அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, March 16, 2009

புனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு (பாகம் - 2)

வெட்ட வெளிச்சமாகும் போலி உமரின் போலித்தனங்கள்!


இஸ்லாமிய அறிஞர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், இயேசுவின் சிலுவை மரணம் பற்றி எழுதிய புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை 'கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை' என்ற தலைப்பில் சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் வெளியிட்டது.

அந்த கட்டுரைக்கு பதில் என்ற பெயரில் உமர் என்ற கிறிஸ்தவர் ஆங்கிலத் தளத்திலிருந்து எடுத்து மொழிப்பெயர்த்து வெளியிட்ட கட்டுரையின் முதல் பகுதி எந்த அளவுக்கு முரண்பாட்டையும், குழப்பத்தையும் கொண்டிருந்தது என்பதை 'உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)' என்ற எமது பதில் கட்டுரையின் மூலம் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தோம்.

இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) வெளியிட்ட அந்த கட்டுரையில் இயேசு முன்னறிவித்ததாகச் சொல்லப்படும் மற்றொரு அடையாளமான 'இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தபின் 3 நாள் கழித்து உயிர்த்தெழுவார்' என்ற அதிசயம் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துபோகாததுடன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டு என்பதையும் நிரூபித்திருந்தார்கள். அதையும் தனது மொழிப்பெயர்ப்புக் கட்டுரையின் மூலம் அந்த கிறிஸ்தவர் மறுத்திருந்தார்.

அந்த மறுப்புக்கட்டுரையில் எந்த அளவுக்கு பொய்கள் அவிழ்த்துவிடப்பட்டிருந்தது என்பதை விளக்குவதற்கு முன்பாக புனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு என்ற கட்டுரையின் மூலம் இயேசுவின் சிலுவை நம்பிக்கையில் உள்ள தெளிவான முரண்பாட்டை கூடுதல் ஆதாரங்களுடன் ஏகத்துவம் தளத்தில் விளக்கமளித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக கிறிஸ்தவர்களின் அந்த மறுப்புக்கட்டுரையின் ஆசிரியரும் அதை மொழிப்பெயர்ப்பு செய்த உமர் என்பவரும் விளக்கம் என்றப் பெயரில் செய்துள்ள தில்லு முல்லுகளை இனி காண்போம்.

அந்த மறுப்புக் கட்டுரையில் இந்த கிறிஸ்தவர், அஹமத் தீதாத் அவர்கள் இந்த ஆய்வில் தவறு செய்துவிட்டதாகவும், முதல் நூற்றாண்டு காலத்தில் இருந்த எபிரேயு பேச்சு வழக்கத்திற்கும் 20ம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கான தவறிவிட்டதாகவும், இதே போன்று தொடர்ந்து அவர் தவறு செய்வதாகவும், அந்த தவறை இவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும் (?) குற்றம் சாட்டுகின்றார்.
Quote:

தீதத் அவர்கள், முதல் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த எபிரேய பேச்சு வழக்கத்திற்கும், இந்த இருபதாம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை காண தவறிவிட்டார். தீதத் அவர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், இந்த தவறை அடிக்கடி செய்கிறார் என்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.
மற்றோர் இடத்தில், யூதர்கள் எப்படி இரவு பகல் மற்றும் நாட்களை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளாமல், யூதர்கள் பேச்சு மற்றும் எழுதும் வழக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமல் அஹமத் தீதத் அவர்கள் மிகப்பெரிய தவறை (serious mistake) செய்துள்ளார்கள். அதே போல, இயேசு, தான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கல்லரையில் இருப்பேன் என்றுச் சொன்ன தீர்க்கதரிசனைத்தைப் பற்றி தீதத் அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை செய்துள்ளார்கள்.

இப்படி தவறாக கணித்துவிட்டதாக அறிஞர். அஹமத் தீதாத்தின் மீது குற்றம் சுமத்தும் இவர், உன்மையில் அந்த நாள்கணக்கை எப்படி எடுக்கவேண்டும் - எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகின்றார்:

அதாவது, அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர், இந்த உண்மையை தீதத் அவர்கள் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள். இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார், மற்றும் சனிக்கிழமை முழுவதும் கல்லரையில் இருந்தார், மறு நாள் அதாவது ஞாயிறு அன்று காலை உயிரோடு எழுந்தார். அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் படி, இயேசு மூன்று நாட்கள் கல்லரையில் இருந்தார்.

மற்றோர் இடத்தில், நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, 'மூன்று நாட்கள் இரவும் பகலும்' என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை நாம் அந்த வார்த்தைகளின் பொருளை, அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்த எபிரேய மொழி எழுத்து மற்றும் பேச்சு வழக்கப்படி பொருள் கூறாமல், அன்று இருந்த வழக்கப்படி சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இன்று நாம் பேசும் மொழியின் இலக்கணத்தின் படி, வேறு ஒரு மொழியின் அமைப்புப் படி பொருள் கூற முயலுவது தவறாகவே முடியும்
இன்னுமோர் இடத்தில், அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும் (Figure of Speech in the Hebrew). இப்படிப்பட்ட பேச்சு வழக்க வார்த்தைகளைப் பற்றி ஆராயும் போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட உவமானத்திற்கு(figures of speech), அதை சொன்னவர் என்ன பொருளில் கூறினார் என்பதை தெரிந்துக் கொள்ளாமல், இன்று நாம் அதற்கு சரியான பொருளை கூறமுடியாது. இயேசு சொன்ன அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு அந்த காலகட்டத்தில், அந்த காலச்சூழலில்(Context) என்ன பொருள் இருந்தது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எபிரேய மொழியில் சொல்லப்பட்ட அந்த பேச்சு / எழுத்து வழக்கில் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் கவனித்தோமானால், இரவும் பகலும் என்றுச் சொல்லும் போது, இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். அதாவது எத்தனை இரவுகளோ அத்தனை பகல்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்

மற்றோர் இடத்தில், ஆக, யூதர்களின் வழக்கப்படி 'மூன்று நாட்கள் இரவு பகல்' என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, இதற்கு பதிலாக முதல் நாளின் ஒரு பகுதியை ஒரு முழு நாளாகவும், மற்றும் மூன்றாம் நாளின் ஒரு பகுதியை ஒரு நாளாகவும் கணக்கிடுவார்கள்

இது இவர் செல்லவரும் கருத்து. அதாவது, இயேசு சொன்னதாக சொல்லப்படும் 3 இரவு 3 பகல் என்று நாம் பிரித்து பார்ப்பதால் அது தங்களது நம்பிக்கைக்கு எதிரானதாக – பைபிளுக்கு முரண்பாடாக - அமைகின்றது என்பதற்காக, அவர்களது குருட்டு நம்பிக்கைக்கு ஏற்றார் போல்தான் பைபிள் வசனத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லவருகின்றார். இது தான் சரியான நடைமுறை என்றும் சொல்லுகின்றார்.

  • அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும்
  • நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, 'மூன்று நாட்கள் இரவும் பகலும்' என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை
  • ஆக, யூதர்களின் வழக்கப்படி 'மூன்று நாட்கள் இரவு பகல்' என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை,
இவர் சொல்வது போன்றுதான் பைபிள் முழுவதும் இருக்கின்றதா? அன்றைய எபிரேயு பேச்சு எழுத்து வழக்கம் அப்படித்தான் இருந்ததா? என்றால் கிடையாது. ஏனெனில் இவர் சொல்வது போல்தான் அன்றைக்கு இருந்தது என்றால் ஒட்டுமொத்த பைபிளிலும் 2 நாள் என்று சொல்லப்படுவதற்குப் பதில் 2 பகல் 2 இரவு என்றும் 3 நாட்களைக் குறிப்பதற்கு 3 பகல் 3 இரவு என்று மட்டுமே வந்திருக்க வேண்டும். அப்படியா வருகின்றதா? உதாரணமாக பின்வரும் வசனங்களை கவனியுங்கள்:

தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான். ஆதியாகமம் - 30:36

நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான். யாத்திராகமம் - 8:27

மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான் அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. யாத்தராகமம் - 10:22

அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள் மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது. எண்ணாகமம் - 10:33

நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபது நாள் மாத்திரமல்ல, ..... - எண்;ணாகமம் - 11:19

ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள். எண்ணாகமம் - 20:29

இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள் மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது. உபாகமம் - 34:8

அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, ... யோசுவா - 9:16

ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான். அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள். நியாயாதிபதிகள் -19:4

இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன். அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம். நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பாவையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை. எஸ்றா - 8:15

இது போல் எண்ணற்ற வசனங்களில் மூன்று நாள், நான்கு நாள் என்றுதான் வந்திருக்கின்றதே யொழிய இவர் சொல்வது போல் 3 இரவு 3 பகல் என்றோ 4 பகல் 4 இரவு என்றோ வரவில்லை? அது தான் அன்றைய நடைமுறை என்றால், ஏன் 3 நாள் 4 நாள் என்று வரவேண்டும்? இந்த வசனங்களும் பழைய ஏற்பாட்டின் எபிரேயு பேச்சு எழுத்து வழக்கில் எழுதப்பட்ட வசனங்கள் தானே? அன்றைய கால பேச்சு எழுத்து வழக்கு நீங்கள் சொல்வது போல் 1 நாளை குறிப்பதற்கு 1 பகல் 1 இரவு என்றும் 2 நாளை குறிப்பதற்கு இரண்டு பகல் இரண்டு இரவு என்று தான் சொல்லப்படும் என்றால் முழு பைபிளிலும் அப்படித்தானே வந்திருக்க வேண்டும்? அப்படி வரவில்லையே? அடுத்து இன்னொரு உதாரணத்தையும் பாருங்கள்:

பதினாராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். மத்தேயு - 20:6

இந்த வசனத்தில் 'பகல் முழுவதும் இங்கே நிற்கிறதென்ன' என்று தான் கேட்டதாக சொல்லப்படுகின்றதே யொழிய 1 நாள் முழுவதும் நிற்கிறதென்ன என்று கேட்டதாக சொல்லப்படவில்லை. இந்த கிறிஸ்தவர் விவாதிப்பது போல் // அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர்,// என்றால் இங்கே ஏன் பகல் முழுவதும் என்று சொல்ல வேண்டும்? ஒரு நாள் முழுவதும் என்று சொல்லியிருக்கலாமே?

பொதுவாக பைபிளின் சில இடங்களில் பகலும் இரவும் (days and nights) என்று பிரித்தார்போல் வருகின்றது. அப்படிப்பட்ட இடங்களில் அதே முறையின் படி பிரித்து தான் பார்க்கவேண்டுமே தவிர, மாறாக அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது, மாறாக ஒரு முழுநாளாகத்தான் கணக்கிடவேண்டும் என்று வாதிடுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

இது ஒருபுறமிருக்க, ஒரு வாதத்திற்காக நாம் இவர் சொல்லும் கருத்தின் படியே வருவோம்.

இவர் வாதப்படி அதாவது 3 பகல் 3 இரவு என்பதை பிரித்துப் பார்க்கக்கூடாது, மாறாக 3 இரவு 3 பகல் என்பதை ஒன்றினைத்து 3 நாள் என்று தான் கணக்கிடவேண்டும் என்கிறார். அதைத்தான் மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள அத்தனை இடத்திலும் அவர் சொல்லவரும் கருத்து. சரி இப்படி பார்த்தாலாவது இவர்கள் நம்பிக்கொண்டிருப்பதன் படி 3 நாள் என்பது சரியாக வருமா? என்றால் அதுவும் கண்டிப்பாக வராது. ஏன் என்றால், பைபிளின்படி ஒரு நாள் என்பது மாலை சூரியன் மறையத்தொடங்கியதிலிருந்து ஆரம்பமாகின்றது. (பார்க்க ஆதியாகமம் 1:5, லேவியராகமம் 23:32) இதை இந்த கிறிஸ்தவரும் ஒப்புக்கொள்கின்றார்:

Quote:

அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது.

