அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, April 30, 2008

விக்கிரக வழிபாட்டை விமர்சிப்பதேன்?

கேள்வி : ஹிந்து கிறிஸ்துவ மதத்தினர் மனதை ஓர்மைப்படுத்தவே விக்கிரகங்களை வைத்துள்ளனர். மற்றபடி விக்கிரகத்தின் வழியே ஏக இறைவனையே வணங்குகின்றனர். அதை ஏன் குறை காண்கிறீர்கள்?

பதில் : பொதுவாக ஆட்களில் அல்லது பொருட்களில் காணக்கூடிய உருவமைப்புகள் வணக்கத்திற்குரிய பொருளாயுள்ள ஒரு சிலை விக்கிரகமாகும். சிலைகளுக்கு முன் வணக்கச் செயல்களை செய்கின்றவர்கள் உண்மையில் தங்கள் வணக்கம் அந்த சிலை குறித்துக் காட்டும் கடவுளுக்குச் செலுத்தப்படுகிறதென சொல்கின்றனர். சிலைகளை இவ்வாறு பயன்படுத்துவது இஸ்லாமல்லாத அனைத்து மதங்களிலும் வழக்கமாயுள்ளது.

கிறிஸ்தவ பழக்கத்தை குறித்து, நியூ கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா (1967 Book VII, Page 372) கூறும் பொழுது: 'ஒரு சிலைக்கு செலுத்தப்படுகிற வணக்கம் அது குறித்து நிற்கும் அந்த ஆளிடம் போய் சேர்ந்துவிடுவதால், அந்த ஆளுக்குச் செலுத்த வேண்டிய அதே வகையான வணக்கத்தை அந்த ஆளைக் குறித்து நிற்கும் அந்த சிலைக்குச் செலுத்தலாம்' என்றுள்ளது.

இறைவனை நினைவில் கொள்ளவும், மனதை ஓர்மைப்படுத்தவும் விக்கிரகங்களை வைத்துக் கொள்வதில் தவறொன்றுமில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார். ஆனால் இது ஏற்புடையவாதமல்ல காரணம்:

1. உலகமத கிரந்தங்களை ஆராய்வோமானால் அவையனைத்தும் ஏக இறைவனை எவரும் கண்டதில்லை என்றே கூறுகிறது.

இறைவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை' (அதர்வவேதம் 32:3)

ஆதிபகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்ந்தவர்களல்ல. அசூரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல' (பகவத் கீதை 10:14)
- என்று இந்து வேத இதிகாசங்கள் கூறுகிறது.

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை (யோவான் 1 : 18)
- என்று கிறிஸ்துவ வேதம் கூறுகிறது.

அப்படியிருக்க காணாத ஒரு வஸ்துவுக்கு எப்படி உருவம் கற்பிக்க முடியும்?

உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காணாத ஒருவர் ஒரு நாயை அல்லது பூனையை போன்ற உருவம் வடித்து வைத்து இது தான் நீங்கள் என்று கூறுவார்களானால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய பாரத பிரதமரை காணாத ஒருவர் அவரை நினைவில் நிறுத்த ஒரு குரங்குச் சிலையை வடித்து வைத்தால் அதை அவர் ஏற்றுக் கொள்வரா? மாட்டார். ஏன்? குரங்கும், நாயும் மனிதனை விட தரம் தாழ்ந்தது என்று நாம் கருதுவதால் ஆகும்.

நம்முடைய முகத்தை சற்று மெருகேற்றி ஒரு சிலைவடித்தால் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன், தன்மைவிட தரம் தாழ்ந்த இனத்தோடு ஒப்பிடும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அது தன்னை அவமானப்படுத்துவதாக கருதுகின்றான். அப்படியிருக்க இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு மட்டும் இவ்வுலகத்தில் உள்ள அற்பவஸ்துக்களில் ஒன்றைப்போல் உருவாக்கி இது தான் நம்மையெல்லாம் படைத்த சிருஷ்டிகர்த்தா என்றால் அது எப்படி இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்? படைப்பினங்கள் அனைத்தும் படைத்தவனை விட தரம்தாழ்ந்தவையாகும். அப்படியிருக்க தரம் தாழ்ந்த வஸ்துக்களைக் காட்டி இப்படித்தான் இறைவன் இருப்பான் என்று கருதுவது இறைவனை அவமானப்படுத்துதல் அல்லவா? ஆகவே அது கூடாது என்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறது இஸ்லாம்.

2. விக்கிரங்களுக்கு புனிதம் கற்பிப்பதில்லை. அதன் வழியே ஏக இறைவனையே வணங்குகிறோம் என்று ஒரு சாரார் கூறுவதும் ஏற்புடைய வாதமல்ல. விக்கிரகங்களுக்கு புனிதம் கற்பிக்கப்படுகிறது என்பதே உண்மையாகும். விக்கிரகங்களைச் செதுக்கும் போது விரதம் இருப்பதும். விக்கிரகத்தை நிறுவும் போது சிறப்ப வழிபாடுகள் செய்வதும் அதற்கு சந்தனமும், பூவும் சாத்துவதும், பாலாபிஷேகமும், பன்னீர் அபிஷேகமும் செய்வதும், பஞ்சாமிர்தமும், அரவணையும் படைக்கப்படுவதும் புனிதம் கற்பிக்கப்படுவதையே பறைசாற்றுகிறது. அதனால் தான் ஒரு விக்கிரகத்தை மாற்றி மற்றொரு விக்கிரகத்தை நிறுவ எவரும் முன் வராததை நடைமுறை உலகில் காண்கிறோம்.

3. இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பதை இறைவன் தான் கற்றுத்தர வேண்டும். ஆனால் உலகில் காணப்படும் எந்தவொரு வேதகிரந்தமும் இறைவனுக்கு விக்கிரகம் வடித்து வைத்து வணங்குங்கள் அது உங்கள் மனதை ஓர்மைப்படுத்த உதவும் என்று கற்பிக்கவேயில்லை.

'யட்சத்து சான பஷ்யதி ஞான சஷ்யம் சிலஸ் யதி
பிரம்மத்துவம் வித்தி நேதம் ஏகிதம் முபாஸதே'


(கண் கொண்டு காண சாத்தியமில்லாதது எவனையோ அவனே படைத்த இறைவனாவன். அவனே கண்களுக்கு பார்வை சக்தியை வழங்குகிறவன். இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண் கொண்டு காணும் வஸ்துக்கள் யாவும் இறைவனில்லை) என்று கேனே உபநிஷத் 1 : 6 கூறுகிறது.

'மேலே வானத்திலும கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்குமஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம்' என்று பைபிளும் (யாத்திரகாமம் 20:1-5) கூறுகிறது.

எனினும் அவைகள் ஏட்டளவில் இருப்பதாலும் இன்னும் உருவம் கற்பித்து வணங்குவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான சலோகங்களையும், வசனங்களையும் அவ்வேதங்கள் இடைச் சொறுகல்களாக உட்கொண்டிருப்பதாலும் இந்து கிறிஸ்தவர்கள் விக்கிரக வழிபாட்டை விட்டுவிடத் தயாரில்லை. ஆனால் இறைவன் தன் இறுதி வேதமான திருக்குர்ஆனில் திட்டவட்டமாக கடுமையாக விக்கிரக வழிபாடு கூடாது என்கிறான்.

விக்கிரகம் தான் மனதை ஓர்மைப்படுத்துகிறது என்பது ஏற்புடைய வாதமல்ல முஸ்லிம்கள் எந்த ஒரு விக்கிரகமும் வைக்காமல் மனதை ஒர்மைப்படுத்தியே ஏக இறைவனை நேரடியாக வணங்குகின்றனர். இன்னும் சொல்வதானால் விக்கிரக வழிபாடுடையவர்கள் தாம் தங்கள் வழிபாட்டின் போத மனதைச் சிறகடிக்கும் வகையில் மணி அடித்தும், கொட்டடித்தும் இசைக்கருவிகளை இசைத்தும் கொண்டுதான் விக்கிரகங்களை வணங்குகின்றனர். ஆகவே மனதை ஓர்மைப்படுத்தவே விக்கிரகம் வைத்திருக்கிறோம் என்பதும் ஏற்புடைய விதமல்ல.

இன்னொரு கோனத்திலும் நீங்கள் சிந்திக்க வேண்டும். நேற்று வரை ஒரு கல் சாதாரனமாக இருந்துக்கொண்டிருக்கும். அல்லது அது மேல் எத்தனையோ மனிதர்களாலோ அல்லது மிருங்களாலோ அசிங்கம் செய்யப்பட்டிருக்கும். அடுத்த நாள் அந்தக் கல்லை ஒரு சிற்பி எடுத்து இவர்கள் விரும்புவது போல் இவர்கள் விருப்பப்பட்ட சிலையை வடித்துக்கொடுத்ததும் அந்தகல்லுக்கு சக்தி வந்துவிடுவதாகவும், உடனே அதை வணங்கவேண்டும் என்று எண்ணுவது எந்தவிதத்தில் நியாயமாகும்?

அந்தக் கல் நேற்றுவரையிலும் கேட்பாறற்று கிடந்ததே! அப்பொழுதெல்லாம் அதை தெய்வமாக பார்க்காத மனிதன், அதை அவர்கள் விரும்புவதுபோல் சிலையாக வடிக்கப்பட்டதும் உடனே வணங்குவதைத்தான் தவறென்று கூறுகிறது இஸ்லாம். அது ஒரு கல் அவ்வளவு தான். அது எந்தவிதத்திலும் வணங்குவதற்கு தகுதியற்றது என்பதே இஸ்லாத்தின் ஆணித்தரமான வாதம்.

இந்த இடத்தில் மனிதனை இந்த விக்கிரக வழிபாடு ஓர்மைப்படுத்துகின்றதா? அல்லது அவனது பகுத்தறிவுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறதா? இதைத்தான் ஒரு கவிஞன் சொன்னான் :

மனிதன் கல்லை
சிலையாக்கினான்
சிலையோ மனிதனைக்
கல்லாக்கி விட்டது............... என்றான்

உலகத்தில் எல்லா மதக்கிறந்தங்களும் விக்கிரக வழிபாட்டை எதிர்க்கின்றன. ஆனால் அந்த மதங்களால் அதை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அது முடியவும் முடியாது. காரணம் அந்த மதங்களில் வேறு ஏதாவது ஒரு வகையில் விக்கிரக வழிபாடுகள் நுழைந்துவிடும். அது இந்துமதமானாலும், கிறிஸ்தவ மதமானாலும் அல்லது புத்தமதமானாலும் இன்னும் எத்தனையோ மதமானாலும் இதே நிலைத்தான். ஆனால் இஸ்லாம் மட்டும் தான் உலகத்தில் வேறு எந்த மதத்தைக் காட்டிலும் விக்கிரக வழிபாட்டை நியாயமான காரணங்களுடன் எதிர்ப்பதுடன் அதை 1400 ஆண்டுகளாக இன்றும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுவே இஸ்லாம் தான் 'சத்திய மார்க்கம்' என்பதற்கு சிறந்த சாண்று.
.
.
.
.

Friday, April 18, 2008

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்?

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 1 - இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்! படிக்க இங்கே அழுத்தவும்

நம்பிக்கையின் இரண்டாவது பிரிவு:

மேலே சொன்ன அக் கொள்கையை இறைத் தூதர்கள் என்ற பெயரில் மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்புவியில் பரப்பினார்கள். இறைவன் (கடவுள்) பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பூரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதுவர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தாம் இக் கொள்கையை முதலில் முன் வைத்தவர்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர்.

இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது.

நான் இறைவனின் தூதன் ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள் இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.

இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.

மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.

மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை.

தனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

முஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா? நபிகள் நாயகமா? எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.

ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.

இன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.

அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன. ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

இதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.

தொடரும் இறைவன் நாடினால்...
.
.
.

