இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் -2
.
.
கர்த்தருக்கு ஓய்வு தேவையா?
பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதன் அளவுக்கு மீறிய வேலைகளை செய்வதால் அவனுக்கு கலைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதே போன்று அவனது பலவீனத்தின் காரணமாக அவனுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியமான ஒன்றாகிவிட்டது.
ஆனால், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் ஏக இறைவனாகிய கர்த்தருக்கு இது போன்று பலவீனங்கள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது - இருக்கவும் முடியாது. காரணம் பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா சக்தி பொருந்தியவராகத்தான்...