அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Thursday, August 28, 2008

யோசேப் அறியாத ராம்சேஸ் பட்டினம்

இஸ்ரவேலர்களால் உருவாக்கப்பட்ட பித்தோம், ராமசேஸ் என்னும் இரண்டு பண்டகசாலைப் பட்டணங்களைக் குறித்து பைபிள் கூறுகின்றது. யாத்திராகமத்தில் காணப்படுவதாவது,

அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள். (யாத்திராகமம் 1:11)

இந்த இரு நகரங்களும் உருவாக்கப்பட்டது இரண்டாவது ராம்செஸின் காலத்திலாகும். (BC 1279-1212) ராமசெஸ் II என்ற பர்வோனின் நினைவாகவே இந்த பெயர் வழங்கப்பட்டதாம் (Dr. D Babupaul : வேத சப்த ரத்னாகரம், பக்கம் 584) யோசேப்பைக் குறித்து எதுவும் அறியாத ஒரு புதிய மன்னராகவே ராம்சேஸைப் பற்றி பைபிள் குறிப்பிடுகின்றது.

''யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.'' (யாத்திராகமம் : 1:8)

மேற்கண்ட பைபிளின் வரிகளின் அடிப்படையில் நாம் பின்வரும் முடிவுக்கு வரலாம்.

1. யோசேப்புக்குப் பின் பலகாலம் கடந்தே ராம்சேஸ் அதிகாரமேற்றான்

2.இந்த ராம்சேஸின் காலத்தில் உருவாக்கப்பட்டதே ராம்சேஸ் என்ற நகரம்.

3.யோசேப்புடைய காலத்தில் இப்படிப்பட்ட ஒரு நகரம் இல்லை.

ஆனால் ஆதியாகமத்தில் இது குறித்துக் கூறப்பட்டுள்ளது முற்றிலும் முரண்படுகின்றது. பர்வோனின் கட்டளைப்படி யாக்கோபுக்கும் அவரது புத்திரர்களுக்கும் வழங்கப்பட்ட நகரமே ராம்சேஸ் என்று ஆதியாகமம் கூறுகின்றது.

பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். (ஆதியாகமம் 47:11)

யோசேப்புடைய காலத்தில் ராம்சேஸ் என்ற நகரமே இல்லை என்றிருக்க பிறகு எவ்வாறு யோசேப் அதனை தனது தகப்பனுக்கும் சகோதரர்களுக்கும் வழங்க முடியும்?

இவ்வாறாக பைபிளில் ஏராளமான அபத்தங்களை நாம் காண முடிகின்றது. இத்தகை அபத்தங்களை நியாயப்படுத்தவும் முடியாமல் விளக்கவும் முயாமல் பைபிள் பண்டிதர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

2 comments:

Anonymous said...

குழந்தைத்தனமான தங்கள் வாதத்துக்காக வருந்துகிறேன்;

ராமசேஸ் என்ற நகரம் வேறு;
ராமசேஸ் என்ற நாடு வேறாக இருக்கவேண்டும்;

ஏனெனில் தாங்களே கூறிய வண்ணம் ராமசேஸ் என்பது இராஜாவாகிய பார்வோனைக் குறிப்பதானால் அந்த பெயரும் இரு முறை வருவதை கவனிக்க வேண்டும்;

யோசேப்புக்கு அதிகாரம் தந்தவரும் பார்வோன் ராஜாதான்;
சுமார் 400 வருடத்துக்குப் பிறகு மோசேயினால் எதிர்க்கப்பட்டவரும் பார்வோன் ராஜாதான்;

காந்தி நகர் என்றும் காந்தி சாலை என்றும் இருப்பது போலவே இதனையும் கொள்ளவேண்டும்;

Egathuvam said...

அன்புச்சகோதரர் அவர்களுக்கு,

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

நீங்கள் குறிப்பிடுவது போன்று யாரும் குழந்தைத்தனமாக வாதிடவில்லை. நீங்கள் தான் சரியான ஆய்வின்றி அனுமானத்தின் அடிப்படையில் மறுக்கின்றீர்கள். காரணம் உங்கள் பைபிளில் அப்படி ஒரு தவறு இல்லை என்று மனதில் பதிய வைத்துக்கொண்டு நாம் சுட்டிக்காட்டியுள்ள பைபிள் வசனங்கள் முரண்பாடாக இருக்க முடியாது என்று அனுமானிக்கின்றீர்கள். நீங்கள் அனுமானத்தின் அடிப்படையில் தான் மறுக்கின்றீர்கள் என்பதற்கு பின்வரும் உங்களின் எழுத்துக்களே சரியான சான்று :

//ராமசேஸ் என்ற நகரம் வேறு

ராமசேஸ் என்ற நாடு வேறாக இருக்கவேண்டும்//

'இருக்க வேண்டும்' என்று நீங்கள் எழுதுவதிலிருந்தே நிங்கள் அனுமானித்து அது முரண்பாடாக இருக்க முடியாது என்று வாதிக்கின்றீர்கள். ஆனால் நாம் தெளிவாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரண்டு நகரங்களும் ஒரே நகரம்தான் என்பதை அனுமானத்தின் அடிப்படையில் அல்ல – பல கிறிஸ்தவ அறிஞர்களின் - புத்தகங்களின் - பல ரெஃபரன்ஸ் பைபிள்களின் - கருத்துக்களை வைத்துத்தான் இது தெளிவான முரண்பாடு என்று கூறுகின்றோம்.

இந்த இரு நகரமும் வேறு வேறு என்பது உங்கள் கருத்து. ஆனால் உன்மையில் அப்படியல்ல. இரண்டும் ஒரே நகரம் தான் எப்பது அனைத்து கிறிஸ்தவ அறிஞர்களின் ஏகோபித்த கருத்து. குறிப்பாக எண்ணற்ற Refernce பைபிள்களில் இந்த இரு நகரமும் ஒரே நகரம் தான் என்று குறிப்பிடுகின்றன. (இனையத்தளங்களிலிருந்து) உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வதென்றால் பிரபலமான ரெஃபரன்ஸ் பைபிள்களில் ஒன்றான English Statndard Version இந்த இரு நகரமும் ஒன்று தான் என்று குறிப்பிடுகின்றது. அதை Bible Gateway என்ற இந்த லிங்க் மூலம் நீங்கள் காணலாம்.

Click Hereஇதற்கு மேலும் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் உங்கள் கருத்துக்களை மனமாற வரவேற்கின்றோம். நாங்கள் தவறு செய்திருந்தால் திருத்திக்கொள்ள தயங்க மாட்டோம்.