அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Tuesday, February 10, 2009

யோனாவின் அடையாளம் என்றால் என்ன?

கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை
.
.
மறைந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஒருமுறை வாடிகன் மைதானத்தில் ஆற்றிய உறையில் இவ்வாறு சொன்னார். IF THERE IS NO CRUCIFIXION, NO CHRISTIANITY. ஏசுவின் சிலுவை மரணம் மட்டும் இல்லையென்றால் கிருஸ்தவமே இல்லை என்றார். உண்மைதான், ஏசு உலக மக்களின் பாவங்களைக் கழுவுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற கற்பனையில்தான் கிருஸ்தவ மதமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அவதூறு என இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்-குர்ஆன் மிகத்தெளிவாகவே எச்சரிக்கிறது.

இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இவ் விஷயத்தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. அல்-குர்ஆன் (4 : 157)

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். அல்-குர்ஆன் (4 : 158)


குர்ஆனுடைய உண்மை விளக்கத்தின்படி சுருங்கக்கூறினால் THERE WAS NO CRUCIFIXION, SO NO CHRISTIANITY அதாவது ஏசு சிலுவையில் மரணிக்கவில்லை, கிருஸ்தவம் என்பதும் இல்லை. இதை முஸ்லிம்களாகிய நாம் குர்ஆனிலிருந்து விளக்கினால் கிருஸ்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா?. எனவேதான் ஏசு சிலுவையில் மரணித்தார் என்பது உண்மையல்ல கற்பனை, கிருஸ்தவமே ஒரு மாயை என்பதை பைபிளிலிருந்தே சுட்டிக்காட்டுகிறோம் - இன்ஷா அல்லாஹ்.

கிருஸ்தவ நண்பர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆக்கத்தை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் not to take things for granted.' - but "PROVE ALL THINGS!" (1 Thessalonians 5:21) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். (தெசலோனிக்கேயர் 5:21) என்று பைபிள் கூறுகிறது. எனவே பைபிளை இறைவேதமாக நம்பும் ஒவ்வொரு கிருஸ்தவ அன்பர்களும் எங்கள் மீது கோபப்படாமல் சங்கைக்குரிய ஏசுபிரான் சிலுவையில் உயிர்நீத்தாரா? கிருத்தவ மதம் உண்மையா? என்ற சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
.

யோனாவின் அற்புதமே ஏசுவின் அற்புதம்.
.
ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் தீனுஸ் இஸ்லாம் என்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்களாகிய யூதர்களிடம் பிரச்சாரம் செய்தபோது யூதர்கள் தொடர்ந்து மறுத்தனர். நபி ஏசு (அலை) அவர்கள் இறைகட்டளைபடி பல அற்புதங்களை செய்துகாட்டியும் அந்த யூதர்கள் நபி ஏசு (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ஒரு அத்தாட்சியை, அற்புதத்தை நபி ஏசு (அலை) அவர்களிடம் கேட்டனர். இதை மத்தேயு தான் எழுதிய சுவிசேஷத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். (மத்தேயு 12:38)

இதைக் கேட்ட ஏசு அவர்கள் கோபத்துடன் ஒரு பதிலைக் கூறியதாக பைபில் கூறுகிறது. அது என்ன பதில் கீழே பார்வையிடுங்கள்.

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா (Three days and Three nights) இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40).

இதில் மூன்று விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும்.

1) விபச்சார சந்ததியார் என்று ஏசு கோபப்படும் அளவிற்கு அந்த யூதர்கள் மோசமான முறையில் நடந்திருக்கவேண்டும். (இன்று இணையங்களில் இஸ்லாத்தைத் தூற்றுபவர்களைக் கூட நாம் இவ்வாறு பழிக்கவில்லை). காரணம் யூதர்கள் இறைச் செய்தியை ஏற்றுக் கொள்ளாமல் இறைத்தூதர்களைப் புறக்கணித்ததாலும், இறைத்தூதர்களை கொலை செய்ததாலும், இறை வேதங்களில் தங்கள் சுய கருத்துக்களை புகுத்தி அதில் கலப்படம் செய்ததினாலேயே ஏசுவால் இவ்வாறு பழிக்கப்பட்டனர். (அன்று ஏசுவால் பழிக்கப்பட்ட யூதர்கள் இன்று கிருஸ்தவர்களுக்கு நெருங்கிய கூட்டாளிகள் என்பது வேறுவிஷயம்).

2) ஏசுவிடம் யூதர்கள் அத்தாட்சியைக் கேட்டபோது நான் பிறவிக்குருடை போக்கவில்லையா? தண்ணீரை மதுவாக மாற்றிக்காட்டவில்லையா? (யோவான் 2:9) என்றெல்லாம் அவர்களிடம் வினா எழுப்பவில்லை. மாறாக யோனாவின் அத்தாட்சி மட்டுமே என்னுடைய அற்புதம்/அத்தாட்சி என்று ஏசு ஒரே வரியில் பதில் சொல்கிறார். THERE SHALL NO SIGN (no miracle) BE GIVEN TO IT, BUT THE SIGN (miracle) OF THE PROPHET JONAS ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை.

3) யோனாவின் அத்தாட்சியே என்னுடைய அத்தாட்சி என்ற இந்த வார்த்தையை வைத்துக்கொண்டுதான், ஏசு உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர் நீத்தார், பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மூன்று நாட்கள் மரணத்திற்குப் பிறகு அதிசய உயிர்த்தெழுந்ததின் காரணமாக ஏசு யோனாவைப் போன்றவர் ஆகிறார் என்று ஏசுவின் சிலுவை மரணத்தை கிருத்துவர்கள் நிறுவுகின்றனர். ஏசு யோனாவைப் போன்றவரா? ஏசு சிலுவையில் உயர்நீத்தாரா? என்பதை பார்ப்போம்.
.
அது என்ன யோனாவின் அற்புதம்?
.
யோனா என்ற நபி யூனுஸ் (அலை) அவர்களின் அத்தாட்சியை பற்றி விளங்குவதற்கு முன்னால். பைபிள் கூறும் நபி யோனா (அலை)அவர்களின் சரித்திரத்தை நினைவு கூறவேண்டும். இச்சரித்திரங்கள் ஒவ்வொரு முஸ்லிம், கிருஸ்தவ மற்றும் யூதக்குழந்தைகளுக்கும் தெரியும். அதுதான் JONAH ON THE WHALE மீன் வயிற்றில் தீர்க்கதரிசி யோனா.

இறைவன் நபி யோனா (அலை) அவர்களை நினேவா (அல்லது நினிவா) நகரை நோக்கி இறைப்பிரச்சாரப் பணி செய்யுமாறும், நினேவா நகர் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாரும் கட்டளையிட்டான். ஆனால் நபி யோனா (அலை)அவர்களோ, இறைகட்டளைபடி நினேவா நகருக்கு செல்லாமல் ஜாப்பா என்ற ஊருக்கு படகில் பயணம் சென்றார்கள்.

அவ்வாறு நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது கடல் கொந்தளிக்கின்றது. அன்றைய மீனவர்களின் மூடநம்பிக்கைபடி இறைவனுக்கு குற்றமிழைத்த நிலையில் எவரும் கடல்பிரயாணம் செய்தால் கடல் கொந்தளிக்கும் என்று நம்பினர். அப்படி கடல் கொந்தளிக்கும் போது அந்த குற்றவாளியை கடலில் வீசி எறியவில்லையெனில் கடல் அலையின் சீற்றத்தால் அப்படகில் பிரயாணம் செய்யும் அனைவரும் அழிவர் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும். மக்களோடு மக்களாக ஜாப்பா நோக்கி நபி யோனா (அலை)அவர்கள் பிரயாணம் செய்த அந்த நாளிலும் அவ்வாறு கடல் கொந்தளித்தது. எனவே படகிலிருந்த அம்மீனவர்கள் குற்றமிழைத்தவரை கண்டுபிடிக்கும் முறையாக அவர்கள் நம்பியிருந்த (LOT SYSTEM ) சீட்டுக்குலுக்கள் முறைப்படி (அல்லது பகடைமுறைப்படி) சீட்டுப்போடவே, நபி யோனா (அலை)அவர்களின் பெயரே வந்தது.
அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள். யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. (யோனா 1:7)

அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும் என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். (யோனா 1:12)

நபி யோனா (அலை)அவர்களும் தானே குற்றவாளி என்றும், இறைகட்டளைக்கு மாறுசெய்துவிட்டேன் என்றும் ஒப்புக்கொண்டு நடுக்கடலில் குதிக்க தயாரானார்கள். அவ்வாறு நடுக்கடலில் போடப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை ஒரு மிகப்பெரும் மீன் விழுங்கியது. மூன்று நாட்கள் மீன் வயிற்றில் உயிரோடு தங்கிய நபி யோனா (அலை)அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடினார்கள். பின்னர் அந்த திமிங்கலம் மீன் நபி யோனா (அலை)அவர்களை கடற்கரையில் உயிரோடு உமிழ்ந்தது. இதுதான் நபி யோனா (அலை)அவர்களின் மூன்றுநாட்கள் மீன்வயிற்றில் உயிரோடு தங்கிய அற்புத சரித்திரம்.

யோன உயிரோடிருந்தார்களா? மரணித்தார்களா?

இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் நபி யோனா (அலை)அவர்கள் தங்களின் குற்றத்தை தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டபடியால் மீனவர்கள் அவர்களின் கைகால்களை கட்டி துன்புறுத்தி குற்றுயிராக்கி கடலில் வீசி எறியவில்லை. மாறாக எந்த நிலையில் படகில் ஏறினார்களோ அதே உடல் நலத்துடனே கடலில் எறிப்படுகிறார்கள். அவ்வாறு கடலில் போடப்படும் போது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? - உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.

அவ்வாறு வீசப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை அந்த மீன் முழுமையாக விழுங்கியது. மீனுக்கு ஒரு இரை கிடைத்தால் பற்களால் கடித்து குதறி விழுங்கும். அம்மீன் நபி யோனா (அலை)அவர்களை அவ்வாறு செய்யவில்லை. காரணம் அவ்வாறு கடித்து குதறி நபி யோனா (அலை)அவர்கள் மரணித்திருந்தால் அதற்குப் பெயர் அற்புதமல்ல. எனவே அம்மீன் இறைக் கட்டளைபடி நபி யோனா (அலை)அவர்களை முழுவதுமாக விழுங்கியது. இப்போது நாம் கேட்கிறோம், இவ்வாறு அந்த மீன் விழுங்கும் நிலையில் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? - உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.

"JONAH PRAYED UNTO THE LORD HIS GOD OUT OF THE FISH'S BELLY?" (Jonah 2:1). அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: (யோனா 2:1). இவ்வாறு மீனால் விழுங்கப்பட்ட நபி யோனா (அலை)அவர்கள் மூன்று நாட்கள் மீன் வயிற்றில் தங்கினார்கள். இறைவனிடம் பிரார்த்தனையும் செய்ததாக மேற்கண்ட பைபிள் வசனம் கூறுகிறது. மரணமடைந்து விட்ட ஒரு மனிதன், இறைவனிடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது தன்னுடைய குற்றத்தை வருந்தி அழுது புலம்பத்தான் இயலுமா? இப்போது சொல்லுங்கள் மீன் வயிற்றில் மூன்று நாட்கள் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? -உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.

மூன்றாம் நாள் அந்த மீன் இறைக்கட்டளை படி நபி யோனா (அலை) அவர்களை கடற்கரையில் உமிழ்ந்தது. அவ்வாறு உமிழ்ந்தபோது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? - உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.

இவ்வாறு நபி யோனா (அலை) அவர் அந்த மூன்னு நாட்களும் Alive! Alive!! Alive!!! உயிரோடு இருந்தார்கள்! உயிரோடு இருந்தார்கள்!! உயிரோடு இருந்தார்கள்!!! என்பது இவ்வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தெரியும்.

யோனாவைப் போல் ஏசு இல்லை

கிருஸ்தவ நண்பர்களே இப்போது சற்று சிந்தியுங்கள் "AS JONAH WAS ..... SO SHALL THE SON OF MAN BE" LIKE JONAH யோனா இருந்தததைப் போல்...மனுஷகுமாரனாகிய நானும் அதாவது யோனாவைப் போல என்று ஏசு கூறியதாக பைபிள் கூறுகிறது.
  1. தீர்க்கதரிசி யோனா அவர்கள் படகிலிருந்து தூக்கி கடலில் இறக்கப்பட்டபோது அவர் உயிரோடு இருந்தார்.
  2. மீன் யோனாவை விழுங்கியயோதும் அவர் உயிரோடே இருந்தார்.
  3. மூன்று நாட்கள் யோனா மீன் வயிற்றில் இருந்தபோதும் அவர் உயிருடன்தான் இருந்தார்.
  4. மீன் அவரை கடற்கரையில் உமிழ்ந்த போதும் அவர் உயிருடன்தான் இருந்தார்.
ஆனால் கிருஸ்தவர்களின் நம்பிக்கையைப் பாருங்கள். சங்கைக்குரிய தீர்க்கதரிசி ஏசுவை யூதர்கள் பிடித்து சிலுவையில் அறைந்ததாகவும், அவர் உலக மக்களின் பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் உயிர்நீத்தாகவும் கிருஸ்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மரணித்த ஏசு மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிருஸ்தவர்களின் நம்பிக்கை.

தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் உயிருடன் இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. யோனாவைப் போலத்தான் ஏசுவும் என்றும் கூறுகிறது. ஆனால் தீர்க்கதரிசி ஏசுவோ 3 நாட்கள் மரணித்துவிட்டதாக கிருஸ்தவர்கள் சொல்கிறார்கள். இந்த முரண்பாட்டின் மூலம் ஏசு, யோனாவைப் போல் அல்ல என்று நிரூபனமாகிவிட்டது. ஏசு, யோனாவைப் போல இல்லை என்று ஒப்புக்கொள்வதைத் தவிர இங்கு வேறு வழியுமில்லை. எனவே கிருஸ்தவர்கள் ஏசு உண்மை தீர்க்கதரிசி இல்லை என்ற முடிவிற்கு வரவேண்டும் அல்லது ஏசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு நிலையில் எதை ஒப்புக்கொண்டாலும் கிருஸ்தவம் என்பது ஒரு மாயை, ஏசுவின் சிலுவை மரணம் நடைபெறவில்லை என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகும். இதைத்தான் அருள்மறை திருக்குர்ஆன் 4:157,158 வசனங்களில் தெளிவு படுத்துகிறது.

கிருஸ்தவர்கள் தேவகுமாரராக நம்பிக் கொண்டிருக்கும் ஏசு, யோனாவைப் போல இல்லை என்ற உண்மை கிருஸ்தவ மத கோட்பாட்டிற்கும், கிருஸ்தவ திருச்சபைகளுக்கும் விழுந்த பேரடியாக இருப்பதால், இதற்கு ஏதாவது சப்பைக் கட்டுகட்டி, பூசி மெழுகி, ஏசு சிலுவையில் மரணித்தார் என்பதை நிரூபிப்பதற்காக கிருத்தவச் திருச்சபைகள் சில குறுக்கு வழியை யோசித்தனர். அதன்படி மத்தேயு 12:39-40 வசனங்களை (வழக்கம்போல) திரித்தனர்.

FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH இதில் THREE என்று நான்கு முறை வந்துள்ளது எனவே 'மத்தேயு 12:39-40 வசனங்கள் ஏசு, யோனாவைப் போல் என்ற கருத்தைப் போதிக்கவில்லை மாறாக TIME FACTOR அது மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்கின்றனர். அதாவது தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (sepulcher) இருந்தார் என்று கூறுகிறார்கள். இதிலும் கிருஸ்தவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது.

ஏசு மூன்று நாட்களா பிணஅறையில் இருந்தார்?
பைபிளை படித்த கிருஸ்தவ நண்பர்களிடம் ஏசு சிலுவையில் அறையப்பட்டது எப்போது? எந்தக்கிழமையில்? என்று வினவுங்கள். அது வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னர் என்பார்கள். நியூஜிலாந்திலிருந்து அமெரிக்காவரை, ஆஸ்திரேலியா முதல் ஐரோப்பா வரை அனைத்து கிருஸ்த்தவ நாடுகளும் ஒத்துக்கொண்ட ஒரு விஷயம்;. அதனால்தான் ஈஸ்டர் பண்டிகை என்ற GOOD FRIDAY புனித வெள்ளியை கிருஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

சரி அப்படி சிலுவையில் மரணமடைந்த ஏசு எப்போது உயிர்த்தெழுந்தார் எனக் கேட்டால் மூன்றாம் நாள் ஞாயிறு காலை சூரியன் உதிக்கும்முன் என்று பதிலளிப்பர். காரணம் ஞாயிற்றுக் கிழமை (வாரத்தின் முதல் நாள்) சூரியன் உதயமாகும் முன் மேரிமெக்டலின் ஏசு வைக்கப்பட்டிருந்த பிணஅறையை (Tomb) பார்த்தார், பிணஅறை (Tomb) காலியாக இருந்தது. We must not forget that the Gospels are explicit in telling us that it was "before sunrise" on Sunday morning (the FIRST day of the week), that Mary Magdalene went to the tomb of Jesus and found it empty.

யூதர்களின் நம்பிக்கைபடி பாவம் செய்தவர்களையும், குற்றம் இழைத்தவர்களையும் சிலுவையிலேற்றிக் கொள்வர். காரணம் அந்த பாவி மரண வேதனையை நீண்ட நேரம் சுவைக்க வேண்டும் என்பதற்காக. சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின் உடலிலிருந்து குருதிகள் அனைத்தும் வெளியேறி உயிர் பிறிவதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரங்களாவது ஆகும். யூதர்களின் பார்வையில் அன்று ஏசு சாபத்திற்குள்ளானவர். அடுத்தநாள் சனிக்கிழமை யூதர்களின் புனித நாளாக இருந்ததால் வெள்ளிக்கிழமை மாலையே அவசர அவசரமாக ஏசு சிலுவையில் அறையப்படுகிறார்.

எனினும் கிருத்துவர்களின் நம்பிக்கைப்படி ஏசுவின் உடல் மூன்று நாட்கள் பிண அறையில் (வழஅடி) இருந்ததா என்பதை பார்ப்போம்.

-------- ஈஸ்டர் வாரம் -----------------------பிணஅறையில் ஏசுவின் உடல் ----------------------------------------------------------இருந்த கால அளவு

---------------------------------------------------காலை---------இரவு
வெள்ளிக் கிழமை மாலை
(சூரியன் மறையும்முன்)------------------------------இல்லை-------ஒரு இரவு

சனிக்கிழமை
(பிணஅறையில் இருந்திருக்கலாம்)--------------------ஒரு பகல்------ஒரு இரவு

ஞாயிற்றுக் கிழமை (சூரியன் உதிக்கம்
முன் உடல் காணவில்லை)
------------------------- -இல்லை--------இல்லை

-------------------------------மொத்தம்-------- 1 பகல்------2 இரவுகள்

வெள்ளிக்கிழமை மாலைதான் (சூரியன் மறையும் முன்னர்) ஏசு சிலுவையில் அறையப்படுகிறார் எனவே வெள்ளிக்கிழமை காலை அவர் உடல் பிணஅறையில் இருந்ததற்கு சாத்தியமில்லை. அன்று வெள்ளி இரவு பிணஅறையில் அவர் உடல் இருந்திருக்கலாம்.

அடுத்தநாள் சனிக்கிழமை காலையும், அன்று இரவும் ஏசுவின் உடல் பிணஅறையில் இருந்திருக்கலாம்.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரியன் உதயமாவதற்கு முன்னர் மேரிமெக்டலின் பிணஅறையைப் பார்த்தார் அதுகாலியாக இருந்தது. எனவே இது வரை ஒரு பகலும் இரண்டு இரவுகளும் பிண அறையில் ஏசுவின் உடல் இருந்திருக்கிறது.

இந்நிலையில் தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (Tomb) இருந்தார் என கிருத்துவ திருச்சபைகள் அப்பாவி கிருஸ்தவர்களின் காதில் பூசுற்றியது என்னாயிற்று?

JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; யோனா 3 பகலும் 3 இரவுகளும் மீன்வயிற்றில் இருந்தார். ஆனால் ஏசுவோ 1 பகலும் 2 இரவுகள் மட்டும்தானே பிணஅறையில் (வழஅடி) இருந்துள்ளார்? 3 பகல் 3 இரவுகளும், 1 பகல் 2 இரவுகளும் சமமாகுமா?

IS 3 + 3 and 1 + 2 are equal ?

3 + 3 ம், 1 + 2 ம் சமமாகுமா?

அணுவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ அல்லது கணிதமேதை இராமானுஜமோ வந்தால்கூட இதை சமப்படுத்தி காட்ட இயலாது.

எனவே யோனாவைப் போல ஏசு உயிரோடு இருக்கவில்லை என்று முன்னர் நிரூபனமாகியதைப் போல, இப்போது (TIME FACTOR) மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்று கூற்றும் பொய்யாகி விட்டது.

இதை உணர்ந்து கொண்ட ராபர்ட் பஹே என்ற கிருஸ்தவ அறிஞர் ஏசு வெள்ளியன்று சிலுவையில் அறையப்படவில்லை மாறாக புதன் கிழமைதான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும் என்றார். இதை டர்பன் (South Africa-Durban) நகரிலுள்ள ஹோலிடே இன் (Holiday Inn) நட்சத்திர ஹோட்டலில் கருந்தரங்கமாக நடத்தியது மட்டுமல்லாது இக்கருத்தை ப்லைன் ட்ரூத் (Plain Truth) இதழிலும் வெளியிட்டார். காரணம் வெள்ளிக் கிழமையிலிருந்து கணக்கிட்டால் 3 பகல் 3 இரவுகள் வரவில்லை என்பதால் அவர் புதன் இரவிலிருந்து கணக்கிடச் சொன்னார்.

என்ன விளையாட்டு இது? கடந்த 2000 வருடங்களாக புனித வெள்ளி, புனித வெள்ளி என்று கூப்பாடு போடுவது வெற்றுக்கூச்சலா என்று கேட்கத் தோன்றுகிறது. பைபிள் பழைய ஏற்பாட்டின் 300க்கும் மேற்பட்ட தூத்துச் செய்திகள் ஏசு சிலவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்றுதான் பரிபூரனமானது என்ற கிருத்தவ நம்பிக்கை என்ன ஆயிற்று? இவ்வுலகின் 200 கோடி கிருஸ்தவர்களும் தங்கள் மதத்தின் அஸ்திவாரமாக நம்பும் தங்கள் கடவுளின் சிலுவை மரணத்தைப் பற்றிய 2000 வருடங்கள் அறியாமையை வெளிக்கொண்டு வந்ததற்கு ராபர்ட் பஹே அவர்களை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். அறிஞர் ராபர்ட் பஹேயின் ஆய்வின்படி புனித வெள்ளி என்பதல்ல புனித புதன் என்பதே கிருத்துவர்களின் புனித நாள். ஈஸ்டர் பண்டிகை, புனித வெள்ளி என்று கிருஸ்தவர்களை கடந்த 2000 வருடங்களாக சைத்தான் வழிகெடுத்து விட்டானா?

ஆகையால் மக்களே! கிருஸ்தவர்கள் யாரை தேவகுமாரன் என்று நினைத்துக் கொண்டும், அவர் சிலுவையில் மரணித்தார் என்றும் நம்புகிறார்களோ அவருக்கும் அல்லாஹ்வின் சங்கை மிக்க இறைத்தூதர்களின் ஒருவரான ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஏசு என்ற ஈஸா (அலை) அவர்கள் இறைவனோ அல்லது தேவகுமாரரோ அல்ல மாறாக இறைவனின் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களை எவரும் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அந்த யூதர்களுக்கு நபி ஈஸா (அலை) அவர்களைப் போன்ற ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. அல்லாஹ் அவர்களை தன் அளவில் உயர்த்திக் கொண்டான். இதுவே சத்தியமான உண்மை. இதை விசுவாசங்கொண்டு அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தகுதியான ஒரே கடவுளாகவும், நபி முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் இறுதித்தூதராகவும், பரிசுத்த குர்ஆனை இறைவனின் இறுதி வேதமாகவும் நம்பி, தூய இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாததுவரை எந்த கிருஸ்தவருக்கும் பரலோக ராஜ்யத்தில் வெற்றியுமில்லை, ஈடேற்றமுமில்லை. கிருஸ்தவ நண்பர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
.
நன்றி: IIP ONLINE
.
குறிப்பு: காலம் சென்ற தலைச்சிறந்த இஸ்லாமியப் பிரச்சாரகரான அஹமத் தீதாத், அவர்கள் எழுதிய 'WHAT WAS THE SIGN OF JONAH' என்ற நூலில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த ஆக்கம் IIP ONLINE என்றத் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரைக்கு சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ அதிமேதாவி 'அஹமத் தீதாத்திற்கு பதில்' என்றப்பெயரில் ஒரு மொழிப்பெயர்ப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த கட்டுரைக்கான பதிலை இன்ஷா அல்லாஹ் அடுத்தப்பதிவில் எமது தளத்தில் வெளிவரும்.
.

Monday, February 02, 2009

நபிகள் நாயகம் காமவெறியரா? இயேசு திருமணம் முடிக்காதவரா?

பலதாரமணம் புரிந்தவர் இறைதூதராக இருக்க முடியுமா? கிறிஸ்தவர்களுக்கு பதில்
.
உலகம் முழுவதும் இன்று பெருகிவரும் இஸ்லாமிய வளர்ச்சியைப் பொருத்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய எதிரிகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரிகள் அதன் வளர்ச்சியை எப்படியேனும் தடுத்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் ஏற்படுத்திவரும் விஷமப்பிரச்சாரங்களில் மிக முக்கியமான ஒன்று நம் உயிரினும் மேலான நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது சுமத்தப்படும் 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. குறிப்பாக கிறிஸ்தவர்களில் பலர் இயேசு காம இச்சையை அடக்கி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்றும் ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ ஒன்றுக்கு மேற்பட்டதிருமணங்களை, குறிப்பாக 11 பெண்களைத் திருமணம் செய்து தனது காம இச்சையை தீர்த்துக்கொண்டார் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பலதாரமணத்தை இஸ்லாம் அனுமதித்ததன் மூலம் இஸ்லாம் ஏதோ விபச்சாரத்தை அனுமதித்தது போன்று எழுதும் சில கிறிஸ்தவ அறிவிளிகளும் உண்டு.

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள் என்பதையும், அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்றுக்கு அதிகமான பெண்களை திருமணம் முடித்திருந்தார்கள் என்பதையும், ஆயிஷா (ரலி) அவர்களை - அவர்களின் சிறுவயதிலேயே திருமணம் செய்தார்கள் என்பதையும் என்றைக்குமே இஸ்லாமிய உலகம் மறைத்ததும் கிடையாது - மறுத்ததும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இவற்றை ஒப்புக்கொண்டு அதற்கான நியாயமான காரணங்களை இன்றைக்கும் - என்றைக்கும் மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லியே வருகின்றது.

பெருமானார் (ஸல்) அவர்கள் தமது பதிமூண்டு ஆண்டுகள் நபித்துவ வாழ்கை வாழ்ந்த அந்நாட்களில் தன்னை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொண்ட, எற்காமல் நிராகரித்த, பல சமுகத்து மக்கள் மத்தியில் தான் வாழ்கின்றார்கள். இவர்களில் ஆதரவாளர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு, துரோகிகளும் உண்டு. இந்த அத்தனை பேருக்கும் மத்தியில் தான் பெருமானாரின் இந்த அனைத்துத் திருமணங்களும் நடைபெருகின்றது.

