அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, March 26, 2008

பைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை

மறுப்பும்.. விளக்கமும்... .........................................................- அபு இப்ராஹீம்

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் மக்களுக்கு எந்த ஒரு படிப்பினைகளும் இல்லாத - எதற்கும் உதவாத - ஆபாசவர்ணனைகளுடன் கூடிய ஏராளமான ஆபாசக்கதைகள் - நிறைந்து காணப்படுகின்றன என்ற ஆய்வுக்கட்டுரைகளை 'பைபிளில் ஆபாசம்' என்றத் தலைப்பில் நாம் தொடராக கண்டு வருகின்றோம்.

இதற்கு முன் 'கிறிஸ்துவம்' பற்றி நாம் எழுதிய கட்டுரைகளை காண இங்கே சொடுக்கவும்.

கடவுளின் வேதம் என்பது எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாறாக - அசிங்கமான கற்பனைக்கதைகள் - ஆபாசம் நிறைந்த கதைகள் - பைபிளில் நிறைந்துக் காணப்படுவதற்கு காரணம், அக்காலத்தில் வாழ்ந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போனப் போக்கில் - கடவுளுடைய பெயரால் - அவரது தீர்க்கதரிசிகள் - நல்லோர்கள் - பலரின் பெயரால் இட்டுக்கட்டிய பொய்க்கதைகளை, கடவுளுடைய வேதத்திலேயே உட்சொருகி, அதை சீரழித்ததால் தான் இன்றைய பைபில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கதைகள் கடைசியில் கடவுள் கொள்கைக்கே பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்து விட்டது என்பதுதான் அதைவிட வருத்தத்திற்குறிய ஒன்று. அதன் அடிப்படையில் அமைந்த ஒரு கதை - யாருக்கும் - எவருக்கும் - எந்த ஒரு பயனுமற்ற ஒரு கதை - பைபிளில் வருகின்றது. அதை சற்று அலசுவோம்.

இஸ்ரவேலர்களில் ஒருவரான 'யூதா' என்பவரின் சந்ததியினர் மூலமாகத்தான் இயேசு பிறந்தார் என்று புதிய ஏற்பாட்டில் கூறப்படுகின்றது. அதை மத்தேயு பின்வருமாறு கூறுகின்றார். 'யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்' (மத்தேயு 1:3) அதவது 'யூதா' பரேசை தாமாரிடத்திலிருந்து பெற்றானாம். அந்த வம்சத்தில் தான் இயேசு பிறந்தாராம். இந்த தாமார் யூதாவுக்கு யார்? மனைவியா? இல்லை நிச்சயிக்கப்பட்டவாரா? அல்லது யூதா தாமாருக்கு திருமணம் முடிக்கும் அளவுக்கு உறவு முறைக்காரரா? கிடையாது. யூதாவுக்கும் தாமாருக்கும் உள்ள உறவு என்ன? பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே அந்த ஆபாசக்கதையை விளக்கப்படுகின்றது. அதாவது இந்த கேடுகெட்ட விபச்சார சந்ததி மூலம் தான் இயேசு வந்தார் என்று இயேசுவைக் அசிங்கப்படுத்தக்கூடிய கதையை பாருங்கள்:

'அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான். அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். (ஆதியாகாமம் 38 : 2 - 5)

இது வரை யூதா என்பவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்து வரும்கதையைப்பாருங்கள்.

யூதா தன் மூத்த மகனாகிய 'ஏர்' என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். (ஆதியாகமம் - 38 : 6 - 10)

இங்கே யூதா ஒரு செயலைச் செய்தாக சொல்லப்படுகின்றது. அதாவது தனது மூத்த மகனும் தாமாரின் கனவனுமான ஏர் என்பவன் பொல்லாதவனாக இருந்தானாம். ஆதனால் அவனைக் கடவுள் அழித்துப் போட்டாராம். அந்த 'ஏர்' என்பவனுக்கு மகன் இல்லாததால் அவனது மனைவியை தனது இரண்டாவது மகனை திருமணம் செய்து அவளை வைத்து ஒரு பிள்ளைப்பெறு என்று சொன்னதாகவும், அவனும் அவளோடு உடலுறவு கொண்டுவிட்டு, இவனது 'விந்து' அவளுள்ளே சென்றுவிடாமல் வெளியே எடுத்து விட்டு - அதை 'வேஸ்ட் பண்னிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவன் செய்தது கடவுளுக்கு பொல்லாப்பாய் இருந்ததாம். இந்தக் கதையால் - இந்த விளக்கத்தால் - இந்தச் சமுதாயத்திற்கு என்னப் பயன்? அடுத்து வரும் கதையைப் பாருங்கள் :

'அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான். அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்' (ஆதியாகமம் - 38 : 11)

இப்படி வாக்கு கொடுத்த யூதா அடுத்து செய்த காரியம் என்ன?

'அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில்போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள்ளூ அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்ள. அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான். அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்றுமாதம் சென்ற பின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன். இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள். அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது. அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள். அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான். அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது. (ஆதியாகமம் 38 : 12-30)

இப்படி போகின்றது ஒரு குடும்பத்தின் விபச்சாரக்கதை. நாம் என்ன கேட்கின்றோம் என்றால் இந்தக் கதையால் இந்த சமுதாயத்திற்கு - இந்த மக்களுக்கு என்னப் பயன்? இதனால் இந்த சமுதாயத்திற்கு கடவுள் சொல்ல வரும் உபதேசம் என்ன? 'தாமார்' போல் தன் மாமனார் என்று தெரிந்தும் விபச்சாரம் செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றாரா? அல்லது யூதாபோல் விபச்சாரியுடன் விபச்சாரம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லவருகின்றாரா? ஓரு குடும்பத்திற்குள் நடந்த இந்த அசிங்கமான கதையால் - மாமனாரும் மருமகளும் செய்த கல்ல உறவை சொல்லுவதன் மூலம் - மைத்துனனும் மைத்துனியும் செய்த உடலுறவை சொல்லுவதன் மூலம் - இந்த மக்களுக்கு என்ன பயன்? ஒன்றும் கிடையாது. ஒரே ஒரு உன்மையைத் தவிர. அதாவது, இந்த யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம் போன போக்கில் கடவுளுடைய வேதங்களை சிதைத்ததோடு, வரலாறு என்றப் பெயரில் - வரலாற்றைப் புறட்டி - அவதூறான - ஆபாசமான கதைகளை எழுதிவைத்து கடவுளின் வேதத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டார்கள் என்பது மட்டும் தான்.

இந்த ஆபாசக் கதையை வேண்டும் என்றே மறுப்பதற்காகவும் - தாங்களிடம் இருக்கும் பைபிளை கடவுளின் வேதம் என்று நம்பிவிட்டோம் என்பதற்காகவும் - எதையாவது எழுதி இந்தக் கதையை நியாயப்படுத்த முனைகின்ற முயற்சியில் - முஸ்லீம் பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக அவதூறுபரப்பிக்கொண்டிருக்கும் சில கிறிஸ்தவ முகமூடிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் சொல்வது பச்சைப் பொய் என்றாலும், அதைச் பொருந்தச் சொல்லியாவது தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திபடுத்தியிருக்கலாம். அவ்வாறல்லாமல் சம்பந்தமில்லாத காலத்துடன் அதைப் பொருத்தி நியாப்படுத்த முயல்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
.

லேவிரட் திருமண முறையும் - யுதா, தாமார் ஆபாசக் கதையும் :

இந்தக் கதையை சில முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கூறக்கூடிய காரணம் ' லேவிரேட் திருமணம் - Levirate Marriage' என்ற முறையாம். அப்படி என்றால் என்ன? அதையும் அவர்களே விளக்குகின்றனர் :

// ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும்//

இதற்கு என்ன பைபிள் ஆதாரம் என்றால் மோசேக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தின் படி இது நடந்தது என்று ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். பார்க்க உபாகமம் 25 : 5-10. அதாவது இந்த யூதா தாமார் வாழ்வில் நடந்த ஆபாசக் கதைக்கு இந்த வசனத்தில் வரும் சட்டம் தான் காரணமாம். அதையும் அந்த முகமூடிகளே விளக்குகின்றனர் :

//இந்த 'லேவிரேட் திருமணம்' முறைதான் இந்த தாமார் வாழ்விலும் நிகழ்ந்தது //

எப்படிப்பட்ட பச்சைப்பொய்யை இட்டுக்கட்டுகின்றனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! இப்படி பொய்யை இட்டுக்கட்டி சமாளிப்பதென்பது இவர்கள் இரத்தத்தில் ஊரிய ஒன்று.

இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்காக எந்தக்காலத்திலேயோ நடந்த சம்பவத்தை எந்தக் காலத்திலேயோ கொடுக்கப்பட்ட சட்டத்துடன் முடிச்சு போடுகின்றனர் என்று பார்த்தீர்களா?

பைபிளின்படி மோசேக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த 'லேவிரேட் திருமணம்' என்ற முறையை மோசேப் பிறப்பதற்கும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த யூதா தாமாரின் இந்த ஆபாசக்கதையுடன் எப்படி ஒத்துப்போகும்? ஒரு பொய்யைச் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா? பைபிளின்படி மோசே பிறந்ததோ கி.மு. 1576. யூதாவின் காலமோ கிட்டத்தட்ட கி.மு 1810 ஆக இருக்கலாம் (அல்லது ஒரு சில வருடங்கள் முன்னும் பின்னும் இருக்கலாம்) எப்படியாயினும் மோசே பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவுக்கு அவருக்கு பின் வாழ்ந்த மோசேயின் சட்டம் எப்படிப் பொருந்தும்? இந்த வாதம் இவர்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா? இந்த அசிங்கமான - யூதா தாமரின் இந்த ஆபாசக்கதையை நியாயப்படுத்துவதற்கு ஒரு அளவு வேண்டாமா?

ஒரு வாதத்திற்காக அவர் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், லேவிரட் திருமணமுறைப்படி ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லாத நிலையில் அவளது கணவன் இறந்துவிட்டால் அவளின் கணவனின் கூடப்பிறந்தவர்கள் அவளோடு உடலுறவுக்கொண்டு அதன் மூலம் குழந்தைப் பெற்று தனது அண்ணணுக்கு சந்ததியை உருவாக்கலாமாம். அப்படித்தான் அந்த முகமூடி விளக்கமளித்துள்ளார்.

//ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும். //

இந்த சட்டத்தின் படி பார்த்தால் தாமாருடன் யூதாவின் மகனான 'ஓனான்' செய்த செலைத்தான் நியாயப்படுத்தலாம். யூதா தனது மருமகள் (தனது மகனின் மனைவி) தாமாருடன் செய்த இந்த விபச்சாரம் எப்படி இந்த சட்டத்துடன் பொருந்திப் போகும்? யூதா இந்தப் தாமாருக்கு மாமனாரே யொழிய மைத்துனன் அல்லவே? எப்படி இந்தக்கதைக்கு இந்த சட்டம் ஒத்துப் போகும் என்று வாதிட முன்வந்தீர்கள்?

அடுத்து இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்த கதைக்கு இந்த சட்டம் ஒத்துப்போகாது. அதாவது மோசேக்கு கொடுத்த இந்த 'லேவிரட் திருமணம்' என்ற சட்டத்தின்படித்தான் இந்த செயல் நடந்தது என்றால், அதே மோசேக்கு திருமணமானவளுடன் விபச்சாரம் செய்தால் மரணத்தண்டனை விதிக்க வேண்டும் - ஊர் மக்கள் முன் கல்லால் அடித்து கொள்ளப்படி வேண்டும் என்பது சட்டம் :

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் - 20:10 மற்றும் உபாகமம் 22:21-24)

எந்த மோசேயின் சட்டத்தின் படி இந்த தாமாரின் சம்பவத்தை நியாயப்படுத்துகின்றீர்களோ அதே மோசேயின் சட்டத்தின் படி யூதாவும் - தாமாரும் செய்த விபச்சாரத்தினால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டு - கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே? ஆனால் அப்படி செய்யப்படவில்லை. காரணம் யூதா வாழ்ந்த காலம் வேறு மோசே வாழ்ந்த காலம் வேறு. யூதாவுக்கு மோசேயின் சட்டப்படி 'லேவிரட் திருமணமுறை' ஒத்துப்போகும் என்றால் விபச்சாரத்திற்கான மரணத்தண்டனையும் ஒத்துப்போகும். எனவே இந்த ஆபாசக் கதைக்கு எத்தனைக் காரணங்களைக் கூறு நியப்படுத்த முயன்றாலும் அது தவறே. இந்த ஆபாசமான கதையால் பைபிளுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கே கேவலம்தான். காரணம் கேடுகெட்ட இந்த விபச்சாரத்தில் பிறந்த சந்ததி மூலம் தான் அவர் இயேசு வந்தாராம்.

லேவிரட் திருமண முறை இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாதா?

இது ஒருபுறம் இருக்க இதில் இன்னொரு வேடிக்கையும் அடங்கியிருக்கின்றது.

அதாவது யாருக்கு - எந்தக் காலத்தவருக்கு - இந்த லேவிரட் திருமணமுறை பொருந்தாதோ அவருக்கு அதைப் பொருத்தி நியாயப்படுத்தியவர்கள், யாருக்கு இந்த முறைப் பொருந்துமோ அதை மறுத்து எழுதியிருக்கும் வேடிக்கையைப் பாருங்கள்.

மோசேவின் காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த லேவிரட் திருமண முறை, மோசேவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூதாவிற்கு பொருந்தாது என்று பார்த்தோம். ஆனால் அந்த இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டுமா? என்றால் கூடாது என்கிறார் அந்த கிறிஸ்தவ முகமூடி :

//பழைய ஏற்பாட்டுக்காலத்தில், இப்படி தன் சகோதரரின் குடும்பத்தை நிலைநாட்டாதவனுக்கு சமுதாயத்தில் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்த கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மனிதர்களாகிய எபிரேயர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு கிடையாது. இப்போது இதை யாரும் (கிறிஸ்தவர்கள்) பின்பற்றுவதில்லை, பின்பற்றவேண்டிய அவசியமில்லை //

இப்படி பச்சைப் பொய்யை இவர் சொல்கின்றார். காரணம் இந்த சட்டம் இந்தக்காலத்தில் இவர்களால் பின்பற்றுவது கிடையாது என்பதால் இதைச் சொல்கின்றார். அதுமட்டுமல்ல, இந்தச் சட்டத்தை இப்பொழுதும் பின்பற்றலாம் என்று இவர் சொன்னால் இன்னும் ஏராளமான குழப்பங்கள் வரும் என்பதால் இப்படி ஒரு கருத்தை திணிக்க முயற்சிக்கின்றார். இது போன்ற சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றத் தேவையில்லை என்று இவர் சொல்வதற்கு என்ன பைபிள் ஆதாரம்? இயேசு நாதர் இதைத் தடை செய்தாரா? கிடையாது. மாறாக (பைபிளின் படி) இந்தச் சட்டத்தை இயேசு நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் அவர் கருத்து. அதை அவரும் பின்பற்றுவாராம்.

இந்தச் சட்டத்தை பற்றி இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது :

'உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்னையதினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள். மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்' (மத்தேயு 22: 23-30)

அதாவது இந்தச் லேவிரட் திருமணச் சட்டத்தை பற்றி கேட்டவர்களிடம், இயேசு அந்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பதில் அளிக்கின்றார். இந்தச்சட்டத்தை அவர் தடை செய்திருந்தால் அங்கேயே இது இனி வரும் காலத்திற்கு பொருந்தாது என்றிருக்கலாம். அது மட்டுமல்ல இது போண்ற சட்டங்களை நான் அழிக்க வரவில்லை என்றும் அதைத் தொடர்ந்து நிறைவேற்றவே வந்துள்ளேன் என்றும் சாட்சியம் அளிக்கின்றார்.

'நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்' (மத்தேயு 5:17)

அதாவது முந்தைய சட்டங்களை இயேசு அழிக்க வரவில்லையாம். தொடர்ந்து நிறைவேற்றத்தான் வந்தாராம். எனவே இந்த லேவிரட் திருமணமுறை இயேசுவின் மேற்குறிப்பிட்ட கருத்தின்படி இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்களாக இருந்தால் - இயேசுவின் கூற்றின் படி இந்த சட்டத்தை இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டும். அதுதான் உன்மை. நீங்கள் வேண்டுமானால் இது தற்போது சட்டமில்லை என்று சொல்லி இயேசுவின் கூற்றை நிராகரிக்கலாம். அது உங்கள் கூற்று தானே யொழிய பைபிளின் கூற்று அல்ல. பைபிளின் படி - இயேசுவின் கூற்றின் படி - இயேசு அந்த சட்டத்தை நியாயப்படுத்தியதன் படி - இந்த சட்டம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். இந்தச் சட்டம் இன்றைக்கு பொருந்தாது என்பதற்கு பைபிளில் ஆதாரம் கிடையாது. நீங்கள் சொல்வது போல் யூதா தாமாருக்குத் தான் இந்த சட்டம் பொருந்தாது. அதுதான் உன்மை. (பைளின் படி பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பது பற்றிய ஆய்வுக்கட்டுரை விரைவில் எமது தளத்தில் இன்ஷா அல்லாஹ்)

அடுத்து இந்த சம்பவத்துடன் - திருமணம் ஆகாமல் உடலுறவு கொண்ட யூதா தாமாரின் ஆபாசக் கதையை நியாயப்படுத்த முயலும் சில கயவர்கள் பெருமானார் (ஸல்) ஜைனப் (ரலி) அவர்களின் திருமணத்தை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் கொச்சைப் படுத்தி எழுதியிருந்தனர். அவர்களின் அந்த அவதூறுக்கு எமது தளத்தில் மற்றொரு பதிப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம். அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

யூதாவும் தாமாரும் தவறான வழியில் - நியாயத்திற்கு புறம்பாக - செய்த விபச்சாரத்தை நியாயம் கற்பிக்க முயன்ற இந்த கயவர்கூட்டம், முறையாக - நியாயமான காரணங்களுடன் - நடந்த பெருமானாரின் திருமணத்தை கொச்சைப்படுத்த நினைக்கின்றார்கள் என்றால் அவர்களின் எண்ணத்தை புரிந்துக்கொண்டீர்களா? அவர்களைப் பொருத்தவரை பைபிளில் சொல்லப்பட்ட - முறையற்ற - தகாத உறவுக்கதைகளை செயல்வடிவில் காட்டி வரும் மேலை நாட்டினரின் கேடுகெட்ட கலாச்சாரத்தை, இந்த தமிழ் மக்களிடம் திணிப்பதற்கான முயற்சிதான் இது. அதற்காகத்தான் நியாயமான காரணத்துடன் நடந்த பெருமானார் (ஸல்) அவர்களின் திருமணத்தை கொச்சைப்படுத்திவிட்டு - முறையற்று - கேவலமாக நடந்த விபச்சார கதையை நியாயப்படுத்த நினைத்தது. காரணம் அவர்களின் அந்த அசிங்கமான கலாச்சாரத்தை இங்கே இறக்குமதி செய்வதற்கு ஒரே தடை இஸ்லாம் மட்டும் தான். அதனால் தான் இஸ்லாத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்ய பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர்.

'கண்ட கண்ட அசிங்கமான கதைகளை எல்லாம் கடவுள் சொல்லியிருப்பார்' என்று ஒருவன் நம்பினானேயானால் இது போன்ற தவறான முடிவுக்குத் தான் வருவார்கள் என்பது தான் நிதர்சனமான உன்மை. அது தான் இவர்களது வாழ்விலும் நடைபெருகின்றது. இறைவனே நன்கறிந்தவன்.

.
.
.
.
.

Sunday, March 23, 2008

பெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..

அவதூறுகளும்... விளக்கங்களும்...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு. நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் காமுகராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.
.
இதில் மாற்றாரின் மீது ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது குறித்து முழுவிபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.
.
'உக்காழ்' எனும் அரேபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஜைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா(ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இந்த சிறுவரை அடிமையாகவே வைத்துக்கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.
.
அதன் பின்னர் அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் பணியாளராக இருக்கலானார். இந்த நிலையில், தம் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த 'ஹாரிஸா'வும் அவரது சகோதரர் 'கஃபு' என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும், அதற்குரிய விலையைத் தந்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களுடன் வருவதற்கு 'ஜைத்' ஒப்புக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச்செல்லலாம். எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தர வேண்டியதில்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது' என்று கூறிவிட்டனர்.
.
இதன் பிறகு ஜைது (ரலி) அவர்களிடம், வந்தவர்கள் பேசிப்பார்த்தனர். 'முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது' என்று ஜைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் 'ஜைத் இனிமேல் என் மகனாவார். அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஜைதுக்கும் உறவை புரிந்துக்கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சொன்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்வில்லை (ஆதாரம் : அல் இஸாபா)
.
அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட பின் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை 'ஜைது இப்னு முஹம்மது' (முஹம்மதுவின் மகன் ஜைத்) என்றே ஜைத் குறிப்பிடப்பட்டார்.
.
'அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலே குறிப்பிடுங்கள்' (அல்குர்ஆன் 33:5) என்ற வசனம் அருளப்படும் வரை 'முஹம்மதின் மகன் 'ஜைத்' என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்' என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரி, முஸ்லீம் என்ற நபிமொழிக் கிரந்தங்களில் காணப்படுகின்றது.
.
சொந்த மகன் போலவே ஜைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தி ஐந்தாம் வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஜைது அவர்களின் எல்லாக் காரியங்களக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஜைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்து இருந்தார்கள் என்பதை தெளிவு படுத்தவே இந்த விபரங்கள்.
.
நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உமைமா' என்பாரின் மகள் 'ஜைனப்' அவர்களை, அதாவது தமது சொந்த மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள் மிகவும் உயர்ந்த குலம் என்று பொருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்கு திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.
.
ஜஹ்ஷ் உடைய மகள் ஜைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஜைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஜைனபைத் தலாக் கூறும் நிலைக்கு ஜைது (ரலி) ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
.
'அல்லாஹ் எவருக்கு பேரருள் புரிந்தானோ அவரிடம் - எவருக்கு பேருபகாரம் செய்து வருகிறீரோ அவரிடம் 'உம் மனைவியைத் (தலாக் கூறாது) தடுத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என்று (நபியே) நீர் கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம்முடைய மனதினில் மறைத்துக்கொண்டீர். மக்களுக்கு நீர் அஞ்சினீர்! அல்லாஹ்வே நீ அஞ்சுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன். (அல்குர்ஆன் 33:37)
.
ஜைது தம் மனைவி ஸைனபைத் தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தலாக் கூற வேண்டாம்!' என்று அவருக்கு போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.
.
இதே வசனத்தின் இறுதியில் 'அல்லாஹ் வெளிப்படுத்த கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்து கொண்டீர்! மக்களுக்கு அஞ்சனீர்! ஏன்று இறைவன் கடிந்துறைக்கின்றான். தம் உள்ளத்தில் மறைத்து கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிளிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
.
ஜைது வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினர்hகளாம். ஜைத் தலாக் கூற முன் வந்ததும் 'தலாக் கூற வேண்டாம்' என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் 'அவர் தலாக் கூற வேண்டும்' அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றானாம். இப்படிப் போகிறது கதை.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தை கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்த கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.
.
ஜைது (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்த போது ஜைனப் (ரலி) அவர்களின் வயது முப்பத்தி நான்கு அல்லது முப்பத்தி ஐந்து இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து இதை நாம் முடிவு செய்ய இயலும்.
.
அது வருமாறு :
ஜைத் (ரலி) அவர்களும், ஜைனப் (ரலி) அவர்களும் ஒரு ஆண்டு அல்லது அதைவிட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்ற விபரம் கிடைக்கிறது. (பார்க்க இப்னு கஸீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபைத் திருமனம் செய்த போது ஜைனபுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க : அல் இஸாபா) ஜைனப் (ரலி) அவர்களின் இந்த முப்பத்தி ஐந்து வயதில் ஜைதுடன் வாழ்ந்த ஒரு ஆண்டைக் கழித்தால் ஜைதுடன் திருமனம் நடந்த போது ஜைனபின் வயது 34 ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் ஜைது தலாக் கூறியவுடம் (இத்தா முடிந்ததும்) உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்ததை அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
.
ஜைனப் (ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்கு சிரமமானது, சாத்தியக் குறைவானது. ஜைதை மணப்பதற்கு முன் அவர்களுக்கு வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும் அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமிலருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாகவே இருந்தாலும் ஜைதைத் திருமணம் செய்யும் போது ஜைனப்பின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் போது 35 என்பது அதைவிடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகளாகிய ஜைனப் (ரலி) அவர்கள் சிறு வயது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வளர்கிறார். ஜைனப் (ரலி) பதினைந்து வயதில் பருவமடைந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 37, எவ்வாறெனில் நபிகள் நாயம் அவர்கள் ஜைனபுடைய 35 வயதில் அவரை திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் வயது 56.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 37வது வயதில் (56 வயதில் நாடுவதை விட அதிகம் பெண்கள் நாடக்கூடிய 37வது வயதில்) பருவ வயதிலிருந்த ஜைனப் (ரலி) அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும் அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக்கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஜைனப் அவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள்.
.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது.
.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.
.
'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
.
இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போது அந்த கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஜைனபைப் பார்க்கத் தகாத நிலையில் நபிகள் நாயகம் அவாகள் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால், அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர். (அவர்களில் யாரும் அறியா விட்டால் இதை எழுதி வைத்த நூலாசிரியர்களுக்குத் தெரிய முடியாது)
.
இந்தச் செய்தியை ஜைத் அவர்களும் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே ஆலோசனைக் கேட்கிறார்கள். அதன் பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில், எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்த கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
.
இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின், மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. 'உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்!' மனிதர்களுக்கு அஞ்சினீர்!' என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதை? இந்த கேள்விக்கு விடைகாண வேண்டும்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உன்மையே. அது எது என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படிக் கதை கட்டி விட்டு விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.
.
கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதை தீர்மானிப்பதைவிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற கட்டங்களில் சகஜமாக மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது வென்பது தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.
.
ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)
.
இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
.
ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள். கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட, தான் காரணமாகிவிட்டோம் என்று மக்கள் எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இது தான் உன்மையில் நடத்திருக்க முடியும். இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.
.
'உன் மனைவியைத் தலாக் கூறாது தடுத்து கொள்! ஏன்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் ஆஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன். (அல் குர்ஆன் 33:37)
.
ஒரு தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதை கூறத் துணிவது இல்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர், அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயளவில் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் பகிரங்கமாக அதை வெளிப்படுத்த துணிவதில்லை. அனுபவப் பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.
.
இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சராசரி மனிதனுக்கும் ஏற்படக்கூடிய ஒரு எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர, அடுத்தவர் மனைவியை ஆசைப்படக்கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும், இந்தப் பொய்ச செய்திளை முற்றாக நிராகரித்து விடுகின்றது.
.
இனி விஷயத்துக்கு வருவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரும் ஸைத் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தி விட்டார். இந்த நிலையில் ஸஜனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தானே மனைவியாக ஆக்கியதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதன் காரணத்தையும் அவனே கூறுகின்றான்.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும் அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக - எடுத்துக்கொள்வர். 'வளர்ப்பு மகன்' எனப் பிரகடனம் செய்யப்பட்டவர், பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.
.
வளர்த்தவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை - வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 'தந்தை மகன்' எனும் உறவு அவ்விருவருக்குமிடையே உன்மையிலேயே ஏற்பட்டுவிடடதாக அவர்கள் நம்பினர்.
.
இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அல்லது அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உன்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர் என்பது இவர்களது நம்பிக்கை.
.
போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். தெளிவான - தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையில் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது. இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்க்தெறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான 'ஜைது'டைய மனைவியை 'ஜைது' விவாகரத்து செய்தபின், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மணமுடித்து வைத்ததாகக் கூறுகின்றான். அது பற்றி இறைவன் கூறும் வசனங்களைப் பார்க்கும் முன், இந்த போலித்தனமான உறவுகள் தகர்க்கப்படவேண்டியவை தாம், என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.
.
முதல் காரணம் :
தந்தை மகன், அண்ணன் தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறை நம்பிக்கையற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையானவை. இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது. இவர்தான் எனக்கு தந்தையாக இருக்க வேண்டுமென்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும் எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக்கூடியதாகும். (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக்கூடியதாகும்)
இது போன்ற போலித் தனமான உறவு முறைகள் செயற்கையை - இயற்கையை போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.
.
இரண்டாவது காரணம் :
யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்துவிட்டு ஒரு சம்மந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்மந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், தாம் பெற்ற பிள்ளையை 'மகன்' என்று உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதைவிட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளரட்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும், அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாகவே இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி, யாராவது செல்வந்தர்கள் 'தத்து' எடுக்க மாட்டார்களா? ஏன்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடமே மேலோங்கிவிடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.
.
மூன்றாவது காரணம்:
எவ்வளவு தான் பாசத்தை பொழிந்த ஒருவனை 'தத்து' எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசம் கொள்ள முடிhயது. வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பதற்காக அவரைத் தந்தை என ஏற்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்ப்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?
வளர்ப்புத் தந்தைக்குப் பின், அவரது வாரிசாக போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன், அவர் சீக்கிரமாக சாகமாட்டாரோ? என்று எதிர்பார்ப்பான். சீக்கிரத்தில் சாகமாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூக்கு அனுப்பவும் தயங்கமாட்டான். இரத்த சம்மந்தம் இல்லாததாலும், இதயப்பூர்வமான நேசம் இல்லாததாலும். சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்க்கைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவீகாரப் புத்திரனிடம் எதிர்ப்பார்க்க முடியும்.
.
நான்காவது காரணம்:
ஒருவனுக்கு அண்ணன, தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும், அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனது பெற்ற மகனே அடைவான். இவ்வாறு அவன் அடையும் போது, அவனது தந்தையின் அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கொல்லாம் கிடைக்காமல் இவனுக்கு கிடைத்துவிட்டதே என்று எண்ணமாட்டார்கள். எண்ணுவதற்கு எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் 'மகன்' என்ற உறவு மற்ற உறவுகளைவிட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் யாருக்கோ பிறந்தவன், திடீரென நுழைந்து 'மகன்' என்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது வசதிகளை அனுபவிக்கும் போது இரத்த சம்பந்தமுடைய அவனுடைய அண்ணன் தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போலி மகனை விட உண்மையான சகோதர சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?
.
ஐந்தாவது காரணம்:
மேற்கூறிய அதே காரணத்தினால் எப்பொழுது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கின்றானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகை;கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்து கொள்ள, இந்த சுவீகாரம் முக்கிய காரணமாகிவிடுகின்றது. ஒரு போலித் தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.
.
ஆறாவது காரணம் :
தன் தந்தை அல்லாதவர்களைத் தந்தை, என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை 'இப்ராஹீமுக்குப் பிறந்தவன்' என்று செல்லிப் பாருங்கள்! அதன் பின் அவனது எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவதுதான் மனிதனின் இயல்பு.
எவனோ ஒருவனைத் தந்தை என்று – அதுவும் உண்மையான தந்தை போன்று - கருதுவதைவிட மானங்கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற - இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.
.
இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்த போலித் தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாகச் சொல்லி காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.
.
'ஜைது, அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால் முஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடை பெற்றே தீர வேண்டியது அல்லாஹ்வின் கட்டளையாகும்' (அல்குர்ஆன் 33:37)
.
'எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் உண்டாக்க வில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் தாயைப் போன்றவள் என்று கூறுவதால் அவர்களை அல்லாஹ் உங்கள் தாய்களாக ஆக்கமாட்டான். உங்களுடைய சுவீகாரப்புத்திரர்களை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைளேயாகும். அல்லாஹ் உண்மையே கூறுகின்றான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான்' (அல்குர்ஆன் 33:4)
.
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளை யென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் (அல்குர்ஆன் 33:5)
.
உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்கள் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய்களாக ஆவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம், இவர்களுடைய தாய்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகின்றார்கள். (அல்குர்ஆன் 58:2)
.
உங்களுக்கு பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்யலாகாது (அல்குர்ஆன் 4:23)
.
இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனப்பை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.
.
இங்கே ஒரே ஒரு சந்தேகம் மட்டும் சிலருக்கு இன்னமும் இருக்கலாம். அந்த உறவுகள் தகர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால் அல்லது அதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே! என்பதே அந்தச் சந்தேகம்.
.
மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோண்றினாலும் சிந்திக்கும் போதே இது தவறு என்பது தெளிவாகும்.
.
திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டுமென ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பாற்பட்டது. அனுமதிக்கத்தான் முடியும். அவர்களை மணம் செய்ய அனுமதி உண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வரமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை.
.
காலம் காலமாக 'மகனுடைய மனைவி' என்றே நம்பி வந்திருக்கும் போது, சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகாசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.
.
உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பாரம்பரியத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதியே இறைவன் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே தேர்வு செய்தான். இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாக சொல்கிறான்.
.
'இறைத்தூதர்கள் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது (அல் குர்ஆன் 33:39)
.
எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து 'அஞ்சுவதற்குரிய' ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.
.
இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த திருமணத்திற்கு சிலர் சொல்வது போல் அவற்றிற்கு காமவெறி காரணம் அல்லவென்பதை அறிவுடையோர் விளங்களாம். இறைவனே நன்கறிந்தவன்.
.
(நபிகள் நாயகம் - பல திருமணங்கள் செய்தது ஏன்? - என்றப் புத்தகத்திலிருந்து...)
.

.

.

Friday, March 21, 2008

கவிதைகள்

இரண்டாம் கற்காலம் !

இரண்டாம் கற்காலம் !
...................................................-- ஆரூர் புதியவன்

கல்லும், உளியும்
கலந்த பொழுது
கர்ப்பமான கல்
சிற்பமானது

மலையை செதுக்கத் தெரிந்த
மனிதன் தன்
மனத்தை செதுக்கத்தான்
மறந்தே போனான்

கல்லுக்குத்தான்
எத்தனை பரிணாமங்கள்
கல் கடவுளாக்கப்பட்டது
பகுத்தறிவு கடவுளைக் கல்லால் அடித்தது...
காலம் புரண்டது...
கடவுளை கல்லால் அடித்தவர்களும்
கல்லாய்த்தான் நிறுத்தப்பட்டார்கள்.

கடவுள் பக்திக்கு மட்டுமின்றி
கலவரத்திற்கும்...
கல்லே மூலமாய்...

மனிதனுக்கு
கல்லையும் கடவுளாய்ப்
பார்க்க முடிந்தது ...
மற்றவனைத்தான்
தன்போல் பாவிக்க முடியவில்லை.

உடைப்பட்ட சிலைகளுக்காய்
உருள்கின்றன தலைகள்...

ஒரு தலைவர் ஆற்றிய
சேவைகளை விட
அவருக்கு வைக்கப்படும்
சிலைகளே ...
அவர் தகுதி உரைக்கிறது...

ஒன்று மட்டும் உண்மை
மனிதன் கல்லை
சிலையாக்கினான்
சிலையோ மனிதனைக்
கல்லாக்கி விட்டது.

நகரவீதிகள் தோறும்
நகரா சிலைகள்
ஓ ... இது இரண்டாம் கற்காலம் !

இங்கே
அடிமைத்தளை நீக்க
யுத்தம் செய்பவர்களை விட
தலைவர் சிலை வைக்க
ரத்தம் சிந்துவோர் அதிகம்

சட்ட சபைகள்
நலத்திட்டங்களை விட
சிலைத்திட்டங்களே
அதிகம் அறிவிக்கின்றன

இருபத்தோராம் நூற்றாண்டின்
இனிய தமிழா ...
கணிப்பொறி யுகத்தில்
உலகம்...
நீ இன்னும்
கற்காலத்தை
கடக்காமலா?

ஒவ்வொரு சிலையும்
மலையின் தவணைமுறை சமாதி
என்பதை மறவாதே !

சிலைகளை மற
மனிதனை நினை
ஜாதிகளும், சிலைகளும்
அறிவுக்கு அமைக்கப்பட்ட
வேகத்தடைகள்
நாம் விரைந்து முன்னேற
இரண்டையும் தகர்ப்போம்...!
.
.

Wednesday, March 19, 2008

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...

அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடும் சில கிறிஸ்தவர்கள்...
- அபு இப்ராஹீம், சென்னை.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் - தங்கள் மதத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் கிறிஸ்துவமதத்தைப் பரப்புவதை விடுத்து வேண்டுமென்றே இஸ்லாத்தைப்பற்றி மட்டும் தரக்குறைவாகவும் - வெறித்தனமாகவும் தாக்கி எழுதிவருவதை நாமெல்லாம் நன்கு அறிவோம். காரணம், இஸ்லாமியர்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைவீட - கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் பால் தங்கள் கவனத்தைத்திருப்பிவிடாமல் இருப்பதற்காகவும், இஸ்லாம் அல்லாத மாற்றுமதத்தவர்கள் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்டுவிடக்கூடாது - அல்லது அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் நாம் இஸ்லாத்தை - அதன் அறிவுப்பூர்வமான கருத்துக்களை - மக்களிடம் எடுத்துச்சொல்வதோடு இவர்கள் பின்பற்றக்கூடிய மௌடீகக் கொள்கைகளை குறிப்பாக கிறிஸ்தவத்தின் உன்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக வேண்டி - பல தலைப்புகளில் அது பற்றிய ஆய்வுக் கட்டுரைகளைப் தொடர்ந்து எழுதிவருகின்றோம்.

இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி நமது 'ஏகத்துவம்' என்ற வலைத்தளத்தில் வெளிவந்த எமது இரண்டாவது கட்டுரையான 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபில்' என்றத் தலைப்பில் நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள், எதையாவது சொல்லி மறுத்தாகவேண்டும் என்பதற்காக 'ஈசா குர்ஆன்' என்றப்பெயரில் ஒரு மறுப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தனர். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தனர் :

'1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:

இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், 'இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்' என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்' என்று எழுதியிருந்தனர்.

அதாவது நாம் எழுதின கட்டுரைகளுக்கு இவர்கள் பதில் அளித்து இருந்தார்களாம். நாம் அதற்கு பதில் எழுதவில்லையாம். உடனே அடுத்த கட்டுரைக்கு நாம் தாவி ஓடிவிட்டோமாம்.

எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது? கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது என்பானாம். அது போல் 'இருக்கின்றவன் - இயைத்தளங்களைப் படிக்கின்றவன் - அனைவரும் கேனையன், இவர்கள் மட்டும் அறிவாளிகள்' என்ற எண்ணத்தில் இப்படி எழுதியுள்ளார்கள்.

இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக இவர்களைப்பற்றிய சில தகவல்களை உங்களுக்கு நினைவுட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

பகிரங்க விவாதத்திற்கு பயந்து ஓடிய கூட்டம்:

சமீபத்தில் இவர்கள் நம் உயிரினும் மேலான பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றி தரக்குறைவாகவும் வெறித்தனமாகவும் - சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள். இப்பொழுதும் வெளியிட்டு வருகின்றார்கள். இவர்களின் இந்த வெளித்தனமான எழுத்துக்களுக்கு பதிலடியாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ மூலமாக நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இவர்கள் சொல்வது உன்மையாக இருந்தால், இவர்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்வதை எங்கள் முன் நிரூபிக்கட்டும். அது உன்மையாக இருந்தால் எங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு கிறிஸ்துவத்தைத் தழுவுகிறோம்' என்று பகிரங்க விவாத அழைப்பு விடுத்தனர். இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு - இந்தச் சவாலை ஏற்க பயந்துக்கொண்டு - நாங்கள் இனையத்தளம் மூலம் மட்டும் தான் எழுதுவோம். நீங்களும் அது போல் எழுதுங்கள் - நமக்கு நேரடிவிவாதமெல்லாம் சரிவராது என்று நெண்டிக்காரணங்களைக் கூறியவர்கள், இனையத்தளம் மூலம் நாம் எழுத்து விவாதம் மட்டும் வைத்துக்கொள்வோம் என்று எழுதி ஒழிந்துக்கொண்டனர். அதாவது அவர்கள் ஒழிந்துக்கொண்டு எழுதுவார்களாம். நாமும் ஒழிந்துக்கொண்டு எழுதவேண்டுமாம். இவர்களில் ஒரு சிலரை மட்டும் நமது சகோதரார்கள் அழைத்தார்களாம். அவர்களுக்கு பேசத்தெரியாதாம். இவை எல்லாம் இவர்கள் நமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து எழுதிய வெத்துக் காரணங்கள்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். நீங்களல்ல. நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ, அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும் - நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும், அவர்களுடனும் பகிரங்க விவாதத்திற்கு எமது சகோதரர்கள் தயார் என்பதை மீண்டும் மீண்டும் இங்கே பதிவு செய்துக் கொள்கின்றோம்.

இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம், நமது இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் Peace - Vision of Islam என்ற இஸ்லாமியக் கண்காட்சில் - இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக வருவதாக இருந்த சில நாட்களுக்கு முன்னால் 'வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன்; விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்' என்று தலைப்பிட்ட கட்டுரையை எழுதினார்கள். அதில், 'அவரது சொற்பொழிவை எந்தக் கிறிஸ்தவர்களும் கேட்டுவிடக்கூடாது - மாற்று மதத்தவர்களுக்காக அவர் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் எந்தக் கிறிஸ்தவனும் கேள்விக்கேட்டுவிடக்கூடாது - என்பதற்காக நாமெல்லாம் பிரார்த்திப்போம்' என்று பயந்து அதில் எழுதியிருந்தனர்.

மற்ற கிறிஸ்தவர்கள் சென்று சகோதரர் ஜாகிர் நாயக்குடைய சொற்பொழிவைக் கேட்கக்கூடாதாம். பாவம், அவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகளாம்;. சரி இருக்கட்டும். இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே - அவர் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்பு (?) எழுதும் அளவுக்கு திறமை (?) உள்ளவர்கள் தானே? இவர்கள் சென்று அவரிடம் விவாதமல்ல - கேள்வியாவது கேட்டிருக்கலாமல்லவா? இவர்களுக்கு மேடையில் ஏறி பேசத்தெரியாது என்று கூறி எமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பு எழுதியிருந்தார்கள். சரி, நீங்கள் ஜாகிர் நாயக்கிற்கு மறுப்பு என்று உங்கள் தளத்தில் பதித்த அந்தக் கேள்விகளையாவது அவரிடம் நேரடியாக கேட்டு மடக்கி இருக்கவேண்டியதுதானே? அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.

அதே போல் சகோதரர். பீஜேவிற்கும் பதிலாம். ஜாகிர் நாயக்காவது பலநாடுகளுக்கும் சென்றுவரக்கூடிய வடஇந்தியாவைச் சார்ந்தவர். இந்த பீஜே இங்கேயே ஊருக்கு ஊரு 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்காக கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். அங்கே போய் அவருக்கு மறுப்பு கொடுத்து அவரை தினரடிக்க வேண்டியது தானே? முடியாது. காரணம் இவர்களின் எழுத்தில் சத்தியமில்லை. இவர்கள் நோக்கமெல்லாம் இஸ்லாத்தை வசைப்பாட வேண்டும். அதன் மூலம் தங்கள் மார்க்கம் வளர்கிறதோ இல்லையே - இஸ்லாம் வளரக்கூடாது என்று குறுகிய நோக்கம் மட்டுமே.

ஓழிந்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். நாம் எழுதுவதை எங்கும் நிரூபிக்கும் தைரியம் வேண்டும். அது சத்தியமான - உன்மையான எழுத்தாக - கருத்தாக இருந்தால் மட்டுமே முடியும். அது இஸ்லாமியர்களாகிய - எங்களால் முடியும் - ஏனெனில் நாங்கள் சத்தியத்தைப் பிரச்சாரம் செய்கின்றோம் - அதனால் அதை எங்கும் நிரூபிப்போம் என்பதை இங்கே ஆணித்தரமாக குறிப்பிடக்கடமைப் பட்டிருக்கின்றேன்.

இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமான பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக
'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?

அதில் வரக்கூடிய வரிகள் என்ன?

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள.

...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...

...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...

...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...

மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?

அடுத்து, அந்த ஆபாசக்கதையில வரும் விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்த அந்த ஆண்களுடைய மர்ம உறுப்பு பற்றியது. அந்த ஆண்களின் 'ஆண்உறுப்பு' கழுதைக்கு இருக்குமே அந்த அளவுக்கு பெரியதாக இருந்ததாம். அவர்களுக்கு வந்த 'விந்து' குதிரைக்கு வருமே அந்த அளவுக்கு கொட்டியதாம்'

'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...' (கத்தோளிக்க மொழிப்பெயர்ப்பு) என்று கடவுள் இந்த அசிங்கமான வர்ணனையைச் சொன்னார் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளனர். இதில் எங்கே உவமை உள்ளது. வெட்கமாக இல்லை இதெல்லாம் உவமை என்பதற்கு.

இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.

அடுத்து நாம் 'ஏகத்துவம்' வலைதளத்தில் கிறிஸ்துவத்தைப் பற்றி எழுதிய முதல் கட்டுரையான (இவர்களுக்கு மறுத்து நாம் எழுதிய) 'இயேசு தனது தாயை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோரையும் அவமதித்தார்' என்ற கட்டுரைக்கு இவர்கள் அளித்த பதில் என்ன?

இயேசு தனது தாயை மதித்ததாக பைபிளில் கிடையாது. அவரை தரக்குறைவாக நடத்தியதாகத்தான் பைபிள் காட்டுகிறது. குர்ஆன் மட்டுமே இயேசு தாயை மதிப்பதாக கூறுகிறது என்று நாம் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? திரும்பத் திரும்ப இயேசு தாயை மதித்தார் என்று நீங்களாகத்தான் எழுதி இருந்தீர்களே யொழிய பைபிள் வசனங்களை உங்களால் ஆதாரம் காட்ட இயலவில்லை. 'இல்லை' என்று இப்பொழுதும் நீங்கள் மறுத்தீர்களேயானால் நாம் உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம். நாம் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத அறிஞர்களிடம் உங்கள் பைபிளில் வரக்கூடிய - 'இயேசு தாயை மதிக்கும் லட்சனங்களின் வசனங்களை எடுத்துச்சொல்வோம்' அந்த வசனத்தின் சரியான விளக்கத்தை (அதில் சொல்லப்பட்டுள்ள விதம் பற்றி) அவர்களிடம் கேட்போம். அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு நீங்கள் தயாரா? அந்த அத்தனை வசனங்களிலும் மிகத் தெளிவாகவே தெரிகின்றது இயேசு தனது தாயை மதிக்க வில்லை என்பது. அதற்கு மேலும் நீங்களாகத்தான் சுயமாக விளக்கம் அளிக்கின்றீர்களே யொழிய, பைபிளில் ஒரு இடத்திலும் உங்களின் சுயக்கருத்துக்களுக்கு ஆதரவான வசனங்கள் கிடையாது.

அடுத்து நாம் அதே கட்டுரையில் இயேசு யூதர்களைச்சேர்ந்த பரிசேயர்களைப் பார்த்து தேவ்டியா மக்களா... - வேசி மக்களா - விபச்சார சந்ததிகளா என்று அவர்களையல்ல அவர்களின் பெற்றோரையும் - மூதாதையரையும் இன்றைய ரௌடிகள் உபயோகப்படுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி திட்டினார் என்று கூறி பைபிள் இயேசுவைக் கேவலப்படுத்துகிறது, குர்ஆன்தான் அவரை கண்ணியப்படுத்துகிறது என்று நாம் எழுதி இருந்தோம். அதற்கு நீங்கள் எழுதின பதில் என்ன? இது வரை பதில் எழுதவில்லையே ஏன்?

இயேசுவிடம் அவரது சீடன் ஒருவன் தனது தகப்பனின் மரனச்செய்தியை சொல்லிவிட்டு - அவரை அடக்கம் பண்ணிவிட்டு வருகின்றேன் என்று அனுமதிக்கேட்டதற்கு, அதை மறுத்த மறுத்த இயேசு 'அதல்லாம் மற்றவன் பார்த்துக்கொள்வான் - நீ என்னோடு வா' என்று கூறி ஒரு மனித உரிமை மீறலை செய்த இரக்கமற்றவர் என்று பைபிள் கூறுகிறது என்று ஆதாரத்துடன் நாம் எழுதிய பகுதிக்கு நீங்கள் அளித்த பதில் என்ன? ஒன்றும் கிடையாது.

இஸ்லாம் கல்வி தளத்தில் சகோதரர் எம். எம். அக்பர் அவர்கள் எழுதி தமிழில் வெளிவந்த 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி-1)'க்கு இது வரை நீங்கள் பதில் எழுதவில்லையே, ஏன்?

இது மட்டுமல்ல இனி நாம் எழுதப்போகிற எந்தக் கட்டுரைக்கும் உங்களால் பதில் எழுத முடியாது. பைபிளில் பெரும்பாலும் இருப்பது கட்டுக்கதை என்று ஒத்துக்கொள்வதைத் தவிர. அப்படியே மறுப்பு என்று நீங்கள் எழுதுவதாக இருந்தால் வழக்கம் போல் நீங்கள் எழுதும் 'மறுப்பு' என்று எழுதிவிட்டு இதுதான் மறுப்பு. 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.

நான் கேட்கின்றேன், உங்களிடம் கேட்பதற்கு கேள்வியே இல்லையா? பைபிளில் ஒன்று இரண்டு பலவீனமா இருக்கின்றது? ஆயிரக்கணக்கான முரண்பாடுகள். அவ்வளவு அசிங்கங்களும் - அபாசங்களும் நிறைந்த வசனங்கள், அறிவுக்கு பொருந்தாத கருத்துக்கள், வர்னாசிரமத்தை போதிக்கும் வசனங்கள், நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு நேர்முரனான கருத்துக்கள் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். அத்தனை பலவீனங்களும் உங்கள் பைபிளில் இருக்கின்றது, அது சம்பந்தமாக ஆயிரக்கனக்கான கேள்விகள் இருக்கின்றது. நீங்கள் எங்களுடன் விவாதம் வேண்டாம். பாவம் உங்களுக்கு முடியாது. குறைந்தபட்சம் கேள்விபதில் நிகழ்சியாவது நடத்த திரானிஇருக்கிறதா? முடியாது! முடியவே முடியாது. சத்தியமாக முடியாது.

ஏன் அதிகம் செல்ல. உங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் செய்யும் மேடைப் பிரச்சாரங்களில் 'நொண்டியை குணமாக்குகிறோம்' என்று சொல்கின்றீர்கள். 'குருடனை பார்வையுடையவனாக்குகிறோம்' என்று சொல்லுகிறீர்கள். நான் ஒரு நொண்டியை கொண்டுவருகின்றேன். அவனை உலகில் உள்ள எந்தக் கிறிஸ்தவரையாது வைத்து அல்லது எந்தக் கிறிஸ்தவ போதகரையாவது வைத்து குணமாக்கி காட்டுங்கள். இதை பகிரங்க சவாலாக விடுகின்றேன். இதில் ஒன்றும் பேச்சுத்திறமைக்கு இடமில்லை. வாதத்திறமைக்கு இங்கே வேலையில்லை. உங்கள் பக்தியை காட்டி இதை செய்யுங்கள். உங்களால் முடியுமா?

இயேசு தன்னை விசுவாசிக்கக்கூடிய கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொன்னதாக பைபிளில் வருகின்றது?

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு – 16 : 17-18)

இங்கே என்ன சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களால் நடக்கும் அடையாளங்களாம்.

1. இயேசுவின் பெயரால் பிசாசுகளைத் துரத்துவார்களாம். (இதைத்தான் இவர்கள் வக்கலத்து வாங்கும் பால் தினகரன் போன்றோர் செய்வதாக சொல்லி ஏமாற்றிக்கொன்டிருக்கின்றனர்)

2. சர்பங்களை - பாம்புகளைப் பிடிப்பார்களாம். இவர்களை ஒன்றும் செய்யாதாம். (ஹி... ஹி... நினைப்பு பிழைப்ப கெடுக்குமாம்)

3. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் - அதாவது சாகடிக்கக்கூடிய எந்தவிதமான விஷத்தைக் குடித்தாலும் அந்த விஷம் இவர்களை ஒன்றும் செய்யாதாம்.

4. வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்களாம். அப்படி கையை வைத்ததும் குணமாவார்களாம்.

உலகத்தில் எந்த கிறிஸ்தவானாவது உன்மையான கிறிஸ்தவனாக இருந்தால் - உங்கள் மதம் சத்தியமான மதமாக இருந்தால் இவற்றில் உள்ள அத்தனையையும் நிரூபியுங்கள். எங்களுடைய கேள்விகளுக் பதில் அளிக்க வேண்டாம். பாவம் உங்களுக்கு பேசத்தெரியாது. விவாதத்திற்கும் வரவேண்டாம். ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது. மேற்கூறப்பட்ட கிறிஸ்துவத்தை நம்பக்கூடிய இவர்களால் நடத்த முடியும் என்று சொல்லப்பட்ட அதிசயங்களை மட்டும் இவர்கள் செய்து காட்டட்டும். அல்லது அதில மூன்றாவதாக சொல்லப்பட்டுள்ளதே -- இவர்கள் எந்த விஷத்தைக் குடித்தாலும் அது இவர்களை ஒன்றும் செய்யாது என்று - அந்த விஷத்தை நாங்கள் கொடுக்கின்றோம். அதை குடித்துவிட்டு உயிரோடு இருந்து காட்டட்டும். அதன் பிறகு அவர்கள் தங்கள் வக்கிர எழுத்துக்களைத் தொடரட்டும். முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் நாம் இன்னும் ஏராளமான தலைப்புகளில் இவர்களின் மார்க்கம் பற்றியும் - இவர்களின் நம்பிக்கையின் மடத்தனங்கள் பற்றியும் - பைபிளின் உன்மைநிலைப் பற்றியும் பல கட்டுரைகள் மூலம் விளக்க இருக்கின்றோம். அதன் பிறகு நமது சகோதரர்கள் பைபிளைப்பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியும் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்பாக (?) அவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு தக்க ஆதாரங்களுடன் - அறிவுப்பூர்வமான வாதங்களுடன் மறுப்புக்களை கொடுக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அந்த மறுப்பும் கூட இவர்களுக்காக அல்ல. இவர்களுக்கு பதில் கொடுப்பதும் ஒன்றே, கொடுக்காததும் ஒன்றே. மாறாக நமது விளக்கங்கள் அனைத்தும் மற்ற பொது மக்களின் தெளிவிற்காக...

அடுத்து பொதுவான ஒரு சந்தேகம் உங்களுக்கு எழழாம். அதாவது, நாம் ஏன் அவர்கள் மறுப்பாக எடுத்து வைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும், பெருமானாரை இழிவு படுத்தி எழுதும் வக்கிர எழுத்துக்களுக்கும் பதில் அளிக்கவே இல்லையே என்று உங்களுக்கு தோன்றலாம்.
இவர்கள் எழுதும் அத்தனை அவதூறுக் கட்டுரைகளும் வேண்டும் என்றே நமது கவனத்தைத்திசைதிருப்புவதற்காகவும, நமது நேரத்தை சம்பந்தம் இல்லாத கேள்விகள் மூலம் வீனடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அவை ஒவ்வென்றுக்கும் நாம் பதில் அளித்துக்கொண்டிருந்தால் - நாம் நமது பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். நமது கருத்துக்களை நம்மால் மக்களிடம் சென்று சேர்க்கமுடியாது. இவர்களின் எண்ணமும் இது தான். காரணம் அவர்களைப் பொருத்தவரை அவர்களின் கேள்விகளுக்கு பதில் அல்ல. நமது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதே. அப்படி பதில் தேவைப்படுபவர்களாக இருந்தால், ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதியவர்கள் அவர் சென்னை வந்ததும் அவரின் பேச்சை யாரும் கேட்டுவிடாமல் இருப்பதற்காக பிரார்த்தனை செய்வோம் என்று எழுதி இருக்க மாட்டார்கள். நேரடியாக சென்று கேள்விக்கேட்க வாய்ப்பு இருந்தும் அதை நழுவ விட்டிருக்க மாட்டார்கள். அப்படியே அவர்களுக்கு பதில் வேண்டும் என்றால் எங்கள் சகோதரார்கள் www.iiponline.org மூலம் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு பொது மேடையில் சந்திக்க வரட்டும். அங்கே நாம் அவர்களின் பதில்களுக்கு தக்க பதில் கொடுக்க தயாராக இருக்கின்றோம். அது வரை இவர்களின் இந்த அவதூறுப்பிரச்சாரங்களுக்கு பதில் எழுதுவது என்பது நமது நேரம், உழைப்பு அத்தனையையுமே - நாமே வீனடிப்பதற்கு சமமானதே என்றுக்கூறி நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.
.
.
.
.

Thursday, March 13, 2008

ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்

ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்!

- அபு இப்ராஹீம்

(ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் - யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட. ஆனால் கிறிஸ்தவர்களின் புனித வேதமான பைபிள் அப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கின்றதா? என்று பார்த்தோமேயானால், அதில் ஆபாசமான கருத்துக்களும் - அசிங்கமான வர்ணனைகளும் நிறையவே காணப்படுகின்றன. எங்கும், எல்லோராலும் - குடும்பத்துடன் படிக்கமுடியாத - ஒன்றுக்கும் உதவாத - எப்பயனுமற்ற பல வசனங்கள் நிறையவே காணப்படுகின்றன. அவற்றை விவரிக்கும் ஒரு முயற்சியாகத்தான் 'ஆபாசம் நிறைந்த பைபிள்' என்றத்தலைப்பில் நாம் தொடர்ந்து எழுத இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்...)

பைபிளின் எசேக்கியேல் ஆகாமமும் - விபச்சார சகோதரிகளும்...!

ஒரு இறைவேதம் என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சரியான உதாரணம் 'பைபிள்' என்றால் மிகையாகாது. காரணம், ஒரு இறைவேதத்தில் இருக்கக்கூடாத - இருக்கமுடியாத அத்தனை பலவீனங்களும் ஒரு சேர இருக்கக்கூடிய வேதமாகத்தான் இன்றைய 'பைபிள்' இருக்கின்றது என்பது தான் நிதர்சனமான உன்மை. (இதன் முழுவிளக்கமும் பல தலைப்புகளில் எமதுதளத்தில் வரும் இன்ஷாஅல்லாஹ்)

அக்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதத்தை பொருப்புடன் பாதுகாத்து - அதை பின்பற்றி வாழவேண்டியவர்கள் - அதற்கு மாற்றமாக எவர்கள் மூலமாக அவ்வேதங்கள் வழங்கப்பட்டதோ, அந்த தீர்க்கதரிசிகள் மீதே அபாண்டமான பழிகளை சுமத்தி அவர்களை பற்றி தரக்குறைவாகவும் ஆபாசமாகவும், அருவறுப்பாகவும் அந்த வேதங்களிலேயே திரித்து எழுதியதோடு மட்டுமல்லாமல், அவற்றில் கடவுளின் பெயராலேயே தங்களது சொந்த சரக்குகளை உள்நுழைத்ததால் தான் - இன்றைய பைபிள் பல தவறுகளை தண்னுல் கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாகவேண்டும். அதன் தொடர்ச்சிதான் அதனுள்ளே பதிந்துள்ள ஆபாசமான கருத்துக்களும் அசிங்கமான வர்னணைகளும்...

பைபிளில், அதன் எழுத்தாளர்கள் தங்கள் மணம்போனப்போக்கில் இறைவசனங்களுடன் தங்கள் சொந்தச்சரக்குகளைச் சேர்த்தது மட்டுமல்லாமல், அதைகடவுளே சொன்னார் என்று கடவுளின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட வசனங்கள் ஏராளம்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இரண்டு விபச்சார சகோதரிகளின் செயல்பாடுகள் பற்றிய கதை ஒன்று சொல்லப்படுகின்றது.

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள. அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது. அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள். இவைகளே அவர்களுடைய பெயர்கள். அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம். அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள். நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள். தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை. அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள். ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள். அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள். அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள். அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப் பார்க்கிலும் கெட்டவளானாள். தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று. மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள். அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன். அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள். சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள். அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள். அவர்களுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாதிபதிகளை அனுப்பினாள். அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள். அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள். கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள். எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தானங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம் பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய். ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும், யந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள். அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன். அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள். உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன். அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள். உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள். அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள். உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள். அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள். இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன். நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய். கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன்னை வெறுப்பாய்நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள். அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். நீ புறஜாதிகளைப்பின் தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும். ...நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.
- எசேக்கியேல் 23 : 1 - 49

பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு - குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கடவுள் இவ்வுலகமக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்? எதுவும் கிடையாது.

ஒரு வாதத்திற்காக கடவுள் விபச்சாரிக்கு கொடுத்த தண்டனையை விளக்க வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம்.

இவ்வாறு இரு சகோதரிகள் விபச்சாரம் புரிந்தனர். அதனால் இப்படிப்பட்ட தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று சொன்னால் நியாயம். ஆனால் இந்த பைபிளின் இறை (?) வசனங்களில் வருவது என்ன?

ஒருவன் ஒருத்தியிடம் விபச்சாரத்திற்கு சென்றால் என்ன செய்வான்? எதை அமுக்க வேண்டுமோ, அதை அமுக்குவான். எதை தொட வேண்டுமோ அதை தொடுவான். இதை கூட நான் சொல்வதற்கு சற்று கூச்சப்படுகின்றேன். ஆனால் கடவுள் இந்த அசிங்கமான - ஆபாசமான வர்ணனைகளை தான் இந்த பைபிள் எழுத்தாளருக்கு சொன்னாராம்.. '

'அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது'

உடலுறவு என்றதும் வேறு என்ன செய்வார்கள்? அது என்ன ஸ்தானங்கள்??? அப்படிஎன்றால் என்ன? அவளுடைய 'கன்னிமையின் கொங்கைகள்' என்றால் என்ன?

6.4.1980ல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க பைபிளிலும், ஆங்கில பைபிளிலும் எல்லோருக்கும் புரியும்படியாகவே மொழிப்பெயர்த்துள்ளனர்.

'அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன. கன்னிக் கொங்கைளைப் பிறர் தொட்டு விளையாடினர்'

...their breasts pressed, and there they bruised the teats of their virginity. (k j v)

இங்கே எப்படிப்பட்ட வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர் என்பதை கவனியுங்கள். பெண்ணின் அந்த மர்ம உருப்பை 'தொட்டு விளையாடினராம்' எந்த அளவுக்கு இந்த ஆபாசக்கதையை 'தூக்கலாக' சொல்ல வருகின்றனர் பார்த்தீர்களா?

பெண்களின் அந்தரங்கமான 'அந்த குறிகள்' குறித்து சொல்லுவதன் மூலம் கடவுள் சொல்லவரும் உபதேசம் என்ன? புனித வேதத்தில் வரும் இந்த ஆபாச வர்னனைகளை எந்தச் சர்சியிலாவது அல்லது பொது மேடையிலாவது விளக்கமுடியுமா? அடுத்து பாருங்கள்...

...தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்...

...அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்...

...அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்...

...அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்...

...சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சரூபங்களைக் கண்டாள்...

இப்படிப்பட்ட ஆபாச வர்ணனைகள் மூலமாகத்தான் இந்தச் சம்பவத்தை கடவுள் விளக்கியிருப்பார் என்று கிறிஸ்தவர்களே நம்புகிறீர்களா?

அவர்களுடைய (ஆண்களுடைய) 'நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுபடுதல்' என்றால் என்ன? அதற்கு அடுத்த இடத்தில் சொல்லப்படும் 'அவள் அண்டையில் சிநேக சம்போகம்' என்றால் என்ன?

அவர்களுடைய வாலிபத்திலேயே சயனித்து (உடலுறவு கொண்டு) என்றும் கடவுள் விளக்குகிறார். இந்த விளக்கம் எதற்கு? வாலிபத்தில் சயனிக்காமல் 100 வயது கிழவியியானப்பிரகா சயனிக்க முடியும்?

'அவளை நிர்வானமாக்கினார்கள்...' என்று கடவுள் சொல்கிறார். நிர்வானமாக்காமல் ஒரு பெண்னுடன் உடலுறவா? என்னே விளக்கம், என்னே விளக்கம்...! பைபிளில் எல்லாவற்றிற்கும் விளக்கம் இருக்கிறது என்பதன் அர்த்தம் ஒருவேளை இது தானோ!

அதற்கு அடுத்து கடவுள் சொல்கிறார், 'ஜாதி லிங்கம்'மாம். அது என்ன கிறிஸ்தவ சகோதரார்களே 'ஜாதி லிங்கம்?' லிங்கம் என்றால் ஆணின் 'அந்த' உருப்பு என்று கேள்விப்படடிருக்கிறோம். அது என்ன - ஜாதி லிங்கம்? அடுத்து மற்றொரு இடத்தில் சொல்லப்படுகிற 'புருச சரூபம்?' என்றால் என்ன?

இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளைத்தான் கடவுள் தனது தீர்க்கதரிசிகளுக்குச் சொன்னதாக பைபிளில் - அதுவும் புனிதத்துவம் நிறைந்த (?) பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. இது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்கள் இல்லையா? இதில் உச்சகட்ட வர்ணனை என்னத்தெரியுமா?

இப்பெண்களோடு விபச்சாரம் செய்தார்களே - அந்த ஆண்களின் 'அந்த' உறுப்பின் அளவு குறித்த கடவுளின் வர்ணனைத்தான் உள்ளதிலேயே ஹைலைட் வர்ணனை:

'கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள்'

இதை 6.4.1980ல் வெளியிடப்பட்ட நம்ம ரோமன் கத்தோளிக்க பைபிள் மொழிப்பெயர்ப்பாளர்கள் கொஞ்சம் தெரிவாகவே மொழிபெயர்த்துள்ளனர். (படிப்பபவர்களுக்கு 'அந்த' அளவு பற்றித் தெளிவாகப் புரியவேண்டும் என்பதற்காக) :

'அவர்களுடைய உறுப்புக்கள் கழுதையின் உறுப்புக்கள் போலும், அவர்களுடைய இந்தியம் குதிரையின் இந்திரியம் போலும் இருந்தன...'

இந்த பைபிள் எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு மற்ற மிருகங்களின் உருப்புக்களைக்குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? எந்த மிருகத்தின் 'அந்தக்குறி' ஆண்களின் மர்ம உருப்புக்கு ஒத்திருக்குமோ அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றார்கள் இந்த பைபிளல் எழுத்தாளர்கள். சகோதரர்களே! இந்த அளவுக்கு மிக மோசமாக, ஒரு விபச்சாரர்களின் ஆண்குறியின் அளவும், அதன் பிறகு அவர்களுக்கு வந்த விந்துக்களின் அளவும் சொல்லவேண்டியதன் அவசியம் என்ன? இந்த ஆண்குறி 'அளவு' குறிப்பு மூலம் கடவுள், மக்களுக்கு சொல்ல வரும் உபதேமென்ன? இந்த வசனங்களை உலகில் எந்த சர்ச்சிலாவது படிக்க இயலுமா? யாராவது தங்கள் குடும்பத்தோடு படிக்க முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள் கிறிஸ்தவ சகோதரார்களே!

அடுத்து இந்தப் கதையில் குறிப்பிடப்படும் விபச்சாரப் பெண்கள் யார்? அதையும் கடவுளே சொல்கிறார்:

'அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்'

'அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்'

6.4.1980ல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க பைபிளில் இப்படி குறிப்பிடப்படுகிறது :

'அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர், புதல்வியரைப் பெற்றார்கள்'

இந்த விபச்சாரிகளெல்லாம் கடவுளின் மனைவிகளாம்? அவர்கள் கடவுளுக்கு புதல்வரையும் புதல்வியரையும் பெற்றார்களாம். இதை வேறுயாரும் அல்ல. கடவுளே சொன்னாராம். இந்த பைபிள் எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட ஆபாசவர்னணைகளை கடவுள் சொன்னதாக இட்டுக்கட்டி வந்தவர்கள் கடைசியில் கடவுளின் பெயரிலேயே இப்படிப்பட்ட அபாண்டங்களை எழுத மணம் வந்தது எப்படி? கடவுளின் பெயரால் அசிங்கங்களையும் அபாண்டங்கiயும் எழுதப்பட்ட பைபிளை எப்படி இறைவேதம் என்று நம்ப முடியும்? பைபளில் உள்ள சம்பவங்கள் எப்படி உன்மையாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்படிப்பட்ட அசிங்கத்தை செய்த விபச்சாரிக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்ன?

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும், யந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள். அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன் :

இப்படி எல்லேரையும் வரவழைக்கும் கடவுள் அவர்கள் மூலம் இந்த விபச்சாரிகளுக்கு என்ன தண்டனைவழங்குவார்? அதையும் பைபிளே சொல்கிறது :

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். அவர்கள் உன்னை வெறுப்பாய்நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள். அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். நீ புறஜாதிகளைப்பின் தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.

இது தான் கடவுள் அந்த விபச்சார பெண்களுக்கு வழங்கிய தண்டனையாம். ஓரு விபச்சாரியை தண்டிக்க பல விபச்சாரகர்களை உருவாக்கினார் கடவுள் என்கிறது பைபிள். இவையெல்லாம் கடவுளின் பெயரால் கட்டவிழ்துவிடப்பட்ட பொய்கள் இல்லையா? கிறிஸ்தவ சகோதரர்களே சிந்தியுங்கள். இந்த விபச்சாரிக்கு இந்த தண்டனை என்றால் - இந்த விபச்சாரிகளுடன் விபச்சாரம் செய்தார்களே அந்த 'நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும்' என்று வருகிறதே அந்த விபச்சாரர்களுக்கு என்ன தண்டனை?

இவர்கள் மீண்டும் அவளை 'அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்.' என்கிறது பைபிளின் புனித சட்டம். அதன் பிறகு என்ன நடக்கும்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன். ஹ! ஹ! ஹ! என்ன அற்புதம்! என்னே அற்புதம்? இது தான் பைபிளின் கடவுள் வழங்கும் குற்றவியல் தண்டனையோ?

இப்படிப்பட்ட ஆபாசமான அசிங்கமான விபச்சாரக்கதைகள் மூலம் கடவுள் என்ன சொல்லவருகின்றார்? இதை எப்படி கடவுளின் வேதம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? கடவுளின் பெயரால் பச்சைப் பொய்களை எப்படி இட்டிக்கட்டுகின்றனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே.

இந்த ஆபாச வர்னணைகள் அசிங்கமாக இல்லையா? இப்படியா கடவுள் சொல்லியிருப்பார்? அந்த விபச்சாரகர்களுக்கு கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இப்படிப்பட்ட அசிங்கமான தண்டனையால் - கடவுள் நம்பிக்கைக்கே பாதகம் ஏற்பட்டுவிடாதா? கிறிஸ்தவ சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்.

நாம் மேற்கூறியுள்ள பைபிள் வசனங்கள் உன்மையில் கடவுளால் அருளப்பட்டிருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது.

காரணம் ஆபாசமான - அருவருக்கத்தக்க வகையிலான இப்படிப்பட்ட வர்ணைகளை மனிதனே உபயோகப்படுத்தக்கூடது என்று சொல்லும் கர்த்தர் மனிதர்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டிய தனது வேதத்தில் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார். அதுவும் ஆண் உருப்புக்களின் அளவுகள் குறித்து சொல்லும் அளவுக்கௌ;ளாம் கடவுள் வரம்பு மீறி இந்த புனித (?) வசனங்களை அருளியிருக்கமாட்டார் என்பது தான் எதார்த்தமான உன்மை.

அடுத்த காரணம்: யூதர்களுக்கு கடவுளால் சொல்லப்பட்ட குற்றவியல் சட்டத்தின்படி ஒரு பெண் விபச்சாரம் புரிந்தால் அவள் ஊரார் முன்னிலையில் கல்லெறிந்துக் கொள்ளப்படிவேண்டும் என்பது சட்டம். (பார்க்க : உபாகமம் 22:21-24) ஆனால் இந்த விபச்சாரிக்கு - எந்தக் கடவுள் அந்தச் சட்டத்தை சொன்னாரோ - அதே கடவுள் வேறு ஒரு தீர்ப்பை - அதுவும் மிக அசிங்கமான - ஆபாசமான - அருவருக்கத்தக்க தீர்ப்பை அளித்ததாக சொல்லப்படுகின்றது. எனவே இந்த வசனங்கள் கண்டிப்பாக கடவுளால் அருளப்பட்டிருக்காது என்பது நிதர்சனம்.

அடுத்து பைபின் வசனங்களின் படி கடவுள் என்பவர் ஒருவரே. அவருக்கு இணையாக யாரும் கிடையாது என்கிறது. (பார்க்க உபாகமம் 6: 4) ஆனால் இந்த விபச்சாரிகள் கடவுளுக்கு மனைவியாக இருந்து பிள்ளைகளையும் பெற்றதாக கூறுகிறது. இதை கடவுளே சொன்னார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது கடவுளின் பெயரால் சொல்லப்படும் பச்சைப்பொய் என்பதற்கு இதுவே ஒரு சான்று.

கடவுள் கொள்கைக்கும் - கடவுளின் வசனங்களுக்கும் நேர்முரனானது என்ற இந்தச் சாண்றுகளே - கடவுளால் இந்த பைபிள் வசனங்கள் அருளப்பட்டிருக்காது என்பதற்கும் - இடையிலே யாரே சில தீயவர்கள் உள்நுழைத்துள்ளார்கள் என்பதற்கும் போதுமானது.

இதைக்குறித்துத்தான் இறைவன் தனது இறுதித் திருமறை குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான் :

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (அல்குர்ஆன் 2:75)

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78)

எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே! திருக்குர்ஆனை எடுத்துக்கொள்ளுங்கள். உலகம் முழவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் முழுகுர்ஆணையும் மணனம் செய்தவர்கள் (ஹாஃபில்கள்) இருப்பார்கள். லட்சக்கனக்கான மக்கள் கூடக்கூடிய மக்கா நகரிலும், இன்னும் உலகம் முழவதும் உள்ள பள்ளிவாசல்களில் நாள் தோறும் திருக்குர்ஆன் தொழுகையில் ஓதப்படுகின்றது. புனித ரமலான் மாதங்களில் உலகம் முழவதும் உள்ளப் பள்ளிவாசல்களில் முழக்குர்ஆனையும் ஓதி தொழுகை நடத்தப்படுகிறது. உலகம் முழவதும் உள்ள அனைவரும் நாள்தோறும் பொருளறிந்துப் படிக்க வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இறைவசனங்களும் அதன் கட்டளைகளும் எங்கே! உங்கள் புனிதவேதமான பைபிளின் புனித (?) வசனங்கள் எங்கே!

இப்படிப்பட்ட ஆபாச வசனங்களை கடவுள் சொல்லியிருப்பாரா அல்லது சாத்தானின் தூண்டுதலால் எழுதப்பட்டாக இருக்குமா? சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்.

இது போன்ற இன்னும் பல அபத்தமான - ஆபாசமான பைபிள் வசனங்களை தொடர்ந்து விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

.
.

Tuesday, March 11, 2008

உடை கழற்றும் ஆண் வக்கிரம்

உடை கழற்றும் ஆண் வக்கிரம்
......................................................................... - ஜி.என்

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை அவ்வப்போது பலர் அக்கறையோடு வெளிபடுத்தி வருகின்றனர்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர்கள் எழுதும் கட்டுரையை அவர்களே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக' பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும்இ ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

'பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்'?.
அவர் பதிலளித்தார். 'நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்'

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.'எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.'

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை'அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.
.

Monday, March 10, 2008

இராமர் பாலமும்... இந்துத்வாவினரும்...

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெயரால் ஹிந்துத்வாவினர் பரப்பிய பச்பைப் பொய்:

- சின்னக்குத்தூசி

'சேது சமுத்திரத் திட்டமும் இராமர் பாலமும்' எனும் ஆய்வு நூலில், திராவிட கழகத்தலைவவர் கி. வீரமணி,

இராமர் பாலம் என்பது எவ்வளவு பெரிய புரட்டு என்பதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறார். அவரது நூலின் முக்கியப் பகுதிகளில் இது ஒரு பகுதி: -

'இது இராமன் கட்டிய பாலம் என்றும், 17 இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராமன் கட்டினான்' என்றும் கதைக்கிறார்கள்.

17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தானா என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் அளிக்காமல் 'நம்பிக்கை' என்று சொல்லி சொதப்புகிறார்கள்.

நம்பிக்கை என்பதையெல்லாம் நம்பி கைகட்டிக் கொண்டு வெறுமனே இருக்க முடியுமா? பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் என்கிற புராணங்களையெல்லாம் கூட நம்ப முடியுமா?

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கக்கூடியது வெறும் மனல் திட்டுக்களே - அவற்றின் மீது பாசிப்படிமங்கள் தோன்றி பாலம் போண்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். இதனை வெகு காலமகாக ஆதாம் பாலம் என்றே வழங்கி வருகின்றனர். ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்ட நெடிய தூரத்திற்கு இத்தகைய பாலங்கள் இருக்கின்றன. இவற்றையெலல்லாம் கட்டியவர்கள் இராமன் போன்ற இன்னொரு அவதாரமா? என்று பேராசிரியர் தமயந்தி ராஜதுரை எழுப்பிய வினாவுக்கு விடை என்ன?

17.3.2007 நாளிட்ட இந்து ஏட்டில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் ஆய்வுத்துறைத் தலைவர் என் ராமானுஜம் அவர்கள் 'இது மனிதன் உருவாகிய அமைப்பு அல்ல' இது புவியியல் நிகழ்வால் ஏற்பட்டதே' என்று எழுதியுள்ளார்.

பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர். ஏன். சர்மா (ராம் சரண் சர்மா) கூறியுள்ளார்:

'இராமாயண கால பாலம் கட்டியதற்கு அகழ்வாராய்ச்சி சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் பழையது என்று வைத்துக்கொண்டாலும் அந்தக் காலத்தில் மனிதர்களேயில்லை. கிடைத்துள்ள சான்றுகளின்படி இராமாயணம் எழுதப்பட்ட மிகப்பழங்காலம் கி.மு. 400 ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளாரே - என்று சுட்டிக்காட்டியுள்ளார் வீரமணி.

'இராமர் பாலம் இருக்கிறது என்று அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்வெளியிலிருந்து பாலத்தைப் புகைப்படம் எடுததே வெளியிட்டிருக்கிறதே' என்று பா.ஜ.கவினர் ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டார்கள்.

'இன்டோ லிங்க் காம் - வைஷ்ணவ நிறுவன நெட்வொர்க்' என்கிற இணையத்தளம் வெளியிட்ட செய்தியை இதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

'உன்மைகள் உறங்கும் நேரத்தில் - பொய்கள் உலகையே ஒரு முறை சுற்றி வலம் வந்துவிடும்' என்று குறிப்பிடுவதுன்டு. அது போலத்தான் இந்த இணையதளம் வெளியிட்ட செய்தியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு 'இராமர்தான் பாலம் கட்டினார் என்பதற்கு இதுவே ஆதாரம், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவே கூறிவிட்டது' என்று பாஜகவினர் வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்தார்கள்.

கெட்டிக்காரன் புளுகே எட்டுநாளில் குட்டு உடைக்கப்பட்டு - அம்பலமாகிவிடும் என்றால் எத்துவாளிகள் புளுகுகள் எத்தனை நாளைக்கு நீடித்திருக்கமுடியும்?

பாஜகவினர் பரப்பிவிடும் இந்தத் தகவல் உண்மையா? என்று பலரும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினரிடமே கேட்டார்கள்.

நாசா விண்வெளி மையத்தின் அதிகாரியான மைக்கேல் பிரவ்கசு அளித்த விளக்கத்தின் மூலம் பாஜகவினர் பரப்பிய இந்தப் பொய் தகர்க்கப்பட்டு பொடிப்பொடியானது.

'விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி பார்த்தால், இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதைப்போல மனிதர்களால் கட்டப்பட்ட எந்தவொரு பாலமும் அந்த இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது' என்று திட்டவட்டமாக அறிவித்த அவர்...

'ஒரு பொருளில் இருந்து அதன் துகள்களைச் சேகரித்து கார்பன் ஆய்வு நடத்தினால் அது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு 17 லட்சம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த எந்த ஒரு கட்டுமான அமைப்பும் அந்த இடத்தில் இருந்ததாக மெய்ப்பிக்கும் வகையிலான எந்தவித கார்பன் ஆய்வு முடிவுகளும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இது பற்றி மேலும் கூறிய அவர் :

'எங்கள் அறிவியல் வல்லுநர்கள் எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிலர் நாசா வெளியிட்ட படங்கள், இராமர் கட்டிய பாலம் என்பதையே நிரூபிப்பதாக் கூறி வருகிறார்கள்.

கடலுக்கடியில் இருக்கும் பொருளின் வயது, அதன் தன்மை போன்ற விவரங்களை, வெறும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கணக்கிட முடியாது. எனவே அவர்கள் கூறுவதில் எந்த அடிப்படையும் கிடையாது' என்பது நாசா அதிகாரி மைக்கேல் பிரவ்கசுவின் விளக்கம்.

அதே அமைப்பைச்சேர்ந்த இன்னொரு அதிகாரியான மார்க்ஹெஸ், 'விண்வெளிச் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், பூமிக்கு மேலே சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்படும் படங்கள் ஆகியவை மூலம் தீவுகள் மற்றும் பிற பொருட்களின் வயது, தன்மை ஆகியவற்றைக் கணக்கிட முடியாது.

அப்படியே ஒரு கட்டுமானம் போன்ற அமைப்பு அதில் தோன்றினாலும் அதை மனிதர்கள்தான் உருவாக்கினார்களா என்பதை அந்தப் படத்தின் மூலம் உறுதி செய்ய முடியாது.

இந்தப் பாலம் என்று கூறப்படுவது 30 கி.மீ. நீளம் உள்ளதாக இருக்கிறது.
இது சாதாரணமாகத் தோன்றும் மணல் திட்டுகள்தான். இதைத்தான் ஆதாம் பாலம் என்று சொல்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக - குறிப்பிட்ட அந்த இணைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற புகைப்படங்கள் நாங்கள் வெளியிட்டதாக இருக்கலாம்.

ஆனால் அந்த புகைப்படங்களுக்கு (இது தான் ராமர் பாலம் - நாசாவே புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறது என்று) சிலர் கூறும் விளக்கம் - அவர்களது சொந்த விளக்கமே தவிர நிச்சயமாக நாங்கள் (நாசா) தந்த விளக்கமல்ல' என்று சந்தேகங்களுகே இடமற்ற வகையில் பளிச்சென்று பதிலளித்துவிட்டார் நாசாவின் அதிகாரி மார்க் ஹெஸ்.

நாசா விண்வெளி அதிகாரிகள் இருவர் அளித்த மறுப்பினால் - 'ராமர் கட்டிய பாலம்தான் - நாசாவே புகைப்பட ஆதாரத்தோடு உறுதி செய்திருக்கிறது' என்று ஓர் இணையத்தளச் செய்தி மூலம் பாஜகவினர் பரப்பி வந்த பொய் தகர்க்கப்பட்டு தரைமட்டமாகிவிட்டது.

ராமர் பாலம் கட்டினார் என்ற புளுகை மறுத் தந்தை பெரியார் அவர்கள்,
- கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடற்பெருவெள்ளம் நிகழ்ந்தது.
அந்த வெள்ளம் நிகழ்வதற்கு முன்புவரை இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது. வெள்ளம் காரணமாகவே - தமிழ்நாட்டிலிருந்து இலங்கை பிரிவுபட்டது.
- என்று தமது 'இராமாயணக் குறிப்புகள்' என்ற நூலில் நினைவுபடுத்தியிருக்கிறார்.

அது வருமாறு: இது வரை இவ்வுலகில் ஏற்பட்ட கடற்பெரு வெள்ளங்களின் காலங்கள் காட் எலியட் என்பவர் குறித்துள்ளபடி பார்க்கையில் பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு (10,00,000 ஆண்டுகளுக்கு) முன்னர் நேர்ந்துள்ள கடற்பெருவெள்ளமே முதன்மையானதென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் (8,00,000) ஆண்டுகளுக்கு முன் நேர்ந்திருக்கக்கூடும் என்றும், மூன்றாவது வெள்ளம் இருநூறாயிரம் (2,00,000) ஆண்டுகளுக்கு முன்னரும், நாலாவது வெள்ளம் எண்பதினாயிரம் (80,000) ஆண்டுகளுக்கு முன்னரும், அய்ந்தாவது வெள்ளம் ஒன்பதாயிரத்து ஐநூறு (9,500) ஆண்டுகளுக்குச் சிறிது முன்னும் பின்னுமிருக்கலாம் மென்றும் அறியக்கிடக்கின்றன.

இப்பெரு வெள்ளங்களில் காரணமாகப் பல நிலப்பரப்புகள் நீர்ப் பரப்பாயும், நீர்ப்பரப்புகள் நிலப்பரப்பாயும் மாறினவென்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. குமரிமுனைக்குத் தெற்கிலிருந்து பல நாடுகள் நீரினுள் மறைந்தனவென்றும் அறியக்கிடக்கின்றன.

இவை எக்கேல், அக்கிசிலி, டொயினார்டு, பேர்கவன், கவான்சு முதலியோர் தென்னாட்டின் தொன்மையைப் பற்றிக்கூறும் கருத்துகளாலும், நில நூல், தொல்லுயிர் நூல் முதலியவற்றின் சான்றுகளாலும், தென்னாட்டிற்கும், மேலை ஆசியாவிற்கும் கப்பல் வாணிபம் மிகப்பழைய காலத்தே நடந்ததாகத் தெரிவதாலும், தமிழரின் ஒரு பகுதியாரே தென்னாட்டிலிருந்து அக்கோடியா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும் கொள்ளுதலே பொருத்தமுடைத்து. ஆரியர் வட மேற்கு வழியாக இந்தியாவிற்குள் புகுங்காலத்து பெலூசிஸ்தான் முதலிய இடங்களிலும் வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்பது அறிஞர் ராப்பன் என்பவர் கருத்தும் ஆகும்.

சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தின் பின்னேயே இலங்கையானது தம்ழிநாட்டினின்றும் பிரிவுபட்டதென்பர்.
- என்று குறிப்பிட்டிருக்கிறார் தந்தை பெரியார்.

இதன்படி கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கை - தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பது தெளிவாகிறது.

பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே ராமர் பாலம் கட்டினார் என்பது எவ்வளவு பெரிய பொய். ஓன்றாக இருந்த நிலப்பரப்பில் பாலம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?


இலங்கை செல்ல கடலில் பாலம் கட்டிய (?) இராமர் - அயோத்திக்கு புஷ்பக விமானம் ஏறி - வான்வழியே சென்றார் எனும் கற்பனை !

... அப்படித்தான் சேதுவில் இராமர் பாலம் கட்டினார். குரங்குகள் அந்தப் பாலத்தைக் கடலில் கட்டின என்று வால்மீகி இராமாயணத்திலேயே ஒரு கற்பனை கட்டவிழித்து விடப்பட்டிருக்கிறது.

அதே இராமாயணத்தில் 'யாருடைய துணையும் உதவியுமின்றி எனது அம்புகள் மூலமே – சமுத்திரத்தை ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் வற்றச் செய்து, சமதரையாக்கி எனது வானர சேனையுடன் இலங்கை செல்வேன் - என்று இராமர் கர்ஜிக்கிறார். தன்னாலே பாலம் எதுவும் கட்டாமலே அக்கரை சென்றடைய முடியும் என்பதை நிரூபிக்க சில பாணங்களை அவர் சமுத்திரத்தில் எய்ய - அந்த அம்புகளின் சக்தியால் - சமுத்திரமே வறண்டுவிடுமோ என்ற நிலை உருவாகிட - சமுத்திர ராஜன் கடலுக்கு அடியிலிருந்து எழுந்து வந்து 'பிரபே! என்னை மன்னியுங்கள்; கடலில் பாலம் கட்ட நான் உதவி செய்கிறேன். விசுவகர்மாவின் மகன் எனக் கூறப்படும் நளனை உங்களுக்குப் பாலம கட்ட உதவியாகத் தருகிறேன்' என்று செஞ்சுகிறார்.

அதன் பின் வானரங்கள் பிரம்மாண்டமான மரங்களையும் மலைகளையும் குன்றுகளையும் அடியோடு பெயர்த்துக்கொண்ட வந்து கடலில் போட - கடலில் ஒரு பாலம் உருவானது என்கிறார் வால்மீகி.... (தான் எய்யும் அம்பின் மூலம் கடலையே வற்றவைக்கும் அளவுக்கு சக்தி படைத்த இராமனுக்கு - சில கிலோமீட்டர் தூரமுள்ள இலங்கைக்கு தன் சக்தியால் நடந்தே சென்றிருக்கலாமே? மகா சக்தி பொருந்திய கடவுளுக்கு பாலம் எதற்கு? பதில் சொல்ல இயலுமா?)

... யுத்த காண்டத்தின் இறுதியில் - இராமர் - சீதை - லட்சுமனர் - வீபீஷணன் - அனுமன் மற்றும் வானரங்கள் எல்லாம் இலங்கையிலிருந்து அயோத்திக்கு எப்படிப் பயணம்செய்கிறார்கள்?

வால்மீகி கூறுகிறார் : புஷ்பக விமானத்தில் எல்லோரும் ஏறிக்கொண்டு - வானவீதி வழியாக அயோத்திக்குப் புறப்பட்டார்கள் - என்கிறார்.

யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பும்போது அனைவரையும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்ற இராமருக்கு - வானர சேனையுடன் இலங்கை செல்ல மட்டும் பாலம் தேவைப்பட்டது ஏன்? அத்வானிகளால் பதிலளிக்க முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

(தோழர் சின்னக்குத்தூசி எழுதிய 'ராமர் பாலம் இருந்ததா? ராமாயணம் நடந்ததா?' என்ற புத்தகதிலிருந்து சில...)
.
.