அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Thursday, December 04, 2008

மதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு?

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்!

பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்கில பைபிள்களில் WINE என்று வரும் இடங்களில் தமிழ் பைபிளில் 'திராட்சைரசம்' என்றும் STRONG DRINK என்று வரும் இடங்களில் 'மது' என்றும் மொழிபெயர்த்துள்ளனர். WINE என்று குறிப்பிடப்படும் வேறு சில இடங்களில் 'திராட்சைரசம்' என்பதற்கு பதிலாக நேரடியாக 'மதுபானம்' என்றே தமிழ் பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானவகையைச் சேர்ந்த திராட்சைரசம் (Wine), மது (Strong Drink) என்ற இந்த இரண்டுமே முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் இதை அருந்துவது மிகப் பாவமான காரியம் என்றும், இதை அருந்துபவன் தவறான நடத்தையுடையவன் - பரிசுத்தமில்லாதவன் என்றும் பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. அந்த தடை வசனங்களின் பட்டியல் இதோ:

திராட்சை ரசம் (Wine) - மதுபானம் (Strong Drink) அருந்திய நிலையில் ஆசாரிப்புகூடத்துக் போவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது :

கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - லேவியராகமம் : 10: 8 - 11

திராட்சரசத்தையும் மதுபானத்தையும் அருந்துபவன் ஞானவானாக மாட்டான் :

திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - நீதிமொழிகள் 20:1

அதிசயமாக குழந்தை பெற இருக்கும் ஒரு மலடான பெண்ணிற்கு திராட்சைரசம் மற்றும் மதுபானத்தை அருந்தக்கூடாது என்று கர்த்தரின் கட்டளை :

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் (Wine) மதுபானமும் (Strong Drink) குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. - நியாயாதிபதிகள் 13:3-4

திராட்சைரசம் என்பது கொடுமையின் இரசம் :

அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள் (drink the wine of violence) - நீதிமொழிகள் 4:17

திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் அருந்துபவன் வழிதவறியவன் - மோசம் போனவன் - அவனால் நியாயம் தீர்க்க முடியாது :

ஆனாலும் இவர்களும் (Wine) திராட்சரசத்தால்மயங்கி, (Stong Drink) மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள். ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். - ஏசாயா 28:7

திராட்சைரசம் அருந்துபவன் வெறியன். அது முற்றிலுமாக விலக்கப்பட்டது :

வெறியரே, விழித்து அழுங்கள். (Wine) திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள். அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது - யோவேல் 1:5

இருதயத்தை மயக்கக்கூடிய மிகக் கொடிய பழக்கங்கள்:

வேசித்தனமும், (Wine) திராட்சரசமும், (New Wine) மதுபானமும் இருதயத்தை மயக்கும். - ஓசியா 4:11

Whoredom and wine and new wine take away the heart.

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனாகிய யோவான் ஸ்னானன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாக இருப்பான். காரணம் அவன் தடைசெய்யப்பட்ட திராட்சைரசத்தையும் - மதுவையும் குடிக்கமாட்டான்:

அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (Wine) திராட்சரசமும் (Stron Drink) மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். - லூக்கா 1:15

மொத்தத்தில் மதுபானம் அருந்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது -காரணம் :

(Wine) மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள - Wine - சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. Wine - மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதேள, அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்ள. உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை. என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை. நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய். - நீதிமொழிகள் 23:29-35

திராட்சைரசம் உட்பட மதுபானங்கள் அனைத்தும் முழுமையாக தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதையும், அது எந்த அளவுக்கு மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய தன்மையுடையது என்பதையும் மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக மதுவானது மனிதனுடைய சிறு மூலையை செயலிழக்கச்செய்து அவனது சிந்தனைத் திரணைக் குறைத்துவிடும். அந்த நேரத்தில் அவன் தனது பகுத்தறிவுக்கு மாற்றமாக - தன்மானத்தை இழந்தவனாக தனது நடவடிக்கையை அமைத்துக்கொள்வான். அதை அருந்தியிருக்கக்கூடிய நிலையில் - அதன் போதை தலைக்கேறியவுடன் தனது தாய் என்று தெரியாது, தனது மகள் என்று தெரியாது, தனது குடும்பத்தினர் என்று தெரியாது, எல்லாவற்றையும் மீறி மிகக் கேவலமாக நடந்துக்கொள்ளக்கூடியவனாக - நடக்கக்கூடாத அனைத்துச்செயல்களையும் செய்யத் தூண்டும் ஒரு கேடுகெட்ட போதையுட்டும் பொருள்தான் மது. இதை அனைவரும் அறிந்ததே!

இந்த மதுவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசமானது எந்த அளவுக்கு மனிதனைத் தரம்தாழ்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் என்பதற்கு பைபிளிலேயே தீர்க்கதிரிசிகளின் பெயரால் புனையப்பட்ட கதைகளில் வரும் சம்பவங்களே சரியான சான்று :

நோவாவும் (Wine) திராட்சைரசமும் :
ஒரு மனிதன் மதுபான வகையைச்சேர்ந்த Wine என்னும் திராட்சைரசத்தை அருந்தினால் போதை தலைக்கேறி எந்த அளவுக்கு மிக கீழான நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதற்கு ஆதாரமாக நோவா என்னும் தீர்க்கதரிசியின் செயல்பாட்டை(?) பைபிளில் எழுதி வைத்துள்ளனர்:

நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் (Wine) திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள் அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். (ஆதியாகமம் 9 : 20 - 25 )

லோத்தும் மதுபானமும் (Wine):
அடுத்து இந்த திராட்சைரசம் - (Wine) என்னும் மதுபானத்தை அருந்தக்கூடியவன் எந்த அளவுக்கு வெட்கங்கெட்ட செயல்களைச் செய்யவும் தயங்கமாட்டான் என்பதற்கு மற்றொரு தீர்க்கதரிசியான லோத்து என்பவருடைய வாழ்வில் நடந்ததாக (?) ஒரு சம்பவத்தை எழுதி வைத்துள்ளனர்:

பின்பு லோத்து சோவாரில் குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு (Wine) மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு (Wine) மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் (Wine) மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு (Wine) மதுவைக் குடிக்கக்கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். (ஆதியாகமம் 19:30-36)

மதுபானவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் அருந்தினால் எந்த அளவுக்கு கேடுகெட்ட, கேவலமான, அருவறுக்கத்தக்க செயல்களை செய்யத்தூண்டும் என்பதற்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள இந்த நோவா மற்றும் லோத்தின் சம்பவங்களே (?) சரியான சான்று.

மேலே தடைசெய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பைபிள் வசனங்களிலும், லோத்து மற்றும் நோவா ஆகியோர் அருந்தியதாக சொல்லப்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படும் வார்த்தை போதை ஏற்படுத்தும் மதுபானவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் தான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதுவரை நாம் பார்த்தவகையில், இந்த திராட்சைரசம் (Wine) மற்றும் மது (Strong Drink) என்பது:
  • கர்த்தரால் தடை செய்யப்பட்டது ஒன்று என்று பைபிள் கூறுகின்றது.
  • அதை அருந்திய நிலையில் ஆசாரிப்புக்கூடாரத்துக்கு போகக்கூடாது என்கிற அளவுக்கு தடை செய்யப்பட்டது.
  • இவற்றை அருந்துபவன் ஞானவானாகமாட்டான்.
  • பாக்கியம் பெற்ற பெண்மணிக்கு இவை தடுக்கப்பட்டதாக கர்த்தரால் சொல்லப்பட்டது.
  • இவை கொடுமையின் ரசம் என்கிற அளவுக்கு மனிதனை கொடுமையான நிலைக்குத் தள்ளக்கூடியது
  • இவற்றை அருந்துபவன் வழிதவறியவன், மோசம் போனவன். இதை அருந்திய நிலையில் உள்ளவன் நியாயம் தவறியவனாகத்தான் இருப்பான்.
  • வெறியனே இவற்றை அருந்துவான்.
  • இவற்றை அருந்துவது இருதயத்தை மயக்கக்கூடிய கேடுகெட்ட செயலான விபச்சாரத்திற்கு ஒப்பானது
  • பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டவனும், கர்த்தருக்கு முன்பாக பெரியவானாக இருப்பவர்களும் இவற்றை கண்டிப்பாக அருந்த மாட்டார்கள்.
  • இவற்றை அருந்துவதால் ஏற்படக்கூடிய போதை மனிதனை மிக கீழான நிலைக்கு கொண்டு சொல்லுவதுடன் அருவருக்கத்தக்க செயல்களையும் செய்யத்தூண்டும்
என்பவற்றையெல்லாம் பைபிளின் ஆதராங்களுடன் பார்த்தோம்.

மேற்கூறிய அனைத்து காரணங்களால் பைபிளில் தடைசெய்யப்பட்ட Wine என்று சொல்லப்படும் திராட்சைரசமென்னும் மதுபானத்தை இயேசு தானும் அருந்தியதுடன் மற்றவர்களையும் அருந்தத்தூண்டினார் என்றும் அவரை 'குடிகாரர்' என்றே மக்கள் பரவலாக அழைத்தனர் என்றும் பைபிளில் எழுதிவைத்துள்ளனர். இயேசுவை இழிவு படுத்தும் நோக்கத்துடனும் - அவரது ஒழுக்கத்திற்கு மாசுகற்பிக்கும் வகையிலுமே பைபிளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அதுவும் எந்த அளவுக்கொன்றால் 'தான் கடவுள் புறத்திலிருந்து வந்த ஒருவன்' என்பதை நிரூபிப்பதற்காக அவர் செய்த முதல் அதிசயமே தண்ணீரை திராட்சரசமென்னும் மதுபானமாக மாற்றி மக்களுக்கு குடிக்கக்கொடுத்தார் என்று எழுதிவைத்துள்ள வரிகளைப் பாருங்கள் :

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (Wine) திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் (Wine) திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு. ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் (Wine) திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் (Wine) திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: எந்த மனுஷனும் முன்பு நல்ல (Wine) திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல (Wine) ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். (யோவான் 2:1-10)

இந்த வசனத்தின் மூலம் 'குடிமகன்'களுக்கு தேவையான திராட்சைரசமென்னும் மதுபானம் பற்றாக்குறை ஏற்பட்டபோது தேவைக்கு அதிகமாகவே தனது அதிசயத்தின் மூலம் பெற்றுக்கொடுத்தார் இயேசு என்று அவரைப் பற்றி பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இந்த புணையப்பட்ட சம்பவத்தின் மூலம் அவரது ஒழுக்கத்திற்கும், கண்ணியத்திற்கும் மாசு கற்பிக்கப்படுகின்றதா இல்லையா? இதன் மூலம் அவரது வருகையின் நோக்கம் கேள்விக் குறியாக்கப்படுகின்றதா இல்லையா? அதுவும் பழைய ஏற்பாட்டில் தடைசெய்யப்பட்ட திராட்சைரசத்தை தொடர்ந்து தடைசெய்ய அவர் வந்திருப்பாரா? அல்லது அந்த தடையை உடைத்து 'குடி'மக்களுக்கு உற்சாக மூட்ட வந்திருப்பாரா? இப்படி தங்களுக்கு வழங்கப்பட்ட அதிசயத்தின் மூலம் 'குடி'மக்களுக்கு 'நற்செய்தி' அறிவிக்கும் வண்ணமாக அவர்கள் போதையில் மிதப்பதற்கு துணைபுறிந்தவர்கள் தான் தீர்க்கதரிசிகள் என்று சொல்லப்படுவதால் தீர்க்கதரிசிகளின் வருகையின் நோக்கம் கேள்விக்குறியாகிவிடாதா?

அதுமட்டுமல்ல தான் கர்த்தரிடமிருந்து வந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக அவர் செய்த முதல் அதிசயமே இந்த தண்ணீரை மதுபானமாக மாற்றி 'குடி'மகன்களைக் குளிர்வித்ததுதான் என்றும் எழுதிவைத்துள்ளனர்:

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11)

இப்படி தனது அதிசயத்தின் மூலம் 'குடி'மகன்களை உற்சாகமூட்டியதோடல்லாமல் தானும் 'குடி'மகன்களில் ஒருவராகத்தான் இருந்தார் என்றும் குறிப்பாக அவர் வாழ்நாள் முழுவதும் Wine என்னும் மதுபானம் அருந்தக்கூடியவராகவே இருந்தார் என்றும் மக்கள் அவரை 'மதுபானப்பிரியர்' என்றே பரவலாக அழைத்தனர் என்றும் பைபிளில் எழுதிவைத்துள்ளனர் :

எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் (Wine) திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான். அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார். அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் - Winebibber - மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். - லூக்கா 7:34, மத்தேயு 11:19

இந்த வசனத்திலேயே யோவான் ஸ்னானன் மது அருந்தாதவனாக இருந்ததாகவும் ஆனால் இயேசுவோ மதுவை அருந்துபவராக மட்டுமல்ல அதை விரும்பிக் குடிக்கக்கூடியவராகவும் இருந்தார் என்பதாகவும், இது மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது என்பதாகவும் அந்த விமர்சனம் இயேசுவின் காதுகளுக்கும் எட்டியது என்பதாகவும் எழுதிவைத்துள்ளனர்.

எந்த அளவுக்கொன்றால் மதுபானம் உட்பட பழைய ஏற்பாட்டில் தடைசெய்யப்பட்ட அனைத்தையும் அனுமதிக்கும் வகையில் பின்வருமாறு இயேசு போதித்ததாக பைபிளில் எழுதிவைத்துள்ளனர்:

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். - மத்தேயு 15:11

மொத்தத்தில் பழைய ஏற்பாட்டால் தடைசெய்யப்பட்ட மதுபானத்தை தானும் அருந்தக்கூடியவராகவும் மக்களை எல்லாம் மது அருந்த வைத்து வழிகெடுத்தவராகவும், இப்படி போதை அடிமையாக இருந்ததன் மூலம் மேலே நாம் சுட்டிக்காட்டிய அத்தனை தவறான செயல்களுக்கும் சொந்தக்காராக இருந்தார் என்பது போன்றும் இயேசுவை இன்றைய பைபிள் சித்தரிக்கின்து. மட்டுமல்ல, இவர் காலத்தில் வாழ்ந்த பரிசுத்தவான்களில் ஒருவரான யோவான்ஸ்னான் கூட மதுஅருந்தாதவராக இருந்ததாகவும் ஆனால் இயேசுவோ தடைசெய்யப்பட்ட மதுவை விரும்பி குடிக்கக்கூடியவராக இருந்ததாக காட்டி இருக்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்? இயேசுவை எப்படியேனும் இழிவுபடுத்த வேண்டும் என்ற வக்கிரநோக்கம் தானே?

கர்த்தருக்காக பொய் சொல்லாம் என்று புதிய கொள்கையை உதித்த, இயேசுவால் எச்சரிக்கப்பட்ட - யூதர்களைச் சேர்ந்த 'பரிசேயரான' பவுலும், அவரைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்ட பைபிளில் எப்படி இயேசுவைப் பற்றி உயர்வாக காணமுடியும்? இயேசுவின் மீது உன்மையிலேயே பற்று உள்ளவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா? ஒருபக்கம் கர்த்தருக்கு மேலானவராக காட்டி அவரது வருகையைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, மறுபக்கம் அவரை மிகத் தரக் குறைவானவராகவும் 'குடி'மகன்களில் ஒருவராகவும் சித்தரிப்பது தான் அவரை மதிக்கும் லட்சனமா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!

உலகில் இன்றைக்கு எந்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்த மதுபானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? எந்த சமுதாயத்தினரின் முக்கிய விசேஷங்களில் இந்த மதுபானம் முக்கியமான ஒன்றாக பரிமாரப்படுகின்றது? எந்த சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்த மதுபானம் அருந்துவதை 'லேடஸ்ட் ஃபேஷனாக' மாற்ற முயற்சி எடுத்துக்கப்பட்டு கொண்டிருக்கின்றது? கிறிஸ்தவ சமுதாயத்தினர் அதிகமாக வாழும் மேலைநாடுகளில் தானே!

மதுபானத்தை வீட்டுக்கு வீடு, ரோட்டுக்கு ரோடு, உணவு விடுதிகள் என்று அனைத்திலும், தாயும் தந்தையும் மகனும் மகளும் குடும்பத்தார் என்று அனைவரும் சர்வ சாதாரணமாக ஒன்றாக அமர்ந்து குடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம் என்ன? அந்த கேடுகெட்ட கலாச்சாரம் இன்று உலகம் முழுவதும் 'ஃபேஷன்' என்றப் பெயரில் பரவிக்கொண்டிருக்கின்றது என்றால் என்ன காரணம்? கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதிக்கொண்ருக்கக்கூடிய இயேசுவே குடித்தார் என்று பைபிளின் புணையப்பட்ட வரிகள் தானே!?

மது அருந்துவது இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்தில் தடைசெய்யப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கும் - பைபிளின் அதிக புத்தகங்களுக்கும் - சொந்தக்காரரான பவுல் மதுபானம் அருந்துவது பற்றி என்ன சொல்கின்றார்? அது பற்றி அவரின் உபதேசம் தான் என்ன?

நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் - Wine - திராட்சரசமும் கூட்டிக்கொள். - 1 திமோத்தேயு 5:23

என்ன அருமையான போதனைப் பார்த்தீர்களா? ஒரு பரிசுத்த ஆவியால் (?) பேசக்கூடிய ஒரு பரிசுத்தவானின் உபதேசத்தைப் பார்த்தீர்களா? தண்ணீர் மட்டும் குடிக்காமல் திராட்சைரசமென்னும் மதுபானத்தையும் கொஞ்சம் சேர்த்துக்கொள் என்றால் என்ன அர்த்தம்? 'குடிமகன்களுக்கு' சாதகமான இந்த வைர வரிகளை (?) தாங்கி நிற்கும் ஒரு புத்தகம் எப்படி புனித புத்தகமாக இருக்கமுடியும்? இதை அடிப்படையாக கொண்ட ஒரு மதம் எப்படி மனிதனைப் பண்படுத்தும் மார்க்கமாக இருக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?

இந்த அற்புத உபதேசத்திற்கு (?) சொந்தக்காரரான பவுலும் அவரைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்ட பைபிளில் இயேசுவை 'மொடக் குடிகாரர்' என்று எழுதப்பட்டதில் யாருக்கும் எந்த ஆச்சரியமும் ஏற்படப்போவதில்லை.

அடுத்து மற்றொன்றையும் நாம் இந்த இடத்தில் தெளிவு படுத்த விரும்புகின்றோம் :

இயேசுவை பைபிளில் குறிப்பிடப்படுவது போன்று இப்படிப்பட்ட கீழ்தனமாவராக முஸ்லீமகளாகிய நாங்கள் ஒருபோதும் கருதவில்லை - கருதவும் கூடாது. இயேசு அவர்களை முழுக்க முழுக்க ஒரு பரிசுத்தவானாகவும் மிகச் சிறந்த தீர்கதரிசியாகளில் ஒருவராகவுமே நாங்கள் நம்புகின்றோம். அவ்வாறு தான் எங்களுக்கு இஸ்லாம் அவரைப் பற்றி எடுத்துரைக்கின்றது.

அவரது முதல் அதிசயம் தண்ணீரை மதுபானமாக மாற்றி குடிமகன்களை உற்சாகமூட்டியவர் என்று பைபிள் கூறுகின்றது. குர்ஆனோ, இயேசுவை அதிசயமாக பெற்றுக்கொண்டு முதன் முதலில் தனது சமூகத்தாரிடம் வந்த பொழுது தனது தாய்க்கு ஏற்பட்ட கலங்கத்தைத் துடைக்கும் வண்ணமாக பச்சிளம் குழந்தையாக இருந்தபோது பேசி தனது முதல் அதிசயத்தை தொடங்கினார் என்கிறது. (இந்த அதிசயம் பைபிளில் மறைக்கப்பட்டுவிட்டது)

இயேசு தனது பரிசுத்த தாய் மரியாளை அவமதித்தவராக பைபிளில் காட்டப்படுகின்றது. ஆனால் குர்ஆனோ தனது தாயை மதித்து நடக்கக்கூடிய ஒழுக்கச்சீலர்களில் ஒருவராக இருந்தார் என்று கூறி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள கலங்கத்தை துடைக்கின்றது.

தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களுடைய பெற்றோரையும் மதிக்காதவராகவும், இன்றைய ரௌடிகளும், பொறுக்கிகளும் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களின் பெற்றோர்களைத் தரக்குறைவாக திட்டக்கூடியவராகவும் இயேசு நடந்துக்கொண்டார் என்று பைபிள் கூறுகின்றது. ஆனால் குர்ஆனோ அவர் அப்படிப்பட்ட தரம் தாழ்ந்தவர் அல்ல என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

அவ்வளவு ஏன்? அவர் விபச்சாரசந்ததியில் பிறந்ததன் மூலம் பரிசுத்தவானாக கூட வரமாட்டார் என்று பைபிள் கூறுகின்றது. ஆனால் குர்ஆனோ அவர் கண்ணியமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அவர் மிகச்சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் அவரைப் போற்றிப் புகழ்துரைக்கின்றது. எப்படிப் பார்த்தாலும் பைபிளில் இயேசு மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து கலங்கத்தையும் குர்ஆன் துடைத்து எரிகின்றது. உன்மையிலேயே இயேசுவை நேசிக்கின்றோம் என்று கூறுபவர்கள் இவற்றை எல்லாம் ஆழ்ந்து சிந்தித்து பார்க்கவேண்டும். உங்களின் நேர்வழிக்காக நாங்கள் ஏக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

மதுபானம் பற்றி திருக்குர்ஆன்:
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ''அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது'' (நபியே! ''தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ''(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்'' என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இறைவன் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (அல் குர்ஆன் 2 : 219)

நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5 : 90 - 91)

குறிப்பு: Wine என்னும் திராட்சைரசம் என்பது ஏதோ போதையை ஏற்படுத்தாத, திராட்சைப் பழத்திலிருந்து எடுக்கப்படும் ஒருவகைப் பழச்சாறு என்று ஒரு சில கிறிஸ்தவர்களும் பல அப்பாவி பொதுமக்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். சில கிறிஸ்தவ கடைகளிலும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட போதை இல்லாத பழச்சாற்றை திராட்சைரசம் என்றப்பெயரில் விற்பனையும் செய்யப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் இயேசு குடித்த திராட்சைரசம் என்பது போதை இல்லாத இது போன்ற பழச்சாறுதான் என்று மக்களை நம்பவைப்பதற்காக - ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷி'நரி'களால் செய்யப்படும் தந்திர வேலையே இது! ஆனால் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள படி இயேசு தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டிது - மதுபானவகையைச்சேர்ந்த போதைதரக்கூடிய Wine என்னும் திராட்சைரசத்தையே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். லோத்து குடித்துவிட்டு அவரது மகள்களுடன் உடலுறவு கொண்டதற்கும், நோவா குடித்துவிட்டு அநாகரிகமாக நடந்துக்கொண்டதற்கும் எந்த திராட்சைரசம் காரணமாக இருந்ததோ அதே திராட்சைரசத்தை தான் இயேசுவும் குடித்தார் மற்றவர்களையும் குடிக்கவைத்தார் என்று பைபிள் குறிப்பிடுகின்றது. மதுவையும் திராட்சைரசத்தையும் யோவான்ஸ்னானன் குடிக்கமாட்டான் என்று எந்த திராட்சை ரசத்தை குறித்து சொல்லப்பட்டதோ அதே திராட்சைரசத்தைத்தான் இயேசு குடித்தார் என்று பைபிளில் எழுதிவைத்துள்ளனர். ஆங்கில பைபிள்களில் தடைசெய்யப்பட்ட இடங்களிலும் சரி, இயேசு குடித்ததாக சொல்லப்படும் இடங்களிலும் சரி, அனைத்து இடங்களிலும் 'Wine' என்றே குறிப்பிடப்படுகின்றது.

