பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 2)
.
இவரும் இவரது தந்தையும் பரிசேயரை சார்ந்தவர்கள் என்று இவரே கூறியதாக அப்போஸ்தலர் நடபடிகள் கூறுகின்றது. (அபபோஸ்தலர் 23:6, 26:5) இந்த பரிசேயர் என்பவர்கள் யார்? அவர்கள் இயேசுவின் காலத்திலும் அவருக்குப் பின்னும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்? என்பதை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறுகின்றது:
'பரிசேயர் எனப்படுபவர்கள் யூதமத ஒருசிறு குழுவை குறிக்கும். இது சமய மற்றும் அரசியல் நோக்கந்களை கொண்டிருந்தது. திருச்சடத்தை நன்கு படித்து தேர்ந்தவர்களாவார்கள். யூதரான யாரும் பரிசேயராக மாரலாம். இவர்கள் யூதமத கலாச்சாரங்களை காப்பதில் முன்னின்று செயற்பட்டு வந்தனர். ஆனாலும் இயேசு வாழ்ந்த சமூகத்தில் பரிசேயரில் பெரும்பாலானோர் நீதிமான்கள் போல வேடமிட்டு திரிந்தனர். தங்களை உத்தமரென்று பரைசாற்றுவதில் முன்னின்று செயற்பட்டனர்.' பார்க்க : விக்கிபிடியா
இந்த பரிசேயர்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று இயேசு தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் உபதேசித்தார். குறிப்பாக அவர்கள் எந்த செய்தியைக் கொண்டுவந்தாலும் அதிலிருந்து மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். பார்க்க : (மத்தேயு 16:5-12, மாற்கு 8:14-21)
எந்த பரிசேயரைக் குறித்தும் அவர்கள் சொல்லும் செய்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு எச்சரித்தாரே, அதே பரிசேயரைச் சேர்ந்த பவுல் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் கேட்டோமேயானால் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையுமே ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படும் செய்தியில் பொய் மலிந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அவர் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தையும், அவரின் கொள்கைகளையும் இயேசுவின் பெயராலேயே எப்படியெல்லாம் சீரழித்தார் என்பதற்கு இன்றைய பைபிளே சரியான சான்று.
பவுலின் ஆரம்பக் காலம் :
யூத மதத்தவரான பவுல் இயேசுவிற்கு பிறகு அவர் போதித்த இறைக்கோட்பாட்டிற்கும் அதை பின்பற்றியவர்களுக்கும் எதிரானவராக இருந்தார் என்று அப்போஸ்தல நடபடிகள் குறிப்பிடுகின்றது.
சவுல் வீடுகள் தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்தீரிகளையும் இழுத்துக் கொண்டு போய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான். (அப்போஸ்தலர் 8:3)
இந்தச் சவுல் என்னும் பவுல் இயேசுவைப் பின்பற்றியவர்களை துன்புறுத்தி வந்தான். அவர்கள் தமஸ்குவிற்கு தப்பிச் சென்ற பிறகும் அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக தலைமை குருவிடம் அதிகார கடிதம் வாங்கிக் கொண்டு சென்றதாக அப்போஸ்தலரின் நடபடிகள் கூறுகின்றது.
சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியாரிடத்திற்குப் போய் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்தீரிகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களை கட்டி எருசலேமுக்கும் கொண்டு வரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிரூபங்களைக் கேட்டு வாங்கினான். (அப்போஸ்தலர் 9:1-2)
இப்படி உன்மையான இயேசுவின் சீடர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பல துன்பங்களைக் கொடுத்து பலரை கொலை செய்யவும் துடித்த யூதரான பவுல், திடீரென ஒரு அதிசயமான (?) சம்பவத்தின் மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டாராம். சூழ்சிகளுக்குப் பெயர் பெற்ற யூதர்களும் - இயேசுவால் மக்களுக்கு எச்சரிக்கப்பட்ட யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்களும் எப்படி எல்லாம் சத்தியத்தை சீரழிப்பதற்காக பொய் சொல்லத் துணிவார்கள் என்பதற்கு பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையே சரியான சான்று.
இயேசுவை பவுல் ஏற்றுக்கொண்டது எப்படி?
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை கொலைசெய்துக்கொண்டிருந்த பவுல் தீடீரென இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு காரணம் என்ன? அவர் எப்படி ஏற்றுக்கொண்டார்? என்பதை பவுலின் நன்பரான லூக்கா அப்போஸ்தலரின் நடபடிகள் என்றப் புத்தகத்தில் ஒரு பொய்யானக் கதையை சொல்லி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார் :
அவன் பிரயாணமாய் போய், தமஸ்குவுக்குச் சமீபித்த போது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன் : ஆண்டவரே, நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே : முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர் : நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்த போது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய் புசியாமலும் குடியாமலும் இருந்தான். (அப்போஸ்தலர் 9:3-9)
அதாவது இயேசுவின் உன்மையான சீடர்களை துன்புருத்துவதற்காக தேடியவனாக தமஸ்காவுக்கு பயனம் செய்துக்கொண்டிருக்கும் வழியில் இந்த சம்பவம் (?) நடந்ததாக இந்த வசனங்களின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது.
இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு சொந்தக்காரரான பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி என்பது பற்றி சொல்லப்படும் இந்த சம்பவம் அவரும் அவரைச் சார்ந்தவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொய் என்பதற்கு அவர்களாளேயே எழுதப்பட்ட மற்ற மற்ற வசனங்களில் வரும் முரண்பாடுகளே சரியான சான்று.
இந்த அப்போஸ்தலர் 9:3-9 வசனங்களின் இடையே சில விஷயங்களை நன்றாக கவனிக்க வேண்டும்:
ஒன்று, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். என்பதன் மூலம் திடீரென வந்த ஒளி பவுலை மட்டும் சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் தரையிலே விழுந்தானாம்.
இரண்டு, நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். என்பதன் மூலம் பவுல் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டனத்துக்குச் சென்றதும் சொல்லப்படும் என்று இயேசு கூறினாராம்.
மூன்று, அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். என்பதன் மூலம் பவுலுடன் கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம் ஆனால் ஒருவரையும் காணவில்லையாம்.
நான்காவது, அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்பதன் மூலம் பவுல் மட்டும் கீழே விழுந்ததால் மற்றவர்கள் அவரை கைலாகு கொடுத்து கூட்டிக்கொண்டு போனார்கள் என்கிறார்.
இவற்றுக்கெள்ளலாம் நேர் முரணாக அதே அப்போஸ்தலருடைய நடபடிகளின் மற்ற மற்ற இடங்களில் இதே சம்பவத்தை பற்றி எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள்:
அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான போது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது : சவுலே. நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் : ஆண்டவரே நீர் யார் என்றேன். அவர் : நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர் நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். (அப்போஸ்தலர் 22:6-10)
இந்த வசனத்தில் அதே சம்பவத்தை சொல்லிவிட்டு என்னுடனே கூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள் : என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. (அப்போஸ்தலர் 22:9) என்று சொல்லப்படுகின்றது. ஆனால் முன்பு நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் அவனுடைய கூடப் பிரயாணம் பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அவனோடு கூட பயனம் செய்தவர்கள் சத்தத்தைக் கேட்டார்களா? அல்லது கேட்கவில்லையா? வெளிச்சத்தைக் கண்டார்களா? அல்லது காணவில்லையா? இந்த ஒரே சம்பவத்தை ஒரே புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் (?) எழுதப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக 'பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதியுள்ளார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவை எல்லாம் உன்மையாக இருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும்?
அடுத்து, இந்த இரண்டு வசனங்களில் வரும் சம்பவங்களும் ஒன்றுக்கொண்று நேர் முரணாக இருக்க, அதே பவுல் இயேசுவை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது பற்றி அதே அப்போஸ்தலர் என்ற புத்தகத்தில் மூன்றாவதாக மற்றோர் இடத்திலும் பவுல் சொல்வது போல் சொல்லப்படுகின்றது. அந்த இடத்தில் இந்த இரண்டு வசனங்களுக்கும் நேர் முரனாக சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள்.
'இப்படிச் செய்து வருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும் போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்த போது : சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்ப்பபடுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்' (அப்போஸ்தலர் 26:12-14)
முதல் அறிவிப்பில் பவுலை மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்பொழுது அவனோட கூட பிரயானம் பன்னியவர்கள் சத்தத்தைக் கேட்டார்களாம். ஆனால் ஒளியையோ அல்லது வேறு யாரையுமோ பார்க்கவில்லையாம்.
இரண்டாவது அறிவிப்பிலும் பவுலை மட்டுமே அந்த ஒளி சுற்றி பிரகாசித்தாம். அதனால் அவன் மட்டும் கீழே விழுந்தானாம். அவனைப் பார்த்து அந்த ஒளி பேசியதாம். அப்போது அவனோட கூட பிரயானம் பன்னினவர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயம் அடைந்தார்களாம். ஆனால் சத்தத்தையோ கேட்கவில்லையாம்.
மூன்றாவது அறிவிப்பில் பவுலையும் பவுலோடு கூட பிரயானம் பண்ணினவர்களையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததாம். அவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் கீழே விழுந்துவிட்டார்களாம். இவற்றில் எது சரி? முதல் இரண்டு அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? அல்லது மூன்றாவது அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் எல்லோரையும் சேர்த்து அந்த ஒளி சுற்றி பிரகாசித்ததா? முதல் அறிவிப்பில் சொல்லப்பட்டது போல் பவுல் மட்டும் கீழே விழுந்தாரா? அல்லது அவனோடு கூட பிரயானம் பண்ணிவர்கள் அனைவரும் சேர்ந்து கீழே விழுந்தார்களா?
இது மட்டுமல்ல முதல் அறிவிப்பில் பவுல் மட்டுமே கீழே விழுந்ததால், அவனை மற்றவர்கள் கைலாகு கொடுத்து தூக்கி விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மூன்றாவது அறிவிப்பில் எல்லோருமே கீழே விழுந்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. அப்படி என்றால் முதல் அறிவிப்பின் படி கைலாகு கொடுத்து தூக்கிவிட்டார்கள் என்பது எப்படி சரியாகும்?
முதல் இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொண்று முரணாயிருக்க அந்த இரண்டிற்கும் நேர்முரணாக இந்த மூன்றாவது அறிவிப்பு எந்த அளவுக்கு முரணாக இருக்கின்றது என்று கவனித்தீர்களா சகோதரர்களே?
இது மட்டுமல்லாமல் இதே கதையில் வேறு சில முரண்பாடுகளையும் பாருங்கள். அப்போஸ்தலர் 9: 5-10 மற்றும் 22:10-15ம் வசனத்தின் படி பவுல் என்ன செய்யவேண்டும் என்பதை தமஸ்காவுக்கு போனதும் சொல்லப்படும் என்று இயேசு சொன்னதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அப்போஸ்தலர் 26:16-18 ம் வசனங்களில் அதே இடத்திலேயே அவரை புறஜாதியருக்கு பிரச்சாரம் செய்ய நியமித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதில் எது சரி? பவுல் செய்யவேண்டியதை சம்பவ இடத்திலேயே சொல்லப்பட்டதா? அல்லது பட்டனத்திற்கு சென்றதும் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டதா?
இப்படி ஒரே சம்பவம் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட சம்பவம் கூடுதலாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் (?) உந்தப்பட்டு எழுதப்பட்ட சம்பவம் உன்மையிலேயே நடந்ததாக இருந்தால் இப்படி முன்னுக்குப் பின் முரணாக வருமா? அதுவும் இந்த பவுல் ஒரு சாதாரண ஆளாக இருந்தால் விட்டுவிடாலம். மாறாக, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்கு ஆசிரியர். இன்றைய நவீன கிறிஸ்துவத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர். இவர் போதிக்கும் கொள்கையை மறுப்பவன் இரட்சிப்பை பெறமுடியாது, அவன் பரலோகத்தை அடைய மாட்டான் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. இயேசுவின் போதனைகளுக்கும் எதிரான பல புதிய கருத்துக்களைப் புகுத்தும் அதிகாரம் உடையவராக தன்னைக் காட்டிக்கொள்கின்றார். அதை இயேசுவே தனக்கு போதித்ததாகவும் சொல்கின்றார். ஆரம்பக்காலத்தில் உன்மையான இயேசுவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யத் துடித்தவர் இந்த பவுல். அப்படிப்பட்டவர் திடீரென இயேசுவை ஏற்றுக்கொண்ட சம்பவத்தில் எப்படி இந்த அளவுக்கு முரண் வரலாம்? இந்த சம்பவம் உன்மையானதாக இருந்தால் எப்படி இந்த அளவுக்கு முரண்வரும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டுமா?
உன்மையில் சொல்லவேண்டும் என்றால் பவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் பொய் மலிந்துக் கிடப்பதால் தான் இதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துக்கொண்டிருக்கின்றது. இந்த பவுலும் இவரைச் சார்ந்தவர்களும் தங்கள் மனம்போன போக்கில் எழுதிய புத்தகங்களை தான் இன்றைய கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதிக்கொண்டிருக்கின்றனர்.
.
.கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
11 comments:
hi Muslims you can find the answer for this in following link
http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/jesus_paul3.html
அண்பு நன்பர் அலக்ஸ் அவர்களுக்கு,
தாங்கள் கொடுத்துள்ள தொடுப்பை ஏற்கனவே நான் பார்த்துவிட்டேன். பதில் என்றப்பெயரில் உங்களைப்போன்ற கிறிஸ்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக (அல்லது ஏமாற்றுவதற்காக) எதையாவது எழுதுவது (அல்லது மொழிப்பெயர்ப்பது) என்பது சம்பந்தப்பட்ட உமர் என்ற கிறிஸ்தவருக்கு வாடிக்கையாகிவிட்ட ஒன்று. இருந்தாலும் பல அலுவல்களுக்கு மத்தியிலும் நான் இந்த எழுத்துப்பணியையும் ஒரு தலையாய பணியாகக் கருதி பதில் அளித்துக்கொண்டும், இன்னும் பல புதிய கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டும் வருகின்றேன். நாம் வெளியிடும் கட்டுரைகளையும் அவர்கள் வெளியிடும் கட்டுரைகளையும் சற்று நன்றாக படித்துப்பாருங்கள் - சத்தியத்தை அறியவேண்டும் என்ற நோக்கத்தோடு படித்துப்பாருங்கள். யாருடைய எழுத்தில் உன்மை - சத்தியம் இருக்கின்றது என்பது தெளிவாக விளங்கும்.
நாம் பவுலும் கிறிஸ்தவமும் என்றத் தலைப்பில் இதுவரை 7 பாகங்கள் வெளியிட்டுள்ளோம். இன்னும் தொடர்ந்து அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள் வெளியிடப்படும். ஆனால் இது வரை அவர் தரப்பிலிருந்து ஒரே ஒரு பாகத்திற்கு மட்டுமே பதில் என்றப் பெயரில் வேறு ஒரு ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து பதில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையும் எப்படி அபத்தம் நிறைந்த முரண்பாடான கட்டுரை என்பதை கர்த்தருக்கு சித்தமானால் கூடிய சீக்கிரம் வெளியிடுகின்றேன். அதோடு மோசேயின் வரலாற்றில் குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றது என்று கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். அவர் எந்த அளவுக்கு அறியாமையில் இருக்கின்றார் என்பதையும் இன்ஷா அல்லாஹ் விரைவில் அதற்கான பதில் கட்டுரையில் இணம் காட்டப்படும்.
Please post following comment of umar anna because he wrote like this
எனவே, சகோதரரே, இந்த என் பதிலை நான் கொடுத்ததாகச் சொல்லி, பதியுங்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களின் வேதம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், இவைகளை பதிக்கட்டும், பதிக்க தைரியமிருந்தால்!
so you have to post this brother
Refer :http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=28456#28456
இந்த என்பதிலில் ஒன்றையும் குறைக்கவோ, கூட்டவோ வேண்டாம், அப்படியே பதியுங்கள்.
நீங்கள் ஒரு தொடுப்பை மட்டுமே அவர்களின் கட்டுரையில் பதித்துள்ளீர்கள்.
இதனால் தான் அவர்கள் அப்படி கேட்டுள்ளார்கள். நீங்கள் நான் கொடுத்த அனைத்து தொடுப்புக்களையும் கொடுத்து இருக்கவேண்டும்.
அனைத்து தொடுப்புக்களையும் ஏன் பதியுங்கள் என்று நான் கேட்கிறேன் என்பதற்கும், நான் மேலே கொடுத்த அனைத்து தொடுப்புக்களும் எப்படி அவர்களின் கட்டுரைகளுக்கு பதிலாக இருக்கும் என்பதை அறிய படியுங்கள்.
1) இஸ்லாமியர்களின் பொதுவான குற்றச்சாட்டிற்கு பதில்:
-------------------------------------------------------------------------
முதலாவதாக, அவர்கள் எழுதிய அனைத்து கட்டுரைகளையும் படிக்கும்போது அடிக்கடி அவர்கள் சொல்லும் வாதம் இவைகளாகும்:
a) "இன்றைய கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர், பவுல் ஆவார்" என்பதாகும்,
மற்றும்
b) இயேசுவின் போதனையை பவுல் மாற்றி சொன்னார் என்பதாகும்.
எனவே, இந்த இரண்டு பொதுவான இஸ்லாமிய குற்றச்சாட்டிற்கு நாம் கீழ் கண்ட கட்டுரைகளை பதித்தோம்:
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 1 ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/jesus_paul1.html )
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 2 ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/jesus_paul2.html )
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 3 ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/jesus_paul3.html )
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 4 ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/jesus_paul_more.html)
இதன் மூலம், இயேசுவின் போதனையும், பவுலின் போதனையும் ஒன்று தான் என்பது விளங்கும்.எனவே, அருமை சகோதரரே, இந்த என் பதிவை அப்படியே அங்கு பதியுங்கள், அவர்கள் பதிப்பார்களா பாருங்கள்.
2) குறிப்பிட்ட ஒரு சம்பவம் பற்றிய குற்றச்சாட்டிற்கு நம் பதில்:
----------------------------------------------------------------------------
அவர்களின் பொதுவான குற்றச்சாட்டிற்கு மேற்கண்ட பதில் அளித்தபிறகு, அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன ஒரு நிகழ்ச்சி பற்றி என் பதிலை பதித்தேன். அதாவது, தமஸ்கு வழியில் இயேசுவின் சந்திப்பு பற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதிலை முன்வைத்தேன்.
இந்த ஒரு கட்டுரைத் தான் இது:
ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும் - முஹம்மதுவும் "குர்ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும் ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/paul_testimony1.html )
3) அவர்களுக்கு என் கேள்விகள்: குர்ஆன் முரண்பாடுகள்
--------------------------------------------------------------
[என் பழக்கம், ஒரு சில பதில்களை கொடுத்துவிட்டு, ஒரு சில கேள்விகளை கேட்பது தான்]
முரண்பாடுகள் என்றுச் சொல்லி, பைபிளின் மீது குற்றம் சுமத்துவபர்களுக்கு, மேற்கண்ட 5 கட்டுரைகளை கொடுத்துவிட்டு, பிறகு அதே போல, குர்ஆனில் உள்ள முரண்பாடுகளைப் பற்றி மூன்று கட்டுரைகளை நான் பதித்தேன், அதாவது ஒரே நிகழ்ச்சியை விவரிக்கும் போது பல விதமாக விவரித்துள்ளார் இஸ்லாமியர்களின் இறைவன் அல்லாஹ். இது எப்படி சாத்தியம்? பைபிளில் ஒரு நிகழ்ச்சி பல வகைகளில் விவரித்து இருந்தால், அது முரண்பாடு என்றுச் சொன்னால், உங்கள் நிலை என்ன என்று கேட்டுயிருந்தேன். அவைகளை கீழே படிக்கவும்.
ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்ஆன் முரண்பாடுகள்:
பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் (MOSES AND THE BURNING BUSH) ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Quran_Version1.html )
பாகம் - 2 மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Quran_Version2.html )
பாகம் - 3 அரபி குர்ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்? (Mis-Quotations in the Arabic Text of the Qur’an?) ( http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Peters/misquotations.html )
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/egathindex.html
அன்பான சகோதரரே Jesus_My_Love , இந்த மேற்கண்ட அனைத்து கட்டுரைகளும், "பவுலும் கிறிஸ்தவமும்" என்ற இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு சம்மந்தப்பட்ட கட்டுரைகளாம். எனவே, அவர்களின் அனேக கட்டுரைகளுக்கு இவைகள் இப்போதைக்கு எங்களுடைய பதிலாக உள்ளது. இன்னமும் வரும்.
எனவே, சகோதரரே, இந்த என் பதிலை நான் கொடுத்ததாகச் சொல்லி, பதியுங்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களின் வேதம் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், இவைகளை பதிக்கட்டும், பதிக்க தைரியமிருந்தால்!
இந்த என்பதிலில் ஒன்றையும் குறைக்கவோ, கூட்டவோ வேண்டாம், அப்படியே பதியுங்கள்.
அன்புள்ள நன்பர் அலக்ஸ் அவர்களுக்கு,
நீங்கள் ஏதோ தொடர்ந்து எமது தளத்தில் பின்னூட்டமிட்டும் அதை நாம் வெளியிடாதது போன்றும், எதிர்பாராதவிதமாக சமீபத்தில் நீங்கள் போட்ட பின்னூட்டத்தை நாங்கள் அனுமதிவிட்டது போன்றும் அதன் மூலம் நீங்கள் ஏதோ பெரிய வெற்றி பெற்று விட்டது போன்றும் தமிழ்கிறிஸ்தவ தளத்தில் நீங்கள் போட்ட பின்னுட்டத்திற்கு உமர் என்ற கிறிஸ்தவர் அளித்த பதிலை அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளீர்கள். உங்களை வேலையாள் போல் அவர் ஏவுவதற்கு பதில் அவரே அவரது பின்னூட்டத்தை எமது தளத்தில் பதித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. ஏன் அவரால் செய்ய முடியாதா? அல்லது அவருக்கு ஐடி எதுவும் இல்லையா? அவ்வளவு ஏன்? அனானிமஸாக கூட போட்டிருக்கலாமே? ஏன் இந்த பயம்? அடுத்தவரை ஏவி விட்டு ஏன் கமென்ட் கொடுக்க வேண்டும்? இவர் தைரியத்தைப் பற்றி எழுதுகின்றார்.அது போகட்டும்.
நான் மேலே கொடுத்துள்ள எனது முதல் பின்னூட்டத்தில், நாங்கள் வெளியிடும் கட்டுரையையும் அவர் பதில் என்றபெயரில் போடும் கட்டுரைகளையும் சற்று நன்றாக படித்து பாருங்கள். நாங்கள் சொல்வது சரியாக இருக்கின்றதா? அல்லது அவரது பதில் சரியாக இருக்கின்றதா என்பது விளங்கும் என்று கூறியிருந்தேன். அதை செய்வதற்கு பதிலாக காபி பேஸ்ட் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள். சரி இனிமேலாவது நாங்கள் எத்தனையோ கட்டுரைகளை பதித்துக்கொண்டு வந்திருக்கின்றோம். அதை எமது ஏகத்துவம் தளத்தின் 'கிறிஸ்தவம்' என்ற பகுதிக்கு சென்று பார்வையிடுங்கள். அதில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்துள்ளது. அதை சற்று ஆழ்ந்து படியுங்கள். அவர் அதற்கு பதில் என்று போடப்பட்டுள்ளதையும் படியுங்கள். எங்கள் கட்டுரைக்கும் அவரது பதிலுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா என்று பாருங்கள். இல்லை அவர் சரியாக தான் எழுதியுள்ளார் நீங்கள் தான் அறியாமையில் இருக்கின்றீர்கள் என்று எங்களை நீங்கள் குற்றம் சுமத்தினால், அவருடன் பொது மக்கள் மத்தியில் நாங்கள் பகிரங்க பொது விவாதத்திற்கு தயார். அவர் அதற்கு தயாரா? (இதை முன்பே iip online மூலம் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது)
அவர் 'தைரியம்! தைரியம்!' என்று கமன்டில் கொடுத்துள்ளார். நான் கேட்கின்றேன் அதே தைரியத்துடன் கர்த்தருக்காக - சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக எங்களுடன் பகிரங்க பொது விவாதத்திற்கு வர வேண்டியது தானே? ஏன் அதற்கு வர அவருக்கு தைரியம் இல்லை?
சரி அது கூட வேன்டாம். எங்கள் சகோதரரர்கள் எத்தனையோ கேள்விபதில் நிகழ்ச்சி நடத்துகின்றார்கள். அதிலாவது ஒரு ஓரமாய் ஒளிந்துக்கொண்டு வெறும் அவரது குற்றச்சாட்டுகளை கேள்விகளாக வைக்கவேண்டியது தானே? அதற்காவது அந்த தைரியசாலி உமருக்கு திரானி இருக்கின்றதா? இல்லையே.
அது மட்டுமல்ல எங்களுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி லட்சக்கனக்கான சந்தேகங்கள் உள்ளது. அதற்கு மட்டுமாவது நேரடியாக பதில் அளிக்க உங்கள் உமருக்கோ அல்லது வேறு எந்த கிறிஸ்தவருக்கோ திரானி இருக்கின்றதா? நாங்கள் தயார்? அவரையோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களையோ கேட்டுச் சொல்லுகங்கள்.
உடனே இந்த உமர் ஒரு கமென்ட் போடுவார். இவர்கள் அடித்துவிடுவார்கள் கொலைசெய்துவிடுவார்கள் என்று அபான்ட பழி போடுவார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு நாங்கள் உத்திரவாதம் தருகின்றோம். அவர் முகம் தெரியக்கூடாது என்று விரும்பினால் முக மூடி அணிந்துக்கொண்டு எங்களுடன் விவாதம் செய்யட்டும் எங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும். அதற்கும் அனுமதிக்கின்றோம். தயாரா? என்று அவரைக் கேட்டுச்சொல்லுங்கள்.
உடனே உங்களைப் போன்ற அப்பாவிக் கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காக எழுத்து விவாதம் என்று கூறுவார். நேரடி விவாதம் என்றால் இதற்கு பதில் சொல்லிவிட்டு அடுத்ததுக்குச் செல்லுங்கள் என்று கேட்போம். எழுத்துவிவாதத்தில் அவர் யார்? இதற்கு பதில் எங்கே என்று எப்படி கேட்கமுடியும்?
அது மட்டுமல்ல, இவர்களது எழுத்துவிவாத லட்சனம் எங்களுக்குத் தெரியாதா? தமிழ் கிறிஸ்தவ தளத்தில் எத்தனையோ பேர் கேள்வி கேட்டார்களே? அந்த பதிவுகளை அனுமதித்தார்களா? எந்த மதத்ததையும் தாக்கி எழுதக்கூடாது என்று தளவிதிமுறைகளை வைத்துக்கொண்டு, அதை மீறி இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் உமரை மட்டும் அப்படிட்டமாக அனுமதித்தது ஏன்? அதுமட்டுமல்ல உங்கள் கிறிஸ்தவர்களே பல கேள்விகளைக் கேட்டனர். குறிப்பாக மதுரை தமிழ் கிறிஸ்டியன் என்றப்பெயரில் ஒருவர் திரித்துவத்தைப் பற்றி சரமாரி கேள்விகளை வைத்து திணரடித்தார். அவருக்கு பதில் அளிக்க திரானி இல்லாமல் அவரது பதிவையும் நீக்கினார்கள். அது போல் எத்தனையோ சொல்லலாம். எங்களது சகோதரார்கள் எத்தனையோ பேர் சில தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட செய்து பதிவு போட்டனர். எனது தளத்திலிருந்து கூட காப்பி பேஸ்ட் செய்து பதிவு போட்டனர். ஆனால் அந்த பதிவுகளை நீக்கினார்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தினர். அப்படி செய்தது ஏன்? கிறிஸ்தவத்திற்கு எதிராக இருந்தால் பதிவுகளை நீக்கும் கிறிஸ்தவ தளத்தினர் இஸ்லாத்திற்கு எதிரான உமரின் கட்டுரைகளை மட்டும் அனுமதிப்பதுடன் அவருக்கு SUPER USER என்றும் கொடுத்துள்ளது ஏன்? திரானி இருந்தால் அந்த காப்பி பேஸ்ட் பதிவுகளை நீக்காமல் பதில் அளிக்க வேண்டியதுதானே. மாறாக பதில் அளிக்க தைரியம் இல்லாமல் காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது என்றனர். ஆனால் உமர் மட்டும் ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் போடுவாராம். அது மட்டும் அனுமதிக்கப்படுமாம். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? காப்பி பேஸ்ட் என்பது என்ன? அவரால் எழுதப்படாமல் அதேசமயத்தில் அவருக்கு அந்தக் கட்டுரையின் கருத்தில் உடன்பாடு இருக்கும் என்பது தானே? ஆனால் காப்பி பேஸ்ட் செய்யாமல் சொந்தமாகத்தான் எழுத வேண்டும் என்று கிறிஸ்தவத்திற்கு எதிரான சில பதிவுகளை நீக்கினர். அப்படியானால் உமர் மொழிப்பெயர்த்து வெளியிடுவதை மட்டும் அனுமதித்தது ஏன்? அதுவும் ஒரு வகை காப்பி பேஸ்ட் தானே? இது தான் இவர்களின் எழுத்து விவாத லட்சனம்.
உடனே உமர் எனக்கும் தமிழ் கறிஸ்தவ தளத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எழுதினாலும் எழுதுவார். ஆனால் அவரிடம் விவாதத்திற்கு வந்தவர்களின் கட்டுரையை நீக்கும் பொழுது அமைதியாக இருந்தது ஏன்? ஒன்று அவர் சொல்லி நீக்கி இருக்க வேண்டும். இல்லை என்றால் அவரால் இதற்கு பதில் அளிக்க முடியாது என்பதால் அமைதியாக இருந்திருக்க வேண்டும். அது தானே உன்மை. இல்லை இது பொய் என்றால் ஏன் இவருடன் விவாதத்திற்கு வந்தவர்களின் கட்டுரைகளை நீக்க அனுமதித்தார்? ஏன் இந்த ஓரவஞ்சனையை ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தார்?
அது மட்டுமா? நீங்கள் பின்னூட்டமிடும் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் மேல் சைடில் கிறிஸ்துவ-இஸ்லாம் சகோதரர்களுக்கு இடையே நடைபெற்ற சுடான-சுவையான விவாதங்கள் என்றத் தலைப்பில் ஒரு தொடுப்பு கொடுத்திருப்பார்கள். அதில் எத்தனையோ சகோதரார்களுடைய கிறிஸ்தவத்திற்கு எதிரான கட்டுரைகள் நீக்கப்பட்டிருக்கும். ஆனால் உமர் என்பவருடைய கட்டுரைகள் மட்டும் அப்படியே இருக்கும். இது எப்படி இஸ்லாம் கிறிஸ்தவ சூடான விவாதமாகும்? வேடிக்கையாக இல்லையா? இது தான் உங்கள் தள நன்பர்களின் லட்சனம் என்பதை சகோதரர் அலெக்ஸ் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் நான் இனிமேல் கிறிஸ்தவத்தைப் பற்றி தொடர்ந்து கட்டுரை வெளியிட இருக்கின்றேன். தைரியம் இருந்தால் திரானி இருந்தால் அதற்கு சரியான ஆதாரப்பூர்வமாக பதில் அளிக்கட்டும். அல்லது எங்களது அரைகூவலை ஏற்றுக்கொண்டு எங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும். அல்லது நீங்களாவது வரச் சொல்லுங்கள்.
நன்றி
நண்பர் அலெக்ஸ் அவர்களே உங்களுடைய தளத்தில் ஒரு விஷயத்தை நன்றாக கவனியுங்கள், உமர் என்ற ஒருவருக்கு ஒட்டு மொத்தமாக எல்லோரும் ஜால்ரா தட்டி,தட்டி அந்த நபர் எதை எழுதினாலும் ஆஹா,ஓஹொ, சூப்பர் என்று தட்டிக்கொடுப்பதால் அவருக்கு தலை,கால் புரியாமல் ஏதாவது ஆங்கில தளத்திலிருந்து கட்டுரைகலை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொன்டு இருக்கிறார். முதலில் அவர் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறாதா என்பதை பாருங்கள்.பைபிள் தமிழில்தான் இருக்கிறது அவர் சொன்ன பதிலையும், பைபிளையும் ஆராயுங்கள். சொன்னதை அப்படியே சொல்லும் கிளிப்பிள்ளையாக இராமல் கர்த்தர் கொடுத்த மிகப்பெரும் செல்வமான பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.
எல்லாவற்றிற்கும் உமரிடம் ஓடாமல் சுயமாக சிந்தியுங்கள் நண்பர் அலெக்ஸ் அவர்களே உண்மை தெளிவாக விளங்கும்.
இதுவரை உலகில் எத்தனை நேரடி விவாதங்கள் முஸ்லிம் கிறிஸ்தவர் இடையே நடந்துள்ளது, எத்தனை விவாதத்தில் அடிதடி ஏற்பட்டுள்ளது? நேரடி விவாதத்திற்கு பயப்படும் உமரிடமே கேட்கவும்.ஊழியம் செய்ய வந்திருக்கும் உமர் அவர்கள் இப்படி பயப்படலாமா? சத்தியத்தை சொல்ல ஏன் பயம்? உமரிடமே கேளுங்கள். இயேசு ஒரு உவமைக்காக தன் சமுதாய மக்களை ஆடுகள் என்று வர்ணித்தார் இல்லையா, ஆனால் இன்று உமரின் பின்னால் போகும் உங்களின் நிலை என்ன? கோபப்படாமல் சிந்தியுங்கள்
நன்றி
அமீர்.
Where are you brother Alex? post your comments. are you waiting for Umar?
Amir
Dear Brother Amir
I am not waiting for anybody
In addition, I am not going back of umar we are the followers of living god Jesus
I am satisfied with the umrs explanations and understood the truth But You? Think Please
Alex don't speak lies. i have seen the discussion page between you and your master umar.please don't try to hide முழு பூசணிக்காய்.
Amir.
ஹாய் அலெக்ஸ்,tamilchristians ல் நீங்களும் உறுப்பினர்தானே, அங்கு இஸ்லாத்திற்கெதிராக நீங்கள் வெளியிடும் அவதூறுகளுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்த முஸ்லிம் சகோதரர்களை நீக்கியது ஏன் என்று கேட்பீர்களா? இது போல் நயவஞ்சகமாக நீக்கிவிட்டு பின்னால் ஓடி விட்டார்கள், பயந்து விட்டார்கள் என்று வாய்ச்சவடால் விட்டால் என்னஅர்த்தம். எனவே காரணத்தை கேட்டு பதிக்க் வேண்டிகிறேன்.
அமீர்.
dear brothers,i humbly asking any christian brothers to prove that thay really believing in christianity, according to bible (mark:16 verses 17,18)17["and these signs shall follow them that believe;In my name shall they cast out devils;they shall speak with new tongues;18 They shall take up serpents;and if they drink any deadly thing,it shall not hurt them;they shall lay hands on the sick,and they shall recover.] prove and then talk about another religion, if u cannot pls be calm and happy with what u have or ur most welcome to islam and read the last testament quran.
dear christian brothers why don't u prove that u r a real beliving christian according to bible and then critisize others.now read bible.mark 16:vers 17,18[ 'and these signs shall follow them that believe;In my name shall they cast out devils; they shall speak with new with new tongues;
18:They shall take up serpents; and if they drink any deadly thing,it shall not hurt them;they shall lay hands on the sick,and they shall recover.],, if any real christian in this world pls come forward to prove otherwise any time ur welcome to the true religion Islam,read the last testament Quran.thanks
Post a Comment