அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, April 04, 2007

நபிமொழி அறிவோம் !

தன்னிடம் பிறர் நல்ல முறையில் நடந்து கொள்ள விரும்புவது போன்று நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்
(. . فَمَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ وَيُدْخَلَ الْجَنَّةَ فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ)

"யார் நரகத்தை விட்டும் தூரமாகி, சொர்க்கத்தில் நுழைய விரும்புகின்ரோ அவருக்கு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கும் நிலையில் மரணம் வரட்டும்! மேலும் தன்னிடம் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்."

(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : முஸ்லிம் 3431)


வியாபாரக் கொடுக்கல், வாங்கலிலும் உரிமை கோருவதிலும் உரிமை வழங்குவதிலும் நலினத்தைக் கடைபிடிக்க வேண்டும்
( . . . أَدْخَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ رَجُلًا كَانَ سَهْلًا مُشْتَرِيًا وَبَائِعًا وَقَاضِيًا وَمُقْتَضِيًا )

விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உஸ்மான் -ரலி, நூற்கள் : அஹ்மத் 387, நஸாயீ, இப்னுமாஜா)

( دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ بِسَمَاحَتِهِ قَاضِيًا وَمُتَقَاضِيًا )

உரிமையை கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : அஹ்மத் 6669)


( رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى )

விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும் நலினத்தைக் கடைபிடிப்பவனுக்கு அல்லாஹ் கிருபை செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
.(அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் -ரலி, நூல் : புகாரீ 1934)