கிறிஸ்தவ தளத்திற்கு பதில்
தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர்
சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றி தான் செய்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தை மிக ஆழமாக ஆராய்ந்து அதில் உள்ள முரண்பாடுகளையும், குழப்பங்களையும் அதில் ஏற்படக்கூடிய சந்தேகங்களையும் எடுத்துரைத்ததன் மூலம் உலக கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த கட்டுரைகள் பல இன்றைய இஸ்லாமியப் பிரச்சாரகர்களுக்கு மிகவும் உறுதுணையாகவும், உதவியாகவும் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகத்தான்
WHAT WAS THE SIGN OF JONAH? என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அந்த புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை
'கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை' என்ற தலைப்பில் சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டது.
இந்தக் கட்டுரைக்கு எப்படியேனும் பதில் அளித்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், உமர் என்ற கிறிஸ்தவர் அந்தப் புத்தகத்தின் கருத்துக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத, ஒரு கட்டுரையை ஆன்சரிங் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து எடுத்து மொழிபெயர்த்து
'அஹமத் தீதாத்திற்கு பதில்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். ஒரு கட்டுரைக்கு 'பதில்' என்று போடுவதற்கு முன் அந்தக் கட்டுரைக்கும் அந்த பதிலுக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? அது சரியானது தானா? அந்த பதில் பொருத்தமான பதில் தானா? என்பதை சற்று படித்துப்பார்ப்பது தான் ஒரு மொழி பெயர்ப்பளருக்கு அழகு. அது அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களை எப்படியாவது திருப்தி படுத்தியாக வேண்டும் என்பதற்காக
(பைபிளில் சொல்லப்பட்டுள்ள நோவா, லோத்து, இயேசு போன்றோர் அருந்தியதாகச் சொல்லப்படும்) திராட்சைரசத்தை (WINE) அருந்தி விட்டு போதை மயக்கத்தில் மொழி பெயர்ப்பது அறிவுடமையாகாது என்பதை சம்பந்தப்பட்ட கிறிஸ்தவருக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர் பதில் என்றப் பெயரில் வெளியிட்டுள்ள கட்டுரை எந்த அளவுக்கு அபத்தமானது, முரண்பாடனது - குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்.
இயேவிடம் ஒரு அடையாளத்தைத் தாரும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :
இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39
அஹமத் தீதாத் அவர்கள் தனது புத்தகத்தில், மேற்சொல்லப்பட்டுள்ள இயேசுவின் கருத்தை மிக ஆழமாக ஆராய்ந்து உண்மையில் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் இந்தக் கூற்றுப்படி அவர் மரித்திருக்கவே முடியாது என்பதுடன் 3 இரவு 3 பகல் என்ற கணக்கும் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துப் போகவில்லை என்பதை மிகத் தெளிவாக தனது புத்தகத்தில் நிரூபிக்கின்றார்கள். ஆனால் அதை நியாயமான பார்வையுடன் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் எப்படியாவது இதை மறுத்தாக வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் பதில் எழுதத் துணிந்த அந்த கிறிஸ்தவர் தனக்குத் தானே முன்னுக்குப் பின் முரணாக முரண்பட்டு எழுதுகின்றார் :
Quote:
//இந்த தலைப்பை பார்த்தவுடன், அந்த தலைப்பைப் பற்றி மிகவும் அதிகமாக ஆராய்ச்சி செய்து அவர் எழுதியிருக்கக்கூடும் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால், உன்மையில் தீதத் அவர்கள் தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் சொல்லாமல், இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி, இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். //
இப்படி கூறக்கூடிய இந்த எழுத்தாளர் முதலில் பைபிளில் உள்ள யூதர்கள் கேட்ட கேள்வியையும், அதற்கு இயேசு அளித்த பதிலையும், இது பற்றி அஹமத் தீதாத் சொல்லவரும் விளக்கத்தையும் சற்று நிதானமாக படித்திருக்க வேண்டாமா?
யூதர்கள் கேட்டது என்ன?
வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். - (மத்தேயு 12:38) அதற்கு இயேசு என்ன பதில் சொன்னார்?
யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சென்னதுடன் அடுத்த இடத்தில் அதே இயேசு சற்று விளக்கமாக 'யோனா
இரவும் பகலும் மூன்றுநாள் (3 இரவு 3 பகல்) ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் (3 இரவு 3 பகல்) பூமியின் இருதயத்தில் இருப்பார்.' என்றார்.
இங்கே யூதர்களின் கேள்வி அதிசயத்தைப் பற்றியது. அதற்கு இயேசு சொன்ன பதில் யோனா தீர்க்கதரிசியின் அடையாளம் தான் உங்களுக்குத் தருவேன் என்கிறார். அதாவது
'யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல நானும் பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? யோனா என்ன அதிசயம் செய்தார்? இயேசுவால் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யோனா அப்படி என்ன அதிசயம் செய்துவிட்டார்? 3 இரவும் 3 பகலும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். எப்படி இருந்தார்? அதிசயமான முறையில் உயிரோடு இருந்தார். எந்த அளவுக்கென்றால் சாதாரனமாக ஒருவன் இதுபோன்ற நிலைக்கு ஆளானால் எப்படி அவனால் உயிருடன் இருக்க முடியாதோ அதற்கு நேர் மாற்றமாக இறை அதிசயத்துடன் எந்த ஒரு பாதிப்பும் இன்றி மீனின் வயிற்றில் உயிருடன் இருந்து உயிருடன் வெளிவருகின்றார். அதே போன்று நானும் இருப்பேன் என்று இயேசு, யோனாவை உதாரனமாக காட்டி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றார்.
இங்கே இயேசு சொல்லக்கூடிய 'யோனாவின் அதிசயமேயன்றி...' என்ற வார்த்தையின்படியும் 'யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல' என்ற வார்த்தையின்படியும் பார்த்தால் அவரும் உயிரோடுதான் இருந்திருப்பார் - இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல இயேசுவிடம் யூதர்கள் கேட்ட கேள்வி என்ன? ஒரு அடையாளத்தைத் தாரும் என்று. அந்த கேள்விக்குத்தான் இயேசு, யோனாவைப் போன்றே நானும் பூமியல் இருதயத்தில் இருப்பேன்' என்று ஒரு அடையாளத்தைச் சொல்கின்றார். அதாவது அவர்கள் கேட்டது அடையாளத்தைப் பற்றியது. அதற்கு இயேசு சொன்னது யோனாப் போன்று அதே அடையாளத்தைச் செய்வேன் என்று. இடையில் உள்ள வித்தியாசம் அவர் மீனின் வயிற்றில் இருந்தார். இவர் பூமியின் இருதயத்தில் இருப்பார். ஆனால் இருவரும் உயிர் வாழ முடியாத இடத்தில் உயிரொடு இருப்பதான ஒரே அதிசயத்தைத்தான் செய்வார்கள். இது தான் இயேசு சொல்லவரும் கருத்து.
இதற்கு இவ்வாறு பொருள் கொள்ள கூடாது, இந்த வசனத்தின் மூலம் 3 இரவு 3 பகல் என்றக் காலக்கணக்கை மட்டும்தான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால் சாதாரனமாக இரவும் பகலும் 3 நாள் என்று இயேசு சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே? நாள் கணக்கைச் சொல்வதில் என்ன அடையாளம் இருக்கின்றது? யோனாவின் அதிசயத்தில் நாள் கணக்கிற்கு என்ன முக்கியத்துவம் இருக்கின்றது? யோனா 3 நாளுக்கு பதில் 4 நாட்கள் இருந்திருந்தாலும் 1 நாட்கள் இருந்தாலும் 2 நாட்கள் இருந்திருந்தாலும் அவரது அதிசயம் நாள் கணக்கை வைத்தா அல்லது அவர் மீனின் வயிற்றில் உயிருடன் இருந்ததை வைத்தா? யோனா இரவும் பகலும் 3 நாட்களுக்கு பதில் இரவும் பகலும் 4 நாட்களோ அல்லது அல்லது 5 நாட்களோ இருந்திருந்தால் அவர் இறந்திருப்பாரா? இங்கே நாள் கணக்கு முக்கியமா அல்லது அவர் உயிருடன் இருந்த அதிசயம் முக்கியமா? ஏன் யோனாவை குறிப்பிட்டுச்சொல்லி அவர் எப்படி இருந்தாரோ அப்படி இருப்பேன் என்று இயேசு சொல்ல வேண்டும்? அதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் என்ன?
எனவே, யோனாவின் அதிசயம் தான் அதில் முக்கியமாக கணக்கிடப்பட வேண்டுமே யொழிய நாள் கணக்கை மட்டும் முக்கியத்துவப்படுத்தக் கூடாது. யோனா மீனின் வயிற்றில் உயிருடன் இருந்தது போல நானும் உயிருடன் இருப்பேன் எனபது தான் இதன் பொருள். இதில் என்ன குழப்பம் இருக்கின்றது.
இந்த கிறிஸ்தவர் குற்றம் சுமத்துவது போல் எங்கே '
இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்கின்றார்' அஹமத் தீதாத்? இது பச்சைப் பொய் இல்லையா? இயேசுவின் வார்த்தையை மறுப்பதற்கு அஹமத் தீதாத் முயற்சி செய்கின்றாரா? அல்லது இவர் முயற்சிக்கின்றாரா?
Quote:
//அவரது வாதங்கள் அனைத்தும் அவரது இரண்டு யூகங்களுக்குள் அடங்கிவிடும். முதலாவதாக, யோனா மீனின் வயிற்றில் அந்த மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால், சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை கல்லரையில் வைத்த பிற்பாடு இயேசு உயிரோடு இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உயிரோடு எழுந்திருந்தால், கல்லரையில் இருந்த அந்த இடைப்பட்ட காலமானது மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இருக்காது என்பது தான். //
உங்கள் குருட்டு நம்பிக்கையையும் முரண்டு பிடித்தலையும் ஒதுக்கி வைத்து விட்டு அஹமத் தீதாத் யூகத்தின் அடிப்படையில் சொல்கின்றாரா அல்லது ஆதாரத்துடன் சொல்கின்றாரா என்பதை அவரது புத்தகத்தை முழுவதுமாக மீண்டும் ஒரு முறை படியுங்கள். உன்மை புரியும்.
Quote:
//அஹமத் தீதத் தன் புத்தகத்தில், மேலே சொன்ன விவரங்களை எடுத்து, புதிய ஒரு வியாக்கீனத்தைத் தருகிறார், அதாவது 'யோனா எப்படியோ... அதே போல மனுஷகுமாரனும் (As Jonah was ... so shall the Son of man be)" என்று கூறுகிறார்.
இயேசு தனக்கும் யோனாவிற்கும் இருக்கும் ஒற்றுமை என்பது அவர் மூன்று நாட்கள் எப்படி அந்த மீனின் வயிற்றில் இருந்தாரோ, அது போல, தானும் கல்லரையில் இருப்பார் என்பதைப் பற்றியதே அல்லாமல் வேறுவகையில் இல்லை. //
அஹமத் தீதாத் சுயவியாக்கியானம் தருகின்றாரா அல்லது இவர் சுயவியாக்கியானம் தருகின்றாரா? 'யோனாவைப் போல நானும் இருப்பேன் என்றால் என்ன அர்த்தம்? யோனா எப்படி இருந்தாரோ அப்படி இருப்பேன் என்று வராமல் வேறு என்ன அர்த்தம் வரும்? நீங்கள் காலம் காலமாக குறுட்டு நம்பிக்கையில் இருக்கின்றீர்கள் என்பதற்காக உங்களது தவறான நம்பிக்கைக்கு மாற்றமான பைபிளின் வசனத்தை வைத்து தெளிவு படுத்தினால் அது சுயவியாக்கியனமாகிவிடுமா?
'பைபிளில் இயேசு சொன்ன வார்த்தையை நம்பமாட்டேன், நாங்கள் காலம் காலமாக என்ன நம்பிக்கையில் இருக்கின்றோமோ அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான் பைபிள் வசனத்தை அர்த்தம் கொள்வோம்' என்றால் பிறகு ஏன் புரோட்டஸ்ட்டன்டாக மாறினீர்கள்? பழைய ரோமன் கத்தோலிக்க மதத்திலேயே இருந்து ரோமன் கத்தோலிக்க பழக்க வழக்கங்களையே பின்பற்றி இருக்கலாமே? பைபிள் வசனம் உங்கள் நம்பிக்கைக்கு சாதகமாக இருந்தால் 'ஆஹா! என்ன அருமையான விளக்கம்' என்பீர்கள், பாதகமாக இருந்தால் 'சுயவியாக்கியானம்' என்று சொல்லிவிடுவீர்களோ?
Quote :
// ஆனால், இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு, மற்ற விதங்களில் கூட யோனாவும் இயேசுவும் ஒன்று தான் என்றுச் சொல்கிறார், எப்படியென்றால், அந்த மூன்று நாட்கள் எப்படி யோனா உயிரோடு இருந்தாரோ அதே போல, இயேசுவும் என்று தன் சொந்த கற்பனையைச் சொல்லியுள்ளார் //
இப்படி எழுத இந்த கிறிஸ்தவ எழுத்தாளருக்கு எப்படி மனம் வந்தது? சரி எழுதியவர் தான் எழுதிவிட்டார், அதை மொழி பெயர்த்த மொழி பெயர்ப்பாளருக்கு எங்கே போனது புத்தி? அதாவது 'இந்த
முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு' என்று சொல்லுகின்றார். அது என்ன முக்கியமான விவரம் என்றால், 3 இரவு 3 பகல் (Time Factor) என்ற கால அளவை மட்டும் தான் இந்த வசனம் குறிக்கும் என்பதை அஹமத் தீதாத் விட்டுவிட்டாராம். அஹமத் தீதாத் எப்பொழுது அதை விட்டார். இந்த விளக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்து அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் விவாதமே இந்த 3 இரவு 3 பகல் என்ற (Time Factor) கால அளவைப் பற்றித் தானே? இதை புரியாமல் எப்படி இவர் மொழி பெயர்த்தார். அஹமத் தீதாத்தைப் பொருத்தவரை இந்த மத்தேயு 12:39 வசனத்தின் படி, யோனவின் அடையாளம் போன்று இயேசு உயிருடன் இருக்கவேண்டும், அடுத்து 3 இரவு 3 பகல் என்பது இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கு ஒத்துப்போகாது என்பது தான். அதைப் பற்றித்தான் விரிவாக விளக்கமளிக்கின்றார். ஆனால் இந்தக் கிறிஸ்தவரோ அஹமத் தீதாத் அந்த (Time Factor) கால அளவை சொல்லாதது போன்று மக்களை ஏமாற்றத் முயற்சிக்கின்றார். இதற்காகத்தான், நாம் சொல்கின்றோம் பைபிளில் சொல்லப்பட்டுள்ள திராட்சை ரசத்தை (Wine) அருந்துவதை நிறுத்திவிட்டு மொழிபெயர்க்கட்டும் என்று.
Quote:
//இயேசு சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக நாம் படிப்போமானால், தனக்கும் யோனாவிற்கும் சொல்லப்பட்ட ஒற்றுமையானது, அந்த மூன்று நாட்களைப் பற்றி குறிக்குமே அன்றி, வேறு வகையில் குறிக்காது என்பதை புரிந்துக்கொள்ளலாம். //
இது பச்சைப் புரட்டு இல்லையா? 'யோனாவைப் போல' என்று இயேசு சொன்ன வார்த்தை இவர்களது நம்பிக்கைக்கு ஒத்துப் போகவில்லை என்பதால் அந்த அர்த்தம் வராதாம்? முதலில் உங்கள் குருட்டு நம்பிக்கையை தூக்கி போட்டுவிட்டு பைபிளை நன்றாக படித்துப் பாருங்கள். இல்லை என்றால் உங்கள் பழைய ரோமன் கத்தேலிக்க மதத்திற்கே சென்று விடுங்கள்.
Quote:
//எப்படி யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தாரோ அது போல, இயேசுவும் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பார் என்பது தான் சரியான அர்த்தமாகும். //
அதைத்தான் சொல்கின்றோம். இயேசு எப்படி இருப்பார்? உயிரோடா அல்லது இறந்தா? யோனா எப்படி இருந்தார்? உயிருடனா அல்லது இறந்துவிட்ட நிலையிலா? யோனாவின் அடையாளம் போல் நானும் இருப்பேன் என்றால் என்ன அர்த்தம்? யோனா மீனின் வயிற்றில் உயிரோடு இருந்ததும், இயேசு பூமியின் இருதயத்தில் இறந்த நிலையில் இருப்பதும் எப்படி சமமான அடையாளமாக இருக்கும்? இதற்கு ஏன் யோனாவை அடையாளமாக காட்டவேண்டும்? காலக் கணக்கிற்கும் அடையாளத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி எழுதத் துனிந்தார் இந்த கிறிஸ்தவர்?
Quote:
//ஆனால், இதனை தீதத் அவர்கள் சொல்வது போல, வியாக்கீனம் செய்யமுடியாது, அதாவது யோனா எப்படி உயிரோடு இருந்தாரோ அதே போல இயேசுவும் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று வியாக்கீனம் செய்யமுடியாது//
தீதாத் சொல்லவில்லை. பைபிள் சொல்கின்றது. நான் யோனாவைப் போன்று உயிருடன் இருப்பேன் என்று இயேசு சொல்கின்றார். ஆனால் உங்கள் குருட்டு நம்பிக்கை அதை ஏற்க மறுக்கின்றது. அது தான் உன்மை.
Quote:
//அஹமத் தீதத் அவர்கள் சொல்வது போல, இயேசு சொல்லவில்லை, மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படி பொருளும் இல்லை. இன்னும் இதைப் பற்றி மிகவும் தெளிவாக இயேசு வேறு ஒரு இடத்திலும் கூறியுள்ளார். அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்.
Quote:
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14-15) //
அதாவது அஹமத் தீதாத் தவறு செய்து விட்டாராம். உன்மையில் இயேசு சொன்னதற்கு வேறு அர்த்தமமாம். அது என்ன வேறு அர்த்தம்? அதற்கு ஆதாரம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள யோவான் 3:14-15ம் வசனமாம்.
இவர் எடுத்துக்காட்டக்கூடிய இந்த வசனத்திலும் கூட அவர்
உயர்த்தப்படுவேன் - lifted up என்றுத்தான் சொல்கின்றாரேயொழிய இவர் சொல்வது போல் சிலுவையில் அறைந்து மரணமடைந்து பின்னர் உயர்த்தப்படுவேன் என்று செல்லவில்லையே! இந்த வசனம் அஹமத்தீதாத்தின் கருத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கின்றதேயொழிய நீங்கள் சொல்லும் கருத்திற்கோ அல்லது உங்கள் குறுட்டு நம்பிக்கைக்கோ ஆதரவாக இல்லையே!
அதுமட்டுமல்ல, இந்த 'உயர்த்தப்படுவேன்' என்பதற்கு 'சிலுவையில் அறையப்படுதல்' என்று பொருள் கொண்டாலும் அதுவும் இவர்களது வாதத்திற்கு வலுசேர்க்காது. காரணம் சிலுவையில் அறைப்படுவார் என்பதால் அதன் பிறகு அவர் இறந்துவிடுவார் என்று அர்த்தம் கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஏனெனில், சிலுவையில் அறைந்தபின்பும் மரிக்காமல் உயிருடன் இருப்பேன் என்று யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தை வைத்து முன்னறிவிப்பும் செய்கின்றார் இயேசு. அதையே பைபிளில் வரும் அவரது இறுதிகால சம்பவங்களும் உறுதிபடுத்துகின்றது.
அதாவது, இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரது கையிலும் காலிலும்தான் ஆனிகளால் அறையப்பட்டதாக கிறிஸ்தவர்கள் சொல்கின்றார்களேயொழிய வயிற்றிலோ அல்லது நெஞ்சிலோ அல்லது தலையிலோ அறையப்பட்டதாக சொல்லவில்லை. அப்படி இருக்கையில் யாராவது கையிலும் காலிலும் ஆணி அறைந்த சில மணி நேரங்களிலேயே இறந்து போவார்களா? ஒரு நாளோ அல்லது இரண்டுநாட்களோ ஒருவன் சிலுவையில் இருந்தால் முழு இரத்தமும் வெளியேறி இறந்து போக வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பலாம். ஆனால் இயேசு அப்படியா? சில மணி நேரங்களிலேயே இறந்ததாக பைபிள் எழுத்தாளர்கள் சொல்லுகின்றனர். இது எப்படி சாத்தியமாகும்? இன்னும் சொல்லப்போனால், இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் சிலுவையில் அறையப்பட்டதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் அவர்கள் இறந்துபோக வில்லையாம். ஆனால் இயேசு மட்டும் இறந்துவிட்டாராம்?
அது மட்டுமல்ல
'இவ்வளவு சீக்கிரம் ஒருவர் இறப்பாரா' என்று இயேசுவை சிலுவையில் அறைய காரணமானவர்களில் ஒருவரான பிலாத்துவே சந்தேகித்ததாகவும் பைபிள் சொல்கின்றது (பார்க்க லூக்கா 15:44) ஒரு வாதத்திற்காக அப்படியே இறந்தாக வைத்துக்கொள்வோம். அப்படி யாராவது இறந்தால் அவர்களுக்கு இரத்தம் வருமா? இறந்த உடனேயே இரத்தம் உறைந்துவிடும். ஆனால் இயேசுவுக்கு, இறந்தப் பிறகும் இரத்தம் வந்ததாம். இறந்த ஒருவனுக்கு இரத்தம் எப்படி வெளியே வரும்? ஆனால் இயேசுவுக்கு வந்தது என்று பைபிளே சொல்கின்றது :
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்.
உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. (யோவான் 19:31-34)
அதாவது இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட மற்ற இருவரும் இறக்கவில்லையாம். அதனால் அவர்களின் கால் எலும்புகளை முறித்தார்களாம். ஆனால் இயேசு மட்டும் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அவரது கால் எலும்புகளை முறிக்கவில்லையாம். அப்பொழுது ஒருவன் இயேசுவை ஈட்டியால் விலாவிலே குத்தினானாம். உடனே இரத்தமும் தண்ணீரும் வந்ததாம். இறந்தவருக்கு எப்படி இரத்தம் வெளியே வரும்? உறைந்தல்லவா போய்விடும். சற்று சிந்திக்க வேண்டாமா? இயேசு இறந்தார் என்று நம்பினால் இந்த வசனங்களும், யோனாவின் அடையாளம் பற்றிய வசனமும் இன்னபிற வசனங்களும் முரண்படும். இயேசு இறக்கவில்லை என்று நம்பினால் உங்கள் குருட்டு நம்பிக்கை அடிபடும். எது சரி?
இன்னும் சொல்லப்பபோனால் இவர் எடுத்துக்காட்டும் யோவான் 3:14ம் வசனத்தையும் யோனாவின் அடையாளம் பற்றிய வசனத்தையும் ஒத்துப் பார்ப்போமேயானால், இயேசு பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்று சொன்னது இவர் எடுத்துக்காட்டும் வசனத்திற்கு அடுத்து நடக்க இருக்கும் சம்பவம். இவர் எடுத்துக்காட்டும் வசனத்தின் படி முதலில் சிலுவையில் அறையப்படுவார். யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தோடு ஒப்பிடும் போது அவர் உயிருடனேயே சவக்கிடங்கில் (பூமியின் இருதயத்தில்) இருப்பார். 3 இரவு 3 பகல் கழித்து பின்னர் உயிருடன் திரும்ப எழும்புவார். இதில் இவர்களது நம்பிக்கைக்கு எங்கே ஆதாரம் இருக்கின்றது? இவர்கள் நம்பிக்கைப் படித்தான் இயேசு இறந்து போக வேண்டுமே. ஆனால் இதில் எந்த வசனத்திலும் இயேசு இறப்பார் என்பதற்கு சான்றே இல்லையே!
இவர் எந்த வசனத்தை தனக்கு சாதகமான வாசனமாக எடுத்து வைக்கின்றாரோ அதுவும் அவருக்கு எதிராகவே அமைந்துவிட்டது என்பது தான் உன்மை.
Quote:
//மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்ட ஒற்றுமையானது 'உயர்த்தப்பட்டது -LIFTED UP' என்பதை பற்றி என்பது தெளிவாக விளங்கும். மோசே எப்படி சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதுபோல, இயேசுவும் உயர்த்தப்படவேண்டும். //
உங்கள் வாதப்படியே உயர்த்தப்படட்டும். அதன் பிறகு உயிரோடு இருந்தாரா இல்லையா?
Quote:
//தீதத் அவர்களின் லாஜிக்கை (Logic - வாதத்தை) இயேசு சொன்ன எடுத்துகாட்டோடு சம்மந்தப்படுத்தினால், அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும். அஹமத் தீதத் அவர்களின் இந்த வாதம் வாதத்திற்கு பொருத்தமானது அல்ல.//
சம்பந்தமே இல்லாமல் ஏன் உளறுகின்றீர்கள்? தீதாத் எப்பொழுது இப்படி சொன்னார்? எங்கே சொன்னார்? நீங்களாக கற்பனை செய்துக்கொண்டு ஏன் தீதாத் அவர்களின் தலையில் கட்டுகின்றீர்கள்? ஒரு வேளை அவர் மரணமடைந்துவிட்டார் என்ற தைரியமோ?
அடுத்து இன்னொறையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அதாவது
'உயர்த்தப்படுதல்' என்றால் என்ன என்பதில் கூட இவர் சரியான குழப்பத்தில் இருக்கின்றார் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. அதாவது, இவர் எடுத்துக்காட்டிய யோவான் 3 : 14ம் வசனத்தில் இயேசு பின்வருமாறு கூறுகின்றார்:
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:14
இந்த இடத்தில்
உயர்த்தப்பட்டது என்றால் எப்படி உயர்த்தப்பட்டது? மோசே எப்படி உயர்த்தினார்? வானத்திற்கு உயர்த்தினாரா அல்லது ஒரு கம்பத்தின் மேல் உயர்த்தினாரா? அதை எண்ணாகமம் 21:9ல் பின்வருமாறு சொல்லப்படுகின்றது.
அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான், சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான்.
அதாவது ஒரு உயிரே கொடுக்கப்படாத வெண்கலத்தால் செய்யப்பட்ட பாம்பை மோசே செய்து ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வைப்பதைத்தான் இயேசு
'மேலே உயர்த்தியது போல' என்று சொல்கின்றார். அதே போல் நானும் சிலுவையில் அறையப்படுவேன் என்று சொல்லுகின்றார். இப்படித்தான் இதற்கு பொருள் கொள்ள வேண்டும் என்று இந்த கிறிஸ்தவரே ஒரு இடத்திலும் சொல்கின்றார்: //
அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்// என்கிறார். அதாவது 'உயர்த்தப்படுவேன்' என்பதற்கு 'சிலுவையில் அறையப்படுதல்' என்பது தான் பொருள் என்று இவரே சொல்கின்றார்.
அப்படி சிலுவையில் அறயப்பட்டதன் பிறகு உயிராக இருப்பாரா அல்லது இறந்துவிடுவாரா என்பதற்கு இந்த யோவான் 3:14 வசனத்தில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. ஆனால் மத்தேயு 12:39 ன் 'யோனாவின் அடையாளம்' பற்றிய வசனத்தோடு இந்த வசனத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் சிலுவையில் அறைந்ததன் பிறகு மரணமடையாமல் உயிருடன் தான் இருப்பார் - இருக்கவேண்டும் என்பது புலனாகிறது.
ஆனால்
'உயர்த்தப்படுதல்' என்ற வார்த்தையை இவர் முன்னுக்குப் பின் முரணாக புரட்டுகின்றார் :
அதாவது ஒரு இடத்தில் 'உயர்த்தப்படுதல்' என்பதற்கு சிலுவையில் அறையப்படுதல் என்கிறார்:
//தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்// என்கிறார். அதே கருத்தை மற்றோரு இடத்தில்
//'தூணில் உயர்த்தப்படுதல்' என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார்' // என்கிறார்
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக, 'உயர்த்தப்படுதல்' என்பது இறந்த பிறகு 'உயர்த்தப்படுதல்' என்று குழப்புகின்றார்:
//அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும்// என்கிறார்.
அதாவது இந்த இடத்தில் 'இயேசு
உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்திருக்க வேண்டும்' என்று சொல்வதன் மூலம், உயர்த்தப்படுதல் என்பது இறந்தப் பிறகு உயர்த்தப்படுதல் என்பதைத்தான் குறிக்கும், சிலுவையில் அறையப்படுதலைக் குறிக்காது என்கிறார். இவரது வாதத்தின் படி பார்த்தால் இயேசு இறந்த பிறகுதான் சிலுவையிலேயே ஏற்றி இருக்க வேண்டும். அப்படியா நடந்தது? இல்லை இல்லை இவரது வாதப்படி இந்த உயர்த்தப்படுதல் என்றால் இறந்த பிறகு உயர்த்தப்படுதல் என்றுதான் அர்த்தம் வரும் என்றால் மோசேயினுடைய இந்த கம்பத்தில் ஏற்றப்பட்ட சம்பவத்திற்கும் வானத்திற்கு உயர்த்தப்படுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கின்றதா? ஏன் இந்த முரண்பாடு? காரணம் எப்படியாவது தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பைபிள் வசனத்தை வளைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம். இது தேவையா? மோசேயின் அந்த சிறு சம்பவத்தைப் பற்றியே சரியான அறிவில்லாமல் அஹமத் தீதாத்திற்கு பதில் என்று எழுத வந்துவிட்டனர் இந்த மடையர்கள்.
இங்கே அஹமத் தீதாத்துடைய வாதம் பொருத்தமற்றதா அல்லது இவரது வாதம் பொருத்தமற்றதா? யார் குழப்புகின்றார்கள், யார் குழப்ப நிலையில் இருக்கின்றார்கள் என்று புரிகின்றதல்லவா?
Quote :
//அதோடு மட்டுமல்லாமல், யோனா உயிரோடு இருந்த நிலையும், இந்த சர்ப்பத்தின் உயிரில்லாத நிலையும் முரண்பட்டதாக உள்ளது (அதாவது, யோனா மீனின் வயிற்றில் இருந்த காலகட்டத்தில் முழுவதும் உயிரோடு இருந்தார், அந்த சர்ப்பம் ஆரம்பத்திலிருந்தே உயிரில்லாத பொருளாக இருந்து உயர்த்தப்பட்ட கால கட்டத்திலும் உயிரில்லாமல் இருந்தது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருக்கின்றன)//
உங்கள் குருட்டு நம்பிக்கை இப்படிப்பட்ட முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. எந்த வசனத்தில் எதை எடுக்க வேண்டுமோ அதை எடுக்காமல் எதை எடுக்கக்கூடாதோ அதை எடுக்கின்றீர்கள். இயேசு 'யோனாவின் அதிசயத்தைப்போல' என்று சொன்ன இடத்தில் அதை எடுக்காமல் காலக்கணக்கை மட்டும் தான் எடுப்பேன் என்று முரண்டு பிடித்தீர்கள். யோவான் 3:14ம் வசனத்தில் 'சர்ப்பத்தை உயர்த்தியது போல்' என்று இயேசு கூறியதை சிலுவையில் அறையப்படுதல் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்ட மற்றொரு இடத்தில் சம்பந்தமில்லாமல் 'இறந்த சர்ப்பத்தைப் போல' என்கிறீர்கள்? ஏன் இந்த குழப்பம் உங்களுக்கு? இறந்த சர்ப்பத்திற்கும் இயேசுவிற்கும் என்ன சம்பந்தம்? மோசேயால் கம்பத்தில் ஏற்றப்பட்ட சர்ப்பம் எப்போதாவது உயிருடன் இருந்ததா? இல்லையே. பிறகு எப்படி அது இறந்த சர்ப்பமாகும்? அது எப்பொழுது உயிருடன் இருந்தது இறப்பதற்கு? இரண்டையும் போட்டு ஏன் குழப்புகின்றீர்கள்?
Quote :
//இவைகள் நமக்கு எதை காட்டுகின்றன? இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் மோசே உருவாக்கிய சர்ப்பத்திற்கும் உள்ள ஒப்பிடுதலில், 'மூன்று நாட்கள் இரவும் பகலும்' என்ற விவரம் யோனாவோடும், 'தூணில் உயர்த்தப்படுதல்' என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார் என்பதை நாம் அறியலாம். இயேசுவின் ஒப்பிடுதலில் யோனா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இயேசுவின் ஒப்பிடுதலுக்கும் யோனா உயிரோடு இருந்தார் என்பதற்கும் சம்மந்தமே இல்லை//
எந்த வசனத்திற்கு எதை எடுக்கவேண்டும் என்பதையே புரியாமல் இருக்கின்றார் இந்த அறிவு ஜீவி. இது தான் இவர் பைபிளைப் புரிந்து வைத்துள்ள லட்சணம். இப்படி எல்லாம் இவர்கள் முரண்படுவதற்கு காரணம் இவர்களது குருட்டு நம்பிக்கையே!
Quote:
//யோனாவைக் குறித்து சொல்லப்பட்ட இடத்தில் மிகவும் முக்கியமாக உள்ள நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு, தீதத் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி 'யோனா எப்படியோ... அது போல மனுஷ குமாரனும்' என்று கூறுகிறார். //
தீதாத் சொல்லவருவதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் அவர் மீது பச்சைப் பொய்யை சுமத்துகின்றார் இந்த கிறிஸ்தவர். தீதாத் அவர்கள் மத்தேயு 12:39 வசனத்தின் மூலம் இரண்டு விஷயங்களை விளக்குகின்றார்கள். ஒன்று இயேசு யோனாவைப் போல உயிருடன் இருப்பார் என்றும் மற்றொன்று 3 இரவு 3 பகல் என்ற (Time Factor) கால அளவை பற்றியது. இவர் சொல்வது போன்று நேரம் சம்பந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு என்பது இவர் சொல்லும் பச்சைப் பொய்தானே? கர்த்தருக்காக பொய்சொல்லலாம் என்பது இது தானோ?
