அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Tuesday, March 11, 2008

உடை கழற்றும் ஆண் வக்கிரம்

உடை கழற்றும் ஆண் வக்கிரம்
......................................................................... - ஜி.என்

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை அவ்வப்போது பலர் அக்கறையோடு வெளிபடுத்தி வருகின்றனர்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர்கள் எழுதும் கட்டுரையை அவர்களே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக' பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.

அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும்இ ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

'பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்'?.
அவர் பதிலளித்தார். 'நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்'

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும்இ ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்.'எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்.'

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

IAS தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து ஐயுளு அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.
2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும்.

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரிந்த - இன்றைக்கும் அதே நிலையில் உலவும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடை உடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் பல மேதலாவிகள்? அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை'அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.
.

Monday, March 10, 2008

இராமர் பாலமும்... இந்துத்வாவினரும்...

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பெயரால் ஹிந்துத்வாவினர் பரப்பிய பச்பைப் பொய்:

- சின்னக்குத்தூசி

'சேது சமுத்திரத் திட்டமும் இராமர் பாலமும்' எனும் ஆய்வு நூலில், திராவிட கழகத்தலைவவர் கி. வீரமணி,

இராமர் பாலம் என்பது எவ்வளவு பெரிய புரட்டு என்பதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறார். அவரது நூலின் முக்கியப் பகுதிகளில் இது ஒரு பகுதி: -

'இது இராமன் கட்டிய பாலம் என்றும், 17 இலட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராமன் கட்டினான்' என்றும் கதைக்கிறார்கள்.

17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தானா என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் அளிக்காமல் 'நம்பிக்கை' என்று சொல்லி சொதப்புகிறார்கள்.

நம்பிக்கை என்பதையெல்லாம் நம்பி கைகட்டிக் கொண்டு வெறுமனே இருக்க முடியுமா? பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் என்கிற புராணங்களையெல்லாம் கூட நம்ப முடியுமா?

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கக்கூடியது வெறும் மனல் திட்டுக்களே - அவற்றின் மீது பாசிப்படிமங்கள் தோன்றி பாலம் போண்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். இதனை வெகு காலமகாக ஆதாம் பாலம் என்றே வழங்கி வருகின்றனர். ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்ட நெடிய தூரத்திற்கு இத்தகைய பாலங்கள் இருக்கின்றன. இவற்றையெலல்லாம் கட்டியவர்கள் இராமன் போன்ற இன்னொரு அவதாரமா? என்று பேராசிரியர் தமயந்தி ராஜதுரை எழுப்பிய வினாவுக்கு விடை என்ன?

17.3.2007 நாளிட்ட இந்து ஏட்டில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் ஆய்வுத்துறைத் தலைவர் என் ராமானுஜம் அவர்கள் 'இது மனிதன் உருவாகிய அமைப்பு அல்ல' இது புவியியல் நிகழ்வால் ஏற்பட்டதே' என்று எழுதியுள்ளார்.

பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர். ஏன். சர்மா (ராம் சரண் சர்மா) கூறியுள்ளார்:

'இராமாயண கால பாலம் கட்டியதற்கு அகழ்வாராய்ச்சி சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் பழையது என்று வைத்துக்கொண்டாலும் அந்தக் காலத்தில் மனிதர்களேயில்லை. கிடைத்துள்ள சான்றுகளின்படி இராமாயணம் எழுதப்பட்ட மிகப்பழங்காலம் கி.மு. 400 ஆகும்' என்று குறிப்பிட்டுள்ளாரே - என்று சுட்டிக்காட்டியுள்ளார் வீரமணி.

'இராமர் பாலம் இருக்கிறது என்று அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்வெளியிலிருந்து பாலத்தைப் புகைப்படம் எடுததே வெளியிட்டிருக்கிறதே' என்று பா.ஜ.கவினர் ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டார்கள்.

'இன்டோ லிங்க் காம் - வைஷ்ணவ நிறுவன நெட்வொர்க்' என்கிற இணையத்தளம் வெளியிட்ட செய்தியை இதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

'உன்மைகள் உறங்கும் நேரத்தில் - பொய்கள் உலகையே ஒரு முறை சுற்றி வலம் வந்துவிடும்' என்று குறிப்பிடுவதுன்டு. அது போலத்தான் இந்த இணையதளம் வெளியிட்ட செய்தியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு 'இராமர்தான் பாலம் கட்டினார் என்பதற்கு இதுவே ஆதாரம், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவே கூறிவிட்டது' என்று பாஜகவினர் வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்தார்கள்.

கெட்டிக்காரன் புளுகே எட்டுநாளில் குட்டு உடைக்கப்பட்டு - அம்பலமாகிவிடும் என்றால் எத்துவாளிகள் புளுகுகள் எத்தனை நாளைக்கு நீடித்திருக்கமுடியும்?

பாஜகவினர் பரப்பிவிடும் இந்தத் தகவல் உண்மையா? என்று பலரும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினரிடமே கேட்டார்கள்.

நாசா விண்வெளி மையத்தின் அதிகாரியான மைக்கேல் பிரவ்கசு அளித்த விளக்கத்தின் மூலம் பாஜகவினர் பரப்பிய இந்தப் பொய் தகர்க்கப்பட்டு பொடிப்பொடியானது.

'விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி பார்த்தால், இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதைப்போல மனிதர்களால் கட்டப்பட்ட எந்தவொரு பாலமும் அந்த இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது' என்று திட்டவட்டமாக அறிவித்த அவர்...

'ஒரு பொருளில் இருந்து அதன் துகள்களைச் சேகரித்து கார்பன் ஆய்வு நடத்தினால் அது எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு 17 லட்சம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த எந்த ஒரு கட்டுமான அமைப்பும் அந்த இடத்தில் இருந்ததாக மெய்ப்பிக்கும் வகையிலான எந்தவித கார்பன் ஆய்வு முடிவுகளும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இது பற்றி மேலும் கூறிய அவர் :

'எங்கள் அறிவியல் வல்லுநர்கள் எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிலர் நாசா வெளியிட்ட படங்கள், இராமர் கட்டிய பாலம் என்பதையே நிரூபிப்பதாக் கூறி வருகிறார்கள்.

கடலுக்கடியில் இருக்கும் பொருளின் வயது, அதன் தன்மை போன்ற விவரங்களை, வெறும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கணக்கிட முடியாது. எனவே அவர்கள் கூறுவதில் எந்த அடிப்படையும் கிடையாது' என்பது நாசா அதிகாரி மைக்கேல் பிரவ்கசுவின் விளக்கம்.

அதே அமைப்பைச்சேர்ந்த இன்னொரு அதிகாரியான மார்க்ஹெஸ், 'விண்வெளிச் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், பூமிக்கு மேலே சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்படும் படங்கள் ஆகியவை மூலம் தீவுகள் மற்றும் பிற பொருட்களின் வயது, தன்மை ஆகியவற்றைக் கணக்கிட முடியாது.

அப்படியே ஒரு கட்டுமானம் போன்ற அமைப்பு அதில் தோன்றினாலும் அதை மனிதர்கள்தான் உருவாக்கினார்களா என்பதை அந்தப் படத்தின் மூலம் உறுதி செய்ய முடியாது.

இந்தப் பாலம் என்று கூறப்படுவது 30 கி.மீ. நீளம் உள்ளதாக இருக்கிறது.
இது சாதாரணமாகத் தோன்றும் மணல் திட்டுகள்தான். இதைத்தான் ஆதாம் பாலம் என்று சொல்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக - குறிப்பிட்ட அந்த இணைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற புகைப்படங்கள் நாங்கள் வெளியிட்டதாக இருக்கலாம்.

ஆனால் அந்த புகைப்படங்களுக்கு (இது தான் ராமர் பாலம் - நாசாவே புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறது என்று) சிலர் கூறும் விளக்கம் - அவர்களது சொந்த விளக்கமே தவிர நிச்சயமாக நாங்கள் (நாசா) தந்த விளக்கமல்ல' என்று சந்தேகங்களுகே இடமற்ற வகையில் பளிச்சென்று பதிலளித்துவிட்டார் நாசாவின் அதிகாரி மார்க் ஹெஸ்.

நாசா விண்வெளி அதிகாரிகள் இருவர் அளித்த மறுப்பினால் - 'ராமர் கட்டிய பாலம்தான் - நாசாவே புகைப்பட ஆதாரத்தோடு உறுதி செய்திருக்கிறது' என்று ஓர் இணையத்தளச் செய்தி மூலம் பாஜகவினர் பரப்பி வந்த பொய் தகர்க்கப்பட்டு தரைமட்டமாகிவிட்டது.

ராமர் பாலம் கட்டினார் என்ற புளுகை மறுத் தந்தை பெரியார் அவர்கள்,
- கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடற்பெருவெள்ளம் நிகழ்ந்தது.
அந்த வெள்ளம் நிகழ்வதற்கு முன்புவரை இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது. வெள்ளம் காரணமாகவே - தமிழ்நாட்டிலிருந்து இலங்கை பிரிவுபட்டது.
- என்று தமது 'இராமாயணக் குறிப்புகள்' என்ற நூலில் நினைவுபடுத்தியிருக்கிறார்.

அது வருமாறு: இது வரை இவ்வுலகில் ஏற்பட்ட கடற்பெரு வெள்ளங்களின் காலங்கள் காட் எலியட் என்பவர் குறித்துள்ளபடி பார்க்கையில் பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு (10,00,000 ஆண்டுகளுக்கு) முன்னர் நேர்ந்துள்ள கடற்பெருவெள்ளமே முதன்மையானதென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் (8,00,000) ஆண்டுகளுக்கு முன் நேர்ந்திருக்கக்கூடும் என்றும், மூன்றாவது வெள்ளம் இருநூறாயிரம் (2,00,000) ஆண்டுகளுக்கு முன்னரும், நாலாவது வெள்ளம் எண்பதினாயிரம் (80,000) ஆண்டுகளுக்கு முன்னரும், அய்ந்தாவது வெள்ளம் ஒன்பதாயிரத்து ஐநூறு (9,500) ஆண்டுகளுக்குச் சிறிது முன்னும் பின்னுமிருக்கலாம் மென்றும் அறியக்கிடக்கின்றன.

இப்பெரு வெள்ளங்களில் காரணமாகப் பல நிலப்பரப்புகள் நீர்ப் பரப்பாயும், நீர்ப்பரப்புகள் நிலப்பரப்பாயும் மாறினவென்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. குமரிமுனைக்குத் தெற்கிலிருந்து பல நாடுகள் நீரினுள் மறைந்தனவென்றும் அறியக்கிடக்கின்றன.

இவை எக்கேல், அக்கிசிலி, டொயினார்டு, பேர்கவன், கவான்சு முதலியோர் தென்னாட்டின் தொன்மையைப் பற்றிக்கூறும் கருத்துகளாலும், நில நூல், தொல்லுயிர் நூல் முதலியவற்றின் சான்றுகளாலும், தென்னாட்டிற்கும், மேலை ஆசியாவிற்கும் கப்பல் வாணிபம் மிகப்பழைய காலத்தே நடந்ததாகத் தெரிவதாலும், தமிழரின் ஒரு பகுதியாரே தென்னாட்டிலிருந்து அக்கோடியா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும் கொள்ளுதலே பொருத்தமுடைத்து. ஆரியர் வட மேற்கு வழியாக இந்தியாவிற்குள் புகுங்காலத்து பெலூசிஸ்தான் முதலிய இடங்களிலும் வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்பது அறிஞர் ராப்பன் என்பவர் கருத்தும் ஆகும்.

சுமார் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தின் பின்னேயே இலங்கையானது தம்ழிநாட்டினின்றும் பிரிவுபட்டதென்பர்.
- என்று குறிப்பிட்டிருக்கிறார் தந்தை பெரியார்.

இதன்படி கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கை - தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பது தெளிவாகிறது.

பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே ராமர் பாலம் கட்டினார் என்பது எவ்வளவு பெரிய பொய். ஓன்றாக இருந்த நிலப்பரப்பில் பாலம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?


இலங்கை செல்ல கடலில் பாலம் கட்டிய (?) இராமர் - அயோத்திக்கு புஷ்பக விமானம் ஏறி - வான்வழியே சென்றார் எனும் கற்பனை !

... அப்படித்தான் சேதுவில் இராமர் பாலம் கட்டினார். குரங்குகள் அந்தப் பாலத்தைக் கடலில் கட்டின என்று வால்மீகி இராமாயணத்திலேயே ஒரு கற்பனை கட்டவிழித்து விடப்பட்டிருக்கிறது.

அதே இராமாயணத்தில் 'யாருடைய துணையும் உதவியுமின்றி எனது அம்புகள் மூலமே – சமுத்திரத்தை ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் வற்றச் செய்து, சமதரையாக்கி எனது வானர சேனையுடன் இலங்கை செல்வேன் - என்று இராமர் கர்ஜிக்கிறார். தன்னாலே பாலம் எதுவும் கட்டாமலே அக்கரை சென்றடைய முடியும் என்பதை நிரூபிக்க சில பாணங்களை அவர் சமுத்திரத்தில் எய்ய - அந்த அம்புகளின் சக்தியால் - சமுத்திரமே வறண்டுவிடுமோ என்ற நிலை உருவாகிட - சமுத்திர ராஜன் கடலுக்கு அடியிலிருந்து எழுந்து வந்து 'பிரபே! என்னை மன்னியுங்கள்; கடலில் பாலம் கட்ட நான் உதவி செய்கிறேன். விசுவகர்மாவின் மகன் எனக் கூறப்படும் நளனை உங்களுக்குப் பாலம கட்ட உதவியாகத் தருகிறேன்' என்று செஞ்சுகிறார்.

அதன் பின் வானரங்கள் பிரம்மாண்டமான மரங்களையும் மலைகளையும் குன்றுகளையும் அடியோடு பெயர்த்துக்கொண்ட வந்து கடலில் போட - கடலில் ஒரு பாலம் உருவானது என்கிறார் வால்மீகி.... (தான் எய்யும் அம்பின் மூலம் கடலையே வற்றவைக்கும் அளவுக்கு சக்தி படைத்த இராமனுக்கு - சில கிலோமீட்டர் தூரமுள்ள இலங்கைக்கு தன் சக்தியால் நடந்தே சென்றிருக்கலாமே? மகா சக்தி பொருந்திய கடவுளுக்கு பாலம் எதற்கு? பதில் சொல்ல இயலுமா?)

... யுத்த காண்டத்தின் இறுதியில் - இராமர் - சீதை - லட்சுமனர் - வீபீஷணன் - அனுமன் மற்றும் வானரங்கள் எல்லாம் இலங்கையிலிருந்து அயோத்திக்கு எப்படிப் பயணம்செய்கிறார்கள்?

வால்மீகி கூறுகிறார் : புஷ்பக விமானத்தில் எல்லோரும் ஏறிக்கொண்டு - வானவீதி வழியாக அயோத்திக்குப் புறப்பட்டார்கள் - என்கிறார்.

யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பும்போது அனைவரையும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்ற இராமருக்கு - வானர சேனையுடன் இலங்கை செல்ல மட்டும் பாலம் தேவைப்பட்டது ஏன்? அத்வானிகளால் பதிலளிக்க முடியுமா? முடியாது. முடியவே முடியாது.

(தோழர் சின்னக்குத்தூசி எழுதிய 'ராமர் பாலம் இருந்ததா? ராமாயணம் நடந்ததா?' என்ற புத்தகதிலிருந்து சில...)
.
.


Wednesday, February 27, 2008

அண்டை வீட்டாரின் உரிமைகள்!

'இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ' என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்?' என்று வினவப்பட்டது.

'எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!' என்று பதிலளித்தார்கள் அண்ணலார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

நான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்: 'தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை'

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டார் அன்பளிப்பாக ஒரு பொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால், அதனை அவர் அற்பமானதாகக் கருதக் கூடாது, அது ஒரு ஆட்டின் குளம்பானாலும் சரியே!'


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்

விளக்கம் : தன் அண்டை வீட்டாருக்குச் சிறு பொருள்களை அன்பளிப்பாக வழங்கக்கூடாது, அன்பளிப்பாய் மதிப்பு வாய்ந்த பெரிய பொருட்களையே அனுப்ப வேண்டுமென்பது பெண்களின் பொதுவான மனப்பான்மையாகும். இதன் காரணமாகத்தான் அண்ணலார் அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு பிரத்யேகமாக கட்டளையிட்டுள்ளார்கள். சிறு சிறு பொருள்களையும் அண்டை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவ்வாறே பிறரிடமிருந்து வரும் அன்பளிப்பு சிறியதாக இருந்தாலும் அதை அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை அற்பமானதாய்க் கருதக்கூடாது, அதைக் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது.

நான் அண்ணலாம் பெருமானார் கூறக்கேட்டேன்:

'எனக்கும் இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் எவருக்கும் நான் அன்பளிப்பு அனுப்புவது?' அண்ணலார் பதிலளித்தார்கள். 'எவருடைய வாசல் உன் வாசலுக்கு மிக அருகில் உள்ளதோ அந்த அண்டைவீட்டுக்காரருக்கு!'

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி

விளக்கம் :அக்கம் பக்கத்திலுள்ள நாற்பது வீடுகள் வரை அண்டை வீடுகள் என்று கருதப்படும். அவர்களில் எவருடைய வீடு மிக அருகில் உள்ளதோ அவரே நம்மீது மற்ற அனைவரையும்விட அதிக உரிமையுள்ளவர் ஆவார்.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

'எந்த மனிதர் அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் பேசும்போது உண்மை பேசட்டும், அவரிடம் அமானிதமாக (அடைக்கலமாக) ஒரு பொருள் தரப்பட்டால், அந்த பொருள் அவர் தன் உரிமையாளரிடம் பாதுகாப்பாகத் திருப்பித் தந்து விடட்டும், தன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்! '

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீகுராத் (ரலி), நூல் : மிஷ்காத்

ஒரு மனிதர் அண்ணலாரிடம் கூறினார்: 'இன்ன பெண் மிக அதிகமாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், நஃபில் (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், ஸதகா (தர்மம்) கொடுக்கின்றாள், இந்த விஷயங்களில் அவள் பிரபலமாக விளங்குகின்றாள். ஆனால், தன் அண்டைவீட்டாருக்குத் தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்.

'இதைக் கேட்ட அண்ணலார் (ஸல்) அவர்கள் 'அவள் நரகம் புகுவாள்' என்று கூறினார்கள்.

அந்த மனிதர் மீண்டும கூறினார் : 'அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் குறைவாக நஃபில் (உபரியான ) நோன்புகள் நோற்கின்றாள், மிகக் குறைவாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், பாலாடைக் கட்டியின் சில துண்டுகளை தானம் செய்கின்றாள், ஆனால், தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.'

இதற்கு அண்ணலார், 'இவள் சுவனம் புகுவாள்' என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), மிஷ்காத்

விளக்கம் : முதல் பெண் மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டாள் என்பதற்காக நரகம் புகுவாள். அண்டை வீட்டார் துன்புறுத்தப்படக்கூடாது. இது அவர்களின் உரிமையாகும். அவள் இந்த உரிமையை நிறைவேற்றவில்லை. உலகில் தன் அண்டை வீட்டாரிடம் அவள் மன்னிப்பும் கேட்கவில்லை, ஆகவே, அவள் நரகத்திற்குச் செல்ல வேண்டியதாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'இறுதித் தீர்ப்புநாளில் அனைத்துக்கும் முதலாக (விசாரணைக்கு) வரும் இரு மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு இரு அண்டை வீட்டார் பற்றியதாகும்.'

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி), மிஷ்காத்

விளக்கம் : மறுமைநாளில் மக்களின் உரிமைகள் தொடர்பாக அனைத்துக்கும் முதலாக இறைவனின் முன் இரு மனிதர்கள் வருவார்கள். உலகில் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு அண்டை வீட்டாராய் இருந்திருப்பார்கள், ஒருவர், மற்றவருக்குத் தொல்லை கொடுத்து அநீதியிழைத்திருப்பார். இந்த இருவரின் வழக்கு அனைத்துக்கும் முதலாக விசாரணைக்குவரும்.

அன்புள்ளம் கொண்ட அருமை சகோதரர்களே! அண்டை வீட்டினருக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரலாகாது என இந்நபிமொழிகள் வலியுறுத்துகின்றது. பக்கத்து வீட்டுக்காரர் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் இறைநம்பிக்கையாளர் அல்ல என்பதும் நபிமொழி! அவர்களுக்கு தீங்கு செய்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அக்கம் பக்கத்தவரின் நலன் பேணாது வாழ்பவர் சுயநலவாதி ஆவார். ஒருவர் இறந்து ஒருவாரகாலமாய்யும் அக்கம்பக்கத்தவருக்கு தெரியாததால் துர்நாற்றம் எடுத்த பின்னர் வீட்டுக்கதவை உடைத்து எடுத்தார்கள் என்கின்ற மேலை நாட்டு நடப்புகளை தின இதழ்களில் பார்க்கின்றோம். மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் சுயநலப்போக்குடனும், சுகபோக வாழ்வையும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதாலேயே இந்த இழிநிலை! இது போண்ற அவல நிலை நீங்க நபிமொழியைப் பின்பற்றி நடப்போமா?
.
.
.

Monday, February 25, 2008

தாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா?

பைபளின்படி - தனது தாய் மரியாளை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோர்களையும் அவமதித்த இயேசு :
- அபுஇப்ராஹீம், சென்னை

(கிறிஸ்தவம் பற்றிய உன்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றியும்; தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சில வக்கிர புத்தி கொண்ட கிறிஸ்தவர்களின் பொய்ப் பிரச்சாரதின் உன்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தாலும், நாம் பைபிள் பற்றியும், இயேசுவின் உன்மைநிலைப் பற்றியும், இன்னும் சொல்லப்போனால் உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் - இஸ்லாத்தையே தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணகாரியங்களையும் மிக ஆறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும், வரலாற்றுத் தகவல்களுடனும் விளக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அதை தொடராக வரிசைபடுத்தி எழுத இருந்த நேரத்தில் சகோதரார் உன்மையடியான் என்பவர் 'இஸ்லாம் கல்விக்கு பதில் : இயேசு தாயை (மரியாளை) அவமதித்தாரா?' என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வியில் வெளிவந்த சகோதரர் எம்;. எம். அக்பர் அவர்கள் எழுதிய கட்டுரையான 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு (பகுதி - 2)' க்கு மறுப்பு எழுதியிருந்தார். இதற்கு மறுப்பளிக்கும் விதமாகவும், 'பைபளின் படி இயேசு தனது தாயை (மரியாளை) மட்டுமல்ல - அடுத்தவர்களின் பெற்றோர்களையும் மதிக்காதவர்' என்பதை விளக்கும் முகமாகவும் இந்தக்கட்டுரையை வெளியிடுகிறோம். )

இறைவனுடைய வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்லாமல், அவர்களை துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள் செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான் யூதர்கள். அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக கூட்டியும், குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்' என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர் யூதர்களும், கறிஸ்தவர்களும்.

இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களும்.

இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின் குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும் அவர் யூதர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான் உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள். (இது சம்பந்தமாக விரைவில் பல ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)

இவர்களின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள் தங்கள் வேதங்களில் செய்த தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி, சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான் திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.

இதையே அல்லாஹ் தன் திருமறையில் :

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25 : 1)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் - 3:138)


தன் தாயை (மரியாளை) மதிக்காத இயேசு :

இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் 'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது :

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்டபெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (குர்ஆன் - 19:32)

குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு நற்குணங்களை பறைசாட்டுகிறது.

1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்

இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின் வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள் அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு குணங்களும் அறவே இல்லாதவர் என்றே நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார் எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர் யூதர்களுக்கு ஆதராவாக எகிரி குதிக்கின்றார். இயேசு நாதர் தன் தாயை மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது பாடு படுகிறார். இயேசு நாதர் அவர் தாயை அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம் வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால் கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர் தாயையும் பற்றி பைபிளில் வரும் பல வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன் தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை பார்க்கும் நேரமெல்லாம் உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான தன் தாயை 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்று ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது. அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்' என்று கூறியதாக பைபிளில் கிடையாது.

பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும் வசனங்களில் :

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார். அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய் எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும் நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா? இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில் அளிப்பது தான் மரியாதையா?

அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன சாதாரண தியாகமா? புரோகிதமும், மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம் அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம் (அலை) அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று புகழ்ந்துரைத்தார்கள் (நூல் : புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை -தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு இப்படித்தான மதித்திருப்பாரோ?

அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

இந்த வசனத்திலும் இயேசுவிடம் அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்' என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன? 'ஸ்த்ரியே' அதாவது பெண்னே - 'உனக்கும் எனக்கும் என்ன?' என்கிறார் என்றால் இதில் எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர் உன்மையடியான் 'ஸ்தியே' என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக - முகத்தில் அறைந்தார்போல் 'உனக்கும் எனக்கும் என்ன' என்று பதில் அளித்துள்ளாரே, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில் அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம் என்ன?

//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.//
//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20) //

உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே வரவேண்டிய அந்த 'உனக்கும் எனக்கும் என்ன?' என்று இயேசு திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர் செய்துள்ளார்?

இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன' என்று கூறி தன் தாயை ஊர் மக்கள் கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக - இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள் எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர் என்பதற்கான அடையாளமா? இப்படித்தான் ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும் முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க வேண்டும் (?) என்று இயேசு கற்றுத்தருகிறாரா?

அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி' என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார். ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையை பலருக்கும் பயன்படுத்தியது போல் 'விபச்சாரி' ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும் இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.

இப்படி தன் தாயை எந்தவிதத்திலும் மதிக்காதவராகவே பைபிளில் இயேசு காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள் இப்படித்தான் அவரைக் காட்ட முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே மதிக்கதவராகவும், கோபக்காரராகவும், பெருமைக்காரராகவும் தான் யூதர்களால் எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி காட்டப்படுகிறது.

அடுத்தவன் பெற்றோர்களையும் மதிக்காதவரா இயேசு?

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு பின்வருமாறு சொல்கிறார் :

'இந்தப் பொல்லாத 'விபசார சந்ததியார்' அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4

இங்கே யூதர்களைச் சேர்ந்த பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளத்தை காட்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு இயேசு அந்த யூதர்களின் மேல் எரிச்சலடைந்து யூதர்களைத் திட்டாமல் யூதர்களின் தாய்மார்களைத் திட்டுகிறார். அதில் வரக்கூடிய வாசகம் 'விபச்சார சந்ததியர்' இதை நம்ம தமிழ் பைபிள் மொழிப்பெயர்பாளர்கள் கொஞ்சம் 'டீசன்டாக' மொழிபெயர்த்துள்ளனர், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக.

ஆனால் இயேசு திட்டியதாக சொல்லப்படும் அந்த வார்த்தையின் நேரடி மொழிப்பெயர்ப்பு என்ன?

பொல்லாத விபச்சார சந்ததியினர் = கெட்ட வேசிமக்கள் = கெட்ட வேசிபிள்ளைகள் = கெட்ட வேசி சந்ததியினர் = கெட்ட தேவ்டியா மக்கள் = கெட்ட தேவ்டியா பிள்ளைகள்

அதவாது 'இந்த கெட்ட வேசிமக்கள் - தேவ்டியாமக்கள்' அடையாளத்தை தேடுகிறார்கள் ...'

இப்படிப்பட்ட கேவலமான - இன்றைய ரௌடிகளும், பொருக்கிகளும் உபயோகப்படுத்தும் வாத்தைகளைத் தான் பரிசுத்த இயேசு பயன்படுத்தினார் என்று சொல்கிறது பைபிள்.

இப்படித் திட்டுவது தான் பெற்றோர்களையும் - தாய்மார்களையும் - அடுத்தவன் குடும்பத்தினரையும் மதிக்கும் லட்சனமா? அடுத்தவன் தாயை இப்படி விபச்சாரி என்றுத் திட்டலாமா? தன்னிடம் வம்புக்கு வரும் ஒருவனைப்பார்த்து 'நாயே' 'பேயே' என்றால் அவனை மட்டும் திட்டுவதாக அமையும். அதற்கு பதிலாக அவனது தாயை திட்டுவது எந்த வித்தில் நியாயம்? அவன் தாய் என்ன செய்தார்? இப்படித்திட்டினால் எவனுக்கு கோபம் வராது?

சமீபத்தில் இந்த உன்மைஅடியான் மற்றும் அவரது சகாக்கள் வேண்டுமென்றே பெருமானாரை இழிவு படுத்தும் விதமாக எழுதியதற்கு பதிலாக எமது இஸ்லாமிய சகோதரர்கள் http://www.iiponline.org/ (பாகம் 1, பாகம் 2), மூலம் 'இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் நேரடியாக பொது மேடையில் பதில் தருகின்றோம். எங்களிடம் நேரடி விவாதத்திற்கு தயாரா?' என்று சவால்விட்டிருந்தனர். அதற்கு பயந்த இந்த பயந்தாங்கொள்ளிகள் 'எங்களை தொடை நடுங்கி' என்றெல்லாம் திட்டுகின்றனர். இது தான் 'இவர்களின் விவாத லட்சனம்' என்று நமது சகோதரர்களின் அறைகூவலுக்கு மறுப்பெழுதியிருந்தனர்.
விபச்சாரம் என்னும் அசிங்கமான கலாச்சராம் உலகம் முழவதும் தலைவிரித்தாடும் இந்த காலத்திலேயே பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவைப்போண்று உங்கள் தாயை அல்ல, உங்களை 'தொடை நடுங்கி' என்று கூறியதற்கே, திட்டுகின்றனர் - இது தான் இவர்களின் லட்சனம்' என்று கூச்சலிட்டீர்களே, இங்கே யூதர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் குறிக்கும் விதமாக 'கெட்ட வேசிமக்கள்' என்று தாய்மையையே அசிங்கப்படுத்துகிறாரே இதற்கு என்னப்பா பதில் சொல்லப் போகின்றீர்? எங்களைப் பொருத்தவரை ஒரு தீர்க்கதிரிசி, உங்களைப்பொருத்தவரை கடவுளின் குமாரன், இது தான் அவர் நமக்கு ஒழக்கத்தைக் கற்றுத்தரும் லட்சனமா?

உலகத்திலேயே ஒரு புனித வேதத்தில் 'பொள்ளாத விபச்சார சந்ததியினர்' - 'கெட்ட தேவ்டியா மக்கள்' என்று ஒரு பரிசுத்தர் கூறிய வார்த்தை வருகிதென்றால் அந்த சிறப்பு பைபிளை மட்டுமே சாரும்.

இப்படிப்பட்ட அநாகரீக செயல்களைக் குறித்து குர்ஆனின் படி இயேசுவின் வழியில் இறுதியாக வந்த நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் உலகமக்களுக்கு கற்றுத்தரும் ஒழுக்கத்தைப் பாருங்கள் :

'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது 'மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்;. அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இது போண்ற ஒழுக்கத்தை சொல்லக்கூடியவராகவும், அதை செயல்படுத்தக்கூடியவராகவும் தான் இயேசுவும் இருந்திருப்பார்கள் - இருந்திருக்க வேண்டும். அதை முஸ்லீம்களாகிய நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குர்ஆன் அவரை நல்லோர்களில் ஒருவர் என்று கூறுகிறது. ஆனால் பைபிளோ அவரையும் அவரைப்போண்ற தீர்க்கதிரிசிகளையும் மிக மிக மோசமானவர் என்பது போல் காட்டுகிறது.

தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22

ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன் தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால் இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்திருக்கின்றார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்பது சாதாரண சாமானியனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால் இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர் தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே என்று தடுக்கின்றார் என்றால், இயேசு அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக சித்தரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக, தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான் என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

இது போண்று இன்னும் பலவகையில் இயேசுவைத் திருக்குர்ஆன் உயர்த்துவதையும், பைபிள் அவரைத் தரக்குறைவானவராக காட்ட முயற்சிப்பதையும் அடுத்தடுத்த ஆக்கங்களில் விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்! இறைவனே அனைத்தையும் நன்கறிந்தவன்.

பெற்றோரைப் பேணுவது பற்றி இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகின்றது என்பதையும் இது போண்று தான் தனது தாயையும் இயேசு அவர்கள் மதித்து நடந்திருப்பார் என்பதையும் கான இங்கே அழுத்தவும்.

(குறிப்பு : நாம் சில வார்த்தைகளை அநாகரீகமாக எழுதிஇருப்பது போல் தோன்றலாம். ஆனால் அது நம்முடைய வார்த்தை இல்லை என்பதையும் அது பைபிளில் உள்ள ஒரு புனித (?) வார்த்தை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த புனித(?) வார்த்தையைத் தான் நாம் மேற்கோள் காட்டிஇருக்கின்றோமே யொழிய நாமாக எதையும் எழுதவில்லை என்பதையும் கவனிக்வும்.)

Saturday, February 23, 2008

பெற்றோரைப் பேணுவோம்

இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான் :

'அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
அல்குர்ஆன் 17 : 23

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : திர்மிதீ, இப்னு ஹிப்பான், ஹாம்மில்

''தாய்மார்களைத் துன்புறுத்துவதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும், (அல்லாஹ்வீன் கட்டளையை) நிறைவேற்றாமல் இருப்பதையும் (பிறர் செல்வத்தை) அபகரிப்பதையும், வீண்பேச்சுக்களையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், சொத்துக்களை வீணடிப்பதையும், அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கி (விலக்கி) விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

'தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது; மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்; அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரீ, முஸ்லிம்

''இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது. இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு அம்ரு, நூல்: திர்மிதீ

நபியவர்களின் சமூகத்திற்கு வந்த ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! நான் அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா? என வினவிய போது நபியவர்கள், ''உமக்கு தாய், தந்தையார் உண்டா? என (திருப்பி) கேட்டார்கள். அவர் ''ஆம்'' என்ற போது நபியவர்கள், ''அவ்விருவருக்கும் (பணிவிடை செய்வதன் மூலமாக) அறப்போர் செய்யும்'' என்றுரைத்தார்கள்.
.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு அம்ரு (நூல்: ஸஹீஹ் அபூதாவூத் -2529)


ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார் :'அல்லாவின் தூதரே! நான் நல்லவிதமாக நடந்துகொள்ள அனைவரையும் விட அதிக உரிமை பெற்றவர் யார்?'
.
நாயகம் (ஸல்) அவர்கள் 'உம்முடைய அன்னையே மிகவும் உரிமை பெற்றவர்கள்' என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் 'அவருக்குப் பிறகு யார்?' என்று கேட்டார்.
.
நாயகம் அவர்கள் 'உம்முடைய அன்னைதான்!' என்று பதிலளித்தார்கள்.
.
அம்மனிதர் 'பிறகு யார்?' என்று மீண்டும் வினவினார். 'உம்முடைய தந்தை. அதற்கு அடுத்து படிப்படியாக உமது நெருங்கிய உறவினர்கள் உம் நன்னடத்தைக்கு உரியவர்கள்'என நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்
.
நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:'அவன் மூக்கு மண்ணாகட்டும்! (அதாவது அவன் இழிவடையட்டும்!)'இவ்வாறு மூன்று முறை கூறினார்கள். மக்கள் வினவினார்கள் 'அல்லாஹ்வின் தூதரே, யார்? (அதாவது, யார் இழிவடையட்டும், யாரை இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?') 'முதுமைப்பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ - இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்.'
.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:'தாய் தந்தையருடன் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும், பேராசையையும், கஞ்சத்தனத்தையும் இறைவன் உங்கள் மீது ஹராமாக்கியுள்ளான். நீங்கள் வீண் பேச்சு பேசுவதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணடிப்பதையும் அவன் வெறுக்கின்றான்.'
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நாங்கள் அண்ணலாரின் அவையில் அமர்ந்து கொண்டிருந்த போது, பனூஸலமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அண்ணலாரிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாய் தந்தையர் இறந்துபோன பின்னாலும் நான் அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா?' எனக் கேட்டார். அதற்கு அண்ணலார் அவர்கள், 'ஆம்! அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி பாவமன்னிப்புக் கோருங்கள். அவர்கள் செய்துவிட்டுச் சென்ற ( அனுமதிக்கப்பட்ட) மரண சாஸனத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் தாய், தந்தையர்களின் உறவுகளைத் துண்டிக்காமல் வாழுங்கள். தாய், தந்தையின் உறவினர்களுக்கு கண்ணியம் அளியுங்கள், அவர்களை உபசரியுங்கள்.'
அறிவிப்பாளர் : அபூ உஸைத்தினில் ஸாஇதி (ரலி), நூல் : அபூதாவூத்

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஜிஈரானா என்னுமிடத்தில் இறைச்சி பங்கிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அங்கே ஒரு பெண்மணி வந்தார். நபிகள் நாயகத்திற்கு அருகில் சென்றார். உடனே நாயகம் (ஸல்) அவர்கள் தம் போர்வையைத் தரையில் விரித்தார்கள். அதில் அந்தப் பெண்மணி அமர்ந்து கொண்டார். 'இவர் யார்?' என்று நான் வினவினேன். 'இவர் அண்ணலாருக்கு அமுதூட்டிய செவிலித்தாய்!' என்று மக்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி) நூல் : அபூதாவூத்

Wednesday, February 20, 2008

சாந்தியும் சமாதானமும்.....

அன்பு ஏற்படுவதற்கான வழி

நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை சுவனத்தினுள் நுழையமாட்டீர்கள்; ஒருவரையொருவர் அன்பு பாராட்டும் வரை இறைநம்பிக்கை கொள்ளமாட்டீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தால் உங்களிடையே அன்பு ஏற்படுமோ அத்தகு செயல்முறை (திட்டத்தை) அறிவிக்க வேண்டாமா? உங்களிடையே ('உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' என்ற பொருள் படக்கூடிய 'அஸ்ஸலாமு அலைக்கும்' எனும்) 'ஸலாம்' கூறுவதை பரவலாக்குங்கள்'' என்று இறைத்தூதர் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
விளக்கவுரை:


'ஸலாம்' கூறுவதன் மூலம் சகோதரத்துவம், அன்பு, பாசம், நேசம் ஏற்படுகிறது.
இறைநம்பிக்கையும் அன்பும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.இறைபக்தி மற்றும் இறைநம்பிக்கையுடன் செயல்படுவோர் தீமைகளைத் தவிர்ப்பர். நன்மை செய்வோருக்கு சுவனம் கிடைப்பது உறுதி இறைநம்பிக்கை கொண்டோரே! ஸலாத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள்! சகோதரப் பிணைப்பிற்கு அது ஒன்றே வழி!
.
.
மக்களை இணைக்கும் பாலம்

''அல்லாஹ்விடம் மக்களிலேயே மிசச்சிறந்த நபர் முதலில் ஸலாம் கூறுபவராவார்''என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.




அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அஹ்மத், திர்மிதீ, அபூதாவூது)
விளக்கவுரை:

ஸலாம் கூறுவதை மரியாதைக் குறைவாக கருதுவோரும் உண்டு; நமது அந்தஸ்திற்கு இவருக்குப் போய் ஸலாம் கூறுவதா? என்ற அகந்தை எண்ணத்துடன் தலை நிமிர்ந்து செல்வோரும் உண்டு; இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அடுத்தவரது நல்வாழ்விற்காக செய்யும் பிரார்த்தனையே ஸலாம் ஆகும். அதைச் சொல்வதற்குக் கூட கஞ்சத்தனம் செய்வோர் மனித நலனை எவ்விதம் காப்பர்? அதனால் தான் நபியவர்கள் தாங்களாகவே முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். இந்த நபி மொழியை செயல்படுத்துவதற்காக அப்துல்லாஹிப்னு உமர் என்ற நபித்தோழர் கடைவீதிக்குச் சென்று, ஏழை, எளியோர், வியாபாரிகள் மற்றும் வருவோர், போவோர் அனைவருக்கும் ஸலாம் கூறும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். முதல் மனிதர் ஆதமின் முதல் வார்த்தையே ஸலாம் தான்! ஒருவரையொருவர் வெறுத்து பிரிந்து வாழ்வோர் ஸலாம் கூறுவதன் மூலமாக ஒன்று சேர்வதற்கான அருமையான வழிமுறையை அண்ணல் நபியவர்கள் காட்டியுள்ளார்கள்.
.
.
குரோதமும், விரோதமும் நீங்குவதற்கான வழி


''கைலாகு செய்து கொள்ளுங்கள்: அதனால் குரோத மனப்பான்மை நீங்கிவிடும்; ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள்; அதனால் உங்களிடையே அன்பு உண்டாகும்; விரோதம் அகன்று விடும்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



அறிவிப்பாளர்: அதாவுல் குராஸானீ நூல்: மாலிக்

விளக்கவுரை



கைலாகு செய்வது, அன்பளிப்புச் செய்வதன் வாயிலாக கிடைக்கும் நற்பயன்களை இந்த நபிமொழி அறிவுறுத்துகிறது. ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது ஸலாம் கூறிக் கொள்வதுடன் வலக்கரம் நீட்டி முஸாஃபஹா (கைலாகு) செய்து கொள்வது உள்ளத்தில் உண்டாகும் போட்டி, பொறாமை எண்ணங்களை அகற்றி சமாதானத்திற்கு பச்சைக்கொடி காட்டுகிறது. அதுபோன்றே உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புக்களை வழங்கி அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பதிலுக்குப் பதில் என்ற ரீதியில் அமையாமல் உள்ளன்போடு வழங்கும் பயன்பொருளாக இருத்தல் வேண்டும். ''இரு முஸ்லிம்கள் ஒருவரையொவருவர் சந்தித்து கைலாகு செய்தால், இருவரும் பிரிந்து செல்லும் முன்னரே அவ்விருவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டுவிடுகிறது'' என்பது நபிமொழி! தங்களுக்கு வரும் அன்பளிப்புகளை வசதியற்ற திண்ணைத் தோழர்களுக்கு வழங்கி மகிழ்ந்தது நபிவழி!
.
.
மென்மையின் மேன்மை

''திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
விளக்கவுரை :



நபி(ஸல்) அவர்களிடம் வந்த யூத மத அன்பர்கள் சிலர், ஸ்லாமு அலைக்கும் (வார்த்தையை மாற்றி - 'உங்களின் மீது சாவு உண்டாகுக!') என கடின வார்த்தை கூறி ஸலாத்தைக் கிண்டல் செய்தனர். இதைச் செவியுற்றதும் நபியவர்களின் அருகிலிருந்த துணைவி ஆயிஷா, ''உங்களின் மீதே சாவும், சாபமும் உண்டாகுக!'' என பதிலுரைத்தார்கள். அப்போது தான் நபியவர்கள் மேற்கூறிய மணிவாசகத்தை மொழிந்தார்கள். அவர்கள் மட்டும் சாபமிடுகிறார்களே! என ஆயிஷா கோபித்துக் கொண்ட போது நபியவர்கள், 'உங்களின் மீது உண்டாகட்டும் என்று கூறி அவர்களுக்கு பதிலளித்து விட்டேனே'' என மொழிந்தார்கள். விரோதிகளிடமும் மென்மைப் போக்கைக் கடைப்பிடித்து அவர்களைத் திருந்தச் செய்வதே நபியவர்களின் அழகிய வழிமுறை!

இறையில்லத்தில் (பள்ளிவாசலில்) சிறுநீர் கழித்த காட்டரபீ ஒருவரை நபித்தோழர்கள் தாக்க முனைந்தபோது அவர்களைத் தடுத்து நிறுத்தி, தம் திருக்கரங்களால் தண்ணீர் ஊற்றித் தூய்மை செய்தது மென்மையின் உச்சகட்டம்! ஹீதைபிய்யா உடன்பாட்டின் போது கடுமையாக நடந்துகொண்ட காஃபிர்களை மென்மைப் போக்கினால் வென்று காட்டியது, ''மென்மையினால் கிடைக்கும் நன்மை''க்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.


''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்


விளக்கவுரை:

உணவளிப்பதையும், ஸலாம் கூறுவதையும் இஸ்லாத்தின் மிகச்சிறந்த செயலாக இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது. இல்லாதோர், இயலாதோர் மற்றும் ஏழைகளுக்கு உணவளிப்பது அவர்களது மனதை மகிழ்விக்கச் செய்கிறது. மனித நலம் பேணுகிறது. உற்றார், உறவினரிலுள்ள ஏழைகளுக்கு உணவளிப்பது உறவு முறைகளை காத்து வலுப்படுத்துகிறது. மனைவி, மக்கள், பெற்றோருக்கு உணவு வழங்குவது மனிதனுடைய கடமையுணர்வை நிலைநாட்டுகிறது.

ஒரு மனிதன் தான் அறியாமலிருக்கும் ஒருவருக்கு 'ஸலாம்' கூறுவது அறிமுகத்தையும், சகோதர உணர்வையும் ஏற்படுத்துகிறது. அறிந்தோருக்கு ஸலாம் கூறுவது ஏற்கனவேயுள்ள தொடர்பையும் பாசத்தையும் வலுப்படுத்தி அகந்தை மற்றும் பெருமையை அகற்றுகிறது. உணவளிப்பது உடலுக்கு வலிமைåட்டுகிறது என்றால், 'ஸலாம்' கூறுவது மனநிம்மதிக்கும், அமைதி வாழ்விற்கும் வழிகோலுகிறது.

Tuesday, February 19, 2008

காஃபிர்களை கொல்லுங்கள்... என்று இஸ்லாம் கூறுகிறதா?

'இஸ்லாம்' - அதாவது குர்ஆன், காஃபிர்களை (அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்லது அல்லது நிராகரிப்பவர்களை) வெட்டிக் கொல்லச் சொல்கின்றது. கண்ட இடத்தில் அவர்களை கருவறுக்கச் சொல்கின்றது' என்ற பிரச்சாரம் இந்து ராஜ்யம்(?) அமைக்கத் திட்டம் வகுத்திருப்பவர்களாலும் அதேபோல் தங்கள் வேதத்தில் உள்ள தவறான கொள்கைகளை மறைப்பதற்காக சில கிறிஸ்தவ விஷமிகலாலும் பரப்பப்பட்டும் - எழுதப்பட்டும் வருவதுடன் அப்பாவி இந்துக்களைக்களையும் மற்றும் மாற்றுமதத்தவர்களையும் கவர்ந்திழுக்க முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு கிளறி விடப்படுகின்றது.

சமூக அமைதியையே கேள்விக்குறியாக்கி வரும் இப்பிரச்சனைக்கு விளக்கமளிக்கும் கடமை நமக்கு இருக்கின்றது.

