அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Saturday, February 09, 2008

வெளிநாடுகளுக்கு செல்வதால் ...

கேள்வி: முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு செல்வதால், குடும்பப் பாசம், குழந்தைப் பாசம் ஆகியவற்றை இழப்பதுடன், மனைவியைப் பல வருடம் காக்க வைத்து நோகடிக்கின்றார்கள். இதைத் தவிர்க்க முடியாதா? ஜெயராஜ்
.
பதில் : முஸ்லிம்கள் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வது உண்மைதான். வெளிநாடுச் செல்வதால் முஸ்லிம்கள் அங்கு அதிகமாகச் சம்பாதிப்பதில்லை. எழுபத்தைந்து ஆயிரம் ரூபாய் செலவுச் செய்து வெளிநாடுச் செல்பவர்கள், அங்கே மாதம் மூன்று அல்லது நான்காயிரம் ரூபாய்களைத்தான் ஊதியமாகப் பெறுகிறார்கள் கட்ட வெளக்கமாராக இருந்தாலும் கப்ப வெளக்கமாராக இருக்கனும் என்ற பழமொழி முஸ்லிம்களிடம் வழக்கத்தில் உள்ளது.
குடும்பத்தைக் கவனிக்காமல் பிரிந்து வணக்க வழிபாடுகளில் கூட ஈடுபடக்கூடாது என்பது இறைவனின் கட்டளையாகும் அதனடிப்படையில் வருடக்கணக்கில் மனைவி மக்களைப் பிரிந்திருப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. இங்கேயே (இந்தியாவில்) இருந்து கஞ்சிக் குடித்துக் கொண்டாவது குடும்பத்தோடு வாழுங்கள் என்று நாங்கள் மேடைதோறும் முழங்கி வருகின்றோம். இளமை என்பது ஒரு பொக்கிஷம் இந்தப் பொக்கிஷத்தை இழக்காதீர்கள் என்று தொடர்ந்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். உங்களோடு (இந்துக்களோடு) சேர்ந்து நாங்களும் வேதனையடைகின்றோம் சங்கடப்படுகின்றோம்.

0 comments: