அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, July 31, 2009

இயேசுவின் பிறப்பு : முரண்படும் சுவிசேஷங்கள்


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2


இயேசுவின் வரலாற்றை விவரிப்பதாகச் சொல்லப்படும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களுக்கிடையே பல்வேறு முரண்பட்ட தகவல்கள் காணப்படுகின்றது. குறிப்பாக இயேசு பிறந்தபோது நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்திகளை ஒருவன் ஆழ்ந்து படிப்பாரேயானால் இறுதியில் குழப்பம் தான் மிஞ்சும் என்கிற அளவுக்கு சுவிசேஷங்களுக்கிடையே முரண்பாடுகளும் குழப்பங்களும் மலிந்து காணப்படுகின்றது.

இயேசுவினுடைய பிறப்பு ஒரு அதிசயம் என்றாலும், அவற்றைப் பற்றி பைபிளில் சொல்லப்படும் செய்திகளில் பல குழப்பமான செய்திகள் காணப்படுவதால், பைபிளில் கூறப்படும் 'இயேசுவின் வரலாறு' என்பது, இராமாயணம் மகாபாரதம் போன்று, 'இதுவும் ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருக்குமோ' என்று படிப்படிவர்களுக்கு ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகமதிகம் இருப்பதை நாம் மறுப்பதற்கு இல்லை - மறுக்கவும் முடியாது. அந்த அளவுக்கு அவரை பற்றி சொல்லப்படும் பல செய்திகளில் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது மேலைநாடுகளில் கூட்டம் கூட்டமாக தங்களது பூர்வீக மதமான கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி நாத்திகத்தின் பால் சென்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இயேசுவின் வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான செய்திகள் பதிவு செய்யப்படாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதுடன், அதற்கு மாற்றமாக பல பொய்யான இட்டுக்கட்டப்பட்ட - முரண்பாடான செய்திகளே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த நிலை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளது.

பைபிளில் இயேசுவின் பிறப்பின் போது நடைபெற்றதாக சொல்லப்படும் செய்திகளில் உள்ள முரண்பாடுகளை இனி தொடர்ந்து பார்ப்போம்.

முரண்பாடு 2:

இயேசு பிறக்கும் போது நிலவிய சூழ்நிலை என்ன?

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,.... - மத்தேயு 2:13-14

இயேசு பிறந்த போது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், அதற்குப் பயந்து இயேசுவின் தாய் மரியாளும், அவருக்கு கணவனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும், இயேசுவை தூக்கிக்கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகின்றார். ஏரோது இறந்த பிறகும் கூட அவனது மகன் அர்கெலாவு என்பவன் ஆட்சிக்கு வந்ததால் அதற்கும் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு 2:19-23ம் வசனங்களில் கூறுகின்றார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரண நிலைதான் நிலவியதாகவும் மத்தேயு கூறுவது போல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பது போன்று மறுத்து எழுதுகின்றார்.

இயேசுவின் தாய் மரியாளும் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் இயேசு பிறந்தபோது பெத்லகேமில் இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும், அவரது பெற்றோர் வருடம் தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் என்றும் லூக்கா தனது நூலில் குறிப்பிடுகின்றார். பார்க்க லூக்கா 2:1-52

ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும், அதைத் தொடர்ந்து இயேசுவின் பெற்றோர் எகிப்துக்கு ஓடிப்போனதையும், அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும், எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்த சமயத்தில் சர்வ சாதாரண நிலை தான் நிலவியதாகவும், ஆண்டு தோரும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள் என்றும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகின்றார்.

பரிசுத்த ஆவியால் தூண்டுதலால் தான் இந்த பைபிள் எழுதப்பட்டிருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும். அதுவும் இரட்சகராக வந்த இயேசு பிறக்கும் போது நடைபெற்ற சம்பவங்களில் இப்படிப்பட்ட ஒரு முரண் வரலாமா? மத்தேயு கூறுவது போல் இயேசு பிறந்த போது பயங்கரமான சூழ்நிலை நிலவியதா? அல்லது லூக்கா கூறுவது போல் சர்வ சாதாரண நிலை நிலவியதா? ஆண்டு தோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உன்மையா? அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்து பின்னர் நாசரேத்துக்குச் சென்றது உன்மையா?

முரண்பாடு : 3

இயேசு பிறக்கும் முன் மரியாளும் யோசேப்பும் எங்கே வசித்தார்கள்? நாசரேத்துக்கு எப்போது சென்றார்கள்?

இயேசு பிறக்கும் வரை யோசேப்பும் மரியாளும் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் வசித்ததாகவும் அவர்கள் குடிமதிப்பு எழுதும் வகைலேயே அங்கிருந்து பெத்லகேமிற்குப் போனதாகவும் அங்கேயே மரியாளுக்கு பிரசவகாலம் ஏற்பட்டு, இயேசு பிறந்ததும் குழந்தைக்கு நியாயப்பிரமாணத்தின் படி செய்யப்பட வேண்டிய சடங்குகளை செய்து விட்டு மீண்டும் தங்கள் ஊரான நரசேத்துக்கு திரும்பிச் சென்றதாகவும் லூக்கா கூறுகின்றார்:

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான். அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். - லூக்கா 1:26-27

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். - லூக்கா 2:1-7

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். - லூக்கா 2:39

ஆனால் மத்தேயுவோ இதற்கு நேர் முரணாக, யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிலேயே வாழ்ந்ததாகவும், அப்போது கர்த்தருடைய தூதன் சொன்னதினிமித்தம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்குப் போனதாகவும், ஏரோது மரணமடையும் வரை எகிப்திலேயே தங்கி இருந்ததாகவும், ஏரோதின் மரணத்திற்குப் பின்னர் அவனது மகன் அர்கெலாவு ஆட்சி செய்கிறான் என்று கேள்விப்பட்டு எகிப்திலிருந்து நாசரேத்துக்குப் போய் தங்கியதாகவும் கூறுகின்றார்:

ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். - மத்தேயு 2:1-3

அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:11

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். - மத்தேயு 2:13-15

ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய், நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. - மத்தேயு 2:19-23

இங்கே மத்தேயு சொல்லுவது போல் இயேசு பிறக்கும் முன்பு யோசேப்பும் மரியாளும், பெத்லகேமிலேயே வாழ்ந்து வந்தார்களா? அல்லது நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள் குடிமதிப்பு எழுதும் வகையிலேயே பெத்லகேமிற்கு சென்றார்களா?

அதன் பிறகு எருசலேமிலிருந்து ஏரேதுக்கு பயந்துக்கொண்டு எகிப்துக்குப் போய் பின்னர் ஏரேதின் மகனுக்கு பயந்து அதன் காரணமாக நாசரேத்துக்கு போனார்களா? அல்லது லூக்கா சொல்வது போல், தங்கள் சொந்த ஊர் என்ற காரணத்திற்காக பெத்லகேமிலிருந்து நேரடியாக நாசரேத்துக்கு போனார்களா? யார் சொல்வது உன்மை? கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவின் பிறப்பில் ஏன் இந்த முரண்பாடு? இயேசுவின் வரலாறு ஒரு கட்டுக்கதை என்ற ஒரு தவறான கருத்தை இந்த பைபிள் வசனங்கள் ஏற்படுத்தி விடாதா?


இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.

3 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பைபிள் தமிழை புரிந்துகொண்டு எப்படித்தான் விளக்கவுரை எழுதுகிறீர்களோ? இதற்காகவே தங்களுக்கு தனி பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். பாமர மக்களுக்கு புரிந்து விட கூடாது என்ற நோக்கத்தில் மிக குழுப்பமான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுகிறார்கள் இல்லையா?

வஸ்ஸலாம்.
அமீர்.

Egathuvam said...

''அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியியல் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன் (யாவற்றையும்) நன்கறிபவன்.''

இறுதித் திருமறைக் குர்ஆன் : 34 : 1

abdul azeez said...

அஸ்ஸலாமு அலைக்கும். அன்புச் சகோதரர்களே ! இந்த மத்தேயு 2:19-23
வசனத்தில் கவனிக்கப் படவேண்டிய முக்கியமான ஒன்று.

இரண்டுச் செய்திகள் யோசேப்புக்கு கனவில் வருபவை. ஒன்று கர்த்தனுடைய தூதன்.
என்று வருபவை மற்றொன்று தேவனால் எச்சரிக்கப்பட்டு என்று வருபவை.

மொத்தத்தில் நினைவு என்று அல்லாமல் கனவில் தான் என்று எச்சரிக்கப்பட்டவை.

இதில் கர்த்தர் நிகழ்கால சங்கதிகள் கூட தெரியாதவராக சித்தரிக்க படுகிறார். காரணம் யோசேப்பை ஒரே கனவில் கலிலியோ நாட்டின் நாசரேத் ஊரில் போய் வசித்துக்கொள் என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால் யோசேப்போ ! கனவில் சொல்லப்பட்டவைகளை ஒரு பொருட்டாக கருதாமல். தான் கேள்வி பட்டதை மட்டுமே கருத்தில் கொண்டு போக பயந்துள்ளார்.

யோசேப்பு கனவில் சொல்லப்பட்டவைகளை அப்படியே ! ஏற்று இஸ்ரவேல் போய் இருந்தால். ஏரோது மகன் கையால் மூவரும் கொல்லப்பட்டு இருந்திருப்பார்கள்.

இந்த அளவுக்கு ஒரு மனிதன் யார் ஆட்சி புரிகிறார். என்று கேள்வி பட்டு தெரிந்து கொண்ட ஞானம் கூட இந்த உலகத்தையே ! படைத்த கர்த்தருக்கு இல்லாதது போல் பைபிள் சித்தரித்து காட்டுகிறது.

மா சலாம்.
அப்துல் அசீஸ்.