Quote :
//மீனின் வயிற்றில் எந்த நிலையில் (உயிரோடு) இருந்தார் என்பதை இயேசுவோடு ஒப்பிட்டது, தீதத் அவர்களின் சொந்தமான ஒப்பிடுதல் ஆகும் //
இது தவறு. பைபிளை வைத்து தான் பைபிளின் வசனத்தை வைத்துத்தான் ஒப்பிடப்படுகின்றது. அதற்கு மாற்றமாக தெளிவான ஆதாரத்தை காட்டவேண்டுமேயொழிய உங்கள் குருட்டு நம்பிக்கையை மையமாக வைத்து பைபிளில் ஆதாரம் தேடாதீர்கள். அப்படித் தேடினால் மேலே நீங்கள் குழப்பியதைப் போன்று குழப்பத்தில்தான் முடியும்.
Quote :
//சர்ப்பம் பற்றிய வசனத்தை கவனித்தால், நாம் இவ்விதமாக சொல்லவேண்டி வரும் 'சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும் (As the serpent ... so shall the Son of man be)'. இந்த விவரங்களில் சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் சர்ப்பத்திற்கும் ஒப்பிட்டது, யோனாவோ, சர்ப்பமோ உயிரோடு இருந்ததா மரித்து இருந்ததா என்பதை ஒப்பிட்டு கூறவில்லை.
தங்களது குருட்டு நம்பிக்கைக்காக பைபிள் வசனத்தையே எப்படி எல்லாம் திரிக்கின்றார் என்று பார்த்தீர்களா? யோவான் 3:14 வசனத்தின் படி இயேசு சொல்ல வருவது 'சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது போல..' என்றால், என்னையும் 'கம்பத்தில் உயர்த்துவர்கள்' அதாவது 'சிலுவையில் அறைவார்கள்' என்கிறார். அதைதான் குறிக்கும் என்று இந்த கிறிஸ்தவரும் மேலே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இங்கே 'சர்ப்பம் எப்படியோ.. அதே போல மனுஷகுமாரனும்' என்று புது விளக்கம் தருகின்றார்;. இவர் சொல்லவரும் பொருள் என்ன? அதையும் அவரே சொல்கின்றார் அதாவது, சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது என்கிறார். அதாவது சர்ப்பம் இறந்தநிலையில் உயர்த்தப்ட்டது அது போல் இயேசுவும் இறந்தநிலையில் உயர்த்தப்படுவார் என்கிறார். அது தான் 'சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும்' என்கிறார். ஆனால் இந்த யோவான் வசனத்தின் மூலம் இயேசு சொல்லவருவது 'இறந்த சர்ப்பம்' பற்றியா அல்லது 'கம்பத்தில் உயர்த்தப்படுதல்' பற்றியா? இந்த யோவான் வசனத்தின் நோக்கம் என்ன? இறந்த சர்ப்பம் பற்றி என்றால், சர்ப்பம் எப்போது உயிராக இருந்தது அது இறப்பதற்கு? இல்லை இல்லை கம்பத்தைப் பற்றித்தான் அந்த வசனம் சொல்கின்றது என்றால் ஏன் சர்ப்பத்தோடு இயேசுவை ஒப்பிட வேண்டும்? சற்று சிந்தித்து மொழி பெயர்க்க வேண்டாமா?
Quote :
//ஆக, தீதத் அவர்களின் முதலாவது மறுப்பு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது என்பதை நாம் காணலாம். தீதத் அவர்கள் செய்யும் வாதங்களின் தன்மையில் எப்போதும் முரண்பட்ட விவரங்களே கிடைக்கும். ஒரு மறுப்பு அல்லது வாதம் தன்னைத் தானே முரண்பட்டால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது //
இது யாருக்கு பொருந்தும், யாருடைய வாதம் மண்னைக் கவ்வியது என்பதை மேலே விளக்கியுள்ளோம். போதைத் தெளிந்தவுடன் மீண்டும் இவர் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கட்டும். கர்த்தருக்கு சித்தமானால் அடுத்தப்பகுதியில் 3 இரவு 3 பகல் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.
தொடரும்...
குறிப்பு: இந்த ஆக்கம் அஹமத் தீதாத்திற்கு பதில் என்ற பெயரில் உமர் என்ற கிறிஸ்தவரால் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு பதில் அளிக்கும் வகையிலேயே வெளியிடப்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆதிபாவம் உன்மையா? இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? கிறிஸ்தவர்களின் இன்று நம்பிக்கொண்டிருப்பது போன்று இயேசு உயிர்த்தெழுந்தாரா? என்பது பற்றி விரிவான ஆய்வுத் தொடர் விரைவில் எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்...
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல..
Click here
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல..
Click here
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல...
Click here
.
.