முரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடு 5:
பைபிளில் அகசியா என்பவன் அரசாண்டதாக ஒரு சம்பவம் சொல்லப்படுகின்றது. அதை இரண்டு இடங்களில் பைபிளில் சொல்லப்படுகின்றது. அவன் அரசனாகும் போது அவனுக்கு வயது எத்தனை என்பதில் பைபிள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
ஆகசியா ராஜவாகிறபோது அவனுக்கு 22 வயதாக இருந்தது என்று 2 இராஜாக்கள் 8:26ம் வசனம் குறிப்பிடுகின்றது.
அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான் ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள். - 2 இராஜாக்கள் 8:26
இல்லை இல்லை அவன் ராஜாவாகும் போது அவனுக்கு 42 வயதாக இருந்தது என்று 2 நாளாகமம் 22:2 ம் வசனத்தில் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அகசியா தனது எந்த வயதில் அரசனானான்? அவனது இருபத்தி இரண்டாவது வயதிலா? அல்லது நாற்பத்தி இரண்டாவது வயதிலா? பைபிளின் எந்த புத்தகம் சொல்வது சொல்வது சரி? இவையெல்லாம் கடவுளால் அருளப்பட்டதாக இருந்தால் எப்படி இந்த முரண்பாடு வரும்?
இப்படி கேட்டதும் உங்களில் தமிழ் பைபிளை உபயோகிக்கும் பலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். நாம் இங்கே குறிப்பிடுவது போன்று எங்கே முரண்பாடு வருகின்றது? அதாவது 2 இராஜாக்கள் 8:26ம் வசனத்திலும், 2 நாளாகமம் 22:2 ம் வசனத்திலும் அவன் இராஜாவாகிற போது 22 வயது என்று தானே இரண்டு இடங்களிலும் வருகின்றது என்பதே அந்த சந்தேகம். ஆனால், தமிழ் பைபிளில் அப்படி இரண்டு இடங்களிலும் 22 வயது என்றே போடப்பட்டு ஒரு பெரும் மொழிப்பெயர்ப்பு மோசடி நடந்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் இந்த இரண்டு வசனங்களும் தெளிவான முரண்பாடு என்று தெரிந்தும் அந்த முரண்பாட்டை மறைப்பதற்காக - அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக - வேண்டும் என்றே இரண்டு இடங்களிலும் அகசியா இராஜாவாகிரபோது 22 வயதுதான் இருந்தது என்று மொழிப்பெயர்த்து வெளியிட்டுள்ளனர். ஆனால் பல்வேறு விதமான ஆங்கில பைபிள்களில் இந்த முரண்பாடு தெளிவாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
2 நாளாகமம் 22:2ம் வசனம் தமிழ் பைபிளில் எப்படி இருக்கின்றது தெரியுமா?
அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான் ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.
ஆனால் இதற்கு மாற்றமாக ஆங்கில பைபிள்களின் பல்வேறு மொழிப்பெயர்ப்புகளில் இந்த 2 நாளாகமம் 22:2ம் வசனம் பின்வருமாறு இருக்கின்றது:
Forty and two years old was Ahaziah when he began to reign, and he reigned one year in Jerusalem. (2 Chronicles 22:2) - King James version
Forty and two years old was Ahaziah when he began to reign, and he reigned one year in Jerusalem. (2 Chronicles 22:2) American King James Version
Forty and two years old was Ahaziah when he began to reign; and he reigned one year in Jerusalem: American Standard Version
Ochozias was forty-two years old when he began to reign, and he reigned one year in Jerusalem - douay - Rheims Bible
இதேபோன்று இன்னும் பல ஆங்கில மொழிப்பெயர்புகளான English Standard version, webster's bible Translation, World English bible, etc.,
இப்படி தொடர்ந்துக்கொண்டே போகின்றது. எனவே இந்த இரு வசனங்களும் தெளிவான முரண்பாடு என்றுத் தெரிந்தும் வேண்டும் என்றே தமிழ் பைபிளில் மொழிப்பெயர்ப்பு மோசடி செய்பட்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க.
முரண்பாடு 6:
யோயாகீன் என்பவன் எருசலேமை அரசான்டாதாக பைபிளில் ஒரு சம்பவம் வருகின்றது. அவன் எத்தனை வயதில் அரசனானான் என்பதில் கர்த்தரால் அருளப்பட்டதாகச் (?) சொல்லப்படும் பைபிளின் இரண்டு ஆகாமங்கள் இரண்டு விதமாக சொல்லப்படுகின்றது.
அவனது பதினெட்டாவது வயதில் அரசனானான் என்று 2 இராஜாக்கள் 24:8 லும் இல்லை இல்லை அவர் எட்டு வயதில் தான் அரசனானார் என்று 2 நாளாகமம் 36:9லும் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அவனது 8ம் வயதில் அரசனானா? அல்லது 18ம் வயதில் அரசானானா?
முரண்பாடு 7:
இந்த யோயாகீன் எத்தனை மாதம் எருசலேமில் அரசாண்டான்?
அவன் 3 மாதமும் பத்து நாளும் அரசாண்டதாக 2 நாளாகமம் 2:36லும், இதற்கு நேர் முரணாக 2 இராஜாக்கள் 24:8ல் மூன்று மாதம் மட்டும் அரசாண்டதாக என்று வருகின்றது. இதில் எது சரி? அவன் அரசாண்டது எத்தனை நாட்கள்?
முரண்பாடு 8:
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரை முறியடித்த தாவீது, அவனுடைய படையைச் சேர்ந்த எத்தனை குதிரை வீரர்களை துண்டாடிப்போட்டான்?
அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான். - 1 நாளாகமம் 18:4
ஆனால் இதற்கு மாற்றமாக 1 சாமுவேல் 8:4 பின்வருமாரு குறிப்பிடுகின்றது:
அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
தாவீது துண்டாடிப்போட்ட குதிரை வீரர்கள் எத்தனைபேர்? 7000 குதிரைவீரர்களா? அல்லது 1700 குதிரை வீரர்களா? பைபிளின் எந்த புத்தகம் சொல்வது சரி?
முரண்பாடு 9:
சாலமோனுக்கு எத்தனை குதிரை லாயங்கள் இருந்தன?
சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தன, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள் - 2 நாளாகமம் 9:25
ஆனால் இதற்கு நேர் முரணாக சாலமோனுக்கு நாற்பதாயிரம் குதிரை லாயங்கள் இருந்தாதாக 1 இராஜாக்கள் 4: 26ல் சொல்லப்படுகின்றது.
இங்கேயும் தமிழ் பைபிளை உபயோகிக்கும் வசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது நீங்கள் குறிப்பிடுவது போன்று இந்த இரண்டு வசனங்களிலும் எந்த முரண்பாடும் இல்லையே என்பது தான் அந்த சந்தேகம். காரணம் இந்த இரண்டு வசனங்களிலும் தமிழ் பைபிளில் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு இந்த இரண்டு வசனங்களும் எந்த ஒரு முரண்பாடும் இல்லாதது போன்ற ஒருதோற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு பெரும் மொழிப்பெயர்ப்பு மோசடி நடைபெற்றுள்ளது. ஆனால் ஆங்கில பைபிள்களில் இந்த இரு வசனங்களும் நேர் முரணான - முரண்பாடாக அமைந்துள்ளதை நாம் கவனத்தில கொள்ள வேண்டும்.
தமிழ் பைபிளில் 1 இராஜாக்கள் 4:26ல் பின்வருமாறு வசனத்தை திரித்து மோசடி செய்யப்பட்டுள்ளது:
சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.
ஆனால் ஆங்கில பைபிள்களிலே இதற்கு மாற்றமாக 40,000 குதிரைலாயங்கள் (forty thousand stalls of horses) என்று போடப்பட்டுள்ளதை கவனியுங்கள்:
And Solomon had forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen. (1 Kings 4:26) - King James Version
Solomon had 40,000 stalls of horses for his chariots, and 12,000 horsemen. - New American Standard bible
Solomon had stalls for 40,000 chariot horses. He also had 12,000 chariot soldiers. - God's Word @ Translation 1995
இதுபோன்று மேலும், American King James version, bible in Basic English, Douay - Rheims bible, Darby bible Translation, ERV, Etc.,
இப்படி எண்ணற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்புகளில் நாற்பதாயிரம் என்று வந்திருக்க தமிழ் பைபிளில் மட்டும் நான்காயிரம் என்று போடப்பட்டதன் மர்மம் என்ன? முரண்பாட்டை மறைக்கவேண்டும் என்ற உள்நோக்கம் தானே காரணம்? சிலர் 40,000 என்று போடுவதற்கு பதிலாக ஒரு பூஜ்யம் தமிழ் பைபிளில் விடுபட்டு போயிருக்கலாம் என்று கூட சப்பைக்கட்டு கட்ட நினைக்கலாம். ஆனால் அதற்கு இங்கே வழி கிடையாது. காரணம், நான்காயிரம் என்று (எண்ணில் அல்ல) எழுதில் போடப்பட்டுள்ளது. எனவே இங்கே தமிழ் பைபிளில் ஒருபெரும் மோசடி நடந்துள்ளது என்பது தான் மறுக்க முடியாத உன்மை.
முரண்பாடு 10:
சாலமோன் கர்த்தருக்காக ஒரு அலயமும், தன் இராஜ்யத்திற்காக ஒரு அரன்மனையும் கட்ட முடிவெடுத்தானாம். அதை கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வேலையாட்களை நிர்வாகிப்பதற்காக தலைவர்களையும் ஏற்படுத்தினானாம். அப்படி ஏற்படுத்தப்பட்ட தலைவர்கள் மொத்தம் எத்தனைப் பேர்?
இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முன்நூறுபேரும் இருந்தார்கள். - 1 இராஜாக்கள் 5:16
இங்கே வேலையாட்களை நிர்வாகிப்பதற்காக நிர்னயிக்கப்பட்ட தலைவர்கள் மொத்தம் 3300 பேர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணான 2 நாளாகமம் 2:2 மற்றும் 18ம் வசனங்களில் அவர்களை நிர்வாகிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் 3600 பேர் என்கிறது.
சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான். - 2 நாளாகமம் 2:2,18
இவற்றில் எது சரி? அனைவரையும் நிர்வாகிப்பதற்காக தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மொத்தம் எத்தனைப் பேர்?
இப்படி பைபிளில் முரண்பாடுகள் தொடர்ந்துக்கொண்டே போகின்றது எனதருமை கிறிஸ்தவர்களே! ஆனால் நீங்களோ இவை அனைத்தும் கர்த்தரால் உந்தப்பட்டு பரிசுத்த மனிதர்களால் எழுதப்பட்டது என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். பைபிளின் ஒவ்வொறு வசனத்தையும் நிங்கள் புனிதமானதாக கருதிக்கொண்டிணருக்கின்றீர்கள். ஆனால் உன்மையில் அந்த புனித வசனங்களின் உன்மை நிலையை பார்த்தீர்களா? நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது போன்று உன்மையிலேயே கர்த்தரால் தான் இந் வசனங்களெல்லாம் அருளப் பெற்றதென்றால் எப்படி இப்படிப்பட்ட முரண்பாடுகள் வரும்? சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.
1 comments:
It is not new things addition and deletion in Bible. Especially penthocosts christians are doing such a more dirty things. Allah has already answered to this people in Qua'ran 2:18. Really the service of authors and others should be appriciated. Wassalam
Post a Comment