அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Thursday, February 14, 2008

அர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1)

அர்த்தமுள்ள இஸ்லாம் - மௌலவி P.J. உலகில் உள்ள எல்லா மதங்களும் அர்த்தமுள்ள தத்துவங்கள் என்றே தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கின்றன. ஆனால், சிந்தனையாளர்களின் பார்வையில் எல்லா மதங்களும் அர்த்தமற்றவையாகத் தோற்றமளிக்கின்றன. 'மதங்கள் யாவும் அர்த்தமற்றவை' என்று கூறும் சிந்தனையாளர்கள் அறிவுப்பூர்வமான சில வாதங்களை முன் வைத்து வாதிடுகின்றனர். இந்த நிலையில் 'ஒரு மதம் அர்த்தமுள்ளதா? அல்லவா?' என்பதை முடிவு செய்ய வேண்டுமானால் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் அறிவுப்பூர்வமான மறுப்பை அந்த மதம் எடுத்து வைக்க வேண்டும். மேலும் வலிமையான...

Tuesday, February 12, 2008

விதியை நம்ப வேண்டுமா?

கேள்வி: ''அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?'' பதில்: விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகûளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், கடவுள்...

அல்லாஹ் 6 நாள் எடுத்தது ஏன்?

கேள்வி: வானத்தையும், பூமியையும் படைக்க அல்லாஹ் 6 நாள் எடுத்தது ஏன்? பதில்: சரியான முறையில் புரிந்து கொண்டால் இதில் எந்தக் குழப்பமும் ஏற்படாது. நீங்கள் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறீர்கள். ஒரு வீட்டைக் கட்ட நீங்கள் நினைத்தால் இரண்டே மாதத்தில் கட்டி விடக்கூடிய அளவுக்குச் சக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிச் சக்தி இருந்தும் ஒரு வீட்டை இரண்டு வருடங்களில் கட்டுகிறீர்கள் என்றால் இரண்டு மாதங்களில் உங்களால் கட்ட முடியாது என்று கூற மாட்டோம். ஒரு நாளில் நம்மால் செய்ய முடியும் காரியத்தை ஐந்து நாட்களில் செய்தால் ஒரு நாளில் செய்ய...

இறைவன் தேவையற்றவன் என்றால்....?

கேள்வி: அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க ''தொழு! அறுத்துப் பலியிடு'' என்ற கட்டளையும் உள்ளதே? பதில் : அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது. இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பலியிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது. இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக்...

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கேள்வி: 'அவன்' என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? பதில் இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது. 'அவன்' என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் 'ஹூவ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்....

Monday, February 11, 2008

ஃபர்தா... ஏன்?

கேள்வி: இஸ்லாமிய பெண்கள் ஃபர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்? பதில்: இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் - இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு - உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். 1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு - போகப் பொருளாக...

பலதாரமணம் - பெண்களுக்கு....?

கேள்வி : ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்? பதில்: . இஸ்லாமியர்கள் உட்பட - ஏராளமான பேர்கள் - ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்திருப்பது ஏன்?. என்கிற தர்க்க ரீதியான கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும் - சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கம் என்பதை நான் உங்களிடம் உறுதியாக சொல்ல விரும்புகிறேன். ஆணையும் - பெண்ணையும் சமமாகவே படைத்த அல்லாஹ் ஆணுக்கும் - பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும் - இயல்புகளையும்...

பலதார மணம் ஏன்?

கேள்வி : இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்? பதில்: 1. பலதார திருமணத்திற்கான விளக்கம்: பலதார மணம் என்றால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளை கொண்டிருப்பது. பலதார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது வகை ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலிகமி (POLYGAMY)என்பார்கள். இரண்டாவது வகை ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலியாண்டரி (POLYANDRY) என்பார்கள். முதலாவது வகை - அதாவது ஆண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை...

Saturday, February 09, 2008

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் முன்னுரை

இஸ்லாத்தை மாற்றுமதத்தவருக்கு எடுத்துச் சொல்லும்போது அதன் சாதகமான கொள்கைகளை சிறப்பித்து சொல்லுவதால் மாத்திரம் மாற்று மதத்தவர்களில் ஏரானமானபேர் உண்மையான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இஸ்லாத்தைப் பற்றி அவர்களது உள்ளத்தில் இருக்கும் சில கேள்விகள் நம்மால் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கின்றது. மாற்று மதத்தவர்கள் நம்முடைய வாதங்களை ஏற்றுக் கொள்ள முற்படும் அதே வேளையில் 'ஓ..! ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம்கள்தானே நீங்கள பெண்களை பர்தாவுக்குள் அடைத்து வைத்து - பெண்ணடிமைத் தனத்தை ஆதரிப்பவர்கள்தானே நீங்கள்'-...

டாக்டர். ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு :

டாக்டர் ஜாகிர் நாயக் ஒரு இஸ்லாமிய அழைப்பாளர். இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு உலகில் உள்ள மாற்று மதத்தவர்களுக்கு ஆங்கில மொழியில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் பிரபலமானவர். கடந்த இரண்டு யுகங்களாக டாக்டர் ஜாகிர் நாயக் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லவென்று உலகில் அவர் செல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லலாம். இஸ்லாத்தைப் பற்றி அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு இறைவனின் நாட்டத்தில் அவரது பேச்சுத் திறமையாலும் - இஸ்லாமிய மார்க்க ரீதியாகவும் - அறிவியல் ரீதியாகவும் - தர்க்க ரீதியாகவும் அவர் அளிக்கும் பதில்கள் - இன்று உலகம் முழுவதும்...