இதன் படி பார்த்தால், அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவன் சூரியன் மறையத்தொடங்கிய பின்புதான் இயேசுவின் உடலைப் பெற்றுக்கொள்கின்றான் என்று பைபிள் கூறுகின்றது.

wbtc தமிழ் மொழிப்பெயர்ப்பின் மாற்கு 15:42 ம் வசனத்தில் பின்வருமாறு சொல்லப்படுகின்றது :

இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு முந்திய நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காக காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் துனிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 15:42-43

அதன் பிறகு யூதர்களின் முறையின் படி சில சம்பிரதாயங்களை செய்துவிட்டு அடக்கம் பன்னுகின்றன். பின்னர் இயேசு கல்லறையில் வைக்கப்படும் போது அடுத்தநாள் தெடாங்கி விடுகின்றது. அதை பின்வரும் வசனம் தெளிவு படுத்துகின்றது.

அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. – லூக்கா 22:50-54

இவரது வாதத்தின் படியும் இந்த பைபிள் வசனங்களின் படியும் பார்த்தால்,

(வெள்ளி மாலை சூரியன் மறையத் தொடங்கியதும் அடுத்தநாள் தொடங்கிவிடுகின்றது, அதாவது அன்று இரவு அடக்கம் பன்னப்படுகின்றார். அன்று இரவு 10 சனி காலை முதல் மாலை வரை = சனிக்கிழமை) 1 நாள்,

(அடுத்து சனி மாலை சூரியன் மறையத் தொடங்கியதிலிருந்து இரவு தொடங்கி அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பே இயேசு உயிர்த்தெழுந்து விடுகின்றார் (அதை இவரது வாதப்படி ஒரு முழு ஞாயிற்றுக்கிழமையாகவே கணக்கிட்டுக்கொள்வோம்)ஆக, ஞாயிற்றுக்கிழமை = 1 நாள்.

மொத்தம் 2 நாட்கள்

இதன் படி பார்த்தாலும் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் 3 நாள் எங்கே வருகின்றது? மொத்தம் 2 நாட்கள் தானே வருகின்றது? நீங்கள் இரண்டு நாட்களில் உயிர்தெழுந்ததாகச் சொல்லுகின்றீர்களா? அல்லது 3 நாட்களில் உயிர்த்தெழுந்ததாகச் சொல்லுகின்றீர்களா? உங்களது வாதப்படி நீங்கள் சொல்லும் முறையின் படி பார்த்தாலும் கணக்கு உதைக்கின்றதே? இப்பொழுது சொல்லுங்கள் இது அப்பட்டமான முரண்பாடு தானே? அப்படி யானால் இயேசு உயிர்த்தெழுந்ததாக சொல்லப்படுவது பச்சைப் பொய்தானே?

அடுத்து இன்னொன்றையும் இங்கே சொல்லியாக வேண்டும். அதாவது, இவர் ஒரு பச்சைப் பொய்யை தனது மறுப்புக் கட்டுரையில் சொல்லி அப்பாவி கிறிஸ்தவர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார். அதாவது, இயேசு அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை மதியத்திற்குப் பிற்பாடு என்கிறார்.

Quote:

இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார்,
இது பச்சைப் பொய் இல்லையா? பைபிள் அப்படியா சொல்லுகின்றது. சூரியன் மறையத்தொடங்கியதும் தான் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பே இயேசுவின் உடலை வாங்குகின்றான் (மாற்கு 15:42-43 - WBTC மொழிப்பெயர்ப்பு) அதன் பிறகு யூதர்களின் சம்பிதாயப்படி சில செய்கைளை செய்துவிட்டு பின்னர் இயேசுவை அடக்கம் பண்ணுகின்றான். அதற்குள் கண்டிப்பாக இரவு வந்துவிடும். அதை தான் ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று (லுக்கா 22:54) என்று சொல்லப்படுகின்றது. இவரும் சூரியன் மறையத்தெடங்கியதும் அடுத்த நாள் ஆரம்பமாகிவிடும் என்றும் ஒத்துக்கொள்கின்றார். இதன் படி பார்த்தாலும் இயேசு அடக்கம் செய்யப்பட்டது என்பது கண்டிப்பாக இரவு (இவரது கணக்குப்படி சனிக்கிழமை தொடங்கியதும்) என்பது தெளிவாக விளங்கும்.

ஆனால் இந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் இதை தமிழில் மொழிப்பெயர்த்த உமர் என்ற கிறிஸ்தவரும் எப்படிப்பட்ட ஒரு பொய்யை – பச்சைப் பொய்யை - மக்கள் மத்தியில் திணிக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா? இவரின் விளக்கத்தைப் (?) படிக்கின்ற ஒரு அப்பாவிக் கிறிஸ்தவன் என்ன நினைப்பான்? ஆஹா! என்ன அருமையான விளக்கம்? என்று தானே நினைப்பான். அவனுக்கு பைபிலும் தெரியாது, அதில் உள்ள குழப்பமும் தெரியாது. காரணம் அவனுக்கு போதிக்கப்படுவது அப்படி. ஆனால் உன்மை என்ன? சிந்திக்க வேண்டாமா?

எப்படிப்பட்ட பச்சைப் பொய்யை - அது தெளிவான முரண்பாடு என்று தெரிந்தும் அதை எப்படியாவது மறைத்தாக வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் பைபிள் வசனங்களையே திரித்து எழுதுகின்றனர் என்று பார்த்தீர்களா? இதற்கெல்லாம் காரணம் என்ன? எப்படியாவது தங்களிடம் மிச்ச மீதி உள்ள அப்பாவிக் கிறிஸ்தவர்களையாவது எமாற்றி தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற தந்திரம் தானே?

எனவே இந்த 3 பகல் 3 இரவு என்னும் காலக்கணக்கு என்பது அப்பட்டமான முரண்பாடு என்பதுடன் இதை வைத்து இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்தெழுந்தார், அதன் மூலம் எங்களது ஜென்மப்பாவம் மண்ணிக்கப்பட்டது என்று சிறிஸ்தவர்கள் சொல்வது அப்பட்டமான பொய் என்பதும் தெளிவாக விளங்கும். இப்படிப்பட்ட தவறான நம்பிக்கையில் இருக்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு நேர்வழி காட்ட இறைவனிடம் பிரார்த்திப்போம்.


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

3 comments:

Anonymous said...

Thankyou very much for your immediate attention. I am watching all communications between egathuvam Vs Umar and his baby Alex. WE can wakeup those are in sleep, but we can't do those are actisang like umar and Alex. First, Mr. Umar change you name, why you hiding in muslim name (Is this your guts/brave)It is funny. I also asked so many doubts about Bible ? but, no response ? Which I expected. My question is
1. If Bible is Holy, which R.c bible or penthocose Bible
2. what is reason, penthocose christians are rejecting 7 books from R.C bible
3. Who have permission, holy spirit
4. If holy spirit, then how R.C bible written (by any other) spirit.
5. What is necessisty for writing (in details) prostitues story in Bible

Dear christian brothers and sisters There is no Trinity.Insha Allah I will clear your doubts through Bible.
See Luke 1:20-23 and mathew 1 : 18
between these two chapter,
Holy Ghoset Gebriel from God .... holy spirit from God ....
So, it is easy to understand Holy spirit is Gebrriel, Father is God
Jesus (PBUM)is Messiah (Messenger)
Then where is Trinity...?
Read Quaran Chapter 17 : 81
Wassalam

Anonymous said...

Please my previous comment regarding Trinity Luke 1:26-28 insread of Luke 1:20-23
Qu'ran 3:19 the only accepted religion by Allah is Deenul Islam.
Wassalam,

Anonymous said...

Mr. shahul hameed, you know umar is claiming himself that he was an exmuslim, also i believe he is franchisee of answering islam tamil web site. so now you can understand his purpose.just ask him about ecclesiasticus chapter in bible. most of the bibles available in online now contains only 12 chapters, where are the balance chapters? but if you ask any question to him he will not answer directly or simply,but he will post a big essay with confusing statements and interpretations,so anyone reading his article will get bored to read the full article.

Amir.