இன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்...
கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களுக்கு ஆசிரியர் என்று நம்பப்படுபவர்...
இயேசுவே அறியாத பல புதிய கொள்கைகளை அவரின் பெயராலேயே போதித்தவர்...
இவர் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமோ அதன் கொள்கைகளோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மதத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்...
இயேசு, சத்தியத்தை உரத்து போதித்தார் என்பதன் காரணமாக யூதர்களின் கொலை வெறிக்கு ஆளாகி (பைபிளின் படி) சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை,...