இவை அத்தனைக்கும் மத்தியிலும் அன்றைக்கு இஸ்லாம் வளர்ந்துக்கொண்டே இருந்ததே யொழிய வீழ்ச்சியடைந்துவிடவுமில்லை பலவீடபடவுமில்லை. மாறாக இத்தனைத் திருமணங்களுக்குப் பிறகும் அந்த பெருமானாருக்காக தனது உயிரையும் தியாகம் செய்யும் தோழர்கள் உருவாகி இருந்தார்கள் - மேலும் மேலும் உறுவாகிக்கொண்டே இருந்தார்கள் என்றால் என்னக் காரணம்? இந்த அத்தனைக்கும் மத்தியிலும் அவர்களின் மீது அளவுக்கதிகமான அண்பு காட்டக்கூடிய மக்களாக அன்றைய மக்கள் இருந்தார்கள் என்றால் என்ன அர்த்தம்? இன்றைய கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வது போல் இத்தனைத் திருமணங்களுக்கும் 'காமவெறிதான்' காரணமாக இருந்திருந்தால் பெருமானாருக்கு இப்படிப்பட்ட கூட்டம் கிடைத்திருக்குமா?

அது மட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சத்தியப்பிரச்சாரத்தை துணிவுடன் துவங்கியபோது உலகில் எந்த சீர்த்திருத்தவாதியும் சந்தித்திராத பல எதிர்ப்புகளை அவர்கள் சந்தித்தார்கள். அவர்களது பிரச்சாரத்தால் பாதித்தவர்கள் ஏராளம். மூட நம்பிக்கைளில் ஆழ்ந்து கிடந்தவர்கள், குலப்பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்கள், மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்கள், ஏமாற்றுவதையும் மோசடியையுமே தொழிலாகக் கொண்டவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டார்கள். எப்படியாவது முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமை மிக்க கவிஞன் என்றார்கள், கை தேர்ந்த மந்திரவாதி என்று கூட சொன்னார்கள். ஏசிப்பார்த்தார்கள்! அடித்தும் பார்த்தார்கள்! ஊரைவிட்டே விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவர்களை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடிக்கி விட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித்தனத்துக்கு இவை தக்க ஆதாரங்கள். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்வு பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை. மற்ற எல்லா ஆயுதங்களைவிடவும் பலமான இந்த 'காமவெறியன்' என்ற ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தி இருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக்கூடும். ஆனால் அவர்களாலும் வைக்கப்படாத - வைக்கமுடியாது ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் பெருமானாரை இன்றைய இஸ்லாமிய எதிரிகள் - குறிப்பாக கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று 'காமவெறியர்' என்ற குற்றச்சாட்டு. பெருமானாருடன் சமகாலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய எதிரிகள் எத்தனையோ குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது கூறியவர்கள் இத்தனைத் பெண்களைத் திருமணம் செய்தபிறகு அவர்களை 'காமவெறியர்' என்று கூறாதது ஏன்? இஸ்லாத்தை பலவீனப்படுத்த, பெருமானாரின் புனிதத்தைக் கொச்சைப்படுத்த இதை வீட ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைக்காது என்றிருந்தும் அந்தக் குற்றச்சாட்டைப் பயன்படுத்தாதது ஏன்?

காரணம் அன்றைய காலத்தில் அந்த குற்றச்சாட்டு அந்த மக்களிடத்தில் எடுபடாது என்ற நிலை. ஏனெனில் பெருமானார் அவர்கள் அன்றைய காலத்தில் வாழ்ந்த அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எல்லா வகையிலும் சிறந்த நற்பெயரையே பெற்றிருந்தார்கள் - அவர்களுடைய நற்குணத்தைப் பற்றி அந்த மக்கள் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள். இதையும் மீறி சிலர் அன்று அவர்களை எதிர்தற்கு ஒரே காரணம் அவர்கள் போதித்த சத்திய மார்க்கமான இஸ்லாம் தானே யொழிய வேறல்ல.

அன்றைய கால இஸ்லாமிய எதிரிகளால் கூட வைக்கப்படாத - வைக்கப்பட முடியாத ஒரு குற்றச்சாட்டான 'காமவெறியர்' என்றுக் குற்றச்சாட்டைக் இன்றைய கிறிஸ்தவர்கள் கையிலெடுத்துப் பிரச்சாரம் செய்வதற்கு காரணம் எப்படியேனும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்தி நிறுத்தியாக வேண்டும் என்று குறுகிய நோக்கமே!

உன்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் ஏன் அத்தனைத் திருமணங்கள் செய்தார்கள்? அவர்கள் நான்கிற்கு அதிகமான திருமணம் செய்ய காரணம் என்ன? என்பதை எல்லாம் பின்வரும் தொடுப்புகளில் தெரிந்துக்கொள்ளலாம்.

மற்றும் சகோதரர் பீஜே எழுதிய 'நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? ஏன்ற புத்தகத்தின் மூலமும் இன்னும் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இருந்தாலும் இஸ்லாமிய வளர்ச்சியை தடுப்பதற்காக இன்றைய கிறிஸ்தவர்களால் வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டான 'பெருமானார் (ஸல்) அவர்கள் காமவெறியர்' என்றக் குற்றச்சாட்டு அவர்களின் நம்பிக்கைப்படி சரியானதா? ஒருவர் ஓன்றுக்கு மேற்பட்ட திருமண்ஙகளை முடித்தால் அவர் காமவெறியர் ஆகிவிடுவாரா? அப்படிப்பட்டவர் இறைதூதராக - தீர்க்கதரிசியாக முடியுமா? தனது காம இச்சையை அடக்கி இயேசு திருமணம் முடிக்காமல் தான் வாழ்ந்தாரா? பலதாரமணம் பற்றி பைபிளின் கருத்தென்ன? உன்மையில் பரிசுத்தவானாக, இறைதூதராக, கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாக ஆக முடியாத துர்பாக்கியவான்கள் யார்? என்பதை எல்லாம் பைபிளில் ஆதராங்களை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விளக்கமளித்தால் மிக நன்றாக இருக்கும் என்பதால் நாம் அவற்றை சற்று அலசுவோம்.

பல திருமணங்கள் செய்தவர் இறைத்தூதராக இருக்க முடியுமா?
இந்த கேள்வியை பைபிளின் படி பார்த்தால் 100க்கு 200 சதவிகிதம் முடியும் என்பதுடன் முறையற்ற முறையில் ஒருவர் திருமணம் செய்தால் கூட அவரும் பரிசுத்தவானாகவும் இறைதூதராகவும், பைபிளின் புத்தகங்களுக்கு எழுத்தாளராகவும் இருக்க முடியும் என்றே பைபிள் கூறுகின்றது.

இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தில் மிகவும் முக்கியமானவராக மதிக்கப்படுவர் முஸ்லீம்களால் இப்ராஹீம் (அலை) என்று அழைக்கப்படக்கூடிய ஆபிரகாம். இவருக்கு எத்தனை மனைவிகள்? மொத்தம் 3 பேர் இருந்ததாக பைபிள் கூறுகின்றது. சாராள், ஆகார், மற்றொருவர் கேதூராள் (பார்க்க ஆதியாகமம் 25:1) பலதாரமணம் தவறானதாகவும் அது விபச்சாரத்துக்கு ஒப்பானதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஒருவன் செய்தால் அவன் காமவெறினாகிவிடுவான் என்றால் இந்த ஆபிரகாம் காமவெறியரா? இவர் விபச்சாரம் செய்துவிட்டாரா?

சாலமோன் என்ற தீர்க்கதரிசி பற்றி பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இந்த சாலமோன் என்ற தீர்க்கதரிசிக்கு ஒன்றல்ல இரண்டல்ல, அல்லது பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்று 11 பெண்களைத் திருமணம் செய்தவரோ கூட அல்ல. மாறாக 700 மனைவிகளும், அது போக 300 மறுமனையாட்டிகளும் (வைப்பாட்டிகளும்) இருந்ததாக பைபிள் கூறுகின்றது. (பார்க்க 1 இராஜாக்கள் 11:1-3). இவர் யார், கிறிஸ்தவர்கள் புனிதமாக மதிக்கும் பைபிளின் நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு போன்ற புத்தகங்களுக்கு சொந்தக்காரர். இவருடைய வம்சத்தில் தான் இயேசுவும் பிறக்கின்றார். இவருக்கு 700 மனைவிகள் போதாதென்று அது அல்லாமல் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டாத 300 மறுமனையாட்டிகளையும் வைத்திருந்ததாக பைபிள் கூறுகின்றது. இப்படிப்பட்டவரை பரிசுத்தர் என்று ஏற்றுக்கொள்வதுடன், அவர் எழுதிய புத்தகங்களை பைபிளில் ஒரு பகுதியாகவும் ஏற்றுக்கொள்வார்களாம். அதை புனித புத்தகமாக ஏற்பார்களாம். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து சமூகத்து மக்களுக்கு மத்தியில் அவர்கள் செய்த திருமணங்களை ஏற்காததுடன் அவர்களை காம வெறியர் என்றும் பிரச்சாரம் செய்வார்களாம். சாலமோன் வைத்திருந்த வைப்பாட்டிகளை விட்டுவிடுவோம். அவர் முடித்த மனைவிகளின் எண்ணிக்கையின் அருகிலேயே நெருங்க முடியாத - சாலமோனுடன் ஒப்பிடும் பொழுது மிக மிகக்குறைந்த எண்ணிக்கை அளவுக்குகே திருமணம் முடித்த பெருமானாரை காமவெறியர் என்று சொல்வது எப்படி சரியாகும்? இதில் எங்கே நியாயம் இருக்கின்றது. சிந்திக்க வேண்டாமா?

அடுத்து இந்த சாலமோனின் தந்தை தாவீது ராஜா என்பவரைப் பற்றியும் பைபிளில் கூறப்படுகின்றது. இவரின் வம்சத்தில் தான் இயேசு சாலமோன் வழியாக பிறக்கின்றார். எந்த அளவுக்கு என்றால் புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு கூட இயேசுவை அறிமுகப்படுத்தும் போது 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு' (மத்தேயு 1:1) என்று அறிமுகப்படுத்தப்படும் அளவுக்கு ஒரு பரிசுத்தவானாக கருதப்படுபவர் இந்த தாவீது. இவர் தனக்கு முறையான ஒரு மனைவி இருக்க இன்னொரு அண்ணியப்பெண்னை அவள் குளித்துக்கொண்டிருக்கும் பொழுது அவளைத் தவறான கண்னோட்டத்தோடு பார்த்ததுடன் அவள் மேல் ஆசைக் கொண்டு அவளுடன் தவறான உறவும் கொள்கின்றார். இந்த தவறான உறவின் மூலம் அவள் கர்ப்பமடைந்துவிட்டால் என்று தெரிந்ததும், சில சூழ்ச்சிகள் மூலம் அவளது கணவனையே தாவீது கொலைசெய்ய வைத்து அதன் பிறகு அவளையே தனது மனைவியாக்கிக் கொள்கின்றார். இந்த தகாத உறவின் மூலம் பிறந்தவர்தான் இயேசுவின் மூதாதையரான மேலே விவரிக்கப்பட்ட சாலமோன் என்று பைபிள் கூறுகின்றது. (மத்தேயு 1:6) (இது குறித்து விரிவான விளக்கம் கான இங்கே சொடுக்கவும்).

இப்படி ஒரு அப்பட்டமான - அநாகரீகமான - முறையற்ற முறையில் தவறான உறவு கொண்டு திருமணம் முடித்தார் என்று சொல்லப்படுபவரை இவர்கள் பரிசுத்தவானாக ஏற்பார்களாம்? அவருடைய வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பெருமையோடு சொல்லிக்கொள்வார்களாம். அவர் எழுதிய புத்தகமான சங்கீதம் என்ற புத்தகத்தை மிக உயர்வாக மதிப்பார்களாம். எந்த அளவுக்கொன்றால் பல கிறிஸ்தவ பிரச்சாரங்களில் இந்த புத்தகத்தின் வசனங்களைத்தான் அடிக்கடி மேற்கோள் காட்டும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அப்படிப்பட்டவரை ஒரு பரிசுத்தராக ஏற்பார்களாம். ஆனால் பெருமானாரை முறையாக பல திருமணம் செய்ததால் காமவெறியர் என்பார்களாம்? இதில் எங்கே நியாயம் இருக்கின்றது? சிந்திக்க வேண்டாமா? இப்படி இவர்கள் முரண்படுவதன் மூலம் அவர்களின் அவதூறு பிரச்சாரத்தின் நோக்கம் என்ன வென்று புரிகின்றதா இல்லையா?

