இந்த உலகில் உள்ள ஏராளமான மதங்களில் இஸ்லாமிய மார்க்கம் 120 கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கம் எந்த வகையில் ஏனைய மார்க்கங்களிலிருந்து வேறுபட்டிக்கிறது? இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? என்பவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இஸ்லாமிய மார்க்கம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை உலகத்திற்குச் சொல்கிறது.
முதலாவது கொள்கை: வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை.
இரண்டாவது கொள்கை: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள்.
இவ்விரு கொள்கைகள் தாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள். இந்த கொள்கையை ஒருவன் நம்புகின்ற காரணத்திணால் ஏனைய மார்க்கங்களிலிருந்து தனித்தவனாக, ஏனையமார்க்கங்களைத் தவிர்த்து வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறிவிடுகின்றான்.
இந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளில் அடிப்படைக் கொள்கைகளில் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது? இந்த இரண்டு கொள்கைகளை ஏற்றவுடன் ஒருவன் முஸ்லிம் என்றும் இக்கொள்கைகளை ஏற்கவில்லையென்றால் அவன் முஸ்லிம் இல்லையென்றும் சொல்லகூடிய அளவுக்கு அப்படி என்ன தத்துவம் அதில் இருக்கின்றது? என்றால் இந்த இரண்டு கொள்கைகள் ஒரு மனிதன் உள்ளத்தில் பதிந்து விடுமானல், அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மனிதனுடைய வாழ்க்கையில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன.
இவை எப்படி ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
மனித குல ஒருமைப்பாடு
கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட குலத்தில் பிறிந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளைப் பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் கடவுளைப் பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான்.
'நாங்கள் மட்டும் தான் பூஜைசெய்யவேண்டும்' எனக் கூறினாலும் 'நானும் சுத்தமாகக் குளித்துவிட்டுத்தான் வந்துள்ளேன்' எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குளத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவை தானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.
மனிதனின் முயற்சியால் பெறுகின்ற கல்வி, பதவி, புகழ் போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதை ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத, குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால் அதைக் கடவுளும் ஏற்றுக்கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை' என்று ஒருவன் சொல்லி, அவன் ஓரே ஒரு கடவுள் தான் இந்த உலகத்திற்கு இருக்கின்றான் என்பதை ஓப்புக் கொள்கின்றான். உலத்திற்கு ஓரே ஒரு கடவுள் தான் இறுக்கின்றான் என்று மனிதன் நம்பக்கூடிய நேரத்தில் அவனிடையே மொழியால் இருந்த பிளவுகள், இனத்தால் இருந்த பிளவுகள், தேசத்தால் இருந்த பிளவுகள், கோத்திரத்தின், குலத்தின் அடிப்படையில் அவன் உண்டாக்கிக் கொண்ட பிளவுகள் எல்லாமே இந்த ஓரிறைக் கொள்கையால் அடிபட்டுப் போகிறது.
மொத்த உலகத்திற்குமே இறைவன் ஒருவன் தான், மொத்த உலகத்ததைப் படைத்த பரிபாலித்து, காத்துக் கொண்டு இருப்பவன், மொத்த உலகத்தில் வாழக்கூடிய அத்தனை மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பவன் ஓரே ஒரு இறைவன் தான் என்று சொல்லும் போது, நான் தழிழன், நீ மலையாளி, அவன் கன்னடத்துக் காரன் என்றெல்லாம் மனிதன் மொழியின் பெயரால் கூறுபட்டுப் போவதை இந்த கொள்கைப் பிரகடனம் தடுத்து வீடுகின்றது.
நான் இந்தியன், அவன் பாகிஸ்தானியன், நீ அமெரிக்கன் என்றெல்லாம் தேசத்தின் பெயரால் மனிதன் மனிதனைப் பிரித்துப் பார்க்கின்ற நிலையையும் ஏகத்துவக் கொள்கை மாற்றிவீடுகின்றது.
அதைப் போல் நான் இந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன், நீ அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் மனிதன் வேறுபட்டுப் போவதையும் இந்தக் கொள்கைப் பிரகடனம் தடுத்து விடுகின்றது.
மொத்த உலகத்திற்கும் ஒருவன் தான் படைப்பாளன், மொத்த உலகத்தில் உள்ளவர்களும் அந்த இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அனைவரும் அந்த ஓரே இறைவனின் அடிமைகளாகி, 'அடிமைகள் என்ற வட்டத்துக்குள் ஒன்று பட்டு விடுகின்றனர்.
ஆக ஏக இறைவனுக்கு அடிமைகள் தான் நாம், என்று நம்பும் போது, தமிழனும் அவனுக்கு அடிமை, மலையாளியும் அவனுக்கு அடிமை, கன்னடக்காரனும் இறைவனுக்கு அடிமை என்று எல்லோரும் 'அடிமை' என்று ஒன்று பட்டு விடுகின்றோம்.
ஓரே ஒரு கடவுளுக்குத் தங்களை அடிமைகள் என்று அத்தனை பேரும் ஒன்று பட்டுக் கூறும் போது மனிதன் இன்னொருவனை விட உயர்ந்தவன் என்று கருதமாட்டான்.
என் தாய் மொழி 'தமிழ்' என்பதால் நான் சிறந்தவன் என்று தமிழனோ, தன் தாய் மொழி 'மலையாளம்' என்பதால் தான் உயர்ந்தவன் என்று ஒரு மலையாளியோ, இன்னும் யாருமே தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லவே மாட்டார்கள், சொல்லவும் முடியாது. நாம் எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்புகின்ற போது, நம்மையெல்லாம் படைத்து, பரிபாலித்து வரக்கூடிய ஒரு சர்வசக்தன் நம் அனைவரின் எஜமான் என்று நம்புகின்ற போது மனிதனுக்கிடையேயுள்ள வேற்றுமை களையெடுக்கப் படுகின்றன.
இப்படிப்பட்ட ஒற்றுமை 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று அரபியில் சொல்லக்கூடிய 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' என்று தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய இந்த தத்துவத்தினால் ஏற்படக்கூடிய பயன் ஆகும்.
அடுத்தப்படியாக நாம் நம் இந்தியாவில் பார்க்கக்கூடிய ஜாதிப்பிரிவுகள் எங்ஙனம் இந்திய சமுதாயத்தைக் கூறுபோட்டுக் கொண்டு இக்கின்றது என்பதையும் மதத்தின் பெயரால், உயர்வு, தாழ்வு கற்பித்துக் கொண்டு மக்கள் சின்னாபின்னமாகி விடுவதையும் நம் நாட்டில் மட்டுமின்றி ஏனைய உலக நாடுகளிலும் பரவலாக நம்மால் காணமுடிகின்றது.
ஒரு மனிதனின் தோலின் நிறத்தை வைத்து அவன் தாழ்ந்தவன் என்றும் மற்றவன் உயர்ந்தவன் என்றும் சொல்லப் படுவதைப் பார்க்கின்றோம். இத்தகைய வேறுபாடுகள் ஓழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த வேறுபாடுகள் ஓழியும்? இத்தகைய வேறுபாடுகள் ஒழிவதற்காக உலகத்தில் இதுவரை தீட்டப்பட்டு வந்துள்ள திட்டங்கள் வெற்றியடைந்திருக்கின்றனவா எனில் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.
இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் மனிதன், தான் கடவுளுக்கு 'அடிமை' என்பதை உணர வேண்டும். ஒப்புக் கொள்ளவும் வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவன் தான் இன்னொருவனைவிடச் சிறந்தவன் என்று கூறமாட்டான் கூறவும் முடியாது.
நானும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றேன், நான் யாரைத் தாழ்ந்தவன் என்று நினைக்கின்றேனோ, அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கிகன்றான். நான் யாரை உயர்ந்தவன் என்று கருதுகின்றேனோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான். ஆக எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்பும் போது பிறப்பின் அடிப்படையில் ஒருவன் சிறந்தவன் என்றும், மற்றொருவன் கீழானவன் என்றும் சொல்லக்கூடிய ஏற்றதாழ்வுகள் முற்றாகவே அடிபட்டுப் போகின்றன.
இங்ஙணம் அடிப்பட்டுப் போகச் செய்யக் கூடிய கொள்கைத் தத்துவம் தான் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லக் கூடிய வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை என்ற கொள்கைப் பிரகடனமாகும்.
இன்றைக்கு நம் சமூகத்தில் ஒரு மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ அல்லது சிறந்த பதவியை அடைந்துவிட்டாலோ அல்லது அதிகாரம் அவன் கைக்குள் வந்துவிட்டாலோ அல்லது மற்றவர்களைவிட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்துவிட்டாலோ, இவைகளெல்லாம் இல்லாத இன்னொருவன் அவனுக்கு சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் வீழ்ந்து கடக்கின்றான்.
ஆரசியல் தலைவரகளுடைய கால்களில் வீழ்ந்து கிடக்கும் கட்சிகளின் தொண்டர்களையும் செல்வந்தர்களின் பிடிகளில் வீந்திருக்கும் ஏழைகளையும் நாம் கண்கூடாகவே காண்கின்றோம்.
இப்படி எல்லா வகையிலும் சிறந்த ஒருவனை தன் முன்னால் காணும் போது, அவனுடைய கால்களில் போய் வழவேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது அவனுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டுதான் இருக்கின்றான்.
ஆக இப்படிச் செய்வதிலிருந்து மனிதனைத் தடுத்து நிறுத்தி அவன் ஒரு கடவுளுக்கு மாத்திரம் தான் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது. அனைவரும் நம்மைப் போலவே மல, ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் தாம், தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் தாம் என்று எல்லா மனிதனும் நினைக்க ஆரம்பித்து விட்டால், இவைப்போல உள்ள எந்த மனிதனின் காலிலும் விழமாட்டான் மற்றவர்கள் தம் காலில் விழவேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டான்.
இதைத்தான் திருமறைக்குர்ஆன் மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.
'மனிதர்களே! உங்கள் அனைவரையும் ஒரு ஆண் பெண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்!' (அல்குர்ஆன் 49:13)
'மனிதர்களே!' என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்.
உங்கள் அனைவரின் மூலபிதா யார் எனில் ஒரு ஆண்தான், உங்கள் அனைவரின் மூலத்தாயும் ஒரு பெண்தான். இன்னும் தொடர்ந்து அல்லாஹ் கூறுகின்றான்.
ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களை குடும்பங்களாகவும் (கிளைகளாகவும்), கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள், உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத்தான்.(அல்குர்ஆன் 49:13)
'உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல' என்று குர்ஆன் பிரகடனம் செய்கிறது.
இதனை லாயிலாஹா இல்லல்லாஹ்'வின் விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விடுமேயானால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஓழிந்து போய்விடும்.
இதனை இஸ்லாம் ஒரு தத்துவமாக மட்டும் சொல்வதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாது. இன்றைக்கும் இஸ்லாம் இதை நடைமுறைப்படுத்திக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்
கேட்பதற்கு இனிமையான தத்துவம் என்று மாத்திரம் அல்லது நடைமுறைப்படுத்தப்பட முடியாத வறட்டு தத்துவம் என்று மாத்திரம் நினைத்துவிடக்கூடாது. இந்தக் கொள்கை ஒருவனுடைய உள்ளத்தில் நுழைந்த பிறகு ஒருவனுடைய ஜாதியையும் அவனுடைய கோத்திரத்தையும் அவனுடைய பூர்வீகம் என்ன என்பதையெல்லாம் கவனிக்கவே மாட்டான். இந்தக் கொள்கையை ஏற்றுவிட்டால் என்னுடைய சகோதரன் என்று ஒவ்வொரு முஸ்லிமும் எண்ணி அவனிடம் கண்ணியமாக நடந்து கொள்வான்.
பள்ளிவாயில்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். இந்த நாட்டினுடைய ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின்னால் வந்தால் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும். வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்கள் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்கமாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்தங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படி கேட்டால் வெளியே போ! என்று சொல்லும் அளவிற்கு இந்த சமுதாயம் பண்பட்டு இருக்கிறது.
- இந்த பண்பாட்டைக் கொடுத்தது எது?
- அவர்களை இப்பழ உருவாக்கியது எது?
சுயமரியாதையைப் போதித்த ஒரே மார்க்கம்
இதற்குச் சான்றாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மூஆத் (ரலி) என்ற ஒரு நபித்தோழர் இருந்தார். அவர் ஒரு நாட்டிற்குச் சென்றிருந்த போது அங்கே அரசவையில் ஒரு காட்சியைக் காண்கின்றார். அதாவது, அங்குள்ள மன்னருக்கு மக்கள் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து மரியாதை செய்யக் கூடிய காட்சியைப் பார்க்கின்றார். உடனே அவர் நாமும் நபி (ஸல்) அவர்களை சந்தித்த உடன் இதே போன்று செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு மதீனாவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைகிறார்.
'அல்லாஹ்வுடைய தூதரே! நான் பல நாடுகளுக்கும் சென்றிருக்கின்றேன். அங்குள்ள மக்கள் அங்குள்ள மன்னர்களுக்கு சாஷ்டாங்கம் செய்யக் கூடிய நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கக் கூடிய காட்சியை நான் கண்டிருக்கின்றேன் என்று மூஆத் (ரலி) கூறினார்கள். மேலும் அந்த மன்னர்களைவிட உங்களுக்கு அதிகமான தகுதி இருக்கின்றது. அவர்களைவிட நாங்கள் அதிகமாகவே மதிக்கிறோம். உங்களுக்கும் நாங்கள் அதே மரியாதையை செய்கிறோம்'. என்று கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) கூடாது. அல்லாஹ்வுடைய தூதராக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதை மார்க்கம் தடுக்கின்றது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் இந்த மரியாதையை செய்ய வேண்டுமென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்த வரலாற்றை நாம் இன்றும் காண்கின்றோம்.
இது மட்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். 'நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழந்து நிற்கமாட்டோம். காரணம் இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆகவே நாங்கள் அமர்ந்திருக்கும் ஒரு சபைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தால் நாங்கள் எழுந்து நிற்பதில்லை' என்று அனஸ் (ரலி) கூறுகிறார்கள் (நூல்: அஹ்மத்).
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கூட எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்கு அடிப்படைக் காரணம் 'லாயிலாஹ இல்லல்hஹ்' (வணக்கத்திற்கு சொந்தக்காரன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்ற ஏகத்துவ அடிப்படைக் கொள்கைதான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு உயர்ந்த அந்தஸ்தை அடைந்த பின்னரும் அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசாகவும் இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்களிலெல்லாம் வலுமிக்கதாக இருந்தது.
ஆக இவ்வளவு உயர்நத நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும் - ஏன் தமக்காக எழுந்து நிற்பதையும் கூட நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை என்று சொன்னால் அதற்கு காரணம் என்ன? 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை' என்று அவர்கள் பிரச்சாரம் செய்ததே. அந்த பிரச்சாரத்தில் மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்தது கொண்டார்கள் என்பது தான் உண்மை.
4 comments:
christianity is the only true religion
சகோதரா உங்கள் கூற்று தவறு என்பதை ஏகத்துவம் தளம் நிரூபித்துக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து உங்களைப்போன்ற கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச்சொல்லும் இன்ஷா அல்லாஹ்... நீங்கள் கிறிஸ்தவத்தின் உன்மை நிலையை அறிய ஏகத்துவம் தளத்தில் இந்த பகுதிக்குச் சென்றால் உன்மை விளங்கும்
http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_05.html
AR.HIDAYATHULLAH..1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.
குறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படியானால் யார் அவர்கள்?
தாழ்த்தப்பட்ட மக்கள் தானே!
வெள்ளாள கிறிஸ்துவர், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ தேவர், நாடார் கிறிஸ்துவர், வன்னிய கிறிஸ்துவர் இவர்களுக்குக் கீழே தலித் கிறிஸ்துவர். இப்படியாக கிறிஸ்துவ மதம்.
ஜாதியையே தன் உருவமாகக் கொண்டது இந்து மதம்.
இந்த இந்தியச் சூழலில், நேரடியான ஜாதி அடையாளங்கள் அற்று இருக்கிறது இஸ்லாம்.
எப்படி அவர்களுக்கு மட்டும் இது முடிந்தது?
சுயம்பு சிந்தனையாளர்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா? சிந்தித்த பிறகு அதை இந்த உலகிற்கு அறிவிப்பார்களா?
பார்ப்போம்.
எழுச்சி தலித் முரசு ஆகஸ்ட் 2002
.
அன்பர் இங்கு கூறியிருப்பது அவரின் மற்றும் அவர்களின் மதத்தவர்களின் அறிவுக்கு தோன்றியதை கூறியிருக்கிறார். ஆனால் மனிதன் இன்னும் வெளிச்சத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டு இருளிலே வாழ்கிறான், ஆறறிவுடைய மனிதன் இன்றளவும் தன் மூளைக்கு எட்டியவற்றை பேசுகிறானே தவிர மற்ற ஒன்றுமில்லை.
உண்மையில் நாம் பின்பற்றும் மதம், நாம் வணங்கும் கடவுள் அனைவரையும் காண்கிறோம், ஆம் இந்துமதம் உண்மையை கூறுகின்றது, கடவுள் இல்லை என்று யார் சொன்னது, கடவுளுக்கு ஏன் உருவம்மில்லை, உருவம் இருக்கிறது, அட மானிட இன்னும் உன் அறிவுக்கு எட்டவில்லையா? குடும்பம் தான் கோயில், தாய் தான் தெய்வம், இன்னுமும் தெரியவில்லை என்றால் கண் இருந்தும் மூடகளைப்போல இருங்கள், ஒருவன் தினமும் காலையில் தனது தாய் தந்தையின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறவன் இவுலகத்தில் அனைத்தயும் பெறுகிறவன், இத்தகைய பண்புகள் உடையவன் மட்டுமே உலகில் குறைந்ததளவு செல்வம் இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ முடியும், இப்பண்புகள் இல்லாமல் அவன் பெரும் செல்வந்தராக இருந்தாலும் அவனால் இவுலகத்தின் மகிழ்ச்சியை பெற முடியாது. இவை இந்து மதத்தின் அடிப்படை நோக்கமாகும், குடும்பமே கோவில், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதைப்போல உயிருல்ல வரிகள் உண்டு. "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை" அன்பே சிவம்,நாம் அனைத்தையும் காண்கிறோம், உணர்கிறோம்.முஸ்லிம் கிருஸ்த்தவ மதம் இந்துமதத்தை நன்கு கற்று உணருங்கள், உண்மை உங்களுக்கு விளங்கும். இவுலகமே இயங்குவது இந்துமதத்தின் அடிப்படையில்.
Post a Comment