அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, May 29, 2009

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம்?! (பாகம் - 1)

கிறிஸ்தவர்களால் புனிதமாக மதிக்கப்படும் பைபிள் மனித்தக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பது பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. குறிப்பாக அதில் இருக்கக்கூடிய முரண்பாடான, ஆபாசமான, நகைச்சுவையான, விஞ்ஞானத்திற்கு முரனான, வர்னாசிரமக் கொள்கைகளை வலியுறுத்தக்கூடிய, இறைத்தூதர்களை இழிவுபடுத்தக்கூடிய குறிப்பாக இயேசுவையே தரம் தாழ்த்தக்கூடிய, இப்படி எண்ணற்ற இறைவசனங்களாக இருக்க அறவே தகுதியற்ற வசனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

குறிப்பாக மனிதர்களை நேர்வழிப்படுத்தும் முகமாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை சகட்டுமேனிக்கு அவர்கள் மீது அபான்டமான எந்த வித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவது ஒருபுறமிருக்க, ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக எந்த இறைவன் இந்த வேதத்தை அருளினான் என்று சொல்லப்படுகின்றதோ அதே இறைவேதத்தில் - அந்த இறைவனின் மகத்துவத்திற்கும் அவனது கண்ணியத்திற்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் - அந்த இறைவனையே இழிவுபடுத்தியும் வசனங்கள் எழுதப்படிருக்கின்தே என்று பார்க்கும்போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. இப்படிப்பட்ட வசனங்களை எப்படி இறைவசனங்களாக இன்றைய கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்? அல்லது அவர்களுக்கு இப்படிப்பட்ட வசனங்கள் இருப்பது தெரியவில்லையா? அல்லது அவர்களுக்குத் தெரியாத அளவுக்கு மறைக்கப்படுகின்றதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் கண்ணிருந்தும் குருடர்களாயும் காதிருந்தும் செவிடர்களாயும் இருக்கின்றார்களா?

கர்த்தரையே இழிவுபடுத்தக்கூடிய வகையில் எப்படிப்பட்ட வசனங்கள் கிறிஸ்தவர்களின் புனிதவேதமான பைபிளில் இடம் பெற்றுள்ளது என்பதை இனி காண்போம்.

கர்த்தரின் குற்றவியல் சட்டங்கள் கேளிக்கூத்தானவையா?
தாவீது தீர்க்கதரிசி, உரியா என்ற போர்வீரனின் மனைவியுடன் கள்ள உறவின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது போர்வீரனான உரியாவையே நயவஞ்சகமாக கொண்றுவிட்டு, அவனின் மனைவியை பலவந்தமாக மணமுடித்துக்கொண்டதாகவும் பைபிளில் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியான தாவீதை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. இது உன்மையாக நடந்த சம்பவமா? அல்லது தாவீதின் பெயரால் அவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் இட்டுக்கட்டி எழுதப்பட்ட பொய்யான கதையா? என்பதை பைபிள் ஆதாரங்களுடன் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
தாவீதின் இந்த அநாகரீகமான (?) செயலுக்கு கர்த்தர் ஒரு தண்டனை கொடுப்பதாக சொன்னாராம். அந்த தண்டனை என்ன? இதோ பைபிள் கூறுகின்றது:

'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12)

அதாவது தாவீது செய்ததாகச் சொல்லப்படும் அந்த ஈனச்செயலுக்கு (?) கர்த்தர் கொடுப்பதாக சொல்லப்பட்ட தண்டனை, அவருடைய பெண்மக்களை மற்றவர்கள் மூலம் அவர்களை கற்பழிக்க வைப்பாராம். அதுவும், தாவீதோ உரியாவின் மனைவியுடன் ரகசியமாகதான் விபச்சாரம் செய்தாராம். ஆனால் கர்த்தர் தாவீதுக்கு தண்டனையாக ஊரார் முன்பாக பட்டப்பகலிலே நடுரோட்டிலேயே வைத்து அவருடைய பெண்மக்களை அடுத்தவனை வைத்து கற்பழிக்கச் செய்வாராம். இந்த கற்பழிப்புச் சம்பவத்தை இஸ்ரவேலர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் செய்வாராம்.

இது உன்மையா? இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க அசிங்கமான ஒரு தண்டனையை கர்த்தர் கொடுப்பதாக சொல்லியிருப்பாரா? இப்படி பலருக்கு அடுத்தவனுடைய பெண்களை ஏற்படுத்திக் கொடுப்பது தான் கர்த்தரின் வேலையா? அப்படி பலர் பட்டப்பகலில் செய்யும் கற்பழிப்புக் காட்சிகளை இஸ்ரவேலர்களைப் பார்க்க வைப்பது தான் அவர் கற்றுத்தரும் நல்லொழுக்கமா? ஒருவனுடைய விபச்சாரத்திற்கான தண்டனையாக பல விபச்சாரகர்களை உருவாக்குவது தான் கார்த்தரின் நீதியா?

இப்படிப்பட்ட கேலிக்கூத்தான - அருவருக்கத்தக்க - ஒரு சட்டத்தை கடவுள் சொல்லியிருப்பாரா? என்றால் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார் - சொல்லியிருக்கவும் முடியாது. மாறாக, கர்த்தரின் பெயரால் கர்த்தரின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகளால் இது போன்ற வசனங்கள் பைபிளில் தினிக்கப்பட்டிருக்கும் - திணிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை நாம் சுயமாக ஒன்றும் சொல்லவில்லை பைபிளின் மற்ற வசனங்களை ஒப்பிட்டுத்தான் இதை கூறுகின்றோம்.

காரணம், மோசேயின் காலம் தொட்டு, தாவீதின் காலத்திலும், இன்னும் இயேசுவின் கலத்திலும் கூட 'ஒருவன் அன்னியப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் அவன் கல்லால் அடித்துக்கொள்ளப்படி வேண்டும் (பார்க்க லேவியராகமம் 20:10) என்ற சட்டமே நடைமுறையில் இருந்தது என்று பைபிள் கூறுகின்றது.

அப்படிப்பட்ட சட்டம் - நீதி பரிபாலன் மிக்க கர்த்தரால் வழங்கப்பட்ட சட்டம் - நடைமுறையில் இருக்க, எப்படி தாவீது மட்டும் அந்த சட்டத்திலிருந்து தப்பிக்கும் வகையில் அவருடைய செலுக்காக கொடுக்கப்படவேண்டிய தண்டனையான, மரணத்தண்டனைக்கு மாற்றமாக வேறு ஒரு சட்டத்தை சொல்லியிருப்பார்? அதுவும் குறிப்பாக அவர் செய்த அந்த அநாகரீக செயலுக்குரிய தண்டணையை அவரை அனுபவிக்கவிடாமல், அவருடைய பெண்மக்களை அடுத்தவனுக்கு ஏற்படுத்திகொடுக்கும் இந்த அசிங்கமான தண்டனையை கொடுப்பதாக எப்படி கூறியிருப்பார்?

சாதாரண அப்பாவி ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனையும், அதே ஒரு அரசன் செய்தால் அவனுக்கு அதிலிருந்து விதிவிலக்கும் என்கிற அளவுக்கு பாரபட்சம் காட்டுபவரா கர்த்தர்? இப்படித்தான் கர்த்தரின் நியாங்கள் இருக்குமா? என்றால் கண்டிப்பாக இருக்காது என்றே பைபிள் சொல்கின்றது. ஏனெனில் உன்மையிலேயே தாவீது விபச்சாரம் செய்திருந்தால் அவருக்கு அன்றை காலத்தில் இருந்த மரணதண்டனைத்தான் கிடைத்திருக்க வேண்டும். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. கர்த்தரும் அதிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கமாட்டார், ஏனெனில் அவர் நீதியுள்ளவர் என்று பைபிள் கூறுகின்றது:

அவர் கன்மலை அவர் கிரியை உத்தமமானது அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன் அவர் நீதியும் செம்மையுமானவர். - உபாகமம் 32:4

மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? - யோபு 4:17

தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? - யோபு 8:3

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கைகளெல்லாம் சத்தியமுமாயிருக்கின்றது - (சங்கீதம் 33:4)

இப்படி பைபிளில் கர்த்தருடைய சட்டங்களைப்பற்றியும் அவரது நீதியின் செம்மையைப் பற்றியும் தெளிவாக சொல்லியிருக்க, எப்படி தாவீதுக்கு மட்டும் அதிலிருந்து விதிவிலக்கு அளித்து, அவருக்கு பதிலாக அவரது பெண்மக்களை - ஒரு அசிங்கமான சட்டத்தின் மூலம் - தண்டிப்பதாக சொல்லியிருப்பார்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

விபச்சாரம் என்பது மிகவும் இழிவான செயல் என்று பைபிளின் பல இடங்களில் சொல்லப்படுகின்றது. அப்படி எவரேனும் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் பைபிள் வலியுறுத்துகின்றது. அந்த சட்டம் மோசேயின் காலத்திலிருந்து, தாவீதின் காலம் தொட்டு இயேசுவின் காலத்திலும் நடைமுறையில் இருக்க, அப்படிப்பட்ட இழிவான கேவலமான விபச்சாரத்தை கர்த்தரே மற்றவர்கள் செய்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தார் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதே விபச்சாரத்தை பற்றி பைபிள் கூறுவதை பாருங்கள்:

தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது அவர்கள் ஓட்டம் பொல்லாதது. அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. - எரேமியா 23:10

விபச்சாரம் செய்பவன் கல்லால் அடித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுவதைப்ப பாருங்கள்:

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள். - லேவியராகமம் 20:10, உபாகமம் 22:22

இப்படி விபச்சாரத்தை பொல்லாதது - கொடியது என்று சொன்ன கர்த்தர் - ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று சட்டம் போட்ட - கர்த்தரா ஒரு விபச்சாரத்திற்கான தண்டனையாக பலரை விபச்சாரத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு சட்டததை சொல்லியிருப்பார்?

அதுமட்டுமல்ல, இந்த வசனம் கர்த்தரின் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில யூத எழுத்தாளர்களால் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்பதை பைபிளின் இன்னும் சில வசனங்களும் தெளிவு படுத்துகின்றது. அதாவது, ஒருவன் பாவம் செய்தால் அதற்கான தண்டனையை அவன் தான் அனுபவிக்க வேண்டுமே யொழிய அவனது மகனோ அல்லது அவனைச்சார்ந்தவர்களோ அனுபவிக்க கூடாது என்றும் கர்த்தர் கூறியதாக பைபிளில் கூறப்படுகின்றது.

பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான் எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். - எரேமியா 31:29-30

இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். - எசேக்கியேல் 18:19-20

இப்படி தெளிவாக எவன் குற்றம் செய்தானோ அவன் தான் அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டுமே தவிர அதற்கு பகரமாக வேறு எவறும் அவனது பாவத்திற்காக தண்டனையை அனுபவிக்க முடியாது என்று பைபிளில் சொல்லியிருக்க, கர்த்தர் எப்படி தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்காக அவனது பெண்மக்களை அடுத்தவனுக்கு ஏற்படுத்திகொடுப்பதாக கூறியிருப்பார். எனவே மேலே எடுத்துக்காட்டப்பட்ட 2 சாமுவேல் 12: 11 - 12 ம் வசனங்கள் கண்டிப்பாக யூத எழுத்தாளர்களால் கர்த்தருக்கு கலங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் - தாவீதை இழிவு படுத்தும் தீய எண்ணத்துடன் - பைபிளில் தினிக்கப்பட்ட வசனங்களே என்பதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது, - அல்குர்ஆன் 29 : 68

சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவர்களே!
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

16 comments:

AF Shahul Hameed said...

Eromiah 31:29-30 and Ezekiol 18:19-20 are proved that Jesus was not crucified. Jesus not came for die. If there is no crucification, there is no Chrisitian as per Paul.. So, ??????
Please dear brothers and sisters, read the bible matthew chapter 26, 27, u can find out jesus(PBUM) is not liking to die...All childs are borning without sin and with Islam. After, their behaviour, accordingly there are.

SUNDAR said...

அன்பு சகோதரர் அவர்களே!

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைகளை மோசேக்கு கட்டளையிட்ட கர்த்தர் அதே மோசேயிடம்

"எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன்" ( யாத்திராகமம் 33:19 )

என்று சொல்லியிருப்பதன் மூலம் கர்த்தராகிய அவர் எல்லாவற்றிக்கும் விதிவிலக்கு என்றும் குறிப்பிட்டிருக்கிறான். அவர் நினைத்தால் தண்டிப்பார் இல்லையென்றால் மனிப்பார் அந்த உரிமை தேவனாகிய அவருக்கு இருக்கிறது! எனவே ஒரே வார்த்தையை வைத்துக்கொண்டு கர்த்தராகிய தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிப்பது சரியல்ல!

I இராஜாக்கள் 15:5 தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

இப்படி செம்மயானவனாக அவரின் இருதயத்துக்கு ஏற்றவனாக தாவீது இருந்ததால் அவன் செய்த கொடிய குற்றத்திலிருந்தும் அவனை மன்னித்தார். ஏன் மன்னித்தீர் என்று அவரிடம் கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லை என்றே கருதுகிறேன்!

abdul azeez said...

சகோதரர் சுந்தர் அவர்களே பொதுவாக குற்றம் செய்தவர்களை தான் நினைத்தால் தண்டிப்பார் தான் நினைத்தால் மன்னிப்பார் என்றால். அதிகாரம்,மன்னிக்கும் கிருபை தன்மை கர்த்தரிடம் இருக்கின்றது.விபரமானவர் தான் என்று சொல்லலாம்.அதில் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இல்லை கேள்வி என்னவென்றால் தாவீது செய்த குற்றத்திற்கு அவரின் பெண்மக்களை தண்டிப்பது. இதோ

// 'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12) //

என்ன நியாயம் மடையர் கூட இப்படி ஒரு சட்டத்தை சொல்ல மாட்டாரே !
சரி தெளிவா தான் சொல்லியிருக்கார் என்று கண்ணை மூடிக்கொண்டு அதை ஏற்றுக் கொண்டாலும்.

உன் ஸ்திரீகளை எடுத்து அடுத்தவனுக்கு கொடுத்த கடவுள் அந்த `` அடுத்தவன் ''
மனைவி மக்களை யாருக்கு கொடுத்தார். ஏன் ? என்றால் தாவீது செய்ததை தான் அடுத்தவனும் செய்கிறார்

இல்லை அடுத்தவன் என்ற நிலையுடன் நிறுத்திக் கொண்டார் என்றால் கர்த்தர் பாரபட்சம் பார்க்கிறவராக இருக்கின்றார் என்பது உறுதி. பாரபட்சம் பார்ப்பவர் இறைவன் என்ற இடத்தில் இருக்கதகுதி கிடையாது.

இல்லை இந்த தொடர் கூட்டிக் கொடுக்கும் வேலை தான் கர்த்தரின் வேலை என்றால் மாடுகளை காளைக்கு விட்டவர் தான் கையில் பேனாவை எடுத்துள்ளார் என்று தோன்றுகிறது.

சிந்தனை இல்லாமல் சித்தாந்தமா ?

மா சலாம்.
அப்துல் அசீஸ்.

Anonymous said...

கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவதும் ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவதும் பிறன் மனைவியை தொடுபவன் தன மனைவியை இழப்பதும் போன்ற இந்த உலகில் நடக்கும் எல்லாமே இறைவனின் செயல்கள்தான்! அவனனவன் செய்ததற்க்கான தண்டயனையை பெறுகிறான் இதில் இறைவன் இழிவு அடைகிறார் என்றால் அவர் சரியாக நியாயம் தீர்க்க முடியாது!

எங்கு யாரை எப்படி அடித்தால் யாருக்கு எங்கு நோகும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். பிறன் மனைவியை தொடுவதனால் ஒருவன் அடையும் துன்பத்தை தன மனைவியை இன்னொருவன் தொடும்போதுதான் உண்மையாக உணர முடியும் எனவேதான் கர்த்தர் அதுபோன்ற ஒரு செயலை அனுமதித்துள்ளார்!

அவரை பார்த்து நீர் என்ன செய்கிறீர்? ஏன் செய்கிறீர்? என்று கேட்கும் அளவுக்கு நாம் பெரியவர்கள் அல்ல!

AF Shahul Hameed said...

Truly, the religion with Allah(Almighty God) is Islam. Those who were given the Sripture(Jews and Chrisitians) did not differ except, out of mutual jealousy, after knowledge had come to them. And whoever disbelieves in the Ayat (proofs, evidences, verses, sign, revelations etc.,) al Allah, then surely, Allah is Swift in calling to account. Quaran 3:19
Or were you witnesses when death approached Yaqub (Jacob)? When he said upto his sons, “what will you worship after me ? They said, “We shall worship your Ilah (God-Allah) the Ilah(God) of your fathers, Ibrahim(Abraham), Ismail (Ishmael), Ishaq (Isaac), One Ilah (God) and to Him we submit (in Islam)
Quaran 2:133

அப்துல்லாஹ் said...

நன்றாக ஜோக் அடிக்கின்றீர்கள் நன்பரே!

பைபிளில் தவறு இருக்கின்றது என்று ஒத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக (பைபிளில் உள்ள வசனங்கள் கர்த்தரையே இழிவு படுத்தி அவரது கண்ணியத்திற்கே மாசு ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும்) அதை எப்படியேனும் நியாயப்படுத்தியாக வேண்டும் என்பதற்காக இது போன்ற வாதங்களை எடுத்து வைப்பது உங்களது நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள் கிறிஸ்தவ நன்பர்களே!

//கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவதும் ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவதும் பிறன் மனைவியை தொடுபவன் தன மனைவியை இழப்பதும் போன்ற இந்த உலகில் நடக்கும் எல்லாமே இறைவனின் செயல்கள்தான்! அவனனவன் செய்ததற்க்கான தண்டயனையை பெறுகிறான் இதில் இறைவன் இழிவு அடைகிறார் என்றால் அவர் சரியாக நியாயம் தீர்க்க முடியாது!//

உங்களின் இந்தக் கருத்தின் படியே வருவோம். அப்படியானால், (உங்களது நம்பிக்கைப்படி) இயேசு சிலுவையில் அறைந்துக் கொல்லப்பட்டது அவரது எந்த செயலினால்? அவர் யாரை எத்தனைப் பேரை சிலுவையில் அறைந்துக் கொன்றார்? கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவது போல் இயேசு எத்தனை முறை மற்றவர்களை சிலுவையில் ஏற்றிக்கொண்றார், அவர் சிலுவையில் ஏற்றிக் கொல்லப்படுவதற்கு? அதே போன்று இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யோவான்ஸ்னான் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டதாக பைபிள் கூறுகின்றதே! அவர் எத்தனை பேரின் தலையை வெட்டினார், அதன் காரணமாக அவர் கொல்லப்படுவதற்கு?

அப்படிப் பார்த்தால் உலகத்தில் எத்தனையோ கொடியவர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்கு இந்த உலகத்திலேயே தண்டனை அனுபவிக்காமல் மரணிக்கின்றார்களே! அவர்களுக்கு எங்கே தண்டனை? ஒரு வேலை 'அவர்கள் செயல் கர்த்தருக்கு தெரியமல் போய்விட்டது' என்று வாதிடப்போகின்றீர்களா? அதே போல் எத்தனையே நல்லவர்களும் நீதிமான்களும் துன்பப்பட்டு கொல்லப்படுகின்றார்களே அதற்கு என்ன காரனம்? உங்கள் வாதம் எங்காவது பொருந்தி போகின்றதா? சிந்தியுங்கள் நன்பரே!

ஒருவனுடைய மனைவியை கற்பழித்ததால் அதன் காரணமாக அவன் தண்டிக்கப்பட்டால் அதை நியாயம் என்று ஒத்துக்கொள்ளலாம். அதற்கு மாறாக அவனது செயல்களுக்காக அவனது பெண்மக்களை அடுத்தவனுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுப்பார் என்றால், அந்த கர்த்தரால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட பெண்னை கற்பழித்தவனின் மனைவியை யார் கற்பழிப்பார்?? அவனின் மனைவியை கெடுத்தவனின் மனைவியை யார் கெடுப்பார்? இப்படியே தொடர்ந்துக்கொண்டே போகும் கர்த்தரின் தண்டனை!? இது தான் கர்த்தர் கொடுக்கும் தண்டனையில் லட்சனமா? இதில் எந்தக் குற்றவாளியாவது தண்டனையை அனுபவிப்பார்களா? மாறாக அவரது மனைவிமார்கள் தான் தண்டனையை அனுபவிப்பார்கள். ஆனால் கர்த்தர் அப்படி ஒருவனுடைய தண்டனைக்கு பகரமாக மற்றொருவரை தண்டிக்கமாட்டார் என்று பைபிள் கூறுகின்றது. அந்த வசனங்களையும் இந்த கட்டுரையில் கேடிட்டுக்காட்டப்படுகின்றது. அதை சகோதரர் முழுமையாக படிக்காதது ஏனோ?

எனவே உங்கள் பைபிளில் உள்ள அசிங்கங்களை முதலில் அப்புறப்படுத்துங்கள். அல்லது அந்த அசிங்கங்களை உடைய பைபிளை இறைவேதம் என்று நம்பாதீர்கள். இதை விட்டால் வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் யோசிப்போம்.

abdul azeez said...

// அவரை பார்த்து நீர் என்ன செய்கிறீர்? ஏன் செய்கிறீர்? என்று கேட்கும் அளவுக்கு நாம் பெரியவர்கள் அல்ல! //

உண்மையில் இந்த சட்டங்களை கர்த்தர் தான் சொன்னார் என்றால்.அதில் மனிதக் கரங்கள் விளையாடவில்லை என்றால் !

உண்மையிலேயே நாம் கர்தரைவிட நிச்சயமாக பெரியவர்கள் தான். காரணம் பெண்களை ரொம்பவும் கீழ் தரமாக சித்தரித்து உள்ளார். பெண்களுக்கு முழுக்க முழுக்க துரோகத்தை விளைவித்து விட்டார். இந்த துரோகத்திற்கு அவரால் என்றைக்குமே ! நீதி செலுத்தமுடியாது.

கர்த்தரை பொறுத்தவரை பெண்களால் வணகப்படுவதற்கு தகுதியற்றவர்.

கர்த்தர் ஒரு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவதற்கு முன் படித்த மேதைகளையோ, அல்லது அறிஞர்களையோ ஏன் ? பக்கத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது.

// கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவதும் ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவதும் பிறன் மனைவியை தொடுபவன் தன மனைவியை இழப்பதும் போன்ற இந்த உலகில் நடக்கும் எல்லாமே இறைவனின் செயல்கள்தான்! //

இது உங்கள் சொந்தக் கருத்தை தான் சொல்லியுள்ளீர்க தவிர பைபிள் அடிப்படையில் எந்த வசனங்களையும் மேற்கோள் காட்டவில்லை. கர்த்தர் உங்களிடம் தனியாக வந்து சொல்லிவிட்டு போனாரா ?

அந்த சொந்தக் கருத்துக்கும் நல்ல விபரம் இல்லை வெறும் குருட்டு நம்பிக்கை தான் உங்களின் பிம்பங்கள்.

உங்களுக்கு தெரியுமா மகாத்மா காந்தி வெங்காயம் வெட்டுவதற்கு கூட கத்தியை எடுத்தது கிடையாதாம். ஆனால் அவரை துப்பாக்கியால் கொன்றான் கோட்ஷே !

ஒருத்தரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது. அந்த ஆளே ! வந்து விட்டால் உடனே சொல்லுவார்கள் உங்களுக்கு நூறு வயசு என்று. இதுவும் கூட குருட்டு சுலகச் சொல் தான். அப்படிச் சொல்லப்பட்டவர்கள் எனக்கு தெரிந்து நிறைய பேர் இறந்துவிட்டார்கள். இந்த சுலக சொல்லுக்கு ஒப்பானது தான் உங்களின் சொல்லும்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.

Anonymous said...

கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவதும் ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவதும் பிறன் மனைவியை தொடுபவன் தன மனைவியை இழப்பதும் போன்ற இந்த உலகில் நடக்கும் எல்லாமே இறைவனின் செயல்கள்தான்!

////இது உங்கள் சொந்தக் கருத்தை தான் சொல்லியுள்ளீர்க தவிர பைபிள் அடிப்படையில் எந்த வசனங்களையும் மேற்கோள் காட்டவில்லை. கர்த்தர் உங்களிடம் தனியாக வந்து சொல்லிவிட்டு போனாரா ?////

நண்பரே இது என் சொந்த வாக்கியம் அல்ல வேத வாக்கியத்தின்படியே விளக்கம் கொடுத்துள்ளேன்

ஒபதியா 1:15 நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.

எசேக்கியேல் 16:43 இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

தேவன் தவறு செய்தவருக்கு சரிக்கு சரிக்கட்டுபவர்! ஆனால் சிலருக்கு ஏன் தவறில்லாமல் தண்டனை கொடுக்கிறார் என்றோ சிலர் ஏன் தவறு செய்தும் தப்பிக்க விட்டுவிடுகிறார் என்றோ கேட்டால் என்னிடம் அதற்க்கு பதிலில்லை!.

அது தேவனுக்கும் அவரவர் மனசாட்சிக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். எல்லாவற்றையும் தேவன் நமக்கு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அற்ப்பராகிய நமக்கு அதிகம்! அதுபோல் அவர் இப்படித்தான் தண்டனை கொடுக்கவேண்டும் என்று அவருக்கு கட்டளையிடுவதும் என்றதல்ல!

Abdullah said...

அன்பு நன்பர் அனானிமஸ் அவர்களுக்கு,

//கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவதும் ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவதும் பிறன் மனைவியை தொடுபவன் தன மனைவியை இழப்பதும் போன்ற இந்த உலகில் நடக்கும் எல்லாமே இறைவனின் செயல்கள்தான்!//

உங்களின் இந்த கருத்திற்கு ஏற்கனவே பதில் அளித்திருந்தேன். இந்த கருத்து தவறானது என்பதுடன் அப்படி கூறுவது பைபிளுக்கே எதிரானது என்பதையும் விளக்கி இருந்தேன். அதற்கு உங்களால் மறுப்பு சொல்ல முடியாததுடன், நீங்களே அதற்கு பதில் அளிக்க முடியாது என்றும் ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். புகழனைத்தும் இறைவனுக்கே! உங்களது ஒப்புதல் பின்வருமாறு:

//தேவன் தவறு செய்தவருக்கு சரிக்கு சரிக்கட்டுபவர்! ஆனால் சிலருக்கு ஏன் தவறில்லாமல் தண்டனை கொடுக்கிறார் என்றோ சிலர் ஏன் தவறு செய்தும் தப்பிக்க விட்டுவிடுகிறார் என்றோ கேட்டால் என்னிடம் அதற்க்கு பதிலில்லை!.//

உங்களின் இந்த ஒப்புதலிருந்து உங்களது வாதம் தறவானது என்பது தெளிவாகிவிட்டது.

அடுத்து, நிங்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தீர்கள்:

//இது உங்கள் சொந்தக் கருத்தை தான் சொல்லியுள்ளீர்க தவிர பைபிள் அடிப்படையில் எந்த வசனங்களையும் மேற்கோள் காட்டவில்லை. கர்த்தர் உங்களிடம் தனியாக வந்து சொல்லிவிட்டு போனாரா ?//

இப்படி சகோதரர் Abdul Azeez கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்திருந்தீர்கள்:

நண்பரே இது என் சொந்த வாக்கியம் அல்ல வேத வாக்கியத்தின்படியே விளக்கம் கொடுத்துள்ளேன்

ஒபதியா 1:15 நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.

எசேக்கியேல் 16:43 இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.//

அன்பு நன்பர் அவர்களே! இந்த வசனஙகளில் எங்கே கர்த்தர் ஒருவனது செயலுக்காக அடுத்தவனை தண்டிப்பதாக கூறுகின்றார்? நீங்கள் எடுத்துக்காட்டிய வசனங்களின் ஒரு இடத்திலும் அவனுக்குப் பதில் அவனைச் சார்ந்த வேறு ஒருவருக்கு தண்டனைக் கொடுக்கப்படும் என்று கூறப்படவில்லையே? ஒருவேலை நீங்கள் சொல்லவரும் கருத்தைத்தான் இந்த வசனங்கள் சொல்லுகின்றது என்றால் இந்த வசனங்கள் மற்ற பைபிள் வசனங்களுக்கு முரனாகிவிடும். உதாரணமாக பின்வரும் வசனங்கள் உங்கள் கருத்தை மறுப்பதை பாருங்கள்:

பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான் எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். - எரேமியா 31:29-30

இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். - எசேக்கியேல் 18:19-20

சகோதரரே! பைபிளின் இந்த வசனங்களின் படி ஓன்று உங்கள் கருத்து தவறாக இருக்க வேண்டும். அல்லது பைபிள் முரண்பாடாக இருக்க வேண்டும். எந்த கருத்தை நீங்கள் சொல்லவருகின்றீர்கள்? பைபிளுக்கு ஆதரவாக நீங்கள் கருத்துச் சொல்ல அதுவே வேறு ஒரு பைபிள் வசனத்தை பொய்யாக்குகின்றதை பார்த்தீர்களா? மொத்த பைபிளுக்கும் இது தான் நிலைமை நன்பரே! காரணம் அது மனிதங்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது.

Abdullah said...

அடுத்து பின்வருமாறு குறிப்பிட்டிருந்தீர்கள்:

//அது தேவனுக்கும் அவரவர் மனசாட்சிக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். எல்லாவற்றையும் தேவன் நமக்கு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அற்ப்பராகிய நமக்கு அதிகம்! அதுபோல் அவர் இப்படித்தான் தண்டனை கொடுக்கவேண்டும் என்று அவருக்கு கட்டளையிடுவதும் என்றதல்ல!//

நன்பரே! உங்கள் கருத்து தவறு என்று நிரூபனமான பிறகும் பிடிவாதம் பிடிப்பது அழகல்ல. நீங்கள் பைபிளின் தவறான வசனங்களை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக பல விளக்கங்கள் கொடுக்கின்றீர்கள். ஆனால் அவை அனைத்தும் உங்களுக்கு எதிராக – உங்களது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அமைந்து விடுகின்றது. அதற்காக 'இப்படி நாம் தேவனைக் கேள்விக் கேட்கக்கூடாது – முடியாது' என்று சொல்லிவிடுகின்றீர்கள்.

நாங்கள் எப்போது தேவனை கேள்வி கேட்டோம்? தேவனின் பெயரால் கற்பனையாக எழுதப்பட்டதைத்தான் இங்கே சகோதரர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. நிங்கள் தேவனுடைய வார்த்தை என்று தவறாக விளங்கியதை சுட்டிக்காட்டப்படுகின்றது.

சத்தியத்தை உணருங்கள் நன்பரே! உங்களது கருத்துக்களை எழுதுங்கள். ஒருவேலை முஸ்லீம்களாகிய நாங்கள் தவறிழைத்திருந்தால் கண்டிப்பாக திருத்திக்கொள்கின்றோம். அதே சமயம் சத்தியம் இது தான் என்று தெரிந்த பின்னரும் பிடிவாதமாக இருப்பது உங்களை பரலோக இரஜ்யதில் சேர்பதற்கு பதிலாக அக்கினிக் கடலாகிய நரகத்தில் தால் கொண்டு சேர்க்கும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி!

abdul azeez said...

// நண்பரே இது என் சொந்த வாக்கியம் அல்ல வேத வாக்கியத்தின்படியே விளக்கம் கொடுத்துள்ளேன்

ஒபதியா 1:15 நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.//

சகோதரர் இப்ப தான் நீங்கள் பைபிளின் வசனங்களை பதிந்துள்ளீர்கள்.

கீழ்க் கானும் வார்த்தைகள் பைபிள் வசனங்கள் அல்ல அதாவது நீங்கள் ஏற்க்கனவே பதிந்த

கத்தியை எடுத்தவன் கத்தியால் மடிவதும் ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவதும் பிறன் மனைவியை தொடுபவன் தன மனைவியை இழப்பதும் போன்ற இந்த உலகில் நடக்கும் எல்லாமே இறைவனின் செயல்கள்தான்!


மேலும் ஒபாதியா நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.//

ஒருத்தன் ஒரு தவறை செய்தால் அது போல் அவனுக்கு செய்யப்படும், மேலும் அந்த பாவத்தின் செய்கையினால் அவன் தலை மேல்தான் விழுமே ! அல்லாமல் அவன் மனைவி மக்கள் மேல் விழும் என்று இல்லையே !

ஆனால் இன்னொரு வசனம் மூலம் ஓரவஞ்சனை செய்கிறார். அது தான் தாவீதின் பெண் மக்களுக்கு செய்யும் அப்பட்டமான வஞ்சனைகள் அதன் பிறகு அந்த கர்த்தர் செய்யும் பெண் புரோக்கர் வேலை தொடர்ந்ததா ? இல்லையா ? என்று அவரிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இப்படி புரோக்கர் சட்டத்தை அளிப்பதாக தேவன் நினைத்திருந்தால் பிறகு ஏன் ? ஏற்க்கனவே பைபிளில் ஒருவன் பிறன் மனைவியோட விபசாரம் செய்தால் பிறன் மனைவியோட விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யக் கடவர்கள் என்று சொல்லனும்.

ஆண்டிக்கு ஒரு சட்டம் அரசனுக்கு ஒரு சட்டமா ?

இல்லை தாவீது ஒரு அரசர் அவர் நம்மளை அட்ரெஸ்ஸ் இல்லாமல் ஆக்கிவிடுவார் என்ற பயமா ?

அல்லது கர்த்தருக்கு சுய நினைவு இல்லாத காலமும் இருந்ததா ?

மா.சலாம்.
அப்துல் அசீஸ்.

abdul azeez said...

அவர் கன்மலை அவர் கிரியை உத்தமமானது அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன் அவர் நீதியும் செம்மையுமானவர். - உபாகமம் 32:4

தாவீதை தப்ப விட்டுவிட்டு அவரின் மனைவியை ஊரார் முன் விபசாரம் செய்ய வைப்பது நியாயக் கேடு இல்லையா ? அல்லது.தனக்கு என்று ஒரு முரண்பாடான நியாயத்தை வகுத்துக் கொண்டாரா ?

மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? - யோபு 4:17

அப்படி கர்த்தராக நினைத்துக் கொண்டால் நாம் என்ன செய்ய முடியும். அவரை விட நீதிமான்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து. மறைந்தும் விட்டார்கள்

தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? - யோபு 8:3

இவ்வளவு பித்தலாட்டமும் செய்துவிட்டு புரட்டுவாரோ என்று தனக்குள் கேள்வி வேற கேட்டுக் கொள்கிறார்.பற்றாத குறைக்கு அவன் இவனைப் பெற்றான் இவன் அவனைப் பெற்றான் என்று. வரலாறு வேற போதிக்கின்றார்.

எவன் எவனைப் பெற்றால் தான் என்ன பெறவில்லை என்றால் நமக்கென்ன ? அதெல்லாம் இவருக்கு தேவையா அதனால் இப்ப உள்ள நமக்கு ஏதாவதொரு பிரயோஜனம் இருக்கா ஒன்றும் இல்லை வெறும் பேப்பரும், பேனா மையும் விரயமானது தான் மிச்சம்.

கணக்கு வழக்குகள் தேவன் சமர்ப்பிக்கும் அழகே தனி தான் எந்தக் கம்பனியிலாவது. கர்த்தர் கேஷியராக வேலைச் செய்தால் இழுத்து மூட வேண்டியது தான் கம்பனியை.

பிக்டவாயின் புத்திரர்கள் எத்தனைபேர்?

பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர் - நெகேமியா 7:19

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்ரா 2:14ல், 'பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?


கணக்கு பாடத்திற்கு மட்டுமாவது கர்த்தர் பள்ளிக்கூடம் போகலாமே !

தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது அவர்கள் ஓட்டம் பொல்லாதது. அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. - எரேமியா 23:10

இவர் தான் ஆரம்பித்து விட்டார் அப்புறம் அநியாயம் என்று ஓலமிடுகிறார். ஏதாவதொரு நிலைப்பாடில் இருக்கவேண்டும். கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உங்கள் நம்பிக்கையை தரக் குறைவாக பதிகிறேன் என்று நினைக்கவேண்டாம் அனைத்தும் நீங்கள் எதை புனித வேதம் என்று நம்புகிறீர்களோ ! அந்த வேத வசனங்கள் ஆதாரத்தோடு தான் பதிகிறேன்

உலகத்தையே படைத்த இறைவனின் வார்த்தையில் இப்படிப் பட்ட தவறுகள் இருக்குமா ? இப்படி பட்ட தவறுள்ளவர் தான் நம்மை எல்லாம் படைத்தாரா ? என்றெல்லாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
மா.சலாம்.
அப்துல் அசீஸ்.

Abdullah said...

சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்களுக்கு,

தங்களுடைய உணர்வு புரிகின்றது. சத்தியத்தை எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்! அதே சமயம் நாம் சொல்லவரும் உன்மையை சற்று மென்மையாக சொன்னால் அது சம்பந்தபட்டவர்களுக்கு சரியான முறையில் போய்ச் சேரும் என்பது எனது கருத்து.

நாம் சொல்லவரும் செய்தியை காட்டமாக சொன்னால் அதைக் கேட்பவர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தலாம். அல்லது முஸ்லீம்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒரு வித தவறான எண்ணங்களும் ஏற்படலாம். அது குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும்.

சில நேரங்களில் நாம் சில காட்டமான கருத்துக்களை கூறும் பொழுது அந்த கருத்தில் முழு சத்தியமும் அடங்கி இருந்தாலும் அதை படிப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படுவதால் அந்த நியாயமான கருத்து சேரவேண்டியவருக்கு முறையான முறையில் சேராமல் போய்விடவும் வாய்ப்பு அதிகமதிகம் உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

அனைத்து சகோதரர்களுக்கும் சத்திய இஸ்லாத்தை எடுத்துச்சொல்லும் அதே வேலையில் அவர்களிடம் எந்த அளவுக்கு மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மென்மையையும், நளினத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

இதைத் தான் இஸ்லாமும் நமக்கு கற்றுத் தருகின்றது. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:159)

இதே போன்று அல்லாஹ் மற்றோர் இடத்தில் மூஸா (அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்களிடமும் ஃபிர்அவுனிடம் எப்படி சத்தியத்தை மென்மையாக எடுத்துச்சொல்லவேண்டும் என்று உபதேசிப்பதைப் பாருங்கள்:

''நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள், அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம், அல்லது அச்சம் கொள்ளலாம்.'' (அல்குர்ஆன் 20:44)

எப்படிப்பட்ட அற்புதமான உபதேசத்தை நமக்குத் திருக்குர்ஆன் தருகின்றது என்பதை கவனித்தீர்களா? எனவே உங்களது நியாயமான கருத்தை சற்று மென்மையாக சொன்னால் அது அனைவருக்கும் பயனளிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

நான் தவறாக ஏதேனும் கூறி இருந்தால் அல்லாஹ்வுக்காக மண்ணித்துக்கொள்ளுங்கள். சரியாக இருந்தால் அதை ஏற்று செயல் படுத்துவதுடன் எனது இம்மை மற்றும் மறுமை வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் சத்தியத்தின் படி தொடர்ந்து நடைபோடவும், அதில் நிலைத்து நிற்கவும் அருள் புரிவானாக! நம் அனைவருக்கும் இம்மை மற்றும் மறுமையில் வெற்றியை நல்குவானாக!

abdul azeez said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் அப்துல்லா மற்றும் இந்த இணைய தல சகோதரர் மற்றும் கிறிஸ்துவ சகோதரர்கள் மற்றும் அணைத்து முஸ்லிம்களுக்கும்.

// நான் தவறாக ஏதேனும் கூறி இருந்தால் அல்லாஹ்வுக்காக மண்ணித்துக்கொள்ளுங்கள். //

மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லையே சகோதரரே. ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு எடுத்து சொல்வதில் தப்பில்லைஎடுத்து கூறியதற்கு நன்றிகள் பல உங்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.
மா. சலாம்.
அப்துல் அசீஸ்.

Abdullah said...

அன்புச் சகோதரர் அப்துல் அசீஸ் அவர்களுக்கு,

தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

தாங்கள் தங்களுடைய நியாயமான கருத்துக்களையும் கிறிஸ்தவர்களின் சிந்தனையை தட்டி எழுப்பும் கருத்துக்களையும் தொடர்ந்து பின்னூட்டமிட வேண்டும். அதில் எந்த வித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அதே சமயம் நான் எனது முந்தைய பின்னூட்டத்தில் குற்பிட்பிட்டது போல், அல்லாஹ் நமக்கு காட்டித்தரும் அந்த நேரிய வழியான 'நளினமான முறையில் நமது மார்க்கத்தை எடுத்துச்சொல்லவேண்டும்' என்ற வழிமுறையை கையாண்டு தொடர்ந்து பின்னூட்டமிடுவீர்கள் என்று நம்புகின்றேன்.


நன்றி!

அப்துல்லாஹ்

abdul azeez said...

அன்பு மிக்க சகோதரர் அப்துல்லாஹ்வே !

தங்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இத்தளத்தில் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு சத்தியத்தின் வழி இன்னது. என்று படைத்த வல்லோனுக்காக விளக்குவேன். அதில் சுணக்கம் என்பது. இல்லை ஆனால் ஹிதாயத் அல்லாஹ்வின் வசம்.

நளினம் முறைகளை கையாண்டு. இன்ஷா அல்லாஹ் விளக்கி எனது பின்னூட்டங்கள் தொடரும். உங்கள் நம்பிக்கைக்கு வெற்றி.

மா.சலாம்.
அப்துல் அசீஸ்.