அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label யோசேப்பு. Show all posts
Showing posts with label யோசேப்பு. Show all posts

Thursday, August 28, 2008

யோசேப் அறியாத ராம்சேஸ் பட்டினம்

இஸ்ரவேலர்களால் உருவாக்கப்பட்ட பித்தோம், ராமசேஸ் என்னும் இரண்டு பண்டகசாலைப் பட்டணங்களைக் குறித்து பைபிள் கூறுகின்றது. யாத்திராகமத்தில் காணப்படுவதாவது,

அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள். (யாத்திராகமம் 1:11)

இந்த இரு நகரங்களும் உருவாக்கப்பட்டது இரண்டாவது ராம்செஸின் காலத்திலாகும். (BC 1279-1212) ராமசெஸ் II என்ற பர்வோனின் நினைவாகவே இந்த பெயர் வழங்கப்பட்டதாம் (Dr. D Babupaul : வேத சப்த ரத்னாகரம், பக்கம் 584) யோசேப்பைக் குறித்து எதுவும் அறியாத ஒரு புதிய மன்னராகவே ராம்சேஸைப் பற்றி பைபிள் குறிப்பிடுகின்றது.

''யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.'' (யாத்திராகமம் : 1:8)

மேற்கண்ட பைபிளின் வரிகளின் அடிப்படையில் நாம் பின்வரும் முடிவுக்கு வரலாம்.

1. யோசேப்புக்குப் பின் பலகாலம் கடந்தே ராம்சேஸ் அதிகாரமேற்றான்

2.இந்த ராம்சேஸின் காலத்தில் உருவாக்கப்பட்டதே ராம்சேஸ் என்ற நகரம்.

3.யோசேப்புடைய காலத்தில் இப்படிப்பட்ட ஒரு நகரம் இல்லை.

ஆனால் ஆதியாகமத்தில் இது குறித்துக் கூறப்பட்டுள்ளது முற்றிலும் முரண்படுகின்றது. பர்வோனின் கட்டளைப்படி யாக்கோபுக்கும் அவரது புத்திரர்களுக்கும் வழங்கப்பட்ட நகரமே ராம்சேஸ் என்று ஆதியாகமம் கூறுகின்றது.

பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். (ஆதியாகமம் 47:11)

யோசேப்புடைய காலத்தில் ராம்சேஸ் என்ற நகரமே இல்லை என்றிருக்க பிறகு எவ்வாறு யோசேப் அதனை தனது தகப்பனுக்கும் சகோதரர்களுக்கும் வழங்க முடியும்?

இவ்வாறாக பைபிளில் ஏராளமான அபத்தங்களை நாம் காண முடிகின்றது. இத்தகை அபத்தங்களை நியாயப்படுத்தவும் முடியாமல் விளக்கவும் முயாமல் பைபிள் பண்டிதர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.