அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Thursday, July 17, 2008

வீட்டுக்கும் குஷ்டரோகம் வருமாம்! - பைபிள் ஜோக்ஸ்

பைபிளில் முரண்பாடான வசனங்கள், ஆபாசமான வசனங்கள் என்று இருப்பது போன்று ஜோக்கான வசனங்களும் நிறைய கானக்கிடைக்கின்றன. நாம் உடுத்தும் ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று உளரிவைத்தவர்கள் அடுத்து வீட்டுக்கும் குஷ்டரோகம் வரும் என்று கடவுளின் பெயரால் பைபிளில் உளரிவைத்துள்ளதைப் பாருங்கள்: நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால், அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்....

Monday, July 14, 2008

பைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்

மறுப்பும்... விளக்கமும்... இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன், பல பொய்யான தகவல்களும், அவரது புனிதத்தன்மைக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் நிறைந்து காணப்படுவதோடு அவரது வாழ்வில் நடந்த பல முக்கியமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்ற உன்மையை நாம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக, தந்தையே இல்லாமல் இறை அற்புதத்தின் மூலம் பிறந்த அவருக்கே தந்தை வழி வம்சாவளியைச் சொல்ல முற்பட்டது, ஒருவர் என்றில்லாமல் இருவர் அவருக்கு தந்தைவழி...

Friday, July 11, 2008

பைபிளின் பலிக்காத சாபம்...!

எதார்த்தமான நிலைமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் மடத்தனமானதாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தைகளில் இருக்க முடியாது - இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடுகள் இருக்கலாகாது என்பதை பைபிளும் கூட ஒப்புக்கொள்கின்றது. 'ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம்' - உபாகமம் 18:22 பைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா?...

Monday, July 07, 2008

ஆடைகளுக்கு குஷ்டரோகம் வருமாம் - பைபிள் கூறுகின்றது

தொழுநோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவராவது நம்புவார்களா? நம்ப முடியுமா? அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள். ஆனால் பைபிள், ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் (?) கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதை கேளுங்கள்: ''47. ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,(The garment also that the plague...

Friday, July 04, 2008

மாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்!

'என்ன கொடுமை சார் இது! ' 'மாதவிடாய்' என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் பைபிள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி கூறுவது என்ன தெரியுமா? சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள்...

Monday, June 30, 2008

மனிதக் கரங்களால் மாசுபட்ட பைபிள் - ஒரு சரித்திர ஆய்வு

.மூலம்: M.M. அக்பர் .....................................தமிழில்: தேங்கை முனீப், பஹ்ரைன் இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப்...

Friday, June 27, 2008

கடவுளுக்கு மனிதர்களின் காணிக்கைகள் தேவையா?

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...!. (பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும் . (பாகம் -2) செல்ல இங்கே அழுத்தவும் . (பாகம் -3) செல்ல இங்கே அழுத்தவும் . மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -4) . கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன் . பொதுவாக கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் முக்கிய காரணங்களில், மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களும் ஒன்று. கடவுளுக்கு காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்கு பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதையும் மனிதன் நேரடியாக பார்க்கின்றான். கடவுளின் பெயரைச் சொல்லி...

Monday, June 23, 2008

கடவுளுக்கு சொந்த பந்தங்கள் இல்லை!

. மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! . (பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும்.(பாகம் -2) செல்ல இங்கே அழுத்தவும்.. மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -3) . .கடவுளுக்கு சொந்த பந்தங்கள் இல்லை கடவுளுக்கு உறவுமுறைகள் அதாவது கடவுளுக்கு அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்றெல்லாம் உறவுகள் இருக்கக் கூடாது. ஓரிறைதான் உண்டு என்ற கொள்கையில் அதற்கு இடமே கிடையாது. இதை இஸ்லாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றது. திருமறைக் குர்ஆனில் 'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றன். யாரையும் அவன்; பெறவுமில்லை. அவன் யாருக்கும்...

Friday, June 20, 2008

கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும் .. . . மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -2) . . கலப்பில்லாத ஓரிறைக் கொள்கையை போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்! . . இது போக, இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களையும் - மதங்களையும் எடுத்துப்பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதை பார்க்கலாம். உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம்....

Wednesday, June 11, 2008

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -1)

இந்த உலகில் உள்ள ஏராளமான மதங்களில் இஸ்லாமிய மார்க்கம் 120 கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கம் எந்த வகையில் ஏனைய மார்க்கங்களிலிருந்து வேறுபட்டிக்கிறது? இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? என்பவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். இஸ்லாமிய மார்க்கம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை உலகத்திற்குச் சொல்கிறது. முதலாவது கொள்கை: வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை. இரண்டாவது கொள்கை: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள். இவ்விரு கொள்கைகள் தாம் இஸ்லாத்தின்...