அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, February 20, 2008

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.


''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்


விளக்கவுரை:

உணவளிப்பதையும், ஸலாம் கூறுவதையும் இஸ்லாத்தின் மிகச்சிறந்த செயலாக இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது. இல்லாதோர், இயலாதோர் மற்றும் ஏழைகளுக்கு உணவளிப்பது அவர்களது மனதை மகிழ்விக்கச் செய்கிறது. மனித நலம் பேணுகிறது. உற்றார், உறவினரிலுள்ள ஏழைகளுக்கு உணவளிப்பது உறவு முறைகளை காத்து வலுப்படுத்துகிறது. மனைவி, மக்கள், பெற்றோருக்கு உணவு வழங்குவது மனிதனுடைய கடமையுணர்வை நிலைநாட்டுகிறது.

ஒரு மனிதன் தான் அறியாமலிருக்கும் ஒருவருக்கு 'ஸலாம்' கூறுவது அறிமுகத்தையும், சகோதர உணர்வையும் ஏற்படுத்துகிறது. அறிந்தோருக்கு ஸலாம் கூறுவது ஏற்கனவேயுள்ள தொடர்பையும் பாசத்தையும் வலுப்படுத்தி அகந்தை மற்றும் பெருமையை அகற்றுகிறது. உணவளிப்பது உடலுக்கு வலிமைåட்டுகிறது என்றால், 'ஸலாம்' கூறுவது மனநிம்மதிக்கும், அமைதி வாழ்விற்கும் வழிகோலுகிறது.

0 comments: