இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும்.
சகோதரியின் கேள்வி: -
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார். இது திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல்...