ஒரு வாதத்திற்காக இன்றைய கிறிஸ்தவ மிஷி'நரி'கள் பிரச்சாரம் செய்வது போல் திராட்சைரசம் என்பது போதை இல்லாத ஒருவகைப் பழச்சாரறுதான் என்றால் பிறகு ஏன் பழைய ஏற்பாட்டில் அதை தடை செய்யப்படவேண்டும்? பிறகு ஏன் அதைக் குடித்ததால் நோவாவும், லோத்தும் அநாகரிகமாக நடந்துக்கொள்ள வேண்டும்? யோவான்ஸ்னானன் அதைக் குடிக்கமாட்டான் என்று ஏன் சொல்லப்படவேண்டும்? பவுல் 'கொஞ்சம்' கூட்டிக்கொள் என்று ஏன் உபதேசம் செய்யவேண்டும்? சிந்திக்க வேண்டாமா?

பழைய ஏற்பாட்டால் தடைசெய்யப்பட்ட, நோவா, லோத்து ஆகியோர் அருந்திய, இயேசு தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டிய, பவுல் கொஞ்சம் சேர்த்துக்கொள் என்று உபதேசம்(?) செய்த அனைத்தும் மதுவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் தான். அதற்கான போதுமான பைபிள் ஆதாரங்களை நாம் இங்கே கொடுத்துள்ளோம். இதன் பிறகும் யாரேனும் மறுத்தால் இன்னும் பல கூடுதல் தகவல்களுடன் விரிவான விளக்கமளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கட்டுரை நீண்டுக்கொண்டே செல்வதால் பல கூடுதல் தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Saturday, November 29, 2008

கர்த்தருக்காக பொய் சொல்லலாம்!? - பவுல்

பவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1
யார் இந்த புனித பவுல்? பாகம் 2
இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? பாகம் 3

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன? பாகம் 4
நியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா? பாகம் 5
விருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன? பாகம் - 6



பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 7)

பவுல் கூறுகின்றார் :

தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது. சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? - ரோமர் 3:4-7

பவுல், தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்கைசயாக ஒப்புக்கொள்கின்றாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக புனித வேதமாக இடம்பெற்றுள்ளது.

பவுல் கூறுவதைக் கேளுங்கள் :

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். - 1 கொரிந்தியர் : 9:19-23


தான் ஒரு தந்திரக்காரன் என்று பவுல் ஒப்புக்கொள்வதையும் பாருங்கள் :

அப்படியாகட்டும். நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை. ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். - 2 கொரிந்தியர் 12:16

பைபிள் என்பது மனிதனின் கற்பனையிலும் கட்டுக்கதையிலும் உருவானது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன், வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்று இவ்வளவு தெளிவாகப் பவுலே வாக்குமூலம் தருகின்றார். கிறிஸ்தவ நன்பர்களே மேலே உள்ள பைபிளின் இந்த வாசகத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்று கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்துவிடுகின்றதல்லவா?

கர்த்தருக்காக பொய்சொல்லலாம் என்றும் கர்த்தருக்காக பச்சோந்திதனமாக எல்லாருக்கும் எல்லாமுமாக நடக்கலாம் என்று சொல்லும் பவுலின் வார்த்தைகள் அனைத்தும் கர்த்தரின் மூலம் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு தான் எழுதப்பட்டது என்று எப்படி நம்ப முடியும்? இந்த புதிய கிறிஸ்தவமதத்திற்கு சொந்தக்காரான பவுல், இயேசுவே சொல்லாத - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான, பழைய ஏற்பாட்டிற்கு எதிரான பல புதிய கொள்கையை இயேசு எனக்கு நேரடியாக போதிக்கின்றார் என்று சொன்ன அனைத்தும் பச்சைப் பொய்தானே?

இயேசு எனக்கு அதியசமான முறையில் காட்டியளித்தார். அதன் மூலம் அவர் என்னை தெரிந்தெடுத்துக்கொண்டார் என்று பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொன்ன சம்பவத்திலும் அதற்கு பிறகு சீஷர்களை சந்தித்தாக சொல்லப்பட்ட சம்பவத்திலும் எப்படிப்பட்ட பொய்கள் மலிந்து கிடக்கின்றது என்பதை சென்ற பதிவுகளில் நாம் எடுத்துக்காட்டினோம். நாம் எடுத்துக்காட்டிய அத்தனையும் உன்மை என்பது இந்த பவுலின் கூற்றின் மூலம் நிரூபனமாகின்றதல்லவா?

இதன் பிறகும் கூட பைபிளை இறைவேதம் எனவும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு எங்கேனும் இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள் :

என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும் என்னைச் சகித்துமிருககிறீர்களே. - 2 கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம். அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். - 2 கொரிந்தியர் 11:16,17

மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன். நீங்களே இதற்கு என்னைப் பல வந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்பட வேண்டியதாயிருந்ததே. - 2 கொரிந்தியர் 12:11

இவையாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும் பேசுவது ஆண்டவரல்லர், தம் தைரியத்திலேயே பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக்கொள்கிறார் பவுல். அந்த புத்தி கெட்ட உளறல்களும் பிறரது வற்புறுத்தலுக்காகவும் தன் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாகவும் - அது இடம்பெற்ற புத்தகம் இறைவேதமாகவும் இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளது. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிளை இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்? எங்களையும் நம்பச் சொல்கின்றீர்கள்?

மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள் :

மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது - 1 கொரிந்தியர் 7:12

அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். - 1 கொரிந்தியர் 7:25

ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும், தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன். - 1 கொரிந்தியர் 7:40

பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். - பிலமோன் - 1:19

இந்த வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வருவதென்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டுப் பவுல் என்ற சவுல் தமது சொந்த சரக்குகளைக் கலந்து வேதம் என்று அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்துப் புது மார்க்கம் கண்டார் என்பதை தவிர வேறன்ன?

பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் அந்தத் தடையை இவர் சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவை இவர் செய்தார். இவற்றையெல்லாம் இறைக்கட்டளைப்படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார்.

இப்படியெல்லாம் இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர் அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குகமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர் பலமுறை பல்டியடித்துள்ளதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்:

பின்பு அவர்கள் அவனைநோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாய் கூட்டங்கூடுவார்கள். ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும். அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகெண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும். அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள். விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும்சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும்வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான். - அப்போஸ்தலர் 21:20-26

பைபிள் என்பது பவுலும் அவரது கூட்டாளிகளின் சொந்தத் தயாரிப்பு என்பதும் அதில் கூறுகின்ற போதனைகளில் அவருக்கே உறுதி இல்லை என்பதும் கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும் மோசேயின் நியாயப்பிரமாணங்களை இவர் அலட்சியப் படுத்தியவர் என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா?

பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கையில் கிறிஸ்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்றைக்கு கிறிஸ்தவர்களில் பலர் நாங்கள் பரிசுத்த ஆவியின் உதவியால் நொண்டியை குணமாக்குகின்றோம், குருடர்களை பார்வையுடையவனாக்குகின்றோம், நோயை குணப்படுத்துகின்றோம் என்று பச்சையாக பொய் சொல்லி பல அப்பாவிகளை தங்கள் வழிக்குக் கொண்டுவருவதையும் அன்றாடம் பார்க்கின்றோம். இன்னும் சில போதகர்கள் தன்னை இயேசு ஒரு பெரிய கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கச் சொல்லியுள்ளார் என்றும் வேறு ஒருவர் இயேசு தன்னை டிவி சேனல் தொடங்க சொல்லியுள்ளார் என்றெல்லாம் புளுகுவதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய் சொல்வது தவறல்ல, அது நன்மையான ஒன்றே என்ற பவுலின் மேற்கூறப்பட்ட வசனங்களை வைத்தே அவர்கள் இப்படியெல்லாம் பொய்சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

ஒரு குருடனையே நொண்டியையோ அதிசயம் செய்து குணமாக்குகின்றேன் என்று ஒருபுறம் மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபுறம் இதே கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்காக மருத்துவமணைகளை நடத்துவது ஏன்? மக்களை ஏமாற்றத்தானே? அப்படி குருடணை குணமாக்குகின்றேன் - நொண்டியை நடக்க வைக்கின்றேன் என்று சொல்லக்கூடியவர்கள் தாங்கள் செட்டப்செய்து வைத்துள்ளவர்களைத்தான் குணமாக்குவதாக தங்களது நிகழ்ச்சிகளில் காட்டுவார்களே யொழிய நாம் ஒருவரைக் கொடுத்து இந்த நொண்டியை குணமாக்குங்கள், இந்த பார்வையுடையவனை பார்வடையச் செய்யுங்கள் என்று சொன்னால் அவர்களால் முடியுமா? (இதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களிடமும் சவாலாகவே கேட்கின்றோம்) ஆனால், முடியாது! காரணம் அவை அனைத்து மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களால் சொல்லப்படும் பச்சைப் பொய்! இதை மறுக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் பிறகு எதற்கு MBBS, MD, மருத்துவ கல்லூரி, மருத்துவ படிப்பு? இவற்றை எல்லாம் விட்டு விட்டு கிறிஸ்தவ போதகராக மாறி இந்த வேலையை செய்யத் தொடங்கி விடலாமே!

உன்மை இவ்வாறிருக்க இதையும் மீறி இன்றும் இவற்றை இவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய்சொல்லி மக்களை ஏமாற்றி கிறிஸ்தவத்தின் பக்கம் எப்படியாவது அழைத்தால் அது தவறல்ல என்று பவுல் சொன்ன மேற்கூறப்பட்ட வசனங்கள் தானே அடிப்படை?

அது மட்டுமல்ல பல முஸ்லீம்கள் கிறிஸ்தவராக மாறினர், முஸ்லீம் போதகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார், ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து அதிசயமாக சந்தித்து அவருக்கு நீங்காத நோயை நீக்கினார், அதனால் அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்று இன்றைய கிறிஸ்தவர்கள் தங்கள் தளங்களில் எதையாவது எழுதிவைப்பதற்குக் காரணம் கர்த்தருக்காக பொய்சொல்லி கிறிஸ்தவத்திற்கு மகிமை ஏற்படுத்தலாம் என்ற பவுலின் இந்த வசனங்கள் தானே?

மொத்தத்தில் கிறிஸ்தவ மிஷி'நரி'களின் இந்த எல்லாவிதமான ஏமாற்று செயல்கள் அனைத்திற்கும் காரணம் கர்த்தருக்காக பொய்சொல்லலாம் -அதனால் நாம் பாவி என்று தீர்க்கப்படமாட்டோம் - இது போல் நான் பலருக்கும் அவர்கள் போலவே வேடமிட்டு நடித்துள்ளேன் - நானே நம்பாவதவற்றை நான் நம்பியது போல் அவர்களை ஏமாற்றினேன் - என்னை நீங்களும் பின்பற்றுங்கள் - என்று இன்றைய கிறிஸ்தவமதத்தின் சொந்தக்காரரான பவுல் சொன்ன இந்த தவறான உபதேசங்கள் தானே?

இவற்றைத்தான் பவுல் மற்றொரு வசனத்தில் மிகத் தெளிவாக சொல்லுகின்றார் :

இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோப்படுகிறேன், இன்னமும் சந்தோப்படுவேன். பிலிப்பியர் : 1:18

இப்பொழுது உன்மை புரிகின்றதா? எப்படியாவது - பொய்யைச் சொல்லியாவது - வஞ்சகம் செய்தாவது - கிறிஸ்தவத்தைப் பரப்பியாக வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுகின்றார் என்றால் என்ன அர்த்தம்? சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!

இப்படி புதுமார்க்கம் கண்ட பவுலை எப்படி பரிசுத்த ஆவியால் பேசக்கூடியவர் என்றும், அவர் எழுதியதெல்லாம் புனித புத்தகம் என்றும் நம்ப முடியும்? யோசிக்க வேண்டாமா கிறிஸ்தவர்களே! இந்த பவுல் சொன்ன புதிய மார்க்கத்தை - பொய்யான போலியான மார்க்கத்தை விட்டு வெளியேறி சத்திய இஸ்லாத்தின் கருத்துக்களை சற்று ஆய்வு செய்யுங்கள்! சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

தொடரும்...

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Tuesday, November 18, 2008

விருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன?

பவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1

யார் இந்த புனித பவுல்? பாகம் 2

இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? பாகம் 3

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன? பாகம் 4

நியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா? பாகம் 5


பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 6

விருத்தசேதனம் (சுன்னத்) என்பது எந்த அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த, பல பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து மனிதனைத் பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த முறை என்பது பலரும் அறிந்ததே. விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்திலும் இதை யாராலும் மறுக்க முடியாது என்பதோடு இதை அனைவரும் செய்ய வேண்டும் என்றே மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

விருத்தசேதனம் என்ற முறை முதன் முதலில் கர்த்தரால், ஆபிரகாம் மூலம் அவர் காலம் முதல் இனி பிறக்கும் ஆண்மக்கள் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்டது என்று பைபிள் கூறுகின்றது. அதை பழைய ஏற்பாட்டு வசனங்கள் பின்வருமாறு உறுதிபடுத்துகின்றது:

'உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். - ஆதியாகமம் 17: 6

நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கைத் தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன் - ஆதியாகமம் 17:7 (WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பு)
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். - ஆதியாகமம் 17:10-11

உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணவேண்டியது அவசியம். இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. - ஆதியாகமம் 17:13

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். - ஆதியாகமம் 21:4

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். - லூக்கா 2:21

விருத்தசேதனம் என்பது கர்த்தரால், முடிவில்லாத - நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்ட - கண்டிப்பாக அனைவரும் செய்யவேண்டும் - என்று வலியுறுத்தப்பட்ட ஒரு சட்டம் என்பது மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தப்படுகின்றது.

ஆனால், இயேசுவை அதிசயமாக தரிசித்ததாக (?) ஒரு பொய்யைச்சொல்லி தன்னை கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்று சொல்லிக்கொண்ட பவுல், நியாயப்பிரமாணங்களை - மோசேயின் சட்டங்களை பின்பற்றுவது தனது புதிய கொள்கையின் படி தேவையற்றது என்று போதித்ததுடன் அதை பின்பற்றுபவன் இரட்சிப்பை பெற முடியாது என்றும் கூறினார் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மக்களை இயேசு போதித்த கொள்கையிலிருந்து வழிகெடுக்க பவுல் கையில் எடுத்த மிக முக்கியமான நடைமுறை, கர்த்தரால் அனைத்து ஆண்மக்களுக்கும் செய்யப்படவேண்டிய நித்திய உடன்படிக்கை என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட விருத்தசேதனம் என்ற முறையையே! காரணம் அன்றைய கால மக்கள் எந்த சட்டத்தை பின்பற்றினார்களோ இல்லையோ அனைத்து ஆண்மக்களுக்கும் கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று கர்த்தரால் வலியுறுத்தப்பட்ட விருத்தசேதன முறையை மிக அவசியமானது என்றென்னி செய்துவந்தனர். காரணம் அதை விடுபவன் 'ஜனத்தில் இராதபடிக்கு அருப்புண்டு போவான்' என்று கர்த்தர் இட்ட சாபமே என்பதை பைபிளின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது :

நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். - ஆதியாகமம் 17:14

இந்த அளவுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்ட, கர்த்தரின் இந்த நித்திய உடன்படிக்கையை விட்டும் மக்களை திசைத்திருப்பி விட்டால் தனது தவறான கொள்கைகளை இலகுவாக திணித்துவிடலாம் என்ற எண்ணத்துடன், தனது புதிய கொள்கையின் மூலம் இதை தேவையற்ற ஒன்று - இதை செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை என்று போதிக்கத் தொடங்கினார் பவுல். அதுவும் இந்த தவறான கொள்கையை காத்தரின் பெயராலும், பழைய ஏற்பாட்டை தானும் பின்பற்றியதுடன் மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்திச் சொன்ன இயேசுவின் பெயராலும் போதிக்கத் தொடங்கினார் :

இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒருபிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். - காலத்தியர் : 5: 2

கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். - காலத்தியர் : 5: 6

பவுல் சொல்வது போன்று விருத்தசேதனம் செய்வதால் கிறிஸ்துவினால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது என்றால் அதை பவுலின் காலத்திலேயே வாழ்ந்த இயேசு கிறிஸ்துவே போதித்து விட்டு சென்றிருப்பாரே? அவர் யாரையும் செய்யாதீர் அதனால் எந்த ஒரு பலனும் - புண்ணியமும் இல்லை என்று கூறியிருப்பாரே? ஏன் அப்படி கூறவில்லை. மாறாக, நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட சட்டங்களை செய்யாதே என்று போதிப்பவன் வழிகேடன் - எனது கொள்கைக்கு மாற்றமானவன் என்று தானே போதித்தார் என்பதை எல்லாம் கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

நித்திய உடன்படிக்கை என்றால் என்ன?
அது மட்டுமல்ல மேலே நாம் எடுத்துக்காட்டிய ஆதியாகமம் வசனங்களில் இந்த விருத்தசேதன முறையை கர்த்தர் மனிதனுக்கு ஏற்படுத்திய நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்றால் என்ன?

'இனி மாற்றப்படவே முடியாத நிலையான ஒன்று' அல்லது 'முடிவில்லாத ஒன்று' என்றும் அர்த்தம் வரும். இது ஏதோ சக மனிதர்களுக்குள் செய்துக்கொண்ட ஒப்பந்தமாக பைபிள் சொல்லவில்லை. மாறாக கடவுள் ஆபிரகாமுக்கு செய் என்று கட்டளை இட்டதுடன் இதை அனைவரும் செய்தே ஆகவேண்டும் என்றும் இது நித்திய உடன்படிக்கை - இதை செயல்படுத்தாதவன் 'அறுப்புண்டு போவான்' என்று வலியுறுத்தவும் செய்கின்றார். இதை இயேசுவும் செய்திருக்கின்றார். (பைபிளின் படி) அனைவரும் நியாயப்பிரமானங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியிருக்கின்றார். அதை நானும் பின்பற்றத்தான்வந்துள்ளேன், நீங்களும் பின்பற்றுங்கள் என்றும் சொல்லியிருக்கின்றர். ஆனால் இவற்றுக்கெல்லாம் மாற்றமாக, அதே இயேசுவின் பெயராலேயே கர்த்தரின் மாற்றப்படமுடியாத நித்திய உடன்படிக்கையை எதிர்த்து தனது தவறான கொள்கையை போதிக்கின்றார் பவுல். இவரின் இந்த தவறான வழிகாட்டுதலைத் தான் இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர்.

சரி இவரின் இந்த கூற்றிலாவது உறுதியாக இருந்தாரா? என்றால் அதுவும் கிடையாது. இவர் விருத்தசேதனம் தேவையில்லை என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலத்திலேயே, வேறு ஒருவருக்கு இவரே விருத்தசேதனம் செய்துவிட்டதாக அப்போஸ்தலருடைய நடபடிகள் கூறுகின்றது:

'அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.' - அப்போஸ்தலர் 16 : 3

கடவுலின் பெயரால் போதிக்கக்கூடியவர் - உன்மையில் அது தான் சரியானதாக இருந்தால் அதை யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சுறுதியுடனல்லவா போதித்திருக்க வேண்டும்? இவர் சாதாரனமான பாமரனாக இருந்தால் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால், பரிசுத்த ஆவி என்ற 'பவர் ஃபுல் சக்தி' தனக்கு வழிகாட்டுகிறது(?) - அது தன்னைப் பாதுகாக்கின்றது(?) என்று சொல்லிக்கொண்டவர், அதன் மூலம் பல அதிசயங்களை செய்தவர்(?) மற்றவனுக்கு பயந்து செயல்படவேண்டிய அவசியம் என்ன? இந்த பொய்யான நயவஞ்சகத்தனமான வேலை எதற்கு? விருத்தசேதனம் தேவையற்றது என்றால் அதை ஏன் அடுத்தவனுக்கு செய்து விடவேண்டும்? தனது கொள்கை உன்மையானதாக இருந்தால் அதையாருக்கும் அஞ்சாமல் உரத்து சொல்லவேண்டியது தானே? இதன் மூலமே பவுல் எப்படிப்பட்டவர் என்பது புரிகின்றதல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே!(பவுல் எப்படிப்பட்டவர் என்பதற்கு அடுத்த கட்டுரைகளில் விரிவான விளக்கம் வருகின்றது இறைவன் நாடினால்...)

இவரைப் போன்றவர்களைக் குறித்து தான் இயேசு கூறினார் :

ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். - மத்தேயு 5:19

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. - மத்தேயு 23:23

இந்த இயேசுவின் போதனைகள் அனைத்தும் (பரிசேயரைச் சேர்ந்த ) இந்த பொய்யர் பவுலுக்குப் பொருந்துகின்றதா இல்லையா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே! நீங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகின்றோம் என்றப்பெயரில் இயேசுவைப் பின்பற்றுகின்றீர்களா அல்லது பவுலைப் பின்பற்றுகின்றீர்கள் சிந்தியுங்கள் சகோதரர்களே!


மீண்டும் நினைவுட்டுகின்றோம். இந்த விருத்தசேதனம் :
கர்த்தரால் சொல்லப்பட்ட கட்டாயம் செய்யபட வேண்டிய நித்திய உடன் படிக்கை என்று பைபிள் கூறுகின்றது. இந்த உடன்படிக்கையில் மாற்றமோ - முடிவோ ஏற்படாதவகையில் இருக்கவேண்டும் என்பதற்காக இது முடிவில்லாத - நித்திய - உடன்படிக்கை என்று கார்த்தரால் சொல்லப்பட்டது. 'இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனதுசந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கைத் தொடரும். (ஆதியாகமம் 17:7 (WBTC மொழிப்பெயர்ப்பு))

விருத்தசேதனம், இயேசுவால் செயல்படுத்தப்பட்டதுடன், (விருத்தசேதன சட்டம் இடம்பெற்றுள்ள) நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டவைகளை அனைவரும் செயல்படுத்த வேண்டும் என்றும், அவைகளில் சொல்லப்பட்டவைகளை செய்யாதவனும், தானும் பின்பற்றாததுடன் மற்றவர்களை பின்பற்றவேண்டாம் என்று சொல்பவனும் வழிகேடன் என்றும் சொல்லப்பட்டது.

மட்டுமல்ல, மருத்துவ ரீதியாக இது மனிதனுக்கு பயனள்ள முறை என்பதும், பாலியல் ரீதியான பல பிரச்சனைகளிலிருந்து மனிதனைப் பாதுகாக்கக்கூடிய மிக சிறந்த வழிமுறை என்றும் மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

இவற்றில் எந்த ஒன்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சம்பவத்தின் மூலம் இயேசுவை தரிசித்தேன் என்று சொல்லிக்கொண்ட பவுலின் தவறான கொள்கையையே தற்போது பின்பற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!

