொள்ளச் சொல்கின்றது. நம் காலில் தோல் செருப்பு மாட்டினாலே போதும்.

இன்னும் கூறலாம். எனினும் அல்லாஹ் கூறுவது போல அறிவாளிகளுக்கு ஒரு உதாரணம் போதும். அறிவிலிகளுக்கு எத்தனை சொன்னாலும் ஏறாது. அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகு நிலையிலிருந்து காப்பானாக.