..
.
.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -2)
.
.
கலப்பில்லாத ஓரிறைக் கொள்கையை போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்!
.
.
இது போக, இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களையும் - மதங்களையும் எடுத்துப்பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதை பார்க்கலாம்.
உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம்.
தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.
ஆக்குவதற்கு ஒரு கடவுள், அழிப்பதற்கு ஒரு கடவுள், காப்பதற்கு ஒரு கடவுள், துன்பத்தை நீக்க ஒரு கடவுள், இன்பத்தை வழங்க ஒரு கடவுள், மழைக்குத் தனி கடவுள், உணவு வழங்க இன்னொரு கடவுள் கல்விக்கு என்று ஒரு கடவுள் என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
ஓரு மனிதனை அழிக்க வேன்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா? அல்லது காக்கப்படுவானா?
இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?
தமிழனுக்கும் மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும் அரபியனுக்கும் சன்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?
இந்த பூமியையும், ஏனைய கோள்களையும் அண்ட வெளிiயும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.
ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்து சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.
எப்போதோ ஏற்படும் சூரிய சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. ஏந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும் எந்தெந்த பகுதியில் முழமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.
பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால்தான் கோள்கள் ஒன்றுடன் ஓன்று மோதுவதில்லை. இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் சொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கிறது.
மொத்த உலகத்திற்கும் ஓரே கடவுள் தான் இருக்க முடியும் பல கடவுள்கள் இருக்க முடியாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
இதை குர்ஆன் தர்க்க ரீதியாகவே சொல்லி வாதிக்கிறது.
அதாவது 'இந்த உலகத்திலே ஒரு கடவுளைத் தவிர இன்னும் கொஞ்சம் கடவுகள் இருந்தால் இந்த உலகம் என்றைக்கோ சீர்கெட்டுப் போய் இருக்கும்' (அல்குர்ஆன்)
ஒரு கடவுள் தான் என்ற கொள்கையை கடந்த காலங்களில் எத்தனையோ பேர் போதித்துள்ளனர். ஆனால் அவர்களே பிற்காலத்தில் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். ஓரு கடவுள் கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள் கொள்கைக்கு சமாதி கட்டப்பட்டது.
ஆனால் கடைசி இறைத்தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 'ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னார்கள். அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை.
நபிகள் நாயகத்துக்கு சிலை வைக்கப்படவில்லை. நபிகள் நாயகத்தை எந்த முஸ்லீமும் வழிபடுவதில்லை.
நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அதன் எல்லையை முஸ்லீம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.
மனிதர்களிலேயே நபிகள் நாயகம் மிகச் சிறந்தவர்கள் என்பது தான் அந்த எல்லை.
இதைக் கடந்து கடவுள் நிலைக்கு அவர்களை எந்த முஸ்லீமும் உயர்த்துவதில்லை.
அதனால்தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும்.
.
.
0 comments:
Post a Comment