கிறிஸ்தவ தளத்துக்கு பதில்
.
.
பைபிளின் மீது முஸ்லிம்களால் வைக்கப்படும் எண்ணிலடங்கா முரண்பாடுளுக்கும் - குழப்பங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு எப்படியேனும் குர்ஆனின் மீது குற்றம் சுமத்தியாகவேண்டும் அதில் எப்படியாவது முரண்பாடுகளைக் கண்டுபிடித்து அவர்களை திணரடித்துவிட (?) வேண்டும் என்ற நோக்கத்துடன் சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷினரிகளால் குர்ஆனில் முரண்பாடு என்று தங்கள் தளங்களில் பதிவுகள் வெளியிடப்படுகின்றது. அதில் நோவா (நூஹ் நபி) சம்பந்தப்பட்ட பதிவை உமர் என்ற கிறிஸ்தவர் 'குர்ஆன் முரண்பாடுகள் - நோவாவின் வயது' என்ற தலைப்பில் ஆங்கிலத் தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருந்தார். அதாவது குர்ஆன் நோவாவின் வயதை சொல்வதில் முரண்படுகின்றதாம்..
இவர்கள் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்த - பலவீனமான விமர்சனங்களை குர்ஆனின் மீதும் இஸ்லாத்தின் மீதும் வைக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஒன்றே சரியான சான்று. அவர்கள் கண்டுபிடித்துள்ள அதிபாயங்கரமான - இடியாப்ப சிக்கல் நிறைந்த (?) முரண்பாட்டை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
Quote:
பைபிளிலும் மற்றும் குர்ஆனிலும் சொல்லப்பட்ட நோவாவின் கதையை ஒருவர் படித்தால், கீழ் கண்ட விவரங்களை அவர் காண வேண்டி வரும்.
ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான்.நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)
மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)
நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.
சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது
நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது
வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள 'அவர்கள் மத்தியில்' என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள 'அவருடைய சமூகத்தாரிடம்' என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.
என்ன அபாரமான கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எப்படி அலசி ஆராய்ந்து முரண்பாட்டைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதை பார்த்தீர்களா? குர்ஆனில் 29:14ம் வசனத்தில் முரண்பாடாம். எங்கே முரண்பாடு வருகின்றது? இந்த வசனத்திற்கு எதிரான - முரண்பட்ட குர்ஆன் வசனம் எது? ஒன்றுமே கிடையாது. 'காமாலைக் கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சல்' என்பது போல, குர்ஆனில் எங்கேயாவது முரண்பாடு கிடைக்குமா? என்று தேடியவருக்கு இந்த வசனம் முரண்பாடாக தெரிந்துவிட்டது போலும்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :
மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;. ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)
இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் இரண்டு விஷயங்களை தெளிவு படுத்துகின்றான். ஒன்று நூஹ் (அலை) அவர்களின் மொத்த வயது. மற்றொன்று அவர்கள் காலத்தில் நடந்த பெரு வெள்ளம்.
இதில் என்ன முரண்பாட்டை இவர்கள் கண்டுவிட்டனர்? அல்லாஹ் தனது திருமறையில் 'நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் (அதாவது 950 ஆண்டுகள்) தங்கியிருந்தார்' என்கிறான். 'அவருடைய சமூகத்தார்' என்றால் யார்? நூஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டவர்களையும் குறிக்கும், நிராகரித்தவர்களையும் குறிக்கும், பெருவெள்ளத்திற்கு பின் மீதமிருந்தவர்களையும் குறிக்கும். மொத்தத்தில் அச்சமூகத்தார் என்பது நோவா உயிருடன் இருக்கும் பொழுது அவருடன் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் என்பது பாமரனுக்கும் விளங்கும்.
இதில் என்ன முரண்பாடு இருக்கின்றது?
இவர்களது அபார கண்டுபிடிப்பு (?) என்ன வென்றால், குர்ஆனின் இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள 950 வருடம் என்பது வெள்ளப்பிரளயம் வரையிலும் தான் குறிக்கும், அவர்களின் முழு வயதையும் குறிக்காது. எனவே இது முரண்பாடான வசனம் என்கிறார். இது தான் இவர் சொல்லவரும் கருத்து. அதை மற்றுமொரு இடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:
Quote:
இந்த குர்ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்
ஒரு வாதத்திற்காக இவர் விளங்கி இருப்பது போன்றே வைத்துக்கொள்வோம். இவர்களின் அபார கண்டுபிடிப்பின் படி இந்த வசனம் வேறு எந்த குர்ஆன் வசனத்துடன் முரண்படுகின்றது? அதையல்லவா தெரிவித்திருக்க வேண்டும். முரண்பாடு என்றால் என்ன? ஒரு வசனம் மற்றோர் வசனத்திற்கு முரண்பட வேண்டும்.
ஒரு குர்ஆன் வசனத்தில் நூஹ் (அலை) (நோவா) அவர்களின் மொத்த வயதே 950 என்று சொல்லிவிட்டு மற்றோர் குர்ஆன் வசனத்தில் பெரு வெள்ளம் நிகழ்ந்த பொழுது அவர்களது வயது 950 என்று சொல்லியிருந்தால் முரண்பாடு எனலாம். மாறாக, எந்த ஒரு வசனத்தையும் காட்டாமல் குர்ஆனின் இந்த 29:14ம் வசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு குர்ஆனில் முரண்பாடு, முஹம்மது (ஸல்) அவர்கள் ஞாபக மறதியால் சொல்லிவிட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? சற்று சிந்திக்க வேண்டாமா? முரண்பாடு என்று சொல்வதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?
உமர் அவர்களே! உன்மையில் முரண்பாடு என்றால் என்னத்தெரியுமா? இதோ உங்கள் பைபிளை வைத்தே நீங்கள் குறிப்பிட்டுள்ள நோவாவின் வயதை வைத்தே விளக்குகின்றேன் படியுங்கள்:
பைபிளில் கர்த்தர் சொல்லுகின்றார்:
அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். - ஆதியாகமம் 6:3
இந்த வசனத்தில் மனிதன் உலகத்தில் வழப்போகிற நாட்கள் மொத்தமே 120 வருடம் தான் என்று பைபிள் குறிப்பிடுகின்றது. ஆனால் நோவா வாழ்ந்ததோ 950 வருஷம் என்று ஆதியாகமம் 9:29 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? மனிதனின் மொத்த ஆயுளே 120 தான் என்றால், பின்னர் எப்படி நோவா 950 வருடம் வாழ்ந்தார்? ஒரே ஆகாமத்தில் - ஒரே ஆசிரியரால், அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதப்பட்ட பைபிளில் இப்படிப்பட்ட முரண்பாடு வராலமா? உன்மையிலேயே கர்த்தரால் தான் இந்த வசனங்கள் அருள்பட்டிருந்தால் இந்த முரண்பாடு வருமா? இல்லை எழுதியவருக்கு ஞாபகக் குழப்பமா?
அடுத்து அதே ஆதியாகமத்தில் அதற்கடுத்த வசனத்தில் உள்ள முரண்பாடுகளைப் பாருங்கள் உமர் அவர்களே:
பைபிள் கூறுகின்றது : தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. - ஆதியாகமம் 6:6
கர்த்தர் தான் மனிதனையே படைத்தார். அவன் என்னென்ன செய்வான் உங்களைப் போன்றவர்களெல்லாம் வசனங்களைத் திரித்தும் மாற்றியும் எப்படி எல்லாம் அப்பாவிக் கிறிஸ்தவர்களை ஏமாற்றுவார்கள், முரண்பாடு இல்லாததை எப்படி எல்லாம் முரண்பாடு என்று சொல்லுவார்கள் என்பதை எல்லாம் முற்றும் அறிந்த கடவுள் நாம் ஏன் மனிதனைப் படைத்தோம் என்று மணஸ்தாபப்படுவாரா? கடவுள் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறியாத பலவீனரா? ஆனால் அப்படி பலவீனரைப்போன்று தெரியாமல் படைத்துவிட்டோமே என்று மனஸ்தாபப்பட்டார் என்று பைபிள் கூறுகின்றது. இந்த வசனத்திற்கு நேர் முரணாக பைபிளில் உள்ள மற்ற வசனங்களைப் பாருங்கள்:
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன் நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - எசேக்கியேல் 24:14
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19
கர்த்தர் மனஸ்தாபப்படுவாரா? மாட்டாரா? ஆனால் மேலே ஆதியாகமம் 6:6ம் வசனத்தில் அவர் மனிதனைப் படைத்ததற்காக மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இங்கே உள்ள வசனங்களில் மனஸ்தாபப் பட அவர் என்ன பலவீனங்கள் நிறைந்த மனிதனா என்கிறது? எதுய்யா சரி?
இவைதான் உங்கள் பைபிளின் லட்சனம். (இது வெறும் Sample முரண்பாடுகள் தான். விரைவில் தொடர்ந்து வரும்) இப்படி முரண்பட்ட புத்தகத்தைத் தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த பைபிளை வைத்துக்கொண்டு குர்ஆனில் முரண்பாடு என்கிறீர்கள். முரண்பாடு என்றால் என்னவென்று முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். பின்னர் முரண்பாட்டைப் பற்றி எழுதுங்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள்.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
8 comments:
இந்த போலி உமர் முன்பு குர்ஆனில் கிறிஸ்துமஸ் என்று ஒரு பதிவை போட்டார். என்னடா குர்ஆனில் கிறிஸ்துமாஸா? இவர்கள் கொண்டாடும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் குறித்து இவர்களின் பைபிளில் கூட இல்லையே என்று கட்டுரையைப் பார்த்தால் தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்மந்தமே இல்லை. இவர் போடும் பதிவுகள் இப்படி வெறும் பிதற்றல்களாகவே இருந்து கொண்டிருக்கிறது. சில கிறிஸ்தவர்களை திருப்பதிப்படுத்துவதற்காக இப்படி புத்தி பேதலித்துப் போய் பதிவுகளை இடுகின்றார். நண்பர் அபூநூறா சொன்னது போல யானைக்கு ஆட்டுக்குட்டி பிறந்தது என்று உளறுபவனைப் போல் உள்ளது போலி உமரின் பதிவுகள். தொடருங்கள் அபூஇப்ராகீம்! வாழ்த்துக்கள்.
ஐயா, நீங்கள் பல காரனங்களை சொல்லி
உங்கள் வாக்குவாதத்தை நியாயப்படுத்தினாழும், உங்கள் நபிகள் நாயகம், ஏன் தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் கொள்ள விரும்பினார் என்ற கூற்று அவர் ஒரு காம வெரியற் என்பதை தானே பிரதிபலிக்கிறது.
அன்புச்சகோதரரர் பிரான்சிஸ் சைமன் அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக,
தாங்கள் கேட்டுள்ள கேள்விக்கான பதிலை ஏற்கனவே நாம் ஏகத்துவம் தளத்தின் மூலம் மிக விரிவாக பதில் அளித்துள்ளோம். அதைப் பார்வையிடவும் :
பெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்.. அவதூறுகளும்... விளக்கங்களும்...
நபிகள் நாயகம் காமவெறியரா? இயேசு திருமணம் முடிக்காதவரா?
இது போன்ற இஸ்லாத்தின் மீதான உங்களது சந்தேகங்களை தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். நீங்கள் நேர்வழியடைய ஏக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்புடன்,
அபூ இப்ராஹீம், சென்னை
அப்படியே முன்னாள் கிருத்துவரும், இந்நாள் இஸ்லாமியருமாகிய இந்த சகோதரர் கூறுவதை கேளுங்கள்.
http://www.masjidomar.com/media/video?task=videodirectlink&id=80
வஸ்ஸலாம்.
எந்த புத்தகத்தை கொண்டு வந்து வைத்தாலும் அது தோற்று தான் போகும். காரணம் இது அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் ஆகும்.அது சவால் விடுகிறது மனித இனத்துக்கு ஒரு முரண்பாட்டையும் இந்த வேதத்தில் காணமுடியாது. மேலும் இது பாதுகாக்கப்பட்ட ஏடு. இன்னொன்று சாதாரண மனிதனால் எழுதப்பட்ட காவியங்களுக்கும், கவிதைகளுக்கும், மற்றும் கதை புத்தகத்திற்கு கூட ஈடு கொடுக்கமுடியாத நிலையில் உள்ள பைபிளை எப்படி ? திருக் குர்ஆனுடன் ஒப்பீட்டுப்பார்ப்பது. அந்த தகுதி அதற்கில்லை.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
நோவாவின் வரலாறு என்ற தலைப்பில் நடக்கும் விவாதத்தில் சில்சாம் என்ற கிறிஸ்தவர் குறிப்பீட்டுள்ளதை பாருங்கள்.
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=1565&postdays=0&postorder=asc&start=15
அன்பு நண்பர் (அழகு?)மனோ அவர்களே.,
எசேக்கியேல்.23 மற்றும் 16 -ஐயும் எபிரெயர்.7:9,10
ஆகிய வேத வசனங்களை வாசித்ததில்லையோ..?
அதையும் காப்பி பேஸ்ட் செய்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் எனவே தவிர்க்கிறேன்..!
தங்களுடைய பரிசுத்த(?) வேதாகமத்தில் வரும் வசனங்களை பதிவேன் ஆனால் வருத்தப்படுவீர்கள் என்பதால் தவிர்க்கிறேன் என்கிறார். சக கிறிஸ்தவருக்கு சொல்லும் பதிலை பாருங்கள். மேலும் அங்கு விவாதத்தை ஆரம்பித்து வைத்த நண்பருக்கு இதுவரை யாரும் சரியான பதிலை தரவில்லை அவருடைய கேள்விக்கு பதிலை தராமல் அதற்குள் குரானிலிருந்து முரண்பாடுகளை கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டார் உமர் என்ற கிறிஸ்தவர். பாவம் அங்குள்ள கிறிஸ்தவ நண்பர்கள் அந்த உமர், நான் வெள்ளை காகத்தை பார்த்தேன் என்று சொல்வாரானுலும் கூட, உமர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பார்கள்.தங்களுடைய வேதத்தை விட உமரை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். மேலும் இன்னொரு நண்பர் சொல்கிறார் விவாதத்தில் வைக்கப்பட்ட கேள்விக்கான பதிலை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களாம்.
issacsindhu page 4.
3. உலக வரலாற்றில் இதுவரை மொத்த உலகமும் நீரில் மூழ்கடிக்கப்பட்டதாக ஆதாரம் உள்ளதா?
அதைப் பற்றிய ஆராய்ச்சி நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பூமி 1வருடம் தண்ணீர்க்குள் இருந்ததை அறிவியல் ஆராய்ச்சியளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்
அவர்களுடைய வேதம் முரண்படுவதை விட அதை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் தரும் விளக்கத்தில் ஒருவருக்கொருவர் முரண்படுவது வேடிக்கையாக உள்ளது.
அமீர்.
மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே...
பைபிளின் முரண்பாடு என்றால் என்ன என்பதற்கு ஒரு சிறு உதாரணம். இது போன்று பல்லாயிரக்கணக்கான முரண்பாடுகளை பைபிளிலிருந்து காட்டலாம். Sample க்கு இதை பார்க்கவும்.
ஆதியாகமம்: 6
8. நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.9. நோவாவின் வம்சவரலாறு, நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
அதாவது 6வது அதிகாரத்தில் நோவா தேவனோடு நெருக்கமாக இருந்தார், நீதிமானாக இருந்தார் என்று சொல்லிவிட்டு
ஆதியாகமம்: 9
20. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.21. அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
9 வது அதிகாரத்தில் குடித்து விட்டு கண்,மண் தெரியாமல் நிர்வாணமாக விழுந்து கிடந்தார் என்கிறது பைபிள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட சொல்லிவிடுவான் இது முரண்பாடு என்று ஆனால் இந்த உமர் அன் கோ வுக்கு இது புரியவில்லையே. இவர்களை எந்த ரகத்தில் சேர்த்து கொள்வது.
இந்த லட்சணத்தில் இவர்கள் குரானிலிருந்து முரண்பாடுகளை கண்டுபிடித்து விட்டதாக சொல்லிக்கொண்டு திரிவதை பார்த்தால் இவர்களை பார்த்து சிரிப்பதா? அல்லது வேதனைப்படுவதா?
அமீர்.
Post a Comment