கேள்வி :
ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?
பதில்:
.
இஸ்லாமியர்கள் உட்பட - ஏராளமான பேர்கள் - ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்திருப்பது ஏன்?. என்கிற தர்க்க ரீதியான கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள்.
இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும் - சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கம் என்பதை நான் உங்களிடம் உறுதியாக சொல்ல விரும்புகிறேன். ஆணையும் - பெண்ணையும் சமமாகவே படைத்த அல்லாஹ் ஆணுக்கும் - பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும் - இயல்புகளையும்...