அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Monday, June 08, 2009

கர்த்தர் ஓய்வு எடுத்தாரா?

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் -2
.
.
கர்த்தருக்கு ஓய்வு தேவையா?

பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதன் அளவுக்கு மீறிய வேலைகளை செய்வதால் அவனுக்கு கலைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதே போன்று அவனது பலவீனத்தின் காரணமாக அவனுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் ஏக இறைவனாகிய கர்த்தருக்கு இது போன்று பலவீனங்கள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது - இருக்கவும் முடியாது. காரணம் பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா சக்தி பொருந்தியவராகத்தான் கர்த்தர் இருப்பார் - இருக்க முடியும். இதில் எவருக்கும் எந்தவிதத்திலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படியே எவரேனும் கர்த்தருக்கு கலைப்பு ஏற்படும் என்று கூறுவாரேயானால் அவர் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தரை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பது தான் அர்த்தமாக இருக்க முடியும்.

இதைத் தான் இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும்போது:

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

இந்த வசனத்தில், இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சாராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு அதனால் எந்தவித கலைப்பும் ஏற்படவில்லை என்றும் - அப்படி ஏற்படும் அளவுக்கு அவன் பலவீனமானவனாகவும் இருக்க மாட்டான் என்றும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கின்றது.

இறைவனின் வல்லமையை பறைசாற்றும் இந்த திருக்குர்ஆனின் வசனத்திற்கு மாற்றமாக, சர்வ வல்லமைப்படைத்த கர்த்தருக்கு, இந்த உலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்ததால், கலைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் ஓய்வு எடுத்துக்கொண்டதாகவும், கார்த்தரின் மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் பைபிளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

...ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்..' (யாத்திராகமம் 31:17)

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். - ஆதியாகமம் 2:2

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார் ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். - யாத்திராகமம் 20:11

கர்த்தர் உலகம் மற்றும் இந்த அண்டசாராசரங்கள் அனைத்தையும் படைத்துவிட்டு அதன் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டு பலவீனனான மனிதனைப் போன்று ஓய்வெடுத்ததாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது.

மாட்சிமையும் வல்லமையும் பொருந்தியவனான இறைவனுக்கு களைப்பு ஏற்படுமா? அவனுக்கு ஓய்வு தேவையா? நிச்சயமாக இல்லை! இத்தகைய பலவீனங்கள் எல்லாம் இறைவனின் படைப்பினங்களுக்கு மட்டுமே உரியதாகும். இறைவனை அரி, துயில் எதுவும் கொள்ளாது. அவன் மனிதர்களின் இத்தகைய கற்பனைகளை விட்டும் அப்பாற்பட்டவன். எனவே கர்த்தருடைய கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் இத்தகைய பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரால் சொல்லப்பட்டிருக்காது, மாறாக கர்த்தருடைய எதிரியான சாத்தானின் தூண்டுதலால் தான் எழுதப்பட்டிருக்கும் என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதைத்தான் திருமறைக்குர்ஆனில் சர்வ வல்லமை பொருந்திய இறைவன் கூறுகின்றான்:

அவர்கள் இறைவனை கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக இறைவன் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)

ஓய்வு நாள் ஏன்?

இது ஒருபுறமிருக்க, இப்படி கர்த்தரால் ஓய்வெடுக்கப்பட்ட அந்த நாளைத்தான் யூதர்களும் - பைபிளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கிறிஸ்தவர்களும் - ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். - யாத்திராகமம் 20:9-10

கர்த்தரே ஓய்ந்திருந்த அந்த நாளை ஓய்வு நாளாக அனுசரிக்காமல் எவரேனும் கர்த்தரின் கட்டளைக்கு மாற்றமாக நடந்தால், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக அது உங்களுக்குப் பரிசுத்தமானது அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன் அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். - யாத்திராகமம் 31:14

கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், கர்த்தர் ஒய்வு எடுத்ததாகவும், அந்த நாளைத்தான் யூதர்களுக்கு ஓய்வு நாளாக அனுசரிக்கும் படி கட்டடையிடப்பட்டதாகவும் இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது. அப்படிப்பட்ட ஓய்வு நாளில் எவரேனும் வேலை செய்தால் அவன் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் குறிப்பிடுகின்றது.

யூதர்கள் ஆசாரிக்கும் 'ஓய்வு நாள்' ஏற்படுத்தப்பட்டதற்கு காரணம் 'கர்த்தர் ஓய்ந்திருந்தது' தான் என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றம் பைபிளின் இந்த வசனங்களின் மூலம் ஏற்படுத்தப்படுன்றது.

ஓய்வு நாள் ஏற்படுத்தப்பட்டதற்கு இது தான் காரணமாக இருந்தால் முதல் மனிதன் ஆதாம் காலம் தொட்டே 'ஓய்வு நாள்' என்னும் அந்த கட்டளையை கர்த்தர் கொடுத்திருப்பாரே? அல்லது அவருக்கு உண்மையான விசுவாசியாக இருந்த ஆபிரகாமின் காலத்திலிருந்தாவது கர்த்தர் அந்த கட்டளையை கொடுத்திருப்பாரே? ஏன் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து மோசேயின் காலத்தில் இப்படிப்பட்ட ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்படவேண்டும்? காரணம் இஸ்ரவேவலர்கள் செய்த செயல்களின் காரணமாக - அவர்களை சோதிக்கும் பொருட்டு - இறைவன் இந்த ஓய்வு நாள் சட்டத்தை யூதர்களுக்கு கொடுத்தானே அல்லாமல், கர்த்தர் ஓய்திருந்தார் என்பதற்காக அல்ல. அப்படி சொல்வது கர்த்தரை இழிவு படுத்துவதற்கு சமமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஓய்வு நாள் யூதர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்ற உன்மையைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக உலகுக்கு உணர்த்துகின்றது:

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அல்குர்ஆன் 7 : 163.)

மேலும், அவர்களிடம் (இஸ்ரவேலர்களிடம்) வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம். இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம். மேலும் ''(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்'' என்றும் அவர்களுக்கு கூறினோம். இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (அல்குர்ஆன் 4 : 154)

இப்படி எல்லாம் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கும் பொருட்டே யூதர்களுக்கு சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆக்கப்பட்டதே அல்லாமல், பைபிளில் சொல்லப்படுவது போன்று கர்த்தர் ஓய்ந்திருந்தார், அதன் காரணமாகவே அந்த நாளை பரிசுத்தமாக்கும் பொருட்டு ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகின்றது என்று கூறுவது கர்த்தரின் கண்ணியத்தையும் - அவரின் மகத்துவத்தையும் - அவரின் வல்லமையையும் - குறைத்து மதிப்பிடும் செயல் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். உன்மையில் கர்த்தருக்கு, இது போன்ற கலைப்போ, அதன் காரணமாக ஓய்வோ தேவைப்படாது என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளிலும் ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது:

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. -ஏசாயா 40:28

இதை WBTC மொழிப்பெயர்ப்பு பின்வருமாறு கூறுகின்றது :

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக கர்த்தரின் வல்லமை பறைசாற்றப்பட்டிருக்க, அவர் ஓய்வு எடுக்க மாட்டார் - அவர் எத்தகையை பெரிய காரியங்களை செய்தாலும் அதனால் அவருக்கு எந்த வித கலைப்பு ஏற்படாது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்க - எப்படி கர்த்தர் ஓய்வு எடுத்தார் என்றும் அதன் காரணமாகவே ஓய்வு நாள் யூதர்களுக்கு கடமையாக்கப்பட்டது என்றும் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த கூற்று பைபிளுக்கே எதிரான கருத்தில்லையா? யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போன போக்கில் பைபிளின் மற்ற வசனங்ளே முரண்படும் வகையில் தங்கள் வேதத்தில் தங்களுக்கு சாதகமாக விளையாடிவிட்டார்கள் என்பது விளங்குகின்றதா இல்லையா? தங்களுக்கு சோதனையாக கொடுக்கப்பட்ட அந்த ஓய்வு நாள் சட்டத்தின் நோக்கத்தையே திரித்து - அதை மாற்றி, கர்த்தர் ஓய்திருந்தால் தான் தங்களுக்கு அந்த ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்பட்டது என்று ஒரு தவறான கருத்துத் திணிப்பு வேலை பைபிளில் நடைபெற்றுள்ளது என்பது விளங்குகின்றதா இல்லையா?

எனவே கிறிஸ்தவர்களே நீங்கள் உன்மையை உணரவேண்டும். சத்தியத்தை அறியவேண்டும். இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை - பைபிளில் இட்டுக்கட்டி எழுதப்பட்ட செய்திகளை - பிரித்து, உன்மை எது பொய் எது என்று பிரித்தறிவிக்கும் முகமாகத்தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தராகிய அல்லாஹ் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனின் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்துகின்றான். அதைத்தான் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் கூறும் போது:

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் (முஹம்மதின்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் - 25 : 1)

எனவே சகோதரர்களே அசத்தியத்தை விட்டு வெளியே வாருங்கள்! சத்தியத்தை அறியுங்கள். ஏக இறைவனாகிய கர்த்தர் உங்களுக்கு நேர்வழி காட்டுவாராக.

தொடரும்!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

5 comments:

SUNDAR said...

சகோதரர் அவர்களே!
"ஒய்ந்திருத்தல்" (REST) என்பதன் பொருள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் குறிக்குமெயன்றி
"களைத்திருத்தல்" (TIRED) என்ற பொருளில் வராது.

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். ஆதியாகமம் 2:2



களைப்படைந்தவர்கள் மட்டும்தான் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் உள்ள இடைவெளியில் களைப்பு இல்லாதவர்கள் கூட வேலை எதுவும் செய்யாமல் சும்மா அமர்ந்திருக்கலாம் அல்லவா?

இறைவன் என்றால் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அதற்க்கு அவர் எப்படி பொறுப்பாவார்?

ஏகத்துவம் said...

சகோதரர் சுந்தர் அவர்களுக்கு,

நாம் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்திற்கும் மற்ற பைபிள் வசனங்களையும் ஒப்பிட்டே விளக்கமளிக்கப் படுகின்றது என்பதை முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தீர்கள்:

//"ஒய்ந்திருத்தல்" (REST) என்பதன் பொருள் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் குறிக்குமெயன்றி
"களைத்திருத்தல்" (TIRED) என்ற பொருளில் வராது.//

இப்படி நீங்கள் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு நீங்கள் எழுதியிருந்தீர்கள்:

//களைப்படைந்தவர்கள் மட்டும்தான் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் உள்ள இடைவெளியில் களைப்பு இல்லாதவர்கள் கூட வேலை எதுவும் செய்யாமல் சும்மா அமர்ந்திருக்கலாம் அல்லவா?

இறைவன் என்றால் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அதற்க்கு அவர் எப்படி பொறுப்பாவார்?//

அதாவது உங்கள் வாதப்படி கர்த்தர் ஒய்ந்து – எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தாரே யொழிய – களைப்பாடையவில்லை என்று கூறுகின்றீர்கள். உங்கள் வாதப்படியே பார்த்தாலும் அதுவும் உங்கள் பைபிளுக்கு எதிரானது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும.

ஏனெனில் நாம் நமது 'கர்த்தர் ஓய்வு எடுத்தாரா?' என்றக் கட்டுரையில், ஏசாயா 40:28ம் வசனத்தைக் குறிப்பிட்டு, நீங்கள் சொல்வது போன்று ஒய்ந்திருத்தல் (REST) என்பது கூட கர்த்தார் எடுக்கமாட்டார் என்று பைபிள் குறிப்பிடுகின்றது என்பதாக எழுதியிருந்தோம். உங்களைப் போன்றவர்கள் ஒருவேலை இது போன்ற கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை – தெளிவாக புரியவேண்டும் என்பதற்காக – wbtc மொழிப்பெயர்ப்பிலிருந்து கொடுத்திருந்தோம். ஆனால் அதை நீங்கள் கவனிக்காமல் இருந்தது ஏனோ? இதே அந்த வசனம்:

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை.
கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார்.– ஏசாயா 40:28 (WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பு)

நீங்கள் குறிப்பிடுவது போன்று ஓய்வு (REST) கூட அவருக்குத் தேவையில்லை. அப்படி தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர் பலவீனரும் அல்ல. அப்படி சொல்வது அவருடைய மகிமையை – கண்ணியத்தை குழைக்கும் செயல் என்று தெளிவாக இந்த ஏசாயா 40:28ம் வசனத்தின் மூலம் தெரியப்படுத்தப்படுகின்றதா இல்லையா? இந்த வசனமும் உங்கள் பைபிளில் தானே இருக்கின்றது? இந்த வசனத்திற்கு முரணானத்தானே கர்த்தர் ஓய்வு எடுத்தார் என்று யாத்திராகமம் 31:17 மற்றும் 20:11ம் வசனங்களும், ஆதியாகமம் 2:2ம் வசனமும் கூறுகின்றது?

எனவே உங்களுடைய பைபிளின் வசனத்தை வைத்து நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்தீர்களானால் அதே பைபிளின் மற்றோர் வசனம் அதற்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல, கர்த்தர் ஓய்வு நாளைக்குறித்து கட்டளையிடும் போது ஓய்வு நாள் என்பதே களைத்ததன் காரணமாக இளைப்பாறத்தான் என்கறது பைபிள்:

ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.
– யாத்திராகமம் 23:12

இந்த வசனத்தில் ஓய்வு நாளே இளைப்பாறத்தான் என்று குறிப்பிடும் கர்த்தர், அந்த நாளில் மாடும், கழுதையும், அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இறைப்பாறவும் ஓய்ந்திருங்கள் என்று கூறுகின்றது.

அடுத்து, இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். உங்கள் பைபிள் கர்த்தரை எப்படி எல்லாம் சித்தரிக்கின்றது என்பதை நாம் தொடர்ந்து எழுத இருக்கின்றோம். உங்கள் பின்னூட்டத்தோடு சம்பந்தப்பட்ட கர்த்தரைப்பற்றி பைபிளில் சொல்லப்படும் ஒரு சில வசனங்கள் இதோ:

கர்த்தர் வருத்தப்பட்டாராம்:


உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது. அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
– ஏசாயா 1:14

நீ எனக்குப் பணங்களால் சுகந்த பட்டையைக் கொள்ளாமலும், உன்பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.
– ஏசாயா 43:24

அதே போன்று கர்த்தர் பொருத்து பொருத்து பார்த்தாராம். அதனால் இளைத்தே போய்விட்டாராம். :


நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
– எரேமியா 15:6

இப்படி எல்லாம் கர்த்தர் இளைத்து போவாரா?

abdul azeez said...

சகோதரர் சுந்தர் இந்த வசனம் கர்த்தரின் அறியாமையை வெளிப்படுத்துகின்றது அல்லவா ?

// ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக அது உங்களுக்குப் பரிசுத்தமானது அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன் அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். - யாத்திராகமம் 31:14 //


கர்த்தர் ஆறு நாளில் பூமியை படைத்து இளைத்துப் போனதால் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறார் அது அவருடைய்ய நேரம். அதே நாளில் மனிதர்களை ஏன் ? ரெஸ்ட் எடுக்கச் சொல்லனும் மனிதர்கள் எதை ஆறு நாளில் படைத்து கலைத்து போனார்கள்.அவர்கள் எந்த வேலையாவது. செய்து சோர்வு அடையும் நேரம் அவர்கள் ரெஸ்ட் எடுக்கலாமே !

நான் படைத்து சோர்ந்துபோனதால் ஓய்வு எடுக்கிறேன். ஆனால் உன்னால் வேலைச் செய்ய முடிகிறதே என்ற பொறாமை தான் காரணமா ?

மரண தண்டனைக்கு ஒரு அளவே கிடையாதா ? ஆ ஊ என்றால் மரண தண்டனையா ? யோசிக்கவே மாட்டாரா ?

அன்றாடங்காய்ச்சி என்ன செய்வான் அவன் எல்லா நாளும் வேலை செய்தால் தான் அவன் வாழ்க்கை ஓடும். இந்த அடி தட்டு மக்கள் கர்த்தர் சொல்லும் ஓய்வு எடுக்கும் நாளின் பிரகாரம் கூரையை பிடித்துக்கொண்டு சாப்பாடு பொட்டலத்தை போடுவாரோ ? என்ன முன்னேற்ப்பாடு. செய்துள்ளார்.பரிசுத்தம் என்ற பெயரில் கொலையா ?

தெம்புல்லவன் வேலைச் செய்கிறான். அவனை கொல்லச் சொல்பவர் தான் கருணையே வடிவான கர்த்தரா ?

மா சலாம்
அப்துல் அசீஸ்.

AF Shahul Hameed said...

dear sunder, I think you are penthocost. because I met so many penthocost chrisitan, even pastors, when I asked about one verse, they will jump one to another and I realised their tricks.To avoding the language problem, we demanding to relese the bible with original scripts with translation, Like Holy quaran. But, you peoples are not following, and playing with words. Simple example, Tamil translation bible Mathew 12:40 and English version (KJV)bible mathew 12:40. Why you are trying to hide the truth. what about Mathew 7:21-23.

AFShahul Hameed said...

Sunder, if you are true and honesty, first you answer it .
The burden upon Arabia… Isaiah 21:13 what is Burden on Arabia.? That means the responsibility of Muslim Arabs to spread Islam.
And he saw a chariot with a couple of horse men, a chariot of asses and a chariot of Camels and he hearkened diligently with much heed. Isaiah 21:7

Christians arguing (John 12:14 and Mathew 21:5) .. the chariot of asses turned out to be Jesus, who entered Jerusalem. Who then was the chariot of Camels ? There is no answer. But, it could not be other than Mohamed(PBUM). Who came about 600 years after the advance of Jesus. If, it is not accepted, this prophecy has not yet fulfilled.