அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Saturday, February 09, 2008

பாகிஸ்தான் வென்றால்...

கேள்வி : இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றது. ஆனால், பாகிஸ்தானில் இந்துக்களுக்கு ஓட்டுரிமை கூட இல்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடும்போது பாகிஸ்தான் வென்றால் கார்கில் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அதைக் கொண்டாடுகின்றார்கள். இந்தியா வென்றால் கொண்டாடுவது இல்லை. இது நியாயமா? கருணாகரன்

பதில்: விளையாட்டைத் தேச பக்தியின் அளவுகோளாகக் கொள்ளக் கூடாது. விளையாட்டு வீரர்களே தேசத்திற்காக விளையாடாமல் பணத்திற்காக விளையாடுகிறார்கள், பணம் வாங்கிக் கொண்டுத் தோற்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க வீரர்களும் பணத்திற்காகத்தான் விளையாடுகிறார்கள். ஒரு நாடு விளையாட்டில் தோல்வியடைந்தால், அந்த நாடே தோல்வியுற்றதாகக் கருதக்கூடாது. இரு நாடுகளுக்கிடையில் போர் மூண்டு தனது ராணுவம் வெற்றியடையும்போது தான் அந்த நாடே வெற்றி பெற்றதாக அர்த்தம். (கூட்டத்தில் வரவேற்பு)

விளையாட்டில் என்ன திறமை இருக்கிறது? என்ன தேசப்பற்று இருக்கிறது? இந்திய நடிகர்களான ரஜினி, கமல், அமிதாப்பச்சன் போன்றவர்கள் இருக்கும் போதே இவர்களைத் தாண்டி ஆங்கில நடிகர் ஜாக்கிஜானை ஏன் ரசிக்கின்றீர்கள்? இதை நாம் தவறு என்றுச் சொல்லவில்லை. பாகிஸ்தான் ஜெயிக்கும் போது அதைக் கொண்டாடும் முஸ்லிம்களின் செயலை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தேசத்தின் வெற்றி விளையாட்டில்தான் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள இயலாது. விளையாட்டு தேச பக்தியின் அளவுகோளும் அல்ல.

0 comments: