அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Saturday, September 20, 2008

வளர்ப்பு மகன் பெற்ற மகனாக முடியுமா?

('விமர்சனம் விளக்கம்' தளத்தில் சகோதரரர் அபூமுகை அவர்களால் வெளியிடப்பட்ட 'மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம்' என்றக் பதிவிற்கு shankaran E R என்ற மாற்று மத சகோதரர் ஒரு சந்தேகம் கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தார். அவரது கேள்வியையும் அதற்கான பதிலையும் இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.)

shankaran E R has left a new comment on your post "மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம்":

தங்களின் பதிவு கண்டேன். விரிவாக விளக்கியுள்ளீர்கள். ஆயினும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நபி தனக்கு மருமகள், அதிலும் தனது வளர்ப்பு மகனின் மனைவியை, விவாகரத்தே ஆனாலும், மருமகள் முறையிலுள்ள பெண்ணை மீண்டும் திருமணம் செய்ய வேண்டும்? இது அந்நாளைய பொதுவான வழக்கமா? இக்கேள்விக்கு சரியான பதில் தாங்கள் அளித்த சுட்டியிலும் இல்லை.

இக்கேள்விக்கு தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

*****

நண்பர் சங்கரன்,

ஒரு பக்கமாக வாசித்து விளங்கியுள்ளீர்கள். மறு பக்கத்தை உள்வாங்கவில்லை என்பதே உங்களால் முழுமையாக புரிந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம் எனலாம். நபியவர்களின் வளர்ப்பு மகனைத் திருமணம் செய்த ஸைனப் (ரலி) அவர்கள், நபியவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகளாவார். அதாவது நபியவர்களின் மாமி மகள் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்!

தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள் - மாமி மகள், ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள அதிகம் உரிமையுள்ளவர்கள். உதாரணமாக: ராஜா என்பவரின் தந்தையுடன் பிறந்த சகோதரியின் மகள், ராஜாவுக்கு முறைப் பெண்ணாவார். அந்தப் பெண்ணுக்கு ராஜா முறைப் பையனாவார். மாமியின் மகளான முறைப்பெண் வெறொருவருக்கு மனைவியாக இருந்தால் தவிர இவ்விருவருக்குமிடையே திருமண உறவு தடுக்கப்பட்டதல்ல.

நபியவர்களுக்கு ஸைனப் முறைப் பெண்ணாவார், ஸைனப்புக்கு நபியவர்கள் முறை மாப்பிள்ளையாவார். இவ்வுறவை யாரும் விரும்பித் தேர்ந்தெடுக்க முடியாது. இது இரத்த சம்பந்தப்பட்ட உறவினால் ஏற்படுவது. இதை மாற்றிடவோ மறுத்திடவோ இயலாது. மறுத்தாலும் அது வெறும் வார்த்தையாக இருக்குமேயன்றி மறுப்பு உண்மையாகிவிடாது.

வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று சொல்லிக்கொள்வது இரத்த உறவால் ஏற்படுவதில்லை. அதனால்தான் மகன், தந்தை என்று சொல்லாமல் வளர்ப்பு மகன், வளர்ப்புத் தந்தை என்று அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. வளர்ப்பு மகன் என்று சட்டபூர்வமாக ஆவணங்களில் பதிவு செய்து கொண்டாலும் இரத்த உறவு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் தந்தை, மகன் உறவு வெறும் வார்த்தைகளால் ஏற்படுவதில்லை.

பெற்ற மகன், வளர்ப்பு மகன் இவ்விரண்டுக்கும் என்றும் ஒற்றுமையில்லாத பெருத்த வேறுபாடு உள்ளது, வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற மகனாகிவிட முடியாது.

ஸைதை வளர்ப்பு மகன் என்று நபியவர்கள் அறிவிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஸைத் மணமுடித்து விவாகரத்து செய்த பெண்ணை நபியவர்கள் திருமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று ஒப்புக்கொள்பவர்கள், வளர்ப்பு மகன் என்று வாயால் சொல்லி விட்டதால் ஸைது மணமுடித்தப் பெண் நபியவர்களுக்கு எவ்வாறு மருமகளாகிவிடுவார்? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

''உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது'' (திருக்குர்ஆன், 004:023)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம், பெற்ற மகனின் மனைவியே மருமகள் என்ற தகுதியைப் பெறமுடியும் என்ற கருத்தில் மகனின் மனைவியை திருமணம் செய்வதைத் தடைவிதிக்கிறது. வளர்ப்பு மகனுக்கு இந்தச்சட்டம் பொருந்தாது.

வளர்ப்பு மகனை சொந்த மகனாகக்கருதி இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளைப் புறக்கணிக்கும் முறை அன்றைய காலத்தில் இருந்தது. இன்னாருக்கு இன்னார் மகன் என்பதைத் தீர்மானிப்பது இறைவனின் அதிகாரத்தில் உள்ளது. இன்னொருவரின் மகனைத் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி வளர்க்கலாமே தவிர, பெற்ற மகனாகக் கருதுவது போலியான உறவு. அந்த வெற்று உறவைத் தகர்க்கவே வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அந்தப் பெண்ணை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இறைவன் தன் நபியின் வழியாக நிறைவேற்றினான்.

இவையெல்லாம் ஆக்கத்தில் சொல்லப்பட்டிருந்தும் நீங்கள் கவனிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இனியும் உங்களுக்குச் சந்தேகம் உள்ளது எனில், இரத்த சம்பந்தமான உறவில் ஸைனப் (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு எவ்விதத்தில் மருமகளாகிறார்? என்பதை நீங்கள் விளக்க வேண்டும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
****************
.
நபி (ஸல்) ஜைனப் (ரலி) திருமனம் சம்பந்தமாக மாற்றுமதத்தவர்களால் சொல்லப்படும் விமர்சனத்துக்கு எமது தளத்தில் வெளியிடப்பட்ட மிக விரிவான விளக்கம் பார்க்க கீழுள்ள சுட்டிகளை அழுத்தவும் :

.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

0 comments: