அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, July 04, 2008

மாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்!

'என்ன கொடுமை சார் இது! '
'மாதவிடாய்' என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் பைபிள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி கூறுவது என்ன தெரியுமா?

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக. அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும். ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்ள. அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக. அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடார வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். (லேவியராகமம் - 15:19-30 )
இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றியும் அது ஏற்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் பற்றியும் பைபிள் எந்த அளவுக்கு இழிவாய் கூறுகிறது என்று பார்த்தீர்களா? தேவைப்படும்போது பெண்களை அனுபவித்து விட்டு 'அந்த' நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

அவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட அந்த பொருட்களைத் தொட்டவனுக்கும் தீட்டு, அந்த பெண்ணால் தீட்டான அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர் போல தீட்டு தொடர்கிறது.

இதைவிடப பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? 'அந்த' நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்கூட கர்த்தர் உணரவில்லையா? அல்லது கர்த்தரின் பெயரால் இவையெல்லாம் இட்டுக்கட்டப்பட்டதா?

கிறிஸ்தவ பெண்களே! இந்தக் கொடுமையான வசனங்கள் உங்களைச் சிந்திக்க தூண்டவில்லையா? கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா?

மாதவிடாய் முடிந்து எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது தகனப்பளியாக விட வேண்டுமாம். அதுவும் பக்தர்களிடம் காணிக்ககைளில் வாழும் புரோகிதக்கும்பளின் மூலம் தான் செய்ய வேண்டுமாம். பைபிளை சிதைத்த யூத புரோகிதக்கும்பல் தங்களின் வருமானங்களுக்காக எந்த அளவுக்கு கீழ்த்தரமாக எழுதிவைத்துள்ளார்கள் என்று பார்த்தீர்களா?

கிறிஸ்தவ உலகில் எந்தக் கிறிஸ்தவராவது இதை கடைபிடித்து ஒழுக முடியுமா? மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்த போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச் சொல்லியிருக்க் முடியாது. ஆனால் கர்த்தர் தான் சொன்னார் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் சகோதர சகோதரிகளே!

பெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில்தான் இது போன்ற கருத்துக்கள் உருவாகியிருக்க முடியும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.


மாதவிடாய் பெண்களை இஸ்லாம் எவ்வாறு நடத்துகிறது?

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் நீர் கூறும்: 'அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும் ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உடலுறவுக்கு) அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.' (அல் குர்ஆன் 2 : 222)

இதற்கு விளக்கமாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தே காட்டியதாக நபிமொழிகள் நமக்கு சான்று பகர்கின்றது.

'யூதர்கள் தங்களின் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களுக்கு தங்களுடன் உணவு உண்ணவோ தங்களது வீடுகளில் கலந்து (தங்களோடு) சேர்ந்து குடியிருக்கவோ விடமாட்டார்கள். (வீட்டுக்கு வெளியில் தனிமையில் ஆக்கிவிடுவார்கள்). ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றி கேட்க, மாதவிடாய் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள், அது அருவருக்கத்தக்கதாகும் என (நபியே) நீங்கள் கூறுங்கள். ஆகவே, மாதவிடாயின் போது அப்பெண்களை (தாம்பத்திய உறவிலிருந்து) விலக்கிக் கொள்ளுங்கள் என்ற (குர்ஆனின் 2:222) வசனத்தை அதன் கடைசிவரை-கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய-அல்லாஹ் இறக்கி வைத்தான். (இவ்வசனத்தில் கூறப்பட்ட நிலையை தெளிவு செய்யும் நிமித்தம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மாதவிடாய் பெண்களோடு தாம்பத்திய உறவு நீங்கலாக எல்லாவற்றையும் செய்யுங்கள் எனக்கூறினார்கள். இக்கூற்று யூதர்களுக்கு எட்டியது (அதற்கவர்கள்) நம் காரியத்தில் நமக்கு மாற்றம் செய்வதை தவிர, அவர் எதையும் விட்டுவைக்க விரும்புவதில்லை எனக்கூறினர். உஸைத்பின் அல்ஹுளைரும், அப்பாது பின் பிஷ்ரும் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக யூதர்கள் மாதவிடாய் வரும் பெண்கள் பற்றி இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆகவே அப்பெண்களை நாம் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? என்றனர். இதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவர் மீதும் சினங்கொண்டு விட்டார்களோ? என நாங்கள் எண்ணும் வரை அவர்களின் முகம் மாறியது (அதை உணர்ந்த) அவ்விருவரும் வெளியேறிவிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

நூல் : முஸ்லீம் (171)

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு ஆயிஷாவே! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்து கொடு என்று கூறியதற்கு (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் நிச்சயமாக நான் மாதவிடாய்க்காரியாக இருக்கிறேன் எனக்கூற (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை எனக்கூறினர். அப்போது அத்துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக்கொடுத்தனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : முஸ்லீம் (172)
நான் மாதவிடாய் வந்தவளாக இருக்கும் நிலையில் என் மடிமீது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்தவாறு திருகுர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

நூல் : முஸ்லீம் (175)

மாதவிடாய் வந்துள்ள பெண் எந்த விதமான தொற்றும் அசுத்தத்தையும் தன்னுள் கொண்டிருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. அவள் 'தீண்டத்தகாதவளோ அல்லது சபிக்கப்பட்டவளோ அல்ல என்று ஆணித்தரமாக சொல்கிறது இஸ்லாம். அவள் தன்னுடைய தினசரி வாழ்க்கையை வழக்கம்போல் ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாட்டுடன் நடத்துகிறாள்: அதாவது அவள் திருமணமானவளாயிருந்தால் அவள் கணவனுடன் உடலுறவு கொள்ளக்கூடாது. அதைத் தவிர மற்ற எல்லா உடல் தொடர்புகளும் தொடுவதற்கு அனுமதிக்கப்பட்டவையே. மாதவிடாய் ஏற்படும் கால கட்டத்தில் மட்டும் பெண் தொழுவது நோன்பு வைப்பது போன்றவைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறாள். காரணம் இந்த நேரங்களில் இவ்வாறான விஷயங்கள் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பாதாலேயே நம்மைப் படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
.

0 comments: