அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, May 02, 2008

தாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...?

பைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு !
------------------------------------------------- - அபூ இப்ராஹீம்

இந்த மனிதசமுதாயத்திற்கு நல்வழிக் காட்ட வந்த இறைத்தூதர்களான தீர்க்கதரிசிகள் - நல்லோர்கள் பற்றி வரும் சம்பவங்களின் இடையிடையே - சில அபத்தமான - ஆபாசமான - அசிங்கமான வர்ணனைகளுடன் கூடிய இட்டுக்கட்டப்பட்ட கதைகளும் பைபிளில் நிறைந்துக் காணப்படுகின்றன. காரணம் அதைப் பாதுகாக்க வேண்டிய யூதர்கள் தங்கள் மனோஇச்சைப்படி தீர்க்கதரிசிகள் மீதே அபான்டமான - பொய்யான கதைகளை இட்டுக்கட்டியதால் தான் இப்படிப்பட்ட ஆபாசக் கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.

யூதர்களின் இப்படிப்பட்ட அவதூரான கதைகளுக்கும், அபத்தமான வரலாற்று திரிபுகளுக்கும் பலியான நல்லேர்களில் தாவீது தீர்க்கதரிசியும் ஒருவர். புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு கூட இயேசுவை அறிமுகப்படுத்தும் போது 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு' (மத்தேயு 1:1) என்று தாவீதை மையப்படுத்தி இயேசுவை அறிமுகப்படுத்தும் அளவுக்கு தாவீது ஒரு மிகச் சிறந்த தீர்க்கதரிசியாக அன்னைறய மக்களால் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும் போது 'இவர் ஒரு மிகச்சிறந்த தீர்க்கதரிசி என்றும் ஒழுக்க சிலர்களான நல்லோர்களில் ஒருவர்' என்றும் சாண்று பகர்கிறது.

'தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம் - அதற்கு அவ்விருவரும்: 'புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் - 27:15)

இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார். (அல்குர்ஆன் 38:17)

இப்படிப்பட்ட பல நற்பெயருக்கு சொந்தக்காரரான - பரிசுத்தரரான - தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி யூத எழுத்தாளர்கள் செய்துள்ள கற்பனைக் கதையையும் அதனால் அது இடம் பெற்றுள்ள பைபிலின் புத்தகங்களுடைய புனிதம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதையும் சற்று அளசுவோம்.

தாவீது ஒரு தரங்கெட்ட - ஒழுக்கங்கெட்ட செயலைச் செய்தார் என்று ஒரு கதை பைபிளில் வருகின்றது.

1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். 2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். 3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். 4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான் அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். 5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். (2 சாமுவேல் 11 : 1 - 5)

ஒரு தீர்க்கதரிசி - மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஒருவர் - இறைவழியில் ஆட்சி நடத்தும் ஒரு ஆட்சியாளர் என்ற நற்பெயருக்கு சொந்தக்காரின் பெயரில் யூத எழுத்தாளர்கள் இட்டுக்கட்டியுள்ள கதையைப் பார்த்தீர்களா கிறிஸ்தவர்களே!

ஒரு அன்னியப்பென்ணை - அதுவும் தனக்காக - தனது நாட்டுக்காக - தான் அனுப்பிய படையில் - எதிரி நாட்டவரை எதிர்த்து போரிட சென்ற ஒரு உன்மையாக போர்வீரனுடைய மனைவியை - தெரிந்திருந்தும் வேண்டும் என்றே அப்பெண்னை தவறான கண்னோட்டத்தோடு பார்த்தது மட்டுமல்லாமல் அவளை அழைத்து விபச்சாரமும் செய்தார் என்று பைபிளில் எழுதிவைத்துள்ளனர்.

ஒரு புனிதர் மீது அபாண்டமான - இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையை இந்த யூத எழுத்தாளர்கள இதோடு நிருத்தினார்களா? என்றால் இல்லை. அதைத் தொடர்ந்து அவர் மேலும் மேலும் அடுக்கடுக்கான துரோகங்களைக் (?) செய்தாகவும் எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள் :

6. அப்பொழுது தாவீது: எத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான் அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான். 7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். 8. பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. 9. ஆனாலும் உரியா தன் வீட்டுக்குப் போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக்கொண்டிருந்தான். 10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். 11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். 12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான் அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமிலே இருந்தான். (2 சாமுவேல் 6 - 12)

நல்லோர்களிள் ஒருவரான தாவீது மேலும் மேலும் தவறு செய்ததாக பைபிளில் இந்த வசனங்களின் மூலம் இட்டுக்கட்டப்பட்டுள்ளது.

தனது படைவீரனின் மனைவியை வேண்டுமென்றே தெரிந்தும் அவளோடு விபச்சாரம் புரிந்ததோடு மட்டுமல்லாமல், அவள் தாவீதால் கற்பம் அடைந்து விட்டால் என்று தெரிந்ததும் அதை மறைப்பதற்காக - போர்க்களத்தில் இருந்த அவளின் கனவனான உரியாவை அழைத்து வந்து அவளோடு உடளுறவு கொள்ள வைத்து, அதன் மூலம் தாவீதால் உன்டான குழந்தை - உரியாவுக்கு பிறந்ததாக சொல்வதற்கு சூழ்சி செய்த ஒரு கொடியவர் என்றும் இதை அறியாத உரியா தாவீதுக்கு மிகவும் விசுவாசியாக இருந்தாகவும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அதன் பிறகு தாவீது என்ன செய்தார்? அதையும் யூத எழுத்தாளர்கள் இப்படி கதை எழுதி வைத்துள்ளனர்:

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான். ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக் கொண்டான். 14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். 15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். 16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். 17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள் ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். 18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி, 19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது, 20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டினத்திற்கு இத்தனை கிட்டப் போய் யுத்தம பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ? 21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு எந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான் நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். 22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து, 23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம். 24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின் மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள் உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான். 25. அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்பட வேண்டாம் பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும் நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான். 26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். 27. துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது. (2 சாமுவேல் 11: 13-27)

இந்த அளவுக்கு ஒரு கொடுமையாமையான ஆட்சியாளராக - கொடூரமணம் படைத்தவராக - சூழ்ச்சிக்காராக - தனக்காக போர்க்களத்திற்குச் சென்ற ஒரு உன்மையான வீரனின் மனைவியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் அதை மறைப்பதற்காக செய்த சூழ்ச்சியில் அவன் கணவன் விழவில்லை என்பதால் அவனை மீண்டும் போர்களத்திற்கு அனுப்பி கொல்லப்பட வைத்த கொலைகாராகத் தான் இந்த பைபிள் - கர்த்தரால் மக்களுக்கு நல்வழிப்படுத்த வந்த தாவீது தீர்க்கதரிசியைக் - காட்டுகின்றது. இன்றைய நடையில் சொல்வதென்றால் இ.பி.கோ சட்டத்தின் படி விபச்சாரம், கற்பழிப்பு, சதிதிட்டம் தீட்டுதல், கொடூரமாக கொலை செய்தல், நாட்டுக்கு துரோகம் செய்தல், தான் எடுத்துள்ள இரகசிய காப்பு பிரமானத்துக்கு மாறாக நடத்தல் இன்னும் எத்தனைவிதமான குற்றங்கள் இருக்கின்றதோ அவை அனைத்து குற்றத்தையும் ஒரு சேர செய்த கொடியவராகவும், இப்படிப்பட்டவருக்கு எவ்வளவு கொடுமையான தண்டனைக் கொடுத்தாலும் அது தகும் என்று சொல்லும் அளவுக்கு, அத்தனை தவறுகளையும் ஒரு தீர்க்கதரிசி - கடவுளின் பெயரால் மக்களைத் நல்வழிப்படுத்த வந்த ஒரு தீர்க்கதரிசி செய்தார் என்று எழுதிவைத்துள்ளனர்.

இந்த தீர்க்கதரிசி செய்த இந்த அநாகரிகமான - கொடூரமான செயல் - கடவுளின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததாகவும் பைபிலிலேயே சொல்லப்பட்டுள்ளது. (பார்க்க 2 சாமுவேல் 11:27)

கடவுளுக்கு இந்த செயல் பொல்லாப்பாகத் தெரிந்ததாக சொல்லப்பட்டுள்ளதே அப்படிப்பட்ட இந்த கேடுகெட்ட செயல்களையெல்லாம் உன்மையிலேயே தாவீது செய்திருப்பாரோயானால் இந்த கொடுஞ்செயலுக்கு அன்றையக்காலத்தில் என்ன தண்டனை இருந்ததோ அந்த தண்டனையின் படி தாவீது தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?

அன்றைய காலத்தல் ஒருவன் அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்தால் என்ன தண்டனை என்று பைபிளே சொல்கின்றது :

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் - 20:10)


கடவுள் மாமா வேலை செய்பவரா?தாவீது பற்றிய இந்தக் கதை உன்மை என்றால் கடவுளின் - பைபிளின் - க்குற்றவியல் சட்டத்தின்படி கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்த தவீதுக்கு கடவுள் கொடுப்பதாகச் சொன்ன தண்டனை என்ன?

அதையும் பைபிளே சொல்கின்றது?

'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12)

எந்த அளவுக்கு கடவுளை கேடுகெட்டவராக - தரம் தாழ்ந்தவராக - மாமா வேலைப் பார்ப்பவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா? தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்கு (?) கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய தண்டனையான மரணத்தண்டனையை கடவுள் நிறைவேற்றாதது மட்டுமின்றி அதற்கு வேறு ஒரு தண்டனையின் மூலம் கடவுள் - தாவீதின் மகள்களைக் மற்றவனுக்கு கூட்டிக்கொடுக்கும் தண்டனையை கொடுப்பதாகச் சொன்னார் என்ற சொல்கின்ற அளவுக்குத் துணிந்தவர்கள் தான் இந்த யூத எழுத்தாளர்கள்.

ஆதாவது தாவீது செய்த இந்தச் செயல்களுக்கான தண்டனையாக, ஊரார் முன்பாக தாவீதுடைய மகள்களை கடவுளின் ஆணைப்படி சிலர் கற்பழிப்பார்கள் என்று கடவுள் சொன்னாராம். எந்த அளவுக்கு கடவுளை கேவளமானவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே.

ஒரு குற்றவியல் சட்டம் - அதுவும் கடவுளால் வழங்கப்பட்ட - அன்றைய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்க - அதற்கு மாற்றமாக அந்தச்சட்டங்களை கேளி செய்வது போல் அசிங்கமான செயலை செய்ய கடவுள் தூண்டினார் - கூட்டிக்கொடுக்கும் ஒரு சட்டத்தை சொன்னார் - என்று எழுதிவைத்துள்ளனர். இதை எப்படி எழுத மணம் வந்தது இவர்களுக்கு? ஒரு விபச்சாரகனை தண்டிக்க நூறு விபச்சாரகனை கடவுளே உருவாக்கினார் என்று கடவுளுடைய வேதத்திலேயே திரித்து எழுதும் தைரியம் எப்படி வந்தது இவர்களுக்கு? கிறிஸ்தவ சகோதரர்கள் இதை சிந்திக்க வேண்டும். இந்த ஆபாபசமான - அபாண்டமான வரலாற்றுத் திரிபுகளை தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் கிறிஸ்தவ சகோதரர்களே. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக, முதலிலே தாவீது தீர்க்கதரிசியின் மீது கலங்கம் கற்பித்த யூத எழுத்தாளர்கள் கடைசியில் கடவுளின் வேதத்திலேயே கடவுளை கேவலப்படுத்தி எழுதியிருப்பதை பார்த்தீர்களா கிறிஸ்தவ சகோதரர்களே!

இந்தக் கதை பொய் என்று எப்படி சொல்கின்றீர்கள் என்று உங்களுக்கு சந்தேகம் எழழாம். இந்தக் கதை உன்மையிலேயே கடவுளால் அருளப்பட்டதாக இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது. அதை பைபிள் ஒளியிலேயே சற்று அளசுவோம்.

காரணம் 1 : ஒரு பரிசுத்தமான தீர்க்கதரிசி - மக்களுக்கு நல்வழிக்காட்ட வந்த தீர்க்கதரிசி - இறைவனுடைய சட்டத்தின் படி ஆட்சி செய்த தீர்க்கதரிசி இந்த இழிவான காரியத்தில் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தகங்கள் இன்றைக்கும் பைபிளிலேயே ஒரு புனித புத்தகமாக இருக்கும் அளவுக்கு ஒரு பரிசுத்தர் இந்த அளவுக்கு கொடியவராக இருந்திருக்க மாட்டார்கள். கண்டிப்பாக இது சிலரால் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். இது முதல் காரணம்.

காரணம் 2 : நாம் மேற்கூறியுள்ள படி ஒருவன் அடுத்தவன் மனைவியிடம் விபச்சாரம் செய்தால் அவன் கொள்ளப்பட வேண்டும் என்பது சட்டம் அன்றைய காலத்தில் இருந்த குற்றவியல் சட்டம் (பார்க்க லேவியராகமம் - 20:10) ஆனால், அடுத்தவன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டது - தனது படையிலேயே தனக்காக போரிடசென்றவனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்தது - தனது படைவீரனுக்கு துரோகம் செய்தது, விபச்சாரத்தின் மூலம் தாவீதால் பிறக்கப்போகும் குழந்தையை உரியாவின் தலையிலேயே கட்ட நினைத்தது, இந்த சூழ்சிக்கு பலியாகாத உரியாவை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்து அதை நிறைவேற்றியது போன்ற - கடும் குற்றத்தை செய்த தாவீதுக்கு - எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட தண்டனையான மரணத் தண்டனையை கடவுள் கொடுக்க வில்லை என்பது போல் இந்த சம்பவத்தின் மூலம் காட்டப்படுகின்றது. (அதாவது கடவுள் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு விதமாகவும், தனக்கு வேண்டாதவர்களுக்கு வேறு ஒரு விதமாகவும் நடந்துக் கொள்வர் என்பது போல் காட்டப்படுகின்றது.) தாவீது இந்தத் தவறைச் உன்மையிலேயே செய்திருந்தால் கண்டிப்பாக அந்த சட்டத்தின் படி கடவுள் தண்டித்திருக்க வேண்டுமே. அவ்வாறு செய்யாமல் அவரை கடவுள் தப்பவிட்டதாக காட்டப்படுகின்றது. இது இரண்டாவது காரணம்.

காரணம் 3: கடவுள் வழங்கியுள்ள குற்றவியல் சட்டங்கள் என்பது சக்தியும் பலமும் உள்ளது என்பது பைபிளின் சான்று. (சங்கீதம் 19:7) அவரது சட்டங்கள் மனித சமுதாயத்தில் குற்றங்களை ஒழித்து மக்களை நிம்மதியாக வாழச்செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட கடவுளின் சட்டங்களை கேளிக்குறியவை என்பது போல் இங்கே காட்டப்படுவடுவதுடன், 'கடவுள் மாமா வேலைப்பார்ப்பவர் - கூட்டிக்கொடுப்பவர்' என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசனங்கள் சாத்தானின் தூண்டுதலால் திரித்து எழுதப்பட்டிருக்குமே யொழிய கடவுளால் அருளப்பட்டிருக்காது என்பதுதான் மறக்க முடியாத உன்மை.

காரணம் 4 : 2 சாமுவேல் 12: 11 - 12 வசனங்களின் மூலம் கடவுளைத் தரங்கெட்டவராகவும் - மாமா வேலைப்பார்ப்பவராகவும் - கூட்டிக்கொடுப்பவராகவும் காட்டப்படுகின்றது. அதாவது ஒரு விபச்சாரத்திற்குரிய தண்டனையால் அந்த விபச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு பதிலாக பல விபச்சாரகர்களை ஏற்படுத்தி கேவலமான - நகைப்பிற்குறிய சட்டங்களை கொடுப்பவர் தான் கடவுள் என்று காட்டப்படுகின்றது. இது போன்ற வசனங்களை கடவுள் அறிவிக்க மாட்டார் என்று பைபிளே சொல்கின்றது.

சங்கீதம் 33:4 : கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.

For the word of the LORD is right; and all his works are done in truth. (kjv)

அது மட்டுமல்ல இது போண்ற அசிங்கமான சட்டங்களை துன்மார்க்கன் தான் சொல்வான் என்றும் பைபிளே சான்று பகர்கின்றது.

துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும். அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது (சங்கீதம் 33 : 1-2)

இவற்றை வைத்துப் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த சம்பவம் அந்தக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தாவீது தீர்க்கதரிசியின் மீது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பது நிரூபணம்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கேவலமான கதையால் பைபிளே கேள்விக்குறியாக்கப்படுவது தான் வேதனையிலும் வேதனை.

'வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - (உபாகமம் 23:2)

இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, அவரது மகன் சாலமோன் மற்றும் அவரின் சந்ததியின் மூலம் பிறந்த இயேசு உட்பட பரிசுத்தவான்கள் யாவரும் கடவுளுடைய சபைக்கு வரமுடியாதாம் - அதாவது அவர்களெல்லாம் பரிசுத்தவானாக - கடவுள் ஊழியம் செய்தத் தகுதியற்றவர்களாகிவிடுவர் என்கிறது பைபிள். விபச்சாரம் செய்பவருக்குப் பிறக்கும் ஒருவர் இருவரல்ல.. பத்து தலைமுறை யானாலும் வரமுடியாது என்கிறது பைபிள். இந்த தாவீது எழுதின புனித புத்தகங்கள் பைபிளில் உள்ளது. அவரது மகன் சாலமோன் எழுதிய புனித புத்தகங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது. உபாகமம் 23:2 ன் படி இவர்களே பரிசுத்தவான்களாக முடியாது எனும் போது இவர்கள் எழுதிய புத்தகங்கள் எம்மாத்திரம். தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்றல்லவா?

தாவீது பற்றிய இந்தக் வரலாற்றுத் திரிபை நம்பினால் கிறிஸ்தவர்கள் இந்த முடிவுக்குத்தான் வரவேண்டும். அந்த ஒரு கதையை தூக்கி எறிகின்றீர்களா? அல்லது பைபிலையே ஒதுக்கித்தள்ளப்போகின்றீர்களா? நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

6 comments:

SUNDAR said...

நண்பரே!

பைபிள் என்பது திருக்குரான் போல ஒரே மனிதரால் எழுதப்பட்டது அல்ல என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

ஒரு இடத்தில் சொல்லப்பட்ட வசனத்துக்கு இணை வசனம் வேறு ஒரு புத்தகத்தில் இன்னொருவரால் எழுதப்பட்டு இருக்கும் எனவே ஒன்றை சேர்ப்பதோ அகற்றுவதோ முடியாத காரியம்

தாவீது பாவம் செய்தார் என்பதை இ ராஜாக்கள் 15:5லும் தாவீது தானே எழுதிய தனது சங்கீதமாகிய 51லும் அது பற்றி குறிப்பிட்டு இருப்பதை பார்க்க முடியும். இப்படி பல இடங்களில் குறிப்பிட பட்டுள்ள உண்மையை, திருக்குரானில் தாவீது நபியின் முழு வாழ்க்கை சரித்திரம் இல்லாத பட்சத்தில். அப்படி நடந்திருக்காது என்ற அனுமானத்தில் அடிப்படையில் மறுப்பது சரியல்ல.

மிகப்பெரிய நபியாகிய தாவீதை பற்றி அப்படி ஒரு தவறான சம்பவத்தை எழுதுவதால் யூதர்களுக்கு என்ன பயன்? அவர்கள் அரசரை பற்றி அவர்களே தரக்குறைவாக எழுதி என்ன செய்யபோகிறார்கள்?

ஆனால் அது உண்மை என்பதன் மூலம் கீழ் கண்ட பாடங்களை படிக்க முடியும்.

1. மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் சமயம் கிடைக்கும் போது பாவம் செய்ய தயங்க மாட்டான்
2. பாவம் செய்த மனிதன் இறைவனிடம் மிக வருந்தி மன்னிப்பு கேட்டால் எந்த பாவம் என்றாலும் மன்னிக்கப்படும்
3. பாவம் செய்தவனுக்கு அதற்கு தகுந்த தண்டனை இல்லாமல் மன்னிப்பு கிடைக்காது.
4. இறைவன் கடுமையான குற்றம் என்று சொல்லிய குற்றம் கூட இறைவன் நினைத்தால் அதன் கடுமையை குறைக்க முடியும்
5. அவர் நினைத்தால் எந்த கட்டளை கற்பனை எல்லவற்றயும் அவரால் மாற்ற முடியும்

மேலும் இறைவன் மாமா வேலை பார்க்கிறாரா என்பதெல்லாம் சரியான வார்த்தை அல்ல.

எல்லா வேலையுமே அவர்தான் பார்க்கிறார். விபச்சாரம் செய்பவனுக்கு அதற்கு தகுந்த தண்டனை வழங்குகிறார் அதாவது தாவீது பிறன் மனைவியை
அபகரித்தார் அதற்கேற்ப தாவீதின் மறுமனயாட்டிகள் வேறொருவனுக்கு கொடுக்கப்படனர். (நாம் பிறன் மனைவியை இச்சித்தால் பிறன் நம் மனைவியை இச்சிப்பான்)

அவரிடம் யாரும் நீர் என்ன செய்கிறீர் என்று கேட்க முடியாது நண்பர்களே

ஏகத்துவம் said...

// ஒரு இடத்தில் சொல்லப்பட்ட வசனத்துக்கு இணை வசனம் வேறு ஒரு புத்தகத்தில் இன்னொருவரால் எழுதப்பட்டு இருக்கும் எனவே ஒன்றை சேர்ப்பதோ அகற்றுவதோ முடியாத காரியம் //

இது தவறான கருத்து. ஏராளமான கிறிஸ்தவ அறிஞர்களே ஒத்துக்கொண்ட உன்மையை நீங்கள் மறுக்கின்றீர்கள். ஆயிரக்கணக்கான வசனங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொண்டு அவற்றை இப்பொழுது வந்துள்ள பல பைபிள்களில் நீக்கியும் வெளியிட்டுள்ளனர் என்பது தங்களுக்குத் தெரியாது போலும்!அது மட்டுமல்ல ஏராளமான வனங்கள் பின்வந்தவர்களால் கூட்டப்பட்டும் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் உள்ளதை விரைவில் ஆதரங்களோடு வெளியிட இருக்கின்றோம். விரைவில் பைபிளில் கூட்டல் குறைத்தல் உள்ளதா என்றத் தலைப்பில் நீங்களும் உங்களைச் சார்ந்தோரும் கேட்டுள்ள கேள்விகளுக்கு ஆதாரங்களோடு பதில் அளிக்க இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்.. (அதிகமான அலுவலக வேலைகள் காரணமாகவே தொடர்ந்து கட்டுரைகள் வருவதற்கு தாமதமாகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்)

// தாவீது பாவம் செய்தார் என்பதை இ ராஜாக்கள் 15:5லும் தாவீது தானே எழுதிய தனது சங்கீதமாகிய 51லும் அது பற்றி குறிப்பிட்டு இருப்பதை பார்க்க முடியும். இப்படி பல இடங்களில் குறிப்பிட பட்டுள்ள உண்மையை, திருக்குரானில் தாவீது நபியின் முழு வாழ்க்கை சரித்திரம் இல்லாத பட்சத்தில். அப்படி நடந்திருக்காது என்ற அனுமானத்தில் அடிப்படையில் மறுப்பது சரியல்ல. //

தாவீது செய்ததாக பைபிளின் 2 சாமுவேல் 11 : 1-27 ல் சொல்லப்பட்டுள்ள பொய்யானக்கதை அவர் மீது அபாண்டமாக இட்டுக்கட்டப்பட்டது என்பதை பைபிள் ஆதாரத்தை வைத்தே நாம் எழுதியுள்ளோம். பைபிளின் மற்ற வசனங்களை ஆதராங்களாக வைத்துத் தான் அந்தக் கதை யூதர்களால் இட்டுக்கட்டப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளோம். நீங்கள் நடுநிலையோடு சிந்திப்பீர்களேயானால் நாம் எழுதியதின் உன்மை விளங்கும்.

தாவீது ஒரு சாதாரன குற்றத்தை செய்தாக அந்த வசனங்களில் சொல்லப்படவில்லை. அவர் மிகப்பெரிய (ஒன்றல்ல) பல தவறுகளை செய்ததாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அவர் அடுத்தவன் மனைவியோடு கள்ள உறவு கொண்டது, அதன் மூலம் கற்பமானதால், அந்த கர்ப்பம் அவளது கணவனால் தான் உருவானது என்று உருவாக்க நினைத்தது, அதற்கு ஒத்துவராக அவளது கணவனை சூழ்ச்சி செய்து கொலை செய்தது போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர் செய்த அந்தச் செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு தவறானதாகத் தெரிந்ததாகவும் பைபிளிளேயே சொல்லப்பட்டுள்ளது. (பார்க்க 2 சாமுவேல் 11 : 27) இப்படிப்பட்ட ஒரு தவறை அதுவும் இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு தண்டனை வழங்கும் ஸ்தானத்தில் இருந்கும் ஒருவரே எந்த வித பயமும் இன்றி இந்த மாபாதக செயல்களை செய்கிறார் என்றால் அவருக்கு அன்றையகாலத்தில் இருந்த தண்டனையான மரணதண்டனைக் கொடுக்கப்பட்டு அவர் கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே! அவ்வாறு செய்யப்படவில்லையே அது ஏன்?

தாவீதுக்கு முன் வாழ்ந்த மோசேயுடைய காலத்தில் அருளப்பட்ட சட்டம் தாவீதுக்கு பின்வாழ்ந்த இயேசு காலத்திலும் நடைமுறையில் இருந்த சட்டம் அடுத்தவன் மனைவியோடு உடலுறவு கொள்பவன் கல்லெறிந்து கொள்ளப்படவேண்டும் என்பது. அந்த சட்டத்திலிருந்து தாவீது மட்டும் தப்பித்தது எப்படி? அந்த விபச்சார சம்பவம் உன்மையிலேயே நடந்திருந்தால் எப்படித் தப்பித்திருக்க முடியும்? இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் போனதால் தப்பித்தார் என்று சொல்வதற்கும் வழி இல்லை. காரணம் அந்த சம்பவம் பற்றி நாத்தானுக்கு தெரிந்ததாகவும், ஏன் கடவுளுக்கே அது தவறாகத் தெரிந்ததாகவும் பைபிளிளேயே சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்க தாவீது கொல்லப்படாமல் தப்பித்தது எப்படி?

அடுத்து கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், தாவீதுக்கு அவர் செய்த இந்த தவறான செயல்களுக்கு தண்டனையாக கடவுள் வேறு ஒரு முறையின் படி தண்டனை வழங்குவதாகச் சொன்னார் (?) என்று சொல்லப்படுவதும் கடவுள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒரு பச்சைப் பொய்யே. காரணம் கடவுளின் சட்டம் மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் போல் அல்லாமல் அதைவிட சக்தி வாய்ந்தது என்று பைபிளே சாண்று பகர்கின்றது. அப்படி இருக்க கடவுள் ஒரு விபச்சாரக் குற்றத்தை தடுப்பதற்காக சொல்லப்படும் சட்டம் பல விபச்சாரகர்களை உருவாக்குவது போல் உள்ளது என்றால் வேடிக்கையாக இல்லையா? அப்படிக்கூறுவது கடவுளையும் கடவுளின் சட்டங்களையும் கேளிசெய்வது போல் ஆகாதா?

ஒரு வாதத்திற்காக நீங்கள் சொல்வது சரி என்று ஏற்றுக்கொண்டாலும், விபச்சார தண்டனைக்கான குற்றவியல் சட்டம் கடவுளாலேயே வெளிப்படுத்தப்பட்டு, அது நடைமுறையிலும் இருக்க, அதற்கு மாற்றமாக ஒரு புது சட்டத்தை ஒரு தனிமனுதனுக்காக சொன்னதன் அவசியம் என்ன? அப்படியானால் நடைமுறையில் இருக்கும் விபச்சாரத்திற்கான மரணதண்டனை சட்டம் ஏன்? பாமரர்களுக்கு ஒரு சட்டமும் அரசார்களுக்கு ஒரு சட்டம் என்றா கடவுள் பாகுபாடு பார்ப்பார்?

தாவீது செய்த தவறுக்கு, சற்றும் சம்பந்தமில்லாத அவரது மனைவிமார்களை ஊரார் முன்பாக மற்றவர்களை வைத்து கடவுள் கற்பழிக்க பைப்பார் என்று கடவுள் சொல்வதாக சொல்லப்படுகின்றதே, இது தாவீது மனைவிமார்களுக்கு செய்யப்படும் பச்சை துரோகம் இல்லையா? அதுவும் பட்டப்பகலில் அந்தப் பெண்களின் மானம் பரிபோகும் அளவுக்கு இந்த கற்பழிப்பு தண்டனை வழங்கப்படும் (?) என்று கடவுள் சொல்கின்றாரே இது ஒன்றும் அறியாத அந்தப் பெண்களை அநியாயமாக தண்டிப்பதாகாதா? இது தான் கடவுள் வழங்கும் நீதியா? தர்மமா? அல்லது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? சிந்தியுங்கள் சகோதரரே.

// தாவீது பாவம் செய்தார் என்பதை இ ராஜாக்கள் 15:5லும் தாவீது தானே எழுதிய தனது சங்கீதமாகிய 51லும் அது பற்றி குறிப்பிட்டு இருப்பதை பார்க்க முடியும். இப்படி பல இடங்களில் குறிப்பிட பட்டுள்ள உண்மையை, திருக்குரானில் தாவீது நபியின் முழு வாழ்க்கை சரித்திரம் இல்லாத பட்சத்தில். அப்படி நடந்திருக்காது என்ற அனுமானத்தில் அடிப்படையில் மறுப்பது சரியல்ல. //

அனுமானத்தோடு எங்கே மறுக்கின்றோம். ஆதராரத்தோடுதான் மறுக்கின்றோம். அது மட்டுமல்ல இந்த கதையை உன்மை என்று நீங்கள் நம்பினீர்களேயானால் பைபிளில் தாவிது சாலமோன் ஆகியயோர் எழுதிய பல புத்தகங்களின் புனிதம் கொட்டுப்போகும் என்றும் விளக்கியுள்ளோம். (பார்க்க உபாகமம் 23:2) அதன் மூலம் பைபிளே கேள்விக்குறியாகும் என்பதையும் தெளிவாக கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

// மிகப்பெரிய நபியாகிய தாவீதை பற்றி அப்படி ஒரு தவறான சம்பவத்தை எழுதுவதால் யூதர்களுக்கு என்ன பயன்? அவர்கள் அரசரை பற்றி அவர்களே தரக்குறைவாக எழுதி என்ன செய்யபோகிறார்கள்? //

யூதர்களுக்கு என்ன பயன் என்ற உங்களின் கேள்வியே நீங்கள் யூதர்களின் குணம் பற்றியும் அவர்களைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ளதையும் தெளிவான முறையில் அறியாதவர் என்பதற்கு சரியான சாண்று. பைபிளின் படி கடவுளின் குமாரரான இயேசுவை ஏன் கொலைசெய்தார்கள்? யோவான் ஸ்னானனின் கதி என்ன? அதேபோல் எத்தனையே தீங்குகளை யூதர்கள் தொடர்ந்து செய்கின்றார்கள் என்று இயேசுவே சொன்னாரே அதற்கு காரணம் என்ன? இப்படிப்பட்ட தவறுகளை அவர்கள் செய்வதால் அவர்களுக்கு என்னப் பயன்? இதற்கு பதில் அளித்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கும் பதில் கிடைக்கும்.


// ஆனால் அது உண்மை என்பதன் மூலம் கீழ் கண்ட பாடங்களை படிக்க முடியும்.

1. மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் சமயம் கிடைக்கும் போது பாவம் செய்ய தயங்க மாட்டான்
2. பாவம் செய்த மனிதன் இறைவனிடம் மிக வருந்தி மன்னிப்பு கேட்டால் எந்த பாவம் என்றாலும் மன்னிக்கப்படும்
3. பாவம் செய்தவனுக்கு அதற்கு தகுந்த தண்டனை இல்லாமல் மன்னிப்பு கிடைக்காது.
4. இறைவன் கடுமையான குற்றம் என்று சொல்லிய குற்றம் கூட இறைவன் நினைத்தால் அதன் கடுமையை குறைக்க முடியும்
5. அவர் நினைத்தால் எந்த கட்டளை கற்பனை எல்லவற்றயும் அவரால் மாற்ற முடியும் //

இது தவறு சகோதரரே... காரணம் தனிப்பட்ட - தன்னைமட்டும் பாதிக்கும் தவறான செயல்களுக்குத்தான் நீங்கள் சொல்வது போன்ற மன்னிப்பு என்ற வாதம் பொருந்தும். சமூகத்திற்கு செய்யும் துரோகத்திற்கோ அல்லது மற்றவர்களுக்கு செய்யும் துரோகத்திற்கோ பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தலே யொழிய கடவுள் மண்ணிக்க மாட்டார். அப்படியானால் ஏன் கடவுள் கல்லால் அடித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது போன்ற குற்றவியல் சட்டங்களைச் சொல்லவேண்டும்? குற்றவாளி அனைவரும் குற்றம் செய்துவிட்டு நான் பாவமன்னிப்பு கேட்டுவிட்டேன் என்று சொல்லி விடுவார்களே. அப்படியானால் அவர்கள் சொல்வதை நம்பி தண்டிக்காமல் விட்டு விடுவீர்களா? அது போலத்தான் (பைபிளின் படி) தாவீது செய்தது உரியாவுக்கும் அவனது குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் செய்த துரோகம். அதற்காக அவருக்கும் அன்றைய காலத்தில் இருந்த சட்டத்தின் படி மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படிவில்லையே ஏன்?

// மேலும் இறைவன் மாமா வேலை பார்க்கிறாரா என்பதெல்லாம் சரியான வார்த்தை அல்ல //

நான் சொல்லவில்லை. பைபிளில்தான் அவ்வாறு எழுதிவைத்துள்ளனர். கடவுளின் பெயரால் கடவுளையே கேவலமாக எழுதிவைத்துள்ளனர். அதை புனித வார்த்தை என்று ஏற்றுக்கொள்வதால் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும். நாங்கள் அல்ல..

// எல்லா வேலையுமே அவர்தான் பார்க்கிறார். விபச்சாரம் செய்பவனுக்கு அதற்கு தகுந்த தண்டனை வழங்குகிறார் அதாவது தாவீது பிறன் மனைவியை
அபகரித்தார் அதற்கேற்ப தாவீதின் மறுமனயாட்டிகள் வேறொருவனுக்கு கொடுக்கப்படனர். (நாம் பிறன் மனைவியை இச்சித்தால் பிறன் நம் மனைவியை இச்சிப்பான்) //

இது பற்றிய விளக்கம் மேலே கொடுத்துள்ளோம்.

AF Shahul Hameed said...

DEar Friend Sundaraj,,, congratulation. It is time to wake up. PLEASE ANSWER THIS;; IF BIBLE IS HOLY, THEN WHY RC HAVING 73 BOOKS AND PENTHOCOSTS HAVING 66 BOOKS ? Crores of people witness about this ? Any body can to add or to delete any this from Bible in the name Jesus. This is condition of Bible. This is Open Secret. BE HONEST. IF MISTAKE IS THERE, ACCEPT IT. AND Read Quran and try to find out it ? Insha Allah, you can findout the Truth.

Issadeen Rilwan said...

பைபிள் கர்த்தரின் புனித வார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டு தங்கள் சொந்த இலாபங்களை கவனத்தில் கொண்டு அதனை எழுதிவைத்திருப்பதாகத்தான் சிந்திக்க முடிகின்றது.

Unknown said...

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது

Unknown said...

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது