திருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்!
பைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் 'குர்ஆனில் சரித்திரத் தவறு - மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா?' என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.
குர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:
மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)
இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?
இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:
3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறியதையும்-
3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: 'என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) 'அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
19:27 பின்னர் (மர்யம் - மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: 'மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!'
19:28 'ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).
இந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான (?) கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:
விளக்கம்:
யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.
என்ன கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா? இந்த அபாரமான கண்டுபிடிப்பை (?) படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு 'இறுதித்தூது' என்ற எமது சகோதர வலைத்தளத்தில் மேற்கண்ட இந்தக் குற்ச்சாட்டை பின்னூட்டமிட்டு கூடவே கீழ்கண்ட அவரது 'வீர ஆவேச' கருத்தையும் பதித்திருந்தார்:
நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்
உனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.
நீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.
எவ்வளவு வெறித்தனம்? எத்தனை நாள் கோபமோ! இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும்? அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.
இந்த தவறை (?) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)
இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ? என்று எழுதுகின்றார்.
இவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.
ஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா? அல்லது பலருக்கும் இருக்குமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை (?) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று 'மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது' என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஏன் யோசிக்கவில்லை? குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் - நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா? மாட்டார்களா? வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றதா? இல்லையா? குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை?
உதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், 'மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும்? இங்கே மத்தேயு தவறாக - கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா? அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளின் - நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா?
குர்ஆனில் மரியாளைப் பார்த்து 'ஹாரூனின் சகோதரியே' என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா? இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
அடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து 'ஹாரூனின் சகோதரியே' என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே - (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், 'ஹாரூனுடைய சகோதரி' என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு 'மூசாவின் சகோதரியே!' என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே? எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி 'ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது?' என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் 'பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்' என்று விளக்கமளித்தார்கள்.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)
இந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் - நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே!
ஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்) ஆனால் இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார்? அவரது தாயார் யார்? அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா? இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் - அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்? சற்று சிந்திக்க வேண்டாமா?
மரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக 'ஹாருனின் சகோதரரியே' என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே! அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா? அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை 'பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி' என்று வாதிடுவார்களா?
அது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா? அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா? அதுவும் 'முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்' என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா? பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா? இருக்கின்றது? நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும்? குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும்? அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.
அடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.
குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?
அந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:
என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.
முதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்? சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?
இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான 'புரோட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.
இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்? சிந்திக்க வேண்டாமா?
திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான கூடுதல் தகவல்களைக் காண இங்கே அழுத்தவும்.
எனவே கிறிஸ்தவர்களே! இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் - சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
கிறிஸ்தவர்களின் அடுத்து குற்றச்சாட்டில் சந்திப்போம்...
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
26 comments:
இந்த கோலவின் ஐ பற்றி உங்களுக்கு தெரியாதா? tamilchristians தளத்தில் நோவாவின் வரலாற்றில் பைபிளின் முரண்பாடுகள் என்ற விவாதத்தில் நோவா அவர்களின் காலத்தில் புலி,சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் எல்லாம் தாவர உண்ணியாக இருந்தது என்று வாதம் செய்து அதை நிரூபிக்க முடியாமல் அவருடைய சகாக்களே அவரை ஓரங்கட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு ஆள் தலை மறைவு ஆகிவிட்டார். இப்போது யார், என்ன சொல்லி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை மீண்டும் குரல் கொடுக்கிறார். நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர் எதாவது காமடி பண்ணிக்கொண்டே இருப்பது அவரது வழக்கம். இது போன்ற ஆட்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
mist.
அன்றைய இஸ்ரவேலர்கள் மூஸா(அலை) அவர்களிடம் கேள்விகளை கேட்டு கொண்டேயிருந்தார்கள் மூஸா(அலை) அவர்களும் சளைக்காமல் பதில் கொடுத்து கொண்டேயிருந்தார்கள்.அவ்வளவு தெளிவான விளக்கங்களை இஸ்ரவேலர்கள் செவிமடுத்தபிறகும் கேள்வி கேட்பதை அவர்கள் நிறுத்தவில்லை மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்டுகொண்டேயிருந்தார்கள்.இஸ்ரவேலர்கள் கேள்வி கேட்பதின் நோக்கம் மூஸா(அலை) அவர்களையும் ஈமான் கொண்ட மக்களையும் திசை திருப்புவதற்காகவே.அன்றைய இஸ்ரவேலர்கள் செய்த வேலையைத்தான் இன்றைய கிறித்தவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே ! மிஸ்ட் அவர்களுக்கு. கேள்விகள் மாற்று மதத்தவர்களால் வைக்கப் படுவதால். அதை கண்டுக் கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது. காரணம் திருக் குர்ஆனில் தவறுள்ளது போல் என்றாகிவிடும். சத்தியம் நம்மிடம் இருக்கின்ற போது நமக்கு ஏன் ? சளைப்பு வரவேண்டும்.
ஒரு வேலை அந்த பதிலால் கூட யாருக்கேனும் ஹிதாயத் என்ற நேர்வழி கிடைக்கக் கூடும் அல்லவா ?
ஒன்றுமே இல்லாத குப்பைக்கூளங்களை எல்லாம் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கும். அவர்கள் இத்தனைக் கேள்விகளை தினாவிட்டாக கேட்கும் பொழுது. நாம் ஏன் ? தயங்கனும். மார்க்கப் பனி என்று வந்துவிட்டால் எல்லாவற்றிக்கும் பதிலளிக்க கடமைப் பட்டுள்ளோம். மூஸா ( அலை ) அவர்கள் நமக்கு ஓர் எடுத்துக் காட்டு.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
நண்பருக்கு வணக்கம்!
தங்களின் இந்த கட்டுரையில் உண்மை இருப்பதை புரிய முடிகிறது.
திருக்குர்ரானின் பல பகுதிகளை படித்து பார்த்தவன் என்ற முறையில் அதிலுள்ள வசனங்கள்பற்றி எனககு எழுந்துள்ள முக்கிய சந்தேகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்தால் நடுநிலைமையோடு ஆராய இலகுவாக இருக்கும் என்று கருதுகிறேன்.
அதாவது
"இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் இயேசுவுக்கு ஒப்பானார்" என்பது திருக்குர்ரான் சொல்லும் கருத்து
நல்லது
இப்படி நடக்கும் எனது இயேசுவுக்கோ அவர் சீஷர்களுக்கோ கூட தெரியாதா?
இப்படி இறைவன் இவர்களுக்கு தெரிவிக்காமல் செய்தால்தானே முகமதுவின் பிறப்புக்கும் இயேசுவின் மரணத்துக்கும் இடையில் உள்ள சுமார் 500 ௦௦ஆண்டுகளில் கிறிஸ்த்தவம் என்றொரு மதம் உருவாகி அது ஒரு பெரிய மதமாக வளர காரணமாயிற்று
கிறிஸ்த்தவம் உருவாக இறைவனின் தவறுதான் காரணமா?
இயேசுவின் பின்னல் அலைந்த சீஷர்களே அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் என்று எழுதும் போது சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் வந்த முகமது அவர்கள் இயேசு மரிக்கவில்லை என்று சொல்வதை எப்படி ஏற்க்க முடியும்?
இது சம்பந்தமாக சற்று விளக்குவீர்களா ?
அன்புச் சகோதரர் சுந்தர் அவர்களுக்கு, தங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
மிக முக்கியமான - அவசியமான - விடையளிக்கப்படவேண்டிய கேள்வியை கேட்டிருக்கின்றீர்கள்.
இறைவனின் உதவியால் கண்டிப்பாக விரைவில் உங்களின் கேள்விக்கு பதில் அளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
நீங்கள் கேட்டுள்ள சந்தேகம் என்பது உங்களுக்கு மட்டுமல்ல பல தமிழ் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக இருக்கக்கூடிய பொதுவான சந்தேகமே.
இது சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் எழுப்பியுள்ள பல கேள்விகளை ஒருங்கினைத்து 'இயேசுவின் சிலுவை மற்றும் மரணம் பற்றிய கோட்பாட்டிற்கு' தெளிவாக விளக்கமளிக்க வேண்டி இருப்பதால், அது குறித்து மிக விரிவான கட்டுரை தயாராகிக்கொண்டிருக்கின்றது. நான் சிலுவை சம்பந்தமான கட்டுரையை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கிவிட்டேன். ஆனாலும் எமது சொந்த அலுவலக வேலைகள் மற்றும் ஏகத்துத்தளத்திற்கான பிற கட்டுரைகள் எழுதுவதன் காரணமாக அந்தக் கட்டுரையை எழுதி முடிக்க சற்று காலதாமதமாகின்றது. இருந்தாலும் விரைவில் அந்தக் கட்டுரை எழுதி முடித்தபின் சரிபார்க்கப்பட்டு வெகு சீக்கிரத்தில் ஏகத்துவம் தளத்தில் பல பாகங்களாக வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
கிறிஸ்தவ மதத்தின் சிலுவைக் கொள்கை சம்பந்தமான பல சந்தேகங்களுக்கு அந்த கட்டுரையின் மூலம் மிக தெளிவான விளக்கமளிக்க முயற்சிக்கின்றேன். குறிப்பாக உங்களின் சந்தேகங்களுக்கும் அதில் விடை இருக்கும் என்று நம்புகின்றேன்.
நன்றி
அபூ இப்ராஹீம், சென்னை
abuibrahim08@gmail.com
தங்கள் பதிலுக்கு நன்றி! எனது நீண்டநாள் சந்தேகம் தீரும் என்ற நோக்கில் தங்களின் கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
தான் சொல்வதுதான் சரி என்றெண்ணி ஒருவர் மீது ஒருவர் அவதூறு பேசிக்கொண்டு இருப்பதைவிட, தீர ஆராய்ந்து உண்மையை கண்டறிவதே மேல்.
ஒருவர் சொல்லும் கருத்து உண்மையென்று சந்தேகமற மனதுக்கு தெரிந்திருந்தும் அதை பிடிவாதமாக மறுக்க நினைப்பவன் நாளை இறைவனிடல்
பதில்சொல்லியாக வேண்டும் என்பது எனது நம்பிக்கை.
தங்களின் பல கட்டுரைகளில் உண்மை இருக்கிறது. ஆனால் திருக்குரான் முற்றிலும் உண்மை என்று ஏற்க்க இந்த இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அதன் கருத்து் பெரும் மாறுபடாக உள்ளது எனவேதான் இந்த கேள்வியை முன்வைத்தேன்.
தங்களின் வேலை பளுவுக்கு இடையிலும் இறைவனின் செய்திகளை பரப்ப தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு தக்கபலனை இறைவன் நிச்சயம் தங்களுக்கு அருளுவாராக!
நன்றி
சகோதரர் சுந்தர் அவர்களின் அணுகுமுறை மிகவும் அழகாக உள்ளது,பாராட்டுக்கள்
மிஸ்ட்
சகோதரர் சுந்தர் அவர்களின் கருத்தும், நம்பிக்கையும், முஸ்லிம்களுக்கும் உண்டானது.
// ஒருவர் சொல்லும் கருத்து உண்மையென்று சந்தேகமற மனதுக்கு தெரிந்திருந்தும் அதை பிடிவாதமாக மறுக்க நினைப்பவன் நாளை இறைவனிடல்
பதில்சொல்லியாக வேண்டும் என்பது எனது நம்பிக்கை.//
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். ( திருக் குர்ஆன் 2:42)
"யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
திருக் குர்ஆன் முற்றிலும் உண்மையானது என்பதற்கு அதன் விஞ்ஞான சம்பந்தப் பட்ட கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் ஏராளம். குறிப்பாக: கர்ப்பத்தில் குழந்தை வளரும் நிலைபாடுகள், சூரியக் குடும்பமான பூமியில் இரும்பு அறவே இல்லை என்ற பட்சத்தில். பிரத்யேகமாக பூமிக்கென்று இரும்பை இறக்கினோம். என்ற இறைவனின் வாக்கு உண்மை என்பதை இன்றைய விஞானம் நிரூபித்துவிட்டது இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளது.
இதை பதினான்கு நூற்றாடுக்கு முன்னாள் எந்த நவீன வசதியும் இல்லாத காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி சொல்லியிருக்க சாத்தியமில்லை. அப்படி அவராக சொல்லியிருந்தால். அது இன்றைய காலத்தில் அடிபட்டு போயிருக்கும்.
மாறாக இறைவன் ஜிப்ரீல் மூலம் அவருக்கு வழங்கிய வசனங்களாக திருக் குர்ஆன் உள்ளது.
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகிறோம். எல்லா சோற்றையும் பதம் பார்க்கனும் என்றாலும் அதற்கும் திருக் குர்ஆன் தயாராகவே உள்ளது. ஆராயுங்கள் சகோதரரே ! வாழ்த்துக்கள்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
////திருக் குர்ஆன் முற்றிலும் உண்மையானது என்பதற்கு அதன் விஞ்ஞான சம்பந்தப் பட்ட கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் ஏராளம்////
தங்கள் பதிலுக்கு நன்றி!
திருக்குரான் பல அறிவியல் உண்மைகளை முன்கூட்டியே தெரிவித்திருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இந்த படைப்புகள் பற்றிய அறிவியல் உண்மைகள் இறைவனுக்கு மட்டும்தான் தெரியுமா அல்லது இறைவனின் மிக நெருங்கிய தூதனாக இருந்து பின்னர் சைத்தானாக மாறியுள்ள இப்லீஸ் (லூசிபர்) என்பருக்கும் தெரிந்திருக்கலாமல்லவா?
கடைசியில் இன்று மனிதனால் ஆராய்ச்சி செய்து அறியப்பட்டுவிட்ட இந்த சாதாரண அறிவியல் உண்மைகள் அடிப்படையில் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அப்படி ஒரு முடிவெடுத்து பின்பற்ற இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. நித்யத்தை நிர்ணயிக்கும் விஷயம். .
நாளை நியாயதீர்ப்பின்போது இறைவன் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் ஒரு நியாயமான பதிலை நாம் சொல்லவேண்டுமல்லவா?
எனவே முழு
திருப்திவரும் வரை எல்லா நிலையிலும் ஆராய்வது நலம் என்று கருதுகிறேன்.
சுந்தர் உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக....... உங்கள் தன்மையான பேச்சும், சத்தியத்தை தேடும் ஆர்வமும், உண்மையை ஏற்று கொள்ளும் மனதும், எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களை போலவே அனைவரும் சத்தியத்தை பகுத்தறிவோடு ஆழ்ந்து தேடி அது சரியாக இருப்பின் ஒப்பு கொண்டால் ஒரு சமாதானமான உலகை உருவாக்கலாம், இறைவன் நாடினால்...........
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் சுந்தர் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும். எந்த மத கோட்பாடு உடையவர்களும் தங்கள் கோட்பாடுகளை முழு அளவில் ஆராய்ந்து பார்த்து விட்டபிறகு தான் பின் பற்றுகிறார்கள். என்பது கிடையாது. அது உலகம் தோன்றிய முதல் மதம் முதல் இன்றைக்கு உள்ள மதம் வரைக்கும் சொல்லலாம்.
எதுவும் விதிவிலக்கல்ல என்பதை சகோதரர் முதலில் புரிந்துக் கொள்ளனும்.
// ஆனால் இந்த படைப்புகள் பற்றிய அறிவியல் உண்மைகள் இறைவனுக்கு மட்டும்தான் தெரியுமா அல்லது இறைவனின் மிக நெருங்கிய தூதனாக இருந்து பின்னர் சைத்தானாக மாறியுள்ள இப்லீஸ் (லூசிபர்) என்பருக்கும் தெரிந்திருக்கலாமல்லவா? //
இறைவன் யாராருக்கு என்னென்ன ஆற்றலை கொடுத்திருக்கின்றானோ ! அது மட்டும் தான் தெரியும். இறைவன் சொல்லிக் கொடுக்காத எதுவும் யாருக்கும் தெரியாது. அது இப்லீஸ் ஆகட்டும் இல்லை ஜிப்ரீல் ஆகட்டும் இல்லை இறைதூதர்கள் ஆகட்டும். விதிவிலக்கல்ல
அப்படி என்றால் மருத்துவரிடம் போய் எனக்கு இப்படி செய்கிறது. ஏதாவது மருந்து கொடுங்கள் என்று சொல்லி பணத்தை வீண் செய்திருக்க மாட்டோம். அதான் இப்லீஸ் இருக்கிறாரே இதுக்கு என்னப்பா ? மருந்து என்று கேட்டால் உடனே சொல்லிடப்போராறு. இன்றைக்கு ஆஸ்பத்திரியில் டோக்கன் போட்டு வரிசையில் நிற்க்கவேண்டிய அவசியம் வந்திருக்காது.
இதே கேள்வியை தங்கள் கிறிஸ்துவ கோட்பாடுகளுக்கும். பொருந்தும் அல்லவா ?
காரணம் இயேசு தனக்கு முன்னாள் உள்ள தீர்க்கதரிகள் வரலாறுகளைப் பற்றி சொல்லுகின்றார். சுமார் மூன்றாயிரர் ஆண்டுகள் முன்னாள் உள்ள ஆப்ரகாம் வரலாறு அவரின் குடும்பம் மற்றும் இவருக்கும் முன்னாள் உள்ள நோவா போன்றவர்களின் வரலாறுகள் பற்றியும் சொல்லப்படுகிறது. அவரின் போதனைகளில்
இது அவரவர்களின் காலத்தில் இயேசு இருந்து பார்த்து ஆதாரங்களை எடுத்தெழுதி சேகரித்தால் மட்டுமே ! சாத்தியமாகும். அப்படி இல்லாத பட்சத்திற்கு இயேசு காலத்தில் (லூசிபர்) இல்லை என்று சொல்லமுடியாது.
// கடைசியில் இன்று மனிதனால் ஆராய்ச்சி செய்து அறியப்பட்டுவிட்ட இந்த சாதாரண அறிவியல் உண்மைகள் அடிப்படையில் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. //
நீங்கள் எதை சாதாரனது என்று சொல்கின்றீர்கள் தன்னுடைய்ய வாழ்க்கை அனைத்தையுமே அர்ப்பணித்துவிட்டு ஆராய்ச்சிக்காக விண்ணுலகம் செல்கின்றார்கள். இது சாதாரண விஷயம் அல்ல சகோதரர். அரும்பாடுபட்டு செல்கின்றார்கள். ஒவ்வொன்றிலும் ( கண்டுபிடிப்பிலும் ) மனிதனுடைய்ய உழைப்பு இருக்கின்றது. இன்றைக்கு நெஞ்சை பிளந்து. இதயம் பை பாஸ் சர்ஜரி வரைக்கும் செய்கிறார்கள் என்பது சாதாரணமா ? அப்படி என்றால் அதை உங்களால் செய்ய முடியுமா ? அல்லது எனக்கு தான் விண்ணுலகம் போகமுடியுமா ?
// அப்படி ஒரு முடிவெடுத்து பின்பற்ற இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. நித்யத்தை நிர்ணயிக்கும் விஷயம். . //
முழுஅளவில் ஆராயாமல் நித்யம் என்ற முடிவுக்கு வருவது உங்களுக்கே முரணாகும்.
// நாளை நியாயதீர்ப்பின்போது இறைவன் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் ஒரு நியாயமான பதிலை நாம் சொல்லவேண்டுமல்லவா? //
நாளை என்ற வாழ்க்கையில் தற்போது நீங்கள் இல்லை அதனால் கேள்விகள் கேட்கப்படும் என்ற நம்பிக்கை நிறுத்தி வைக்கபடவேண்டியவையே !
// எனவே முழு திருப்திவரும் வரை எல்லா நிலையிலும் ஆராய்வது நலம் என்று கருதுகிறேன்.//
இஸ்லாம் அதை மறுக்கவில்லை. வரவேர்க்கின்றது. என் எழுத்தில் தவிரிருந்தால் மன்னியுங்கள்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
அன்பு நண்பர் அப்துல் அசீஸ் அவர்களே தங்கள் கருத்து மிகவும் சரியானதே! நான் பிறப்பால் ஒரு ஹிந்து ஆனால் ஹிந்துத்த்வா பற்றி எனக்கு போதிய ஞானம் இன்றுவரை இல்லை. இந்நிலையில் கிறிஸ்த்தவம் ஒரு நல்ல மார்க்கம் போல் தெரியவே அதை ஏற்றுக்கொண்டு பைபிளை படித்து ஓரளவு அதிலுள்ள உண்மைகளை புரிதுகோண்டேன். ஏகத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல பைபிள் முரண்பாடுகள் எனக்கு ஏற்க்கனெவே மனதில் தோன்றியவைகள்தான். ஆகினும் இவ்வளவு ஆழமாக சென்று ஆராயவில்லை. பிறகு என்னுடன் பணிபுரிந்த, இந்துவிலிருந்து இஸ்லாமுக்கு மாறிய ஒரு நண்பர் திருக்குரானின் மகத்துவத்தை எடுத்துரைக்க திருக்குரானை படிக்க ஆரம்பித்தேன். மிக அருமையான போதனைகள் அதில் இருந்தாலும் சில சந்தேகங்களும் கூடவே எழுந்ததால் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு தாமதிததிறுக்கிறேன். இனி முழுவதையும் ஆராய்ந்து பார்க்காமல் மீண்டும் ஒரு தாவுதலை நான் விரும்பவில்லை.
நமக்கு முன் இறைவனால் படைக்கப்பட்ட நம்மைவிட வல்லமையில் மேலான தேவதூதர்களுக்கு எவையெல்லாம் தெரியும், எவைஎல்லாம் தெரியாது என்பது குறித்து போதிய வசன ஆதாரம் இல்லாத பட்சத்தில் நாமாக ஒரு முடிவுக்கு வரஇயலாது என்றே கருதுகிறேன். பைபிளில் ஒரு வசனம் உண்டு "தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும்" செய்கிறார். இதில் அவரது தூதர்கள் காற்றாக இருக்கும் போது காற்று புகாத இடம் ஏது. எனவே அவர்கள் அனைத்தையும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்றே நான் கருதுகிறேன். திருக்குரானில் வேறு வசனங்கள் இருந்தால் தெரிவியுங்கள்.
/// இயேசு தனக்கு முன்னாள் உள்ள தீர்க்கதரிகள் வரலாறுகளைப் பற்றி சொல்லுகின்றார். இயேசு காலத்தில் (லூசிபர்) இல்லை என்று சொல்லமுடியாது.///
பைபிளில் முரண்பாடுகள் இருக்கிறது என்கிற கட்டுரையின் அடிப்பட்யில்தான் நான் திருக்குரானை நாடியுள்ளேன் என்பதை சற்று கருத்தில் கொள்க. மேலும் இயேசு வாழ்ந்த காலத்தில் பழைய ஏற்ப்பட்டு மற்றும் தோரா என்னும் வேதம் இருந்திருக்கிறது அதன் அடிப்படையிலேயே அவர் பேசியிருக்கிறார்.
////தன்னுடைய்ய வாழ்க்கை அனைத்தையுமே அர்ப்பணித்துவிட்டு ஆராய்ச்சிக்காக விண்ணுலகம் செல்கின்றார்கள். இது சாதாரண விஷயம் அல்ல சகோதரர். அப்படி என்றால் அதை உங்களால் செய்ய முடியுமா ? அல்லது எனக்கு தான் விண்ணுலகம் போகமுடியுமா?///
ஐயா! அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பது எல்லாராலும் செய்யமுடிந்த ஒரு செயல் அல்ல என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இறைவனால் ஏற்க்கெனவே படைக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் உண்மைகளைத்தான் இவர்கள் கண்டுபிடிக்கிரார்கலேயன்றி புதியதாக எதுவும் செய்யவில்லை என்பதை தாங்கள் ஏற்க்க வேண்டும். நியுடன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்கும் முன்கூட அப்பிள் பழம் கீழேதான் விழுந்தது இன்று வரை அது கீழேதான் விழுகிறது. அது கீழே விழுவதால் புவிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்றது அவர் கண்டுபிடித்தார். இங்கு ஈர்ப்பு விசையை ஏற்க்கெனவே படைத்து வைத்தவர் இறைவன் எனவே இறைவனின் பாதையில் முழுவதுமாக நடக்க நினைப்பவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஒரு பொருட்டே அல்ல. அதே அறிவியல்தான் இன்று குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று ஒரு கோட்பாடையும் போதித்து இறைவன் இல்லை என்றொரு தத்துவத்தை நிலைநாட்ட முயல்கிறது என்பதையும் கருத்தில்
கோள்ளவேண்டும். எனவே அறிவியலை நம்பி முடிவெடுப்பது ஆன்மீகத்துக்கு ஏற்றதல்ல!
////முழுஅளவில் ஆராயாமல் நித்யம் என்ற முடிவுக்கு வருவது உங்களுக்கே முரணாகும்.////
நான் சொன்னதன் கருத்து தங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். நாம் தேர்ந்தெடுக்கும் ஆன்மீக பாதை என்பது நமக்கு சொர்க்கம் நரகம் என்னும் நித்திய இடங்களை தீர்மானிக்கும் ஒரு முக்கிய பாதை, எனவே தீர ஆராயாமல் உடனடி முடிவு எடுப்பது ஏற்றதல்ல என்ற பொருளில் கூறியுள்ளேன்
///நாளை என்ற வாழ்க்கையில் தற்போது நீங்கள் இல்லை அதனால் கேள்விகள் கேட்கப்படும் என்ற நம்பிக்கை நிறுத்தி வைக்கபட வேண்டியவையே!///
இந்த கூற்று எனக்கு சரியாக புரியவில்லை. நாளை சொர்க்கம் கிடைக்கும் என்ற நோக்கில்தான் இன்று இறைவனின் பாதையை பின்பற்ற விளைகிறோம். இன்று வழி தவறினால் நாளை இறைவன் நிச்சயம் நம்மை கேள்வி கேட்டு தகாத இடத்துக்கு தள்ளிவிடுவார் என்றே நான் கருதுகிறேன். எனவே நாளைய நியாயதீர்ப்பை
கருத்தில்கொண்டே இன்று சரியான வழியை அனைத்து வகையிலும் ஆராய்ந்து பின்பற்ற விரும்புகிறேன்.
////நமக்கு முன் இறைவனால் படைக்கப்பட்ட நம்மைவிட வல்லமையில் மேலான தேவதூதர்களுக்கு எவையெல்லாம் தெரியும், எவைஎல்லாம் தெரியாது என்பது குறித்து போதிய வசன ஆதாரம் இல்லாத பட்சத்தில் நாமாக ஒரு முடிவுக்கு வரஇயலாது என்றே கருதுகிறேன். //////
மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே உண்டு.வானவர்களுக்கு எந்தவொரு மறைவான ஞானமும் கிடையாது.இறைவன் கற்றுகொடுத்ததைத் தவிர அ(வான)வர்களால் வேறு எதையும் செய்யமுடியாது என்பதற்கு போதுமான தெளிவை இவ்வசனத்தில் காணலாம்.
அத்தியாயம் 2 அல்பகரா வசனம் 32
"நீ தூயவன் .நீ எங்களுக்குக் கற்று தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை.நீயே அறிந்தவன்;ஞானமிக்கவன்"என்று அ(வான)வர்கள் கூறினர்.
அன்பு நண்பர் சுந்தர் அவர்களே! உண்மை அறியும் ஆவலுடன் தாங்கள் எழுப்பிய கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. நிற்க. கிறிஸ்தவம் என்றொரு மதம் உருவானதற்கு இறைவனைக் குற்றம் சாட்ட முடியாது. அது போல உலகில் தோன்றிய எந்த மனித சித்தாந்தங்களுக்கும் இறைவனைப் பொறுப்பாளியாக்குவது தவறாகும். ஒரு மாணவன் நன்றாகப் படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியரைக் குற்றம் சாட்ட முடியுமா? ஒரு ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களிலேயே சிலர் விஞ்ஞானிகளாகவும், தலை சிறந்த மருத்துவர்களாகவும் ஆக வாய்ப்பு உண்டு. அது போல ஒன்றுக்கும் உதவாத கேடிகளாகவும் சிலர் மாறிவிடுவர். இதற்காக ஆசிரியரைக் குற்றம் சாட்டலாமா? அது போலத்தான் இறைவழியை விட்டு வேறு வழியைத் தேடிக்கொண்டது மனிதர்களே. இருப்பினும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் நேர்வழியைக் காட்ட தூதர்களை அனுப்பினான். சிலை வணக்கத்தைக் கண்டிக்கும் பைபிளின் வரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சிலை வணக்கம் எப்படி உருவானது? மனிதர்கள் தாமாக உருவாக்கிக் கொண்டது தானே? இதற்கு இறைவனின் அங்கீகாரம் உள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை. அது போலத்தான் சிலை வணக்கத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த இயேசுவையே சிலையாக்கி வணங்கி வரும் கிறிஸ்தவர்களின் செயலுக்கும் இறைவனைப் பொறுப்பாளியாக்க முடியாது.
அடுத்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறிஸ்தவர்கள் 500 ஆண்டுகளாக நம்பி வந்ததாகவும் இந்த நம்பிக்கையை திடீரென முறியடிக்கும் விதத்தில் குர்ஆன் சொல்வதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்பது பொதுவாக கிறிஸ்தவர்கள் கேட்கும் கேள்வி. உங்களுக்கும் அது போன்று சந்தேகம் ஏற்பட்டது இயற்கையே.
இந்தக் கேள்வி நியாயம் எனத் தோன்றினாலும் இதில் ஓர் அடிப்படைத் தவறு உள்ளது. அதாவது இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று பெரும்பான்மைக் கிறிஸ்தவர்களால் நம்பப்பட்டாலும் அதற்கு உறுதியான ஆதாரத்தை பைபிள் தரவில்லை. சிலுவை சம்பவத்தை எடுத்துக் கூறும்போதே பைபிளில் அநேக கருத்துக் குழப்பங்களும் முரண்பாடுகளும் காணக்கிடைக்கிறது. இது குறித்த நமது ஆக்கத்தை இங்கே காணலாம். அதோடு மட்டுமன்றி இயேசுவின் ஆரம்பகால சீடர்களின் கூற்றுக்களும் அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதற்று எதிரான சான்றுகளாகவே உள்ளன. பர்னபாசின் சுவிசேஷம் இதற்கு முக்கிய சான்றாகும். சுருங்கக் கூறின் இயேசுவின் சிலுவைக் கொள்கை குறித்து கிறிஸ்தவத்தில் உறுதியான ஆதாரங்கள் இல்லை மாறாக குழப்பமான கருத்துக்களே நிலவுகின்றன என்பதே உண்மையாகும். இதைத் தான் திருக்குர்ஆன் ''நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர்.” (4:157) என்று குறிப்பிடுகிறது. ஆக உண்மையைச் சொன்னால் காலம் காலமாக மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை திருக்குர்ஆன் திடீரென்று முறியடிக்கிறது என்பதை விட காலம் கலமாக சந்தேகத்தில் உழன்று கொண்டிருந்த மக்களின் குழப்பத்தை நீக்கி திருக்குர்ஆன் தெளிவு படுத்தியது என்ற கூற்றே சரியானதாகும். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களுக்காக சத்தியத்தின் வாசல்கள் திறந்தே இருக்கின்றன. இருகரம் நீட்டி உங்களை ஆரத்தழுவ காத்திருக்கின்றோம். வாருங்கள்.
என்றும் அன்புடன்
அபூ அப்திர்ரஹ்மான்
சகோதரர் சுந்தர் அஸ்ஸலாமு அலைக்கும். இன்னும் அணைத்து முஸ்லிம்களுக்கும்.
உங்களுடைய்ய பின்னணியை அறிந்து கொண்டேன்.
// ஏகத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல பைபிள் முரண்பாடுகள் எனக்கு ஏற்க்கனெவே மனதில் தோன்றியவைகள்தான். ஆகினும் இவ்வளவு ஆழமாக சென்று ஆராயவில்லை.//
பைபிளில் முரண்பாடு உள்ளது என்று தெரிந்துவிட்டால். மீதி இருக்கும் ஏனைய வசனங்களின் மேல் அவ்வளவு துல்லியமான நம்பிக்கை வருவது மனது இடம்கொடுக்காது. அதில் கூட ஏன் ? மாற்றங்கள் வந்திருக்காது. என்ற சந்தேகம் தான் வரனும். சத்தியம் எங்கே! உள்ளது என்று ஆராயும் உண்மையான ஆராய்ச்சியாளனாக இருந்தால்.
அதல்லாமல் ஏதோ மூளைக்கு பளிச்சென்று தெரிந்தது. இந்த மதம் சரியென்று. பிறகு பார்த்தல் இதிலும் குழப்பங்கள். இருக்கிறதே ! என்ன செய்வது. அவசரப்பட்டு வந்துவிட்டேன்.என்று வருந்துவது கூடாது.
// இனி முழுவதையும் ஆராய்ந்து பார்க்காமல் மீண்டும் ஒரு தாவுதலை நான் விரும்பவில்லை. //
இஸ்லாம் உங்களைப் பாராட்டுகிறது. மேலும் ஆராய்வதற்கு ஊக்குவிக்கிறது.
38:29 ( நபியே ) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும்,அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
47:24 மேலும் அவர்கள் இந்தக் குர் ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா ? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா ?
// என்பது குறித்து போதிய வசன ஆதாரம் இல்லாத பட்சத்தில் நாமாக ஒரு முடிவுக்கு வரஇயலாது என்றே கருதுகிறேன்.//
இதற்க்கு சகோதரர் இறையடியான் அவர்களின் வசன அறிகுறிகள் போதுமானவை உங்களுக்கு தேவைப்பட்டால் இன்னும் தருகிறேன்.
// பைபிளில் ஒரு வசனம் உண்டு "தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும்" செய்கிறார். இதில் அவரது தூதர்கள் காற்றாக இருக்கும் போது காற்று புகாத இடம் ஏது. எனவே அவர்கள் அனைத்தையும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்றே நான் கருதுகிறேன். //
இந்த வசனத்தின் மீது எப்படி அளப்பரிய நம்பிக்கை உங்களுக்கு வந்தது. அதான் பல திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட வேதம் ஆச்சே ! மேலும் அந்த வசன எண் பதியுங்கள்.
இறைதூதர்களை காற்றோடு குர்ஆன் ஒப்பிட்டு சொல்லவில்லை. இன்னும் அந்த வானவர்கள் நல்லவர்கள். சபிக்கப் பட்ட சைதானோடு (இப்லீஸ் ) சேர்த்து பேசமுடியாது. காற்றை அதன் நிலைப்பாட்டில் வைத்து தான் திருக் குர்ஆன் பேசுகிறது.
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வந்துக் கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்கு பயன் தருவதைக்கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவவிட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசசெய்வதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே கட்டுப் பட்டிருக்கும் மேகங்களிலும், சிந்தித்துணரும் மக்களுக்கு அல்லாஹ் உடைய வல்லமையும், கருணையும், எடுத்துக் காட்டும் சான்றுகள் உள்ளன.( குர்ஆன் ௨.௧௬௪ )
maa salaam.
abdul azeez
// போது காற்று புகாத இடம் ஏது.//
அது நாம் வாழும் பூமிக்கு மட்டும் தான் பொருந்தும் இதல்லாத கோள்களுக்கு பொருந்தாது. குறிப்பாக; சந்திரன், அதில் காற்று இல்லை அங்கு போனால் முதுகில் மாட்டிக்கொண்டும், மூக்கு சுவாசம் ஆக்சிஜன் எடுத்துக் கொண்டுதான் போகணும். இன்னும் சூரியன், செவ்வாய் கோள்கள் உள்ளது. அங்கெல்லாம் காற்று இல்லை
ஆனால் அதைப்பற்றியும் திருக் குர்ஆன் சொல்லுகிறது. தன்னுடைய்ய வட்டவரைக்குள் நீந்தி செல்கிறது. அத்தனைக் கோள்களும் என்று. காற்று புகாத இடத்திற்கு எப்படி நபிகள் நாயகம் போனார்கள். என்று கேட்பது மடமை. இறைவனால் ஜிப்ரீல் என்னும் வானவர் மூலம் அருளப் பட்டதால் தான் சொல்லமுடிந்தது.
// மேலும் இயேசு வாழ்ந்த காலத்தில் பழைய ஏற்ப்பட்டு மற்றும் தோரா என்னும் வேதம் இருந்திருக்கிறது அதன் அடிப்படையிலேயே அவர் பேசியிருக்கிறார். //
அப்படிஎன்றால் மோசேவுக்கு தோரா என்னும் வேதம் இறைவனால் அருளப்படும் போதும் இந்த( லூசிபர் ) இப்லீஸ் இருந்தான் அல்லவா ?
மேலும் இந்த தோராவின் அடிப்படையில் தான் இயேசு பேசணும் என்றால் அவர் வர வேண்டிய அவசியமே ! இல்லை மோசேவுக்கும் இயேசுவுக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேலான வருடம் சாதாரண மனிதர்களால் தான் ( பின்தோன்றல்கள் ) தோரா என்னும் வேதம் கொண்டு செல்லப்பட்டது. புதிதாக இயேசு வந்து என்ன செய்ய போகிறார் அல்லது செய்திருப்பார். இவ்வளவு தலைமுறைகள் அதை கொண்டு வந்திருக்கும் பொழுது இயேசுவுக்கு மட்டும் ஏன் ? அவ்வளவு முக்கியத்துவம் எதற்காக அவரின் பிறப்பையும் அவரின் இறப்பையும் ஆராயவேண்டியுள்ளது. அந்த வேதத்தை இயேசு வரைக்கும் வைத்துவிட்டு சென்றார்களே ! அவர்களின் பெயர் இறப்பு பிறப்பு சமர்பிக்கப் படவில்லையே பெரிய அளவில் எடுத்துக்கொள்ளவில்லையே ஏன் ?
// இறைவனால் ஏற்க்கெனவே படைக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் உண்மைகளைத்தான் இவர்கள் கண்டுபிடிக்கிரார்கலேயன்றி புதியதாக எதுவும் செய்யவில்லை என்பதை தாங்கள் ஏற்க்க வேண்டும். நியுடன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்கும் முன்கூட அப்பிள் பழம் கீழேதான் விழுந்தது இன்று வரை அது கீழேதான் விழுகிறது. அது கீழே விழுவதால் புவிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்றது அவர் கண்டுபிடித்தார். இங்கு ஈர்ப்பு விசையை ஏற்க்கெனவே படைத்து வைத்தவர் இறைவன் எனவே இறைவனின் பாதையில் முழுவதுமாக நடக்க நினைப்பவர்களுக்கு அறிவியல//
ஏக இறைவன் வகுத்த நியதி அடிப்படையில் தான் உலக நிகழ்வுகள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள். மாற்றமாக எதுவும் இல்லை
ஆப்பிள் அடிப்படையிலேயே எல்லா எதிர்கால நிகழ்வுகளையும் ஏன் ? மற்ற வேதங்கள் துல்லியமாக சொல்லவில்லை. பூமிக்கு நான்கு தூண்கள் இருந்தது என்று சொல்கிறது பைபிள்.. பாயாக சுருட்டி கடலில் விழுந்ததாக ஹிந்து புராணகள் சொல்லமுடிந்தது.. அப்போது
எங்கே ! இவர்களின் இறைவனின் படைப்பு நியதி. அந்த அடிப்படையில் அமையனும் தானே இறை வேதம் என்றால் எதற்காக பொய்பிக்கப்பட்டது.
சகோதரர் உங்களின் மீதி பின்னூட்டத்திற்கு இன்ஷா அல்லாஹ் நாளை பதிலளிக்கிறேன். நேரம் போதிய அளவு கிடைக்கவில்லை.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
1. உலகிலேயே கலப்பற்ற ஓரிறைக்கொள்கையை உரத்து போதிக்கின்ற ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இந்த ஒரு மார்க்கத்தில் மட்டும் தான் ஓரிறைக்கொள்கைக்கு எந்தவிதத்திலும் கலங்கம் ஏற்பட்டு விடாத வகையில் - ஒரே இறைவனை மட்டும் வணங்கப்படுகின்றது. இந்த வகையில் வேறு எந்த மார்க்திற்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. மற்ற மதங்களில் வேறு ஏதாவது ஒரு வகையில் ஓரிறைக்கொள்கைக்கு பங்கம் ஏற்படுத்தும் கொள்கையோ அல்லது செயல்பாடோ அமைந்திருக்கும். ஆனால் இஸ்லாத்தில் மட்டும் தான் அப்படிப்பட்ட பலவீனம் அறவே இல்லை என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. உலகிலேயே ஒரு மார்க்கம் 'ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்ப வரை அனைத்து வகையிலும் வழிகாட்டுகின்றது என்றால் அது இஸ்லாம் மட்டுமே! இந்த ஒரு மார்க்கம் மட்டும் தான் ஒருவன் தன் வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து வகையிலும் இறைவழிகாட்டுதலைத் தருகின்றது. இஸலாம் மட்டுமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு சரியான சான்று.
3. உலகில் இருக்கின்ற வேதங்களில் ஒரு இறைவேதம் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளோடு ஒத்துப்போகின்றதென்றால், அது திருக்குர்ஆன் மட்டுமே! வேறு எந்த வேதத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு இந்த வகையில் திருக்குர்ஆனுக்கு மட்டுமே பொருந்தும்.
4. இது அல்லாமல், 'நான் விஞ்ஞான உன்மைகளை ஒரு பொருட்டாக கருதமாட்டேன் இதைவீட வேறு நம்பிக்கைச் சார்ந்த அதிசயங்கள் இருக்கின்றதா? என்று ஒருவர் வாதிடுவாரேயானால் அவர்களுக்கும் குர்ஆனில் மட்டுமே பதில் உண்டு. அதாவது, விஞ்ஞானம் வளர்ந்த இந்த 21ம் நூற்றாண்டில் செய்யமுடியாத பல அதிசயங்களை 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட திருக்குர்ஆன் செய்து – நிரூபித்துக் காட்டுகின்றது. உதாரணமாகச் சொல்லுவதென்றால், கொடியவன் பார்வோனின் - (ஃபிர்அவ்னின்) உடல் பாதுகாக்கப்படும் அதிசயத்தை சொல்லலாம். அவனது உடலை 1400 ஆண்டுகளுக்கு முன்பாக அருளப்பட்ட திருக்குர்ஆனில், பாதுகாக்கப்படுவதாக வாக்களித்து அது இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றது. (இறைவன் மிகப்பெரியவன்) பார்க்க திருக்குர்ஆன் 10:92 இது குறித்து தெளிவான விளக்கம் பார்க்க இங்கே அழுத்தவும்
5. இது போல் வரலாற்று சிறப்பு மிக்க ஜம் ஜம் கிணற்றையும் மற்றொரு உதாரணமாக கூறலாம். ஜம்ஜம் கிணறு போன்ற ஒரு அதிசயம் உலகில் எங்கும் இருக்கமுடியாத அளவுக்கு இறைவன் அதில் அருள் வளத்தை வைத்திருக்கின்றான். இது பற்றி சுருக்கமாக அறிந்துக்கொள்ள இங்கே அழுத்தவும்
6. அது போல், உலகில் ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து சத்தியத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. கண்மூடித்தனமாக சத்தியத்தை பின்பற்ற வேண்டும் என்று இஸ்லாம் ஒருபோது கூறவில்லை. மாறாக, அப்படி சிந்திக்காதவர்களைப் பார்த்து இறைவன் அவர்களுக்கு சிந்திக்கும் திறனே இல்லையா? என்று கேள்வி எழுப்பக்கூடிய வசனங்கள் திருக்குர்ஆனிற்கு மட்டுமே சொந்தமானது. பார்க்க திருக்குர்ஆன் (47 : 24, 25 : 62, 4 : 82, 16 : 17) அதுமட்டுமல்ல உன்மையான இறைநம்பிக்கையாளர்கள் யார் தெரியுமா? அவர்கள் சிந்தித்தே செயல்படுவார்கள் - இறைவசனம் என்பற்காக குறுட்டுத்தனமாக நம்பிவிட மாட்டார்கள் என்றும் கூறுகின்றது திருக்குர்ஆன் : 25 : 73
7. உலகில் உள்ள மதங்களில் சாத்தானின் செயல்திட்டங்களுக்கும் அவனது போதனைகளுக்கு எதிராக அனைத்து விதங்களிலும் மனிதனைக் காக்கும் அரண் போன்ற போதனைகளை வழங்குவதும் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாம் அல்லாத அனைத்து மார்க்கங்களிலும் சாத்தானின் செயல்கள் ஒரு வகையில் குடிகொண்டிருப்பதைப் பார்க்கலாம். இது மட்டுமல்ல, திருக்குர்அனை ஓதத் தொடங்குவதற்கு முன்பு கூட சாத்தானிடமிருந்து பாதுகாவல் தேடிக்கொண்டு ஓதத்துவங்குங்கள் என்று வழிகாட்டுவதும் இஸ்லாம் மட்டுமே.
8. உலகிலேயே ஒரு மார்க்கம் ஒரே ஒரு மார்க்கம் மதங்களில் பெயரால் மக்களிடம் குடிகொண்டுள்ள மூடப்பழக்க வழக்கங்களையும் அனாச்சாரங்களையும் தவறான நம்பிக்கைகளையும் ஒழித்துக்கட்டும் - ஒழித்துக்கட்டிக்கொண்டும் இருக்கின்றது என்றால் அது இஸ்லாம் மட்டுமே. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வதென்றால், பெருமானாருக்குப் பிறந்த ஒரே ஒரு ஆண்வாரிசு இப்ராஹீம் என்ற குழந்தை சிறு வயதிலேயே இறந்து விடுகின்றது. அந்தக் குழந்தை இறந்த அன்று சூரியக்கிரகணம் ஏற்படுகின்றது. உடனே மக்கள் பெருமானாரின் மகன் இப்ராஹீம் இறந்தால் தான் சூரியக்கிரகணம் ஏற்படுகின்றது என்று பேசிக்கொண்டனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்து) சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள். (நூல்: புஹாரி) இதே வேறு ஒரு மதத்தலைவராக இருந்தால் மக்களை ஏமாற்ற இது தான் சரியான சந்தர்ப்பம் என்று இந்த சமயத்தை நன்றாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி இருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அங்கேயும் மக்களை விழிப்புடனே இருக்குமாறு உபதேசித்தார்கள்.
9. அது மட்டுமல்ல, இன்றை உலகில் சாமியார்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எப்படி எல்லாம் கடவுளின் பெயரால் சுரண்டி செத்துக்களைச் சேர்த்து வைத்துள்ளார்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால், இஸ்லாம் மட்டுமே அந்த வகையில் நடக்கும் மோசடிகளையும் அடியோடு ஒழிக்கின்றது. உதாரணமாக ஒன்றைச் சொல்லுவதென்றால், பெருமானாரின் வாரிசுகளுக்கு, தர்மத்திலிருந்து வரும் பொருட்கள் ஹராமானது - தடுக்கப்பட்டது என்று கூறினார்கள். அவர்களின் பெயரை சொல்லி 'நான் பெருமானாரின் வாரிசு' என்று ஒருவன் சொல்லிக்கொண்டு வந்தால் அவன் கடவுளின் பெயரால் யாரிடமும் கையேந்த முடியாது. ஒரு மதத்தலைவரின் பெயரைச் சொல்லி எவரும் ஏமாற்ற முடியாது என்கிற அளவுக்கு அந்த சுரண்டலையும் தடுத்தது இஸ்லாம் மட்டுமே!
10. அது போல், நாள் நட்சத்திரம் சாஸ்திரம் சம்பிரதாயம் ஜோசியம் கர்த்தரின் பெயரால் சுகமளிக்கின்றோம் என்ற ஏமாற்று வேலை என்று இப்படி மக்களிடம் புறையோடிப்போயுள்ள அனைத்து மூடநம்பிக்கைகளையும் மக்களிடமிருந்து முற்றிலுமாக அகற்றிய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
இது போன்ற எண்ணற்ற சிறப்பியல்புகள் இஸ்லாத்திற்கு மட்மே உரிய தனிச்சிறப்பு என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட மார்க்கத்தை சிந்தித்து ஏற்றுக்கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.
நன்றி
விளக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. "தூதர்களுக்கு இறைவன் தெரிவிக்காத உண்மைகள் தெரிவதில்லை" என்பதை வசன ஆதாரத்தோடு விளக்கியமைக்கு நன்றி!
முற்றிலும் அறிவை சார்ந்து நிற்கும் மார்க்கம் என்பதை தவிர
வேறு எந்த குறையும் எனக்கு தெரியவில்லை. அறிவு மனிதனை பலநேரங்களில் தவறான வழியில் அழைத்து சென்றுவிடுகிறதே. ஒருவர் அனுபவ பூர்வமாக அறிந்து அவரே இறைவனிடமிருந்து உண்மையை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லையே ஏன்?
இறைவன் மனிதனுடன் பேசமாட்டாரா? மூஸா போன்றவர்களிடம் நேரடியாக பேசிய இறைவன், நபியிடம் மட்டும் முற்றிலும் தூதர் மூலம் பேச காரணம் என்ன?
சற்று விளக்குவீர்களா?
அன்புச் சகோதரர் சுந்தர் அவர்களுக்கு, இஸ்லாத்தைப் பற்றிய தங்களுடைய சந்தேகங்களை வரவேற்கின்றோம். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் இரண்டு கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். முதலாவதாக,
// முற்றிலும் அறிவை சார்ந்து நிற்கும் மார்க்கம் என்பதை தவிர
வேறு எந்த குறையும் எனக்கு தெரியவில்லை. அறிவு மனிதனை பலநேரங்களில் தவறான வழியில் அழைத்து சென்றுவிடுகிறதே. ஒருவர் அனுபவ பூர்வமாக அறிந்து அவரே இறைவனிடமிருந்து உண்மையை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லையே ஏன்? //
இந்த கேள்வி அடிப்படையிலேயே தவறு என்பதை தாங்கள் முதலாவதாகத் தெரிந்துக்கொள்ளவேண்டும். நீங்கள் குறிப்பிடுவது போன்று இஸ்லாம் ஒரு போதும் 'முற்றிலும் அறிவை சார்ந்து நிற்கவில்லை'. அப்படி இஸ்லாம் முஸ்லீம்களுக்கு போதிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், எந்த அளவுக்கு அறிவைப் பயன்படுத்த வேண்டுமோ அங்கே பயன்படுத்தச் சொல்லும் இஸ்லாம் எங்கே அறிவைப் பயன்படுத்தக்கூடாதே அங்கே அணுவளவும் நெருங்கிவிடாதீர் என்று தடுக்கின்றது.
நீங்கள் சொல்லுவது போன்று இஸ்லாம் முற்றிலுமாக அறிவைச் சார்ந்த மார்க்கமாக இருக்கின்றது என்றால், எப்படி சொர்க்கம் நரகம் இருப்பதை நம்ப முடியும்? விதி பற்றியோ அல்லது வானவர்கள் பற்றியோ எப்படி நம்பமுடியும்? ஏன் இறைவனையே எப்படி நம்ப முடியும்? ஏனெனில் இவை எல்லாம் மறைவான நம்பிக்கைச் சார்ந்த விஷயங்கள். இங்கே நாங்கள் ஒரு போதும் அறிவைப் பயன்படுத்த வில்லை. இஸ்லாமும் அப்படிச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால், குறிப்பிட்ட இரண்டு விஷயங்களில் நமது அறிவைப் பயன்படுத்துவதை இஸ்லாம் முற்றாக தடுக்கின்றது. ஒன்று, இறைவனை யார் படைத்தது? என்ற கேள்வி வரும்போது அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கக்கூடாது என்கிறது. அதே போன்று 'விதி' சம்பந்தமாக அதிகமாக அறிவைப் பயன்படுத்தி சிந்தித்துக்கொண்டிருக்காதீர் என்று தடுக்கின்றது. இவ்விரண்டிற்கும் உலகில் எவராலும் விளக்கமளிக்க முடியாது. மனிதனின் சிற்றறிவை வைத்து இவ்விரண்டையும் ஒருவன் ஆய்வு செய்தால் ஒன்று பைத்தியம் பிடித்து அலைவான் இல்லையேல் கடவுளை மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான். எனவே இவ்விரண்டையும் பற்றி சர்ச்சை செய்துக்கொண்டிருக்காதீர் என்று இஸ்லாம் முற்றாக தடுக்கின்றது.
அது மட்டுமல்ல, இஸ்லாத்தினுடைய மிக முக்கியமான நம்பிக்கை சொர்க்கம் நரகம். இதை முஸ்லீம்களாகிய நாங்கள் நேரடியாக பார்த்து நம்பவில்லை. அப்படிக் காட்டினால் தான் நம்புவோம் என்று வாதிக்கவும் இல்லை. நாளைக் கண்டிப்பாக இது நடக்கும் என்று மட்டும் நம்புகின்றோம். இங்கே நாங்கள் எங்கேயும் அறிவை முன்னிறுத்தவில்லை. அதுபோல், ஜிப்ரீல் -(கேப்ரியல்) என்ற வானவர் இறைச்செய்தியைக் கொண்டுவரும் போது, நபிகள் நாயகத்திடம் எந்த நபித்தோழரும் நீங்கள் வானவர்களைக் கண்ணாரக் காட்டுங்கள். அப்பொழுது தான் நாங்கள் நம்புவோம் - அல்லது அறிவுப்பூர்வமாக விளக்குங்கள் அப்பொழுது தான் நம்புவோம் என்றும் வாதிக்கவில்லை. அப்படித்தான் நம்புவோம் என்றிருந்தால் இஸ்லாம் இன்றைக்கு எங்களிடம் வந்தே சேர்ந்திருக்காது. அப்படியானால் இதை எல்லாம் எப்படி நம்புகின்றோம்? என்று கேட்டால், இறைவன் எடுத்துக்காட்டுகின்ற அத்தாட்சிகளை வைத்து 'ஒரு இறைவன் கண்டிப்பாக இருக்கின்றான்' என்று நம்புகின்றோம் அவன் தான் இந்த உலகத்தைப் படைத்தான் என்று நம்புகின்றோம். இங்கே தான் எங்கள் பகுத்தறிவை உபயோகிக்கின்றோம்.
தொடர்ச்சி கீழே..
உதாரனமாகச் சொல்லுவதென்றால், இந்த பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது. சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது. சூரியன் என்பது ஒளிவீசக்கூடியது. சந்திரன் என்பது சூரியனுடைய ஒளியைப் பிரதிபலிக்கின்றது. இதை இன்றைய நவீன விஞ்ஞானம் மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது. இந்த உன்மையை யாரும் மறுக்க முடியாது. இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றிய ஏதேனும் செய்தி 1400 ஆண்டுகளுக்கு முன்பாக அருளப்பட்ட திருக்குர்ஆனில் இருக்கின்றதா? என்று தேடிப்பார்க்கின்றோம். இந்த தெளிவான விஞ்ஞான உன்மையைப் பற்றி பேசுகின்றதா? என்று பார்க்கின்றோம். பேசாமல் மௌனமாக இருந்தால் அது ஒன்றும் சந்தேகத்தை ஏற்படுத்தாது. அது போல், இவ்வளவு தெளிவாக நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்திற்கு நேர் எதிராக இருந்தால், கண்டிப்பாக இறைவனிடமிருந்து வந்திருக்கவும் முடியாது. ஆனால், திருக்குர்ஆன் இவை அனைத்தையும் ஆதாரிக்கின்றது. நிரூபிக்கின்றது. ஒத்துக்கொள்கின்றது. இதைப் பார்க்கின்றோம். ஆச்சரியப்படுகின்றோம். எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த ஒரு சாதனமும் இல்லாமல் முஹம்மது என்ற நபரால் இது சொல்லப்பட்டது என்று ஆச்சரியப் படுகின்றோம். இது கண்டிப்பாக இறைவனால் மட்டும் தான் சொல்லப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வருகின்றோம். இங்கே தான் முஸ்லீம்களாகிய நாங்கள் எங்கள் பகுத்தறிவை உபயோகிக்கின்றோம். இதன் மூலம் மற்ற மறைவான நம்பிக்கைச் சார்ந்த செய்திகளும் உன்மையாகவே இருக்கும் என்ற முடிவுக்கு வருகின்றோம். மறைவான நம்பிக்கைகளான சொர்க்கத்தையும், நரகத்தையும், இறைவனையும், இறைவனின் தூதர்களையும், வானவர்களையும் நம்புகின்றோம்.
இதில் எங்கே அறிவைப் பயன்படுத்த வேண்டுமோ அங்கே பயன்படுத்துகின்றோம். எங்கே அறிவைப் பயன்படுத்தக்கூடாது என்று இஸ்லாம் தடுக்கின்றதோ அங்கே விட்டுவிடுகின்றோம். இதைத்தான் இறைவன் இறுதித் திருமறையில் கூறும் போது:
''(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.'' (2 : 3)
இது தான் இஸ்லாத்தின் நம்பிக்கை. இதில் எங்கே இஸ்லாம் முற்றாக அறிவை சார்ந்திருக்கின்றது. எனவே நீங்கள் தவறாக விளங்கிவைத்துள்ளீர்கள் நன்பரே!
உங்களது அடுத்த கேள்வியில் சந்திப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் சுந்தர் அவர்களுக்கு. மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் அணைத்து முஸ்லிம்களுக்கும்.
நான் தொடர்ந்து இஸ்லாம் சம்பந்தமாக இந்த சகோதரருக்கு விளக்குவதால் இந்த ஏகத்துவ தலத்தில் பின்னூட்டப் பகுதி நீண்டுக் கொண்டே செல்கின்றன. சகோதரர் அபு இப்ராஹீம் அவர்களுக்கு மனம் நெருடலாக தென் படுமானால். நான் இனி போடலாமா ? என்று கேட்டுக்கொள்கிறேன். இன்னும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
// ஒருவர் அனுபவ பூர்வமாக அறிந்து அவரே இறைவனிடமிருந்து உண்மையை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லையே ஏன்?
இறைவன் மனிதனுடன் பேசமாட்டாரா? மூஸா போன்றவர்களிடம் நேரடியாக பேசிய இறைவன், நபியிடம் மட்டும் முற்றிலும் தூதர் மூலம் பேச காரணம் என்ன?
சற்று விளக்குவீர்களா? //
எல்லா தூதர்களும் மனிதர்களே ! மனிதர்களிருந்து தான் இறைவன் தேர்ந்தெடுத்து அவரை அவர்கள் சமூகத்திற்கு போதிக்கச் சொல்கின்றான் இறைவன்.
அந்த அடிப்படையில் தான் இறைதூதர் ஆதாம் முதல் நோவா, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈசா, இன்னும் இறுதித் தூதர் முஹம்மது இன்னும் பெயர் குறிப்பிடாத லட்சக் கணக்கான நபிமார்கள் இந்த உலகத்திற்கு வந்ததாக இறுதி நபியின் வாய் மொழி போதனைகள் சொல்கின்றன.
இதில் எந்த இறைத் தூதரையும் ஒரு முஸ்லிம் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசக்கூடாது. வேறுபாடு காட்டக்கூடாது. ஆனால் ஒவ்வொரு தூதருக்கும் ஒரு வகையான தனிச் சிறப்பு உண்டு. அதை ஏற்றுக் கொல்லனும்.
அந்த ஒவ்வொரு சிறப்பும் இன்னொரு தூதருடைய்ய சிறப்புக்கு தாழ்ந்ததோ அல்லது. உயர்ந்ததோ கிடையாது.
குறிப்பாக நபி மூசாவிடம் இறைவன் பேசினான். இன்னும் கடலைப் பிளந்து தன் மக்களை ஈடேற்றம் செய்தார்.இது இவரின் சிறப்பு ஆனால் முழு வேதமும் இப்படி பேசித்தான் வந்ததாக திருக் குர்ஆன் சொல்லவில்லை. வானவர் ஜிப்ரீல் மூலம் தான்
பெற்றுக் கொண்டார்.
2:53 இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
நேரில் காண்பது ஒரு சிறிய சம்பவமே ! ஒரு மிகப்பெரிய ஒளி மலைக்குப்பின்னால் தோன்றியது. அவர் மயங்கி விட்டார். மூர்ச்சை ஆகி விழுந்தால் எப்படி எழுதிக்கொள்ளமுடியும் வேத வாசகத்தை. மற்றோர் வசனத்தை பாருங்கள்.
2:55 இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்' என்று கூறினீர்கள் அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
2:56 நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
மூஸா வேத வாசகம் முழுவதும் நேரில் பார்த்து பேசி எழுதியிருந்தால். மேற்குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் அவர் சமூகம் இறைவனை நேரில் பார்க்கனும் என்று அடம் பிடித்து இருக்கமாட்டார்கள்.
அல்லாஹ்வை தானே பார்க்கனும் ரொம்ப சுலபம் என் கூடவே இருங்கள் எப்ப வேத வசனம் கடவுள் கொண்டுவருகிறாரோ அப்ப அவரை உங்களுக்கு காடுகிறேன் என்று சொல்லியிருப்பார்.
மேலும் பைபிளில் கூட காப்ரீல் என்ற வானவர் பெயர் வருகிறதே ! மோசே உடைய தோரா அடிப்படையில் உள்ள வேதம் தானே பைபிள். விளங்குவீராக.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
//அறிவு மனிதனை பலநேரங்களில் தவறான வழியில் அழைத்து சென்றுவிடுகிறதே. ஒருவர் அனுபவ பூர்வமாக அறிந்து அவரே இறைவனிடமிருந்து உண்மையை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லையே ஏன்?
இறைவன் மனிதனுடன் பேசமாட்டாரா? மூஸா போன்றவர்களிடம் நேரடியாக பேசிய இறைவன், நபியிடம் மட்டும் முற்றிலும் தூதர் மூலம் பேச காரணம் என்ன?
சற்று விளக்குவீர்களா?//
அன்பு நண்பர் சுந்தர் அவர்களே! அறிவைத் தேடும் உங்கள் ஆர்வத்தினைப் பாராட்டுகிறேன். அறிவு மனிதனைப் பலநேரங்களில் தவறான வழியில் அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டீர்கள். இல்லை. அறிவை நாம் இரண்டாகப் பாவிக்கலாம். ஒன்று உலகியல் அறிவு. இன்னொன்று ஆன்மீக அறிவு. இந்த இரண்டும் நடுநிலையாக ஒரு மனிதனிடம் இருந்தால் நிச்சயமாக அவன் வழிகேட்டில் செல்லமாட்டான். உலகியல் கல்வியை மட்டும் கொண்டு எந்தவொரு சமூகமும் சீர்திருத்தம் பெறாது. இதற்கு நல்லதொரு உதாரணமாக கல்வியறிவில் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் ஒழுங்கீனங்கள், வன்முறைகள். அமெரிக்காவில் மெத்த படித்த பொறியாளர் ஒருவர் தன் குடும்பத்தினரைச் சேர்ந்த ஆறுபேரை சுட்டுக் கொன்ற சம்பவம். அவரது அறிவு அவருக்கு தார்மீக வழியைக் காட்டவில்லை. ஏன்? உலகியலோடு மட்டும் ஒதுங்கிக் கொண்ட கல்வியால் எந்த சீர்திருத்தமும் ஏற்படாது. இதனால் தான் இஸ்லாம் மனிதன் தன்னைப் படைத்த இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறது.
''நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்'' (47:19)
இன்னும் இறைவனை அதிகமாக அஞ்சுபவர்கள் அறிஞர்களே என்று எடுத்துக் கூறுகிறது. (35:28) அதுவும் இறைவனின் அத்தாட்சிகளைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் வசனங்களில். அது போன்று இறைவனின் அத்தாட்சிகளைப் புரிந்துணரும் தன்மை கொண்டவர்கள் அறிவுடையவர்கள் என்று கூறுகிறது. (29:43)
இன்னும் அறிவுடையவர்களைப் பற்றி குர்ஆன் சிலாகித்துக் கூறும் போது அவர்கள் மறுமையை அஞ்சி இறைவனின் அருளை ஆதவரவு வைத்து இரவு நேரங்களில் நின்றும் சிரம் பணிந்தும் வணங்குவார்கள் என்று கூறிவிட்டு, அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று கேட்டு அறிவுடையவர்களை சிறப்பிக்கிறது. (39:9)
இறைவனை முறைப்படி அஞ்சி வாழும் இத்தகைய அறிவாளிகள் ஒரு போதும் வழிகேட்டில் சென்றுவிட மாட்டார்கள் என்பது திண்ணம்.
இன்னும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்வுக்காக தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு வாழ்பவனே புத்திசாலி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அடுத்து, உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதி. இறைவனைப் பற்றி அனுபவப் பூர்வமாக ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை?, இறைவன் ஏன் மனிதனுடன் நேரடியாகப் பேசவில்லை? என்பதாகும்.
தன் இறைவனைப் பற்றி அனுபவப் பூர்வமாக அறிந்து கொள்ளும் தன்மையுடன் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பதே உண்மையாகும். ஒரு பக்குவ வயதை அடைந்து விட்டால் ஒரே இறைவனைப் பற்றிய சிந்தனை எல்லோரது மனதிலும் எழுவது இயற்கை. இதனால் தான் பலதெய்வங்களை வழிபடும் மக்கள் கூட ஏதேனும் ஆபத்து வந்து விட்டால் கடவுளே! என்று அழைக்கிறார்கள். சரி அவன் ஏன் நேரடியாக வெளிப்பட்டு மனிதர்களிடம் பேசவில்லை?
முதலில் ஒரு அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் முற்றிலும் அறிந்தவன். ஞானம் மிக்கவன். மதிநுட்பமானவன். நமக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவு மிக சொற்பமானது. தனது முழுமையான மதிநுட்பமான ஞானத்தின் அடிப்படையில் சில விதி முறைகளை இறைவன் வகுத்துள்ளான். நம்முடைய சொற்ப அறிவைக் கொண்டு அது ஏன் இப்படி என்று கேட்க இயலாது. நெருப்பு ஏன் சுடுகிறது? சுடுதல் என்ற தன்மையை அதற்கு இறைவன் வழங்கியுள்ளான். நாம் எவ்வளவு தான் முயன்றாலும் இந்த இயற்கை நியதியை மாற்ற இயலாது. இப்பிரபஞ்சத்தை மிகவும் நேர்த்தியாகப் படைத்த இறைவன் மனிதனை ஏனோ தானோ என்று விட்டு விடவில்லை. அவனுக்கு தெளிவானா வழிகாட்டுதல்களைக் கொடுத்தான். தான் யார் என்பதை அறிவித்துக் கொடுத்தான். அவ்வாறு அறிவிப்பதற்காகத் தான் மனிதர்களில் மகான்களைத் தேர்ந்தெடுத்து வஹீ என்னும் இறை செய்தியை வேதங்களாக அருளினான். அதற்கு பக்க பலமாக பல்வேறு அற்புதங்களையும் அத்தாட்சிகளையும் வழங்கினான்.
இறைவன் நிச்சயமாக மனிதர்களிடம் பேசுகிறான். எவ்வாறு பேசுகிறான் என்பதை பின்வரும் வசனத்தில் தெளிவு படுத்துகிறான் பாருங்கள்:
அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன். (42:51)
தன்னுடைய தூதர்கள் மூலமாக தன்னுடைய வல்லமையையும் அளப்பரிய கருணையையும் தெளிவான வழிகாட்டுதல்களையும் அவன் வெளிப்படுத்தி விட்டான். அதனை ஏற்றுக் கொள்வதே ஏற்றமானது.
அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)
எல்லாம் வல்ல இறைவன் உங்களை நேரான வழியில் நடத்துவானாக என் பிரார்த்தனையுடன்
அபூ அப்திர்ரஹ்மான்
அருமையான விளக்கங்கள்கொடுத்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எல்லாவற்றயும் நடுநிலையோடு ஆராய்ந்து விரைவில்
எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.
அன்புடன்
சுந்தர்
Salam to all especially to Colvin (Penthocost christians).First my humble request that WE all are educated and need not help pastor or missioner's help to read Bible,Because these peoples are geting money from outside and enjoying theirself and misguiding innocent peoples. So, all christian brothers and sisters should realise that we are not discussing about our own property or books/records, Qu'ran and Bible, it is common to all peoples. so, we have to read carefully without any hesitation and should get right path. so that we can succeed in our life, which is result to award and heaven from Al mighty Allah. What ever it may be, we have to do research even Bible or Qu'ran, which is right and which is fraud. No one should not get any angry/bad intention and need not try to hide truth instead of rectifiying the mistake, like penthocost christian.From quaran, Al mighty allah is challenging to all peoples read Quaran 4:82, 2:23? If you are right, prove it, otherwise accept Islam is righteous religion and Holy quaran is God's word. Insha Allah, you will win here and hereafter. Wassalam.
Post a Comment