அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, March 11, 2009

புனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு


உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 2)

கிறிஸ்தவ தளத்துக்கு பதில்

தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக 'WHAT WAS THE SIGN OF JONAH? என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். அந்த புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் வெளியிட்டது.

இந்த கட்டுரைக்கு பதில் என்ற பெயரில் உமர் என்ற கிறிஸ்தவர் ஆங்கிலத் தளத்திலிருந்து எடுத்து மொழிப்பெயர்த்து வெளியிட்ட கட்டுரை எந்த அளவுக்கு முரண்பாட்டையும், குழப்பத்தையும் கொண்டிருந்தது என்பதை 'உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)' என்ற எமது பதில் கட்டுரையின் மூலம் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தோம்.

சகோதரர்.அஹமத் தீதாத் அவர்கள், மேற்சொல்லப்பட்ட தனது புத்தகத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னரும் உயிருடன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை பைபிளின் வசனத்தின் மூலம் நிரூபிக்கும் அதே வேலையில் மற்றொரு உன்மையையும் அதில் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்கள். அதாவது, இயேசு முன்னறிவித்ததாகச் சொல்லப்படும் 3 பகல் 3 இரவு என்ற அடையாளம் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துபோகாததுடன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டு என்பதையும் நிரூபித்திருந்தார்கள். ஆனால் அதையும் தனது மொழிப்பெயர்ப்புக் கட்டுரையின் மூலம் அந்த கிறிஸ்தவர் மறுத்திருந்தார். அந்த மறுப்பும் எந்த அளவுக்கு முரண்பாடானது குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்:

இயேசுவிடம் ஒரு அடையாளத்தைத் காட்டும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39

For as Jonas was three days and three nights in the whale's belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth

அதாவது, யோனா தீர்க்கதரிசி மீனின்வயிற்றில் உயிருடன் இருந்தது போல தானும் 3 பகல் 3 இரவு (3 days and 3 nights) பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். இந்த 3 பகல் 3 இரவு என்ற காலக்கணக்கை வைத்து தான் பல அப்பாவிக் கிறிஸ்தவர்கள், இயேசு தான் சொன்னதன் படியே சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார், அதன் மூலம் தங்களது 'ஆதிபாவம்' என்னும் ஜென்ம பாவம் மண்ணிக்கப்பட்டது என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். இப்படித்தான் கிறிஸ்தவ மிஷினரிகள் அவர்களின் அறியாமையைப் பயன் படுத்தி நம்பவைத்துக்கொண்டிருக்கின்றன. இது தான் இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையும் கூட. இதை நம்பாதவன்; மோட்சம் அடைய மாட்டான் என்று சொல்வதுடன், நம்மையும் இவ்வாறு நம்புங்கள், இல்லை என்றால் நீங்கள் பரலோக இரஜ்யத்தை அடைய முடியாது என்று பூச்சாண்டி காட்டுவோரும் உண்டு. அதனால் தான் வருடந்தோரும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி என்றும், அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் அதாவது இயேசு மூன்று நாள் கழித்து உயரித்தெழுந்த தினம் என்றும் கொண்டாடுகின்றனர்.

இந்த நம்பிக்கை சரியா? இவர்கள் சொல்வது போன்று தான் பைபிளும் கூறுகின்றதா? இன்றைய அப்பாவிக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் உன்மையிலேயே இயேசு 3 இரவு 3 பகல் பூமியில் இருதயத்தில் இருந்து பின்னர் உயிர்த்தெழுந்தாரா? அவர் முன்னறிவித்த காலக்கணக்கு பைபிளுடன் ஒத்துப்போகின்றதா? புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும் சரியானது தானா? என்பதை எல்லாம் பைபிளின் ஒளியில் சற்று விரிவாக ஆராய்வோம்.

இயேசுவை சிலுவையில் அறைந்தது வெள்ளிக்கிழமை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று 3ம் மணி வேலையாக இருந்த போது அவரை சிலுவையில் அறைந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றது :

அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. - மாற்கு 15:25

அதன்பிறகு சில மணி நேரம் கழித்து அவர் இறந்து விடுவதாகவும், அதன் பின்னர் அரிமத்தியாக்காரனான யோசேப்பு என்பவன் வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையத் தெடாங்கிய பின் இயேசுவின் உடலைக் கேட்டதாகவும், பின்னர் அவரது உடலைப் பெற்றுக்கொணடு அடக்கம் செய்ததாகவும் பைபிளில் சொல்லப்படுகின்றது:

யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. – லூக்கா 23:50-54

அதாவது இயேசு கல்லலையில் வைக்கப்படும் போது இரவு ஆரம்பமாகிவிட்டது என்பதைத் தான் ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று (அதாவது சனிக்கிழமை ஆரம்பமாயிற்று) என்று இங்கே சொல்லப்படுகின்றது. ஏனெனில் பைபிளின் படி ஒரு நாள் என்பது மாலை சூரியன் மறையத்தொடங்கியதிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. (பார்க்க ஆதியாகமம் 1:5, லேவியராகமம் 23:32)

WBTC மொழிப்பெயர்ப்பின் மாற்கு 15:42ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது :

இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு முந்திய நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய இரஜ்யம் வருவதற்காக காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் துனிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 15:42-43

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வசனங்களின் மூலம் இயேசு அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை இரவு என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஏனெனில் யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் இயேசுவின் உடலைக் கேட்கும் போதே சூரியன் மறையத்தொடங்கிவிட்டது - இருட்டத் தொங்கிவிட்டது - என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது. அதன் பின் அவன் யூதர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக இரவு வந்துவிடும் - அடுத்தநாள் தொடங்கிவிடும் என்பது தெளிவாக விளங்கும்.

அதன் பின்னர் இயேசு எப்போது உயிர்த்தெழுந்தார் என்பதை பைபிளில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள் - யோவான் 1:20

உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், - லூக்கா 24:3

அதாவது இந்த வசனங்களின் மூலம் ஞாயிற்றுக்கிழமை விடிவதற்கு முன்பே - சூரியன் உதயமாவதற்கு முன்பே - இயேசு உயிர்த்தெழுந்ததாக பைபிளின் எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வசனங்களின்படி பார்த்தால் இயேசு பூமியின் இருதயத்தில் - கல்லறையில் எத்தனை நாட்கள் இருந்திருப்பார்? அவர் முன்னறிவித்ததன்படி இருந்தாரா அல்லது அதற்கு மாற்றமாக இருந்தாரா? அதை ஒரு இலகுவான கணக்கின்படி பார்ப்போம்:

-------------------------------------------------------------------------
-----இயேசு உடல் கல்லறையில் இருந்த நாட்கள்---------பகல்-----இரவு---
-------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------வெள்ளிக்கிழமை---------------------------------------இல்லை---1-இரவு--
--------------------------------------------------------சனிக்கிழமை-------------------------------------------1 பகல்---1 இரவு
--------------------------------------------------------------------------
----ஞாயிற்றுக்கிழமை------------------------------------- இல்லை---இல்லை
------------------------------------------------------------------------------- ------------------------------------------மொத்தம்------1 பகல்---2 இரவு

மேலே நாம் பார்த்த கணக்கின்படி இயேசு பூமியின் இருதயத்தில் (அதாவது கல்லறையில்) இருந்தது வெறும் 1 பகல் 2 இரவுகள் மட்டுமே என்பது தெளிவாக விளங்கும். ஆனால் மத்தேயு 12:39ம் வசனத்தின் படி இயேசு 3 பகல் 3 இரவு பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்று முன்னறிவித்தாரே? அப்படி இருந்தாரா? பைபிளின் அவரது கடைசிகால நிகழ்வுகள் அப்படித்தான் இருந்தார் என்று சொல்லுகின்றதா? இல்லையே! மாறாக 1 பகல் 2 இரவுகள் மட்டும் தான் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) இருந்ததாக ஒன்றல்ல நான்கு சுவிஷேஷங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இது இயேசுவின் சிலுவை கொள்கையில் உள்ள அப்பட்டமான முரண்பாடு இல்லையா? அது மட்டுமல்ல, இந்த யோனா சம்பந்தப்பட்ட வசனம் இயேசு உயிருடன் இருப்பதை குறிக்காது. மாறாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கணக்கை மட்டும் தான் குறிக்கும் என்று சொன்ன கிறிஸ்தவர்களே, இந்த காலக்கணக்கும் உங்கள் குருட்டு நம்பிக்கைக்கு எதிராகத்தானே இருக்கின்றது? அதைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டாமா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார். அதன் மூலம் கிறிஸ்தவர்களின் ஜென்ம பாவம் மண்ணிக்கப்பட்டது என்பதும், அதை நம்பாதவன் மோட்சம் அடைய மாட்டான் என்பதும் இன்றயை கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கை. இதைச் சொல்லித்தான் இன்றைய கிறிஸ்தவ மிஷினரிகள் பல அப்பாவி மக்களை ஏமாற்றி மதம் மாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த கொள்கை இல்லை என்றால் இன்றைய கிறிஸ்தவமே கிடையாது என்கிற அளவுக்கு மிக முக்கியமான கொள்கையில் இப்படிப்பட்ட அப்பட்டமான முரண்பாடு வரலாமா? இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்குமா?

மறுப்பும் விளக்கமும் படிக்க இங்கே அழுத்தவும்



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

9 comments:

Anonymous said...

Dear I am watching this web page from year. It is wonderful. But, I am also very much interested in this field insha allah. i noticed when you are giving verbatium quotation from Bible (james king version)not correct. Please verfy you mentionede Luke 22:50-54 and Genusis 1:5 are not correct. So, infuture you may pay more attention. Otherwise, Umar will declar this is a big mistake.
wassalam

ஏகத்துவம் said...

அன்புச் சகோதரரர் AF Shahul Hameed அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

தாங்கள் சுட்டிக்காட்டியது போல், லூக்கா 23:50-54 என்பதற்கு பதிலாக லூக்கா 22:50-54 என்று தவறாக இடம்பெற்றுவிட்டது. தவறுக்கு மண்ணிக்கவும்.

மற்றொரு தவறு என்று நீங்கள் சுட்டிக்காட்டிய ஆதியாகமம் 1:5 என்று நாம் குறிப்பிட்டுள்ளது சரியானதே. அந்த வசனத்தில்

''தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார் சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.''

'And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day. '

என்று தான் வந்துள்ளது. எனவே அது சரியானதே.

தாங்கள் எனது கவனக்குறைவால் ஏற்பட்ட தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

தனி ஒருவனாக இருந்து பதிவுகள் போடுவதால் சில நேரங்களில் இப்படி தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றது. இனி முடிந்த அளவு இது போன்ற தவறுகள் ஏற்படாமல் கவனமான இருந்துக்கொள் முயச்சிக்கின்றேன்.

வஸ்ஸலாம்.

Anonymous said...

ஆம் நான் உங்களுக்கு உறுதுனையாக இருக்க விரும்புகிறேன். இதற்க்கு உங்கள் ஒப்புதல் தேவை.மேலும் நீங்கள் எதிலிருந்து ஆய்வு செய்து எடுக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. அந்த தளம் என்ன ? என்பதை போட்டால் நன்றாக இருக்கும்.

மா சலாம்.

அப்துல் அசீஸ்.

ஏகத்துவம் said...

சகோதரரர் Abdul Azeez அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் என்னை abuibrahim08@gmail.com என்ற Email மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் மெயிலை எதிர்பார்த்தவனாக,

அபூஇப்ராஹீம், சென்னை

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள ஏகத்துவம் தள நிர்வாகிகளுக்கு நான் மிஸ்ட் என்ற புனைப்பெயரில் tamilchristians தளத்தில் கிறிஸ்தவர்களின் அவதூறுகளுக்கு எதிராக என்னுடைய கட்டுரைகளை பதித்து கொண்டு வருகிறேன், ஆனால் நபி (ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களுக்கிடையே நடந்த திருமணத்தை கொச்சை படுத்தும் விதமாக அங்கு ஒரு விவாத கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது, அதில் என்னுடைய மறுப்புகளை எடுத்து வைத்தேன், ஆனால் உண்மையான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாத அந்த நியாயவான்கள் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து நீக்கி விடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய எழுத்தில் அவர்களைப்போன்ற நேர்மையாளர்கள் உலகில் கிடையாது என்ற் தோரணையில் இருந்து கொண்டு இருக்கும். என் பதிவுகளை நீக்கிய இந்த செயல்களை என்னவென்று சொல்வது.

மிஸ்ட்.

ஏகத்துவம் said...

அன்புச் சகோதரரர் மிஸ்ட் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தாங்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் செய்த விவாதத்தை நாமும் பார்த்துக்ககொண்டுதான் இருந்தோம். நீங்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டுவது போல் (எதிர்தரப்பினரின் பதிவுகள் நீக்கல் போன்ற) அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகள் என்பது இப்பொழுது மட்டுமல்ல முன்பிருந்தே தொடர்ந்துக்கொண்டுதான் வருகின்றது. இதற்கு முன்பே அவர்களது குருட்டு நம்பிக்கைக்கு எதிராக எவராவது பதிவு போட்டால் - அவர் கிறிஸ்தவராக இருந்தாலும் சரி - அதை நயவஞ்சகத்தனமாக உடனே நீக்கி விடுவார்கள். இந்த திருட்டுத்தனம் என்பது அவர்களின் இரத்தத்தில் ஊரிய ஒன்று.

அவர்களின் Super User உமர் என்பவர் எங்கோ ஒளிந்துக்கொண்டு இஸ்லாத்தை தரக்குறைவாக எழுதுவதுடன் 'தைரியத்தை' பற்றியும் அதிகமதிகம் எழுதுவார். ஆனால் அவர் எழுதும் பதிவுகள் பற்றி நமது சகோதரரர்களிடம் நேரடியாக பொது மக்கள் மத்தியில் விவாதிக்க தைரியம் இருக்கின்றதா? என்று கேட்டால் கழிவரைக்கு செல்கின்றேன் என்று கூறிவிட்டு ஓடிவிடுவார்.

இது சம்பந்தமாக இந்த ஏகத்துவம் தளத்தில் உமரின் கைப்பாவையான அலெக்ஸ் என்பவர் போட்ட பின்னூட்டத்திற்கு விரிவாக பதில் எழுதப்பட்டுள்ளது. அதை பார்க்க: இங்கே அழுத்தவும்

அந்த தமிழ் கிறிஸ்தவ தள நிர்வாகிகள் உன்மையிலேயே கிறிஸ்தவத்தின் மீதும், இரட்சிப்பின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், சத்தியத்தை அறிவிக்க வேண்டும், சத்தியத்தை அறிய வேண்டும் என்ற உன்மையான ஆர்வமுள்ளவர்களாக இருந்தால் ஏன் அவர்களது நம்பிக்கைக்கு எதிராக பதிவுகள் போடும் போது அதற்கு பதில் அளிக்க திரானி இல்லாமல் அதை நீக்க வேண்டும்? மறுப்பு இருந்தால் பதில் அளிக்க வேண்டும் அல்லது சரியாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஏன் பதிவுகளை நீக்குகின்றார்கள்? மற்ற மதங்களை தாக்கி எழுதுவது தங்கள் தள விதிமுறைக்கு எதிரானது என்று மழுப்பினால், இஸ்லாத்தை தாக்கி எழுதும் போது மட்டும் ஏன் அதை அனுமதிக்க வேண்டும்?

மிஸ்ட், அட்சாலிப் போன்றவர்களுடன் எழுத்து விவாதம் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது நயவஞ்சகத்தனமாக ஏன் அவர்களின் பதிவுகளை நீக்க வேண்டும்?

சரி அப்படியே நீக்கக்கூடியவர்கள் பிறகு ஏன்? கிறிஸ்துவ - இஸ்லாம் சகோதரரர்களுக்கு இடையே நடைபெற்ற சூடான – சுவையான விவாதங்கள் என்று தலைப்பிட்டு ஒரு பகுதியை ஆரம்பித்தார்கள்? இஸ்லாமியர்களின் பதில் பதிவுகளை எல்லாம் நீக்கிவிட்டு தங்களது குருட்டு நம்பிக்கையை ஏற்றுக்கொண்டவர்களின் பதிவுகளை மட்டும் வைத்துக்கொண்டால் எப்படி கிஸ்தவ இஸ்லாமிய சூடான சுவையான விவாதமாக இருக்கும்? இப்படித் தலைப்பிட இவர்களுக்கு வெட்கமாக இல்லையா? இது போன்று தலைப்பிட்டு ஒரு பகுதியை தொடங்கி இருப்பது நயவஞ்சகத்தனமில்லையா?

எனவே இவர்கள் கோழைகள், நயவஞ்சகர்கள், இவர்கள் வெளிநாட்டுக்கூலியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள். இவர்களிடம் போய் நமது நேரத்தை வீனடிப்பதை வீட தொடர்ந்து கிறிஸ்தவத்தில் உன்மைநிலையை மக்களுக்கு வெளிக்கொணரும் முகமாக கட்டுரைகள் எழுதி வெளியிடுவது சாலச்சிறந்தது என்பது எமது கருத்து.

ஒன்றைத் தெளிவாக கூறிக்கொள்கின்றேன். இன்று கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மேலைநாடுகளில் கிட்டத்தட்ட கிறிஸ்தவம் என்பது அழிந்துக்கொண்டு வருகின்றது. அங்கே உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் பைபிளில் உள்ள முரண்பாடான, ஆபாசமான, நகைச்சுவையான, விஞ்ஞானத்திற்கு எதிரான பெண்ணியத்திற்கு எதிரான, ஓரிறைக்கொள்கைக்கு சாவுமணி அடிக்கக்கூடிய, இயேசுவை கேவலப்படுத்தக்கூடிய, கர்த்தரை இழிவுபடுத்தக்கூடிய இன்னும் எண்ணற்ற கீழ்த்தரமான தரத்தில் உள்ள பைபிள் வசனங்களை பார்த்து விட்டு இது எப்படி இறைவேதமாக இருக்க முடியும்? என்று சிந்தித்ததன் விளைவு தற்போது பலர் நாத்திகத்திற்கும் இன்னும் சிலர் இஸ்லாத்திற்கும் இன்னும் சிலர் ஹிந்து மதத்திற்கு(க்கூட) மாறிக்கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சில வருடங்களில் மேலைநாடுகளில் கிறிஸ்தவம் என்பது இல்லாமலே போய்விடும் என்றும் சொல்லப்படுகின்றது.

இப்போது கிறிஸ்தவத்தின் வீழ்ச்சியைத் தடுக்க இயலாத – மேலைநாட்டவர்களின் கேள்விக்கனைகளுக்கு பதில் கொடுக்க முடியாத - கிறிஸ்தவ மிஷினரிகள், தற்போது தங்களது பார்வையை – மதமாற்றும் திட்டத்தை – பணம் கொடுத்து மாற்றுவதற்காக ஏழை நாடுகளின் பக்கமும் - ஆப்ரிக்கா மற்றும் ஆசியா நாடுகளின் பக்கமும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றார்கள்.

அதனால் தான் இங்கே அனைத்து இடங்களிலும் கிறிஸ்தவர்களின் மதமாற்ற நிகழ்ச்சிகள் அதிகமதிகம் நடந்துக்கொண்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், இங்குள்ள மிச்ச மீதி இருக்கக்கூடிய கிறிஸ்தவர்களும் மேலைநாட்டவர்கள் போன்று சிந்தித்து இஸ்லாத்தின் பக்கம் கவனம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது உமர் போன்றவர்களும், தமிழ் கிறிஸ்தவ தளத்தினரும் இஸ்லாத்தை வேண்டும் என்றே தரக்குறைவாக தாக்கி எழுத தொடங்கி இருக்கின்றனர்.

அவர்களைப் பொருத்தவறை இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு வருகின்றார்களோ இல்லையோ, இங்குள்ள கிறிஸ்தவன் இஸ்லாத்தின் பக்கம் தனது கவனத்தை திருப்பி விடக்கூடாது என்பதற்காகத்தான் இது போன்று இவர்களின் இஸ்லாத்தை தாக்கிய பதிவுகள் வெளியிடப்படுகின்றது. இன்றைக்கு இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக இது போன்ற நயவஞ்சகத்தனமான தாக்குதல்கள் இவர்களால் நடத்தப்படுகின்றது. ஆனால் ஒன்றை மீண்டும் சொல்லிக்கொள்கின்றோம். இவை எல்லாம் பொய் என்று மறுப்பார்களானால், இவர்கள் எழுதுவது அனைத்தும் உன்மையாக இருந்தால் எமது சகோதரார்களின் அழைப்பை ஏற்று நேரடி விவாதத்திற்கு வர வேண்டும். ஆனால் வரமாட்டார்கள். வந்தால் அவர்களது முகமூடி கிழிக்கப்பட்டால் வெளிநாட்டு கூலி நிறுத்தப்பட்டு பின்னர் திரு ஓடு ஏந்த வேண்டியது தான்.

Anonymous said...

mist your mail id plz?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுடைய பதில் சரியான ஒரு தெளிவை தந்தது.ஆனால் கிறிஸ்தவ‌ முஸ்லிம்களிடையே நடைபெற்ற சூடான சுவையான விவாதம் என்று தலைப்பிட்டுக்கொண்டு, இஸ்லாமிய தரப்பிலிருந்து யாராவது பதில் கொடுத்தால் அதை எங்கே மற்ற கிறிஸ்தவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் நீக்கி விடுவது புரிந்தது, இந்நிலையில் இவர்களுடைய தலைப்பே தவறாக அல்லவா உள்ளது.
கிறிஸ்தவ‌ முஸ்லிம்களிடையே நடைபெற்ற சூடான சுவையான விவாதம் என்பதற்கு பதில் இஸ்லாமை பற்றிய கிறிஸ்தவ கயவர்களின் அவதூறுகள் என்று தலைப்பிடுவார்களானால் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. மேலும் உங்களிடம் ஒரு கேள்வி, விவாதம் என்று தலைப்பிட்டுக்கொண்டு வாங்கிய பணத்திற்காக வாலாட்டிக் கொண்டு இஸ்லாமின் மீது அவதூறுகளை பதித்து வைக்கும் இவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து,(LIKE CYBER CRIME) இஸ்லாத்திற்கெதிரான கட்டுரைகளை நீக்க வைக்க முடியாதா?கருத்து கூறவும்.

Anonymous said...

Mist mail ID, demi6@rediffmail.com, Adsalib mail ID adsalib@gmail.com