அதேபோல் யாக்கோபு என்பவரும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடித்தவர்தான். இப்படி பைபிளில் எத்தனையோ மேற்கோள்கள் இருக்கின்றது.
உதாரனத்திற்காகவே இங்கு சிலவற்றை குறிப்பிடுகின்றோம். மேலே நாம் எடுத்துக்காட்டியது போன்று 700 மனைவிமார்கள் போதாதென்று சட்டத்திற்கு புறம்பாக பெறப்படும் (பைப்பாட்டிகளான) 300 மறுமனையாட்டிகளை வைத்திருந்த சாலமோன் தீர்க்கதரிசி போன்றோ அல்லது தனக்கு மனைவி இருந்தும் ஒரு அண்ணியப்பெண்னை சட்டவிரோதமாக தகாத உறவு கொண்டு அவன் கனவனை கொலைசெய்யவும் வைத்து அதன் பிறகு பலவந்தமாகதிருமணம் முடித்த தாவீது போன்றோ எங்கேயாவது பெருமானார் (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள் என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா? வெறும் 11 திருமணங்களை முடித்தவரை காமவெறியர் என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் முதலில் சாலமோனையும், தாவீதையும், ஆபிரகாமையும், யாக்கோபையும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள மற்ற பலதாரமணம் புரிந்தவர்களையும் காமவெறியர் என்று அறிவிக்கட்டும். அதன் பிறகு பெருமானாரை குறை சொல்லட்டும். முடியுமா? அல்லது குறைந்தபட்சம் சாலமோன் எழுதிய புத்தகங்களையும் தாவீது எழுதிய புத்தகங்களையும் பைபிளிலிருந்து தூக்கி எரியட்டும். அதன் பிறகு பெருமானாரை காமவெறியர் என்று அறிவிக்கட்டும். இப்படி செய்ய அவர்களால் முடியுமா என்றால் முடியாது. காரணம் பலதார மணம் என்பது கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்றுதான் பைபிளும் கூறுகின்றது. ஒருவர் முறையான முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் முடித்தால் அது தவறல்ல. அதை பல தீர்க்கதரிசிகளும் செய்துள்ளார்கள், சட்டத்திற்கு உட்பட்டு ஒருவன் பலதாரமணம் முடிப்பது நியாயமானதே, பலதாரமணம் முடிப்பவன் காமவெறியனாக மாட்டான் என்பது தான் இன்றைய பைபிளின் உறுதியான நிலை. பலதாரமணம் முடிப்பவர்கள் பற்றி பைபிள் பின்வருமாறு கூறுகின்றது:

இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும், தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது. (உபாகமம் 21:15)

இந்த வசனத்தின் மூலம் ஒருவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை திருமணம் செய்யலாம் என்பதும், அப்படி அவன் செய்தால் அதில் அவன் நியாயமாக நடக்க வேண்டும் என்பது தான் பைபிளின் நிலை.

இதையும் மீறி இவர்கள் முறையான வழியில் 11 திருமணங்களை செய்த பெருமானாரை காமவெறியர் என்று கூறுவார்களேயானால் முதலில் சாலமோனையும் தாவீதையும் காம வெறியர் என்று அறிவிக்கட்டும், அவர்கள் எழுதிய புத்தகங்களை பைபிளிலிருந்து தூக்கி எரியட்டும். பிறகு தங்கள் வாதத்தை பிரச்சாரம் செய்யட்டும். இப்படி இவர்களால் முடியுமா? என்றால் முடியாது காரணம், இவர்கள் வைக்கும் வாதம் என்பது வேண்டும் என்றே பெருமானாரை இழிவு படுத்தி அதன் மூலம் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பது தான்.

எனவே பைபிளைப் பொருத்தவரை பல திருமணம் செய்தவர் இறைத்தூதராக வரமுடியும், பரிசுத்தவானாக இருக்க முடியும், அவருக்கு இறைவனிடமிருந்து செய்தியும் வரும். அப்படியே பலதாரமணம் முடித்திருந்தால் அதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமே யொழிய அதற்கு காமம் காரணமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

இயேசு மணமுடித்தாரா இல்லையா?
இதில் இன்னென்றையும் நாம் கவனித்தாக வேண்டும். கிறிஸ்தவர்கள் பெருமானாரை குறைசொல்லும் அதே வேலையில் மற்றொன்றையும் இவர்கள் வாதமாக வைக்கின்றனர். அதாவது இயேசு திருமணம் முடிக்காமல் தனது காம இச்சையை அடக்கி வாழ்ந்தார் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

பொதுவாக பைபிளைப் பொருத்தவரை இயேசு திருமணம் முடிக்காமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் இயேசுவின் திருமணத்தைப் பற்றித்தான் பைபிளில் சொல்லப்படவில்லையே யொழிய அவர் திருமணம் செய்யவில்லை - அவர் பிரம்மச்சாரி என்று பைபிளில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பைபிளின் படி, புதிய ஏற்பாட்டின் அதிக புத்தகங்களுக்குச் சொந்தக்காரரான பவுலின் கூற்றை வைத்துப் பார்க்கையில் இயேசு திருமணம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்றே எண்ணத்தோன்றுகின்றது.

பவுல் கூறுகின்றார் :
விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். (1 கொரிந்தியர் 7:8)

அதாவது திருமணம் முடிக்காதவர்களைப் பற்றி கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரான பவுல் கூறுகின்றார் 'நான் திருமணம் முடிக்காத பிரம்மச்சாரியாக இருக்கின்றேன். திருமணம் முடிக்க விருப்பமில்லையானால் என்னைப்போல் இருந்து விடுங்கள்' என்று தானே கூறுகின்றாரே யொழிய, நமது இரட்சகரான இயேசுவைப் போன்று திருமணம் முடிக்காதவராக இருங்கள் என்று அவர் கூறவில்லை. உன்மையிலேயே இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்றால் ஏன் பவுல் தன்னை மட்டும் உதாரணம் காட்டவேண்டும்? கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவையே உதாரனமாக காட்டி இருக்கலாமே? அவரை முன்னுதாரணமாக காட்டி அவர் போல் திருமணம் முடிக்காமல் இருங்கள் என்று ஏன் பவுல் கூறவில்லை?

அது மட்டுமல்ல இயேசுவைப் பற்றிய பல செய்திகள் இன்றைய பைபிளில் இல்லை என்பதை புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்களில் ஒருவரான யோவான் தனது புத்தகத்தில் வாக்குமூலம் தருகின்றார் :

இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென். (யோவான் 21:25)

அதாவது இயேசு செய்த இன்னும் பல காரியங்கள் இருக்கின்றதாம். ஆனால் புத்தகம் நீண்டுக்கொண்டே போவதால் யோவான் அவற்றை எல்லாம் எழுதாமல் தவிர்த்துவிட்டாராம். இதற்கு என்ன பொருள்? இயேசு பற்றி இன்னும் நிறைய இருக்கின்றது, அவற்றில் பல விஷயங்கள் சொல்லப்படவில்லை என்பது தானே! அதில் திருமணமும் அடங்கி இருக்கலாம். ஓன்றல்ல அதற்கு மேற்பட்ட திருமணங்கள் கூட செய்திருக்கலாம். அவை மறைக்கவும் பட்டிருக்கலாம் அல்லவா?

எனவே இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்று பைபிளில் எந்த இடத்திலும் குறிப்பு இல்லை என்பதுடன் பவுலின் இந்த அறிவிப்பின்படி பவுல் தான் திருமணம் முடிக்காதவராக இருந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றதோ யொழிய இயேசு திருமணம் முடிக்காதவராக இருந்தார் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை, அதுமட்டுமல்லாமல், யோவான் இயேசுவின் இன்ன பிற நிறைய விஷயங்களை விட்டுவிட்டார் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே இயேசு காமத்ததை கட்டுப்படுத்தி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தார் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வதும் தங்களது சுயகருத்தே அன்றி பைபிளின் கருத்தல்ல.

பைபிளின் படி பரிசுத்தவானாக தகுதியற்றவர்கள் யார்?

அடுத்து இன்னொன்றையும் நாம் கவனித்தாக வேண்டும். அதாவது இன்றைய பைபிளின் படி பொருமானார் (ஸல்) அவர்கள் காமவெறியர் எனற வாதம் தவறானது என்பதும், பல தீர்க்கதரிசிகளே பலதாரமணம் புரிந்துள்ளார்கள் என்பதும், இயேசு திருமணம் செய்யாமல் இருந்தார் என்பது யூகத்தின் அடிப்படையிலான வாதம் என்பதும் நாம் விளங்கிய அதே வேலையில் இன்னொன்றையும் முக்கியமாக இங்கே விளங்கியாக வேண்டும். அதாவது, இன்றைய பைபிளின் படி பரிசுத்தவானாகவும், தீர்க்கதரிசியாகவும், கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவராக முடியாதவர்கள் - அதற்கான தகுதியற்றவர்கள் யார் யார் என்பதையும் அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைய முடியாத துர்ப்பாக்கியவானாக எவர்களை பைபிள் குறிப்பிடுகின்றது என்பதையும்;; இனி கவனிப்போம்.

தகுதி 1: வேசிப்பிள்ளைகளும், அவர்களின் சந்ததியினரும்...
உபாகமம் 23:2ல் 'வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்கு பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' என்று ஒரு தகுதி சொல்லப்படுகின்றது.

அதாவது இந்த வசனத்தின் மூலம் விபச்சாரத்திற்கு பிறந்தவனும், அவனது சந்ததியினரும், அதுவும் அவனுக்கு பத்துதலைமுறையானாலும் பரிசுத்தவானாக ஆகமாட்டான் என்கிறது.

தகுதி 2: wine என்னும் திராட்சைரசம் குடிப்பவன் பரிசுத்தவானாக -ஞானவானாக மாட்டான் என்றும் பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படக்கூடியவர்கள் மதுபானத்தை அருந்த மாட்டார்கள் என்றும் பைபிள் கூறுகின்றது:
திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - நீதிமொழிகள் 20:1

அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (wine) திராட்சரசமும் (Strong Drink) மதுவும்குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். - லூக்கா 1:15

கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - லேவியராகமம் : 10: 8 - 11

மேலே சொன்னதன் படி விபச்சார சந்ததியில் பிறந்தவர்களும், குடிகார்களும், பரிசுத்தவானாகவோ தீர்க்கதரிசியாகவோ, பரிசுத்தஆவியால் வழிநடத்தப்படக்கூடியவராகவோ அல்லது கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாகவோ ஆக முடியாது என்பது தெளிவாகின்றது. இந்த வசனங்களின் படி பார்த்தால் இயேசு, தாவீது, சாலமோன் போன்றோர் மேலே சொல்லப்பட்ட பலவீனங்களை உடையவர்களாக இருந்துள்ளார்கள் என்றும் குறிப்பாக இயேசு இந்த இரண்டு பலவீணங்களையும் உடையவராக இருந்தார் என்றும் இன்றைய பைபிள் கூறுகின்றது.

தாவீது அண்ணியப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தவர். (2 சாமுவேல் 11:1-27) அந்த விபச்சாரத்தின் மூலம் தான் சாலமோன் பிறக்கின்றார் என்று பைபிள் கூறுகின்றது.(மத்தேயு 1:6) இவர்களின் வம்சத்தில் தான் இயேசுவும் பிறக்கின்றர் என்றும் பைபிள் கூறுகின்றது. இவர்கள் மூவரும் உபாகமம் 23:2 வசனத்தின் படி பரிசுத்தவான்களாக முடியாது. (இது குறித்த விரிவான விளக்கம் பார்க்க இங்கே அழுத்தவும்)

அது மட்டுமல்லாமல் இயேசு குடிகாரராகவும் தடைசெய்யப்பட்ட wine என்னும் திராட்சைரசமான மதுவை தானும் விரும்பிக்குடித்து மற்றவர்களையும் குடிக்கச் செய்தவராகவும் இருந்தார் என்கிறது பைபிள். (பார்க்க யோவான் 2:1-10, லூக்கா 7:4) மட்டுமல்ல யோவான் ஸ்னானன் wine என்னும் மதுபானத்தை குடிக்கமாட்டாராம். ஏனெனில் அவன் தன் தாயின் வயிற்றிலிரூக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிறப்பப்பட்டவனாம். அப்படியானால் இயேசுவின் நிலை என்ன?(இது குறித்த விரிவான விளக்கம் பார்க்க இங்கே அழுத்தவும்)மேலே கூறப்பட்டுள்ள பைபிளின் வசனங்களின்படிப் பார்த்தால் இயேசுவும் தாவீதும் சாலமோனும் இந்த உயர்ந்த தகுதியைப் பெறமாட்டார்கள் என்பதும், அவர்களே பரிசுத்தவானாக ஆகமுடியாது எனும் போது அவர்கள் எழுதிய புத்தகங்கள் எங்ஙனம் என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் பைபிளின் படி - இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி பெருமானாரை காமவெறியர் என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதுடன், பரிசுத்தவான்களாக தகுதியற்றவர்கள் குறித்து பைபிள் சொல்வதை வைத்துப்பார்த்தால் இயேசுவும், தாவீதும் சாலமோனும் தான் அந்த தகுதியற்றவர்களாக ஆவார்களே யொழிய பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அவை எள்ளளவும் பொருந்தாது என்பது மட்டும் நிச்சயம்.

குர்ஆனின்படி மட்டுமே இயேசுவும் தாவீதும் சாலமோனும் பரிசுத்தவானாகவும், தீர்க்கதரிசிகளாகவும் இறைசெய்தி பெற்றவர்களாகவும் இருக்கின்றார்களேயொழிய பைபிளின் படி இவர்கள் அந்த உயர்ந்த தகுதியைப் பெற தகுதியற்றவர்கள் என்பது தான் பைபிள் சொல்லும் உன்மை என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்து, சத்திய இஸ்லாத்தை ஏற்று நீங்கள் அனைவரும் பரலோக இரஜ்யத்தில் சுதந்தரிக்கக்கூடியவர்களாக ஆக உங்கள் அனைவருக்காகவும ஏக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Monday, January 12, 2009

அப்ரஹா மன்னனின் யானைப்படையும் - கிறிஸ்தவர்களின் கேள்வியும

அன்பு சகோதரருக்கு

முஸ்லிம் சமுதாயத்தை சரியான விளக்கங்களுடன் நேர்வழி செல்ல உதவி புரிய, அல்லாஹ் தங்களை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அருள்புரிவானாக.

கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.

இதற்கான தகுந்த விளக்கங்கள் வேண்டும், நான் அவருக்கு தெளிவாக புரியவைக்க.

Name: ansar
email: hssnansar@...
Location: srilanka
Subject: Question
....................................

திருக்குர்ஆனில் 105வது அத்தியாயமாக அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் கஅபா ஆலயத்தை அழிக்க வந்த அப்ரஹா என்ற மன்னனின் யானைப் படையை அழித்து கஅபாவை இறைவன் காப்பாற்றிய வரலாற்றைக் கூறுகிறது. இந்நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் நடந்ததாகும்.

இதன் பின்னர் அரபுகள் தம்முடைய ஆண்டுகளை இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்தே யானை ஆண்டு என்று அமைத்துக் கொண்டார்கள்.

சகோதரரர் அன்சர் மூலம் கேட்கப்படும் அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகளே இல்லையே, எத்தியோப்பியாவில் கூட அன்றைக்கு யானைகள் இருந்ததில்லை என்று பலர் கூறுகின்றர்களே, அப்படி இருக்கையில் இந்த யானைப்படை சம்பவம் அன்றைக்கு அதுவும் யானைகளே இல்லாத அரபுப் பிரதேசத்தில் எப்படி நடந்திருக்கும், எனவே இது குர்ஆனில் உள்ள தவறு என்ற தோரனையில் இந்த கேள்வியை எழுப்பி இருக்கின்றார்கள். நியாயமாக சிந்தித்துப் பார்த்தால் அடிப்படையிலேயே அந்த கிறிஸ்தவர்களின் கேள்வி தவறானது என்பதை உணரலாம்.

ஏனென்றால் எந்த ஒரு இடத்திலும் அங்கே வாழக்கூடியதும் அங்கே உற்பத்தியாகக்கூடியது மட்டும் தான் இருக்கும் அல்லது இருக்கமுடியும் என்று நினைப்பது தவறு.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒட்டகம் இல்லை என்பதற்காக அது வாழக்கூடிய அரபு பிரதேசத்திலிருந்தோ அல்லது ராஜஸ்தானிலிருந்தோ அதைக் கொண்டுவரமுடியாது என்று சொல்லமுடியுமா?

கங்காரு என்ற விலங்கு இந்தியாவில் எங்குமே வாழுவது கிடையாது. இந்தியாவில் இல்லை என்பதற்காக அந்த விலங்கை அது வாழக்கூடிய ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து கெண்டுவர முடியாது என்று யாராவது சொல்வோமா?

அது போலத்தான் அக்காலத்தில் பலம் வாய்ந்த மன்னனாக இருந்த அப்ரஹா என்பவன் தனது பலத்தைக் காட்டுவதற்காக யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் இன்னும் தனது ராஜ்யத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக தனக்கு தேவையான இன்னபிற படைகளையும் அது கிடைகக்கூடிய பகுதிகளிலிருந்து தயார் செய்திருப்பான். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு இது ஒன்றும கடினமான காரியமாக இருக்காது - இருக்கவும்முடியாது.

பொதுவாக இந்தக் கேள்வி எப்பொழுது வரவேண்டும் என்றால்? (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த) 1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றாலோ, அல்லது விஞ்ஞானம் வளர்ந்த பிற்காலத்தில் எப்படி ரோபோவைக் மனிதன் உருவாக்குகின்றானோ அதே போலத்தான் யானைகளும் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் தான் இந்தக் கேள்வியே வரவேண்டும்.

1400 ஆண்டுகளும் முன் யானைகள் இருந்தததா? இல்லையா? அப்படி யானைகள் ஏதும் இருந்திருந்தால் அதை அது கிடைக்கக்கூடிய பகுதியிலிருந்து கொண்டுவரமுடியுமா முடியாதா? அல்லது ஒரு இடத்தில் கிடைக்காத பொருளோ அல்லது ஏதேனும் உயிரினமே அது கிடைக்கக்கூடிய இடத்திலிருந்து அது கிடைக்காத வேறு இடங்களுக்கு கொண்டுவரமுடியுமா? என்பதை கேள்விக் கேட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் மற்ற ஆதாரங்கள் வைத்து நிரூபிப்பதைவிட பைபிளின் சான்றுகளை வைத்து நிரூபிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதன் வசனங்களையே நாம் சான்றாக வைக்கின்றோம்.
.
'ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது. தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 1 இராஜாக்கள் 10 : 22, 2 நாளாகமம் 9 : 21

மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன். அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும் பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் -3:15

தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள். அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது. யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக்கொண்டுவந்தார்கள். எசேக்கியேல் 27 : 15
அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது. அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. உன்னதப்பாட்டு - 5 : 14
உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், ..உன்னதப்பாட்டு 7 : 4
1400 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளே இல்லை என்றிருந்தால் பைபிலில் 'யானைத்தந்தங்கள்' என்ற வார்த்தை எப்படி இடம் பெற்றிருக்கும்? அதன் தந்தங்கள் எப்படி பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மன்னர்களுக்கு கிடைத்திருக்கும்?

அதுமட்டுமல்ல தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை கப்பல்களின் மூலமாக அது கிடைக்கக்கூடிய வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பதையும், வியாபாரிகளான தேதான் புத்திரர்கள் தங்கள் நாட்டில் கிடைக்காத பொருட்களை உலகின் பலத் தீவுகளுக்கு சென்று வாங்கி வந்துள்ளனர் என்பதையும், யானைத்தந்தங்களையும், கருங்காளி மரங்களையும் அவ்வாறே கொண்டு வந்துள்ளனர் என்பதையும் இந்த பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு விளக்கப்படுகின்றது. அதாவது தங்கள் நாட்டில் கிடைக்காதவற்றை வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது புலனாகிறது. அதே போல் தான் இந்த அப்ரஹா என்ற மன்னனும் தனது படைக்குத் தேவையான யானைகளை அது வாழக்கூடிய இடங்களிலிருந்து கொண்டுவந்திருப்பான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

சகோதரரர் அன்சர் அவர்களிடம் கேள்வி கேட்ட அந்த கிறிஸ்தவர்கள் இந்த திருக்குர்ஆனின் 105வது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து குர்ஆனைப் பொய்ப்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியதும் அது எப்படி அபத்தமானது என்பதை பைபிள் ஆதாரங்களை வைத்தே நாம் பார்த்தோம். அத்துடன் இந்த சம்பவத்தின் மூலம் திருக்குர்ஆன் ஓர் ஒப்பற்ற இறைவேதம் என்பதற்கான முக்கியமான வேறு சான்றும் உள்ளது என்பதையும் நாம் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும்.

திருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்று. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா? என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5)

புகழனைத்தும் இறைவனுக்கே!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.

Thursday, December 04, 2008

மதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு?

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள்!

பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்கில பைபிள்களில் WINE என்று வரும் இடங்களில் தமிழ் பைபிளில் 'திராட்சைரசம்' என்றும் STRONG DRINK என்று வரும் இடங்களில் 'மது' என்றும் மொழிபெயர்த்துள்ளனர். WINE என்று குறிப்பிடப்படும் வேறு சில இடங்களில் 'திராட்சைரசம்' என்பதற்கு பதிலாக நேரடியாக 'மதுபானம்' என்றே தமிழ் பைபிள்களில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானவகையைச் சேர்ந்த திராட்சைரசம் (Wine), மது (Strong Drink) என்ற இந்த இரண்டுமே முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் இதை அருந்துவது மிகப் பாவமான காரியம் என்றும், இதை அருந்துபவன் தவறான நடத்தையுடையவன் - பரிசுத்தமில்லாதவன் என்றும் பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. அந்த தடை வசனங்களின் பட்டியல் இதோ:

திராட்சை ரசம் (Wine) - மதுபானம் (Strong Drink) அருந்திய நிலையில் ஆசாரிப்புகூடத்துக் போவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது :

கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - லேவியராகமம் : 10: 8 - 11

திராட்சரசத்தையும் மதுபானத்தையும் அருந்துபவன் ஞானவானாக மாட்டான் :

திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. - நீதிமொழிகள் 20:1

அதிசயமாக குழந்தை பெற இருக்கும் ஒரு மலடான பெண்ணிற்கு திராட்சைரசம் மற்றும் மதுபானத்தை அருந்தக்கூடாது என்று கர்த்தரின் கட்டளை :

கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் (Wine) மதுபானமும் (Strong Drink) குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. - நியாயாதிபதிகள் 13:3-4

திராட்சைரசம் என்பது கொடுமையின் இரசம் :

அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள் (drink the wine of violence) - நீதிமொழிகள் 4:17

திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் அருந்துபவன் வழிதவறியவன் - மோசம் போனவன் - அவனால் நியாயம் தீர்க்க முடியாது :

ஆனாலும் இவர்களும் (Wine) திராட்சரசத்தால்மயங்கி, (Stong Drink) மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள். ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். - ஏசாயா 28:7

திராட்சைரசம் அருந்துபவன் வெறியன். அது முற்றிலுமாக விலக்கப்பட்டது :

வெறியரே, விழித்து அழுங்கள். (Wine) திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள். அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது - யோவேல் 1:5

இருதயத்தை மயக்கக்கூடிய மிகக் கொடிய பழக்கங்கள்:

வேசித்தனமும், (Wine) திராட்சரசமும், (New Wine) மதுபானமும் இருதயத்தை மயக்கும். - ஓசியா 4:11

Whoredom and wine and new wine take away the heart.

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனாகிய யோவான் ஸ்னானன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாக இருப்பான். காரணம் அவன் தடைசெய்யப்பட்ட திராட்சைரசத்தையும் - மதுவையும் குடிக்கமாட்டான்:

அவன் (யோவான் ஸ்னானன்) கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், (Wine) திராட்சரசமும் (Stron Drink) மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். - லூக்கா 1:15

மொத்தத்தில் மதுபானம் அருந்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டது -காரணம் :

(Wine) மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள - Wine - சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. Wine - மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதேள, அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்ள. உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை. என்னை அறைந்தார்கள் எனக்குச் சுரணையில்லை. நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய். - நீதிமொழிகள் 23:29-35

திராட்சைரசம் உட்பட மதுபானங்கள் அனைத்தும் முழுமையாக தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதையும், அது எந்த அளவுக்கு மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய தன்மையுடையது என்பதையும் மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாக மதுவானது மனிதனுடைய சிறு மூலையை செயலிழக்கச்செய்து அவனது சிந்தனைத் திரணைக் குறைத்துவிடும். அந்த நேரத்தில் அவன் தனது பகுத்தறிவுக்கு மாற்றமாக - தன்மானத்தை இழந்தவனாக தனது நடவடிக்கையை அமைத்துக்கொள்வான். அதை அருந்தியிருக்கக்கூடிய நிலையில் - அதன் போதை தலைக்கேறியவுடன் தனது தாய் என்று தெரியாது, தனது மகள் என்று தெரியாது, தனது குடும்பத்தினர் என்று தெரியாது, எல்லாவற்றையும் மீறி மிகக் கேவலமாக நடந்துக்கொள்ளக்கூடியவனாக - நடக்கக்கூடாத அனைத்துச்செயல்களையும் செய்யத் தூண்டும் ஒரு கேடுகெட்ட போதையுட்டும் பொருள்தான் மது. இதை அனைவரும் அறிந்ததே!

இந்த மதுவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசமானது எந்த அளவுக்கு மனிதனைத் தரம்தாழ்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் என்பதற்கு பைபிளிலேயே தீர்க்கதிரிசிகளின் பெயரால் புனையப்பட்ட கதைகளில் வரும் சம்பவங்களே சரியான சான்று :

நோவாவும் (Wine) திராட்சைரசமும் :
ஒரு மனிதன் மதுபான வகையைச்சேர்ந்த Wine என்னும் திராட்சைரசத்தை அருந்தினால் போதை தலைக்கேறி எந்த அளவுக்கு மிக கீழான நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதற்கு ஆதாரமாக நோவா என்னும் தீர்க்கதரிசியின் செயல்பாட்டை(?) பைபிளில் எழுதி வைத்துள்ளனர்:

நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் (Wine) திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள் அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். (ஆதியாகமம் 9 : 20 - 25 )

லோத்தும் மதுபானமும் (Wine):
அடுத்து இந்த திராட்சைரசம் - (Wine) என்னும் மதுபானத்தை அருந்தக்கூடியவன் எந்த அளவுக்கு வெட்கங்கெட்ட செயல்களைச் செய்யவும் தயங்கமாட்டான் என்பதற்கு மற்றொரு தீர்க்கதரிசியான லோத்து என்பவருடைய வாழ்வில் நடந்ததாக (?) ஒரு சம்பவத்தை எழுதி வைத்துள்ளனர்:

பின்பு லோத்து சோவாரில் குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு (Wine) மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு (Wine) மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் (Wine) மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு (Wine) மதுவைக் குடிக்கக்கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். (ஆதியாகமம் 19:30-36)

மதுபானவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் அருந்தினால் எந்த அளவுக்கு கேடுகெட்ட, கேவலமான, அருவறுக்கத்தக்க செயல்களை செய்யத்தூண்டும் என்பதற்கு பைபிளில் சொல்லப்பட்டுள்ள இந்த நோவா மற்றும் லோத்தின் சம்பவங்களே (?) சரியான சான்று.

மேலே தடைசெய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பைபிள் வசனங்களிலும், லோத்து மற்றும் நோவா ஆகியோர் அருந்தியதாக சொல்லப்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படும் வார்த்தை போதை ஏற்படுத்தும் மதுபானவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் தான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதுவரை நாம் பார்த்தவகையில், இந்த திராட்சைரசம் (Wine) மற்றும் மது (Strong Drink) என்பது:
  • கர்த்தரால் தடை செய்யப்பட்டது ஒன்று என்று பைபிள் கூறுகின்றது.
  • அதை அருந்திய நிலையில் ஆசாரிப்புக்கூடாரத்துக்கு போகக்கூடாது என்கிற அளவுக்கு தடை செய்யப்பட்டது.
  • இவற்றை அருந்துபவன் ஞானவானாகமாட்டான்.
  • பாக்கியம் பெற்ற பெண்மணிக்கு இவை தடுக்கப்பட்டதாக கர்த்தரால் சொல்லப்பட்டது.
  • இவை கொடுமையின் ரசம் என்கிற அளவுக்கு மனிதனை கொடுமையான நிலைக்குத் தள்ளக்கூடியது
  • இவற்றை அருந்துபவன் வழிதவறியவன், மோசம் போனவன். இதை அருந்திய நிலையில் உள்ளவன் நியாயம் தவறியவனாகத்தான் இருப்பான்.
  • வெறியனே இவற்றை அருந்துவான்.
  • இவற்றை அருந்துவது இருதயத்தை மயக்கக்கூடிய கேடுகெட்ட செயலான விபச்சாரத்திற்கு ஒப்பானது
  • பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டவனும், கர்த்தருக்கு முன்பாக பெரியவானாக இருப்பவர்களும் இவற்றை கண்டிப்பாக அருந்த மாட்டார்கள்.
  • இவற்றை அருந்துவதால் ஏற்படக்கூடிய போதை மனிதனை மிக கீழான நிலைக்கு கொண்டு சொல்லுவதுடன் அருவருக்கத்தக்க செயல்களையும் செய்யத்தூண்டும்
என்பவற்றையெல்லாம் பைபிளின் ஆதராங்களுடன் பார்த்தோம்.

மேற்கூறிய அனைத்து காரணங்களால் பைபிளில் தடைசெய்யப்பட்ட Wine என்று சொல்லப்படும் திராட்சைரசமென்னும் மதுபானத்தை இயேசு தானும் அருந்தியதுடன் மற்றவர்களையும் அருந்தத்தூண்டினார் என்றும் அவரை 'குடிகாரர்' என்றே மக்கள் பரவலாக அழைத்தனர் என்றும் பைபிளில் எழுதிவைத்துள்ளனர். இயேசுவை இழிவு படுத்தும் நோக்கத்துடனும் - அவரது ஒழுக்கத்திற்கு மாசுகற்பிக்கும் வகையிலுமே பைபிளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அதுவும் எந்த அளவுக்கொன்றால் 'தான் கடவுள் புறத்திலிருந்து வந்த ஒருவன்' என்பதை நிரூபிப்பதற்காக அவர் செய்த முதல் அதிசயமே தண்ணீரை திராட்சரசமென்னும் மதுபானமாக மாற்றி மக்களுக்கு குடிக்கக்கொடுத்தார் என்று எழுதிவைத்துள்ள வரிகளைப் பாருங்கள் :

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (Wine) திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் (Wine) திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு. ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் (Wine) திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் (Wine) திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: எந்த மனுஷனும் முன்பு நல்ல (Wine) திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல (Wine) ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். (யோவான் 2:1-10)

இந்த வசனத்தின் மூலம் 'குடிமகன்'களுக்கு தேவையான திராட்சைரசமென்னும் மதுபானம் பற்றாக்குறை ஏற்பட்டபோது தேவைக்கு அதிகமாகவே தனது அதிசயத்தின் மூலம் பெற்றுக்கொடுத்தார் இயேசு என்று அவரைப் பற்றி பைபிளில் குறிப்பிடப்படுகின்றது. இந்த புணையப்பட்ட சம்பவத்தின் மூலம் அவரது ஒழுக்கத்திற்கும், கண்ணியத்திற்கும் மாசு கற்பிக்கப்படுகின்றதா இல்லையா? இதன் மூலம் அவரது வருகையின் நோக்கம் கேள்விக் குறியாக்கப்படுகின்றதா இல்லையா? அதுவும் பழைய ஏற்பாட்டில் தடைசெய்யப்பட்ட திராட்சைரசத்தை தொடர்ந்து தடைசெய்ய அவர் வந்திருப்பாரா? அல்லது அந்த தடையை உடைத்து 'குடி'மக்களுக்கு உற்சாக மூட்ட வந்திருப்பாரா? இப்படி தங்களுக்கு வழங்கப்பட்ட அதிசயத்தின் மூலம் 'குடி'மக்களுக்கு 'நற்செய்தி' அறிவிக்கும் வண்ணமாக அவர்கள் போதையில் மிதப்பதற்கு துணைபுறிந்தவர்கள் தான் தீர்க்கதரிசிகள் என்று சொல்லப்படுவதால் தீர்க்கதரிசிகளின் வருகையின் நோக்கம் கேள்விக்குறியாகிவிடாதா?

அதுமட்டுமல்ல தான் கர்த்தரிடமிருந்து வந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக அவர் செய்த முதல் அதிசயமே இந்த தண்ணீரை மதுபானமாக மாற்றி 'குடி'மகன்களைக் குளிர்வித்ததுதான் என்றும் எழுதிவைத்துள்ளனர்:

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11)

இப்படி தனது அதிசயத்தின் மூலம் 'குடி'மகன்களை உற்சாகமூட்டியதோடல்லாமல் தானும் 'குடி'மகன்களில் ஒருவராகத்தான் இருந்தார் என்றும் குறிப்பாக அவர் வாழ்நாள் முழுவதும் Wine என்னும் மதுபானம் அருந்தக்கூடியவராகவே இருந்தார் என்றும் மக்கள் அவரை 'மதுபானப்பிரியர்' என்றே பரவலாக அழைத்தனர் என்றும் பைபிளில் எழுதிவைத்துள்ளனர் :

எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் (Wine) திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான். அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார். அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் - Winebibber - மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். - லூக்கா 7:34, மத்தேயு 11:19

இந்த வசனத்திலேயே யோவான் ஸ்னானன் மது அருந்தாதவனாக இருந்ததாகவும் ஆனால் இயேசுவோ மதுவை அருந்துபவராக மட்டுமல்ல அதை விரும்பிக் குடிக்கக்கூடியவராகவும் இருந்தார் என்பதாகவும், இது மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது என்பதாகவும் அந்த விமர்சனம் இயேசுவின் காதுகளுக்கும் எட்டியது என்பதாகவும் எழுதிவைத்துள்ளனர்.

எந்த அளவுக்கொன்றால் மதுபானம் உட்பட பழைய ஏற்பாட்டில் தடைசெய்யப்பட்ட அனைத்தையும் அனுமதிக்கும் வகையில் பின்வருமாறு இயேசு போதித்ததாக பைபிளில் எழுதிவைத்துள்ளனர்:

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். - மத்தேயு 15:11

மொத்தத்தில் பழைய ஏற்பாட்டால் தடைசெய்யப்பட்ட மதுபானத்தை தானும் அருந்தக்கூடியவராகவும் மக்களை எல்லாம் மது அருந்த வைத்து வழிகெடுத்தவராகவும், இப்படி போதை அடிமையாக இருந்ததன் மூலம் மேலே நாம் சுட்டிக்காட்டிய அத்தனை தவறான செயல்களுக்கும் சொந்தக்காராக இருந்தார் என்பது போன்றும் இயேசுவை இன்றைய பைபிள் சித்தரிக்கின்து. மட்டுமல்ல, இவர் காலத்தில் வாழ்ந்த பரிசுத்தவான்களில் ஒருவரான யோவான்ஸ்னான் கூட மதுஅருந்தாதவராக இருந்ததாகவும் ஆனால் இயேசுவோ தடைசெய்யப்பட்ட மதுவை விரும்பி குடிக்கக்கூடியவராக இருந்ததாக காட்டி இருக்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்? இயேசுவை எப்படியேனும் இழிவுபடுத்த வேண்டும் என்ற வக்கிரநோக்கம் தானே?

கர்த்தருக்காக பொய் சொல்லாம் என்று புதிய கொள்கையை உதித்த, இயேசுவால் எச்சரிக்கப்பட்ட - யூதர்களைச் சேர்ந்த 'பரிசேயரான' பவுலும், அவரைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்ட பைபிளில் எப்படி இயேசுவைப் பற்றி உயர்வாக காணமுடியும்? இயேசுவின் மீது உன்மையிலேயே பற்று உள்ளவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா? ஒருபக்கம் கர்த்தருக்கு மேலானவராக காட்டி அவரது வருகையைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, மறுபக்கம் அவரை மிகத் தரக் குறைவானவராகவும் 'குடி'மகன்களில் ஒருவராகவும் சித்தரிப்பது தான் அவரை மதிக்கும் லட்சனமா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!

உலகில் இன்றைக்கு எந்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்த மதுபானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது? எந்த சமுதாயத்தினரின் முக்கிய விசேஷங்களில் இந்த மதுபானம் முக்கியமான ஒன்றாக பரிமாரப்படுகின்றது? எந்த சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் இந்த மதுபானம் அருந்துவதை 'லேடஸ்ட் ஃபேஷனாக' மாற்ற முயற்சி எடுத்துக்கப்பட்டு கொண்டிருக்கின்றது? கிறிஸ்தவ சமுதாயத்தினர் அதிகமாக வாழும் மேலைநாடுகளில் தானே!

மதுபானத்தை வீட்டுக்கு வீடு, ரோட்டுக்கு ரோடு, உணவு விடுதிகள் என்று அனைத்திலும், தாயும் தந்தையும் மகனும் மகளும் குடும்பத்தார் என்று அனைவரும் சர்வ சாதாரணமாக ஒன்றாக அமர்ந்து குடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கெல்லாம் காரணம் என்ன? அந்த கேடுகெட்ட கலாச்சாரம் இன்று உலகம் முழுவதும் 'ஃபேஷன்' என்றப் பெயரில் பரவிக்கொண்டிருக்கின்றது என்றால் என்ன காரணம்? கிறிஸ்தவர்கள் கடவுளாக கருதிக்கொண்ருக்கக்கூடிய இயேசுவே குடித்தார் என்று பைபிளின் புணையப்பட்ட வரிகள் தானே!?

மது அருந்துவது இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்தில் தடைசெய்யப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க இன்றைய கிறிஸ்தவ மதத்தின் தலையாய கோட்பாடுகளுக்கும் - பைபிளின் அதிக புத்தகங்களுக்கும் - சொந்தக்காரரான பவுல் மதுபானம் அருந்துவது பற்றி என்ன சொல்கின்றார்? அது பற்றி அவரின் உபதேசம் தான் என்ன?

நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் - Wine - திராட்சரசமும் கூட்டிக்கொள். - 1 திமோத்தேயு 5:23

என்ன அருமையான போதனைப் பார்த்தீர்களா? ஒரு பரிசுத்த ஆவியால் (?) பேசக்கூடிய ஒரு பரிசுத்தவானின் உபதேசத்தைப் பார்த்தீர்களா? தண்ணீர் மட்டும் குடிக்காமல் திராட்சைரசமென்னும் மதுபானத்தையும் கொஞ்சம் சேர்த்துக்கொள் என்றால் என்ன அர்த்தம்? 'குடிமகன்களுக்கு' சாதகமான இந்த வைர வரிகளை (?) தாங்கி நிற்கும் ஒரு புத்தகம் எப்படி புனித புத்தகமாக இருக்கமுடியும்? இதை அடிப்படையாக கொண்ட ஒரு மதம் எப்படி மனிதனைப் பண்படுத்தும் மார்க்கமாக இருக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?

இந்த அற்புத உபதேசத்திற்கு (?) சொந்தக்காரரான பவுலும் அவரைச் சார்ந்தவர்களாலும் எழுதப்பட்ட பைபிளில் இயேசுவை 'மொடக் குடிகாரர்' என்று எழுதப்பட்டதில் யாருக்கும் எந்த ஆச்சரியமும் ஏற்படப்போவதில்லை.

அடுத்து மற்றொன்றையும் நாம் இந்த இடத்தில் தெளிவு படுத்த விரும்புகின்றோம் :

இயேசுவை பைபிளில் குறிப்பிடப்படுவது போன்று இப்படிப்பட்ட கீழ்தனமாவராக முஸ்லீமகளாகிய நாங்கள் ஒருபோதும் கருதவில்லை - கருதவும் கூடாது. இயேசு அவர்களை முழுக்க முழுக்க ஒரு பரிசுத்தவானாகவும் மிகச் சிறந்த தீர்கதரிசியாகளில் ஒருவராகவுமே நாங்கள் நம்புகின்றோம். அவ்வாறு தான் எங்களுக்கு இஸ்லாம் அவரைப் பற்றி எடுத்துரைக்கின்றது.

அவரது முதல் அதிசயம் தண்ணீரை மதுபானமாக மாற்றி குடிமகன்களை உற்சாகமூட்டியவர் என்று பைபிள் கூறுகின்றது. குர்ஆனோ, இயேசுவை அதிசயமாக பெற்றுக்கொண்டு முதன் முதலில் தனது சமூகத்தாரிடம் வந்த பொழுது தனது தாய்க்கு ஏற்பட்ட கலங்கத்தைத் துடைக்கும் வண்ணமாக பச்சிளம் குழந்தையாக இருந்தபோது பேசி தனது முதல் அதிசயத்தை தொடங்கினார் என்கிறது. (இந்த அதிசயம் பைபிளில் மறைக்கப்பட்டுவிட்டது)

இயேசு தனது பரிசுத்த தாய் மரியாளை அவமதித்தவராக பைபிளில் காட்டப்படுகின்றது. ஆனால் குர்ஆனோ தனது தாயை மதித்து நடக்கக்கூடிய ஒழுக்கச்சீலர்களில் ஒருவராக இருந்தார் என்று கூறி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள கலங்கத்தை துடைக்கின்றது.

தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களுடைய பெற்றோரையும் மதிக்காதவராகவும், இன்றைய ரௌடிகளும், பொறுக்கிகளும் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களின் பெற்றோர்களைத் தரக்குறைவாக திட்டக்கூடியவராகவும் இயேசு நடந்துக்கொண்டார் என்று பைபிள் கூறுகின்றது. ஆனால் குர்ஆனோ அவர் அப்படிப்பட்ட தரம் தாழ்ந்தவர் அல்ல என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

அவ்வளவு ஏன்? அவர் விபச்சாரசந்ததியில் பிறந்ததன் மூலம் பரிசுத்தவானாக கூட வரமாட்டார் என்று பைபிள் கூறுகின்றது. ஆனால் குர்ஆனோ அவர் கண்ணியமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அவர் மிகச்சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் அவரைப் போற்றிப் புகழ்துரைக்கின்றது. எப்படிப் பார்த்தாலும் பைபிளில் இயேசு மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து கலங்கத்தையும் குர்ஆன் துடைத்து எரிகின்றது. உன்மையிலேயே இயேசுவை நேசிக்கின்றோம் என்று கூறுபவர்கள் இவற்றை எல்லாம் ஆழ்ந்து சிந்தித்து பார்க்கவேண்டும். உங்களின் நேர்வழிக்காக நாங்கள் ஏக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

மதுபானம் பற்றி திருக்குர்ஆன்:
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ''அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது'' (நபியே! ''தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ''(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்'' என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு இறைவன் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். (அல் குர்ஆன் 2 : 219)

நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி இறைவனின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5 : 90 - 91)

குறிப்பு: Wine என்னும் திராட்சைரசம் என்பது ஏதோ போதையை ஏற்படுத்தாத, திராட்சைப் பழத்திலிருந்து எடுக்கப்படும் ஒருவகைப் பழச்சாறு என்று ஒரு சில கிறிஸ்தவர்களும் பல அப்பாவி பொதுமக்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். சில கிறிஸ்தவ கடைகளிலும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட போதை இல்லாத பழச்சாற்றை திராட்சைரசம் என்றப்பெயரில் விற்பனையும் செய்யப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் இயேசு குடித்த திராட்சைரசம் என்பது போதை இல்லாத இது போன்ற பழச்சாறுதான் என்று மக்களை நம்பவைப்பதற்காக - ஏமாற்றியே பழக்கப்பட்ட கிறிஸ்தவ மிஷி'நரி'களால் செய்யப்படும் தந்திர வேலையே இது! ஆனால் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள படி இயேசு தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டிது - மதுபானவகையைச்சேர்ந்த போதைதரக்கூடிய Wine என்னும் திராட்சைரசத்தையே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். லோத்து குடித்துவிட்டு அவரது மகள்களுடன் உடலுறவு கொண்டதற்கும், நோவா குடித்துவிட்டு அநாகரிகமாக நடந்துக்கொண்டதற்கும் எந்த திராட்சைரசம் காரணமாக இருந்ததோ அதே திராட்சைரசத்தை தான் இயேசுவும் குடித்தார் மற்றவர்களையும் குடிக்கவைத்தார் என்று பைபிள் குறிப்பிடுகின்றது. மதுவையும் திராட்சைரசத்தையும் யோவான்ஸ்னானன் குடிக்கமாட்டான் என்று எந்த திராட்சை ரசத்தை குறித்து சொல்லப்பட்டதோ அதே திராட்சைரசத்தைத்தான் இயேசு குடித்தார் என்று பைபிளில் எழுதிவைத்துள்ளனர். ஆங்கில பைபிள்களில் தடைசெய்யப்பட்ட இடங்களிலும் சரி, இயேசு குடித்ததாக சொல்லப்படும் இடங்களிலும் சரி, அனைத்து இடங்களிலும் 'Wine' என்றே குறிப்பிடப்படுகின்றது.

ஒரு வாதத்திற்காக இன்றைய கிறிஸ்தவ மிஷி'நரி'கள் பிரச்சாரம் செய்வது போல் திராட்சைரசம் என்பது போதை இல்லாத ஒருவகைப் பழச்சாரறுதான் என்றால் பிறகு ஏன் பழைய ஏற்பாட்டில் அதை தடை செய்யப்படவேண்டும்? பிறகு ஏன் அதைக் குடித்ததால் நோவாவும், லோத்தும் அநாகரிகமாக நடந்துக்கொள்ள வேண்டும்? யோவான்ஸ்னானன் அதைக் குடிக்கமாட்டான் என்று ஏன் சொல்லப்படவேண்டும்? பவுல் 'கொஞ்சம்' கூட்டிக்கொள் என்று ஏன் உபதேசம் செய்யவேண்டும்? சிந்திக்க வேண்டாமா?

பழைய ஏற்பாட்டால் தடைசெய்யப்பட்ட, நோவா, லோத்து ஆகியோர் அருந்திய, இயேசு தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டிய, பவுல் கொஞ்சம் சேர்த்துக்கொள் என்று உபதேசம்(?) செய்த அனைத்தும் மதுவகையைச் சேர்ந்த Wine என்னும் திராட்சைரசம் தான். அதற்கான போதுமான பைபிள் ஆதாரங்களை நாம் இங்கே கொடுத்துள்ளோம். இதன் பிறகும் யாரேனும் மறுத்தால் இன்னும் பல கூடுதல் தகவல்களுடன் விரிவான விளக்கமளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கட்டுரை நீண்டுக்கொண்டே செல்வதால் பல கூடுதல் தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Saturday, November 29, 2008

கர்த்தருக்காக பொய் சொல்லலாம்!? - பவுல்

பவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1
யார் இந்த புனித பவுல்? பாகம் 2
இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? பாகம் 3

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன? பாகம் 4
நியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா? பாகம் 5
விருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன? பாகம் - 6



பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 7)

பவுல் கூறுகின்றார் :

தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது. சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? - ரோமர் 3:4-7

பவுல், தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்கைசயாக ஒப்புக்கொள்கின்றாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக புனித வேதமாக இடம்பெற்றுள்ளது.

பவுல் கூறுவதைக் கேளுங்கள் :

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். - 1 கொரிந்தியர் : 9:19-23


தான் ஒரு தந்திரக்காரன் என்று பவுல் ஒப்புக்கொள்வதையும் பாருங்கள் :

அப்படியாகட்டும். நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை. ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். - 2 கொரிந்தியர் 12:16

பைபிள் என்பது மனிதனின் கற்பனையிலும் கட்டுக்கதையிலும் உருவானது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன், வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்று இவ்வளவு தெளிவாகப் பவுலே வாக்குமூலம் தருகின்றார். கிறிஸ்தவ நன்பர்களே மேலே உள்ள பைபிளின் இந்த வாசகத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்று கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்துவிடுகின்றதல்லவா?

கர்த்தருக்காக பொய்சொல்லலாம் என்றும் கர்த்தருக்காக பச்சோந்திதனமாக எல்லாருக்கும் எல்லாமுமாக நடக்கலாம் என்று சொல்லும் பவுலின் வார்த்தைகள் அனைத்தும் கர்த்தரின் மூலம் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு தான் எழுதப்பட்டது என்று எப்படி நம்ப முடியும்? இந்த புதிய கிறிஸ்தவமதத்திற்கு சொந்தக்காரான பவுல், இயேசுவே சொல்லாத - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான, பழைய ஏற்பாட்டிற்கு எதிரான பல புதிய கொள்கையை இயேசு எனக்கு நேரடியாக போதிக்கின்றார் என்று சொன்ன அனைத்தும் பச்சைப் பொய்தானே?

இயேசு எனக்கு அதியசமான முறையில் காட்டியளித்தார். அதன் மூலம் அவர் என்னை தெரிந்தெடுத்துக்கொண்டார் என்று பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொன்ன சம்பவத்திலும் அதற்கு பிறகு சீஷர்களை சந்தித்தாக சொல்லப்பட்ட சம்பவத்திலும் எப்படிப்பட்ட பொய்கள் மலிந்து கிடக்கின்றது என்பதை சென்ற பதிவுகளில் நாம் எடுத்துக்காட்டினோம். நாம் எடுத்துக்காட்டிய அத்தனையும் உன்மை என்பது இந்த பவுலின் கூற்றின் மூலம் நிரூபனமாகின்றதல்லவா?

இதன் பிறகும் கூட பைபிளை இறைவேதம் எனவும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு எங்கேனும் இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள் :

என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும் என்னைச் சகித்துமிருககிறீர்களே. - 2 கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம். அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். - 2 கொரிந்தியர் 11:16,17

மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன். நீங்களே இதற்கு என்னைப் பல வந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்பட வேண்டியதாயிருந்ததே. - 2 கொரிந்தியர் 12:11

இவையாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும் பேசுவது ஆண்டவரல்லர், தம் தைரியத்திலேயே பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக்கொள்கிறார் பவுல். அந்த புத்தி கெட்ட உளறல்களும் பிறரது வற்புறுத்தலுக்காகவும் தன் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாகவும் - அது இடம்பெற்ற புத்தகம் இறைவேதமாகவும் இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளது. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிளை இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்? எங்களையும் நம்பச் சொல்கின்றீர்கள்?

மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள் :

மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது - 1 கொரிந்தியர் 7:12

அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். - 1 கொரிந்தியர் 7:25

ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும், தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன். - 1 கொரிந்தியர் 7:40

பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். - பிலமோன் - 1:19

இந்த வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வருவதென்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டுப் பவுல் என்ற சவுல் தமது சொந்த சரக்குகளைக் கலந்து வேதம் என்று அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்துப் புது மார்க்கம் கண்டார் என்பதை தவிர வேறன்ன?

பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் அந்தத் தடையை இவர் சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவை இவர் செய்தார். இவற்றையெல்லாம் இறைக்கட்டளைப்படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார்.

இப்படியெல்லாம் இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர் அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குகமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர் பலமுறை பல்டியடித்துள்ளதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்:

பின்பு அவர்கள் அவனைநோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாய் கூட்டங்கூடுவார்கள். ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும். அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகெண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும். அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள். விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும்சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும்வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான். - அப்போஸ்தலர் 21:20-26

பைபிள் என்பது பவுலும் அவரது கூட்டாளிகளின் சொந்தத் தயாரிப்பு என்பதும் அதில் கூறுகின்ற போதனைகளில் அவருக்கே உறுதி இல்லை என்பதும் கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும் மோசேயின் நியாயப்பிரமாணங்களை இவர் அலட்சியப் படுத்தியவர் என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா?

பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கையில் கிறிஸ்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்றைக்கு கிறிஸ்தவர்களில் பலர் நாங்கள் பரிசுத்த ஆவியின் உதவியால் நொண்டியை குணமாக்குகின்றோம், குருடர்களை பார்வையுடையவனாக்குகின்றோம், நோயை குணப்படுத்துகின்றோம் என்று பச்சையாக பொய் சொல்லி பல அப்பாவிகளை தங்கள் வழிக்குக் கொண்டுவருவதையும் அன்றாடம் பார்க்கின்றோம். இன்னும் சில போதகர்கள் தன்னை இயேசு ஒரு பெரிய கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கச் சொல்லியுள்ளார் என்றும் வேறு ஒருவர் இயேசு தன்னை டிவி சேனல் தொடங்க சொல்லியுள்ளார் என்றெல்லாம் புளுகுவதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய் சொல்வது தவறல்ல, அது நன்மையான ஒன்றே என்ற பவுலின் மேற்கூறப்பட்ட வசனங்களை வைத்தே அவர்கள் இப்படியெல்லாம் பொய்சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

ஒரு குருடனையே நொண்டியையோ அதிசயம் செய்து குணமாக்குகின்றேன் என்று ஒருபுறம் மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபுறம் இதே கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்காக மருத்துவமணைகளை நடத்துவது ஏன்? மக்களை ஏமாற்றத்தானே? அப்படி குருடணை குணமாக்குகின்றேன் - நொண்டியை நடக்க வைக்கின்றேன் என்று சொல்லக்கூடியவர்கள் தாங்கள் செட்டப்செய்து வைத்துள்ளவர்களைத்தான் குணமாக்குவதாக தங்களது நிகழ்ச்சிகளில் காட்டுவார்களே யொழிய நாம் ஒருவரைக் கொடுத்து இந்த நொண்டியை குணமாக்குங்கள், இந்த பார்வையுடையவனை பார்வடையச் செய்யுங்கள் என்று சொன்னால் அவர்களால் முடியுமா? (இதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களிடமும் சவாலாகவே கேட்கின்றோம்) ஆனால், முடியாது! காரணம் அவை அனைத்து மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களால் சொல்லப்படும் பச்சைப் பொய்! இதை மறுக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் பிறகு எதற்கு MBBS, MD, மருத்துவ கல்லூரி, மருத்துவ படிப்பு? இவற்றை எல்லாம் விட்டு விட்டு கிறிஸ்தவ போதகராக மாறி இந்த வேலையை செய்யத் தொடங்கி விடலாமே!

உன்மை இவ்வாறிருக்க இதையும் மீறி இன்றும் இவற்றை இவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய்சொல்லி மக்களை ஏமாற்றி கிறிஸ்தவத்தின் பக்கம் எப்படியாவது அழைத்தால் அது தவறல்ல என்று பவுல் சொன்ன மேற்கூறப்பட்ட வசனங்கள் தானே அடிப்படை?

அது மட்டுமல்ல பல முஸ்லீம்கள் கிறிஸ்தவராக மாறினர், முஸ்லீம் போதகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார், ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து அதிசயமாக சந்தித்து அவருக்கு நீங்காத நோயை நீக்கினார், அதனால் அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்று இன்றைய கிறிஸ்தவர்கள் தங்கள் தளங்களில் எதையாவது எழுதிவைப்பதற்குக் காரணம் கர்த்தருக்காக பொய்சொல்லி கிறிஸ்தவத்திற்கு மகிமை ஏற்படுத்தலாம் என்ற பவுலின் இந்த வசனங்கள் தானே?

மொத்தத்தில் கிறிஸ்தவ மிஷி'நரி'களின் இந்த எல்லாவிதமான ஏமாற்று செயல்கள் அனைத்திற்கும் காரணம் கர்த்தருக்காக பொய்சொல்லலாம் -அதனால் நாம் பாவி என்று தீர்க்கப்படமாட்டோம் - இது போல் நான் பலருக்கும் அவர்கள் போலவே வேடமிட்டு நடித்துள்ளேன் - நானே நம்பாவதவற்றை நான் நம்பியது போல் அவர்களை ஏமாற்றினேன் - என்னை நீங்களும் பின்பற்றுங்கள் - என்று இன்றைய கிறிஸ்தவமதத்தின் சொந்தக்காரரான பவுல் சொன்ன இந்த தவறான உபதேசங்கள் தானே?

இவற்றைத்தான் பவுல் மற்றொரு வசனத்தில் மிகத் தெளிவாக சொல்லுகின்றார் :

இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோப்படுகிறேன், இன்னமும் சந்தோப்படுவேன். பிலிப்பியர் : 1:18

இப்பொழுது உன்மை புரிகின்றதா? எப்படியாவது - பொய்யைச் சொல்லியாவது - வஞ்சகம் செய்தாவது - கிறிஸ்தவத்தைப் பரப்பியாக வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுகின்றார் என்றால் என்ன அர்த்தம்? சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!

இப்படி புதுமார்க்கம் கண்ட பவுலை எப்படி பரிசுத்த ஆவியால் பேசக்கூடியவர் என்றும், அவர் எழுதியதெல்லாம் புனித புத்தகம் என்றும் நம்ப முடியும்? யோசிக்க வேண்டாமா கிறிஸ்தவர்களே! இந்த பவுல் சொன்ன புதிய மார்க்கத்தை - பொய்யான போலியான மார்க்கத்தை விட்டு வெளியேறி சத்திய இஸ்லாத்தின் கருத்துக்களை சற்று ஆய்வு செய்யுங்கள்! சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

தொடரும்...

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Tuesday, November 18, 2008

விருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன?

பவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1

யார் இந்த புனித பவுல்? பாகம் 2

இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா? பாகம் 3

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன? பாகம் 4

நியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா? பாகம் 5


பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 6

விருத்தசேதனம் (சுன்னத்) என்பது எந்த அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த, பல பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து மனிதனைத் பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த முறை என்பது பலரும் அறிந்ததே. விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்திலும் இதை யாராலும் மறுக்க முடியாது என்பதோடு இதை அனைவரும் செய்ய வேண்டும் என்றே மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

விருத்தசேதனம் என்ற முறை முதன் முதலில் கர்த்தரால், ஆபிரகாம் மூலம் அவர் காலம் முதல் இனி பிறக்கும் ஆண்மக்கள் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்டது என்று பைபிள் கூறுகின்றது. அதை பழைய ஏற்பாட்டு வசனங்கள் பின்வருமாறு உறுதிபடுத்துகின்றது:

'உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். - ஆதியாகமம் 17: 6

நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கைத் தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன் - ஆதியாகமம் 17:7 (WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பு)
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். - ஆதியாகமம் 17:10-11

உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணவேண்டியது அவசியம். இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. - ஆதியாகமம் 17:13

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். - ஆதியாகமம் 21:4

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். - லூக்கா 2:21

விருத்தசேதனம் என்பது கர்த்தரால், முடிவில்லாத - நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்ட - கண்டிப்பாக அனைவரும் செய்யவேண்டும் - என்று வலியுறுத்தப்பட்ட ஒரு சட்டம் என்பது மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தப்படுகின்றது.

ஆனால், இயேசுவை அதிசயமாக தரிசித்ததாக (?) ஒரு பொய்யைச்சொல்லி தன்னை கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்று சொல்லிக்கொண்ட பவுல், நியாயப்பிரமாணங்களை - மோசேயின் சட்டங்களை பின்பற்றுவது தனது புதிய கொள்கையின் படி தேவையற்றது என்று போதித்ததுடன் அதை பின்பற்றுபவன் இரட்சிப்பை பெற முடியாது என்றும் கூறினார் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மக்களை இயேசு போதித்த கொள்கையிலிருந்து வழிகெடுக்க பவுல் கையில் எடுத்த மிக முக்கியமான நடைமுறை, கர்த்தரால் அனைத்து ஆண்மக்களுக்கும் செய்யப்படவேண்டிய நித்திய உடன்படிக்கை என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட விருத்தசேதனம் என்ற முறையையே! காரணம் அன்றைய கால மக்கள் எந்த சட்டத்தை பின்பற்றினார்களோ இல்லையோ அனைத்து ஆண்மக்களுக்கும் கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று கர்த்தரால் வலியுறுத்தப்பட்ட விருத்தசேதன முறையை மிக அவசியமானது என்றென்னி செய்துவந்தனர். காரணம் அதை விடுபவன் 'ஜனத்தில் இராதபடிக்கு அருப்புண்டு போவான்' என்று கர்த்தர் இட்ட சாபமே என்பதை பைபிளின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது :

நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். - ஆதியாகமம் 17:14

இந்த அளவுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்ட, கர்த்தரின் இந்த நித்திய உடன்படிக்கையை விட்டும் மக்களை திசைத்திருப்பி விட்டால் தனது தவறான கொள்கைகளை இலகுவாக திணித்துவிடலாம் என்ற எண்ணத்துடன், தனது புதிய கொள்கையின் மூலம் இதை தேவையற்ற ஒன்று - இதை செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை என்று போதிக்கத் தொடங்கினார் பவுல். அதுவும் இந்த தவறான கொள்கையை காத்தரின் பெயராலும், பழைய ஏற்பாட்டை தானும் பின்பற்றியதுடன் மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்திச் சொன்ன இயேசுவின் பெயராலும் போதிக்கத் தொடங்கினார் :

இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒருபிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். - காலத்தியர் : 5: 2

கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். - காலத்தியர் : 5: 6

பவுல் சொல்வது போன்று விருத்தசேதனம் செய்வதால் கிறிஸ்துவினால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது என்றால் அதை பவுலின் காலத்திலேயே வாழ்ந்த இயேசு கிறிஸ்துவே போதித்து விட்டு சென்றிருப்பாரே? அவர் யாரையும் செய்யாதீர் அதனால் எந்த ஒரு பலனும் - புண்ணியமும் இல்லை என்று கூறியிருப்பாரே? ஏன் அப்படி கூறவில்லை. மாறாக, நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட சட்டங்களை செய்யாதே என்று போதிப்பவன் வழிகேடன் - எனது கொள்கைக்கு மாற்றமானவன் என்று தானே போதித்தார் என்பதை எல்லாம் கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

நித்திய உடன்படிக்கை என்றால் என்ன?
அது மட்டுமல்ல மேலே நாம் எடுத்துக்காட்டிய ஆதியாகமம் வசனங்களில் இந்த விருத்தசேதன முறையை கர்த்தர் மனிதனுக்கு ஏற்படுத்திய நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்றால் என்ன?

'இனி மாற்றப்படவே முடியாத நிலையான ஒன்று' அல்லது 'முடிவில்லாத ஒன்று' என்றும் அர்த்தம் வரும். இது ஏதோ சக மனிதர்களுக்குள் செய்துக்கொண்ட ஒப்பந்தமாக பைபிள் சொல்லவில்லை. மாறாக கடவுள் ஆபிரகாமுக்கு செய் என்று கட்டளை இட்டதுடன் இதை அனைவரும் செய்தே ஆகவேண்டும் என்றும் இது நித்திய உடன்படிக்கை - இதை செயல்படுத்தாதவன் 'அறுப்புண்டு போவான்' என்று வலியுறுத்தவும் செய்கின்றார். இதை இயேசுவும் செய்திருக்கின்றார். (பைபிளின் படி) அனைவரும் நியாயப்பிரமானங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியிருக்கின்றார். அதை நானும் பின்பற்றத்தான்வந்துள்ளேன், நீங்களும் பின்பற்றுங்கள் என்றும் சொல்லியிருக்கின்றர். ஆனால் இவற்றுக்கெல்லாம் மாற்றமாக, அதே இயேசுவின் பெயராலேயே கர்த்தரின் மாற்றப்படமுடியாத நித்திய உடன்படிக்கையை எதிர்த்து தனது தவறான கொள்கையை போதிக்கின்றார் பவுல். இவரின் இந்த தவறான வழிகாட்டுதலைத் தான் இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர்.

சரி இவரின் இந்த கூற்றிலாவது உறுதியாக இருந்தாரா? என்றால் அதுவும் கிடையாது. இவர் விருத்தசேதனம் தேவையில்லை என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலத்திலேயே, வேறு ஒருவருக்கு இவரே விருத்தசேதனம் செய்துவிட்டதாக அப்போஸ்தலருடைய நடபடிகள் கூறுகின்றது:

'அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.' - அப்போஸ்தலர் 16 : 3

கடவுலின் பெயரால் போதிக்கக்கூடியவர் - உன்மையில் அது தான் சரியானதாக இருந்தால் அதை யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சுறுதியுடனல்லவா போதித்திருக்க வேண்டும்? இவர் சாதாரனமான பாமரனாக இருந்தால் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால், பரிசுத்த ஆவி என்ற 'பவர் ஃபுல் சக்தி' தனக்கு வழிகாட்டுகிறது(?) - அது தன்னைப் பாதுகாக்கின்றது(?) என்று சொல்லிக்கொண்டவர், அதன் மூலம் பல அதிசயங்களை செய்தவர்(?) மற்றவனுக்கு பயந்து செயல்படவேண்டிய அவசியம் என்ன? இந்த பொய்யான நயவஞ்சகத்தனமான வேலை எதற்கு? விருத்தசேதனம் தேவையற்றது என்றால் அதை ஏன் அடுத்தவனுக்கு செய்து விடவேண்டும்? தனது கொள்கை உன்மையானதாக இருந்தால் அதையாருக்கும் அஞ்சாமல் உரத்து சொல்லவேண்டியது தானே? இதன் மூலமே பவுல் எப்படிப்பட்டவர் என்பது புரிகின்றதல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே!(பவுல் எப்படிப்பட்டவர் என்பதற்கு அடுத்த கட்டுரைகளில் விரிவான விளக்கம் வருகின்றது இறைவன் நாடினால்...)

இவரைப் போன்றவர்களைக் குறித்து தான் இயேசு கூறினார் :

ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். - மத்தேயு 5:19

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. - மத்தேயு 23:23

இந்த இயேசுவின் போதனைகள் அனைத்தும் (பரிசேயரைச் சேர்ந்த ) இந்த பொய்யர் பவுலுக்குப் பொருந்துகின்றதா இல்லையா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே! நீங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகின்றோம் என்றப்பெயரில் இயேசுவைப் பின்பற்றுகின்றீர்களா அல்லது பவுலைப் பின்பற்றுகின்றீர்கள் சிந்தியுங்கள் சகோதரர்களே!


மீண்டும் நினைவுட்டுகின்றோம். இந்த விருத்தசேதனம் :
கர்த்தரால் சொல்லப்பட்ட கட்டாயம் செய்யபட வேண்டிய நித்திய உடன் படிக்கை என்று பைபிள் கூறுகின்றது. இந்த உடன்படிக்கையில் மாற்றமோ - முடிவோ ஏற்படாதவகையில் இருக்கவேண்டும் என்பதற்காக இது முடிவில்லாத - நித்திய - உடன்படிக்கை என்று கார்த்தரால் சொல்லப்பட்டது. 'இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனதுசந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கைத் தொடரும். (ஆதியாகமம் 17:7 (WBTC மொழிப்பெயர்ப்பு))

விருத்தசேதனம், இயேசுவால் செயல்படுத்தப்பட்டதுடன், (விருத்தசேதன சட்டம் இடம்பெற்றுள்ள) நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டவைகளை அனைவரும் செயல்படுத்த வேண்டும் என்றும், அவைகளில் சொல்லப்பட்டவைகளை செய்யாதவனும், தானும் பின்பற்றாததுடன் மற்றவர்களை பின்பற்றவேண்டாம் என்று சொல்பவனும் வழிகேடன் என்றும் சொல்லப்பட்டது.

மட்டுமல்ல, மருத்துவ ரீதியாக இது மனிதனுக்கு பயனள்ள முறை என்பதும், பாலியல் ரீதியான பல பிரச்சனைகளிலிருந்து மனிதனைப் பாதுகாக்கக்கூடிய மிக சிறந்த வழிமுறை என்றும் மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

இவற்றில் எந்த ஒன்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சம்பவத்தின் மூலம் இயேசுவை தரிசித்தேன் என்று சொல்லிக்கொண்ட பவுலின் தவறான கொள்கையையே தற்போது பின்பற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!

கார்த்தரின் உடன்படிக்கை என்ற வகையிலாவது அல்லது இயேசுவின் போதனை என்ற வகையிலாவது, அல்லது மருத்துவரீதியிலாவது - எப்படிப் பார்த்தாலும் எல்லாவகையிலும் நன்மை பெற்றுத்தரக்கூடிய இந்த முறையை - செயல்படுத்தவேண்டிய இந்த சட்டத்தை - பவுல் சொன்னார் என்பதற்காக உங்களின் அறியாமையால் நன்மையை இழந்துக்கொண்டிருக்கின்றீர்கள் சகோதரர்களே!

இப்படி நீங்கள் பவுலை பின்பற்றுவதால் (இயேசுவின் போதனைப்படி) மரணத்திற்குப் பிறகு வரும் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பதும் அரிது, விஞ்ஞானிகள் சொல்வது போல் இந்த முறையை கைவிடுவதால் இவ்வுலக வாழ்விலும் பல சிரமங்கள்... இது தேவையா? சிந்தியுங்கள் சகோதரர்களே!.

இயேசுவின் பெயரால் அவருக்கு எதிராக இன்னும் எத்தனை எத்தனை குளறுபடிகளை பவுல் செய்துள்ளார் என்பதை அடுத்தடுத்து பதிவுகளில் பார்ப்போம்.

கர்த்தர் நாடினால் அடுத்த பதிவில் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.