Wednesday, April 16, 2008

இஸ்லாம் என்றால் என்ன? (பாகம் - 1)

இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்!

உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும்.

இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, 'ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல. இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. அதிகமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாம் கூறும் அக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

ஒரு கடவுள்தான் உண்டு என்று சொல்லி நிறுத்திகொள்ளாமல் இறவனுக்கென்று சில இலக்கணங்களை, வரையரைகளை, விதிமுறைகளை முன்வைத்து இவைகளை மீறிச் செயல்படக் கூடாது எனக் கட்டளையிட்டு, ஏனையோரின் கொள்கையிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது இஸ்லாம். இறைவன் என்பவன் எந்தத் தேவையுமற்றவன்.தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் எப்பொருளும் இறைவனா(கடவுளா)க முடியாது. உதாரணமாக, மனிதன் சிலவற்றுக்கு காணிக்கை செலுத்துகிறான். இப்படிச் செய்வதன் மூலம் நமது தேவைகளை எதிர்பார்த்து நிற்கும் அப்பொருள் இறைவனாக முடியாது.

இறைவன் என்பவன் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. மனிதர்கள் இறைவனுக்கு எந்த காணிக்கையையும் செலுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது இறைவனை (கடவுளை) பலவீனமானவனாக நாம் ஆக்கி விடுகிறோம். மனிதர்களிடம் நிறைய பலவீனங்கள் காணப்படுவதை நாம் அறிவோம். இளமை முறுக்கோடு எந்த மனிதனும் தொடர்ந்து வாழ்ந்ததில்லை. முதுமை அடைகிறான். நோய் நொடிகளுக்கு ஆளாகிறான். கவலை, துன்பம் போன்றவை அவனை ஆட்கொள்கின்றன.இப்படி பல்வேறு பலவீன நிலைகளை மனிதன் அடைகிறான். இறுதியில் மரணமும் கூட அவனைத் தழுவிக் கொள்கிறது. ஆனால் இறைவன் இவை அனைத்தையும் விட்டு பரிசுத்தமானவன்.

இறைவன் (கடவுள்) நேற்று இளமை பிடிப்போடு இருந்தான். இன்று வயதாகி விட்டது என்று நாம் கூறினால் நாளை வேறொரு இறைவனை தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இறைவன் நோய், முதுமை, மறதி, மரணம் போன்ற மனிதனுக்கேற்படுகின்ற உபாதைகள் எதற்குமே உட்படாதவானாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஒருவரிடம் சென்று நாளைக்குச் திருப்பித் தருவதாகக்கூறி கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருப்போம். பின்னர் அதை மறந்து விடுவோம். சில நாட்களுக்குப் பின் அவன் வந்து கேட்டால் காரணத்தைக் கூறி அதை திருப்பித் தந்துவிடுவோம். இது மனித இயல்பு. இது போன்ற மறதி இறைவனுக்கு உண்டு என நம்புவது எப்படிப் பொருந்தும்?

துன்பத்தில் மாட்டிக் கொண்ட ஒருவன் 'இறைவனே (கடவுளே!) என்னைக் காப்பாற்று' என மன்றாடும் வேளையில் இறைவன் தூங்கிக் கொண்டிருந்தான் எனில் இவனது அழைப்புக்கு அவனால் எப்படி பதில் கொடுக்க முடியும்? மனிதர்கள் அனைவருமே ஒரே நேரத்தில் உலகில் தூங்குவதில்லை. இரவில் தூக்கம் வராத ஒருவன் இறைவா! (கடவுளே!) எனக் கூக்குரலிடுகிறான். அதே போல் நோயால் வேதனைப்படுபவன் கதறுவான்.இவைகளை செவிமெடுப்பவனாக இறைவன் இருக்க வேண்டும்.எனவே, தூக்கம், மறதி,மலஜலம் கழிப்பது போன்ற அனைத்து பலவீனங்களையும் விட்டு பரிசுத்தமானவனாக இருப்பவனே இறைவனா(கடவுளா)க இருக்க முடியும்!

இறைவன் பெண்களுடன் குடும்பம் நடத்துவதாக சில கொள்கை கோட்பாடுகள் கூறுகின்றன. இஸ்லாம் இதை முற்றிலும் மறுக்கிறது. இறைவன் மனைவி, மக்களை விட்டும் தேவையற்றவனாக இருக்க வேண்டும். மனிதனுக்கு இருப்பதைப் போன்று இறைவனுக்கும் இத்தேவைகள் இருக்குமென்றால் தன் அடியார்களான மனிதர்களின் தேவைகளை அவனால் எப்படி நிறைவேற்ற முடியும்? சுருக்கமாகச் சொன்னால் பலவீனமும் தேவையும் இறைவனுக்கு இருக்கவே கூடாது. இதை உள்ளடக்கிய கடவுள் கொள்கையைத்தான் இஸ்லாம் முன் வைக்கிறது. இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கை பற்றிய இரு முக்கிய நம்பிக்கைகளில் முதலாவதாகும்.

ஒரே கடவுளை அதுவும் நாம் விவரித்த முறையில் ஏன் நம்ப வேண்டும்? ஏழு,பத்து கடவுள்கள் உண்டு என்று நம்பினால் என்ன குறைந்துவிடும்? நமக்குள் எழுகின்ற இந்த சந்தேகங்களுக்கும் இஸ்லாம் ஒரு தெளிவை முன்வைக்கிறது. ஒன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள்களை நம்பினால் நமது பகுத்தறிவு செயலிழந்து போகும். மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

உதாரணமாக கடவுளுக்கு நாம் செலுத்தும் காணிக்கை விஷயத்தை சற்று உற்று நோக்குவோம். நாம் செலுத்தும் காணிக்கையை கடவுளா பயன்படுத்துகிறான்? இல்லை.நம்மைப் போன்ற ஒருவர் கடவுளுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையை எடுத்துச் செல்கிறார். இங்கே நாம் ஏமாற்றப்படுகிறோம். நாம் விரும்பி ஒருவருக்கு இனாமாகக் கொடுப்பது வேறு விஷயம். இறைவனின் (கடவுளின்) பெயரால் ஏமாற்றப்படுவது அநியாயமல்லவா? இறைவன் (கடவுளர்கள்) பல உண்டு என்று நம்புகின்றபோது கடவுளின் பெயராலேயே மனிதர்கள் கூறு போடப்படுபடுகிறார்கள். பிரிவுக்கு இது ஒரு வழி வகுக்கிறது. இறைவன் ஒருவன் தான் என்று சொல்லுகின்ற போது மனிதர்கள் அனைவருமே ஒன்று என்ற கோட்பாடு வலுவடைகிறது. இஸ்லாம் இதைத்தான் சொல்லுகிறது.

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்திப்) பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 4:1)

எல்லா மனிதர்களுக்கும் மூல அடிப்படை (ஆதம், ஹவ்வா என்ற) ஒரு ஆண் பெண்தான் இருக்கிறார்கள். அந்த ஜோடியே இவ்வளவு பெருக்கம் அடைந்து இருக்கிறது. இவர்கள் பல்கிப் பெருகி ஜாதி, மொழி, நாடு ரீதியாக சிதறிப்போய் உள்ளனர். அடிப்படையில் எல்லோரும் ஒன்றுதான். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், பௌத்தர், நாத்திகர் யாராயினும் அவர்கள் அனைவரும் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர்களே! அந்த மூல ஜோடியை படைத்தவனே இறைவன் (கடவுள்) என இஸ்லாம் இயம்புகிறது.

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2 - முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்? செல்ல இங்கே அழுத்தவும்.
.

Saturday, April 12, 2008

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 2)

.................................................................. - அபு இப்ராஹீம், சென்னை

பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் - குழப்பங்களையும் பற்றி தொடர்கட்டுரையை வெளியிட்டு வருகின்றோம். அதன் முதல் பாகத்தை பின்வரும் தலைப்பில் படிக்கவும்.

'இயேசுவின் வம்சாவளியும் பைபிளின் குளறுபடியும்' (பாகம் - 1) க்குசெல்ல இங்கே அழுத்தவும்...

இதன் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி...

சாலாவின் தந்தை யார்?

லூக்கா 3:36 ல் ஆதாம் முதல் இயேசு வரை உள்ள வம்சத்தில் அர்ப்பகசாத்தின் மகன் காயினான். அவன் மகன் சாலா என்கிறார். ஆனால் ஆதியாகமம் 10:24 மற்றும் 11:12 ஆகியவை அர்ப்பகசாத்தின் மகன் சாலாதான் என்கிறது. இடையே உள்ள காயீனான் அங்கே வரமாட்டான் என்கிறது. லூக்கா சொல்வது சரியா பழைய ஏற்பாடு சொல்வது சரியா? எதை நம்புவது? ஏது கடவுள் சொன்னது?

தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் எத்தனைப் பேர்?

தாவீது முதல் இயேசு வரையிலும் மொத்தம் 28 தலைமுறையினர் என்கிறார் மத்தேயு (பார்க்க மத்தேயு 1:6-16) ஆனால் லூக்காவோ மொத்தம் 43 என்கிறார் (பார்க்க லூக்கா 3:21-31) எது சரி? லூக்கா சொல்வதா அல்லது மத்தேயு சொல்வதா?


Image and video hosting by TinyPic
மத்தேயு ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் மொத்தமே 42 பேர்தான் என்கிறார். ஆனால் லூக்காவோ ஆபிரகாமுக்கும் பலதலைமுறைக்கு பிறகுள்ள தாவீதிலிருந்து இயேசுவரையிலுமே 43 பேர் வந்துவிடுகின்றனர் என்று கூடுதலாக கணக்கு காட்டுகிறார். ஒரே தலைமுறையை புதியஏற்பாட்டு எழுத்தாளர்கள் இப்படி மாற்றி மாற்றி முரண்பாடாக சொல்வதை எப்படி கடவுளின் வார்த்தை என்று ஏற்க முடியும்? எது சரி? மத்தேயு சொல்வதா அல்லது லூக்கா சொல்வதா?

(இது போல் இன்னும் பல முரண்பாடுகளும், பல குழப்பங்களும் இந்த வம்சாவளிப் பட்டியல்களில் தொடர்கிறது. நாம் ஆக்கம் நீண்டுக்கொண்டே செல்வதால் தவிர்த்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.)

இயேசு விபச்சாரர்களின் சந்ததியா?

இயேசுவின் வம்சத்தில் வரும் இவ்வளவு குளறுபடிகளும் ஒரு புறம் இருக்க அவரின் வம்சத்தில் வரும் பலர் விபச்சாரர்களாக இருந்ததாக பைபில் கூறுகிறது.

'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்' (மத்தேயு 1:3)

இந்த தாமார், யூதா, பாரேஸ் என்பவர்கள் யார்? இந்த தாமார் என்பவள் யூதா என்பவனின் மகனுடைய மனைவி. அதாவது மருமகள். அவளுடன் யுதா கள்ளத்தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் தான் பாரேஸ் என்று பைபிள் சொல்கிறது. பார்க்க ஆதியாகமம்; 38 : 6 (இந்த மாமனார் மருமகள் ஆபாசக்கதையில் உள்ள குழப்பங்களை படிக்க இங்கே அழுத்தவும்)

அடுத்து அவரது தலைமுறையில் வரும் தாவீது பற்றி மத்தேயு (1 : 6) சொல்லும்போது 'தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்'. இப்படி விபச்சார சந்ததிகள் மூலமாகத்தான் இயேசு பிறக்கின்றார் என்கிறார் மத்தேயு. (நவூதுபில்லாஹ்...) அதேபோல் இயேசுவின் வம்சத்தில் வரும் மற்றொருவர் 'ராகாப்'. (மத்தேயு 1:5) இவள் ஒரு விபச்சாரி என்று பழைய ஏற்பாடு கூறுகின்றது.(பார்க்க - யோசுவா 2:5)

இப்படிப்பட்ட விபச்சார சந்ததிகள் மூலமாக வந்தவர்தான் இயேசு என்கிறது பைபிள். இது ஒரு புறம் இருக்க இப்படிப்பட்ட விபச்சார சந்ததியில் பிறக்கக்கூடியவர்கள் எவரும் பரிசுத்தராக முடியாது, என்றும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு - ஒன்றல்ல இரண்டல்ல, தலைமுறை தலைமுறையாக வர முடியாது என்றும் கூறுகிறது பைபிள்.

'வேசிப்பிள்ளையும் (விபச்சார சந்ததிகள்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - உபாகமம் 23:2,3

இந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, சாலமோன், இயேசு இவர்களெல்லாம் ஒரு பரிசுத்தராக வரவேமுடியாது என்கிறது பைபிள். (இவர்களெல்லாம் இஸ்லாத்தைப் பொருத்தவரை மிக்க பரிசுத்தவான்கள். இது பற்றி சிறப்புக் கட்டுரை விரைவில்... இறைவன் நாடினால்) கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி இயேசு கடவுடைய குமாரன் என்பதை விட்டுவிடுவோம். முஸ்லீம்கள் சொல்வது போல் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதையும் விட்டுவிடுவோம். அவர் ஒரு பரிசுத்தராகக்கூட வரமுடியாது என்கிறது இந்த வமிசாவளிப் பட்டியலும், இந்த கிறிஸ்தவர்களின் புனித பைபிளும். இதுதான் தான் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் மூலமும் பைபிளின் எழுத்தாளர்கள் கொடுத்துள்ள இயேசுவின் வம்சாவளிப்பட்டியல்கள் உணர்த்தும் மறுக்க முடியாத உன்மை.

இது மட்டுமல்ல இப்படி விபச்சார வம்சத்தில் வந்த - தானும் விபச்சாரம் செய்த (?) தாவீது தீர்க்கதரிசி எழுதிய பழையஏற்பாட்டில் உள்ள நூல்களான சங்கீதம் என்ற புத்தகம், சாலமோன் எழுதின நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதபாட்டு, போன்ற புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? காரணம் இவர்களெல்லாம் விபச்சார சந்ததிகளாயிற்றே? அதே போல் இயேசுவே பைபிளின் உபாகமம் 23:2,3ன் படி பரிசுத்தராக முடியாது எனும்போது அவரைப்பற்றி எழுதிய புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களெல்லாம் எப்படி புனித புத்தகங்களாகும்? இப்படி இந்த யூத எழுத்தாளர்கள், தீர்க்கதிரிகளான - நல்லோர்களான - தாவீது, சாலமோன் போன்ற இன்னும் பல பரிசுத்தவான்கள் மீது இட்டுக்கட்டி எழுதிய கட்டுக்கதைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பாhத்தீர்களா? சகோதரர்களே! பைபிளில் பல புத்தகங்கள் இறைவேதம் என்றத் தகுதியை இழக்கும் நிலை ஏற்படும். நீங்கள் பைபிளில் வரும் யூதா தாமார் கள்ள உறவுக் கதைகளை (ஆதியாகமம் 38:6) , தாவீது உரியாவின் மனைவியோடு நடத்தியதாகச் சொல்லப்படும் விபச்சாரக்கதைகளை (2 சாமுவேல் 11:1-8) கர்த்தரால் அருளப்பட்ட வசனங்களாக நம்பினால் அது வேறு ஒரு விதத்தல் உங்கள் நம்பிக்கைகளுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் உணரவேண்டும்.

இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் இப்படி தலைமுறைத் தலைமுறையாக ஒருவருக்கு பாவம் தொடரும் என்று இஸ்லாம் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி தொடராது - அது மடத்தனமான கொள்கை என்று சத்தியமார்க்கமான இஸ்லாம் போதிக்கின்றது. (பார்க்க அல்குர்ஆன் 2 : 233, 281, 286) இப்படி சொல்வது முட்டாள்தனமான வாதமும் கூட. யாரோ செய்யும் தவறுக்கு யாரையோ தண்டிப்பது என்பது மடத்தனமாக கொள்கை என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவமோ, நம் முன்னோர்கள் செய்யும் பாவம் சந்ததி சந்ததியாக தொடரும் என்கிறது. கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடான ஆதிபாவம் - Original Sin என்பதே 'ஆதாம் செய்த பாவம் சந்ததி சந்ததியாய் தொடர்கிறது' என்பது தானே. இப்படிப்பட்ட நம்பிக்கை இவர்களிடம் இருக்கும் நிலையில், நாம் மேலே கூறியுள்ள விவரங்களையும் அதற்கு ஆதாரமாக காட்டியுள்ள உபாகமம் 23:2,3 வசனத்தையும் கிறிஸ்தவர்கள் மறுத்தார்களேயானால், அவர்கள் ஆதிபாவம் என்னும் கிறிஸ்தவத்தின் ஆணிவேரையே மறுத்தவர்களாவர்கள். ஆதிபாவம் உள்ளதா? அல்லது இல்லையா? ஆதிபாவம் என்னும் கொள்கை சரிதான் என்றால் இந்த உபாகமம் 23:2,3 வசனத்தின் படி இயேசுவும், தாவீதும், சாலமோனும் பாவிகளாகிவிடுவார். இவர்களளெல்லாம் பாவிகள் இல்லை என்றால் ஆதிபாவம் தவரானதொன்றாகிவிடும். எது சரி?

தந்தை இல்லாமல் பிறந்தவருக்கு தந்தைவழி வம்சாவழி ஏன்?

கிறிஸ்தாவர்களிடம் கேட்பது இது தான். தந்தை இல்லாமல் பிறந்தார் என்பதற்காக இயேசுவைக் கடவுளின் குமாரன் (?) என்றும் அதனால் அவருக்கு தனிச்சிறப்பே உள்ளது என்றும் ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தைவழி வம்சாவழியை சொல்லுவதன் அவசியம் என்ன? வரலாற்றைச் சொல்லுகிறோம் என்றப்பெயரில் தந்தையே இல்லாத ஒருவருக்கு தந்தை வழி வம்சத்தை யாராவது சொல்வார்களா? எந்த ஒன்றுக்கும் உதவாத இந்த வம்சாவழியை சொல்லும் கடவுள் (?) முரண்பாடில்லாத வகையிலாவது சொல்ல வேண்டாமா? இந்த வம்சாவழியை சொல்லுவதால் உங்கள் பைபிள் உலகமக்ளுக்கு என்ன நல்வழிகாட்டவருகின்றது? இவைஅனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் தனது குமாரனுடைய வம்சத்தை முரண்பாடாக சொல்லுவாரா? இந்த வம்சாவழியால் பைபிளின் பல புத்தகங்களின் புனிதம் கெடுகின்றதே இது ஏன்?

ஓன்றுக்கும் உதவாக இந்த வம்சாவளிப்பட்டியல்கள் கூறும் வசனங்கள் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான வசனங்கள் பழையஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் சேர்த்து வருகின்றது. ஆங்காங்கே அவன் அவன் மகன், இவன் இவன் மகன், இவனை இவன் பெற்றெடுத்தான் அவனை அவன் பெற்றெடுத்தான் என்பது போன்ற நடையில் வரும் வசனங்கள் ஏராளம். இதனால் யாருக்கு என்ன பயன்? ஒரு பிரயோஜனமும் இல்லை.

பொதுவாக வேதவாக்கியங்கள் எதற்காக அருளப்பட்டது என்பது குறித்து பொதுவான நிபந்தனைகளை சொல்வதைவீட பைபில் அது பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்தோமேயானால் இது போன்ற வம்சாவளி பற்றிய வசனங்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது புலனாகிவிடும். வேதவாக்கியங்கள் அருளப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி பைபில் சொல்லுவதை பாருங்கள் :

'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.- 2 திமெத்தேயு 3:16-17

அதாவது அந்த வேதவசனங்கள் :

1. உபதேசத்திற்கும்
2. கடிந்துக்கொள்ளுதலுக்கும்.
3. சீர்திருத்தலுக்கும்...
4. நீதியைப் படிப்பித்தலுக்கும்...

உதவக்கூடியது என்று சொல்லுகிறது பைபில்.

பைபிளில் வரும் எல்லா வமிசாவளிப்பட்டியல்களை கூறும் வசனங்களை, இந்த பைபிள் வசனத்தோடு உரசிப்பாருங்கள். இதில் ஆயிரக்கனக்கான குழப்பங்களும் முரண்பாடுகளும், அசிங்கமான மரபுகளும் நிறைந்த இந்த வமிசாவளிப் பட்டியல் வசனங்களால் என்ன பயன்? இந்த நான்கு தகுதியில் எந்த தகுதிகளோடு இந்த வம்சாவளிப்பட்டியல் வசனங்கள் ஒத்துப்போகின்றது? அது மட்டுமல்ல புதிய ஏற்பாட்டின் மூலகர்த்தா பவுல் அவர்களே, இந்த வம்சவரலாறு பட்டியல்களெல்லாம் ஒன்றுக்கும் உதவாது, அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறுகின்றார்.

புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு. அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். (தீத்து 3:9)

வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,... (1 திமோத்தேயு 1:3)

இங்கே வம்சாவளிப்பட்டியல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுல் சொன்னதும் கடவுளால் அருளப்பட்டதாம், அங்கே மத்தேயுவும் லுக்காவும் இன்னும் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கலெல்லாம் சொல்லும் அந்த வம்சாவழிப்பட்டியள்களும் கடவுளால் சொல்லப்பட்டதாம். இது பச்சை முரண்பாடாக தெரியவில்லையா?

அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே! இவ்வுலகமக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவன் தனது இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக குர்ஆன் எனும் இறுதி இறைவேதத்தை அருளியிருக்கின்றார். இயேசுவைப் பற்றியும் அவரது முன்னோர்களான தாவீது, சாலமோன் இன்னும் பல தீர்க்கதரிசிகள் - இறைத்தூதர்கள் அனைவரும் பரிசுத்தாவன்கள் - அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் என்று பறைசாட்டுகிறார் இறைவன். யூதர்களும் பைபிளின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசுவுக்கும் அவனது மற்ற பரிசுத்தவான்களுக்கும் எற்படுத்தியுள்ள களங்கங்களைத் துடைத்து அவர்களின் உன்மைநிலையை விளக்குவதற்காக வந்த இந்த திருக்குர்ஆனை மனதுறுகிப் படியுங்கள். கண்டிப்பாக நேர்வழி அடைவீர்கள். இறைவன் நம் அனைவரையும் நேரான வழியில் நிலைநிறுத்துவானாக.

விளக்கங்கள் தொடரும்.. இறைவன் நாடினால்...
.
.
.

Thursday, April 10, 2008

இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 1)

............................................................................... - அபு இப்ராஹீம், சென்னை

உலகில் 100 கோடிக்கும் மேல் வாழும் கிறிஸ்தவர்களால் புனிதவேதமாக கருதப்படும் பைபிள், ஏக இறைவனால் - கர்த்தரால் - பரிசுத்த ஆவியின் மூலமாக - பரிசுத்த எழுத்தர்களுக்கு ஊந்தப்பட்டு எழுதப்பட்டது என்றும் - எனவே, இது இறைவனால் உலகமக்களுக்கென்று கொடுக்கப்பட்ட இறைவேதம் என்றும் நம்புகின்றனர். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாகும். அதை பைபிளில் பின்வரும் வசனத்தின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது' - 2 திமோத்தேயு 3 : 16

புனித வேதம் என்று சொல்லப்படக்கூடியது, அதுவும் அனைத்தையும் படைத்த - இந்த உலகம் மற்றும் அதில் வசிக்கக்கூடிய உயிரினம், இந்த அன்டசராசரங்கள், இவ்வனைத்தையும் படைத்த - இதுவரை நடந்தவற்றையும் இனி நடக்கப்போவதையெல்லாம் அறிந்திருக்கக்கூடிய இறைவனால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஒரு வேதம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ அளவு கோல்கள் இருந்தாலும், பொதுவான - அதுவும் மிக மிக முக்கியமான ஒரு அளவுகோல் 'முரண்பாடற்ற - குழப்பமில்லாத வேதமாக இருக்கவேண்டும்' என்பது.

ஓரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. அப்படி முரண்பாடானதாக இருந்தால் அது ஏக இறைவனால் - காத்தரால் - வழங்கப்பட்ட இறைவேதமாக ஒருபோதும் இருக்க முடியாது. கர்த்தரால் அருளப்பட்ட ஒரு இறைவேதத்தில் முரண்பாடு என்பது இருக்க முடியாது என்ற தகுதியை பைபிலும் ஒத்துக்கொள்கின்றது. கடவுள் குழப்பமாகவோ - முரண்பாடாகவோ எதையும் சொல்லமாட்டார் என்கிறது பைபிள் :

...God is not the author of confusion... (1 corinthians 14:33) (Revised Standard Verison)

...கடவுள் குழப்பத்தின் கடவுளல்ல... (1 கொரிந்தியர் 14:33) (ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்சன் மொழிப்பெயர்ப்பு)

இந்த பொதுவான அளவுகோளின் படி கிறிஸ்தவார்களின் புனித வேதமான பைபிலை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் நமக்கு அதிர்ச்சியும் - ஆச்சரியமுமாக இருக்கின்றது. ஏனெனில், கர்த்தரால் அருளப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது. உன்மையிலேயே இது கர்த்தரால் அருளப்பெற்ற ஒரு வேதமாக இருந்தால் - அவனுடைய பரிசுத்தர்களுக்கு பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட வேதமாக இருந்தால் எப்படி ஒவ்வொரு ஆகாமங்ளும், ஒவ்வொரு வசனங்களும் முரன்பாடாக இருக்கும்? இறைவேதம் என்ற தகுதியை முழவதுமாக இழந்து விட்ட பைபிளின் அனைத்து முரண்பாடுகளையும் 'முரண்பாடுகள் நிறைந்த பைபிள்' என்றத் தலைப்பில் தொடராக கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்... அதன் முதல் பாகம் இதோ:
இயேசுவின் வம்சாவழியும்(?) பைபிளின் குளறுபடியும்!

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இரண்டு பாகங்கள் உள்ளது. ஓன்று பழைய ஏற்பாடு. மற்றொன்று புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு என்பது உலகம் படைக்கப்பட்டது முதல் இயேசுவின் பிறப்பிற்கும் முந்தியது வரை சொல்லுகிறது. புதிய ஏற்பாடு என்பது இயேசுவின் பிறப்பு முதல் துவங்கி அவரின் இறப்பு அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்று விவரிக்கப்படுகின்றது. இதில் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டைக் காட்டிலும் புதிய ஏற்பாட்டிற்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடவுளால் அருளப்பட்டதாக - கிறிஸ்தவ மக்களால் நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டின் முதல் ஆகமத்தின் முதல் வசனம் முதல் 17ம் வசனம் வரையுள்ள வசனங்களில் ஏராளமான குளறுபடிகளும் முரண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. அதை சற்று அலசுவோம்.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு எழுதிய 1ம் ஆதிகாரம் வசனம் 1 முதல் 17ம் வசனம் வரை இயேசுவுடைய வம்சாவழியினர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான் யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான். 3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் ஆராமைப் பெற்றான 4. ஆராம் அம்மினதாபைப் பெற்றான் அம்மினதாப் நகசோனைப் பெற்றான் நகசோன் சல்மோனைப் பெற்றான் 5. சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான் ஓபேத் ஈசாயை பெற்றான் 6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான் 7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான் ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான் அபியா ஆசாவைப் பெற்றான 8. ஆசா யோசபாத்தைப் பெற்றான் யோசபாத் யோராமைப் பெற்றான் யோராம் உசியாவைப் பெற்றான 9. உசியா யோதாமைப் பெற்றான் யோதாம் ஆகாசைப் பெற்றான் ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான 10. எசேக்கியா மனாசேயைப் பெற்றான் மனாசே ஆமோனைப் பெற்றான் ஆமோன் யோசியாவைப் பெற்றான 11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான் சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான 13. சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான் எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான 14. ஆசோர் சாதோக்கைப் பெற்றான் சாதோக்கு ஆகீமைப் பெற்றான் ஆகீம் எலியூதைப் பெற்றான். 15. எலியூத் எலெயாசாரைப் பெற்றான் எலெயாசார் மாத்தானைப் பெற்றான் மாத்தான் யாக்கோபைப் பெற்றான 16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். 17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

இப்படி மத்தேயு தனது பங்குக்கு இயேசுவின் வம்சவரலாறை பற்றி தனது புத்தகத்தின் துவக்கதிலேயே எழுதியுள்ளார். இதே போன்று இயேசுவின் வம்சவரலாறை புதிய ஏற்பாட்டின் மற்றொரு எழுத்தாளரான லூக்காவும் தனது 3வது அதிகாரம் 23வது வசனத்திலிருந்து 38வது வசனம் வரை பின்வருமாறு கூறுகின்றார் :

23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். 24. ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் லேவியின் குமாரன் லேவி மெல்கியின் குமாரன் மெல்கி யன்னாவின் குமாரன் யன்னா யோசேப்பின் குமாரன். 25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா ஆமோசின் குமாரன் ஆமோஸ் நாகூமின் குமாரன் நாகூம் எஸ்லியின் குமாரன எஸ்லி நங்காயின் குமாரன். 26. நங்காய் மாகாத்தின் குமாரன் மாகாத் மத்தத்தியாவின் குமாரன் மத்தத்தியா சேமேயின் குமாரன் சேமேய் யோசேப்பின் குமாரன் யோசேப்பு யூதாவின் குமாரன் யூதா யோவன்னாவின் குமாரன். 27. யோவன்னா ரேசாவின் குமாரன் ரேசா சொரொபாபேலின் குமாரன் சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன் சலாத்தியேல் நேரியின் குமாரன். 28. நேரி மெல்கியின் குமாரன்ளூ மெல்கி அத்தியின் குமாரன அத்தி கோசாமின் குமாரன் கோசாம் எல்மோதாமின் குமாரன் எல்மோதாம் ஏரின் குமாரன் ஏர் யோசேயின் குமாரன். 29. யோசே எலியேசரின் குமாரன் எலியேசர் யோரீமின் குமாரன் யோரீம் மாத்தாத்தின் குமாரன் மாத்தாத் லேவியின் குமாரன். 30. லேவி சிமியோனின் குமாரன் சிமியோன் யூதாவின் குமாரன் யூதா யோசேப்பின் குமாரன் யோசேப்பு யோனானின் குமாரன் யோனான் எலியாக்கீமின் குமாரன். 31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன் மெலெயா மயினானின் குமாரன் மயினான் மாத்தாத்தாவின் குமாரன் மாத்தாத்தா நாத்தானின் குமாரன் நாத்தான் தாவீதின் குமாரன். 32. தாவீது ஈசாயின் குமாரன் ஈசாய் ஓபேதின் குமாரன் ஓபேத் போவாசின் குமாரன் போவாஸ் சல்மோனின் குமாரன் சல்மோன் நகசோனின் குமாரன். 33. நகசோன் அம்மினதாபின் குமாரன் அம்மினதாப் ஆராமின் குமாரன் ஆராம் எஸ்ரோமின் குமாரன் எஸ்ரோம் பாரேசின் குமாரன் பாரேஸ் யூதாவின் குமாரன் யூதா யாக்கோபின் குமாரன். 34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன் ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன் ஆபிரகாம் தேராவின் குமாரன தேரா நாகோரின் குமாரன். 35. நாகோர் சேரூக்கின் குமாரன் சேரூக் ரெகூவின் குமாரன் ரெகூ பேலேக்கின் குமாரன் பேலேக் ஏபேரின் குமாரன் ஏபேர் சாலாவின் குமாரன். 36. சாலா காயினானின் குமாரன் காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன் அர்ப்பகசாத் சேமின் குமாரன் சேம் நோவாவின் குமாரன் நோவா லாமேக்கின் குமாரன். 37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன் மெத்தூசலா ஏனோக்கின் குமாரன் ஏனோக்கு யாரேதின் குமாரன் யாரேத் மகலாலெயேலின் குமாரன் மகலாலெயேல் கேனானின் குமாரன் கேனான் ஏனோசின் குமாரன். 38. ஏனோஸ் சேத்தின குமாரன் சேத் ஆதாமின் குமாரன் ஆதாம் தேவனால் உண்டானவன்.

இப்படி, பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி இரண்டு ஆகாமங்களில் இரண்டு பரிசுத்தர்கள் (?) எழுதியதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இது மட்டுமல்லாமல் இதே போன்ற வேறு பலருடைய வம்சாவழிப்பட்டியல்கள் பைபிளின் அனேக இடங்களில் குறிப்பாக, பழையஏற்பாட்டில் பல இடங்களில் விவரிக்கப்படுகின்றது.

இப்படி பலருடைய வம்சாவளியைப் பற்றி இறைவனால் அருளப்பெற்ற ஒருவேதத்தில் சொல்லப்படுவதற்கு என்ன காரணம்? இதனால் இந்த உலகமக்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் இந்த உலகமக்களுக்கு கடவுள் எதைச் சொல்லவருகின்றார்? எந்த ஒரு பயனும் கிடையாது.

ஒரு வாதத்திற்காக, எந்தப்பயனும் இல்லாத ஒன்றை ஏதோ கர்த்தர் (?) சொல்லிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி சொல்லப்படும் ஒன்றை தெளிவாகவும் - குழப்பமில்லாத வகையிலாவது சொல்லியிருக்க வேண்டாமா? இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த கடவுள்தான், இந்த வசனங்களை எல்லாம் அருளினார் என்றால், தனது குமாரனுடைய (?) வம்சாவழி பட்டியல் பற்றி எப்படித்தெரியாமல் போகும்?

ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்தம் எத்தனை பேர்?

மத்தேயு 1: 17ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசுவரை மொத்தமுள்ள வம்சாவளியினர் பற்றிய மத்தேயு சொல்லும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

'இவ்விதமாய் உன்டான தலைமுறைகளெல்லாம்...

Image and video hosting by TinyPic
(அதாவது ஆபிரகாம் முதல் இயேசுவரையிலும் உள்ள மொத்த வம்சாவழியினர் 14 + 14 + 14 = மொத்தம் 42 பேர் என்கிறார்)

ஆனால் அவரே தனது முதல் அதிகாரத்தின் 2ம் வசனம் முதல் 16ம் வசனம் வரையில் கொடுத்துள்ள பட்டியலில் 41 பேரின் பட்டியல் தான் கொடுத்துள்ளார்.

Image and video hosting by TinyPic
மத்தேயு தனது ஆகாமத்தில் இயேசுவின் வம்சாவழிபற்றி கொடுத்துவிட்டு 1 : 17 ம் வசனத்தில் ஆபிரகாம் முதல் இயேசு வரையில் மொத்த வம்சாவளியினர் 42 என்று கூறுகிறார். ஆனால் அதற்கு மாற்றமாக, வேறுயாருமல்ல அவரே அவரது சொந்த ஆகாமத்தில் கொடுத்திருப்பதோ மொத்தம் 41 நபர்களின் பட்டியல்தான். மீதம் ஒருவர் எங்கே??? ஓரு கடவுளுக்கு அல்லது கடவுளின் எழுத்தாளருக்கு தான் வரிசைப்படுத்தியுள்ள நபர்களின் எண்ணிக்கை எப்படித் தெரியாமல் போகும்? இது எப்படி கடவுளால் அருளப்பட்ட வேதமாக இருக்க முடியும்?

