அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!
Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Saturday, September 13, 2008

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், 'ஒருவர்' தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், 'கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்' (Triune God) என்று கூறுவார்கள்.

கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற 'திரித்துவம்' (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.

குழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த 'திரித்துவக் கடவுள் கொள்கை' என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே! இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய்! என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.

கடவுள் என்பவர்,

- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.

- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.

- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.

- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,

- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,

- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,

- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.

- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.

இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! மாறாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா!

எனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள்! சிந்தித்து தெளிவு பெறுங்கள்! தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.

திரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -

Q 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும்.

மனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்?

Q 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.

இந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்?

Q 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் 'திரித்துவத்திற்கு' உவமைகள் கூற முற்படுவர். சிலர் 'முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.

ஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ?

Q 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.

ஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது?

Q 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.

சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே! அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது?

Q 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா? அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.

இந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும்!. அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா?

Q 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.

நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது! ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே! முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit)? ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே! (பார்க்கவும் லூக்கா 24:36-40)

லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:
இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே?

Q 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் "மகன்" தன்மை உடையவராகவும் "தெய்வீகத்" தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் ?

Q 9. "என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.

ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,

"என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை" என்று கூறவில்லையா?

Q 10. இயேசு கிறிஸ்து "தேவகுமாரர்" என்றும் "மேசியா" என்றும் "இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (Saviour) என்று ம் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை "தேவகுமாரர்கள்" என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி "தெய்வ மகன்" அல்லது "தேவகுமாரன்" என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)

ஹிப்ரு மொழியில் "மேசியா" என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. "இரட்சகன்" (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.

"கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்" (II இராஜாக்கள் 13:5)

ஆகையால் "தேவகுமாரர்" (Son of God) அல்லது "இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் "தேவன்" அல்லது அவர் மட்டும் தான் "தேவனின் உண்மையான குமாரர்" என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?

Q 11. நானும் பிதாவும் 'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் 'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் "ஒன்றாயிருக்கிறது" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற "ஒன்றாயிருக்கிறது" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

Q 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா? அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா?

Q 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .

இந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட "அவருடைய தேவன் நம்முடைய தேவன்" மற்றும் "அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்" என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா?

மேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா?

Q 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்?

Q 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்?

அந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.

இல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா?

மேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா?

Q 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: -
பிதாவும் (Father) கடவுள்
தேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள்
பரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்
ஆனால்,

பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை
தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை
பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.

எளிமையான கணக்குப்படி,

G என்பது தேவனையும் (God)
F என்பது பிதாவையும் (Father)
S என்பது தேவகுமாரனையும் (Son)
H என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.

இதன் படி,

F=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,

அதாவது

பிதா என்பவர் தேவன்! (F=G)
தேவகுமாரன் என்பவர் தேவன்! (S=G)
பரிசுத்த ஆவி என்பது தேவன்! (H=G)

என்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.

ஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F S H

அதாவது

பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை! (F S)
தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை! (S H)
பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை! (H F)

இது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா?

Q 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்?

Q 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து "நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே" என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்?

Q 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு 'திரித்துவம்' மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை?
மேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே!

Q 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்?

அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)

தெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா?

Q 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை?

அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)

Q 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை?

நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.

சிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே!

.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Saturday, August 30, 2008

திரித்துவம் பற்றிய கேள்விக்கு ஜாகிர் நாயக்கின் பதில்

இது அமெரிக்காவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும் டாக்டர் வில்லியம் கேம்பெல் அவர்களுக்கும் நடந்த விவாத்தின் போது, இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரி ஒருவர் Dr. ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கு Dr. ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த விளக்கத்தின் தமிழாக்கம் ஆகும்.

சகோதரியின் கேள்வி: -

தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார். இது திரித்துவக் கோட்பாட்டுக்கான அறிவியல் விளக்கமாகும். இந்த விளக்கம் சரியானது தானா?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம்: -
தண்ணீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் பனிக்கட்டியாகவும், தண்ணீராகவும் மற்றும் நீர் ஆவியாகவும் இருப்பது போல் ஒரு கடவுள் பிதா, தேவ குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் இருக்கிறார் என்று சில கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் கோட்பாட்டின் படி தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பது உண்மை தான். ஆனால் தண்ணீருக்கான மூலப்பொருள்கள் (components) மாறாமல் அப்படியே இருக்கிறது. அதாவது H2O, ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களும், ஆக்ஸிஜனின் ஒரு அணுவும் தான் தண்ணீரின் மூலப்பொருள்கள் ஆகும். அந்த மூலப்பொருள்கள் அப்படியே மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் நிலை தான் திட, திரவ மற்றும் வாயு நிலைக்கு மாறுகிறது.

அடுத்து இவர்களின் திரித்துவத்தை எடுத்துக் கொண்டால், தண்ணீர் மூன்று நிலைகளில் இருப்பதைப் போல் ஒரே கடவுள் மூவரில் இருக்கிறார் என்கின்றனர். ஆனால் தண்ணீரின் மூலப்பொருள் அதன் மூன்று நிலைகளிலும் ஒன்றாக இருப்பது போல இந்த மூவரின் மூலப்பொருள் ஒன்றாகவா இருக்கிறது? கடவுள் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோர் ஆவியினால் (made of sprit) ஆனவர்கள். ஆனால் மனிதராகிய இயேசுவோ சதைத் துண்டுகளாலும், எலும்புகளாலும் உருவாக்கப்பட்டவர். எனவே அவர்கள் மூலப்பொருட்களால் சமமானவர்கள் அல்லர். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமாகிறது. ஆனால் கடவுள் உயிர் வாழ உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவர்கள் எப்படி சமமானவர்களாக முடியும்? மேலும் இதை இயேசு கிறிஸ்துவே பைபிளில் உறுதிப்படுத்துகிறார்.

லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).

இயேசு கிறிஸ்து அவருக்கு தமக்கு சதை உடைய கைகள், கால்கள் இருக்கிறது என்றும் அவருடைய சீடர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டும் தாம் ஒரு ஆவியல்ல (no sprit) என்றும் நிரூபித்தது எதற்காக? தாம் கடவுள் என்பதற்காகவா? இல்லை! தாம் கடவுள் இல்லை என்பதற்காவே தாம் ஆவி (sprit) இல்லை என்று நிரூபித்தார்! ஏனென்றால் ஆவியானவருக்கு சதை மற்றும் எலும்புகள் இல்லை. எனவே அறிவியல் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்க முடியாது என்பது நிரூபனமாகின்றது.

மேலும் திரித்துவம் (Concept of Trinity) என்ற தத்துவமோ (மூன்று கடவுள் கொள்கை) அல்லது அந்த வார்த்தையோ பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் திரித்துவம் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.

திருக்குர்ஆன் அத்தியாயம் 4,ஸுரத்துந் நிஸா, வசனம் 171 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் ('குன்' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:171)

மேலும் அத்தியாயம் 5, ஸுரத்துல் மாயிதா, வசனம் 17 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்' என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 5:17)

'நான் கடவுள்' என்று இயேசு கிறிஸ்து சொல்லவே இல்லை. திரித்துவம் பற்றிய கடவுள் தத்துவம் பைபிளில் அறவேயில்லை. பைபிளில் திரித்துவத்தை ஒத்திருக்கிறதாக அவர்கள் கூறும் ஒரே ஒரு வார்த்தை என்னவெனில்,

பையிளின் புதிய ஏற்பாடு, I யோவான், 5 அதிகாரம், வசனம்-7

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

ஆனால், மிகச்சிறந்த கிறிஸ்தவ அறிஞர்களால் பைபிளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பைப் பார்த்தோமேயானால் (Revised Standard Version), அதில் அவர்கள், 'பைபிளின் மேற்கண்ட வசனம் இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்ட வசனம்' என்று கூறி அந்த வசனத்தை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.
இயேசு கிறிஸ்து நான் கடவுள்' என்று ஒரு போதும் கூறியதே இல்லை. பைபிளின் எந்த ஒரு இடத்திலும் 'நான் கடவுள்' அல்லது 'என்னை வணங்குங்கள்' என்று இயேசு கிறிஸ்து சொன்னதாக முழுமையான ஒரே ஒரு வசனம் கூட கிடையாது.

ஆனால் உண்மையில் நாம் பைபிளைப் படித்தோமேயானால், (இந்த திரித்துவக் கோட்பாட்டுக்கு முரணான ஏராளமான வசனங்கள் இருக்கின்றன.)

யோவான், 14 அதிகாரம், வசனம் 28

நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான், 10 அதிகாரம், வசனம் 29

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28

நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

லூக்கா, 11 அதிகாரம், வசனம் 20

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

யோவான், 5 அதிகாரம், வசனம் 30

நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!

(சுயமாக எதையும் செய்யாமல் பிறரின் சொல்படி செய்கிறவர் எப்படி கடவுளாக முடியும்?)

யார் ஒருவர் தன் சுயவிருப்பப்படி எதையும் செய்யாமல் இறைவனின் விருப்பப்படி செய்கிறாறோ அவர் 'முஸ்லிம்' ஆவார். ஏனென்றால் 'முஸ்லிம்' என்பவர் 'தன் விருப்பங்களை இறைவனின் விருப்பப்படி அமைத்துக் கொள்பவராவார்'. இயேசு கிறிஸ்துவும் தம் விருப்பப்படி தாம் எதையும் செய்யவில்லை என்றும் கடவுளின் விருப்பப்படி செய்கிறேன் என்று கூறியதால் அவரும் ஒரு முஸ்லிம் ஆவார்.

இயேசு கிறிஸ்து இறைவனின் சிறந்த தூதர்களில் ஒருவர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். மேலும் முஸ்லிம்களாகிய நாங்கள்:

  • ஆண் துணையில்லாமல் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அற்புதம் வாய்ந்தவை என்று நம்புகிறோம்
  • பைபிள் கூறுவதைப் போல, இறைவனின் அனுமதியுடன் இறந்தவரை உயிர்ப்பித்தார் என்று நம்புகிறோம்
  • பிறவிக் குருடர்களுக்கு பார்வை அளித்தார் என்றும் நம்புகிறோம்
  • குஷ்டரோகிகளைக் குணப்படுத்தினார் என்றும் நம்புகிறோம்
எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இயேசு கிறிஸ்து இறைவனின் உண்மையான தூதர் என்று நம்புகிறோம். அவருக்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் அவரே இறைவன் என்று நம்புவதில்லை. அவர் மூன்று கடவுள்களில் ஒருவராக இருக்கவில்லை. மேலும் இந்த திரித்துவம் என்பது இல்லவே இல்லை.

திருக்குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ் அவன் ஒருவனே (அல்-குர்ஆன் 112:1)

(திரித்துவம் மற்றும் இயேசு கடவுளா? என்பது பற்றிய மிக விரிவான ஆய்வுக் கட்டுரை கூடுதல் விளக்கங்களுடன் விரைவில் ஏகத்துவம் வலைதளத்தில் வர இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்...)

வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-1 English

வீடியோ இணைப்பு : திரித்துவம் குறித்து Dr. ஜாகிர் நாயக் விளக்கம்-2 English

நன்றி : சுவனத்தென்றல்
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Friday, June 27, 2008

கடவுளுக்கு மனிதர்களின் காணிக்கைகள் தேவையா?

மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...!.
(பாகம் -1) செல்ல இங்கே அழுத்தவும்
.
(பாகம் -2) செல்ல இங்கே அழுத்தவும்
.
(பாகம் -3) செல்ல இங்கே அழுத்தவும்
.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -4)
.
கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
.

பொதுவாக கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் முக்கிய காரணங்களில், மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல்களும் ஒன்று.

கடவுளுக்கு காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்கு பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதையும் மனிதன் நேரடியாக பார்க்கின்றான்.

கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகின்றது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் படைக்கப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றாரா? என்றால் அதுவுமில்லை. கடவுளுக்கென்று படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். அதுவும் ஒரு உயர்ந்த ஜாதிசை; சேர்ந்த சில புரோகித கும்பல் மட்டும் தான் அதை உண்ணுகின்றது. இப்படிப்பட்ட தேவையுள்ள கடiவுளை 'மறுத்துத் தான் ஆக வேண்டும்' என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பல பூஜை பொருள்களை கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.

நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்?

அதனால் தான் கடவுள் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகின்றது.

கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

கடவுளை நான் வணங்கப் போகிறேன். அதற்காக 1000 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப்போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை - நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர, படைப்புகளிடம் அதையும் எதிர்பார்பவனாக இருக்ககக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் - தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும் - தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன் - மிக்க பொறுமையாளன். (அல்குர்ஆன் - 2:263 )


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் - 2:267 )

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு உபதேசம் செய்தோம். நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் - 6:133 )

உழைப்பவர் தமக்காவவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். (அல்குர்ஆன் - 26:6 )

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ தேவையற்றவன். (திருக்குர்ஆன் 35:15 )
.
தொடரும்... இறைவன் நாடினால்
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Monday, June 23, 2008

கடவுளுக்கு சொந்த பந்தங்கள் இல்லை!

.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...!
.
மனிதனுக்கேற்ற ஒரே மார்க்கம்...! (பாகம் -3)
.
.கடவுளுக்கு சொந்த பந்தங்கள் இல்லை

கடவுளுக்கு உறவுமுறைகள் அதாவது கடவுளுக்கு அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்றெல்லாம் உறவுகள் இருக்கக் கூடாது. ஓரிறைதான் உண்டு என்ற கொள்கையில் அதற்கு இடமே கிடையாது. இதை இஸ்லாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றது. திருமறைக் குர்ஆனில்

'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றன். யாரையும் அவன்; பெறவுமில்லை. அவன் யாருக்கும் பிறக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:1-4)

நீங்கள் யாரைக் கடவுள் என்று நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தான் எனில் அங்கே ஒரு பலவீனம் ஏற்படுகிறது. உங்களுடைய கடவுள் கொள்கையில் உங்களுக்கே ஏற்படுகிறது. முரண்பாடு என்னவென்றால், நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள். கடவுள் தான் அனைத்தையும் படைத்தான் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே கொஞ்ச காலத்திற்கு முன் இல்லாமல் இருந்திருக்கிறார். யாருக்கோ பிறந்தவன் என்றால் அவர் பிறப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை. அதாவது கடவுளுக்கு முன்பே கடவுளுடைய பெற்றோர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.

கடவுளுடைய தாயும், தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்தால் அவர்கள் தான் கடவுளர்களாக இருப்பதற்குதகுதி பெற்றவர்களே தவிர, இல்லாதவனாக இருந்து பிறகு உருவாகி, அதாவது மனிதர்களின் உடற்சேர்கையினால் பிறந்தவர் எப்படி கடவுளாக முடியும்? எனவே தான் திருமறைக் குர்ஆன் உங்களைப் படைத்த, நீங்கள் வணங்கக்கூடிய ஒரு கடவுளான அல்லாஹ்வுக்கு சந்ததி கிடையாது. அவனுக்கு தாய் தகப்பனும் கிடையாது என்று கூறுகின்றது.

சந்ததியும் கடவுளுக்கு இருக்க முடியாது என்பதை ஆராய்வோம். சந்ததி யாருக்கு தேவைப்படும் என்பதை சிந்திப்போமானால் அழிந்து போகக் கூடிய ஒருவனுக்குதான் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அழிவு இருப்பதன் காரணத்தினாலேயே நாம் சந்ததிகளை விரும்புகிறோம்.

நாம் அழிந்து விடுவோம். நம்முடைய சொத்துக்களை அனுபவிக்க ஒருவன் வேண்டும். நம்முடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற காரணத்தினால்-வயதான காலத்தில நம்மை கண்காணித்து பாதுகாத்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால் -தான் மனிதன் சந்ததியை விரும்புகிறான்.

இவனுக்கு அழிவு இல்லை. முதுமை இல்லை, என்றும் பதினாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பான் என்ற வாரம் ஒருவன் வாங்கி வந்திருப்பானேயானால் அவன் ஏன் சந்ததியை எதிர்பார்க்கப் போகிறான்? அவன் எப்போதும் சந்தோஷமாக, ஜாலியாக உலகத்தை அனுபவித்து கொண்டு இருப்பான், மனிதனுக்கு சந்ததி இருப்பதன் காரணத்தால் கடவுளுக்கும் சந்ததி வேண்டும் என்று சொல்லக் கூடாது.

ஏனெனில் கடவுளுக்கு முதுமை இல்லை. கடவுளுக்கு பலவீனம் இல்லை, கடவுளுக்கு சோர்வு இல்லை, இவையனைத்தும் இல்லாத ஒருவன் எதற்காக சந்ததியை தனக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மேலும் நாம் சிந்திப்போமேயானால் திருக்குர்ஆன் மூலம் இன்னும் ஆதாரங்களைப் பெறலாம். குர்ஆனில் ஒரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

'அவனுக்கு மனைவியும் கிடையாது'

மனைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும். இறைவன் தனக்கு மனைவி இல்லை என்று திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்து பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
(திருக்குர்ஆன் 72:3)

அல்லாஹ் தனக்கு மனைவி இல்லை என்பதன் மூலம் சந்ததியின்மையைப் பறை சாற்றுகிறான். மேலும் மனைவி இருப்பது வேறொரு வனையிலும் கடவுளுக்கு பலவீனமாகும்.

கடவுளுக்கு ஒரு ஆசை வந்து, அவருக்கு உணர்ச்சி மெலீட்டு, அவர் மனைவியோடு சம்போகம் செய்வாரேயானால் அந்த நேரத்தில் அவனுடைய படைபுகளில் யாராவது, 'கடவுளே' என்று கூப்பிட்டால் என்ன ஆகும்? அவர் இன்பத்தில் திளைத்து இருக்கும் நேரத்தில் கடவுளிடம் கேட்டால் அவா எப்படிக் கொடுப்பார். மேலும், கடவுளுக்கு மனைவி இருந்து இன்பம் துய்ப்பதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவாரானால் அந்த நேரத்தில் உலகத்தைக் கண்கானிப்பது யார்? ஏனெனில் கடவுள் என்பவர் 24 மணி நேரமும் உலகத்தை தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

மனிதனுக்கு எந்த நேரத்தில் துன்பம் ஏற்படலாம். கடவுள் மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் என்னை ஒருவன் கொல்ல வரலாம். கடவுளே! என்று நான் அவனிடம் அந்த நேரத்தில் பாதுகாப்பு தேடப்போக அவன் 'போடா வெளியே' என்று கூறினால் அது கடவுளுக்குரிய தகுதியாக இருக்காது.

மனைவியுடன் இன்பம் அனுபவித்துக்கொண்டே இந்த உலகத்தையும் கவனிக்கும் வகையில் கடவுள் ஏன் தன்னை ஆக்கிக்கொள்ள முடியாது என்று சிலர் இதற்குச் சமாதானம கூறுவார்கள்.

இந்தச் சமாதானத்தை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டாலும், அவருக்கு இன்பம் தருவதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறது. இன்னொருவரைச் சார்ந்தே இவரால் இன்பம் பெற முடிகின்றது என்பதை மறுக்க முடியாது. இதற்கு எந்தச் சமாதானமும் கூற முடியாது.

தனக்கே தன்னால் இன்பம் அளித்துக் கொள்ள இயலாதவர் பிறருக்கு எப்படி இன்பம் அளிப்பார்?

ஆதனால் தான் இஸ்லாம் கூறுகிறது. கடவுள் என்று நம்புவீர்களானால் அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள், என்று கூறுகிறது. அவனுக்கு சந்ததி இல்லை என்றும் நம்புங்கள் என்று கூறுகிறது. ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தான் உங்களை எல்லா நேரத்திலும் கண்காணிக்க முடியும்.

இறைவனுக்கு சோர்வும் உறக்கமும் இல்லை

இன்னொரு இடத்தில் திருக்குர்ஆன் கடவுளுக்குரிய தகுதியாக மற்றொன்றையும் கூறுகிறது.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும் அவ்விரண்டையும் காப்பது அவனுக்கு சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன் 2:255)

வானங்களையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை. (திருக்குர்ஆன் 50:38)

தூங்குகிறவன் கடவுளாக இருக்க முடியாது. அவன் தூங்கிக் கொண்டு இருந்தானேயானால் அந்த நேரத்தில் உலகின் ஜீவராசிகள் நிலை என்னவாகிறது? இந்த சூரியன், சந்திரன், பூமி இவைகளையெல்லாம் கடவுள் கண்காணிக்க வேண்டி இருக்கிறது. அவனுடைய படைப்பினங்களில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ பேருக்கு அந்த நேரத்தில் தேவை ஏற்படும். கடவுள் தூங்கக்கூடிய நேரத்தில் இந்த உலகத்தை நிர்வகிப்பவன் யார்? அவனுக்கு பிரதிநிதி யாராவது உண்டா? துணைக்கடவுள் என்று ஒருவனை துணை ஜனாதிபதி போல் நியமித்து கொள்ள முடியுமா?

அதனால் தான் கடவுள் என்று நீங்கள் நம்பக்கூடிய அவனுக்குச் சந்ததி இல்லை என்றும் அவனுக்கு அசதி இல்லை என்றும் அவனுக்குத் தூக்கம் இல்லை என்றும், அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள் என இஸ்லாம் சொல்கிறது.

ஆக, இந்த அடிப்படையில் வைத்துக் பார்போமேயானால் ஏனைய மார்க்கங்களிலிருந்து இஸ்லாம் எல்லா வகையான கொள்கைகளிலும் வித்தியாசப்படுகிறது. இப்படி எந்த மார்க்கமும் கடவுளைச் சொல்லவே இல்லை.

கடவுளை வைத்துத்தான் மதங்கள் உருவானது. கடவுளைச் சொல்லவில்லையெனில் அது மதம் கிடையாது. மார்க்கம் கிடையாது. எனவே கடவுளைப் பற்றிக் கூறக்கூடிய எந்த மார்க்கங்களை எடுத்துப் பார்த்தாலும் அவர்களுடைய கடவுளிடம் ஏதாவது ஒரு பலவீனத்தைத்தான் வைத்திருக்கிறார்கள்.

கடவுளுக்குச் சோர்வு, அசதி, மனைவி, சந்ததி இப்படியெல்லாம் சொல்லக்கூய எல்லா சித்தாந்தங்களையும் இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. 'எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேய இருந்து கொண்டு இருக்கிறான்' என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

இறைவன் என்று சொல்பவன் ஒரு வினாடி நேரம் கூட 'கொங்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வோம்' என்றும் 'ரொம்ப டயர்டா இருக்கு, ஓய்வாக இருப்போமே' என்றும் இருக்கக்கூடாது.

எல்லாநேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டு இருக்கிறான் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

கடவுள் ஒரு வினாடி கூட ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார். ஓய்வு எடுத்துக் கொண்டால் கடவுள் என்று கருதுவதற்கே தகுதியற்றவராகிறார். ஏனெனில் ஒவ்வொரு விநாடியிலும் கோடிக்கணக்கான மக்களும், மற்ற உயிரினங்களும் கடவுளின் அருட்பார்வையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனக்கு என்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடவுள் போய்விட்டால் பின்பு எதற்கு அந்தக் கடவுள்?

இவ்வாறு சிறந்த கடவுள் கொள்கையை இஸ்லாம் உலகிற்குச் சொல்கிறது.
லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கொள்கையினால் ஏற்படும் மிகச் சிறந்த பயன் இது.
.
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Wednesday, June 04, 2008

இஸ்லாமும் பிற மதங்களும்...!

................................................. - டாக்டர். ஜாகிர் நாயக்

உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!.

பதில்:

1) இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:

எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

2) உதாரணம்: மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.

அ) இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.
எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.

ஆ) இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.
இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.

இ) திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.

திருடினான் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:

'திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.' (அல்-குர்ஆன் 5 : 38)

'ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா? இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்' என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்

ஈ) இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது. அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.

இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான். திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே - திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.

3) மூன்றாவது உதாரணம்: இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.

அ) வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?. பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.

ஆ) இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் - நடை முறையும்.

இஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இ) பெண்களுக்குரிய 'ஹிஜாப்'

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்.....ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

ஈ) ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

உ) இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது - ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஊ) வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

எ) அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது. நடந்த வல்லுறவு குற்றங்களில் 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.

அதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 x 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது. மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான். மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.

இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும். முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள்!. ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.

ஏ) இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:

அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.

4) மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது.

.
.
.
.

Friday, April 18, 2008

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்?

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 1 - இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்! படிக்க இங்கே அழுத்தவும்

நம்பிக்கையின் இரண்டாவது பிரிவு:

மேலே சொன்ன அக் கொள்கையை இறைத் தூதர்கள் என்ற பெயரில் மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்புவியில் பரப்பினார்கள். இறைவன் (கடவுள்) பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பூரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதுவர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தாம் இக் கொள்கையை முதலில் முன் வைத்தவர்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர்.

இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது.

நான் இறைவனின் தூதன் ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள் இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.

இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.

மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.

மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை.

தனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

முஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா? நபிகள் நாயகமா? எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.

ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.

இன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.

அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன. ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

இதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.

தொடரும் இறைவன் நாடினால்...
.
.
.

Wednesday, April 16, 2008

இஸ்லாம் என்றால் என்ன? (பாகம் - 1)

இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்!

உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும்.

இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, 'ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல. இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. அதிகமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாம் கூறும் அக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

ஒரு கடவுள்தான் உண்டு என்று சொல்லி நிறுத்திகொள்ளாமல் இறவனுக்கென்று சில இலக்கணங்களை, வரையரைகளை, விதிமுறைகளை முன்வைத்து இவைகளை மீறிச் செயல்படக் கூடாது எனக் கட்டளையிட்டு, ஏனையோரின் கொள்கையிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது இஸ்லாம். இறைவன் என்பவன் எந்தத் தேவையுமற்றவன்.தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் எப்பொருளும் இறைவனா(கடவுளா)க முடியாது. உதாரணமாக, மனிதன் சிலவற்றுக்கு காணிக்கை செலுத்துகிறான். இப்படிச் செய்வதன் மூலம் நமது தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் அப்பொருள் இறைவனாக முடியாது.

இறைவன் என்பவன் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. மனிதர்கள் இறைவனுக்கு எந்த காணிக்கையையும் செலுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது இறைவனை (கடவுளை) பலவீனமானவனாக நாம் ஆக்கி விடுகிறோம். மனிதர்களிடம் நிறைய பலவீனங்கள் காணப்படுவதை நாம் அறிவோம். இளமை முறுக்கோடு எந்த மனிதனும் தொடர்ந்து வாழ்ந்ததில்லை. முதுமை அடைகிறான். நோய் நொடிகளுக்கு ஆளாகிறான். கவலை, துன்பம் போன்றவை அவனை ஆட்கொள்கின்றன.இப்படி பல்வேறு பலவீன நிலைகளை மனிதன் அடைகிறான். இறுதியில் மரணமும் கூட அவனைத் தழுவிக் கொள்கிறது. ஆனால் இறைவன் இவை அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன்.

இறைவன் (கடவுள்) நேற்று இளமை பிடிப்போடு இருந்தான். இன்று வயதாகி விட்டது என்று நாம் கூறினால் நாளை வேறொரு இறைவனை தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இறைவன் நோய், முதுமை, மறதி, மரணம் போன்ற மனிதனுக்கேற்படுகின்ற உபாதைகள் எதற்குமே உட்படாதவானாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஒருவரிடம் சென்று நாளைக்குச் திருப்பித் தருவதாகக்கூறி கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருப்போம். பின்னர் அதை மறந்து விடுவோம். சில நாட்களுக்குப் பின் அவன் வந்து கேட்டால் காரணத்தைக் கூறி அதை திருப்பித் தந்துவிடுவோம். இது மனித இயல்பு. இது போன்ற மறதி இறைவனுக்கு உண்டு என நம்புவது எப்படிப் பொருந்தும்?

துன்பத்தில் மாட்டிக் கொண்ட ஒருவன் 'இறைவனே (கடவுளே!) என்னைக் காப்பாற்று' என மன்றாடும் வேளையில் இறைவன் தூங்கிக் கொண்டிருந்தான் எனில் இவனது அழைப்புக்கு அவனால் எப்படி பதில் கொடுக்க முடியும்? மனிதர்கள் அனைவருமே ஒரே நேரத்தில் உலகில் தூங்குவதில்லை. இரவில் தூக்கம் வராத ஒருவன் இறைவா! (கடவுளே!) எனக் கூக்குரலிடுகிறான். அதே போல் நோயால் வேதனைப்படுபவன் கதறுவான்.இவைகளை செவிமெடுப்பவனாக இறைவன் இருக்க வேண்டும்.எனவே, தூக்கம், மறதி,மலஜலம் கழிப்பது போன்ற அனைத்து பலவீனங்களையும் விட்டு பரிசுத்தமானவனாக இருப்பவனே இறைவனா(கடவுளா)க இருக்க முடியும்!

இறைவன் பெண்களுடன் குடும்பம் நடத்துவதாக சில கொள்கை கோட்பாடுகள் கூறுகின்றன. இஸ்லாம் இதை முற்றிலும் மறுக்கிறது. இறைவன் மனைவி, மக்களை விட்டும் தேவையற்றவனாக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருப்பதைப் போன்று இறைவனுக்கும் இத்தேவைகள் இருக்குமென்றால் தன் அடியார்களான மனிதர்களின் தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்ற முடியும்? சுருக்கமாகச் சொன்னால் பலவீனமும் தேவையும் இறைவனுக்கு இருக்கவே கூடாது. இதை உள்ளடக்கிய கடவுள் கொள்கையைத்தான் இஸ்லாம் முன் வைக்கிறது. இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கை பற்றிய இரு முக்கிய நம்பிக்கைகளில் முதலாவதாகும்.

ஒரே கடவுளை அதுவும் நாம் விவரித்த முறையில் ஏன் நம்ப வேண்டும்? ஏழு,பத்து கடவுள்கள் உண்டு என்று நம்பினால் என்ன குறைந்துவிடும்? நமக்குள் எழுகின்ற இந்த சந்தேகங்களுக்கும் இஸ்லாம் ஒரு தெளிவை முன்வைக்கிறது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை நம்பினால் நமது பகுத்தறிவு செயலிழந்து போகும். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

உதாரணமாக கடவுளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை விஷயத்தை சற்று உற்று நோக்குவோம். நாம் செலுத்தும் காணிக்கையை கடவுளா பயன்படுத்துகிறான்? இல்லை.நம்மைப் போன்ற ஒருவர் கடவுளுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையை எடுத்துச் செல்கிறார். இங்கே நாம் ஏமாற்றப்படுகிறோம். நாம் விரும்பி ஒருவருக்கு இனாமாகக் கொடுப்பது வேறு விஷயம். இறைவனின் (கடவுளின்) பெயரால் ஏமாற்றப்படுவது அநியாயமல்லவா? இறைவன் (கடவுளர்கள்) பல உண்டு என்று நம்புகின்றபோது கடவுளின் பெயராலேயே மனிதர்கள் கூறு போடப்படுபடுகிறார்கள். பிரிவுக்கு இது ஒரு வழி வகுக்கிறது. இறைவன் ஒருவன் தான் என்று சொல்லுகின்ற போது மனிதர்கள் அனைவருமே ஒன்று என்ற கோட்பாடு வலுவடைகிறது. இஸ்லாம் இதைத்தான் சொல்லுகிறது.

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 4:1)

எல்லா மனிதர்களுக்கும் மூல அடிப்படை (ஆதம், ஹவ்வா என்ற) ஒரு ஆண் பெண்தான் இருக்கிறார்கள். அந்த ஜோடியே இவ்வளவு பெருக்கம் அடைந்து இருக்கிறது. இவர்கள் பல்கிப் பெருகி ஜாதி, மொழி, நாடு ரீதியாக சிதறிப்போய் உள்ளனர். அடிப்படையில் எல்லோரும் ஒன்றுதான். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், பௌத்தர், நாத்திகர் யாராயினும் அவர்கள் அனைவரும் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்களே! அந்த மூல ஜோடியை படைத்தவனே இறைவன் (கடவுள்) என இஸ்லாம் இயம்புகிறது.

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2 - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்? செல்ல இங்கே அழுத்தவும்.
.

Friday, February 01, 2008

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை?

பதில்: நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்னையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை, நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும் ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

இருக்கின்ற தகுதியை விட குறைந்த தகுதிக்கு இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்கமாட்டார்கள் என்னும் போது, கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்? இழிவுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதுதான் எந்த வகையில் நியாயமானது? இப்படி சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்பட்டுவிடும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். நான் தான் கடவுள் அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி ஏமாற்ற நினைத்தால் எளிதில் ஏமாற்றி விட முடியும். கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் ஏமாற்ற முடியும். அவர்களைச் சுரண்டமுடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.

கடவுள் மனிதனாக வரவேமாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ணவேண்டும் பருகவேண்டும் மலஜலம் கழிக்கவேண்டும். மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபடவேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்கவேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.
ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப்பேர் இன்றைக்கு பூமியில் இருக்கவேண்டும். ஆனால் ஒரே ஒரு கடவுளின் பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. அதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்கத் தகுதியானதும் அல்ல என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.