கிறிஸ்தவர்களால் புனிதமாக மதிக்கப்படும் பைபிள் மனித்தக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பது பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. குறிப்பாக அதில் இருக்கக்கூடிய முரண்பாடான, ஆபாசமான, நகைச்சுவையான, விஞ்ஞானத்திற்கு முரனான, வர்னாசிரமக் கொள்கைகளை வலியுறுத்தக்கூடிய, இறைத்தூதர்களை இழிவுபடுத்தக்கூடிய குறிப்பாக இயேசுவையே தரம் தாழ்த்தக்கூடிய, இப்படி எண்ணற்ற இறைவசனங்களாக இருக்க அறவே தகுதியற்ற வசனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன.
குறிப்பாக மனிதர்களை நேர்வழிப்படுத்தும் முகமாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை...