அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Thursday, February 26, 2009

நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா?

கிறிஸ்தவ தளத்துக்கு பதில் .. பைபிளின் மீது முஸ்லிம்களால் வைக்கப்படும் எண்ணிலடங்கா முரண்பாடுளுக்கும் - குழப்பங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு எப்படியேனும் குர்ஆனின் மீது குற்றம் சுமத்தியாகவேண்டும் அதில் எப்படியாவது முரண்பாடுகளைக் கண்டுபிடித்து அவர்களை திணரடித்துவிட (?) வேண்டும் என்ற நோக்கத்துடன் சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷினரிகளால் குர்ஆனில் முரண்பாடு என்று தங்கள் தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றது. அதில் நோவா (நூஹ் நபி) சம்பந்தப்பட்ட பதிவை உமர் என்ற கிறிஸ்தவர் 'குர்ஆன் முரண்பாடுகள் - நோவாவின் வயது' என்ற தலைப்பில்...

Tuesday, February 17, 2009

உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)

கிறிஸ்தவ தளத்திற்கு பதில் தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றி தான் செய்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தை மிக ஆழமாக ஆராய்ந்து அதில் உள்ள முரண்பாடுகளையும், குழப்பங்களையும் அதில் ஏற்படக்கூடிய சந்தேகங்களையும் எடுத்துரைத்ததன் மூலம் உலக கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த கட்டுரைகள்...

Tuesday, February 10, 2009

யோனாவின் அடையாளம் என்றால் என்ன?

கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை .. மறைந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஒருமுறை வாடிகன் மைதானத்தில் ஆற்றிய உறையில் இவ்வாறு சொன்னார். IF THERE IS NO CRUCIFIXION, NO CHRISTIANITY. ஏசுவின் சிலுவை மரணம் மட்டும் இல்லையென்றால் கிருஸ்தவமே இல்லை என்றார். உண்மைதான், ஏசு உலக மக்களின் பாவங்களைக் கழுவுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற கற்பனையில்தான் கிருஸ்தவ மதமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அவதூறு என இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்-குர்ஆன் மிகத்தெளிவாகவே எச்சரிக்கிறது. இன்னும், ''நிச்சயமாக...

Monday, February 02, 2009

நபிகள் நாயகம் காமவெறியரா? இயேசு திருமணம் முடிக்காதவரா?

பலதாரமணம் புரிந்தவர் இறைதூதராக இருக்க முடியுமா? கிறிஸ்தவர்களுக்கு பதில் . உலகம் முழுவதும் இன்று பெருகிவரும் இஸ்லாமிய வளர்ச்சியைப் பொருத்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய எதிரிகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரிகள் அதன் வளர்ச்சியை எப்படியேனும் தடுத்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் ஏற்படுத்திவரும் விஷமப்பிரச்சாரங்களில் மிக முக்கியமான ஒன்று நம் உயிரினும் மேலான நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்படும் 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. குறிப்பாக கிறிஸ்தவர்களில் பலர் இயேசு காம இச்சையை அடக்கி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்றும் ஆனால் முஹம்மது...

Monday, January 12, 2009

அப்ரஹா மன்னனின் யானைப்படையும் - கிறிஸ்தவர்களின் கேள்வியும

அன்பு சகோதரருக்கு முஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக. கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.இதற்கான தகுந்த...

Thursday, December 04, 2008

மதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு?

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்! பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்கில பைபிள்களில் WINE என்று வரும் இடங்களில் தமிழ் பைபிளில் 'திராட்சைரசம்' என்றும் STRONG DRINK என்று வரும் இடங்களில் 'மது' என்றும் மொழிபெயர்த்துள்ளனர். WINE என்று குறிப்பிடப்படும் வேறு சில இடங்களில் 'திராட்சைரசம்' என்பதற்கு பதிலாக நேரடியாக 'மதுபானம்' என்றே தமிழ் பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானவகையைச் சேர்ந்த திராட்சைரசம் (Wine), மது (Strong Drink) என்ற...