அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Friday, July 31, 2009

இயேசுவின் பிறப்பு : முரண்படும் சுவிசேஷங்கள்


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 2


இயேசுவின் வரலாற்றை விவரிப்பதாகச் சொல்லப்படும் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷங்களுக்கிடையே பல்வேறு முரண்பட்ட தகவல்கள் காணப்படுகின்றது. குறிப்பாக இயேசு பிறந்தபோது நடைபெற்றதாகச் சொல்லப்படும் செய்திகளை ஒருவன் ஆழ்ந்து படிப்பாரேயானால் இறுதியில் குழப்பம் தான் மிஞ்சும் என்கிற அளவுக்கு சுவிசேஷங்களுக்கிடையே முரண்பாடுகளும் குழப்பங்களும் மலிந்து காணப்படுகின்றது.

இயேசுவினுடைய பிறப்பு ஒரு அதிசயம் என்றாலும், அவற்றைப் பற்றி பைபிளில் சொல்லப்படும் செய்திகளில் பல குழப்பமான செய்திகள் காணப்படுவதால், பைபிளில் கூறப்படும் 'இயேசுவின் வரலாறு' என்பது, இராமாயணம் மகாபாரதம் போன்று, 'இதுவும் ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருக்குமோ' என்று படிப்படிவர்களுக்கு ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகமதிகம் இருப்பதை நாம் மறுப்பதற்கு இல்லை - மறுக்கவும் முடியாது. அந்த அளவுக்கு அவரை பற்றி சொல்லப்படும் பல செய்திகளில் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது மேலைநாடுகளில் கூட்டம் கூட்டமாக தங்களது பூர்வீக மதமான கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி நாத்திகத்தின் பால் சென்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இயேசுவின் வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான செய்திகள் பதிவு செய்யப்படாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதுடன், அதற்கு மாற்றமாக பல பொய்யான இட்டுக்கட்டப்பட்ட - முரண்பாடான செய்திகளே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே இந்த நிலை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளது.

பைபிளில் இயேசுவின் பிறப்பின் போது நடைபெற்றதாக சொல்லப்படும் செய்திகளில் உள்ள முரண்பாடுகளை இனி தொடர்ந்து பார்ப்போம்.

முரண்பாடு 2:

இயேசு பிறக்கும் போது நிலவிய சூழ்நிலை என்ன?

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,.... - மத்தேயு 2:13-14

இயேசு பிறந்த போது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், அதற்குப் பயந்து இயேசுவின் தாய் மரியாளும், அவருக்கு கணவனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும், இயேசுவை தூக்கிக்கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகின்றார். ஏரோது இறந்த பிறகும் கூட அவனது மகன் அர்கெலாவு என்பவன் ஆட்சிக்கு வந்ததால் அதற்கும் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு 2:19-23ம் வசனங்களில் கூறுகின்றார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்தபோது சர்வ சாதாரண நிலைதான் நிலவியதாகவும் மத்தேயு கூறுவது போல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்பது போன்று மறுத்து எழுதுகின்றார்.

இயேசுவின் தாய் மரியாளும் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த யோசேப்பும் இயேசு பிறந்தபோது பெத்லகேமில் இருந்ததாகவும் அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும், அவரது பெற்றோர் வருடம் தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் என்றும் லூக்கா தனது நூலில் குறிப்பிடுகின்றார். பார்க்க லூக்கா 2:1-52

ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும், அதைத் தொடர்ந்து இயேசுவின் பெற்றோர் எகிப்துக்கு ஓடிப்போனதையும், அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும், எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்த சமயத்தில் சர்வ சாதாரண நிலை தான் நிலவியதாகவும், ஆண்டு தோரும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள் என்றும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகின்றார்.

பரிசுத்த ஆவியால் தூண்டுதலால் தான் இந்த பைபிள் எழுதப்பட்டிருந்தால் எப்படி இப்படிப்பட்ட முரண் வரும். அதுவும் இரட்சகராக வந்த இயேசு பிறக்கும் போது நடைபெற்ற சம்பவங்களில் இப்படிப்பட்ட ஒரு முரண் வரலாமா? மத்தேயு கூறுவது போல் இயேசு பிறந்த போது பயங்கரமான சூழ்நிலை நிலவியதா? அல்லது லூக்கா கூறுவது போல் சர்வ சாதாரண நிலை நிலவியதா? ஆண்டு தோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உன்மையா? அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்து பின்னர் நாசரேத்துக்குச் சென்றது உன்மையா?

முரண்பாடு : 3

இயேசு பிறக்கும் முன் மரியாளும் யோசேப்பும் எங்கே வசித்தார்கள்? நாசரேத்துக்கு எப்போது சென்றார்கள்?

இயேசு பிறக்கும் வரை யோசேப்பும் மரியாளும் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் வசித்ததாகவும் அவர்கள் குடிமதிப்பு எழுதும் வகைலேயே அங்கிருந்து பெத்லகேமிற்குப் போனதாகவும் அங்கேயே மரியாளுக்கு பிரசவகாலம் ஏற்பட்டு, இயேசு பிறந்ததும் குழந்தைக்கு நியாயப்பிரமாணத்தின் படி செய்யப்பட வேண்டிய சடங்குகளை செய்து விட்டு மீண்டும் தங்கள் ஊரான நரசேத்துக்கு திரும்பிச் சென்றதாகவும் லூக்கா கூறுகின்றார்:

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான். அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். - லூக்கா 1:26-27

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். - லூக்கா 2:1-7

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். - லூக்கா 2:39

ஆனால் மத்தேயுவோ இதற்கு நேர் முரணாக, யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிலேயே வாழ்ந்ததாகவும், அப்போது கர்த்தருடைய தூதன் சொன்னதினிமித்தம் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்குப் போனதாகவும், ஏரோது மரணமடையும் வரை எகிப்திலேயே தங்கி இருந்ததாகவும், ஏரோதின் மரணத்திற்குப் பின்னர் அவனது மகன் அர்கெலாவு ஆட்சி செய்கிறான் என்று கேள்விப்பட்டு எகிப்திலிருந்து நாசரேத்துக்குப் போய் தங்கியதாகவும் கூறுகின்றார்:

ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். - மத்தேயு 2:1-3

அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். - மத்தேயு 2:11

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். - மத்தேயு 2:13-15

ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான். ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய், நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. - மத்தேயு 2:19-23

இங்கே மத்தேயு சொல்லுவது போல் இயேசு பிறக்கும் முன்பு யோசேப்பும் மரியாளும், பெத்லகேமிலேயே வாழ்ந்து வந்தார்களா? அல்லது நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள் குடிமதிப்பு எழுதும் வகையிலேயே பெத்லகேமிற்கு சென்றார்களா?

அதன் பிறகு எருசலேமிலிருந்து ஏரேதுக்கு பயந்துக்கொண்டு எகிப்துக்குப் போய் பின்னர் ஏரேதின் மகனுக்கு பயந்து அதன் காரணமாக நாசரேத்துக்கு போனார்களா? அல்லது லூக்கா சொல்வது போல், தங்கள் சொந்த ஊர் என்ற காரணத்திற்காக பெத்லகேமிலிருந்து நேரடியாக நாசரேத்துக்கு போனார்களா? யார் சொல்வது உன்மை? கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கதாபாத்திரமான இயேசுவின் பிறப்பில் ஏன் இந்த முரண்பாடு? இயேசுவின் வரலாறு ஒரு கட்டுக்கதை என்ற ஒரு தவறான கருத்தை இந்த பைபிள் வசனங்கள் ஏற்படுத்தி விடாதா?


இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.

Sunday, July 19, 2009

ஹாரூனின் சகோதரி மர்யம் - திருக்குர்ஆனில் சரித்திர தவறா?


திருக்குர்ஆன் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்!

பைபிளைப் பற்றி முஸ்லீம்களால் எடுத்து வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணரும் கிறிஸ்தவர்கள், பதிலுக்கு திருக்குர்ஆனிலும் தவறுகள் உள்ளது என்று எழுதத் தொடங்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, திருக்குர்ஆனில் சரித்திரத் தவறுகள் இருப்பதாகவும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பி அடித்து எழுதிக்கொண்டிருக்கும் பொழுது கவனக்குறைவாக பல தவறுகளை இழைத்துவிட்டதாகவும், அதை இவர்கள் கண்டுபிடித்துவிட்டது போன்று, தற்போது எழுதத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் 'குர்ஆனில் சரித்திரத் தவறு - மரியால் ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரியா?' என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தமிழில் மொழிப்பெயர்த்து கிறிஸ்தவ தளங்களில் வெளியிடப்பட்டது.

குர்ஆனின் மீது குற்றம் சாட்டப்படும் அந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)
இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?


இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை சமர்ப்பிக்கின்றார் அந்த கிறிஸ்தவ நன்பர்:

3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: 'என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) 'அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

19:27 பின்னர் (மர்யம் - மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: 'மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!'

19:28 'ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).

இந்த குர்ஆன் வசனங்களின் மூலம் அந்த கிறிஸ்தவர் கண்டுபிடித்த அபாரமான (?) கண்டுபிடிப்பின் முடிவை பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

விளக்கம்:

யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

என்ன கண்டுபிடிப்பு பார்த்தீர்களா? எவ்வளவு ஆய்வுப்பூர்வமான விளக்கம் பார்த்தீர்களா? இந்த அபாரமான கண்டுபிடிப்பை (?) படித்த Colvin என்ற கிறிஸ்தவர் உணர்ச்சி வசப்பட்டு 'இறுதித்தூது' என்ற எமது சகோதர வலைத்தளத்தில் மேற்கண்ட இந்தக் குற்ச்சாட்டை பின்னூட்டமிட்டு கூடவே கீழ்கண்ட அவரது 'வீர ஆவேச' கருத்தையும் பதித்திருந்தார்:

நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுது. கடைசியில் குர்ஆனின் சரித்திரத தவறுகளையெல்லாம் நீயே உன் கையால் புடமிடப் போகிறாய்

உனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளேன்.

நீ ஒரு ஆம்பளயா இருந்தா அதற்கு முதலில் பதில் அளி பார்ப்போம்.


எவ்வளவு வெறித்தனம்? எத்தனை நாள் கோபமோ! இது தான் இவர்கள் சமாதானத்தை போதித்த இயேசுவிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள் போலும்? அது இருக்கட்டும். அவர் கோரியபடி பதிலுக்கு வருவோம்.

இந்த தவறை (?) கண்டுபிடித்த கிறிஸ்தவர் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)

இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?
என்று எழுதுகின்றார்.

இவர் குற்றம் சுமத்துவது போல் எந்த இடத்தில் மரியாளை இறைதூதர்களான ஹாரூன் (ஆரோன்) மற்றும் மூசா (மோசே)வின் சொந்த சகோதரி என்று சொல்லப்பட்டுள்ளது? ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. மாறாக, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில், ஹாரூன் என்ற பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியாகவே திருக்குர்ஆன் மரியாளை அடையாளம் காட்டுகின்றது. இதில் என்ன தவறு கண்டுபிடித்துவிட்டனர் என்று நமக்குப் புரியவில்லை.

ஏனெனில், பொதுவாக ஒரு பெயர் உலகில் ஒருவருக்கு மட்டும் தான் இருக்குமா? அல்லது பலருக்கும் இருக்குமா? என்பதை சிந்திக்க மறந்துவிட்டார் இந்த ஆய்வை (?) சமர்ப்பித்த கிறிஸ்தவ நன்பர். இவர் குறிப்பிடுவது போன்று 'மேரியை ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்படுகின்றது' என்று கண்மூடித்தனமாக குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன், ஒரு பெயர் பலருக்கும் இருக்க வாய்பிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஏன் யோசிக்கவில்லை? குறிப்பாக முன் சென்ற தீர்க்கதரிகளுடைய அல்லது கர்த்தரால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய பரிசுத்தவான்களின் - நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்கள் வைப்பார்களா? மாட்டார்களா? வைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றதா? இல்லையா? குர்ஆனின் மீது குற்றம் சாட்டுவதற்கும் முன் இந்த சாதாரன நடைமுறையை கூட ஏன் இந்த கிறிஸ்தவ நன்பர் சிந்திக்கவில்லை?

உதாரனமாக சொல்லவேண்டும் என்றால், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவில் இயேசுவினுடைய வம்சவரலாறைப் பற்றி சொல்லப்படுகின்றது. அந்த மத்தேயுவின் 1:16ம் வசனத்தில் 'யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்' என்று வருகின்றது. இதைப் படிக்கும் இந்த கிறிஸ்தவர், 'மத்தேயு தவறாக எழுதிவிட்டார், யாக்கோபு என்பவர் ஈசாக்கின் மகன். இவர் பிறந்ததோ கிமு 1841. அந்த யாக்கோபின் குமாரன் தான் யோசேப்பு. இவர் பிறந்ததோ கிமு 1750. (பார்க்க ஆதியாகமம் 35:23-24) அந்த யோசேப்புக்கும் அவருக்குப் பின் 1750 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த மரியாளுக்கும் எப்படி திருமணம் நடந்திருக்கும்? இங்கே மத்தேயு தவறாக - கவனக்குறைவாக பழைய ஏற்பாட்டைப் பார்த்து காப்பி அடித்து எழுதும் போது தவறிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டுவாரா? அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளின் - நல்லவர்களின் பெயர்களை அவர்களுக்குப் பின் வருபவர்களுக்கு வைக்கும் வழக்கமிருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே மரியாளுடைய புருஷனாகிய யோசேப்புக்கும், அவரது தந்தையான யாக்கோபுக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்று முடிவு செய்வாரா?

குர்ஆனில் மரியாளைப் பார்த்து 'ஹாரூனின் சகோதரியே' என்று அழைத்ததை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனில் சரித்திரம் தெரியாமல் தவறாக எழுதிவிட்டார் என்று குற்றம்சுமத்தும் இந்த கிறிஸ்தவர், அதே கண்னோட்டத்தோடு மத்தேயுவும் பழைய ஏற்பாட்டை காப்பி அடிக்கும் போது கவனக்குறைவாக தவறிழைத்துவிட்டார் என்று சொல்ல முன்வருவாரா? இதை முதலில் அந்த கிறிஸ்தவ நன்பரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அடுத்து, திருக்குர்ஆனின் 19:28ம் வசனத்தில் மரியாளைப் பார்த்து 'ஹாரூனின் சகோதரியே' என்று அழைப்பது அவருக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்த காரணத்தினாலேயே தவிர, நபி (ஸல்) அவர்களின் கவனக்குறைவினால் நடந்த தவறு அல்ல என்பதை கிறிஸ்தவ நன்பர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியே இந்த ஹாரூன் என்றப் பெயர் இறைத்தூதர் ஹாரூனையே - (ஆரோனையே) குறிக்கும் என்றிருந்தால், 'ஹாரூனுடைய சகோதரி' என்று குறிப்பிடப்படும் இடத்தில் அவரைவீட மிகவும் பிரபலமானவரான முசா (மோசே) அவர்களைக் குறிப்பிட்டு 'மூசாவின் சகோதரியே!' என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏனெனில் இறைதூதர்களான ஹாரூனும் முசாவும் சகோதரர்கள். ஹாரூனுக்கு சகோதரியாக இருப்பவர் மூசாவுக்கும் சகோதரியாகவே இருப்பார். அப்படி இருக்கும் நிலையில், இங்கே இறைதூதர் ஹாரூன்தான் நோக்கமாக இருந்திருந்தால், அவருக்கு பதில் பிரபலமான மோசேயை குறிப்பிட்டு கூறியிருக்கலாமே? எனவே இங்கே குறிப்பிடப்படும் ஹாரூன் என்பவர் மரியாளுடைய சொந்த சகோதரரையே குறிக்குமேயன்றி இறைதூதர் ஹாருனை அல்ல என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதே கேள்வியை இப்பொழுது மட்டுமல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டு அதற்கு அன்றைக்கே பெருமானார் அவர்கள் பதிலும் அளித்துவிட்டார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நபித்தோழர் முஃகீரா பின் ஷூஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிலுள்ள)நஜ்ரான் நகரத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்தவர்கள் இவ்வசனத்தைச் சுட்டிக்காட்டி 'ஹாரூனுக்கும் மர்யமுக்கும் இடையே இன்னின்ன கால இடைவெளி இருக்கும்நிலையில் எவ்வாறு மர்யமை ஹாரூனுடைய சகோதரி என்று உங்கள் வேதம் கூறுகின்றது?' என்று கேட்டார்கள். நான் மதீனா திரும்பியபின் இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது நபியவர்கள் 'பனூஇஸ்ராயீல் மக்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), நல்லவர்கள் ஆகியோரின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிவந்தனர்' என்று விளக்கமளித்தார்கள்
.- நூல்: (ஸஹீஹ் முஸ்லீம், திர்மிதி, நஸயீ, முஸ்னது அஹ்மத்)

இந்த நபிமொழியின் படி பெருமானாரிடமே இன்றைய கிறிஸ்தவர்களால் கேட்கப்படும் அதி மேதாவித்தனமான கேள்வி அன்றைக்கே கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், அக்காலத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு முன்சென்ற தீர்க்கதரிசிகளின் - நல்லவர்களின் பெயர்களை சூட்டிக்கொள்ளும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்று விளக்கமளிக்கின்றார்கள். எனவே, மரியாளுக்கு ஹாரூன் என்ற சகோதரர் இருந்தார். அந்த அடிப்படையில் அன்றைய சமூகத்தினர், மரியாளை அவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதைத் தான் குர்ஆனும் குறிப்பிடுகின்றது. எனவே இதில் ஒன்றும் தவறு நடந்துவிடவில்லை என்பதை இரண்டாவதாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அடுத்து இன்னொன்றையும் இங்கே முக்கியமாக விளக்கியாக வேண்டும். அதாவது, இந்தக் கேள்வி ஏன் இந்த கிறிஸ்தவர்களுக்கு எழுகின்றதென்றால், இவர்கள் இறைவேதமாக நமபும் பைபிளில் மரியாளுக்கு சகோதரர்கள் இருந்ததாக எந்த ஒரு குறிப்பும் கிடையாது. அதை வைத்து, குர்ஆனில் சரித்திரத் தவறு என்ற இந்த குற்றச்சாட்டை கிறிஸ்தவ நண்பர் முன்வைக்கின்றார். இதுவும் ஒரு தவறான கண்னோட்டமே!

ஏனெனில், பைபிளில் மரியாளைப் பற்றி முழுமையான எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். யார் யாருடைய தகவல்களெல்லாம் பைபிளில் எழுதப்பட்டிருக்கின்றது. சம்பந்தமே இல்லாத பலரின் வம்சவரலாறுகளெல்லம் எழுதப்பட்டு பைபிளின் பக்கங்கள் வீனடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தந்தையே இல்லாமல் பிறந்த இயேசுவுக்கு தந்தை வழி வம்சவரலாற்றை கூறப்படுகின்றது. (அதிலும் பல குளறுபடிகள்) ஆனால் இயேசுவை அதிசயமாக பெற்றெடுத்த பரிசுத்த பெண்மணியான மரியாளைப் பற்றிய தகவல்கள் மட்டும் வேண்டும் என்றே பைபிளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை யார்? அவரது தாயார் யார்? அவருக்கு சகோதரர் யாரும் இருக்கின்றார்களா? இப்படி எந்த ஒரு நேரடியான தகவளும் பைபிளில் கிடையாது. மாறாக இயேசு அவரை உதாசீனப்படுத்தியதாகவும் - அவமரியாதை செய்ததாகவுமே பைபிளில் எழுதிவைத்துள்ளனார். இப்படி மரியாளைப் பற்றிய எந்த ஒரு தெளிவான தகவலும் பைபிளில் இல்லாத போது அதை ஆதாரமாக வைத்து குர்ஆனை எப்படி விமர்சிக்கலாம்? சற்று சிந்திக்க வேண்டாமா?

மரியாளின் சகோதரர் யார் என்பது பற்றி நேரடியாக பைபிளில் சொல்லப்படவில்லை என்பதற்காக 'ஹாருனின் சகோதரரியே' என்று குர்ஆன் குறிப்பிடுவதை வைத்து திருக்குர்ஆனின் மீது கலங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவர்கள், அவரின் தந்தையைப் பற்றியோ தாயாரைப் பற்றியோ அதே பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே! அதற்காக அவருக்கு தாயோ தந்தையோ இல்லாமல் அதிசயமாக வானத்திலிருந்து குதித்தார் என்று வாதிடுவார்களா? அவரது இறப்பு பற்றியோ அல்லது பிறப்பு பற்றியோ பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லையே அதற்காக அவரை 'பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு அதிசயப் பிறவி' என்று வாதிடுவார்களா?

அது மட்டுமல்ல, பல முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் நிரம்பிய பைபிளை வைத்து ஒருவருடைய வரலாற்றை ஆய்வு செய்யலாமா? அதற்கு அப்படி ஏதாவது தகுதி இருக்கின்றதா? அதுவும் 'முரண்பாடுகளே இல்லாத ஒரே இறைவேதம்' என்று சவால் விடுகின்ற குர்ஆன் என்னும் ஒரு இறைவேதத்தை எடைபோடுவதற்கு பைபிளை ஆதாரமாக எடுக்கலாமா? பைபிளில் ஒன்று இரண்டு முரண்பாடா? இருக்கின்றது? நூற்றுக்கணக்கான முரண்பாடுகளும் ஆயிரக்கணக்கான தவறுகளும் நிறம்பிய ஒரு புத்தகம் எப்படி வரலாற்று ஆதாரமாக இருக்க முடியும்? குர்ஆன் போன்ற ஒரு புத்தகத்தின் நம்பகத்தன்மையை உரசிப்பார்க்கும் ஆதாரமாக எப்படி இந்த பைபிள் இருக்க முடியும்? அப்படி பைபிளோடு உரசி குர்ஆனின் நம்பகத்தன்மையை எடைபோடுபவர்கள் முதலில் நாம் பைபிளின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கட்டும். அதன் பிறகு திருக்குர்ஆனை விமர்சிக்கட்டும்.

அடுத்து தனது கட்டுரையில், குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார். இது குறித்து விரிவாக விளக்க வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் சுறுக்கமாக இங்கே பார்த்து விடுவோம்.


குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா?


அந்த கிறிஸ்தவ நன்பர் பின்வரும் ஒரு குற்றச்சாட்டையும் தனது கட்டுரையில் முன்வைக்கின்றார்:

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

முதலில் பைபிளைப் பார்த்து குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டது என்று குற்றம் சுமத்துபவர்கள், பைபிள் எப்பொழுது அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டது என்ற வரலாறை ஆய்வு செய்ய மறந்துவிடுகின்றனர். இவர்கள் உபயோகப்படுத்தும் இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிள், நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அரபியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் பொழுது, அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபிக்கு எப்படி அந்த பைபிள் பிரதி கிடைத்திருக்கும்? சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ பாதிரிமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பைபிளை விட்டும் பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள் என்று கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டுமே படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும், அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாத பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு இன்னல்களுக்கும் ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்டனர் என்றும் கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால் குர்ஆனின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான 'புரோட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதே.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுதப்படிக்கத்தெரியாதவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்ற நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் எப்படி அந்த பைபிள் கிடைத்திருக்கும். அதுவும் வேற்று மெழியான அரபியில்? சிந்திக்க வேண்டாமா?

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான கூடுதல் தகவல்களைக் காண இங்கே அழுத்தவும்.

எனவே கிறிஸ்தவர்களே! இஸ்லாத்தின் மீது இது போன்ற எந்த ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு, திருக்குர்ஆனை சத்தியத்தை அறியும் நோக்கத்துடன் படியுங்கள். அதன் மூலம் சத்தியத்தை அறியுங்கள் - சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

கிறிஸ்தவர்களின் அடுத்து குற்றச்சாட்டில் சந்திப்போம்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Friday, July 17, 2009

முரண்பாடுகள் நிறைந்த புதிய ஏற்பாடு (NT-P1)


புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 1

பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களை நாம் தெடராக கண்டுவருகின்றறோம். இன்ஷா அல்லாஹ் அவை மேலும் தொடர்ந்து வெளியிடப்படும்.

அதற்கு முன்பாக, புதிய ஏற்பாட்டில் உள்ள முரண்பாடான வசனங்களையும் இங்கே நாம் பார்த்துவிட்டால் பைபிள் எந்த அளவுக்கு முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அதில் எவ்வளவு பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்கள் நிறைந்து காணப்படுகின்றது என்பதும் அது எந்த அளவுக்கு மனிதக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவிடும்.

அடுத்து இங்கே இன்னொன்றையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். அதாவது ரோமன் கத்தேலிக்கர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளின் உள்ள பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 புத்தகங்களும், புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்களால் உபயோகப்படுத்தப்படும் பைபிளில் அதிலிருந்து 7 புத்தகங்கள் நீக்கப்பட்டு 39 புத்தகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. காரணம் அவை அப்போகிரிஃபா (Appocrypha) என்ற தள்ளுபடி ஆகாமங்கள் என்று சொல்லப்பட்டு அந்த 7 புத்தகங்களை நீக்கியுள்ளனர் புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். (இன்ஷா அல்லாஹ் இது தொடர்பான விரிவான கட்டுரை விரைவில் எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிடப்படும்)

ஆனால் இதே போன்று இன்னும் பல புத்தகங்கள் புதிய ஏற்பாட்டிலிருந்தும் பழைய ஏற்பாட்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாத உன்மைகள். புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கித்தள்ளியுள்ளனர் கிறிஸ்தவ திருச்சபையினர்.

இப்படி ஒதுக்கித்தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் சொல்லப்படுகின்றது தெரியுமா? அவற்றில் உள்ள வசனங்கள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது என்று சந்தேகம் எழுந்ததால் அவை ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது என்று காரணம் கற்பிக்கின்றது கிறிஸ்தவ திருச்சபை.

ஒரு புத்தகம் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்படவில்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்தனர் என்பதற்கு சொல்லப்படும் மிக முக்கியமான காரணம், அவற்றில் உள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகவும், குழப்பங்களாகவும் இருந்ததாலும், தெளிவில்லாத சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்ததாலும், அவைகள் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படிப்பட்ட பலவீனங்களை உடைய ஒரு புத்தகம் கண்டிப்பாக தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்க முடியாது, மாறாக கள்ள அப்போஸ்தலர்களாலும் கள்ள தீர்க்கதரிசிகளாலும், சாத்தானின் தூண்டுதலாலும் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும், எனவே அவற்றை தள்ளுபடி செய்துவிட்டனர் என்று விளக்கமளிக்கின்றனர். அதை 'இந்திய வேதாகம இலக்கியம்' என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'மேய்ப்பனின் கோல்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறப்படுகின்றது:

ஒரு புத்தகத்தின் நம்பகத் தன்மை: தேவ ஏவுதலால் எழுதப்பட்டதின் மற்றொரு முத்திரை அதன் நம்பத்தகுந்த ஆதாரமாகும். சத்தியத்துக்கு புறம்பான அல்லது (முந்தைய வெளிப்படுத்தலின்படி தீர்க்கப்பட்ட) கோட்பாட்டில் தவறுடைய எந்தப் புத்தகமும் தேவனால் ஏவப்பட்டிருக்க முடியாது. அவரது வார்த்தைகள் சத்தியமானதாயும் முரண்பாடானதாயும் இருக்க வேண்டும். - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4

மற்றொரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:

முந்தைய வெளிப்படுத்தலோடு எளிதாக ஒத்துப்போவதால் மட்டும் ஒரு போதனை ஏவப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறமுடியாது. ஆனால், முந்தைய வெளிப்படுத்தலோடு முரண்பாடு காணப்பட்டால் நிச்சயமாக அந்தப் போதனை ஏவப்பட்டதல்ல என்று அது காட்டிவிடும். பொரும்பான்மையான பகுதிகள் நம்பத்தக்கவையல்ல என்ற அடிப்படைக் கொள்கையினால் புறக்கணிக்கப்பட்டன. அவைகளின் வரலாற்று ஒழுங்கின்மை, மதக் கோட்பாட்டைப் பற்றிய முரண்பாடான கொள்கைகள், அவை அதிகாரமுடைய அமைப்பிலிருந்தாலும் கூட தேவனிடத்திலிருந்து வந்தது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்கின்றன. அவை தேவனிடமிருந்து வந்தால் அதே வேளையில் தவறுடையதாகவும் இருக்க முடியாது. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 4

இப்படி முரண்பாடுகளும் குழப்பங்களும், தெளிவற்ற வசனங்களும் இருந்தால், அவை கண்டிப்பாக கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதியிருக்க முடியாது என்று முடிவு செய்து, அவற்றை தள்ளுபடி செய்துவிட்டதாக கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்துகின்றனர்.

இதை சற்று தெளிவாக மற்றோர் இடத்தில் இதே புத்தகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது:

ஒரு தீர்க்கதரிசனப் புத்தகத்தை முற்றிலும் போலியானது என்று நம்பிக்கையற்ற ஆதாரத்தினால் முடிவெடுக்க முடியுமா? தேவன் அருளிய ஒரு புத்தகமும் போலியானதாயிருக்க முடியாது. தீர்க்கதரிசன புத்தகம் என்று உரிமை கொண்டாடும் ஒரு புத்தகத்தில் மறுக்கமுடியாத பொய்மை காணப்படுமானால், தீர்க்கதரிசன சாட்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவன் பொய் சொல்லுபவரல்ல. - ஆதாரம் : மேய்ப்பனின் கோல், ஒரு புத்தகம் எப்படி வேதாகமத்தின் ஒரு பகுதியாகிறது. பக்கம் 7

இப்படி தெளிவாக, ஒரு புத்தகம் முரண்பாடுகளும் குழப்பங்களும் பொய்களும் காணப்படுமானால், அவை கண்டிப்பாக தேவனால் அருளப்பட்டிருக்காது, ஏனெனில் தேவன் பொய் சொல்லுபவர் அல்ல, என்று கண்டறிந்து அந்த புத்தகங்களை பைபிளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ மிஷினரிகள் வாதிடுகின்றன.

ஆனால் இதே போன்று எண்ணற்ற முரண்பாடான, குழப்பம் நிறைந்த, தெளிவற்ற போதனைகளை உடைய, பொய்கள் நிரம்பிய புத்தகங்களும் இன்றைய பைபிளில் நிறைந்து காணப்படுகின்றதே! அதை மட்டும் எப்படி இந்த கிறிஸ்தவ உலகம் வேத வசனங்களாக அங்கீகரித்துள்ளது? என்பது தான் புரியாத புதிராக உள்ளது. காரணம் எந்த காரணத்தை சொல்லி பைபிளின் புதிய ஏற்பாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நீக்கினார்களோ அதே காரணங்கள் - அதே முரண்பாடுகள் - அதே குழப்பங்கள் - அதே பொய்யான சம்பவங்கள் - இன்றைய அங்கீகரிக்கப்பட்ட பைபிளின் புத்தகங்களிலும் இருக்கின்றதே - அவற்றையும் ஏன் ஒதுக்கித்தள்ளவில்லை? அவற்றை ஏன் போலி அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டது என்று முடிவெடுக்கவில்லை?

கிறிஸ்தவ திருச்சபையினர் தங்களுக்கு சாதமாக பைபிளில் பல புத்தகங்களை சேர்த்தும் நீக்கியும் இருப்பதற்கு முரண்பாட்டை ஒரு காரணமாக சொல்லும் போது, அதே காரணத்தை கொண்ட இன்றைய பைபிளையும் ஏன் ஒதுக்க முன்வரவில்லை என்பது தான் எமது கேள்வி என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எப்படிப்பட்ட பெரும் பெரும் முரண்பாடுகள் புதிய ஏற்பாட்டில் மலிந்து கிடக்கின்றது என்பதை இனி தொடராக நாம் காண்போம்.


முரண்பாடு 1:
புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகமான மத்தேயுவிலும், மூன்றாவது புத்தகமான லூக்காவிலும் இயேசுவின் வம்சவரலாற்றைப் பற்றி கூறப்படுகின்றது. இவற்றில் உள்ள முக்கியமான முரண்பாடுகளை ஆய்வுப்பூர்வமாக 'இயேசுவின் வச்சாவளியும் பைபிளின் குளறுபடிகளும்' என்றத் தலைப்பில் இரண்டு பாகங்களாக ஏற்கனவே எமது ஏகத்துவம் தளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்தவும்:


இயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 1)
இயேசுவின் வம்சாவழியும் பைபிளின் குளறுபடியும்! (பாகம் - 2)

இறைவன் நாடினால் தொடரும்...

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

Saturday, July 11, 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6


முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5 படிக்க இங்கே அழுத்தவும்




முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 6



முரண்பாடு 25:

யாத்திராகமம் 6:2-3ல் கர்த்தர் பின்வருமாறு கூறியதாக சொல்லப்படுகின்றது:

மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. - யாத்திராகமம் 6:2-3

இந்த வசனத்தில் கர்த்தர் மோசேயிடம், தான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் தரிசனமானதாகவும் ஆனால் அவர்களுக்கு அவரது நாமமான 'யேகோவா' என்றப் பெயர் தெரியாது என்றும் கூறியதாக இந்த வசனத்தில் சொல்லப்படுகின்றது. இதை சற்று தெளிவாக wbtc தமிழ் மொழிப்பெயர்ப்பில் கீழ் கண்டவாறு கூறப்படுகின்றது:

பின் தேவன், மோசேயை நோக்கி, நானே கர்த்தர். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. - யாத்திராகமம் 6:2-3

ஆனால், இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக, ஆபிரகாமுக்கு கர்த்தரின் பெயரான 'யேகோவா' என்றப் பெயர் தெரிந்ததாகவும் அதன் பெயரிலேயே அவர்கள் கர்த்தரை தொழுதுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே (Jehovahjireh) என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. - ஆதியாகமம் 22:14

இந்த வசனத்தில் ஆபிரகாமுக்கு கர்த்தருடைய நாமமான 'யேகோவா' என்றப் பெயர் தெரிந்துள்ளது என்பதும், அதனாலேயே அவர் பெயரை உள்ளடக்கிய - யேகோவாயீரே - கர்த்தர் பார்க்கிறார் - என்ற பொருள் படக்கூடிய ஒரு பெயரை வைத்தான் என்கிறது. யேகோவா என்ற பெயரே ஆபிரகாமுக்குத் தெரியாது என்றால் எப்படி யேகோவா - யீரே (கர்த்தர் பார்க்கிறார்) என்று ஆபிரகாம் பெயர் வைத்தார்?

அதேபோன்று இன்னும் பல இடங்களில் ஆபிரகாம் கர்த்தரை யேகோவா என்றப் பெயரிலேயெ தொழுது கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். - ஆதியாகமம் 21:33

இந்த இடத்தில் தமிழ் பைபிளில் பெயர்செபாவில் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை ஆபிரகாம் தொழுதுகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே கர்த்தருடைய நாமத்தை என்ற இடத்தில் 'யேகோவா' என்ற வார்த்தையே மூல மெழியிலும் பல ஆங்கில மொழிப்பெயர்ப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அந்த பெயரிலேயே ஆபிரகாம் தொழுதுகொண்டதாக கூறப்படுகின்றது.

And Abraham planted a tamarisk in Beer-sheba, and called there on the name of Jehovah, the Eternal ùGod. - Darby bible Translation

And Abraham planted a tamarisk tree in Beer-sheba, and called there on the name of Jehovah, the Everlasting God. - American Standard Bible

இங்கே ஆபிரகாமுக்கு தேவனாகிய கர்த்தரின் பெயராகிய 'யேகோவா' என்ற பெயர் தெரியும் என்று கூறப்படுகின்றது. ஆனால் யாத்திராகமம் 6:2-3ம் வசனங்களோ தெரியாது என்கிறது. இதில் எது சரி?

(இதே போன்று இன்னும் பல இடங்களில் யோகோவா என்ற பெயரையே உபயோகித்ததாக சில ஆங்கில பைபிள்களிலும் எபிரேயு பைபிள்களிலும் கூறப்படுகின்றது. பார்க்க ஆதியாகமம் 26:23-25 மற்றும் ஆதியாமம் 28:21 (ஈசாக்கு யோகோவா என்று அழைத்ததாக கூறப்படுகின்றது)


முரண்பாடு 26:
மனிதன் மொத்தம் எத்தனை ஆண்டுகள் வாழ்வான் என்பதை அறியாதவரா கர்த்தர்?

அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். - ஆதியாகமம் 6:3

இந்த வசனத்தில் மனிதன் உலகத்தில் வழப்போகிற நாட்கள்; மொத்தமே 150 வருடம் தான் கர்த்தர் கூறியதாக என்று பைபிள் குறிப்பிடுகின்றது.

ஆனால் இந்த வசனத்திற்கு மாற்றமாக நோவா வாழ்ந்ததோ 950 வருஷம் என்று ஆதியாகமம் 9:29 ல் சொல்லப்படுகின்றது. அதேபோல் இன்னும் பல பேர் பல நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்ததாக இதே பைபிளின் இதே ஆதியாகமத்திலேயே சொல்லப்படுகின்றது. பார்க்க ஆதயாகமம் 11:11-17.

இதில் எது சரி? மனிதனின் மொத்த ஆயுளே 150 வருடங்கள் தான் என்றிருந்தால் எப்படி நோவா 950 வருடம் வாழ்ந்தார்? அதே போன்று இன்னும் பல பேர் எப்படி பலநூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரே ஆகாமத்தில் - ஒரே ஆசிரியரால், அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட பைபிளில் இப்படிப்பட்ட முரண்பாடு வராலாமா? உன்மையிலேயே கர்த்தரால் தான் இந்த வசனங்கள் அருள்பட்டிருந்தால் இந்த முரண்பாடு வருமா? அல்லது எழுதியவருக்கு ஞாபகக் குழப்பமா?


முரண்பாடு 27:
கர்த்தர் மணஸ்தாபப்படுவாரா? மாட்டாரா?

பைபிளின் பழைய ஏற்பாட்டு புத்தகமான 1 சாமுவேல் 15:10-11ம் வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றது:

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார். அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். - 1 சாமுவேல் 15:10-11

அதாவது முற்றும் அறிந்த கர்த்தர், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் போன்று மணம் வருந்தியதாக இந்த வசனத்தில் சொல்லப்படுகின்றது.

ஆனால் இதற்கு நேர் முரணாக இதே 1 சாமுவேல் 15:29ம் வசனத்தில் பின்வருமாறு சொல்லப்படுகின்றது:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தர் மனஸ்தாபப்படுவரா? மாட்டாரா? கர்த்தர் மனஸ்தாபப்பட்டாரா? இல்லையா? ஒரே புத்தகத்தில் அதுவும் ஒரே அதிகாரத்திலேயே இப்படி தெளிவான முரண்பாடு வரலாமா? இதில் உள்ள இன்னொரு கொடுமையையும் பாருங்கள். அதாவது, மேலே 1 சாமுவேல் 15:10-11ம் வசனத்தில் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதாக சொல்லிவிட்டு, அதே புத்தகத்தின் அதே அதிகாரத்தின் 15:29ம் வசனத்தில் கர்த்தர் மணஸ்தாபப்படமாட்டார், அப்படி மணஸ்தாபப்படுவதற்கு அவர் ஒன்றும் மனிதன் அல்ல என்று எழுதிவிட்டு பின்னர் அதே புத்தகத்தின் அதே 15ம் அதிகாரத்தின் 35ம் வசனத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

'சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை. இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். - 1 சாமுவேல் 15:35

என்ன கொடுமை பார்த்தீர்களா? ஒரே புத்தகத்தின் ஒரே அதிகாரத்தில் உள்ள குளறுபடிகள் இவை? முதலில் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களில் (15:10-11) தான் செய்த ஒரு செயலுக்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டதாக கூறிவிட்டு அடுத்து சொல்லப்பட்ட வசனத்தில் (15:29) இப்படி எல்லாம் கர்த்தார் மனஸ்தாபப்படும் அளவுக்கு அவர் ஒன்றும் மனுபுத்திரன் அல்ல கூறி முரண்படுகின்றது. அதன் பிறகு மீண்டும் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம் சாமுவேல் துக்கித்துக்கெண்டதாக கூறப்படுகின்றது. இந்த வசனங்களை கர்த்தர் தான் அருளினார் என்று நம்பினால் அதனால் கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் இழிவு ஏற்படுத்தியது போல் ஆகாதா? ஒரு புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் புத்தகத்தில் அதுவும் ஒரே அதிகாரத்தில் இப்படிப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றதே இதை எப்படி கர்த்தரின் புனித வேதமாக ஏற்றுக்கொள்ள முடியும்?

இதே போன்று இன்னொறு இடத்திலும் முற்றும் அறிந்த கர்த்தர் மனிதனைப்படைத்ததற்காக மணஸ்தாபப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது பார்க்க ஆதியாகமம் 6: 6-7

இது குறித்து கூடுதல் தகவல்களை பார்க்க இங்கே அழுத்தவும்

முரண்பாடு : 28

பாவ நிவாரனப்பலியிலும் முரண்பாடு:

இஸ்ரவேலர்களின் புனித நாட்களைப்பற்றியும் அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பைபிளின் எசேக்கியேல், எண்ணாகமம் என்ற இரண்டு ஆகாமங்கள் கூறுகின்றன. வழக்கம் போலவே இந்த இரண்டு ஆகாமங்களிலும் அனேக முரண்பாடுகள்:

இந்த இரண்டு ஆகாமங்களிலும் பாவ நிவாரணப்பலி பற்றி சொல்லப்படுகின்றது :

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். - எசேக்கியேல் 45:21

இதே கருத்தை எண்ணாகமும் கூறுகின்றது:

முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா. - எண்ணாகமம் 28:16

ஆனால் இந்த நாளில் என்ன செய்யவேண்டும் என்பதை இரண்டு ஆகாமங்களும் முரண்பாட்டுக் கூறுகின்றது:

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக. ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக. ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக. ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன். - எசேக்கியேல் 45:21-25

ஆனால் இதற்கு மாற்றமாக எண்ணாகமம் வேறுவிதமாக கூறுகின்றது:

அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள். ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும். முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும். அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள். இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள். நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்த வேண்டும். ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும் அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. - எண்ணாகமம் 28:17-25

எசேக்கியேல் ஆகாமத்தில் பழுதில்லாத ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் தகனப் பலியாகச் செலுத்த வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் எண்ணாகமத்திலோ, இதற்கு மாற்றமாக இரண்டு காளைகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் பலியிட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இரண்டில் எது சரி? எந்த முறையின் படி பலி செலுத்த வேண்டும்?

அதேபோல் எசேக்கியேல் ஆகாமத்தில் பாவ நிவாரணப் பலியாக ஒரு காளை மாட்டைப் படைக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதற்கு நேர் மாற்றமாக எண்ணாகமத்திலோ, பாவ நிவாரணப்பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது.

அதே போல் போஜனப்பலிக்காக சொல்லப்படும் முறையிலும் இரண்டு ஆகாமங்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றது. இதே போன்று இன்னும் அனேக முரண்பாடுகள் இந்த இரண்டு ஆகாமங்களிலும் உள்ளது. இவை எல்லாம் கர்த்தரால் தான் கூறப்பட்டது என்றால் எப்படி இத்தனை முரண்பாடுகள் வரும்?


இறைவன் நாடினால் தொடரும்...



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Saturday, July 04, 2009

படைப்பிலும் முரண்படும் பைபிள்


முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2
படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3
படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4
படிக்க இங்கே அழுத்தவும்



முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5


பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைக்கப்பட்டது பற்றி கூறப்படுகின்றது. அவற்றிலும் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும், எதார்த்தத்திற்கு மாற்றமான செய்திகளும், விஞ்ஞானத்திற்கு முரனான செய்திகளும் மலிந்து காணப்படுகின்றது. அவற்றில் சில முரண்பாடுகள் இதோ:


முரண்பாடு 20:

முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது தாவரங்களா?

ஆதியாகமம் 1 ம் அதிகாரத்தில் மனிதர்களையும் தாவரங்களையும் படைத்தது பற்றி கூறும்பொழுது முதலில் தாவரங்களே படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும் கூறுகின்றது.

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.- ஆதியாகமம் 1:11-13

இந்த வசனங்களில் மூன்றாம் நாளிலேயே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. அடுத்து மனிதன் எப்பொழுது படைக்கப்பட்டான் என்பதை பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது:

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார் அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:27-31

இந்த வசனங்களில் மிகத் தெளிவாக அறாம் நாளில் தான் மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2 ம் அதிகாரத்தில் இந்த வசனங்களுக்கு நேர் முரணான செய்தி காணப்படுவதை பாருங்கள்:

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். - ஆதியாகமம் 2:4-7

இந்த வசனங்களில் கர்த்தர் மனிதனைப் படைத்தது பற்றி கூறப்படுகின்றது. ஆனால் அச்சமயம் வரை புற்பூண்டுகளோ தவாரங்களோ பூமியில் முளைக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் 3ம் நாளிலே கர்த்தர் பூமியில் புற்பூண்டுகளை முளைபிக்கச் செய்ததாகவும் அதன் பின் ஆறாம் நாளில் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது? முதலில் படைக்கப்பட்டது எது? ஒரே ஆகாமத்தில் அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகத்தில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் வரலாமா?

முரண்பாடு 21:
ஏவாள் படைக்கப்பட்டது எப்போது?

ஆதியாகமத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது:

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:27

இந்த வசனத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததாகவும், அப்போதே ஆணையும் பெண்னையும் - இருவரையும் - படைத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் அதே ஆதியாகமத்தின் 2:20ல் பின்வருமாறு கூறப்படுகின்றது.

அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. - ஆதியாகமம் 2:20

இந்த வசனத்தில் ஆதாம் படைக்கப்படும் வரை ஆதாமுக்கு துணையாக யாரும் படைக்கப்படவில்லை என்றும், அதன் பிறகே ஏவாள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது (மேலும் பார்க்க ஆதியாகமம் 2:21-25)

உன்மையில் ஏவாள் எப்போது படைக்கப்பட்டார்? ஒரே புத்தகத்திற்குள்ளேயே ஏன் இந்த முரண்பாடு? உன்மையில் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தான் எழுதப்பட்டது என்றால் இப்படி முரண்பாடு வருமா?

முரண்பாடு 22:
முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது மிருகங்களா?

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:25-27

இந்த வசனங்களில் முதலில் மிருகங்கள் மற்றும் ஆகாயத்து பறவைகள் படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. அதோடு கூடுதலாக அவற்றை ஆளும் சக்தியையும் மனிதனுக்கு கர்த்தர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக இதே ஆதியாகமத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை பாருங்கள்:

பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:18-19

இந்த வசனங்களில் மனிதன் படைத்தபின்னர் தான் அனைத்து மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் உண்டாக்கப்பட்டதாகவும், அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைத்ததே ஆதாம் தான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் மிருகங்களைப் படைத்ததற்குப் பின்னர் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது?

முரண்பாடு 23:

ஆகாயத்து பறவைகள் எதன் மூலம் படைக்கப்பட்டது ?

ஆகாயத்து பறவைகள் நீரிலிருந்து படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 1ம் அதிகாரம் கூறுகின்றது:

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:20-21

ஆனால் இந்த வசனங்களுக்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2ம் அதிகாரத்தில் ஆகாயத்து பறவைகளும் இன்னும் சில உயிரினங்களையும மண்ணிலிருந்து படைத்ததாக கூறப்படுகின்றது:

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:19

ஆகாயத்து பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டதா? அல்லது மண்ணிலிருந்து படைக்கப்பட்டதா?

முரண்பாடு 24:

நட்சத்திரங்கள் படைக்கப்பட்டது எப்போது? பூமி படைக்கப்படுவதற்கு முன்பா அல்லது அதன் பிறகா?

முதலில் பூமி படைக்கப்பட்டது என்றும் அதன் பிறகே நட்சத்திரங்கள் படைக்கப்பட்து என்றும் ஆதியாகமம் கூறுகின்றது :


ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். - ஆதியாமம் 1:1

இதே ஆதியாகமத்தின் மற்றொரு இடத்தில் :

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:16-19

இந்த வசனங்களில் முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் - அதாவது பூமி படைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து நான்காம் நாளில் தான் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் இங்கே சொல்லப்படுகின்றது. ஆனால் யோபு என்ற புத்தகத்திலோ இதற்கு நேர் முரணான செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது:

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. - யோபு 38:4-7

இந்த வசனத்தில் நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரே பூமி படைக்கப்பட்டதாகவும் அச்சமயம் விடியற்கால நட்சத்திரங்கள் ஏகமாயப்ப பாடியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள ஆதியாகமத்தின் வசனங்களிலோ முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து நான்காம் தினத்தன்றே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது? இதில் எந்த புத்தகம் சொல்வது சரியானது? முதலில் படைக்கப்பட்டது பூமியா அல்லது நட்சத்திரங்களா?


இறைவன் நாடினால் தொடரும்...



கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Monday, June 22, 2009

கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டாரா?


இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்


இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் 3

பைபிளில் கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டதாகவும், அவரது இருதயத்திற்கு அது விசனமாக இருந்ததாகவும் - மனிதனை ஏன்டா படைத்தோம் என்று நொந்து நூலானதாகவும் கூறி - சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரை பலவீனப்படுத்தி - இழிவுபடுத்துகின்றது:

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. - ஆதியாகமம் 6:5-6

இதை WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பில் பின்வருமாறு கூறப்படுகின்றது:

கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர் பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும் மிருகங்களையும் ஊர்வனவற்றையும் வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப்போகிறேன். ஏன் என்றால் இவற்றை எல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகின்றறேன் என்றார். - ஆதியாகமம் 5:6-7

கர்த்தர் தான் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் படைத்தார். மனிதன் என்னென்ன செய்வான் எப்படி எல்லாம் நடந்துக்கொள்வான் என்பதை எல்லாம் முற்றும் அறிந்த கர்த்தர் நாம் ஏன் மனிதனைப் படைத்தோம் என்று மனஸ்தாபப்படுவாரா? - வருத்தப்படுவாரா? கர்த்தர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எல்லாம் அறியாத பலவீனரா?

ஆனால் அப்படி பலவீனரைப்போன்று 'தெரியாமல் படைத்துவிட்டோமே' என்று வருத்தப்பட்டார் என்று பைபிள் கூறுகின்றது. இதே போன்று மற்றோர் இடத்தில் சவுலை ராஜாவாக்கியதற்காக வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது:

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார் அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். - 1 சாமுவேல் 15:10-11

சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். - 1 சாமுவேல் 15:10-11

ஒரு மனிதன் என்ன செய்வான் என்பதை முன்கூட்டியே அறியாத பலவீனராகத்தான் கர்த்தர் இருந்தார் - தான் செய்த செயல்களை நினைத்து வருத்தப்படும் அளவுக்கு மனிதனைப்போன்ற பலவீனராகத்தான் கர்த்தர் இருக்கின்றார் என்று இந்த பைபிள் வசனங்கள் நமக்கு உணர்த்துக்கின்றது. ஆரம்பத்தில் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்ட கர்த்தர் அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தும் இது போன்று மற்றொரு முறை தனது செயலுக்காக வருத்தப்பட்டதாக 1 சாமுவேல் 15:10-11 குறிப்பிடுகின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தர் என்ற ஒரு தவறான கருத்து இந்த பைபிள் வசனங்களின் மூலம் தினிக்கப்படுகின்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் - அனைத்தையும் அறிந்த கர்த்தருக்கு, தன்னால் படைக்கப்பட்ட மனிதன் என்ன செய்வான் - எப்படி நடந்துக்கொள்வான் - என்பது எப்படித் தெரியாமல் போகும்? சவுல் இராஜாவானதும் என்னென்ன செய்வான் என்று எப்படி தெரியாமல் போகும்? இப்படி குறிப்பிடுவது கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் வல்லமைக்கும், இழுக்கு ஏற்படுத்தும் செயல் இல்லையா? பைபிள் சொல்வது போல் நம்புவது கர்த்தருடைய சக்தியை குறைத்து மதிப்பிடும் செயலாகாதா?

இப்படிப்பட்ட கர்த்தரின் பெயராலேயே அவருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பைபிளில் எழுதப்பட்ட இது போன்ற பொய்யான வசனங்களை இனம் காடடும் முகமாகத்தான் - கர்த்தர் என்ன நடக்கும் என்பதை அறியாத பலவீனராக இருந்தார் என்றக் கூற்றை முற்றாக மறுத்து, திருக்குர்ஆன் அவரின் வல்லமையை பின்வருமாறு பறைசாற்றுகின்றது:

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6:3)

அவனே மறைவனாதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன் (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன் அன்புடையோன். - அல்குர்ஆன் 32 : 6.

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன். - அல்குர்ஆன் 67 : 13.

மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் மிக்க பொறுமையாளன். - அல்குர்ஆன் 33 : 51

இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான். மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன் விவேகம் மிக்கோன். - அல்குர்ஆன் 24 : 18.

இந்த வசனத்தில் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், வானங்களிலும் பூமியிலும் இந்த அகில உலகனைத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்தவன், அவன் அறியாதது ஒன்றும் இல்லை - அவனுக்குத் தெரியாதது எதுவும் இருக்கமுடியாது - அவன் இறந்தகாலத்தையும் அறிந்தவன் - அவன் நிகழ்காலத்தையும் அறிந்தவன் - அவன் எதிர்காலத்தையும் அறிந்தவன் - அவன் யாவற்றையும் நன்கறிந்த மாக சர்வ வல்லமைப் பொருந்திய இறைவன் - அவன் மனிதருடைய இருதயத்தில் என்ன இருக்கின்றது என்பதையும் நன்கறிந்தவன் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக சொல்லியிருக்க - இந்த வசனங்களுக்கு மாற்றமாக பைபிளில் கர்த்தரை எப்படி குறிப்பிட்டு அவரை சிறுமைப்படுத்துகின்றது என்பதை நாம் உணரவேண்டும்

அடுத்து இன்னொன்றையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். அதாவது, முற்றும் அறிந்த - ஞானமிக்கவராகத்தான் நம்மை எல்லாம் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தர் இருப்பார் என்பது கடவுள் கோட்பாட்டின் அடிப்படையான ஒரு தத்துவம். இந்த உன்மையை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது - குறிப்பாக கிறிஸ்தவர்களும் இதை மறுக்க மாட்டார்கள். அப்படி மறுப்பவன் கடவுளைப் பற்றி சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

நாம் இந்த பொதுவான அளவுகேலின் படி பர்த்தாலும் மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்கள் கர்த்தரின் பெயரால் - சாத்தானின் தூண்டுதலால் - அவரது கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகளால்தான் எழுதப்பட்டிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.

இந்த பொதுவான விதி என்பது ஒரு புறமிருக்க, மேலே சொல்லப்பட்ட பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரின் வசனங்களாக இருக்க முடியாது என்பதை பைபிளின் வேறு சில வசனங்களும் உறுதிபடுத்துகின்றது:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன் நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - எசேக்கியேல் 24:14

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? - எண்ணாகமம் 23:19

இப்படி கர்த்தர் எந்த விதத்திலும் வருத்தப்படமாட்டார் - அப்படி வருத்தப்படுவதற்கு அவர் ஒன்றும் மனிதன் அல்ல என்று தெளிவாக கூறியிருக்க எப்படி கர்த்தர், தான் மனிதனைப்படைத்தற்காக மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள் முடியும்? அப்படி மனஸ்தாபப்பட்டதாக சொல்லப்படும் பைபிள் வசனங்கள் எப்படி இறைவசனங்களாக இருக்க முடியும்?

அது மட்டுமல்ல அவர் மனிதன் என்ன நினைக்கின்றான் - என்ன நினைப்பான் என்பதை எல்லாம் அறிந்தவர் என்றும் ஒரிடத்தில் கூறப்படுகின்றது:

தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், - 1 இராஜாக்கள் 8:40

இப்படி எல்லா மனிதனின் செயல்பாடுகளையும் அறிந்தவராகத்தான் கர்த்தர் இருப்பார் என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளின் சில வசனங்களும் உறுதிபடுத்தி இருக்க, எப்படி கர்த்தர் மனிதன் என்ன செய்வான் என்று அறியாதவர் போன்று வருத்தப்பட்டதாகவும் - சவுல் இராஜாவானதும் என்னென்ன அக்கிரமம் செய்வான் என்று அறியாவதவர் போன்று அவனை இராஜாவாக்கியதற்காக வருத்தப்பட்டதாகவும் - கர்த்தரை சிறுமைப்படுத்தி சொல்லப்படும் பைபிள் வசனங்களை இறைவசனங்களாக ஏற்க முடியும்? கிறிஸ்தவ நன்பர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

எனவே கர்த்தர் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டார் என்பதெல்லாம் கண்டிப்பாக கர்த்தரின் பெயரால் சில விஷமிகளால் பைபிளில் தினிக்கப்பட்ட வசனங்கள் தான் என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதை நிரூபிக்கும் வகையில் பைபிள் வசனங்கள் உட்பட பல சாண்றுகள் இங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

எனவே உன்மையையும் பொய்யையும் பிரித்தரிவிக்கும் முகமாக சர்வ வல்லமைப் பொருந்திய இறைவனால் அருளப்பட்ட இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனில் மட்டும் தான் கர்த்தரை உயர்வாக கூறப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, அதன் படி வாழ கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு கர்த்தர் அருள் புரிவாராக.

இறைவன் நாடினால் தொடரும்...

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Thursday, June 18, 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 4



முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3 படிக்க இங்கே அழுத்தவும்

முரண்பாடு 15:
பென்யமீனுடைய குமாரர்கள் எத்தனைபேர்? 1 நாளாகமம் பின்வருமாறு கூறுகின்றது:

பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர். - 1 நாளாகமம் 7:6

இந்த வசனத்தில் பென்யமீனின் குமாரர்கள் மொத்தம் மூன்று பேர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணாக இதே ஆகாமத்தில் மற்றோர் இடத்தில் வேறு விதமாக கூறப்படுகின்றது:

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும், நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான். - 1 நாளாகமம் 8:1-2

மேலே சொல்லப்பட்ட வசனத்திற்கு நேர் முரணான இந்த வசனங்களில் பென்யமீனுக்கு மொத்தம் 5 குமாரர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு இடங்களிலும் பென்யமீனின் குமாரர்களில் பேலா என்பவனைத் தவிர மற்ற அனைவரையும் வேறு வேறு பெயர்களில் சம்பந்தமில்லாமல் கூறப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 3 குமாரர்கள் என்றும் மற்றொரு இடத்தில் 5 குமாரர்கள் என்று ஒரே ஆகாமத்திற்குள்ளேயே முரண்பாடுகள், இது ஒரு புறமிருக்க, இதே பென்யமீனுக்கு வேறு சில குமாரர்களும் இருந்ததாக பைபிளின் மற்றொரு இடத்தில் சொல்லப்படுகின்றது.

பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள். - ஆதியாகமம் 46:21

இந்த வசனத்திற்கும் மேலே சொல்லப்பட்ட வசனங்களுக்கும், பெயர்களில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றது என்பதை கவனியுங்கள். அடுத்து இந்த மூன்று இடங்களில் சொல்லப்பட்ட வசனங்களுக்கும் மாற்றமாக இதே பென்யமீனும்கு வேறு பெயர்களைக்கொண்ட சில குமார்கள் இதே பைபிளின் மற்றோர் இடத்தில் சொல்லப்படுகின்றது:

பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும், சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்.. - எண்ணாகமம் 26:38-40

இப்படி பைபிளின் நான்கு இடங்களில் பென்யமீனுடைய குமார்கள்பற்றி பல முரண்பட்ட தகவலே கொடுக்கப்படுகின்றது. இந்த பென்யமீனுக்கு எத்தனைக்குமாரர்கள் இருந்தால் என்ன? அவனுக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள் என்பது பற்றி சொல்வதன் மூலம் கர்த்தர் என்ன உபதேசத்தை இந்த உலக மக்களுக்கு சொல்லவருகின்றார், அதை ஒரு இறைவேதத்தில் பல இடங்களில் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இப்படி ஒன்றுக்கொண்று முரண்பட்ட புத்தகங்களைக் கொண்ட பைபிளை எப்படி இறைவேதமாக ஏற்க முடியும்? இந்த புத்தகங்கள் எப்படி பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டதாக நம்ப முடியும்?

முரண்பாடு 16:
இஸ்ரவேலை ஆண்ட இராஜா ரெகொபெயாம் என்பவனின் மகன் அபியா என்பவன் அவனுக்குப்பின் இராஜாவானதாக 2 நாளாகமம் 12:16ல் சொல்லப்படுகின்றது. அவன் 3 வருடங்கள் எருசலேமை ஆண்டதாகவும், ஆனால் அவனது தாயார் யார், அவளது பெயர் என்ன என்பதில் பைபிளின் புத்தகங்கள் வழக்கம் போல் ஒன்றுக்கொண்று முரண்படுகின்றது.

அவனது தாயார் பெயர் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய மீகாயாள் என்று 2 நாளாகமம் 13:2ல் சொல்லப்படுகின்றது.

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள் - 2 நாளாகமம் 13:2

ஆனால் இதற்கு நேர்முரணாக 2 நாளாகமம் 11:20ல் ரெகொபெயாம் அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை மணமுடித்து அவள் மூலம் அபியாவைப் பெற்றதாக கூறுகின்றது :

அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான் அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள். - 2 நாளாகமம் 11:20

உன்மையில் ரெகொபெயாம் யார் மூலம் அபியாவைப் பெற்றான்? ஊரியேலின் குமாரத்தியாகிய மீகாயாள் மூலமா? அல்லது அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளின் மூலமா? இது ஒருபுறம் இருக்க, 2 நாளாகமம் 11:20ல் உள்ள மற்றொரு குளறுபடியையும் கவனியுங்கள். அதாவது, இந்த 2 நாளாகமம் 11:20ல் ரெகொபெயாம் அப்சலேமின் குமாரத்தியாகிய மாகாளின் மூலம் அபியாவைப் பெற்றதாக சொல்லப்படுகின்றது. ஆனால், இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அப்சலேமுக்கு ஒரு குமாரத்திதான் இருந்தாள், அவள் பெயர் தாமார் என்று 2 சாமுவேல் 14: 27ல் குறிப்பிடப்படுகின்றது. அப்சலேமுக்கு இல்லாத குமாரத்தியாகியா மாகாளின் மூலம் எப்படி அபியாவை ரெகொபெயாம் பெற்றெடுக்க முடியும்?

முரண்பாடு 17:
சாலமோன் ராஜா தான் கட்டிய அரண்மனையில் வென்களக்கடல் என்னும் தொட்டியைக் கட்டினானாம். அதைப்பற்றி பைபிளின் இரண்டு இரங்களில் சொல்லப்படுகின்றது. 1 இராஜாக்கள் 7: 26ல் அந்தத் தொட்டியின் அளவு 2000 குடம் தண்ணீர்பிடிக்கும் அளவுக்கு இருந்ததாகவும், ஆனால் அதற்கு நேர் முரணாக 2 நாளாகமம் 4: 5ல் 3000 குடம் தண்ணீர்பிடிக்கும் அளவுக்கு இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

உன்மையில் எத்தனைக் குடம் தண்ணீர்ப்பிடிக்கும் வகையில் சாலமோன் அந்த வெண்களக்கட்ல் தொட்டியைக் கட்டினான்?

முரண்பாடு 18:

சவுல் இறந்தது எப்படி?

தற்கொலை செய்து கொண்டு செத்ததாக 1 சாமுவேல் 31:4-6ம் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இதற்கு நேற்முரணாக சவுலை அமலேக்கியன் என்பவன் தான் கொன்றதாக 2 சாமுவேல் 1:1-16ல் சொல்லப்படுகின்றது. உன்மையில் சவுல் இறந்தது எப்படி? அவனின் மரணம் குறித்து எந்த புத்தகத்தில் சொல்லப்படும் செய்தியை நம்ப வேண்டும்?

முரண்பாடு 19:
தாவீதின் படைத்தலைவன் ஒரே நேரத்தில் எத்தனைபேரை கொண்று போடுவான்?

தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன். இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டான். - 1 நாளாகமம் 11:11

இந்த வசனத்தில் தாவீதின் சேர்வைக்காரரின் தலைவனாக இருந்தவன் ஒரே நேரத்தில் 300 பேர்களின் மேல் தன் ஈட்டியை ஓங்குவதன் மூலம் கொண்று போடுவான் என்று கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேல் 23:8ல் பின்வருமாறு கூறப்படுகின்றது:

தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன். இவன் எண்ணூறு பேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். - 2 சாமுவேல் 23:8

இந்த வசனத்தில் ஒரே நேரத்தில் 800 பேர்களை கொண்று போடுவதாக இந்த இடத்தில் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? 800 பேர்களையா? ஆல்லது 300 பேர்களையா? அது போல், தாவீதின் சேர்வைக்காரின் தலைவன் பெயர் என்ன? தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பசெபத்தா? அல்லது அக்மோனியின் குமாரணாகிய யாஷோபியாமா?


முரண்பாடுகள் தொடரும்... இறைவன் நாடினால்


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

Monday, June 08, 2009

கர்த்தர் ஓய்வு எடுத்தாரா?

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம் - பாகம் -2
.
.
கர்த்தருக்கு ஓய்வு தேவையா?

பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதன் அளவுக்கு மீறிய வேலைகளை செய்வதால் அவனுக்கு கலைப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதே போன்று அவனது பலவீனத்தின் காரணமாக அவனுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆனால், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, இரட்சித்து வரும் ஏக இறைவனாகிய கர்த்தருக்கு இது போன்று பலவீனங்கள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது - இருக்கவும் முடியாது. காரணம் பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகா சக்தி பொருந்தியவராகத்தான் கர்த்தர் இருப்பார் - இருக்க முடியும். இதில் எவருக்கும் எந்தவிதத்திலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படியே எவரேனும் கர்த்தருக்கு கலைப்பு ஏற்படும் என்று கூறுவாரேயானால் அவர் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தரை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பது தான் அர்த்தமாக இருக்க முடியும்.

இதைத் தான் இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும்போது:

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை. (அல்-குர்ஆன் 50:38)

இந்த வசனத்தில், இவ்வுலகம் மற்றும் இந்த அண்ட சாராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனுக்கு அதனால் எந்தவித கலைப்பும் ஏற்படவில்லை என்றும் - அப்படி ஏற்படும் அளவுக்கு அவன் பலவீனமானவனாகவும் இருக்க மாட்டான் என்றும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கின்றது.

இறைவனின் வல்லமையை பறைசாற்றும் இந்த திருக்குர்ஆனின் வசனத்திற்கு மாற்றமாக, சர்வ வல்லமைப்படைத்த கர்த்தருக்கு, இந்த உலகம் மற்றும் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்ததால், கலைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் ஓய்வு எடுத்துக்கொண்டதாகவும், கார்த்தரின் மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் பைபிளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

...ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்..' (யாத்திராகமம் 31:17)

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். - ஆதியாகமம் 2:2

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார் ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். - யாத்திராகமம் 20:11

கர்த்தர் உலகம் மற்றும் இந்த அண்டசாராசரங்கள் அனைத்தையும் படைத்துவிட்டு அதன் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டு பலவீனனான மனிதனைப் போன்று ஓய்வெடுத்ததாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது.

மாட்சிமையும் வல்லமையும் பொருந்தியவனான இறைவனுக்கு களைப்பு ஏற்படுமா? அவனுக்கு ஓய்வு தேவையா? நிச்சயமாக இல்லை! இத்தகைய பலவீனங்கள் எல்லாம் இறைவனின் படைப்பினங்களுக்கு மட்டுமே உரியதாகும். இறைவனை அரி, துயில் எதுவும் கொள்ளாது. அவன் மனிதர்களின் இத்தகைய கற்பனைகளை விட்டும் அப்பாற்பட்டவன். எனவே கர்த்தருடைய கண்ணியத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் இத்தகைய பைபிள் வசனங்கள் கண்டிப்பாக கர்த்தரால் சொல்லப்பட்டிருக்காது, மாறாக கர்த்தருடைய எதிரியான சாத்தானின் தூண்டுதலால் தான் எழுதப்பட்டிருக்கும் என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதைத்தான் திருமறைக்குர்ஆனில் சர்வ வல்லமை பொருந்திய இறைவன் கூறுகின்றான்:

அவர்கள் இறைவனை கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக இறைவன் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்-குர்ஆன் 22:74)

ஓய்வு நாள் ஏன்?

இது ஒருபுறமிருக்க, இப்படி கர்த்தரால் ஓய்வெடுக்கப்பட்ட அந்த நாளைத்தான் யூதர்களும் - பைபிளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கிறிஸ்தவர்களும் - ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். - யாத்திராகமம் 20:9-10

கர்த்தரே ஓய்ந்திருந்த அந்த நாளை ஓய்வு நாளாக அனுசரிக்காமல் எவரேனும் கர்த்தரின் கட்டளைக்கு மாற்றமாக நடந்தால், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுகின்றது:

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக அது உங்களுக்குப் பரிசுத்தமானது அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன் அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். - யாத்திராகமம் 31:14

கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், கர்த்தர் ஒய்வு எடுத்ததாகவும், அந்த நாளைத்தான் யூதர்களுக்கு ஓய்வு நாளாக அனுசரிக்கும் படி கட்டடையிடப்பட்டதாகவும் இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றது. அப்படிப்பட்ட ஓய்வு நாளில் எவரேனும் வேலை செய்தால் அவன் கொல்லப்படவேண்டும் என்றும் பைபிள் குறிப்பிடுகின்றது.

யூதர்கள் ஆசாரிக்கும் 'ஓய்வு நாள்' ஏற்படுத்தப்பட்டதற்கு காரணம் 'கர்த்தர் ஓய்ந்திருந்தது' தான் என்பது போன்ற ஒரு பொய்யான தோற்றம் பைபிளின் இந்த வசனங்களின் மூலம் ஏற்படுத்தப்படுன்றது.

ஓய்வு நாள் ஏற்படுத்தப்பட்டதற்கு இது தான் காரணமாக இருந்தால் முதல் மனிதன் ஆதாம் காலம் தொட்டே 'ஓய்வு நாள்' என்னும் அந்த கட்டளையை கர்த்தர் கொடுத்திருப்பாரே? அல்லது அவருக்கு உண்மையான விசுவாசியாக இருந்த ஆபிரகாமின் காலத்திலிருந்தாவது கர்த்தர் அந்த கட்டளையை கொடுத்திருப்பாரே? ஏன் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து மோசேயின் காலத்தில் இப்படிப்பட்ட ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்படவேண்டும்? காரணம் இஸ்ரவேவலர்கள் செய்த செயல்களின் காரணமாக - அவர்களை சோதிக்கும் பொருட்டு - இறைவன் இந்த ஓய்வு நாள் சட்டத்தை யூதர்களுக்கு கொடுத்தானே அல்லாமல், கர்த்தர் ஓய்திருந்தார் என்பதற்காக அல்ல. அப்படி சொல்வது கர்த்தரை இழிவு படுத்துவதற்கு சமமானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஓய்வு நாள் யூதர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்ற உன்மையைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக உலகுக்கு உணர்த்துகின்றது:

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அல்குர்ஆன் 7 : 163.)

மேலும், அவர்களிடம் (இஸ்ரவேலர்களிடம்) வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம். இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம். மேலும் ''(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்'' என்றும் அவர்களுக்கு கூறினோம். இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (அல்குர்ஆன் 4 : 154)

இப்படி எல்லாம் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கும் பொருட்டே யூதர்களுக்கு சனிக்கிழமையை ஓய்வு நாளாக ஆக்கப்பட்டதே அல்லாமல், பைபிளில் சொல்லப்படுவது போன்று கர்த்தர் ஓய்ந்திருந்தார், அதன் காரணமாகவே அந்த நாளை பரிசுத்தமாக்கும் பொருட்டு ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகின்றது என்று கூறுவது கர்த்தரின் கண்ணியத்தையும் - அவரின் மகத்துவத்தையும் - அவரின் வல்லமையையும் - குறைத்து மதிப்பிடும் செயல் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். உன்மையில் கர்த்தருக்கு, இது போன்ற கலைப்போ, அதன் காரணமாக ஓய்வோ தேவைப்படாது என்று குர்ஆன் மட்டுமல்ல பைபிளிலும் ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது:

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. -ஏசாயா 40:28

இதை WBTC மொழிப்பெயர்ப்பு பின்வருமாறு கூறுகின்றது :

கர்த்தர் சோர்வடையமாட்டார். அவருக்கு ஓய்வு தேவையில்லை. கர்த்தர் தொலைதூர இடங்களை பூமியில் படைத்தார். கர்த்தர் என்றென்றும் ஜீவித்திருக்கின்றார். – ஏசாயா 40:28

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக கர்த்தரின் வல்லமை பறைசாற்றப்பட்டிருக்க, அவர் ஓய்வு எடுக்க மாட்டார் - அவர் எத்தகையை பெரிய காரியங்களை செய்தாலும் அதனால் அவருக்கு எந்த வித கலைப்பு ஏற்படாது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்க - எப்படி கர்த்தர் ஓய்வு எடுத்தார் என்றும் அதன் காரணமாகவே ஓய்வு நாள் யூதர்களுக்கு கடமையாக்கப்பட்டது என்றும் ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த கூற்று பைபிளுக்கே எதிரான கருத்தில்லையா? யூத எழுத்தாளர்கள் தங்கள் மணம்போன போக்கில் பைபிளின் மற்ற வசனங்ளே முரண்படும் வகையில் தங்கள் வேதத்தில் தங்களுக்கு சாதகமாக விளையாடிவிட்டார்கள் என்பது விளங்குகின்றதா இல்லையா? தங்களுக்கு சோதனையாக கொடுக்கப்பட்ட அந்த ஓய்வு நாள் சட்டத்தின் நோக்கத்தையே திரித்து - அதை மாற்றி, கர்த்தர் ஓய்திருந்தால் தான் தங்களுக்கு அந்த ஓய்வு நாள் சட்டம் கொடுக்கப்பட்டது என்று ஒரு தவறான கருத்துத் திணிப்பு வேலை பைபிளில் நடைபெற்றுள்ளது என்பது விளங்குகின்றதா இல்லையா?

எனவே கிறிஸ்தவர்களே நீங்கள் உன்மையை உணரவேண்டும். சத்தியத்தை அறியவேண்டும். இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை - பைபிளில் இட்டுக்கட்டி எழுதப்பட்ட செய்திகளை - பிரித்து, உன்மை எது பொய் எது என்று பிரித்தறிவிக்கும் முகமாகத்தான் சர்வ வல்லமைப் பொருந்திய கர்த்தராகிய அல்லாஹ் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனின் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்துகின்றான். அதைத்தான் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் கூறும் போது:

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் (முஹம்மதின்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் - 25 : 1)

எனவே சகோதரர்களே அசத்தியத்தை விட்டு வெளியே வாருங்கள்! சத்தியத்தை அறியுங்கள். ஏக இறைவனாகிய கர்த்தர் உங்களுக்கு நேர்வழி காட்டுவாராக.

தொடரும்!

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.

Wednesday, June 03, 2009

பைபிளின் எண்ணிக்கை முரண்பாடுகள்

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும்
.
.
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 3

முரண்பாடு 11:

இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிலிருந்து யூதாவுக்கும் திரும்பியதைப் பற்றி பைபிளில் இரண்டு ஆகாமங்களில் சொல்லப்படுகின்றது. இதில் பலரின் சந்ததிகளில் எத்தனை எத்தனைப்பேர் தங்கள் சொந்த பட்டினத்திற்கு சென்றார்கள் என்பதில் இந்த எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களின் பல வசனங்கள் ஒன்றுக்கொண்று முன்னுக்குப்பின் முரணாக சொல்கின்றது. அந்த முரண்பாடுகள் இதோ:

1) அவர்களில் ஆராகின் புத்திரர் எத்தனைப் பேர்?

ஆராகின் புத்திரர் அறுநூற்றுஐம்பத்திரண்டுபேர் - நெகேமியா 7:10

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக எஸ்றா 2 : 6ல் 'ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

ஆராகின் புத்திரர்கள் மொத்தம் எத்தனைபேர் தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள்?

2) இதேவரிசையில், பாகாத் மோவாபின் புத்திரர்களும் தங்கள் தேசமாகிய யூதா மற்றும் எருசலேமுக்குத் திரும்பினார்களாம். அவர்களின் தொகைiயும் இதே நெகேமியா என்ற புத்தகமும் எஸ்றா என்ற புத்தகமும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது:
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர். - எஸ்றா 2:6

ஆனால் இதற்கு மாற்றமாக நெகேமியா 7:11ல் பின்வருமாறு கூறப்படுகின்றது?

யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர்.

இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

3) இதே வரிசையில் சத்தூவின் புத்திரர்களையும் இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது.
சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர். - நெகேமியா 7:13

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்ரா 2:8ல் 'சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்' என்கிறது. இதில் எந்த புத்தகம் சரி?

4) இதே வரிசையில் பெபாயின் புத்திரர்களையும் பற்றி இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுவதைப் பாருங்கள்:

பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்தெட்டுப்பேர். - நெகேமியா 7:16

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்றா 2:11ல் 'பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்துமூன்றுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

5) இதே வரிகையில் அஸ்காத்தின் புத்திரர்கள் எத்தனை என்பது பற்றியும் இந்த இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது.
அஸ்காதின் புத்திரர்ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர். - எஸ்றா 2:12

ஆனால் இதற்கு நேர்முரணாக நெகேமியா 7:17ல் 'அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்' என்கிறது. இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

6) இதேபோல் இந்த எண்ணிக்கையின் முரண்பாடுகள் இந்த இரண்டு புத்தகங்களிலும் தொடர்ந்துக்கொண்டே போகின்றது:
ஆதொனிகாமின் புத்திரர்கள் எத்தனைப்பேர்?

அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர். - எஸ்றா 2:13

ஆனால் இதற்கு நேர் முரணாக நெகேமியா 7:18ல் 'அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்' என்றும் கூறுகின்றது.

7) பிக்டவாயின் புத்திரர்கள் எத்தனைபேர்?
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர் - நெகேமியா 7:19

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்ரா 2:14ல், 'பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

8) ஆதீனத்தின் புத்திரர்கள் எத்தனைபேர்?
ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர். - நெகேமியா 7:20

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்றா 2:15ல் 'ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்துநான்கு பேர்.' ஏன்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

9) பேசாயின் குமாரர்கள் எத்தனைப்பேர்?

பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். - ஏஸ்றா 2:17

இதற்கு நேர் முரணாக நெகேமியா 7:23ல் 'பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்' என்று கூறப்படுகின்றது. இதில் எது சரி?

10) பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் எத்தனைப்பேர்?

பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர். - நெகேமியா 7:32

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்றா 2:28ல் பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்' என்று கூறப்படுகின்றது.

11) அதுபோல் லோத், ஆதீத் ஓனோ என்பவர்களின் புத்திரர்கள் எத்தனைப்பேர்?

லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். ஏஸ்றா - 2:33

ஆனால் இதற்கு மாற்றமாக நெகேமியா 7:37ல் 'லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்' என்று சொல்லப்படுகின்றது.

12) அபோல் செனாகா புத்திர்கள் எண்ணிக்கையிலும் இரண்டு புத்தகங்களும் நேர்முரனாக கூறுகின்றது.
செனாகா புத்திரர் மூவாயிரத்துத்தொளாயிரத்து முப்பதுபேர். - நெகேமியா 7:38ம் அதற்கு மாற்றமாக எஸ்றா 2:35ல் சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர் என்று கூறுகின்றது.

இப்படி எஸ்றா என்ற புத்தகத்தின் 2ம் ஆகமமும் நெகேமியா என்ற புத்தகத்தின்; 7ம் ஆகாமமும் ஒரே சம்பவத்தில் இடம்பெற்ற எண்ணிக்கைகளை முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது. இந்த இரண்டு புத்தகங்களின் வசனங்களும் கர்த்தரின் பரிசுத்தஆவியின் உந்துதலால் தான் எழுதப்பட்டதென்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும்?


முரண்பாடு 12:

இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் இப்படி தங்கள் சொந்த ஊரான எருசலேமுக்கும், யூதாவுக்கும் திரும்பியவர்களின் கணக்கில் இந்த இரண்டு ஆகாமங்களிலும் இவ்வளவு குளறுபடிகள் இருக்க, எப்படி அனைவரின் மொத்த தொகையின் கூட்டல் தொகை ஒரே எண்ணிக்கையாக வரும்? ஆனால் அப்படி ஒரே தொகையாக வந்ததாக இந்த இரண்டு ஆகாமங்களும் அறிவிக்கின்றன.

சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். (பார்க்க எஸ்றா 2:64, மற்றும் நெகேமியா 7:66)

அதாவது ஒவ்வொரு பட்டியலிலும் இரண்டு ஆகாமங்களும் முன்னுக்குபின் முரணாக கூறியிருக்க, சபையாரின் மொத்த தொகையினர் என்று வரும் போது மட்டும் இரண்டு ஆகாமத்தின் தொகையும் 46360 பேர் என்று வந்துவிட்டதாம். இது எப்படி சாத்தியமாகும்? எழுதியவர்கள் சற்று கூட்டிப்பார்த்திருக்க வேண்டாமா? இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், நாம் இரண்டு ஆகாமத்தில் உள்ளதையும் கூட்டியவரை, முறையே எஸ்றா ஆகாமத்தில் 29818 பேரும், நெகேமியா ஆகாமத்தில் 31,089 பேருமே வருகின்றார்கள். ஆனால் இந்த இரண்டு ஆகாமங்களிள் வரும் மொத்த சபையாரின் கூட்டுத்தொகையோ 46360 என்று இரண்டு ஆகாமங்களிலும் சொல்லப்படுகின்றது. இந்த தெளிவான முரண்பாடுகளைக்கொண்ட வசனங்களையும் வேடிக்கைகள் நிறைந்த வசனங்களையும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாக ஏற்க முடியும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டாம?

முரண்பாடு 13:
இவர்களுடன் இருந்த மொத்த பாடகரும் பாடகிகளும் எத்தனைப்பேர்?
இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். - நெகேமியா 7:67

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்றா 2:65ல் 'இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.' என்று கூறுகின்றது. இதில் எது சரி?


முரண்பாடு 14:

பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொடுத்தான். அதன் விவரங்களை எஸ்ரா 1:1லிருந்து 10 வரை சொல்லப்படுகின்றது.

அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம். - எஸ்றா 1 :9-10

ஆனால் இதற்கு அடுத்தவசனத்திலேயே மேலே கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பொன் மற்றும் வெற்றிப் பணிமுட்டுகளெல்லாம் எல்லாம் சேர்த்து மொத்தம் 5400 என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க எஸ்றா 1:11) ஆனால் மேலே 9 மற்றும் 10ம் வசனங்களில் வரும் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் 2499 மட்டும்தான் வருகின்றது. ஆனால் 11ம் வசனத்தில் 5400 என்று வந்துள்ளது. இந்த கணக்கு எப்படி சரியாகும்? கணித அறிவுகூட இல்லாதவரா கர்த்தர்? அல்லது கர்த்தரின் பெயரால் இந்த கதைகள் இட்டுக்கட்டி எழுதப்பட்டுள்ளதா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!


இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்...


கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here

.
.

Friday, May 29, 2009

இறைவனையே இழிவுபடுத்தும் ஒரு இறைவேதம்?! (பாகம் - 1)

கிறிஸ்தவர்களால் புனிதமாக மதிக்கப்படும் பைபிள் மனித்தக்கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பது பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. குறிப்பாக அதில் இருக்கக்கூடிய முரண்பாடான, ஆபாசமான, நகைச்சுவையான, விஞ்ஞானத்திற்கு முரனான, வர்னாசிரமக் கொள்கைகளை வலியுறுத்தக்கூடிய, இறைத்தூதர்களை இழிவுபடுத்தக்கூடிய குறிப்பாக இயேசுவையே தரம் தாழ்த்தக்கூடிய, இப்படி எண்ணற்ற இறைவசனங்களாக இருக்க அறவே தகுதியற்ற வசனங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

குறிப்பாக மனிதர்களை நேர்வழிப்படுத்தும் முகமாக இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை சகட்டுமேனிக்கு அவர்கள் மீது அபான்டமான எந்த வித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவது ஒருபுறமிருக்க, ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக எந்த இறைவன் இந்த வேதத்தை அருளினான் என்று சொல்லப்படுகின்றதோ அதே இறைவேதத்தில் - அந்த இறைவனின் மகத்துவத்திற்கும் அவனது கண்ணியத்திற்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் - அந்த இறைவனையே இழிவுபடுத்தியும் வசனங்கள் எழுதப்படிருக்கின்தே என்று பார்க்கும்போது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. இப்படிப்பட்ட வசனங்களை எப்படி இறைவசனங்களாக இன்றைய கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்? அல்லது அவர்களுக்கு இப்படிப்பட்ட வசனங்கள் இருப்பது தெரியவில்லையா? அல்லது அவர்களுக்குத் தெரியாத அளவுக்கு மறைக்கப்படுகின்றதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் கண்ணிருந்தும் குருடர்களாயும் காதிருந்தும் செவிடர்களாயும் இருக்கின்றார்களா?

கர்த்தரையே இழிவுபடுத்தக்கூடிய வகையில் எப்படிப்பட்ட வசனங்கள் கிறிஸ்தவர்களின் புனிதவேதமான பைபிளில் இடம் பெற்றுள்ளது என்பதை இனி காண்போம்.

கர்த்தரின் குற்றவியல் சட்டங்கள் கேளிக்கூத்தானவையா?
தாவீது தீர்க்கதரிசி, உரியா என்ற போர்வீரனின் மனைவியுடன் கள்ள உறவின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது போர்வீரனான உரியாவையே நயவஞ்சகமாக கொண்றுவிட்டு, அவனின் மனைவியை பலவந்தமாக மணமுடித்துக்கொண்டதாகவும் பைபிளில் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியான தாவீதை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. இது உன்மையாக நடந்த சம்பவமா? அல்லது தாவீதின் பெயரால் அவருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் யூத எழுத்தாளர்களால் இட்டுக்கட்டி எழுதப்பட்ட பொய்யான கதையா? என்பதை பைபிள் ஆதாரங்களுடன் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
தாவீதின் இந்த அநாகரீகமான (?) செயலுக்கு கர்த்தர் ஒரு தண்டனை கொடுப்பதாக சொன்னாராம். அந்த தண்டனை என்ன? இதோ பைபிள் கூறுகின்றது:

'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12)

அதாவது தாவீது செய்ததாகச் சொல்லப்படும் அந்த ஈனச்செயலுக்கு (?) கர்த்தர் கொடுப்பதாக சொல்லப்பட்ட தண்டனை, அவருடைய பெண்மக்களை மற்றவர்கள் மூலம் அவர்களை கற்பழிக்க வைப்பாராம். அதுவும், தாவீதோ உரியாவின் மனைவியுடன் ரகசியமாகதான் விபச்சாரம் செய்தாராம். ஆனால் கர்த்தர் தாவீதுக்கு தண்டனையாக ஊரார் முன்பாக பட்டப்பகலிலே நடுரோட்டிலேயே வைத்து அவருடைய பெண்மக்களை அடுத்தவனை வைத்து கற்பழிக்கச் செய்வாராம். இந்த கற்பழிப்புச் சம்பவத்தை இஸ்ரவேலர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் செய்வாராம்.

இது உன்மையா? இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க அசிங்கமான ஒரு தண்டனையை கர்த்தர் கொடுப்பதாக சொல்லியிருப்பாரா? இப்படி பலருக்கு அடுத்தவனுடைய பெண்களை ஏற்படுத்திக் கொடுப்பது தான் கர்த்தரின் வேலையா? அப்படி பலர் பட்டப்பகலில் செய்யும் கற்பழிப்புக் காட்சிகளை இஸ்ரவேலர்களைப் பார்க்க வைப்பது தான் அவர் கற்றுத்தரும் நல்லொழுக்கமா? ஒருவனுடைய விபச்சாரத்திற்கான தண்டனையாக பல விபச்சாரகர்களை உருவாக்குவது தான் கார்த்தரின் நீதியா?

இப்படிப்பட்ட கேலிக்கூத்தான - அருவருக்கத்தக்க - ஒரு சட்டத்தை கடவுள் சொல்லியிருப்பாரா? என்றால் கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார் - சொல்லியிருக்கவும் முடியாது. மாறாக, கர்த்தரின் பெயரால் கர்த்தரின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகளால் இது போன்ற வசனங்கள் பைபிளில் தினிக்கப்பட்டிருக்கும் - திணிக்கப்பட்டிருக்க வேண்டும். இதை நாம் சுயமாக ஒன்றும் சொல்லவில்லை பைபிளின் மற்ற வசனங்களை ஒப்பிட்டுத்தான் இதை கூறுகின்றோம்.

காரணம், மோசேயின் காலம் தொட்டு, தாவீதின் காலத்திலும், இன்னும் இயேசுவின் கலத்திலும் கூட 'ஒருவன் அன்னியப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் அவன் கல்லால் அடித்துக்கொள்ளப்படி வேண்டும் (பார்க்க லேவியராகமம் 20:10) என்ற சட்டமே நடைமுறையில் இருந்தது என்று பைபிள் கூறுகின்றது.

அப்படிப்பட்ட சட்டம் - நீதி பரிபாலன் மிக்க கர்த்தரால் வழங்கப்பட்ட சட்டம் - நடைமுறையில் இருக்க, எப்படி தாவீது மட்டும் அந்த சட்டத்திலிருந்து தப்பிக்கும் வகையில் அவருடைய செலுக்காக கொடுக்கப்படவேண்டிய தண்டனையான, மரணத்தண்டனைக்கு மாற்றமாக வேறு ஒரு சட்டத்தை சொல்லியிருப்பார்? அதுவும் குறிப்பாக அவர் செய்த அந்த அநாகரீக செயலுக்குரிய தண்டணையை அவரை அனுபவிக்கவிடாமல், அவருடைய பெண்மக்களை அடுத்தவனுக்கு ஏற்படுத்திகொடுக்கும் இந்த அசிங்கமான தண்டனையை கொடுப்பதாக எப்படி கூறியிருப்பார்?

சாதாரண அப்பாவி ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனையும், அதே ஒரு அரசன் செய்தால் அவனுக்கு அதிலிருந்து விதிவிலக்கும் என்கிற அளவுக்கு பாரபட்சம் காட்டுபவரா கர்த்தர்? இப்படித்தான் கர்த்தரின் நியாங்கள் இருக்குமா? என்றால் கண்டிப்பாக இருக்காது என்றே பைபிள் சொல்கின்றது. ஏனெனில் உன்மையிலேயே தாவீது விபச்சாரம் செய்திருந்தால் அவருக்கு அன்றை காலத்தில் இருந்த மரணதண்டனைத்தான் கிடைத்திருக்க வேண்டும். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. கர்த்தரும் அதிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கமாட்டார், ஏனெனில் அவர் நீதியுள்ளவர் என்று பைபிள் கூறுகின்றது:

அவர் கன்மலை அவர் கிரியை உத்தமமானது அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன் அவர் நீதியும் செம்மையுமானவர். - உபாகமம் 32:4

மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? - யோபு 4:17

தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? - யோபு 8:3

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கைகளெல்லாம் சத்தியமுமாயிருக்கின்றது - (சங்கீதம் 33:4)

இப்படி பைபிளில் கர்த்தருடைய சட்டங்களைப்பற்றியும் அவரது நீதியின் செம்மையைப் பற்றியும் தெளிவாக சொல்லியிருக்க, எப்படி தாவீதுக்கு மட்டும் அதிலிருந்து விதிவிலக்கு அளித்து, அவருக்கு பதிலாக அவரது பெண்மக்களை - ஒரு அசிங்கமான சட்டத்தின் மூலம் - தண்டிப்பதாக சொல்லியிருப்பார்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

விபச்சாரம் என்பது மிகவும் இழிவான செயல் என்று பைபிளின் பல இடங்களில் சொல்லப்படுகின்றது. அப்படி எவரேனும் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் பைபிள் வலியுறுத்துகின்றது. அந்த சட்டம் மோசேயின் காலத்திலிருந்து, தாவீதின் காலம் தொட்டு இயேசுவின் காலத்திலும் நடைமுறையில் இருக்க, அப்படிப்பட்ட இழிவான கேவலமான விபச்சாரத்தை கர்த்தரே மற்றவர்கள் செய்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தார் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதே விபச்சாரத்தை பற்றி பைபிள் கூறுவதை பாருங்கள்:

தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது அவர்கள் ஓட்டம் பொல்லாதது. அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. - எரேமியா 23:10

விபச்சாரம் செய்பவன் கல்லால் அடித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுவதைப்ப பாருங்கள்:

ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள். - லேவியராகமம் 20:10, உபாகமம் 22:22

இப்படி விபச்சாரத்தை பொல்லாதது - கொடியது என்று சொன்ன கர்த்தர் - ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று சட்டம் போட்ட - கர்த்தரா ஒரு விபச்சாரத்திற்கான தண்டனையாக பலரை விபச்சாரத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு சட்டததை சொல்லியிருப்பார்?

அதுமட்டுமல்ல, இந்த வசனம் கர்த்தரின் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சில யூத எழுத்தாளர்களால் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்பதை பைபிளின் இன்னும் சில வசனங்களும் தெளிவு படுத்துகின்றது. அதாவது, ஒருவன் பாவம் செய்தால் அதற்கான தண்டனையை அவன் தான் அனுபவிக்க வேண்டுமே யொழிய அவனது மகனோ அல்லது அவனைச்சார்ந்தவர்களோ அனுபவிக்க கூடாது என்றும் கர்த்தர் கூறியதாக பைபிளில் கூறப்படுகின்றது.

பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான் எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். - எரேமியா 31:29-30

இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். - எசேக்கியேல் 18:19-20

இப்படி தெளிவாக எவன் குற்றம் செய்தானோ அவன் தான் அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டுமே தவிர அதற்கு பகரமாக வேறு எவறும் அவனது பாவத்திற்காக தண்டனையை அனுபவிக்க முடியாது என்று பைபிளில் சொல்லியிருக்க, கர்த்தர் எப்படி தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்காக அவனது பெண்மக்களை அடுத்தவனுக்கு ஏற்படுத்திகொடுப்பதாக கூறியிருப்பார். எனவே மேலே எடுத்துக்காட்டப்பட்ட 2 சாமுவேல் 12: 11 - 12 ம் வசனங்கள் கண்டிப்பாக யூத எழுத்தாளர்களால் கர்த்தருக்கு கலங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் - தாவீதை இழிவு படுத்தும் தீய எண்ணத்துடன் - பைபிளில் தினிக்கப்பட்ட வசனங்களே என்பதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதித் திருமறையாம் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது, - அல்குர்ஆன் 29 : 68

சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவர்களே!




கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here

இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here

இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.
.