கார்த்தரின் உடன்படிக்கை என்ற வகையிலாவது அல்லது இயேசுவின் போதனை என்ற வகையிலாவது, அல்லது மருத்துவரீதியிலாவது - எப்படிப் பார்த்தாலும் எல்லாவகையிலும் நன்மை பெற்றுத்தரக்கூடிய இந்த முறையை - செயல்படுத்தவேண்டிய இந்த சட்டத்தை - பவுல் சொன்னார் என்பதற்காக உங்களின் அறியாமையால் நன்மையை இழந்துக்கொண்டிருக்கின்றீர்கள் சகோதரர்களே!

இப்படி நீங்கள் பவுலை பின்பற்றுவதால் (இயேசுவின் போதனைப்படி) மரணத்திற்குப் பிறகு வரும் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பதும் அரிது, விஞ்ஞானிகள் சொல்வது போல் இந்த முறையை கைவிடுவதால் இவ்வுலக வாழ்விலும் பல சிரமங்கள்... இது தேவையா? சிந்தியுங்கள் சகோதரர்களே!.

இயேசுவின் பெயரால் அவருக்கு எதிராக இன்னும் எத்தனை எத்தனை குளறுபடிகளை பவுல் செய்துள்ளார் என்பதை அடுத்தடுத்து பதிவுகளில் பார்ப்போம்.

கர்த்தர் நாடினால் அடுத்த பதிவில் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Thursday, November 13, 2008

நியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா?

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 1
.யார் இந்த புனித பவுல்? - பாகம் 2
இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? - பாகம் 3
பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன? பாகம் 4


பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 5
.
நியாயப்பிரமாணங்களை - கர்த்தரின் கற்பனைகளை - பின்பற்றுவது தேவையற்றது என்று போதித்தால் தான் அதற்கு மாற்றமான தனது புதிய கொள்கைகளைப் திணிக்க முடியும் என்பதற்காக, அவை அனைத்தும் ஏட்டளவில் தானேயொழிய செயலளவில் தேவை இல்லை, அவை பலவீனமாகிவிட்டது, பயணற்று போய்விட்டது, அதைப் பின்பற்றுபவன் இரட்சிப்பைப் பெறமுடியாது, இயேசு தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக்கொடுத்ததன் மூலம் நம்மை நியாயப்பிரமானத்தை விட்டும் நீங்களாக்கினார் என்று தனது புதிய கண்டுபிடிப்பை - தனது துர் போதனைகளை போதிக்க தொடங்கினார் பவுல். இவை தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. இன்றைய சர்ச்சுகள் போதிப்பதும், இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதும் பவுலின் இந்த சொந்தக்கற்பனையையே அன்றி இயேசுவின் கொள்கைகளையோ அல்லது இயேசு போதித்த கோட்பாடுகளையோ அல்ல. உன்மையில் சொல்லப்போனால் இயேசுவுக்கும் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றிக்கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

பவுலின் இந்த புதிய கொள்கை என்பது முழுக்க முழுக்க இயேசுவின் கொள்கைக்கு மாற்றமானதும் அவரின் போதனைகளுக்கு எதிரானதுமாகும் என்பதை இன்றைய பைபிளே தெளிவுபடுத்துகின்றது. உன்மையில் நியாயப்பிரமானங்கள் குறித்தும், கர்த்தரின் கற்பனைகள் குறித்தும் இயேசுவின் போதனை தான் என்ன?

நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல. நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதையெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிரா விட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-20)

இந்த வசனங்களின் மூலம் நியாயப்பிரமாணம் மற்றும் பழைய ஏற்பாட்டைப் பற்றிய இயேசுவின் நிலைபாடு என்ன வென்று தெளிவாக புரிந்திருக்கும்.

இயேசு இந்த வசனங்களின் மூலம் நியாயப்பிரமானத்தை தான் அழிக்கவரவில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதோடு, அதை நிறைவேற்றவே - அதை செயல்படுத்தவே - வந்தேன் என்பதையும் உறுதிப்படுத்துகின்றார். அது மட்டுமல்ல நியாயப்பிரமானத்தை கைக்கொள்ளுவதன் மூலமே ஒருவன் பரலோக இராஜ்ஜியத்தில் பெரியவன் என்பபடுவான் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளவைகளை மீறி செயல்படுவதுடன், அதையே மற்றவர்களுக்கும் போதிப்பவன் பரரோக இராஜ்ஜியத்தில் சிறியவன் எனப்படுவான் - அவன் வழிகேடன் - என்றும் போதிக்கின்றார். இது பற்றி இயேசு சொன்ன வார்த்தைகளை நன்கு கவனிக்க வேண்டும்:

இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.

இந்த வசனங்களை WBTC பைபிளின் மொழிபெயர்ப்பில் இன்னும் தெளிவாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:

... ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக் கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதை கடைப்பிடிக்க வேண்டாமென்று கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால் கட்டளைகளை கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்க சொல்லுகிறவன் பரலோக இரஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பிடிப்பான் - மத்தேயு 5:19

இப்படிப்பட்ட இயேசுவின் எச்சரிக்கைளுக்கு மாற்றமாக - அவரின் இந்த வார்த்தைகளுக்கு நேர் முரணாக - இயேசுவை அதிசயமான முறையில் தரிசித்ததாக ஒரு பொய்யை சொல்லி தனக்கு இயேசுவே நேரடியாக போதிக்கின்றார் என்று சொன்ன பவுல், எப்படிப்பட்ட ஒரு தவறான கொள்கையை - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான ஒரு கொள்கையை - போதிக்கின்றார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நியாயப்பிரமானத்தை பின்பற்றாதே என்று சொல்பவன் வழிகேடன், அப்படிப்பட்டவன் இரட்சிப்பை பெறமுடியாது என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்க அதற்கு மாற்றமாக போதிக்கும் பவுலின் கொள்கை எப்படி பரலோக இராஜ்யத்தைப் பெற்றுத் தரும்? இவரின் கொள்கையைப் பின்பற்றுபவன் எப்படி நித்திய ஜீவனை அடைய முடியும்? என்பதை கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

அது மட்டுமல்ல இயேசு தன் சீடர்கள் உட்பட அனைவரும் யூதர்களைக் காட்டிலும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டதை - நியாயப்பிரமாணத்தை - அதிகம் பின்பற்ற வேண்டும் என்றே வலியுறுத்தினார் என்று பைபிள் கூறுகின்றது :

'பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள். அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.' - மத்தேயு - 23:1-3

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருக்கக்கூடியவர்கள் - நியாயப்பிரமாணத்தை - மோசேயின் சட்டங்களைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள் - சொல்வது போன்று நியாயப்பிரமாணங்களை - கர்த்தரின் கற்பனைகளை - நிங்களும் பின்பற்ற வேண்டும் அதன்படி செயல் படவேண்டும் என்று தனது சீஷர்களுக்கும், மக்களுக்கும் உபதேசிக்கின்றார்.

(பைபிளின்படி) தான் மட்டுமல்ல தன்னைப் பின்பற்றும் அனைவரும் நியாயப்பிரமாணத்தை - பழைய ஏற்பாட்டை - பின்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கொள்கை - அவரது நிலைபாடு என்பது மிகத் தெளிவாக மேற்கூறப்பட்ட வசனங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தப் படுகின்றது. இப்படி மக்களுக்கும் தனது சீஷர்களுக்கும் தெளிவாக உபதேசித்திருக்க சில ஆண்டுகளிலேயே அதற்கு மாற்றமாக பவுலுக்கு எப்படி நியாயப்பிரமாணம் தேவையற்றது பலவீனமடைந்துவிட்டது அதை பின்பற்றத் தேவையில்லை என்று இயேசு சொல்லியிருப்பார்? அப்படி நியாயப்பிரமானமும் கர்த்தருடைய கற்பனைகளும் தேவை இல்லை என்றால் அதை அவரே சொல்லியிருக்கலாமே? ஆனால் அதற்கு மாறாக பவுல் போன்று நியாயப்பிரமானம் தேவையற்றது என்று போதிப்பவன் வழிகேடன் - பரோலக இராஜ்யத்தில் சிரியவன் எனப்படுபவன் என்று தானே போதித்தார்!

இதுமட்டுமல்ல ஒருவன் இயேசுவிடம் நித்திய ஜீவனை அடைவதற்கு என்ன செய்யவேண்டும்? எதைப் பின்பற்றவேண்டும் என்று கேட்கின்றான். அதற்கு இயேசு சொன்ன பதிலைப் பாருங்கள் :

அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். - மத்தேயு 16-19

இயேசுவின் போதனைகள் அனைத்தும் இப்படித்தான் இருந்தது. (பைபிளின்படி) இயேசுவைப் பொருத்தவரையிலும் பழைய ஏற்பாட்டைப் பொருத்தவரையிலும் நியாயப்பிரமானத்தைத் உறுதியாகப் பிடித்து அததைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு மாற்றமாக இயேசுவிற்குப் பிறகு ஒரு பொய்யான சம்பவத்தின் மூலம் அவரை தரிசித்ததாக கூறிய பவுல், தனது தவறான கொள்கையை அதே இயேசுவின் பெயராலேயே மக்கள் மத்தியில் திணிக்கின்றார். அதை தனது எபிரேயர் என்ற புத்தகத்தில் பின்வருமாறு தெரியப்படுத்துகின்றார்:

முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை. அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். - எபிரேயர் - 7:18-19

இந்த வசனத்தின் மூலம் இயேசுவுக்கு முன்னும் இயேசுவும் போதித்த அனைத்தும் பவவீனமடைந்து விட்டதாகவும் பயனற்று போய்விட்டதாகவும் அதனால் மாற்றப்பட்டது என்றும் பவுல் கூறுகின்றார். அது மட்டுமல்ல நியாயப்பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை என்றும் அதிக நன்மையான நம்பிக்கையை அது வருவிக்கவில்லை என்றும், எனவே அது மாற்றப்பட்டது என்றும் தன் சுய கருத்தை தினிக்கின்றார்.

பவுலின் இந்த புதிய கொள்கையின் மூலம் எப்படிப்பட்ட தவறான - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான ஒரு கொள்கையை போதிக்கின்றார் நாம் கவனிக்க வேண்டும். நியாயப்பிரமாணம் உட்பட முந்தின கட்டளைகள் அனைத்தும் பலவீனம் அடைந்து விட்டதாம். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லையாம். அது அதிக நன்மையையும் நம்பிக்கையையும் வருவிக்கவில்லையாம். அதனால் மாற்றப்பட்டு இவர் புதிய கொள்கையை போதிக்கின்றாராம். இதை எப்பொழுது சொல்லுகின்றார்? இயேசுவிற்குப் பிறகு 1000 ஆண்டுகள் கழித்தா? அல்லது 500 ஆண்டுகள் கழித்தா? அல்லது 200 ஆண்டுகள் கழித்தா? இல்லையே! இயேசுவிற்குப் பிறகு ஒரு சில ஆண்டுகளில் இந்தக் கருத்தை இவர் சொல்கின்றார்? அது உன்மையாக இருந்தால் அதை அதேகாலத்தில் வாழ்ந்த இயேசுவே போதித்துவிட்டுப் போயிருப்பாரே? அப்படி நியாயப்பிரமானம் பலவீனமடைந்துவிட்டது என்றால் அதை இயேசுவும் அறிந்திருப்பாரே? அது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை என்று தன் வாழ்நாளிலேயே சொல்லியிருப்பாரே? அப்படியா சொன்னார்? இல்லையே! மாறாக இயேசு தனது வாழ்நாள் முழுவதும் பல எதிர்ப்புகளையும் மீறி நியாயப்பிரமானத்தை பின்பற்றுங்கள், மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் பின்பற்றுங்கள் என்று தானே போதித்தார். அது மட்டுமல்ல, இந்த நியாயப்பிரமானத்தை தானும் பின்பற்றாததுடன் மற்றவர்களையும் பின்பற்றக்கூடாது என்று சொல்பவன் வழிகேடன் என்றும் போதித்தார்.

அடுத்து பவுலின் இந்தக் தவறான கருத்துக்கு மாற்றமாக உள்ள பைபிளின் மற்ற வசனங்களை பாருங்கள்:

கர்த்தரின் கட்டளைகள் எப்படிப்பட்டது என்பது குறித்து பழைய ஏற்பாடு சங்கீதம் கூறுகின்றது :

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. - சங்கீதம் 19:7,8

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். சங்கீதம் - 119 : 160

இந்த வசனங்களின் மூலம் கர்த்தரின் வேதம் எவ்வளவு பெரிய பலமிக்கது என்று சொல்வதுடன் ஆத்துமாவை உயிர்பிக்கக்கூடியது, பேதையை ஞானியாக்கும் சக்தி உடையது என்று சொல்லப்பட்டிருக்க அதற்கு மாற்றமாக முந்தைய கட்டளைகள் பலவீனமடைந்துவிட்டதாகவும் பயனற்றுபோய் விட்டதாகவும், நம்பிக்கையை பூரணப்படுத்தவில்லை என்றும் பவுல் சொல்வது அனைத்தும் தனது சுயகருத்து - சாத்தானின் தூண்டுதலால், இயேசுவிற்கு மாற்றமாக சொல்லப்பட்ட கருத்து என்பது தெளிவாகின்றதல்லவா? பவுல் சொல்லுவது சரி என்றால் இந்த சங்கீதம் வசனங்கள் தவறென்றாகிவிடும். காரணம் சங்கீதம் வசனங்கள் கர்த்தருடைய வேதமும் கட்டளைகளும் எப்படிப்பட்ட பலமிக்கதென்று தெளிவாகவே சொல்லுகின்றது.

அது மட்டுமல்ல இது போன்ற பைபிள் வசனங்களுக்கு மாற்றமாக இயேசு போதித்த கொள்கைகளுக்கு மாற்றமாக பவுல் சொல்லும் புதிய கொள்கைகளைப் பாருங்கள் :

நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. - ரோமர் 6:14

நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. - காலத்தியர் 2:16

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். - ரோமர் 7: 4

ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்;;பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. - காலத்தியர் : 5:18

சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து,... - எபேசியர் 2:15

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம். (கலாத்தியர் 3:15)

அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். - ரோமர் 7:4-6

இவை அனைத்தும் இயேசு வலியுறுத்தி சொன்ன கொள்கைளுக்கு மாற்றமாக - பைபிளின் எண்ணற்ற வசனங்களுக்கு மாற்றமாக - இயேசுவிற்குப் பின் சில ஆண்டுகளில் இந்த புதிய கொள்கையை திணிக்கின்றார் பவுல். இயேசுவால் பரலோக இராஜ்யத்தில் சிரியவன் எனப்படுவான் என்று எவர்களைக் குறித்து கூறினாரோ அந்த கொள்கையைத்தான் போதிக்கின்றார் பவுல். பவுலின் இந்த கோட்பாட்டுகளைத் தான் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றார்களே யொழிய இயேசு போதித்த கொள்கையை அல்ல. இயேசுவை அவர்கள் ஒரு போதும் பின்பற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் போதனைகளின் படி பவுல் சொல்வதைப் பின்பற்றுபவன் இரட்சிப்பைப் பெறமுடியாது, அவன் வழிகெட்ட பாதையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

அடுத்து இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். இன்றைய கிறிஸ்தவர்கள் பலர் இயேசு சொல்வது போல் நியாயப்பிரமானங்களையும் கர்த்தரின் கற்பனைகளையும் பின்பற்றுவதா அல்லது அவருக்கு மாற்றமாக சில ஆண்டுகள் கழித்து புதிய கருத்துக்களை போதித்த பவுல் சொல்வதைப் பின்பற்றுவதா என்று சரியான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தங்களுக்குள்ளேயே ஒரு குழப்ப நிலையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. நியாயப்பிரமாணத்தை - பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது கூடாதா? என்று சில கிறிஸ்தவ தளங்களில் விவாதங்கள் வைக்கப்பட்டு - பவுல் சொன்ன புதிய கொள்கையின் படி அந்த நியாயப்பிரமாணத்தையும் பத்துக்கட்டளைகளையும் பின்பற்றுவது தவறு என்று ஒரு சிலரால் வலியுறுத்தப்படுவதுடன் அதற்கு என்ன பதில் சொல்வது என்று திணறும் பல கிறிஸ்தவர்களின் பரிதாப நிலையையும் காண முடிகின்றது. அது மட்டுமல்ல, அந்த பதிவையே சில நாட்களில் வஞ்சகத்தனமாக தளநிர்வாகிகளால் நீக்கப்படும் கொடுமையும் நடக்கின்றது. காரணம் பவுலை பின்பற்றுவதா அல்லது இயேசுவை பின்பற்றுவதா என்ற குழப்பமே. ஏனெனில் பவுலை பின்பற்றினால் இயேசுவை பின்பற்ற முடியாது. இயேசு சொல்வதை பின்பற்றினால் பவுலுக்கு எதிரானதாக அது ஆகிவிடும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இயேசுவின் கொள்கைகளுக்கு எதிரான பவுலுடைய வழிகெட்ட போதனையும் குழப்பமான கருத்தும் பைபிலிலேயே இடம்பெற்றுள்ளதுடன், அந்த பவுல் சொல்லும் அனைத்தும் பரிசுத்த ஆவியின் மூலம் சொல்லப்பட்ட வசனங்களே என்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பதும் தான் கொடுமையிலும் கொடுமை.

பவுல் தனது புதிய கொள்கைகள் மூலம் இயேசு போதித்த அவர் பின்பற்றிய, கர்த்தர் பழைய ஏற்பாட்டு வசனங்களின் மூலம் இனி வரும் அனைவரும் பின்பற்றியே ஆகவேண்டும் என்று வலியுறுத்திய எண்ணற்ற சட்டங்களை தனது மனோ இச்சையின் மூலம் கடவுளின் பெயராலும் இயேசுவின் பெயராலும் மாற்றி அமைக்கின்றார். அவற்றில் சிலவற்றை இனி காண்போம்.


கர்த்தர் நாடினால் அடுத்த பதிவில் தொடரும்...
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Monday, November 10, 2008

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன?

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 1

யார் இந்த புனித பவுல்? - பாகம் 2

இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? - பாகம் 3

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 4

இயேசுவின் மாக்கத்திற்கு பரம எதிரியாக இருந்த பவுல் இயேசுவை திடீரென ஏற்றுக் கொண்டு இயேசு போதித்த அந்த போதனைகளை போதித்தாரா? உண்மைக்காக மதம் மாறியிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ததோ வேறு. அவரின் பிரச்சாரத்திற்கு கிறிஸ்தவ மத சர்ச்சிலேயே கடும் எதிர்ப்பு. ஏன் இயேசுவின் நேரடி சிஷ்யர்களே கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமோ பவுலின் வேதத்தை தவிர வேறெதுவுமில்லை.

பவுல் பிரச்சாரம் செய்தது தான் என்ன? அது இயேசுவின் பிரச்சாரத்தோடு ஒத்திருந்ததா? பவுலின் பிச்சாரத்திற்கு எதிர்ப்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது எத்தகைய எதிர்ப்பு?

பவுல் பிரச்சாரம் செய்த காலத்திலேயே "வேறொரு சுவிசேஷத்தை", "வேறொரு இயேசுவைப்" பற்றிய பிரச்சாரம் அங்கே இருந்து வந்தது.

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்க திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிஷேத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான். மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 1:6-12)

ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் ப்றிற உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாக வெறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக் கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. மாக பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன். (2 கொரிந்தியர் 11:3-6)

இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களிமிருந்து கற்றதாக பவுல் ஒரு போதும் சொன்னதில்லை. அது மாத்திரமல்லாமல் அது தேவையுமில்லை என்று அவர் கூறுகின்றார். ஏனெனில், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் எனப் பவுல் கூறுகின்றார்.

பவுலின் இந்தக் கூற்று நன்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவர் பிரச்சாரம் செய்தது இயேசு செய்த அதே பிரச்சாரம்; தான் என்றால் அதற்கு சாட்சியாக இயேசுவின் நேரடி சீடர்களை கோடிட்டு காட்டி என் பிரச்சாரமும் அவர்கள் பிரச்சாரமும் ஒன்று தான் என்று கூறியிருக்க முடியும். இவர் பிரச்சாரம் செய்வது இயேசுவின் நேரடி சீடர்களின் பிரச்சாரத்திற்கு நேர் எதிராக இருந்தால் அவர் நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவரின் வார்த்தையில் கிறிஸ்துவத்தின் கொள்கை அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது தான். இவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையும், அவர் இயேசுவோடு உரையாடியாதாக சொல்லப்பட்ட சம்பவகளும் எந்த அளவுக்கு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் மேலே கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

பைபிள் ஆராய்ச்சியாளர்களுக்கு மேற்கண்ட பவுலின் கூற்று பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில் : உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகின்றேன் என்றால் என்ன?

கிறிஸ்துவின் கிருபையினாலே அழைப்பது என்றால் என்ன எனத் தெரிந்தால் தான் பவுல் அவர்கள் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று சொல்வதன் முழு அர்த்தம் என்ன என்பது தெரிய வரும்.

இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளுக்குக் கீழப்படிந்து நியாயப்பிரமாணங்களில் உள்ளவற்றைப் பின்பற்றி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட வாழ்க்கை வாழும் போது தான் நிலையான பெருவாழ்வை - பரலோக இராஜ்ஜியத்தை - மனிதன் அடைய முடியும் என்பது அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனையாயிருந்தது.

ஆனால் பவுலோ இதற்கு முற்றிலும் மாற்றமாக பிரச்சாரம் செய்தார். நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுவதெல்லாம் இயேசுவிற்கு முன்பு வரைதான். இயேசு தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக் கொடுத்து நம்மை கிருபைக்கு உள்ளாக்கி விட்டார். ஆகவே நியாயப் பிரமாணங்களைப் பின்பற்றத் தேவையில்லை. இனி இயேசு நம்மை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கவே தம்மை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார் என்று நம்பினால் போதும். நியாயப்பிரமாணங்களை கைக்கொள்ள வேண்டியதில்லை. இவை எல்லாம் பவுலின் வாதம். அதானல் தான் பவுல் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று கூறுகின்றார்.

இதோ நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோசனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். நியாயப் பிரமாணத்திலினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். (கலாத்தியர் 6:2-4)

அதாவது இவரின் புதிய போதனையின் படி கிறிஸ்துவை நம்பி விட்டால் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லை. கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையையே உங்களுக்கு நிலையான பெருவாழ்வை அளிக்க போதுமானதாக இருக்கும் போது நியாயப் பிரமாணம் உங்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் எண்ணினால் அந்த விசுவாசம் உங்களிடம் இல்லை என்று அர்த்தம். இதைத் தான் பவுல் அவர்கள் : நியாயப் பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்த கிருபையினின்று விழுந்தீர்கள் என்று கூறுகின்றார்.

பவுல் மேலும் கூறுகின்றார் : நீதியானது நியாயப்பிரமாணத்தினால் வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. (கலாத்தியர் 2:21)

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம். (கலாத்தியர் 3:15)

இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டால் நீதிமான்களாக்கப்படுவோம் என்று பவுல் சொல்வது என்ன என்பதை வாசகர்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். பவுல் கூறும் விசுவாசம் என்பது இயேசுவை இறைமகன் என்றோ, இறைத்தூதர் என்றோ மாத்திரம் விசுவாசித்து விட்டு நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தால் அந்த விசுவாசம் விசுவாசமே அல்ல. அதனால் பலனும் இல்லை. ஆனால் இயேசுவின் மேலுள்ள விசுவாசம் என்னவெனில், அவர் நம்மை நியாயப்பிரமாணங்களிலிருந்து விடுதலையாக்கும் பொருட்டு தன்னுடைய உயிரைக் கொடுத்து விட்டார் என நம்பி நியாயப்பிரமாணத்தை கைவிட்டு விட வேண்டும். இது தான் பவுல் கூறும் இயேசுவின் மேலுள்ள விசுவாசம். பவுலின் இந்தப் பிரச்சாரம் நன்கு கவனிக்கப்பட வேண்டியதும், ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியதுமாகும்.

பவுலை எதிர்த்து "சுவிசேஷத்தையும்'', ''வேறொரு இயேசுவையும்'', பிரச்சாரம் செய்தவர்கள் இயேசுவின் மீது விசுவாசம் கொள்ளாமல் இருந்தனரா? அவர்கள் இயேசுவின் மீது விசுவாம் கெர்ணடிருந்தனர். ஆனால் அவர்களுக்கும் பவுலிற்கும் இடையே உள்ள கருத்து வேற்றுமை என்ன? அவர்கள் இயேசுவை இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று ஏற்றுக் கொண்டு இறைவனின் கட்டளைகளை பின்பற்றி அவனுக்குக் கீழ்ப்படிந்தால் தான் இறைவனின் திருப்தியும் நீதியும் கிடைக்கும் என நம்பினர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? மனிதர்களை பாவங்களிலிருந்தும் நியாயப்பிரமாணங்களிலிருந்தும் விடுவிக்கவே இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்.

சகோதரரே..! இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தை பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்ககும் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும். (கலாத்தியர் 6:11-12)

பிரச்சினை இது தான். சிலுவையிலறையப்பட்டதால், மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட வேண்டியதில்லை என்ற அந்த பவுலின் கொள்கை தான் பிரச்னைக்கு பிரதான காரணமாயிருந்திருக்கிறது.

இயேசுவை ஏற்றுக் கொண்ட மக்கள் மனிதர்களின் பாவத்தை நீக்குவதற்காக இயேசு சிலுவையில் தன்னைத் தானே ஒப்புக் கொடுத்தார் என்பதை மாத்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை எனில், இயேசு அதைப் போதிக்கவில்லை என்று தான் அர்த்தமாகும். அவர் அதற்காகவும் வரவில்லை. மக்கள் இறைவனிற்கு கீழ்ப்படிந்து நியாயப்பிரமாணங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே வந்தார். ஆனால் பவுல் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் இது அவருடைய சொந்தக் கண்டுபிடிப்புதானே அல்லாமல் அது வேறென்னவாக இருக்க முடியும்?

இது இவ்வாறிருக்க, நியாயப்பிரமாணங்கள் பற்றி இயேசு என்ன கூறுகின்றார்? பவுலின் இந்தப் பிரச்சாரம் இயேசுவின் பிரச்சாரத்திற்கு உகந்ததா? நான் சிலுவையில் அடிக்கப்பட்டு உங்களை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப் போகின்றேன். ஆகவே நீங்கள் நியாயப்பிரமாணங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று சொன்னாரா? அல்லது அதற்கு மாற்றமாக சொன்னாரா? பரலோகராஜ்யம் செல்வதற்குரிய வழி என்னவெனில் பிரமாணங்களை கையாளுவதுதான். இதைத் தான் இயேசு தன்னுடைய வாழ்நாளில் பிரச்சாரம் செய்து வந்தார். அதையேதான் அவரது உன்மையான சீடர்களின் போதனையாகவும் இருந்திருக்க வேண்டும்.
இயேசுவின் போதனைகளுக்கும் அவரின் கொள்கைகளுக்கும் மாற்றாக பவுல் எவ்வாறெல்லாம் போதித்தார், எவற்றையெல்லாம் போதித்தார் என்பதை இனி காண்போம்.

நியாயப்பிரமானங்களையும் தீர்க்கதரிசனங்களையும் இயேசு பின்பற்ற சொன்னாரா? அல்லது பின்பற்ற கூடாது என்றாரா? - நாளைத் தொடரும்... இறைவன் நாடினால்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Saturday, November 08, 2008

இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா?

பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 1
யார் இந்த புனித பவுல்? - பாகம் 2



பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 3
... இந்த அளவுக்கு பவுல் ஒரு பொய்யைச் சொல்லி இயேசு தனக்கு அதிசயத்தைக் காட்டி தன்னைக் கடவுள் ஊழியத்திற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டதாக சொல்லவருவதுடன் இந்த பொய்யான சம்பவத்தையும் கடவுள் பெயரால் பவுல் சொல்வருவதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே? அதற்கு இயேசுவின் நேரடி சீடர்களின் அங்கீகாரத்தைப் பெற்றால்தான் இயேசுவைப் பின்பற்றக்கூடிய மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லை என்றால் பவுலின் வாதத்தை பொய் என்று நிராகரித்து விடுவார்கள். ஆகவே பவுல் இயேசுவிற்கு கீழ்ப்படிபவராக மாறியவுடன் சீடர்களை சந்திக்க ஜெருஸலம் சென்றார் எனவும், அதன்பிறகு அவர் வெகு தீவிரமாக அங்கு இயேசுவின் மார்க்கத்தை பிரச்சாரம் செய்தார் எனவும் அதனால் யூதர்கள் அவரை கொல்ல சதி செய்தனர் எனவும் அப்போஸ்தலரின் செயல்பாடுகளை எழுதியவர் குறிப்பிடுகின்றார்.

சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சில நாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரரென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு : எருசலேமில் இந்த நாமத்தைத் தொழு கொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயம் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்கு கொண்டு போகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள். சவுல் அதிகமாகத் திடன் கொண்டு. இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப் பண்ணினான். அநேக நாள் சென்ற பின்பு, யூதர்கள் அவனைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்து கொள்ளப் பார்த்தான். அவர்கள் அவனைச் சீஷரென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக் கொண்டு அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக் கொண்டு போய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசியதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய் பிரசங்கித்து. கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான் : அவர்களோ அவனைக் கொலை செய்ய எத்தனம் பண்ணினார்கள். (அப்போஸ்தலர் 9:18-29)

பவுல் எனப்படும் இவர் இயேசுவின் நேரடி சிஷ்யர்களின் அங்கீகாரத்தை பெற்றதாக இதிலிருந்து அப்போஸ்தலரின் நடபடிகளை எழுதியவர் தன் வாசகர்களுக்குச் சொல்கின்றார். அது மாத்திரமல்லாமல் அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான். ஆகவே பவுலை எருசலேத்தில் உள்ளவர்கள் அனைவரும் நண்பர்களும் எதிரிகளும் - குறிப்பாக சர்ச்சில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பர் என்பது போல் எழுதுகிறார்.

ஆனால் இது உண்மையா? பவுல் இயேசுவின் நேரடி சீடர்களின் அங்கீகாரத்தைப் பெற்றாரா? அப்போஸ்தலர்களின் நடபடிகளை எழுதியவருக்கு நேர் மாற்றமாக பவுல் எழுதுவதைப் பாருங்கள் :

தம்முடைய குமாரனை நான் புறஜாதியார்களிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்த போது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும், எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்: அரபி பிரதேசத்திற்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டு கொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர அப்போஸ்தலரில் வேறொருவதையும் நான் காணவில்லை.

நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்கு முன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். பின்பு சிரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன். (கலாத்தியர் 1:16-21)

இப்பொழுது எது உண்மை? பவுலின் சொந்த வார்த்தைகளா அல்லது அப்போஸ்தலரின் நடபடிகளை எழுதியவர் சொல்வதா? பவுல் கிறிஸ்துவின் சீடரென கூறிக் கொண்ட உடனேயே தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான் என்பதும் பின்பு அவர் எருசேலம் சென்று அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாம்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்தான் என்று அப்போஸ்தலர் நடபடிகள் எழுதியவர் சொல்வது உன்மையா? அல்லது அப்போஸ்தலரானவரிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்: அரபி பிரதேசத்திற்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டு கொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை என்று பவுல் சொல்வது உண்மையா?

பவுலின் கூற்றுப்படி அவர் அப்போஸ்தலர்களைச் சந்திக்கவில்லை. அவர் எருசலேத்திலே பிரச்சாரம் செய்யவுமில்லை என்பது தெளிவு. இதை அவரின் கீழக்கண்ட ஒப்புதல் மிகவம் தெளிவுபடுத்துகின்றது :

நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்கு முன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். பின்பு சிரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன். (கலாத்தியர் 1:20-21)

இது பவுல் சத்தியம் செய்து சொல்வதாகும். இது உண்மையெனில் 'அதன் பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்: அவர்களோ அவனைக் கொலை செய்ய எத்தனம் பண்ணினார்கள்' என்பது பொய். ஏனெனில் அவர் முன்பு அவ்வாறு பிரச்சாரம் செய்திருந்தால் யூதாயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவராக இருந்திருக்க முடியாது. பவுலினை உயர்த்தி சொல்வதற்காகவும் அவரின் பிரச்சாரத்திற்கு இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களின் அங்கீகாரம் இருந்ததென காண்பிப்பதற்காகவும் அப்போஸ்தலர்களின் செயல்பாடுகள் பற்றி எழுதியவர் கட்டிய கதையே இது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்கள் நன்கறியலாம். இப்படி ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்ட புத்தகத்திலிருந்து உண்மைகளைக் கண்டறிவது அத்தனை எளிதானதா? இதையும் வேதப் புத்தகம் என்று சொல்வது அறிவீனமல்லவா?

புதிதாக மதம் மாறிய ஒருவர் அம்மதத்தில் ஏற்கனவே இருந்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சிப்பர். குறிப்பாக இயேசுவின் நேரடி சிஷ்யர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களிடம் சென்று கற்றுக் கொள்ள முயற்சிப்பர். ஆனால் இவருக்கு அந்த ஆர்வம் எல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இவருக்கு இயேசு நேரடியாக போதிக்கின்றாராம்.

கிறிஸ்து முதல் கான்ஸ்டன்டைன் வரை என்ற தனது புத்தகத்தில் ஜேம்ஸ் மாக்கினோன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்கள் :

அவர் மதம் மாறியவுடன் அரேபியாவிற்கு (நபாத்தியர் பாகம்) சென்றது அவர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு எனக் கூறிட முடியாது. ஆனால் தனது புதிய மதத்தை வைத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தான் அங்கே சென்றார் என்பது தெளிவு. மூன்று வருடத்திற்குப் பிறகு தான் பீட்டரையும், கர்த்தரின் சகோதரனான ஜேம்ஸையும் சந்திக்க அவர் ஜெருஸலம் செல்கின்றார். ஒரு வேளை இயேசுவைப் பற்றி அவர்களிடம் கேட்பதற்காக இருக்கலாம்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கூறுகின்றது :

தன்னுடைய புதிய நிலமைகளைப் பற்றி சிந்திக்க அமைதியாக ஆரவாரமற்ற ஒரு இடம் தேவையென்பதை பவுல் உணர்ந்தார். அதனால் தான் அவர் டமஸ்களின் தெற்கிலுள்ள பிரதேசங்களுக்கு சென்றார்... தன்னுடைய புதிய அனுபவத்தின் ஒளியில் நியாயப்பிரமாணத்தையும் இயேசுவின் போதனைகளையும் புதிய உருவில் எவ்வாறு விளக்குவது என்பதே அவருக்கிருந்த முக்கியப் பிரச்னையாக இருந்தது.

இயேசுவின் மாக்கத்திற்கு பரம எதிரியாக இருந்த பவுல் இயேசுவை திடீரென ஏற்றுக் கொண்டு இயேசு போதித்த அந்த போதனைகளை போதித்தாரா? உண்மைக்காக மதம் மாறியிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ததோ வேறு. அவரின் பிரச்சாரத்திற்கு கிறிஸ்தவ மத சர்ச்சிலேயே கடும் எதிர்ப்பு. ஏன் இயேசுவின் நேரடி சிஷ்யர்களே கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமோ பவுலின் வேதத்தை தவிர வேறெதுவுமில்லை.

பவுல் பிரச்சாரம் செய்தது தான் என்ன? அது இயேசுவின் பிரச்சாரத்தோடு ஒத்திருந்ததா? பவுலின் பிச்சாரத்திற்கு எதிர்ப்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது எத்தகைய எதிர்ப்பு?

- பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன?
.
.
- நாளை தொடரும் இறைவன் நாடினால்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Friday, November 07, 2008

யார் இந்த புனித பவுல் ?

பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 2)
.
பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும்
.
.சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைலீசியாவிலுள்ள (இன்றைய துருக்கி) டார்சஸ் நகரில் பிறந்தவர். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பிறந்திருந்தாலும் இயேசுவை இவர் நேரில் சந்தித்ததாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. பிறப்பிலேயே யூதரான பவுல் இளமையிலேயே எபிரேயு மொழி கற்று, யூத கல்வியறிவில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.

இவரும் இவரது தந்தையும் பரிசேயரை சார்ந்தவர்கள் என்று இவரே கூறியதாக அப்போஸ்தலர் நடபடிகள் கூறுகின்றது. (அபபோஸ்தலர் 23:6, 26:5) இந்த பரிசேயர் என்பவர்கள் யார்? அவர்கள் இயேசுவின் காலத்திலும் அவருக்குப் பின்னும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்? என்பதை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறுகின்றது:

'பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர். ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.' பார்க்க : விக்கிபிடியா

இந்த பரிசேயர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று இயேசு தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் உபதேசித்தார். குறிப்பாக அவர்கள் எந்த செய்தியைக் கொண்டுவந்தாலும் அதிலிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். பார்க்க : (மத்தேயு 16:5-12, மாற்கு 8:14-21)

எந்த பரிசேயரைக் குறித்தும் அவர்கள் சொல்லும் செய்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு எச்சரித்தாரே, அதே பரிசேயரைச் சேர்ந்த பவுல் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் கேட்டோமேயானால் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையுமே ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் செய்தியில் பொய் மலிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தையும், அவரின் கொள்கைகளையும் இயேசுவின் பெயராலேயே எப்படியெல்லாம் சீரழித்தார் என்பதற்கு இன்றைய பைபிளே சரியான சான்று.

பவுலின் ஆரம்பக் காலம் :
யூத மதத்தவரான பவுல் இயேசுவிற்கு பிறகு அவர் போதித்த இறைக்கோட்பாட்டிற்கும் அதை பின்பற்றியவர்களுக்கும் எதிரானவராக இருந்தார் என்று அப்போஸ்தல நடபடிகள் குறிப்பிடுகின்றது.

சவுல் வீடுகள் தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்தீரிகளையும் இழுத்துக் கொண்டு போய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8:3)

இந்தச் சவுல் என்னும் பவுல் இயேசுவைப் பின்பற்றியவர்களை துன்புறுத்தி வந்தான். அவர்கள் தமஸ்குவிற்கு தப்பிச் சென்ற பிறகும் அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக தலைமை குருவிடம் அதிகார கடிதம் வாங்கிக் கொண்டு சென்றதாக அப்போஸ்தலரின் நடபடிகள் கூறுகின்றது.

சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்தீரிகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களை கட்டி எருசலேமுக்கும் கொண்டு வரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிரூபங்களைக் கேட்டு வாங்கினான். (அப்போஸ்தலர் 9:1-2)

இப்படி உன்மையான இயேசுவின் சீடர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பல துன்பங்களைக் கொடுத்து பலரை கொலை செய்யவும் துடித்த யூதரான பவுல், திடீரென ஒரு அதிசயமான (?) சம்பவத்தின் மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டாராம். சூழ்சிகளுக்குப் பெயர் பெற்ற யூதர்களும் - இயேசுவால் மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்களும் எப்படி எல்லாம் சத்தியத்தை சீரழிப்பதற்காக பொய் சொல்லத் துணிவார்கள் என்பதற்கு பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையே சரியான சான்று.

இயேசுவை பவுல் ஏற்றுக்கொண்டது எப்படி?
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை கொலைசெய்துக்கொண்டிருந்த பவுல் தீடீரென இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு காரணம் என்ன? அவர் எப்படி ஏற்றுக்கொண்டார்? என்பதை பவுலின் நன்பரான லூக்கா அப்போஸ்தலரின் நடபடிகள் என்றப் புத்தகத்தில் ஒரு பொய்யானக் கதையை சொல்லி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார் :

அவன் பிரயாணமாய் போய், தமஸ்குவுக்குச் சமீபித்த போது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன் : ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே : முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்த போது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தான். (அப்போஸ்தலர் 9:3-9)

அதாவது இயேசுவின் உன்மையான சீடர்களை துன்புருத்துவதற்காக தேடியவனாக தமஸ்காவுக்கு பயனம் செய்துக்கொண்டிருக்கும் வழியில் இந்த சம்பவம் (?) நடந்ததாக இந்த வசனங்களின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது.

இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பது பற்றி சொல்லப்படும் இந்த சம்பவம் அவரும் அவரைச் சார்ந்தவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொய் என்பதற்கு அவர்களாளேயே எழுதப்பட்ட மற்ற மற்ற வசனங்களில் வரும் முரண்பாடுகளே சரியான சான்று.

இந்த அப்போஸ்தலர் 9:3-9 வசனங்களின் இடையே சில விஷயங்களை நன்றாக கவனிக்க வேண்டும்:

ஒன்று, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். என்பதன் மூலம் திடீரென வந்த ஒளி பவுலை மட்டும் சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் தரையிலே விழுந்தானாம்.

இரண்டு, நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். என்பதன் மூலம் பவுல் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டனத்துக்குச் சென்றதும் சொல்லப்படும் என்று இயேசு கூறினாராம்.

மூன்று, அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். என்பதன் மூலம் பவுலுடன் கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம் ஆனால் ஒருவரையும் காணவில்லையாம்.

நான்காவது, அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்பதன் மூலம் பவுல் மட்டும் கீழே விழுந்ததால் மற்றவர்கள் அவரை கைலாகு கொடுத்து கூட்டிக்கொண்டு போனார்கள் என்கிறார்.

இவற்றுக்கெள்ளலாம் நேர் முரணாக அதே அப்போஸ்தலருடைய நடபடிகளின் மற்ற மற்ற இடங்களில் இதே சம்பவத்தை பற்றி எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள்:

அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது : சவுலே. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் : ஆண்டவரே நீர் யார் என்றேன். அவர் : நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். (அப்போஸ்தலர் 22:6-10)

இந்த வசனத்தில் அதே சம்பவத்தை சொல்லிவிட்டு என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. (அப்போஸ்தலர் 22:9) என்று சொல்லப்படுகின்றது. ஆனால் முன்பு நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அவனோடு கூட பயனம் செய்தவர்கள் சத்தத்தைக் கேட்டார்களா? அல்லது கேட்கவில்லையா? வெளிச்சத்தைக் கண்டார்களா? அல்லது காணவில்லையா? இந்த ஒரே சம்பவத்தை ஒரே புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் (?) எழுதப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக 'பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதியுள்ளார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவை எல்லாம் உன்மையாக இருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும்?

அடுத்து, இந்த இரண்டு வசனங்களில் வரும் சம்பவங்களும் ஒன்றுக்கொண்று நேர் முரணாக இருக்க, அதே பவுல் இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது பற்றி அதே அப்போஸ்தலர் என்ற புத்தகத்தில் மூன்றாவதாக மற்றோர் இடத்திலும் பவுல் சொல்வது போல் சொல்லப்படுகின்றது. அந்த இடத்தில் இந்த இரண்டு வசனங்களுக்கும் நேர் முரனாக சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.

'இப்படிச் செய்து வருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும் போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்த போது : சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்ப்பபடுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்' (அப்போஸ்தலர் 26:12-14)

முதல் அறிவிப்பில் பவுலை மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்பொழுது அவனோட கூட பிரயானம் பன்னியவர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம். ஆனால் ஒளியையோ அல்லது வேறு யாரையுமோ பார்க்கவில்லையாம்.

இரண்டாவது அறிவிப்பிலும் பவுலை மட்டுமே அந்த ஒளி சுற்றி பிரகாசித்தாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்போது அவனோட கூட பிரயானம் பன்னினவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயம் அடைந்தார்களாம். ஆனால் சத்தத்தையோ கேட்கவில்லையாம்.

மூன்றாவது அறிவிப்பில் பவுலையும் பவுலோடு கூட பிரயானம் பண்ணினவர்களையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட்டார்களாம். இவற்றில் எது சரி? முதல் இரண்டு அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? அல்லது மூன்றாவது அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் எல்லோரையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? முதல் அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் கீழே விழுந்தாரா? அல்லது அவனோடு கூட பிரயானம் பண்ணிவர்கள் அனைவரும் சேர்ந்து கீழே விழுந்தார்களா?

இது மட்டுமல்ல முதல் அறிவிப்பில் பவுல் மட்டுமே கீழே விழுந்ததால், அவனை மற்றவர்கள் கைலாகு கொடுத்து தூக்கி விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மூன்றாவது அறிவிப்பில் எல்லோருமே கீழே விழுந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படி என்றால் முதல் அறிவிப்பின் படி கைலாகு கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பது எப்படி சரியாகும்?

முதல் இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொண்று முரணாயிருக்க அந்த இரண்டிற்கும் நேர்முரணாக இந்த மூன்றாவது அறிவிப்பு எந்த அளவுக்கு முரணாக இருக்கின்றது என்று கவனித்தீர்களா சகோதரர்களே?

இது மட்டுமல்லாமல் இதே கதையில் வேறு சில முரண்பாடுகளையும் பாருங்கள். அப்போஸ்தலர் 9: 5-10 மற்றும் 22:10-15ம் வசனத்தின் படி பவுல் என்ன செய்யவேண்டும் என்பதை தமஸ்காவுக்கு போனதும் சொல்லப்படும் என்று இயேசு சொன்னதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அப்போஸ்தலர் 26:16-18 ம் வசனங்களில் அதே இடத்திலேயே அவரை புறஜாதியருக்கு பிரச்சாரம் செய்ய நியமித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதில் எது சரி? பவுல் செய்யவேண்டியதை சம்பவ இடத்திலேயே சொல்லப்பட்டதா? அல்லது பட்டனத்திற்கு சென்றதும் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டதா?

இப்படி ஒரே சம்பவம் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட சம்பவம் கூடுதலாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா? அதுவும் இந்த பவுல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் விட்டுவிடாலம். மாறாக, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்கு ஆசிரியர். இன்றைய நவீன கிறிஸ்துவத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர். இவர் போதிக்கும் கொள்கையை மறுப்பவன் இரட்சிப்பை பெறமுடியாது, அவன் பரலோகத்தை அடைய மாட்டான் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. இயேசுவின் போதனைகளுக்கும் எதிரான பல புதிய கருத்துக்களைப் புகுத்தும் அதிகாரம் உடையவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். அதை இயேசுவே தனக்கு போதித்ததாகவும் சொல்கின்றார். ஆரம்பக்காலத்தில் உன்மையான இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யத் துடித்தவர் இந்த பவுல். அப்படிப்பட்டவர் திடீரென இயேசுவை ஏற்றுக்கொண்ட சம்பவத்தில் எப்படி இந்த அளவுக்கு முரண் வரலாம்? இந்த சம்பவம் உன்மையானதாக இருந்தால் எப்படி இந்த அளவுக்கு முரண்வரும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டுமா?

உன்மையில் சொல்லவேண்டும் என்றால் பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது. இந்த பவுலும் இவரைச் சார்ந்தவர்களும் தங்கள் மனம்போன போக்கில் எழுதிய புத்தகங்களை தான் இன்றைய கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதிக்கொண்டிருக்கின்றனர்.


.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.