'இந்தக் கருத்தில் அமைந்த வசனங்கள் யாவும் பொதுவானதன்று. போர்க்களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய போர் தர்மங்கள்' என்று ஒருவரியில் பதில் கூறுவதே போதுமானதாகும்.

ஆயினும், மாற்றார்கள் ஐயத்திற்கிடமின்றி இதைப்புரிந்து கொள்வதற்காக இதை விபரமாக விளக்குவோம்.

கொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும். பிறர் பொருளை அபகரிப்பதும், சூரையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.

பொதுவாக, இந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால் இதையெல்லாம் செய்வதுதான் போர் தர்மம்.

பொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்து விடுகின்றன.

இராமன், கண்ணண், அர்ஜுனன், கர்ணன், பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் போன்ற புராணப் பாத்திரங்களாக இடம் பெறுவோர், பல கொலைகளைச் செய்துள்ளனர். சாதாரணசமயத்தில் இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள். போர்களத்தில் செய்ததால் அவர்கள் வீரர்கள் எனப் போற்றப்படுகின்றனர்.

தமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான். போர்க்களத்தில் கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

போர்க்களத்தில் மட்டுமின்றி, ஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இது போன்ற கொலைகள் நடந்துள்ளன. அதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாக மதிக்கப்படுகின்றனர்.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல் தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி வரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். கொலை காரர்களாகக் கருதப்படுவதில்லை.

போருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.

உலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமாலும் செய்யலாம் என்று நடந்துள்ளனர். ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் போரிலும் கூட புது நெறி புகுத்தினார்கள்.

மாற்றார்கள் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளும் குர்ஆன் வசனத்தை விளக்குமுன் அவர்கள் மாற்றாரிடம் நடந்து கொண்ட முறையை மாற்றார்கள் அறிய வேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போது துன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப் பட்டார்கள். மதீனா சென்று அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள் சந்தித்தார்கள். இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராகப் பிரவேசித்தார்கள். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்கள், அவர்களின் தோழர்கள் பலரை படுகொலை செய்தவர்கள், சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்தார்கள்.

காஃபிர்களைக் கொல்வது இஸ்லாத்தில் மரபாக இருந்திருந்தால் மக்கத்துக் காஃபிர்களைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் கொன்று குவித்திருக்க முடியும். அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழிவாங்கியிருக்க முடியும்.

சக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்கு காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.

உலக வரலாற்றில் சக்தி மிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது. ஒரு நாட்டை வெற்றி கொண்டது. இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி விளைநிலங்களுக்குத் தீ வைத்து தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து, தோற்றவனின் மூக்கை அறுத்துக் கோரப்படுத்தி, தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து, போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து இன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் போற்றுகின்ற ஒரு சமுதாயத்தினர் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவது வேடிக்கையானதே.

காஃபிர்களைக் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்வது இஸ்லாத்தின் கட்டளையாக இருந்திருந்தால் அதற்கான எல்லா வாய்ப்புக்களையும் பெற்றிருந்த இந்தச் சமயத்தில் அதைச் செய்திருப்பார்களே!

காஃபிர்களுடன் அதாவது மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறைக்கு மற்றொரு சான்றைக் கேளுங்கள்.

யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இதுபற்றி விசாரித்தார்கள். 'உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்' என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இவளைக் கொன்று விடட்டுமா? என நபித்தோழர்கள் கேட்டதற்கு 'கூடாது' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது)

மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி நடந்துள்ளார்கள் என்பதை மாற்றார்கள் சிந்திக்க வேண்டும்.

காஃபிர்களை வெட்டிக் கொல்வது இஸ்லாமிய கட்டளையாக இருந்திருந்தால் காஃபிரான அந்தப் பெண்மனி மதீனாவில் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? வாழ்ந்தது மட்டுமின்றி நபியையே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டும் அளவுக்கு அவள் தரும் உணவை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக நபிகள் எப்படி பழகி இருக்க முடியும்? இதையும் மாற்று மதத்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

தனி நூலாக எழுதப்படும் அளவுக்கு பல சான்றுகள் உள்ளன. காஃபிர்களைக் காஃபிர்கள் என்பதற்காகக் கொல்வது இஸ்லாம் காட்டும் வழியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள இவை போதுமாகும்.

'அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்' என்று குர்ஆன் கூறும் கட்டளையின் கருத்தென்ன? அந்த நியாயமான ஐயத்தையும் நீக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

அல்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் 191-வது வசனத்தில் இந்தக் கட்டளை இடம் பெற்றுள்ளது.

இந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தையும் சேர்த்துக் கவனித்தால் அவர்கள் தவறான முடிவுக்கு வரமாட்டார்கள்.

உங்களை எதிர்த்துப் போர் புரிந்தவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்2:190)

எவர்கள் ஆயுதம் தரித்து உங்களுடன் போருக்கு வருகிறார்களோ அவர்களுடன் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள் என்று கூறிவிட்டுத்தான் அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் எனக் குர்ஆன் கூறுகிறது.
எதிரிகள் போருக்கு வரும் போது நடந்து கொள்ள வேண்டிய முறையைக் கூறும் வசனத்தைத் தான் பொதுவானதாக விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த விஷமிகள் கனவு காண்பது போல் இந்து ராஜ்யம் ஏற்பட்டு விடுவதாக வைத்துக் கொள்வோம். அப்படி இந்துராஜ்யம் அமைந்த பிறகு அண்டை நாடு ஒன்று போருக்கு வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? அகிம்சை பேசுவார்களா? அங்கேயும் உண்ணாவிரதம் இருப்பார்களா?

உலகில் எந்த நாடாக இருந்தாலும் இந்தக் கட்டத்திலும் கைகட்டி வாய்பொத்தி நிற்குமா?

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாக சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

இன்று நாள்தோரும் அமெரிக்காவும் அதன் செல்லக்குழந்தையான இஸ்ரேலும் செய்யும் அக்கிரமமான - கொடுமையான - அப்பாவிமக்களை கொண்று குவித்துக்கொண்டிருக்கக்கூடிய போர்களையோ அல்லது ஒருபுறம் வந்தேரி யூதர்களுக்காக அப்பாவி பாலஸ்தீன் மக்களை கருவறுத்துக் கொணடும், மற்றொரு புறம் ஈராக், ஆஃப்கானிஸ்தான் மக்களை குண்டு போட்டு அழித்துக் கொண்டிருக்கும் சில மதவெறி - ஆதிக்க வெறி நாடுகள் செய்யும் போர்கள் போல் இஸ்லாம் கூறும் போர் தர்மங்கள் அமையவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், மதவெறியைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பேற்றி இந்து ராஜ்ஜியத்துக்கு ஆள் பிடிப்பதற்காக வேண்டுமென்றே தப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதே உண்மை.

சுமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக் கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக் கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.
மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் கூறவே இல்லை நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.

எனவே இவர்களின் இந்தக் குற்றச் சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.