இதை சாதாரன தவறு தானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது மத்தேயு என்னும் தனி மனிதன் சுயாமாக எழுதியதாக இருந்தால் நாம் அதை பெரிதாக எடுத்துகொள்ள போவதில்லை. ஆனால் இவையெல்லாம் கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டதாம். அப்படி கடவுளால் ஊந்தப்பட்டு எழுதப்பட்ட ஒன்று எப்படி முரணாக இருக்கும்? எப்படி கணக்கில் குளருபடி வரும்? அடுத்து பாருங்கள்..

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், மத்தேயு, தாவீது முதல் இயேசு வரையில் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மொத்தமே 42 இரண்டு பேர்தான். அதற்கு மேல் இல்லை என்று மிகத்தெளிவாகவே கூறுகிறார். நன்றாக மத்தேயு எழுதியதை கவனித்தால் உன்மைப் புரியும் :

'இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்'

'So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations'.

மொத்தமே இவ்வளவு தலைமுறையினர்தான், அதற்கு மேல் இல்லை என்பதை தெளிவாக குறிக்கும் விதமாக - இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் - 'all the Generations' என்று மத்தேயு கடவுளின் ஊந்துதலோடு (?) எழுதியுள்ளார். ஆனால் பழைய ஏற்பாடோ இதற்கு மாற்றமாக 'மத்தேயு சும்மா சிறுபிள்ளதானமா எழுதிட்டாரு. நாங்க சொல்றது தான் சரி, அவருக்கு கணக்கே சரியா தெரியலப்பா' என்ற தோரனையில் பின்வருமாறு விளக்குகிறது.

தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டுப்போன காலம் வரை எத்தனைப் பேர்?
Image and video hosting by TinyPic
தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைபட்டு போகும் காலம் வரை மொத்தம் 14 தலைமுறையினர் தான் என்கிறார் மத்தேயு. ஆனால் பழையஏற்பாடு 1 நாளாகம் 3 : 10-16ல் மொத்தம் 14 நபர்கள் என்பது தவறு. மொத்தம் 18 பேர் என்கிறது. இதில் விடுபட்ட 4 நபர்கள் எங்கே? இது கடவுளுக்கு (?) தெரியாமல் போன மர்மம் என்ன?

1 நாளாகமம் 3:10-16 கணக்குப்படி பார்த்தால் மத்தேயுவின் (1:17) 42 நபர்கள் என்ற மத்தேயுவின் கணக்கு இன்னும் உதைக்கும்.

இப்பொழுதாவது புரிகிறதா பைபில் கடவுளிடமிருந்து வந்தது என்று சொல்வது அனைத்தும் கட்டுக்கதை என்று? மத்தேயு அவருக்கு தெரிந்த அளவுக்கு இயேசுவின் வரலாற்றை எழுதிவிட்டார் என்றால் கூட நாம் இதை பெரிது படுத்தப் போவதில்லை. அதை விடுத்து இவை அனைத்தும் கடவுளிடம் வந்தது - அதாவது 'வேதவாக்கியங்கள் அனைத்தும் தேவஆவியால் அருளப்பட்டது' என்று சொல்லி மக்களை நம்ப வைக்கவும், இப்படிப்பட்டவர்கள் எதை எதையோ தங்கள் மனம் போனப்பபோக்கில் எழுதியதை வைத்துக்கொண்டு உன்மைகளை மறைப்பதற்கும், வரலாறே இவர்கள் எழுதியது மட்டும் தான் என்றும், இவர்களுக்கு மாற்றமாக யார் சொன்னாலும் நாங்கள் நம்பமாட்டோம். ஏனெனில் இவர்கள் சுயமாக எழுதியதல்ல, இவை அனைத்தும் கடவுளின் பரிசுத்த ஆவியால் ஊந்தப்பட்டு எழுதப்பட்டது' என்று சொல்வதால் தான் நாம் இந்தக் கேள்விகளை வைக்கின்றோம் என்பதை கிறிஸ்தவ சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.

எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா?

இயேசுவின் வம்சத்தில் வரும் ஒருவரான யோசியாவின் மகன் தான் எகொனியா என்கிறார் மத்தேயு (மத்தேயு 1:11) ஆனால் பழையஏற்பாட்டில் வரும் 1 நாளாகமம் 3:15-16 ல் யோசியாவின் மகன் யோயாகீமாம். அந்த யோயாகீமின் மகன் தான் எகொனியாவாம். இதில் எது சரி? எகொனியா யோசியாவின் பேரனா? அல்லது மகனா?

சொருபாபேலின் மகன் யார்?

இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் மகன் அபியூத் வழியில் தான் இயேசு ஜனனமானார் என்று மத்தேயுவும் (மத்தேயு 1:13) சொருபாபேலின் மகன் ரேசா வழியில் தான் இயேசு வந்தார் என்று லூக்காவும் (லூக்கா 3:27) கூறுகின்றனர். உன்மையில் இயேசு சொருபாபேலின் மகன்கள் என்று சொல்லப்படக்கூடிய அபியூத் வழியில் வந்தாரா? அல்லது ரேசா வழியில் வந்தாரா?

அடுத்து இதில் மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் இதே வம்சாவலியைச் சொல்லி வரும் பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3 : 19 ல் இந்த சொருபாபேலுக்கு பிறந்தவர்கள் யார் யார் என்பது பற்றி கூறப்படுகிறது. அதில் மத்தேயு சொல்லக்கூடிய சொருபாபேலின் மகன் அபியூத்தோ அல்லது லூக்கா சொல்லக்கூடிய ரேசாவே அங்கே வரவில்லை. மாறாக, அங்கே வேறு ஒரு வம்சப்பட்டியலை எழுதிவைத்துள்ளனர். இதிலிருந்து லூக்காவோ அல்லது மத்தேயுவோ கண்மூடித்தனமாக எதையோ எழுதிவைத்துள்ளனர் என்பதும், இவற்றைத்தான் கிறிஸ்தவர்கள் கடவுளின் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகிறதல்லவா?

கிறிஸ்தவர்கள், மத்தேயு சொல்வதுதான் சரி என்றால் லூக்காவும், பழைய ஏற்பாட்டின் 1 நாளாகமும் சொல்வது பொய் என்று ஆகிவிடும். இல்லை லூக்கா சொல்வது தான் சரி என்றால் 1 நாளாகமும் மத்தேயுவும் சொல்வது தவறென்றாகிவிடும். அல்லது 1 நாளாகமம் சொல்வது தான் சரி என்றால் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் ஏதோ கடவுளின் பெயரால் உளறித்தள்ளிவிட்டனர் என்றாகிவிடும். எது உன்மை? எப்படியோ பைபிளின் ஆகாமங்கள் கடவுளின்பெயரால் மக்களை குழப்புகின்றது என்பது மட்டும் நிச்சயம்.

சொருபாபேலின் தந்தை யார்?

இயேசுவின் வம்சத்தில் வரும் சொருபாபேலின் தந்தை சாலத்தியேல் என்று மத்தேயு 1 : 12 லும், லுக்கா 3 : 27லும் ஒருமனதாக சொல்லுகின்றனர். ஆனால் இந்த இருவரும் எதை ஒத்தகருத்துடன் சொல்லுகிறார்களோ அது தவறு என்று பழைய ஏற்பாடு 1 நாளாகமம் 3:19ல் சொல்லப்படுகின்றது. அதாவது சொலுபாபேலின் தந்தை பெதாயா என்கிறது. எது சரி?

சாலத்தியேலின் தந்தை யார்?

இயேசுவின் வம்சாவளியில் வரும் ஒருவர் சாலத்தியேல். இவரின் தந்தை 'எகொனியா' என்பவர் தான் என்று மத்தேயு 1:12 லும், இல்லை 'நேரி' என்பவர் தான் என்று லூக்கா 3:27 லும் தெரிவிக்கின்றனர். உன்மையில் எகொனியாவின் தந்தை யார்?

மரியாளின் புருசன் யோசேப்பின் தந்தை யார்?

இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மத்தேயு லூக்கா - இரண்டு சுவிசேஷக்காரர்களுமே கூறுகின்றனர். அந்த யோசேப்பின் தந்தை யாக்கோபு என்று மத்தேயுவும் (மத்தேயு 1:16) ஏலி என்று லூக்காவும் (லுக்கா 3:23) கூறுகின்றனர். இங்கே மரியாலுடைய புருஷன் யோசேப்பின் தந்தை யார்? இப்படி தந்தை விஷயத்தில் குழப்பம் வரலாமா? அதுவும் இNசுவுடைய தாய் மரியாலுடைய புருஷனின் தந்தைக்கூட தெரியதா அளவில் தான் கடவுள் இருப்பாரா? அல்லது கடவுளின் பெயரால் பைபில் வேதம் என்று புனையப்பட்டுள்ளதா?

இயேசு ஜனனமானது சாலமோன் வழியிலா? நாத்தானின் வழியிலா?

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயு 1 : 16ல் இயேசு பிறந்தது தாவீதின் மகன் சாலமோன் வம்சத்தில் என்கிறார். ஆனால் லூக்காவோ 3 : 31ல் இயேசு தாவீதின் மகன் நாத்தானின் வம்சத்தில் பிறந்தார் என்கிறார். இது எப்படி சாத்தியமாகும். தாவீதுக்கு நாத்தான் சாலமோன் என்று இரண்டு மகன்கள் இருந்ததாக பழைய ஏற்பாடு 2 சாமுவேல் 5: 14ல் சொல்லப்படுகின்றது. அப்படியானால் எப்படி இரண்டு பேரின் வழியிலும் இயேசு வந்திருக்க முடியும்? தாவீதின் இரு மகன்களில் எந்த மகன் வழியே இயேசுவின் வம்ச வரலாறு வருகின்றது என்பதைக்கூடவா கடவுளுக்கு அறியாமல் இருக்கின்றார்? இப்படி முரண்பாடாக இருக்கும் ஒன்றை எப்படி கடவுளுடைய வேதம் என்று ஏற்க முடியும்? அல்லது கடவுள் ஒன்றும் அறியாதவர் என்று சொல்ல வருகின்றீர்களா?

இதில் சில கிறிஸ்தவர்கள் இந்த முரண்பாட்டை சமாளிப்பதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதற்காக - பொருந்தாத வாதமொன்றை வைக்கின்றனர். மத்தேயு, தாவீதின் மகன் சாலமோனுடைய வழியாக மரியாலுடைய புருசன் யோசேப்பின் வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் லூக்கா, தாவீதின் மகன் நாத்தானின் வழியாக இயேசுவின் தாய் மரியாலுடைய வம்சாவழியைச் சொல்லுகிறார் என்றும் இரண்டுமே வேறுவேறான வம்சாவளி என்கின்றனர்.

பொதுவாகவே கிறிஸ்தவர்கள் பைபிளில் உள்ள இந்த முரண்பாடுகளை ஒத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த வாதத்தை வைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. இது பைபில் உள்ள மிகத்தெளிவான முரண்பாடு என்பதை நன்றாகத் தெரிந்தும் இதை ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கான காரணங்கள் இதோ :

லூக்காவும் சரி மத்தேயுவும் சரி - இருவருமே மரியாலுடைய புருஷன் சோசேப்பின் வம்சாவலியையே கூறுகின்றனர் என்பது தான் உன்மை. காரணம், மத்தேயு 1 : 16ல் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இங்கே இயேசுவின் தந்தை யோசேப்பு என்று மிகத்தெளிவாகச் சொல்லப்படுகின்றது. அதேபோல் லூக்கா 3: 23ல் 'அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். இங்கேயும் இயேசுவின் தந்தை யோசேப்பு என்றே சொல்லப்படுகின்றது. எந்த ஒரு இடத்திலும் மரியலுடைய வம்சத்தைப் பற்றி சொல்லப்படவில்லை என்பதை நன்றாக கவனிக்க வேண்டும்.

அடுத்து மத்தேயுவும் லூக்காவும் சொல்லக்கூடிய வம்சாவளிப்பட்டியல்களின் இடையே இயேசுவின் முன்னோர்களான சாலத்தியேல் அவரது மகன் சொருபாபேல் என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க மத்தேயு 1:12, லூக்கா 3:27) கிறிஸ்தவர்கள் மறுப்பது போல் இந்த இரண்டும் வேறு வேரான வம்சவராலாறு என்றால் இந்த பட்டியலில் இவ்விருவரும் வரவேண்டிய அவசியம் என்ன? லூக்காவும் மத்தேயும் சொல்வது போல் இவ்விருவரும் பெயர்களில் தான் ஒற்றுமையே யொழிய நபர்கள் தனித்தனி நபர்களே என்றும் மறுக்க இயலாது. ஏனெனில் இரு ஆகமங்களிலும் வரும் இவ்விறுவரும் ஒருவரே என்று அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் ரெஃபரன்ஸ் பைபிள்களில் கோடிட்டு காட்டியுள்ளனர். (உதாரனமாக : தானியேல் தமிழ் ரெஃப்ரன்ஸ் வேதாகமம், ஆங்கிலம் NIV Study bible, RSV. KJV (editod by : C.S. Scofield. இன்னும் பல...). லூக்கா சொல்வதும் மத்தேயு செல்வதும் வேறு வேரான வம்சாவளி என்றால் தந்தை மகன்களாகிய சாலத்தியேலும், சொருபாபேலும் எப்படி இரண்டு வம்சத்திலும் வருவார்கள்?

அடுத்து, இவர்கள் இந்த முரண்பாட்டை சரிகட்டி பைபிள் இறைவேதம் என்று நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் காரணங்கள் திரும்பவும் பைபில் இறைவேதம் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே அமைந்து விடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்த முரண்பாட்டை சரிகட்ட தானியே ரெஃபரன்ஸ் வேதாகமம் சொல்லும் காரணத்தைப் பாருங்கள் :

'[503] 3:24 மரியாளின் மூதாதயைர் பட்டியல் : ஏலி யோசேப்பின் மாமாவாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்தச் செய்திகள் மரியாளிடமிருந்து லூக்காவுக்கு கிடைத்திருக்க வேண்டும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் லூக்கா நூல் வழங்குகிறது. அதற்கு இந்த மரியாளின் பரம்பரைப் பட்டியல் ஒரு சிறந்த சான்று' (பார்க்க : தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் - பக்கம் 1098)

இதில் என்ன சொல்ல வருகின்றார். லுக்கா சொல்லும் யோசேப்பின் தந்தை ஏலி என்பவர் உன்மையில் அவரின் தந்தை இல்லையாம். அவரின் மாமாவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். இங்கே ஏன் 'அதிக வாய்ப்பு உள்ளது' என்று போட வேண்டும். அது தான் உன்மையாக இருந்தால் அதை பைபில் ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தானே. இப்படி சமாளிக்கும் வார்த்தைகளைப் போட்டால் தான், இந்த முரண்பாட்டைக் களைந்து இது கடவுளுடைய வேதம் என்று சொல்லாம் என்பதற்காக தங்களுக்குள்ளே செய்துக் கொள்ளும் சமாதானம்.

அடுத்து 'இந்த செய்திகள் லூக்காவுக்கு மரியாளிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்'. என்கிறார். இவர் சொல்வது உன்மையானால் இந்தச் செய்தி மரியாளிடமிருந்து கிடைத்தது என்று லூக்காவல்லவா சொல்லவேண்டும். அதைவிடுத்து 20ம் நூற்றான்டைச் சேர்ந்த தானியேல் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

அடுத்து இவர் 'லுக்காவுக்கு இந்தச் செய்தியை மரியால் தான் சொன்னாh'; என்று ஒத்துக்கொண்டதன் மூலம் இந்தச் செய்தி கடவுள் சொல்லவில்லை, லூக்கா, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் கேட்டுத்தான் தனது புத்தகங்களை எழுதினார் என்பதை அப்பட்டமாக ஒத்துக்கொள்கிறார்களா இல்லையா? அப்படியானால் லூக்காவால் பலரிடம் கேட்டு எழுதப்பட்ட புத்தகத்தை, கடவுளால் அவருக்கு சொல்லப்பட்டு எழுதப்பட்ட வேதமாக எப்படி ஏற்க முடியும்? இவ்வாறு, இவர்கள் இந்த முரண்பாட்டைக் களைவதற்காக எத்தனை மறுப்புக்கள் கூறினாலும், அந்த மறுப்பே வேறு ஒரு விதத்தில் முரண்பாட்டைக் கொண்டுவரும் என்பது தான் நிதர்சமான உன்மை.

அடுத்து வேறு சிலர் இன்னொரு வாதத்தையும் வைக்கின்றார்கள். அதாவது 'யூதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு நபருக்கு மகனில்லாமல் மகள் மட்டும் இருந்தால், தன் மருமகனை தன் மகனாகக் கருதி, தன் வம்ச அட்டவனையில் சேர்த்துக் கொள்வார்கள்' என்கின்றனர். எனவே லூக்கா சொல்லும் 'ஏலி' என்பவர் யோசேப்பின் மாமனார் என்று கூற வருகின்றனர். யோசேப்பின் மாமனார் 'ஏலி' என்பதற்கும், மரியாளுக்கு சகோதரார்களே இல்லை என்பதற்கும் என்ன பைபிள் ஆதாரம்? ஓன்றும் கிடையாது. பவுளும் யோசேப்பும் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகள் என்று இப்பொழுது 2008ல் நான் சொன்னால் அதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ, அதே போல் தான் இந்த கதைக்கும் ஆதாரம் கிடையாது.

அடுத்து, இப்படி வம்சாவலிப் பட்டியல்களை எழுதிவைப்பது யூதர்களுடைய வழக்கம் - அதனால் தான் வம்சாவலிப் பட்டியல்கள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். யூதர்களுடைய பழக்கத்திற்கும் கடவுளின் வேதத்திற்கும் என்ன சம்பந்தம்? தந்தை இல்லாமல் அதியமான முறையில் பிறந்தவர் இயேசு என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, அப்படிபட்டவருக்கே தந்தை வழி வம்சத்தை யாராவது எழுதிவைப்பார்களா? இப்படி அதிசயமாக பிறந்த இயேசுவுக்கு தந்தைவழி வம்சத்தை சொல்லுவதால் கடவுள் செய்த அதிசயத்தை மறுப்பதாக ஆகாதா? இப்படி எழுதி வைப்பது யூதர்களுடைய பழக்கம் என்பதால் அதே யூதர்கள் இயேசுவையும் மற்ற பரிசுத்தவான்களையும் கொடுமைப்படுத்தியதும், சிலுவையில் அறைந்ததும் சரி என்று சொல்லி விடுவீர்களா? எனவே இது தேவையற்ற வாதம் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.


இதன் பாகம் - 2 அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்...
...
.
.
.

Tuesday, April 08, 2008

பகைமை பாராட்டுகிறதா இஸ்லாம்?

காஃபிர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதே, இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர்கள் என்று வசைபாடுகிறதே, முஸ்லிமல்லாத மக்களுடன் சகிப்புத் தன்மையுடன் நடக்கக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் கட்டளையிடுகிறதே?

மேற்கூறியவை இஸ்லாத்தின் மீது பரவலாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை சில விஷமிகள் பொதுமேடையில் பேசியும், இன்னும் சிலர் தற்போது இணையத்தளங்களின் எழுதுவதன் மூலம் முஸ்லீம்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் பகைமை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இவை, உண்மை கலப்பில்லாத குற்றச்சாட்டுக்களாகும்.

முஸ்லிமல்லாதவர்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது உண்மை தான். காஃபிர்கள் என்பது ஏசுவதற்குரிய வார்த்தையன்று. அரபு மொழியில் காஃபிர்கள் என்பதற்கு மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள் என்று பொருள். இஸ்லாத்தை மறுப்பவர்கள், இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன் படுத்தப்படுகிறது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனக் கூறுவதில் இழிவுபடுத்துதல் ஏதுமில்லை. காஃபிர்கள் என்பதன் பொருள் தெரியாத காரணத்தினால் அது ஏதோ திட்டக்கூடிய வார்த்தை என எண்ணிக் கொள்கின்றனர்.

'காஃபிர்களைக் கொல்லுங்கள்! காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்' என்றெல்லாம் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளதே? என்ற குற்றச்சாட்டும் தவறாகப் புரிந்து கொண்டதனால் ஏற்பட்டதாகும். முதலில் அவர்கள் சுட்டிக் காட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

அவர்களைக் கண்ட இடத்தில் நீங்கள் வெட்டுங்கள்! உங்களை அவர்கள் வெளியேற்றியது போல் அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! குழப்பம் கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராம்(கஃபா வளாகம்)அருகில் அவர்கள் உங்களுடன் போர் செய்யாத வரை அவர்களுடன் நீங்கள் போர் செய்யாதீர்கள்! அவர்கள்(அங்கே) உங்களுடன் போர் செய்தால் நீங்களும் அவர்களுடன் போர் செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:191)

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்.

இவ்வசனத்தில் 'அவர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடன் போருக்கு வருபர்களுடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறி விடாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

ஒரு ஆட்சிநடைபெரும் நாட்டில் இன்னொரு இன்னொரு நாட்டவர் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொடுக்குமா?

போர் என வந்து விட்டால் எல்லா விதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆன் 'அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்' எனக் கூறி போர்க்களத்திலும் புதுநெறியை இஸ்லாம் புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

அல்குர்ஆன் 4:89, 4:90, வசனங்களில் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் எதிரிகளை வெட்டுங்கள் எனக் கூறப்படுகிறது.

அந்தச் சமயத்தில் கூட நீங்கள் முஸ்லிமல்லாத மக்களுடன் உடன்படிக்கை செய்திருந்தால் அவ்வாறு உடன்படிக்கை செய்த மக்களுடன் எதிரிகள் சேர்ந்து விட்டால் அவர்களைக் கொல்லாதீர்கள் எனவும் அவ்வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாத எத்தனையோ சமுதாயத்தவர்களுடன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்துள்ளனர்.

போர் செய்ய வந்த எதிரிகளுக்கு உடன்படிக்கை செய்தவர்கள் அடைக்கலம் கொடுத்தால் அவர்களை விட்டு விடுமாறும் இஸ்லாம் கூறுகிறது.

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் எந்த ஆட்சியாளரும் செய்வதை விட பெருந்தன்மையுடன் நடக்கக் கூறும் இவ்வசனங்களைத் தான் சிலர் தங்களின் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் போது 'எதிர்த்து வருவோரை சுட்டுத் தள்ளுங்கள்' என்று இந்தியப் பிரதமர் ஆணையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த உத்தரவுப்படி பாகிஸ்தானிய முஸ்லிம் வீரர்கள் சுட்டுத் தள்ளப்பட்டால் இந்தியா முஸ்லிம்களை கொன்று குவிக்கிறது என யாரும் கூறமாட்டார்கள். சுடப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்பதற்காக அவர்கள் சுடப்படவில்லை. போருக்கு வந்த எதிரிகள் என்ற காரணத்திற்காகத்தான் இவர்கள் சுடப்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் இவ்வாறு புரிந்து கொள்ள மறுப்பது தான் விசித்திரமாக உள்ளது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாம் மதீனாவிலும், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட வில்லை.

இஸ்லாம் எவ்வளவு சகிப்புத் தன்மையுடைய மார்க்கம் என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் தவறான எண்ணம் கொண்டவர்கள் முன் வைப்பது பொருத்தமாக இருக்கும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனா நகர் சென்றதும் இறைவனை வணங்குவதற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப்பள்ளி வாசலில் நபிகள் நாயக்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அமர்ந்திருந்த போது முஸ்லிமல்லாத ஒரு கிராமவாசி வருகிறார். பள்ளிவாசலுக்குள் நுழைந்து அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட நபித்தோழர்கள் ஆத்திரமுற்று அவரைத் தாக்கத் தயாரானார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை விட்டு விடுங்கள்' எனக் கூறினார்கள்.

அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்தனர். அவரிடம் மென்மையாக 'இது அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம். இங்கே அசுத்தம் செய்யக் கூடாது' என்று கூறி அனுப்பினார்கள்.

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவரைக் தண்டிக்காமல் அவர்கள் விட்டு விட்டது சாதாரணமான ஒரு செயலாக யாருக்கும் தோன்றலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதைக் கண்டு, அவர் கழித்து முடிக்கும் வரைக் காத்திருந்து மென்மையாக அறிவுரை கூறியதைச் சாதாரணமாகக் கருதமுடியாது. இத்தகைய சகிப்புத்தன்மையை எந்த மதவாதியிடமும் காணமுடியாது.

இஸ்லாம் ஒரு கடவுளைத்தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடிய கற்சிலைகளுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்துகிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக்கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரைப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு ஏசினால் அறியாமை காரணமாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள். (அல்குர்ஆன் 6:108)

தான தர்மங்கள் செய்வதில், உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப்பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளை பிறப்பிக்கிறது.

மார்க்க விஷத்தில் உங்களுடன் எதிர்த்துப் போர் புரியாதவர்களுக்கும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. (அல்குர்ஆன் 60:8)

விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டக் கூடியவராகவும் நீதிக்குச் சாட்சிகளாகவும் ஆகி விடுங்கள்! ஒரு சாரார் மீது(உங்களுக்குள்ள) வெறுப்பு(அவர்களுக்கு) நீதி செலுத்தாதிருக்கும்படி உங்களைத் தூண்டக் கூடாது. நீங்கள்(அனைவரிடமும்) நீதியாக நடந்து கொள்ளுங்கள்! அதுவே இறையச்சத்துக்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் (அல்குர்ஆன் 5:8)

இத்தகைய மார்க்கத்தைத் தான் வன்முறை மார்க்கம் எனத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நியாய உணர்வுடையோர் இதை உணர்வார்கள்.
.
.
.

Thursday, March 27, 2008

ஏழல்ல எழுபது தலைமுறையானாலும் இன இழிவு நீங்காது!

ஏழல்ல எழுபது தலைமுறையானாலும் இன இழிவு நீங்காது!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர். வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.

செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை. இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன. ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில் இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பௌத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பௌத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது இன இழிவு நீங்கியபாடில்லை.

அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும். MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல் இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.

ஆதி காலத்தில் தமிழக மக்கள் 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர். ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன. இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.

இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா? அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான், ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர். அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்க வழிவகுக்குமா?

அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக்கொண்டே பொய்க்கடவுளர்களின் கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா? ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்? பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும். இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை. இதை நாம் சொல்லவில்லை, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான 'இன இழிவு இஸ்லாமே நன் மருந்து' ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார். பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது. 1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான். இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள். எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே! அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே! ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல் உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை. அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள்.

அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள். அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள். அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்; அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள். இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.

ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது. மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.

நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை. அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள். சமீபத்தில் கூட விழுப்புரம் மாவட்டம் எறையூர் கிராமத்தில் உயர் ஜாதிக்கிறிஸ்தவர்களுக்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஜாதிப் பிரச்சனையால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மதத்திலிருந்து வேறு மதம் மாற முடிவு செய்துள்ளனர் என்ற செய்திகளை பத்திரிக்கைகளில் நாம் பார்த்து வருகின்றோம். அம்பேத்கார் தழுவிய பௌத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது. அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை. பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.

இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்? இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை. அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க்கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள். இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் அத்தியாயம் 2:174

ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள். ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர். தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால் ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.

அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும். இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல்

என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர். (25:30 அல்குர்ஆன்)

என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை. எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்

எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.

என்று இறைவன் கூறியிருப்பதை இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம். மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.

எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை. எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும், நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம், குறைந்த பட்சம் தெய்வமில்லையா? (நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.

தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.

பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால் அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

Wednesday, March 26, 2008

பைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை

மறுப்பும்.. விளக்கமும்... .........................................................- அபு இப்ராஹீம்

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் மக்களுக்கு எந்த ஒரு படிப்பினைகளும் இல்லாத - எதற்கும் உதவாத - ஆபாசவர்ணனைகளுடன் கூடிய ஏராளமான ஆபாசக்கதைகள் - நிறைந்து காணப்படுகின்றன என்ற ஆய்வுக்கட்டுரைகளை 'பைபிளில் ஆபாசம்' என்றத் தலைப்பில் நாம் தொடராக கண்டு வருகின்றோம்.

இதற்கு முன் 'கிறிஸ்துவம்' பற்றி நாம் எழுதிய கட்டுரைகளை காண இங்கே சொடுக்கவும்.

கடவுளின் வேதம் என்பது எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாறாக - அசிங்கமான கற்பனைக்கதைகள் - ஆபாசம் நிறைந்த கதைகள் - பைபிளில் நிறைந்துக் காணப்படுவதற்கு காரணம், அக்காலத்தில் வாழ்ந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போனப் போக்கில் - கடவுளுடைய பெயரால் - அவரது தீர்க்கதரிசிகள் - நல்லோர்கள் - பலரின் பெயரால் இட்டுக்கட்டிய பொய்க்கதைகளை, கடவுளுடைய வேதத்திலேயே உட்சொருகி, அதை சீரழித்ததால் தான் இன்றைய பைபில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கதைகள் கடைசியில் கடவுள் கொள்கைக்கே பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்து விட்டது என்பதுதான் அதைவிட வருத்தத்திற்குறிய ஒன்று. அதன் அடிப்படையில் அமைந்த ஒரு கதை - யாருக்கும் - எவருக்கும் - எந்த ஒரு பயனுமற்ற ஒரு கதை - பைபிளில் வருகின்றது. அதை சற்று அலசுவோம்.

இஸ்ரவேலர்களில் ஒருவரான 'யூதா' என்பவரின் சந்ததியினர் மூலமாகத்தான் இயேசு பிறந்தார் என்று புதிய ஏற்பாட்டில் கூறப்படுகின்றது. அதை மத்தேயு பின்வருமாறு கூறுகின்றார். 'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்' (மத்தேயு 1:3) அதவது 'யூதா' பரேசை தாமாரிடத்திலிருந்து பெற்றானாம். அந்த வம்சத்தில் தான் இயேசு பிறந்தாராம். இந்த தாமார் யூதாவுக்கு யார்? மனைவியா? இல்லை நிச்சயிக்கப்பட்டவாரா? அல்லது யூதா தாமாருக்கு திருமணம் முடிக்கும் அளவுக்கு உறவு முறைக்காரரா? கிடையாது. யூதாவுக்கும் தாமாருக்கும் உள்ள உறவு என்ன? பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே அந்த ஆபாசக்கதையை விளக்கப்படுகின்றது. அதாவது இந்த கேடுகெட்ட விபச்சார சந்ததி மூலம் தான் இயேசு வந்தார் என்று இயேசுவைக் அசிங்கப்படுத்தக்கூடிய கதையை பாருங்கள்:

'அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான். அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். (ஆதியாகாமம் 38 : 2 - 5)

இது வரை யூதா என்பவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்து வரும்கதையைப்பாருங்கள்.

யூதா தன் மூத்த மகனாகிய 'ஏர்' என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். (ஆதியாகமம் - 38 : 6 - 10)

இங்கே யூதா ஒரு செயலைச் செய்தாக சொல்லப்படுகின்றது. அதாவது தனது மூத்த மகனும் தாமாரின் கனவனுமான ஏர் என்பவன் பொல்லாதவனாக இருந்தானாம். ஆதனால் அவனைக் கடவுள் அழித்துப் போட்டாராம். அந்த 'ஏர்' என்பவனுக்கு மகன் இல்லாததால் அவனது மனைவியை தனது இரண்டாவது மகனை திருமணம் செய்து அவளை வைத்து ஒரு பிள்ளைப்பெறு என்று சொன்னதாகவும், அவனும் அவளோடு உடலுறவு கொண்டுவிட்டு, இவனது 'விந்து' அவளுள்ளே சென்றுவிடாமல் வெளியே எடுத்து விட்டு - அதை 'வேஸ்ட் பண்னிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவன் செய்தது கடவுளுக்கு பொல்லாப்பாய் இருந்ததாம். இந்தக் கதையால் - இந்த விளக்கத்தால் - இந்தச் சமுதாயத்திற்கு என்னப் பயன்? அடுத்து வரும் கதையைப் பாருங்கள் :

'அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான். அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்' (ஆதியாகமம் - 38 : 11)

இப்படி வாக்கு கொடுத்த யூதா அடுத்து செய்த காரியம் என்ன?

'அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில்போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள்ளூ அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்ள. அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான். அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்றுமாதம் சென்ற பின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன். இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள். அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது. அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள். அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான். அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது. (ஆதியாகமம் 38 : 12-30)

இப்படி போகின்றது ஒரு குடும்பத்தின் விபச்சாரக்கதை. நாம் என்ன கேட்கின்றோம் என்றால் இந்தக் கதையால் இந்த சமுதாயத்திற்கு - இந்த மக்களுக்கு என்னப் பயன்? இதனால் இந்த சமுதாயத்திற்கு கடவுள் சொல்ல வரும் உபதேசம் என்ன? 'தாமார்' போல் தன் மாமனார் என்று தெரிந்தும் விபச்சாரம் செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றாரா? அல்லது யூதாபோல் விபச்சாரியுடன் விபச்சாரம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லவருகின்றாரா? ஓரு குடும்பத்திற்குள் நடந்த இந்த அசிங்கமான கதையால் - மாமனாரும் மருமகளும் செய்த கல்ல உறவை சொல்லுவதன் மூலம் - மைத்துனனும் மைத்துனியும் செய்த உடலுறவை சொல்லுவதன் மூலம் - இந்த மக்களுக்கு என்ன பயன்? ஒன்றும் கிடையாது. ஒரே ஒரு உன்மையைத் தவிர. அதாவது, இந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம் போன போக்கில் கடவுளுடைய வேதங்களை சிதைத்ததோடு, வரலாறு என்றப் பெயரில் - வரலாற்றைப் புறட்டி - அவதூறான - ஆபாசமான கதைகளை எழுதிவைத்து கடவுளின் வேதத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டார்கள் என்பது மட்டும் தான்.

இந்த ஆபாசக் கதையை வேண்டும் என்றே மறுப்பதற்காகவும் - தாங்களிடம் இருக்கும் பைபிளை கடவுளின் வேதம் என்று நம்பிவிட்டோம் என்பதற்காகவும் - எதையாவது எழுதி இந்தக் கதையை நியாயப்படுத்த முனைகின்ற முயற்சியில் - முஸ்லீம் பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக அவதூறுபரப்பிக்கொண்டிருக்கும் சில கிறிஸ்தவ முகமூடிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் சொல்வது பச்சைப் பொய் என்றாலும், அதைச் பொருந்தச் சொல்லியாவது தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திபடுத்தியிருக்கலாம். அவ்வாறல்லாமல் சம்பந்தமில்லாத காலத்துடன் அதைப் பொருத்தி நியாப்படுத்த முயல்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
.

லேவிரட் திருமண முறையும் - யுதா, தாமார் ஆபாசக் கதையும் :

இந்தக் கதையை சில முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கூறக்கூடிய காரணம் ' லேவிரேட் திருமணம் - Levirate Marriage' என்ற முறையாம். அப்படி என்றால் என்ன? அதையும் அவர்களே விளக்குகின்றனர் :

// ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும்//

இதற்கு என்ன பைபிள் ஆதாரம் என்றால் மோசேக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தின் படி இது நடந்தது என்று ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். பார்க்க உபாகமம் 25 : 5-10. அதாவது இந்த யூதா தாமார் வாழ்வில் நடந்த ஆபாசக் கதைக்கு இந்த வசனத்தில் வரும் சட்டம் தான் காரணமாம். அதையும் அந்த முகமூடிகளே விளக்குகின்றனர் :

//இந்த 'லேவிரேட் திருமணம்' முறைதான் இந்த தாமார் வாழ்விலும் நிகழ்ந்தது //

எப்படிப்பட்ட பச்சைப்பொய்யை இட்டுக்கட்டுகின்றனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! இப்படி பொய்யை இட்டுக்கட்டி சமாளிப்பதென்பது இவர்கள் இரத்தத்தில் ஊரிய ஒன்று.

இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்காக எந்தக்காலத்திலேயோ நடந்த சம்பவத்தை எந்தக் காலத்திலேயோ கொடுக்கப்பட்ட சட்டத்துடன் முடிச்சு போடுகின்றனர் என்று பார்த்தீர்களா?

பைபிளின்படி மோசேக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த 'லேவிரேட் திருமணம்' என்ற முறையை மோசேப் பிறப்பதற்கும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த யூதா தாமாரின் இந்த ஆபாசக்கதையுடன் எப்படி ஒத்துப்போகும்? ஒரு பொய்யைச் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா? பைபிளின்படி மோசே பிறந்ததோ கி.மு. 1576. யூதாவின் காலமோ கிட்டத்தட்ட கி.மு 1810 ஆக இருக்கலாம் (அல்லது ஒரு சில வருடங்கள் முன்னும் பின்னும் இருக்கலாம்) எப்படியாயினும் மோசே பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவுக்கு அவருக்கு பின் வாழ்ந்த மோசேயின் சட்டம் எப்படிப் பொருந்தும்? இந்த வாதம் இவர்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா? இந்த அசிங்கமான - யூதா தாமரின் இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்கு ஒரு அளவு வேண்டாமா?

ஒரு வாதத்திற்காக அவர் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், லேவிரட் திருமணமுறைப்படி ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லாத நிலையில் அவளது கணவன் இறந்துவிட்டால் அவளின் கணவனின் கூடப்பிறந்தவர்கள் அவளோடு உடலுறவுக்கொண்டு அதன் மூலம் குழந்தைப் பெற்று தனது அண்ணணுக்கு சந்ததியை உருவாக்கலாமாம். அப்படித்தான் அந்த முகமூடி விளக்கமளித்துள்ளார்.

//ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும். //

இந்த சட்டத்தின் படி பார்த்தால் தாமாருடன் யூதாவின் மகனான 'ஓனான்' செய்த செலைத்தான் நியாயப்படுத்தலாம். யூதா தனது மருமகள் (தனது மகனின் மனைவி) தாமாருடன் செய்த இந்த விபச்சாரம் எப்படி இந்த சட்டத்துடன் பொருந்திப் போகும்? யூதா இந்தப் தாமாருக்கு மாமனாரே யொழிய மைத்துனன் அல்லவே? எப்படி இந்தக்கதைக்கு இந்த சட்டம் ஒத்துப் போகும் என்று வாதிட முன்வந்தீர்கள்?

அடுத்து இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்த கதைக்கு இந்த சட்டம் ஒத்துப்போகாது. அதாவது மோசேக்கு கொடுத்த இந்த 'லேவிரட் திருமணம்' என்ற சட்டத்தின்படித்தான் இந்த செயல் நடந்தது என்றால், அதே மோசேக்கு திருமணமானவளுடன் விபச்சாரம் செய்தால் மரணத்தண்டனை விதிக்க வேண்டும் - ஊர் மக்கள் முன் கல்லால் அடித்து கொள்ளப்படி வேண்டும் என்பது சட்டம் :

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் - 20:10 மற்றும் உபாகமம் 22:21-24)

எந்த மோசேயின் சட்டத்தின் படி இந்த தாமாரின் சம்பவத்தை நியாயப்படுத்துகின்றீர்களோ அதே மோசேயின் சட்டத்தின் படி யூதாவும் - தாமாரும் செய்த விபச்சாரத்தினால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டு - கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே? ஆனால் அப்படி செய்யப்படவில்லை. காரணம் யூதா வாழ்ந்த காலம் வேறு மோசே வாழ்ந்த காலம் வேறு. யூதாவுக்கு மோசேயின் சட்டப்படி 'லேவிரட் திருமணமுறை' ஒத்துப்போகும் என்றால் விபச்சாரத்திற்கான மரணத்தண்டனையும் ஒத்துப்போகும். எனவே இந்த ஆபாசக் கதைக்கு எத்தனைக் காரணங்களைக் கூறு நியப்படுத்த முயன்றாலும் அது தவறே. இந்த ஆபாசமான கதையால் பைபிளுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கே கேவலம்தான். காரணம் கேடுகெட்ட இந்த விபச்சாரத்தில் பிறந்த சந்ததி மூலம் தான் அவர் இயேசு வந்தாராம்.

லேவிரட் திருமண முறை இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாதா?

இது ஒருபுறம் இருக்க இதில் இன்னொரு வேடிக்கையும் அடங்கியிருக்கின்றது.

அதாவது யாருக்கு - எந்தக் காலத்தவருக்கு - இந்த லேவிரட் திருமணமுறை பொருந்தாதோ அவருக்கு அதைப் பொருத்தி நியாயப்படுத்தியவர்கள், யாருக்கு இந்த முறைப் பொருந்துமோ அதை மறுத்து எழுதியிருக்கும் வேடிக்கையைப் பாருங்கள்.

மோசேவின் காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த லேவிரட் திருமண முறை, மோசேவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவிற்கு பொருந்தாது என்று பார்த்தோம். ஆனால் அந்த இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டுமா? என்றால் கூடாது என்கிறார் அந்த கிறிஸ்தவ முகமூடி :

//பழைய ஏற்பாட்டுக்காலத்தில், இப்படி தன் சகோதரரின் குடும்பத்தை நிலைநாட்டாதவனுக்கு சமுதாயத்தில் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்த கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மனிதர்களாகிய எபிரேயர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு கிடையாது. இப்போது இதை யாரும் (கிறிஸ்தவர்கள்) பின்பற்றுவதில்லை, பின்பற்றவேண்டிய அவசியமில்லை //

இப்படி பச்சைப் பொய்யை இவர் சொல்கின்றார். காரணம் இந்த சட்டம் இந்தக்காலத்தில் இவர்களால் பின்பற்றுவது கிடையாது என்பதால் இதைச் சொல்கின்றார். அதுமட்டுமல்ல, இந்தச் சட்டத்தை இப்பொழுதும் பின்பற்றலாம் என்று இவர் சொன்னால் இன்னும் ஏராளமான குழப்பங்கள் வரும் என்பதால் இப்படி ஒரு கருத்தை திணிக்க முயற்சிக்கின்றார். இது போன்ற சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றத் தேவையில்லை என்று இவர் சொல்வதற்கு என்ன பைபிள் ஆதாரம்? இயேசு நாதர் இதைத் தடை செய்தாரா? கிடையாது. மாறாக (பைபிளின் படி) இந்தச் சட்டத்தை இயேசு நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் அவர் கருத்து. அதை அவரும் பின்பற்றுவாராம்.

இந்தச் சட்டத்தை பற்றி இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது :

'உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்னையதினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள். மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்' (மத்தேயு 22: 23-30)

அதாவது இந்தச் லேவிரட் திருமணச் சட்டத்தை பற்றி கேட்டவர்களிடம், இயேசு அந்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பதில் அளிக்கின்றார். இந்தச்சட்டத்தை அவர் தடை செய்திருந்தால் அங்கேயே இது இனி வரும் காலத்திற்கு பொருந்தாது என்றிருக்கலாம். அது மட்டுமல்ல இது போண்ற சட்டங்களை நான் அழிக்க வரவில்லை என்றும் அதைத் தொடர்ந்து நிறைவேற்றவே வந்துள்ளேன் என்றும் சாட்சியம் அளிக்கின்றார்.

'நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்' (மத்தேயு 5:17)

அதாவது முந்தைய சட்டங்களை இயேசு அழிக்க வரவில்லையாம். தொடர்ந்து நிறைவேற்றத்தான் வந்தாராம். எனவே இந்த லேவிரட் திருமணமுறை இயேசுவின் மேற்குறிப்பிட்ட கருத்தின்படி இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்களாக இருந்தால் - இயேசுவின் கூற்றின் படி இந்த சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டும். அதுதான் உன்மை. நீங்கள் வேண்டுமானால் இது தற்போது சட்டமில்லை என்று சொல்லி இயேசுவின் கூற்றை நிராகரிக்கலாம். அது உங்கள் கூற்று தானே யொழிய பைபிளின் கூற்று அல்ல. பைபிளின் படி - இயேசுவின் கூற்றின் படி - இயேசு அந்த சட்டத்தை நியாயப்படுத்தியதன் படி - இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். இந்தச் சட்டம் இன்றைக்கு பொருந்தாது என்பதற்கு பைபிளில் ஆதாரம் கிடையாது. நீங்கள் சொல்வது போல் யூதா தாமாருக்குத் தான் இந்த சட்டம் பொருந்தாது. அதுதான் உன்மை. (பைளின் படி பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பது பற்றிய ஆய்வுக்கட்டுரை விரைவில் எமது தளத்தில் இன்ஷா அல்லாஹ்)

அடுத்து இந்த சம்பவத்துடன் - திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்ட யூதா தாமாரின் ஆபாசக் கதையை நியாயப்படுத்த முயலும் சில கயவர்கள் பெருமானார் (ஸல்) ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் கொச்சைப் படுத்தி எழுதியிருந்தனர். அவர்களின் அந்த அவதூறுக்கு எமது தளத்தில் மற்றொரு பதிப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம். அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

யூதாவும் தாமாரும் தவறான வழியில் - நியாயத்திற்கு புறம்பாக - செய்த விபச்சாரத்தை நியாயம் கற்பிக்க முயன்ற இந்த கயவர்கூட்டம், முறையாக - நியாயமான காரணங்களுடன் - நடந்த பெருமானாரின் திருமணத்தை கொச்சைப்படுத்த நினைக்கின்றார்கள் என்றால் அவர்களின் எண்ணத்தை புரிந்துக்கொண்டீர்களா? அவர்களைப் பொருத்தவரை பைபிளில் சொல்லப்பட்ட - முறையற்ற - தகாத உறவுக்கதைகளை செயல்வடிவில் காட்டி வரும் மேலை நாட்டினரின் கேடுகெட்ட கலாச்சாரத்தை, இந்த தமிழ் மக்களிடம் திணிப்பதற்கான முயற்சிதான் இது. அதற்காகத்தான் நியாயமான காரணத்துடன் நடந்த பெருமானார் (ஸல்) அவர்களின் திருமணத்தை கொச்சைப்படுத்திவிட்டு - முறையற்று - கேவலமாக நடந்த விபச்சார கதையை நியாயப்படுத்த நினைத்தது. காரணம் அவர்களின் அந்த அசிங்கமான கலாச்சாரத்தை இங்கே இறக்குமதி செய்வதற்கு ஒரே தடை இஸ்லாம் மட்டும் தான். அதனால் தான் இஸ்லாத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்ய பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர்.

'கண்ட கண்ட அசிங்கமான கதைகளை எல்லாம் கடவுள் சொல்லியிருப்பார்' என்று ஒருவன் நம்பினானேயானால் இது போன்ற தவறான முடிவுக்குத் தான் வருவார்கள் என்பது தான் நிதர்சனமான உன்மை. அது தான் இவர்களது வாழ்விலும் நடைபெருகின்றது. இறைவனே நன்கறிந்தவன்.

.
.
.
.
.